மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.8.12

Astrology யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

Astrology யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர் சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின் துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 33 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 39 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம் இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர் எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும், அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்ததால் நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால் கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும். ஆனால் சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 24 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள் என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 4 பரல்கள் குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது. ஓட்டை அண்டா.
11ஆம் வீட்டில் இருந்த 39 பரல்கள் அவருக்குப் பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப் நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின் மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. 12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும் பத்தாம் வீட்டில் (முக்கிய கேந்திரம்) இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது. அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர். மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் சராசரி கீழான நிலைமையில் இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதைவிடக் கெட்டதே அதிகமாக இருந்தது. பல சமயங்களில் அவர் தன் மனைவி, மக்களைப் பிரிந்தே இருக்கும்படியானது. அரசை எதிர்த்துப் போராட்டம்,  சிறை வாழ்க்கை, பொது மக்களைச் சந்திப்பதற்காக அதிகமான பயணம் என்று அவருக்கு வெளியுலகத் தொடர்பும், பொது வாழ்க்கையும்தான் மிகுந்திருந்தது.

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும் (லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது.

11. சந்திர ராசியில் ராகு சென்று டென்ட் அடித்து அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது. பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம் என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுத உள்ளேன். அவைகள் பிறகு புத்தகமாக வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

33 comments:

  1. அய்யா,
    வணக்கம். காந்தி அவர்களின் உதாரண ஜாதக பாடம் மிக உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி.
    ரெங்கா.

    ReplyDelete
  2. ஜாதகத்தில் உள்ள 18/36 பாக்கியங்கள் எவை? எனக்கு உள்ள பாக்கியங்கள் எவை

    ReplyDelete
  3. காலை வணக்கம் மற்றும் நல்ல அலசல்.

    ReplyDelete
  4. good morning sir ..astravargam padam .purium padi .....vathier enral negal thaan vathiear ..thanks..

    ReplyDelete
  5. good morning sir ..astravargam padam .purium padi .....vathier enral negal thaan vathiear ..thanks..

    ReplyDelete
  6. காலை வணக்கம் .நல்ல உபயோகமான அலசல் பாடம் . நன்றி அய்யா

    ReplyDelete
  7. சில நாட்களாக தொடர்ந்து வகுப்புக்கு வரமுடியவில்லை,அப்படி வந்த சில நாளிலும் பின்னூட்டமிடாமலேயே போய் விட்டேன்.

    அஷ்டகவர்க பாட விவரம் அத்தனை எளிதாக புரிகிறது. ஏழு கிரகங்களின் ஏழு நிலைகளும், பரல்களால் அவர் பெற்ற பலன்களும், உதாரனத்தோடு வாத்தியார் விளக்கியது என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு, அதை முழுமையாய் தெரிந்துகொள்ள இன்னும் ஆர்வம் வருகிறது. தேசத்தந்தையாய் அன்னல் ஆனதற்கு வேறு வரலாறு எதுவும் தேவையில்லை.

    அண்ணலிடம் மக்களை வசிகரிக்க அழகு முகமோ பேச்சு திறமையோ இருந்ததாக எந்த குறிப்புமில்லை, இருந்தும் மக்கள் அவரை மகாத்மாவாக்கி பின் தொடர்ந்து இருந்ததற்கு அவரின் மன உறுதி, துனிச்சல் ,திட்டமிடல்,எளிமை, எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் ஆயுதமில்லா வைராக்கியம். உலகமே அதைத்தானே வியத்தது.

    அஷ்டகவர்க பாடம் புத்தகமாய் வரும் போது வாங்கிக்கொள்ளலாம் என இருக்கிறேன் அய்யா. நன்றிகள் அய்யா.

    எனக்கு இருப்பதிலேயே லக்னத்துக்குத்தான் அதிக பரல் 33, அடுத்த நிலையில் 11 ஆம் இடம். 32.

    ReplyDelete
  8. குருவிற்க்கு வணக்கம்
    நல்ல அலசல் பாடம்
    நன்றி

    ReplyDelete
  9. காந்திஜியின் ஜாதக அஷ்ட வர்க்க அலசல் பயனுள்ளதாக இருந்தது.
    மனோகாரகனான சந்திரன் தன் விட்டிலேயே இருந்து ராகுவுடன் சம்பந்தம் பெற்றதாலேயே காந்திஜியின் செயல்கள் பலவும் சாதாரண நடைமுறைக்கு மாறுபட்டு இருப்பதும் அதனால் அவரை பலரும் மன வியாகூலங்கள் உள்ளவர் என்று கணிக்கவும் ஆயிற்று.சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத பல செயல்களை காந்திஜி செய்தார். அவரை சிலர் தெய்வமாக வணங்கினாலும், பலர் கடுமையான விமர்சங்களையும் செய்தனர்.ராசிக்கு 7ம் இடத்து கேது சன்னியாச மனப்பானமையைக் கொடுத்தது.

