மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.1.12

Short Story தைப்பூசமும் சிகப்பி ஆச்சியும்!


 ////////Blogger iyer said...
    ///கால்பந்து ஆடுமிடத்தில் கிரிக்கெட் மட்டைக்கு இடம் ஏது? நான் ஜோதிடத்தை மட்டும்தான் இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். எழுதப்போகிறேன்.நீங்கள் இறைவனையும், மாணிக்கவாசகரையும் கூட்டிக்கொண்டுவந்தால் என்ன செய்வது? ///
    நாட்டையும் கடவுளாக எண்ணுவது தானே நம் மரபு ..
    தேசீயமும் ஆன்மிகமும் இரண்டு கண்கள் என மீண்டும் சொல்கிறோம்..
    அன்புடன் மீண்டும் வேண்டுகோள் வைக்கின்றோம் நாட்டிற்கு ஜாதகம் வரைந்து அலசும் முயற்சியை கைவிடுமாறு பேரன்புடன் கேட்க் கொள்கிறோம்.
    ///சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தைப் பற்றி மட்டுமே சொல்ல உள்ளேன். நீங்கள், இந்து மதம், கடவுள், மகான்கள் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் விசுவநாதன்///
    நாட்டையும் கடவுளையும் வேறுபடுத்தினால் என்ன செய்ய..
    அன்பு கூர்ந்து தயவு செய்து சுதந்திர இந்தியாவிற்கு ஜாதகத்தை வரைந்து அலசி சொல்ல வேண்டாம் என அன்புடன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்..
    அப்பன் பழனியப்பனிடம் இது குறித்து முறையீடு வைத்து விட்டோம்.. இந்த முயற்சியை கைவிடும் வரை தொடரும் பிரார்த்தனை..///////

நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான விசுவநாதரின் (அய்யரின்) வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாட்டின் ஜாதகத்தை அலசும் முயற்சி கைவிடப்படுகிறது. பின்னால் அதற்கான நேரம் வந்தால் அப்போது பார்க்கலாம். அதுவரை அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அய்யரும் தீவிர முருக பக்தர். அடியேனும் தீவிர முருகபக்தன். அவர் முருகப் பெருமானின் பெயரைச் சொல்லி வேண்டுகோள் வைத்ததால் இந்த முடிவு.

ஆர்வமாக இருந்தவர்கள் அனைவரும் மன்னிக்கவும்.
--------------------------------------------------------------------
 சிறுகதை : தைப்பூசமும் சிகப்பி ஆச்சியும்!

அடியவன் எழுதி, சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளியாகி, அதன் வாசகர்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை இன்று
உங்களுக்காகப் பதிவில் ஏற்றுகிறேன். அனைவரும் படித்து மகிழுங்கள்


அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
 
சிறுகதை : தைப்பூசமும் சிகப்பி ஆச்சியும்!                    

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாகச் சொல்வார்கள். அதாவது ஜீவராசிகள் தோன்றியதைச் சொல்வார்கள். அத்துடன் முருகப் பெருமானுக் கும்  பூசம் உகந்ததாம். அவர் பூச நட்சத்திரத்தில்தான் வள்ளியை மணந்து கொண்டார் என்பார்கள்.

    சிகப்பி ஆச்சிக்கு அதெல்லாம் தெரியாது. அவர் பிறந்தது தை மாதத்தில் ஒரு பூச நட்சத்திர தினத்தன்று. அது மட்டும் அவருக்குத் தெரியும். நட்சத்திர
வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். சிகப்பி ஆச்சியும் அவருடைய பெற்றோர்க்கு எட்டாவது பிள்ளை. அவருக்கு முன்பாக மூன்று சகோதரர்கள்
நான்கு சகோதரிகள்.

    அந்த நான்கு சகோதரிகளுக்கும், வீட்டில் இருப்பதை வழித்துக் கொடுத்துத் திருமணம் செய்து வைப்பதற்குள், சிகப்பி ஆச்சியின் அப்பச்சி அடைக்கப்ப செட்டியார் தரை தட்டிய கப்பலாய் உட்கார்ந்து போனார். கடைக்குட்டி சிகப்பி ஆச்சிக்குக் கல்யாணம் செய்து மகிழ்வதற்கு வீட்டில் தேவையான
பண வசதி இல்லாத நிலைமை.