    ReplyDelete
  10. அகிம்சை பற்றிய வேறு கருத்து உண்டு
    ஆனாலும்

    அஷ்ட வர்க பாடம் மட்டும் படித்தபடி
    அமைதி கொள்கிறோம் வருகை பதிவுடன்

    ReplyDelete
  11. Respected Sir,

    The Astavarga lesson presented by you by examining the horoscope of Mahatma Gandhi is very beautiful and easy to understand.

    Thanks for all sir.

    ReplyDelete
  12. /////Blogger renga said...
    அய்யா,
    வணக்கம். காந்தி அவர்களின் உதாரண ஜாதக பாடம் மிக உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி.
    ரெங்கா.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger s_bala05 said...
    ஜாதகத்தில் உள்ள 18/36 பாக்கியங்கள் எவை? எனக்கு உள்ள பாக்கியங்கள் எவை////

    36 பாக்கியங்கள் என்னென்ன என்பதைப் பழைய பாடங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். படித்துத் தெளிந்தபின் அவற்றை வைத்து உங்கள் ஜாதகத்தை அலசிக் காயப்போடுங்கள். எத்தனை (என்னென்ன) உங்களுக்குக் கிடைத்துள்ளன என்பது தெரியும்!

    ReplyDelete
  14. /////Blogger Sanjai said...
    காலை வணக்கம் மற்றும் நல்ல அலசல்.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger eswari sekar said...
    good morning sir ..astravargam padam .purium padi .....vathier enral negal thaan vathiear ..thanks../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  16. Blogger Gnanam Sekar said...
    காலை வணக்கம் .நல்ல உபயோகமான அலசல் பாடம் . நன்றி அய்யா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger thanusu said...
    சில நாட்களாக தொடர்ந்து வகுப்புக்கு வரமுடியவில்லை,அப்படி வந்த சில நாளிலும் பின்னூட்டமிடாமலேயே போய் விட்டேன்.
    அஷ்டகவர்க பாட விவரம் அத்தனை எளிதாக புரிகிறது. ஏழு கிரகங்களின் ஏழு நிலைகளும், பரல்களால் அவர் பெற்ற பலன்களும், உதாரனத்தோடு வாத்தியார் விளக்கியது என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு, அதை முழுமையாய் தெரிந்துகொள்ள இன்னும் ஆர்வம் வருகிறது. தேசத்தந்தையாய் அன்னல் ஆனதற்கு வேறு வரலாறு எதுவும் தேவையில்லை.
    அண்ணலிடம் மக்களை வசிகரிக்க அழகு முகமோ பேச்சு திறமையோ இருந்ததாக எந்த குறிப்புமில்லை, இருந்தும் மக்கள் அவரை மகாத்மாவாக்கி பின் தொடர்ந்து இருந்ததற்கு அவரின் மன உறுதி, துனிச்சல் ,திட்டமிடல்,எளிமை, எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் ஆயுதமில்லா வைராக்கியம். உலகமே அதைத்தானே வியத்தது.
    அஷ்டகவர்க பாடம் புத்தகமாய் வரும் போது வாங்கிக்கொள்ளலாம் என இருக்கிறேன் அய்யா. நன்றிகள் அய்யா.
    எனக்கு இருப்பதிலேயே லக்னத்துக்குத்தான் அதிக பரல் 33, அடுத்த நிலையில் 11 ஆம் இடம். 32./////

    அஷ்டகவர்க்கப் புத்தகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடத்திட்டமிட்டுள்ளேன். முதல் பிரதி உங்களுக்குத்தான் தனுசு!