    சிகப்பி ஆச்சி பெயருக்கு ஏற்றபடி சிவந்த நிறத்துடன் மிகவும் அழகாக இருப்பார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னிப் பெண்ணாய் பெரிய
வளவைக் கொண்ட அவர்களுடைய வீட்டிற்குள் வலம் வந்து கொண்டிருந்த காலத்தில்,  பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் தோற்றத்துடன் இருப்பார்.
உதாரணப்படுத்திச் சொன்னால் மூன்றாம்பிறை பட நாயகி ஸ்ரீதேவியைப் போல இருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

    சிகப்பி ஆச்சி ஒரு சிறந்த முருக பக்தை. இறைவன் திருப்பாடல்களைப் பாடினார் என்றால் இன்று பூராவும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கலாம்.
ஆச்சி முருக பக்தையானதற்குக் காரணமே பழநி முருகன். ஒரு பைசாக்கூடச் செலவில்லாமல் ஆச்சியின் திருமணத்தை அனைவரும் அதிசயிக்கும்படி
முருகப் பெருமான் நடத்தி வைத்தார். தைப்பூசத்திற்கு முதன் முதலில் பாதயாத்திரையாக வந்த சிகப்பியாச்சிக்கு மனதில் அசாத்திய பக்தியையும், அவளின் கரம்  பற்றிப் போற்றி வைத்துக்கொள்ள நல்ல கணவனையும் ஒருசேரக் கொடுத்தான் தண்டாயுதத்தான் என்றால் அது மிகையல்ல!

    எப்படி?

    தொடர்ந்து படியுங்கள், தெரியும்!

                      &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

         அந்தக்காலத்தில் மட்டுமில்லை. இப்போதும்கூட தைப்பூசத்திற்கு, கண்டனூர் அருளாடியார் அவர்கள் வழிகாட்ட, பாதயாத்திரையாகப் பழநிக்குச்
செல்லும் செட்டிநாட்டுப் பிள்ளைகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு உடனே திருமணயோகம் கூடி வருவது அனைவரும் அறிந்த அதிசயம். பாதயாத்திரை யில்  உடன்வரும் இளைஞர் கண்ணில் படும் அழகாக அல்லது திருத்தமாக இருக்கும் பெண்களை - பெரியவர்கள் தேடிவந்து மணம் பேசி முடித்துக் கொள்வார்கள்.

    சிகப்பியும் மணம் முடிந்து சிகப்பியாச்சியானதும் அப்படித்தான்.

    கண்டவராயன்பட்டிக் கண்மாயில் சிகப்பியைக் கண்ட சிவநேசன், அவளின் அழகில் கிறங்கிப்போய், துணைக்கு வந்த சிகப்பியின் ஆயா மற்றும்
அவருடைய உறவினர்களைச் சிநேகம் செய்துகொண்டதுடன், தொடர்ந்து அவர்களுடனேயே பயணித்து சிங்கம்புணரி, சாணார்பட்டி, கோபால்பட்டி, சத்திரப் பட்டி, குழந்தைவேலன் சந்நிதி, என்று பழநிவரை தொடர்ந்து சென்று வழியில் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் வரிந்து வரிந்து செய்து கொடுத்ததுடன், அவர்களுடைய குடும்ப விவரங்களையும் தெரிந்து கொண்டான். யாத்திரை முடிந்து வீட்டிற்குத் திரும்பியவுடன் அவன் செய்த முதல் வேலை தன் பெற்றோரிடம்  சொல்லி ஒற்றைக்காலில் தவமிருந்து அடுத்துவந்த சித்திரையிலேயே  தன் மனம் விரும்பியபடி சிகப்பியை மணம் செய்து கொண்டான்.

    இடையில் பொருளாதாரப் பிரச்சினை சிகப்பி வீட்டில் தலை எடுத்தபோதுகூட, யாருக்கும் தெரிய வேண்டாம், பெண்ணிற்கு எல்லா நகைகளையும்  நாங்களே போட்டு, அத்தனை செலவையும் நாங்களே செய்து திருமணம் செய்து கொள்கிறோம் என்று அவன் வீட்டார் முன்னின்று சிகப்பியை சிவநேசனுக்கு  மணம் முடித்து வைத்தார்கள்.

    வரதட்சணை தலைவிரித்தாடிய அக்காலத்தில் ஒன்றும் கொடுக்காமல் ஒரு பெண்ணிற்குத் திருமணம் ஆனது அதிசயம்தானே! எல்லாமே பழநி அப்பனின் மகிமை என்று அன்று உணர்ந்த சிகப்பி, பழநிஅப்பனின் தீவிர பக்தையானார்.

    தன் பேரனுக்கு நிறைய வாங்கி, பெரிய இடத்தில் மணம் முடிக்க முடியாமல் போனதில் சிவநேசனின் அப்பத்தாவிற்கு மட்டும் கொஞ்சம் வருத்தம்.
   
    அதெல்லாம் நடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. காலச் சுழற்சியில் எல்லாம் மாறிவிட்டது.

    “உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?” என்று நாளொன்றுக்கு நூறுமுறை உங்களைக் கேட்டு அடிக்கடி உங்கள் பற்பசையில் இருந்து “ஏழு நாட்களில் உங்கள் மேனியைச் சிவப்பாக்குவதாகச் சொல்லும்” அழகு சாதனங்கள் வரை உங்களை வாங்க வைக்கும் விளம்பரங்கள் ஆக்கிரமித்து இருக்கும்  தொலைக் காட்சிகள் நிறைந்த காலம் இது. நாதஸ்வரம், திருமதி செல்வம் என்று பலவிதமான சீரியல்களில் உங்களை முடங்க வைக்கும் காலம் இது. யாருக்கும்,  எதற்கும், நேரமில்லாத காலம் இது.

    ஆனால் சிகப்பி ஆச்சி மட்டும் மாறாமல் இருந்தார். சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி மூலம் என்று துவங்கி பங்குனி உத்திரம்வரை
ஒவ்வொரு பெளர்ணமிக்கும் தவறாமல் பழநிக்குச் சென்று பழநிஅப்பனைத் தரிசித்துவிட்டுத் திரும்புவார். உடன் சிவநேசனும் ஆச்சிக்குத் துணையாகச் சென்று  வருவார்.

    நல்ல அன்பான, மனம் கோணாமல் நடந்து கொள்ளும் கணவனை, தான் அடைந்ததில் ஆச்சிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதை மறக்கத்தான் முடியுமா?
அத்துடன் நல்ல தாம்பத்தியத்திற்கு அடையாளமாக இரண்டு மகன்களைக் கொடுத்ததும் பழநிஅப்பன்தான் என்பதில் ஆச்சிக்கு அளவு கடந்த நம்பிக்கை.
விசுவாசம்.

    நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாவிட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கைதான் ஏது?    

    மார்கழித்திங்கள் பதினாறாம் தேதியன்று சிகப்பி ஆச்சி பழநிக்குப்
புறப்பட்டுச் சென்றார்.தைத்திங்கள் பதினேழாம் தேதி தைப்பூசத்திற்கு
மீண்டும்  ஒருமுறை பாதயாத்திரையாகச் செல்ல வேண்டும். அப்போது வழக்கம்போல மகிழ்ச்சி யோடும், நிம்மதியான மனதோடும் செல்லலாம். என்று நினைத்து, அதற்கு முன் மனதில் உள்ள பெரிய பாரத்தைப் பழநி ஆண்டவனிடம் இறக்கி வைக்கும் முகமாக பழநிக்குப் புறப்பட்டுச் சென்றார். அத்துடன் கையில்  ரொக்கமாக இருக்கும் ஐந்து லட்ச ரூபாயையும் பழநி ஆண்டவனின் உண்டியலில் சேர்க்க வேண்டும். அதோடு தங்கள் பெரிய வீட்டில் பங்கில்லை, பூர்வீகச் சொத்துக்களில் பங்கில்லை என்று தன் கணவரைத்  தெருவில் நிறுத்திய தன் கொழுதனார்களின் அநியாயச் செயலுக்கு நியாயம் கேட்க வேண்டும்.

    இத்தனை பிரச்சினைகளும் மனதை வாட்டி எடுக்க, ஆச்சி அவர்கள் பழநிக்குப் பயணமானார்கள்

    வழக்கமாக ஆச்சியுடன் துணைக்கு வரும் அவருடைய கணவர் சிவநேசன்  செட்டியார் இப்போது ஆச்சியுடன் வரவில்லை. கல்லூரி ஒன்றில்  விரிவுரை யாளராக இருக்கும் தன் சின்ன நாத்தினார் கமலாவுடன், ஆச்சி அவர்கள் பழநிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

    ஆண்டிக் கோலத்தில் அங்கே உறையும் பழநிஅப்பன் என்ன செய்தார்?

    தன் தீவிர பக்தைக்கு உதவினாரா?