    ReplyDelete
  18. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல அலசல் பாடம்
    நன்றி////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  19. Blogger kmr.krishnan said...
    காந்திஜியின் ஜாதக அஷ்ட வர்க்க அலசல் பயனுள்ளதாக இருந்தது.
    மனோகாரகனான சந்திரன் தன் விட்டிலேயே இருந்து ராகுவுடன் சம்பந்தம் பெற்றதாலேயே காந்திஜியின் செயல்கள் பலவும் சாதாரண நடைமுறைக்கு மாறுபட்டு இருப்பதும் அதனால் அவரை பலரும் மன வியாகூலங்கள் உள்ளவர் என்று கணிக்கவும் ஆயிற்று.சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத பல செயல்களை காந்திஜி செய்தார். அவரை சிலர் தெய்வமாக வணங்கினாலும், பலர் கடுமையான விமர்சங்களையும் செய்தனர்.ராசிக்கு 7ம் இடத்து கேது சன்னியாச மனப்பானமையைக் கொடுத்தது./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

    ReplyDelete
  20. ////Blogger அய்யர் said...
    அகிம்சை பற்றிய வேறு கருத்து உண்டு
    ஆனாலும்
    அஷ்டவர்கப் பாடம் மட்டும் படித்தபடி
    அமைதி கொள்கிறோம் வருகை பதிவுடன்/////

    நல்லது. நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  21. //////Blogger Mahesh said...
    Respected Sir,
    The Astavarga lesson presented by you by examining the horoscope of Mahatma Gandhi is very beautiful and easy to understand.
    Thanks for all sir.////

    உங்களின் பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. nice lesson especially saturn with zero paral

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா,
    பரல்கள் பற்றி பலவருடம் ஒன்றுமே அறியாமல் இருந்தேன், இன்று கொஞ்சும் பற்றிக்கொண்டேன் ஐயா ஆசானே வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன் ஐயா நீர் பல்லாண்டு வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க ஐயா

    G R MURUGAN BSNL CHENNAI 51

    ReplyDelete
  24. My 1st comment since I join your superb class since 2010. Continue your wonderful work. May god bless you . Tq sir.

    ReplyDelete
  25. தொடர்ந்து விடுப்பில் இருந்ததால் வகுப்பறைக்கு இன்றுதான் வரமுடிந்தது. காந்திஜியின் ஜாதக அலசல் அருமை. சனியின் சுயபரல் ஜீரோவாக இருந்தாலும் எட்டாம் அதி லக்னத்தில் அமர்ந்ததால் நீண்ட ஆயுள். பாடத்திற்கு நன்றி!

    ReplyDelete
  26. ஐயா வணக்கம்,

    கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை.
    என்றால் வேலைக்கும் போக முடியாது மற்றும் சொந்த தொழிலும் செய்ய முடியாது. ஜீவன வாழ்க்கைக்கு
    எது கை கொடுக்கும்.

    ReplyDelete
  27. /////Blogger arul said...
    nice lesson especially saturn with zero paral/////

    நல்லது. நன்றி அருள்!

    ReplyDelete
  28. /////Blogger krishnababuvasudevan said...
    Great man gandhi my lakknam is also dullam////

    துலாம் நல்ல லக்கினம். நடு நிலைமையாளர்களின் லக்கினம். அதனால்தான் அதற்கு தராசு சின்னமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

    ReplyDelete
  29. /////Blogger murugan said...
    வணக்கம் ஐயா,
    பரல்கள் பற்றி பலவருடம் ஒன்றுமே அறியாமல் இருந்தேன், இன்று கொஞ்சும் பற்றிக்கொண்டேன் ஐயா ஆசானே வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன் ஐயா நீர் பல்லாண்டு வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க ஐயா
    G R MURUGAN BSNL CHENNAI 51//////

    வாழ்த்துவதற்கு வயதெல்லாம் ஒரு கணக்கில்லை. நல்ல மனசிருந்தால் போதும். நன்றி முருகன்!

    ReplyDelete
  30. Blogger Sundarajan Nardarajan said...
    My 1st comment since I join your superb class since 2010. Continue your wonderful work. May god bless you . Tq sir.//////

    உங்களின் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. Blogger Uma said...
    தொடர்ந்து விடுப்பில் இருந்ததால் வகுப்பறைக்கு இன்றுதான் வரமுடிந்தது. காந்திஜியின் ஜாதக அலசல் அருமை. சனியின் சுயபரல் ஜீரோவாக இருந்தாலும் எட்டாம் அதி லக்னத்தில் அமர்ந்ததால் நீண்ட ஆயுள். பாடத்திற்கு நன்றி!/////

    வாங்க ஸிஸ்டர். உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  32. /////Blogger arumuga nainar said...
    ஐயா வணக்கம்,
    கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை.
    என்றால் வேலைக்கும் போக முடியாது மற்றும் சொந்த தொழிலும் செய்ய முடியாது. ஜீவன வாழ்க்கைக்கு
    எது கை கொடுக்கும்.//////

    லக்கினமும். நான்காம் வீடும் கைகொடுத்துவிடும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com