    வாருங்கள், அதையும் பார்ப்போம்!

          &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    செல்வந்தர் வீட்டில் கடைசி மகனாகப் பிறக்கக்கூடாது; செல்வம் இல்லாத வீட்டில் மூத்த மகனாகப் பிறக்கக்கூடாது என்பார்கள். செல்வந்தர் வீட்டில்
கடைசி மகனாகப் பிறந்தால், வெய்யிலில் வைத்த ஐஸ் கட்டியைப் போல உடன் பிறந்த மூத்தவர்கள் கரைத்ததுபோக மிச்சம்தான் கிடைக்கும். ஏழை வீட்டில்  மூத்தமகனாகப் பிறந்தால், தந்தையுடன் சேர்ந்து எல்லா குடும்பப் பாரங்களையும் அவன்தான் சுமக்க நேரிடும்.

    ஆனால் செல்வந்தர் வீட்டில் மூத்த மகனாகப் பிறந்த சிவநேசனுக்கு, அந்த சொல்லடை விதியையும் மீறி, எல்லாச் சுமைகளையும் சுமக்கும்படியாகி
விட்டது.

    தந்தைக்கு உடல் நலமில்லாமல் போனதால், தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்தவர், தன்னுடைய வேலையை உதறிவிட்டு, மனைவி
சிகப்பியுடன் மதுரைக்கு வந்து தன் தந்தைக்குக் கைகொடுக்கத் துவங்கினார்.

    கட்டடக் கட்டுமானப் பொருட்களை விற்கும் நிறுவனம். வடக்கு வெளிவீதியில் கடை. வக்கீல் புதுத் தெருவில்  கிட்டங்கி என்று தொழில் சிறப்பாக  நடந்தது.

    தன் தம்பிகள் மூவரையும் மேல்நிலைப் பட்டப்படிப்பு படிக்கவைத்ததோடு, தங்கைகள் இருவரையும் அவ்வாறே படிக்க வைத்து, அனைவருக்கும் நல்ல
இல்வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொடுத்தார்.

    காலச் சக்கரம் சுழன்றதில் இருபது ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. இன்று சிவநேசன் செட்டியாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நல்ல
நிலையில் இருக்கிறார்கள். சிவநேசன் செட்டியாரின் மேல் பிரியமாக இருந்த பெற்றோர் சிவபதவி அடைந்துவிட்டார்கள்.

    தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் காரணமாகவும், கடன் கொடுத்தால்தான் வியாபாரமாகும் என்ற சூழ்நிலையாலும், பல சிக்கல்கள் ஏற்பட்டு  வியாபாரத்தை நிறுத்தும் படியாகிவிட்டது. கடன் சுமையும் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து கொண்டுவிட்டது.

    மதுரை சொக்கிகுளத்தில் இருந்த தங்களுடை பெரிய வீட்டை விற்றுக் கடனை அடைப்பதற்கு உடன் பிறப்புக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
மிஸ்மேனேஜ்மெண்ட் - தவறான நிர்வாகக் கோளாறு என்று ஒரே வரியில் சொல்லிவிட்டார்கள்.

    “சோதனையைப் பங்குவச்சா, சொந்தமில்லே பந்தமில்லே” என்ற கவியரசரின் வைர வரிகள் அவருடைய வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.

    கடைசியில் பங்காளிகள் இருவரை வைத்துப் பஞ்சாயத்துப்பேசி, தங்கைகள் இருவரின் திருமணச் செலவு உட்பட அனைத்து செலவுகளுக்கும்  கணக்குக் காட்டி, தம்பிகள் முவரின் கசப்போடு மதுரைவீட்டை விற்றுக் கடனை அடைத்துவிட்டு வெளியே வருவது பெரும்பாடாகி விட்டது.

    சொந்தத் தொழில் செய்தவர், இன்று அதே தொழிலைத் தரகராக இருந்து செய்து கொண்டிருக்கிறார். நிம்மதியில்லாத பிழைப்பு. நிரந்தர வருமானம்
இல்லாத வாழ்க்கை.

    காலன் ஒரு கதவைச் சாத்தினால், கடவுள் இன்னொரு கதவைத் திறந்துவிடுவார்.

    சிவநேசன் செட்டியாருக்கும் அப்படியொரு கதவு திறந்தது. பொறியியல் படித்திருந்த சிவநேசன் செட்டியாரின் மூத்த மகனுக்கு தகவல் தொழில் நுட்ப
நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை கிடைக்க அவன் அவருக்கு உதவி செய்யத் துவங்கினான்.

    இருந்தாலும் தம்பிகளுடன் ஏற்பட்ட கசப்பு அதிகமாகிக் கொண்டே போனது.

    “நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா” என்ற கவியரசரின் மற்றொரு பாடலும் அவருடைய வாழ்வில் அரங்கேறியது.   

    ஊரில் இருந்த பொது வீட்டில் சிவநேசன் செட்டியாருக்குப் பங்கில்லை என்று அவருடைய தம்பிகள் சொல்லி விட்டார்கள். சிகப்பி ஆச்சியின்  திருமணத்திற்கு, தங்கள் தகப்பனார் அக்காலத்தில் நகைகள், பணம் என்று செலவழித்த கணக்கைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கு வட்டியும் முதலுமாகக்  கணக்குப் போட்டு, பெரிய வீட்டுப் பங்கிற்கு அதை ஈடாக்கிக் காட்டி சிவநேசன் செட்டியாரையும் சிகப்பி ஆச்சியையும் திகைக்க வைத்து விட்டார்கள்.

    அதற்கும் ஒரு பஞ்சாயத்து வைக்க, வாழ்ந்த வீட்டின் மூத்தவனை வெறும் கையோடு அனுப்ப வேண்டாம் என்று சொல்லி, வீட்டை எடுத்துக்கொண்ட
மூவரும் சேர்ந்து ஐந்து லட்ச ரூபாய்களை கொடுக்கச் சொல்லி பஞ்சாயத்தை நிறைவு செய்து விட்டார்கள்.

    பஞ்சாயத்தார் சொல்வதற்குக் கட்டுப்படுதல் நகரத்தாரின் பாரம்பரியம் என்பதால் தன் கணவரின் மூலம் பணத்தைப்பெற்றுக்கொண்ட சிகப்பி ஆச்சி
இப்படிச் சொன்னார்கள்:

    “உங்களின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து இப்பணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இதை நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்தப்  பணத்தை அப்படியே கொண்டு போய் பழநி ஆண்டவனின் உண்டியலில் போட்டு விடப் போகிறேன். செய் நன்றி மறந்தவர்களுக்கு அவன் கூலி கொடுப்பான்”

    இதைக்கேட்ட எதிரணியின் மூவரில், இளையவன் குறுக்கிட்டுச் சொன்னான், “பழநி ஆண்டவர் என்ன உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? எங்களுக்கும் அவர் வேண்டியவர்தான்”

    பஞ்சாயத்தார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விட்டுப் போனார்கள்.

    கதையை இதோடு முடித்துவிடலாம். ஆனால் பழநிஅப்பன் அடுத்து நடத்திக் காட்டிய அதிசயத்தையும் சொன்னால்தான் கதை முழுமை பெறும்.

          &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
   
    தைப்பூச நடைப் பயணத்திற்கு தன் இளையமகன் முருகப்பனையும் அழைத்துக் கொண்டு சிகப்பி ஆச்சி அவர்கள் பயணமானார்கள். மதுரை
தியாகராசர் பொறியியற் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு

சென்றார்கள். அதாவது இந்த ஆண்டு கல்லூரி வளாகத்தில் நடைபெறயுள்ள நேர்முகத் தேர்வில் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது
ஆச்சியின் பிரார்த்தனை.

    ஆனால் பழநிஅப்பனின் அருள் வேறு விதத்தில் உயர்ந்ததாகக் கிடைத்தது. சிகப்பி ஆச்சிக்கு அவரது முதல் நடைபாதப் பயணத்தில் நல்ல கணவன்
கிடைக்க அருளிய அவர், ஆச்சியின் மகனுக்கும் நல்ல வேலை கிடைக்க அருளினார். பலருக்கும் வேலை கொடுக்கும் நல்ல வாய்ப்பு அவனைத் தேடி வந்தது.

    பயணத்தில் அவனின் உயரத்தையும், கம்பீரமான தோற்றத்தையும் பார்த்து மகிழ்ந்த செல்வந்தர் ஒருவர் மூலமாக அது வந்து சேர்ந்தது.

    ஆமாம், பிள்ளை வளர தங்கள் வீட்டிற்கு ஒரு இளைஞனைத் தேடிக்கொண்டிருந்த அந்தப் பெரும் செல்வந்தர். அவன் சுவீகாரமாக தங்கள்
வீட்டிற்கு வந்து சேர அவரும் பழநி அப்பனைப் பிரார்த்தனை செய்தார்.

    சேவற்கொடியோன் கொடி அசைத்தால் முடியாத செயல் ஒன்றும் இல்லை!

    பழநிப் பயணம் முடிந்து திரும்பிய அவர், ஆச்சியின் ஊரைச் சேர்ந்த பெரிய மனிதர் ஒருவர் மூலமாக அதற்குப் பிரயத்தனமும் செய்தார். சிவநேசன்
செட்டியாரின் இரண்டாவது மகனை, தன் நண்பருக்காக சுவீகாரம் கேட்டு அவர் வந்தபோது, சிகப்பி ஆச்சி அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆனால் வந்தவர்
விடவில்லை.

         “வருகின்ற ஸ்ரீதேவியை ஏன் ஆத்தா வேண்டாம் என்கிறாய்? உன் மகன் நூறு கோடி மதிப்புள்ள எஸ்ட்டேட்டிற்கு அதிபதியாகி விடுவான். அவன்
வாழ்க்கை அமோகமாக இருக்கும். உனக்கும் ஈட்டுத் தொகையாக ஒரு கோடி ரூபாய் வாங்கித் தருகிறேன். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
அவர்கள் உன் பையனைப் பார்த்து விட்டார்கள். மிகவும் விருப்பமாக உள்ளார்கள். அடுத்த முகூர்த்தத்திலேயே சுவீகாரத்தை வைத்துக்கொள்வோம்” என்று  பிடிவாதமாகச் சொல்ல, சிகப்பி “பழநி ஆண்டவனிடம் உத்தரவு வாங்கிவிட்டு உங்களுக்குப் பதில் சொல்கிறேன்” என்று சொல்லி அப்போதைக்கு தப்பித்தார்.

    ஆனால் பூக்கட்டிப் பார்த்ததில் பழநி ஆண்டவன் சுவீகாரத்திற்கு உத்தரவு கொடுக்க, சிகப்பி ஆச்சியும் தன் இளைய மகனை சுவீகாரம் கொடுப்பதற்கு
ஒப்புக் கொண்டார்.

    ஒரு நல்ல நாளில் சுவீகாரமும் நடந்தேறியது. பணமும் கை மாறியது. சிவநேசன் செட்டியாரும் மிக்க மகிழ்ச்சிக்கு உள்ளானார்.

    ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு சிகப்பி ஆச்சி ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு விட்டார்.

    “வாரிசு வேண்டி வந்த ஒரு குடும்பத்திற்கு உதவுவதற்காகவே என் மகனைப் பிள்ளை விட்டேன். அவனால் வந்த இந்தப் பணத்தை நாம் உபயோகிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடில்லை! இந்தப் பணத்தை வங்கியில் போட்டு வைத்து, அதில் கிடைக்கும் வட்டியில் வருடத்தில் இரண்டு  ஏழைப்பெண் களுக்காவது நாம் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்தக் காலத்தில் என்னை நீங்கள் இலவசமாக மணந்து கொண்டு என் பெற்றோரை  மகிச்சிக் கடலில் ஆழ்த்தியதைப்போல நாமும் வருடத்திற்கு இரண்டு செட்டிய வீடுகளையாவது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும்”

    சிவநேசன் செட்டியார் குறுக்கிட்டுச் சொன்னார். “சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட்டு மிச்சப் பணத்தில் அதைச் செய்யலாமே!”

    அதற்கு சிறிதும் தயக்கமில்லாமல் சிகப்பி ஆச்சி பதில் சொன்னார்கள், “அதையும் பழநி ஆண்டவனே தரட்டும். தரும்போது தரட்டும். அதுவரை
வாடகை வீட்டிலேயே குடியிருப்போம்!”

    பழநியப்பனுக்கு ஆச்சியின் வார்த்தைகள் கேட்டுவிட்டது போலும். அடுத்து வந்த பத்தாவது நாளில் நல்ல வீடு ஒன்றையும் ஆச்சிக்குக் கொடுத்து
அருளினான்.

    ஆமாம், ஆச்சியின் வார்த்தைகளைக் கேட்ட பிள்ளை கூட்டிக்கொண்ட செட்டியார் மனம் நெகிழ்ந்துபோய், உள்ளூரில் எண்பது லட்ச ரூபாய்க்கு ஒரு
வீட்டை வாங்கி, சிவநேசன் செட்டியார் பெயருக்குக் கிரயம் செய்ததுடன், வீட்டுப் பத்திரத்தையும், சாவியையும் ஆச்சியிடம் கொண்டுவந்து கொடுத்து விட்டார்.

    மறுக்க நினைத்த ஆச்சியை அவருடைய வார்த்தைகள் கட்டிப்போட்டன.

    “வேண்டாம் என்று சொல்லாதே ஆத்தா! பழநி ஆண்டவரே கொடுத்தனுப்பினார் என்று நினைத்துக்கொள். ஆண்டவர் நேரில் வந்து எதையும் செய்ய  மாட்டார். என் போன்ற மனிதர்கள் மூலமாகத்தான் எதையும் செய்வார். இதை நான் கொடுப்பதாக எதற்கு நினைக்கிறாய்? பழநி ஆண்டவரே கொடுத்தார் என்று  நம்பி வாங்கிக்கொள்!”

    அந்த செட்டியாரின் கண்களில் பழநி ஆண்டவரின் உருவம் நிழலாட, இதுவரை தன் கணவரைத் தவிர வேறு ஒருவரின் காலில் விழுந்திராத சிகப்பி
ஆச்சி, அவரின் காலில் விழுந்து வணங்கி விட்டு வீட்டுப் பத்திரத்தையும், சாவியையும் தன் கைகளில் வாங்கிக்கொண்டார்.

    பழநி யாத்திரையின் போது ஆண்டாடு காலமாக சிகப்பி ஆச்சி பாடிப் பரவசமுற்ற அந்த அற்புதப் பாடல் இப்போது ஆச்சியின் மனத் திரையில்
ஒலிக்கத் துவங்கியது! கண்களில் நீர் கசியத் துவங்கியது.

    “காலில் வலுவேந்தி கருத்தில் உனையேந்தி
    ஆளுக்கொரு குறையை அவரவர் நெஞ்சேந்தி   
    நடந்துவரும் உன்னடியார் நல்வழி கண்டுயரக்
    கடம்ப மரத்தானே! கடுகிவர வேண்டுகிறேன்
    வையாபுரி நாடா! மயிலேறும் வேலவனே!
    ஐயா குமரா!அருள்பொழிய வந்துவிடு
    தண்டை முழங்க தாவிவரும் வேலவனே!
    அண்டையிலே வந்திடுக ஆதரவைத் தந்திடுக!”


சிகப்பி ஆச்சி மனமுருகப் பாடும் அப்பாடல் செட்டி நாட்டு மாகவி முனைவர் அர.சிங்கார வடிவேலன் அவர்கள் எழுதிய பாடல் என்று சொல்லவும்
வேண்டுமா? தைப்பூச முருகனின் பெருமையையும் நடைவழிப் பயணத்தின் அருமையும் உணர்ந்து அவர் எழுதிய பாடல் அல்லவா அது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

49 comments:

  1. ஆசிரியர்க்கு வணக்கம் .
    இறைவன் கருணை மிக்கவன்.
    அதனால் தான் ஆசிரியரை
    இறைவன் என்கிறோம் .
    வேண்டுதல் வேண்டாமை
    இறைவனுக்கு கிடையாது
    ஆசிரியரும் அதை கடை பிடித்து,
    மாணவனின் உள்ளத்தில் என்றும்
    குடி கொண்டுள்ளார் .
    இது தான் கல்வியின் சிறந்த தன்மை என்பது.
    மிக்க மகிழ்ச்சி .
    நன்றி

    ReplyDelete
  2. அருமையான கதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. காலை வணக்கம் ஐயா.

    தைப்பூச வருகையை ஒட்டி சிறப்பான ஒரு, முருகப்பெருமான் பற்றிய பதிவு.

    நன்றிகள் பல.

    ReplyDelete
  4. முருகா... முருகா..

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்,

    தைப்பூசமும் சிகப்பி ஆட்சியும் கதை படித்தேன்.மிகவும் அருமையான கதை.
    இறுதியில் சிகப்பி ஆட்சியின் கண்களில் நீர் கசிந்தது போல் என் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது ஐயா. அந்த குமரக்கடவுள் அனைவருக்கும் அருள் புரிவாருகுக!!!!!

    நீங்கள் இந்தியாவின் ஜாதக அலசலை தொடறாததில் மிகவும் வருத்தமே.
    மேலும் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையானதே.

    அப்படியிருக்க திரு அய்யர் அவர்கள் வேண்டாம் என்பதற்கான காரணத்தை கூற வேண்டுகிறேன்.

    பெரும்பான்மையோரின் விருப்பம் இதுவாயிருக்க நீங்கள் திரு அய்யர் அவர்கள் ஒருவரின் கருத்திற்க்காக மட்டும் இந்தியாவின் ஜோதிட அலசலை நிறுத்தியிருப்பது சரியா ஐயா?

    ReplyDelete
  6. ஒம் நமோ ஸ்ரி பகவதே சுப்ரமணீயாயா,
    ஷ‌ன்முக‌யா,ம‌காத்ம‌ணே சர்வ‌ ச‌த்துரு,ச‌ம்ஹார‌கார‌னே,
    குகாய‌,ம‌ஹாய‌,ப‌லா ப‌ராக்ர‌ம‌னே,வீராய‌,சுராய‌,
    பக்தாய‌ பக்த‌பரிபால‌ன‌ய‌ த‌னாய‌ தனேச்வ‌ராய‌ மம ச‌ர்வ‌
    பீஹ்டம் ப்ரயட்ச ஸ்வாகா!!!
    ஓம் சுப்ரமணீய தேவதாயா நமஹா!!!

    Thanks to vathiyar...Ananthamurugan

    ReplyDelete
  7. sir i want to become yourr student..i learnt the basic lessons...it is truly amazing...i want to join in higher studies and learn more lessons...i request u to join me to your classes...

    ReplyDelete
  8. Uma S umas1234@gmail.com

    to me
    வாத்தியாரின் கதை திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சிகப்பி ஆச்சிக்கு மேன்மை கிடைத்தது சரி, ஆனால் பங்காளிகளை பழனி அப்பன் சும்மா விட்டுவிட்டாரே? இல்லை நீங்க எழுத வேண்டாம்னு விட்டுவிட்டீர்களா?

    S. உமா, தில்லி

    ReplyDelete
  9. ஐயா.கதை எதிர்பார்போடு இருந்தது..உங்கள்
    எழுத்தும் ஒரு அதிர்வோடு இருந்தது...
    முருகா...சரணம்........

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,
    காய்ச்சலால் சரியாக வகுப்பறைக்கு வர இயலவில்லை...மாணவர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் ஜாதகத்தை பற்றிய அலசலை படிப்பதற்காகவே அம்மாவிடம் கெஞ்சி கேட்டு கொண்டு வகுப்பறைக்கு வந்தால்...ஏமாற்றமாக இருந்தது(அம்மாவுக்கும் தான்!)...

    அய்யர் அவர்களின் கருத்து சரியாகத் தோன்றினாலும்,அவதார மூர்த்திகளான இராம பிரான்,கிருஷ்ணர்,அனுமந்தர் போன்ற தெய்வங்களுக்கும் ஜாதகங்கள் எழுதப்பட்டு,கணிப்புகளும் மிக சரியாகவும் இருக்கின்றனவே!!!

    அய்யர் அவர்களே வகுப்பறையின் மூத்த மாணவர் தாங்கள்,தங்கள் கருத்துக்களை மதிக்கின்றேன்,தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்...

    ReplyDelete
  11. Was eagerly expecting India's Prospects in Astrology.

    If Iyer is not interested that is fine. But for other's sake, pls publish.

    ReplyDelete
  12. ஐயா வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் இருக்கும் போது ஒரு மாணவருக்காக மட்டும் இந்தியாவின் ஜாதகத்தை அலசாமல் விட்டது கொஞ்சம் வருத்தம்.அலசியிருந்தால் முண்டேன் ஜோதிடம் பற்றியும் அலசித் துவைத்துக் காண்பித்திருப்பீர்கள்.கற்றுக்கொண்ட மாதிரியும் இருந்திருக்கும்.பழனியாண்டி பேரைச் சொன்னவுடனே சும்மா அதிருதுல்ல..........

    ReplyDelete
  13. ஐயா,சிகப்பி ஆச்சிக்கு அப்பனாக இருந்து வழிகாட்டிய "பழனியப்பனின்" கருணையை கருணை தான்...
    //சிகப்பி ஆச்சியின் திருமணத்திற்கு, தங்கள் தகப்பனார் அக்காலத்தில் நகைகள், பணம் என்று செலவழித்த கணக்கைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கு வட்டியும் முதலுமாகக் கணக்குப் போட்டு, பெரிய வீட்டுப் பங்கிற்கு அதை ஈடாக்கிக் காட்டி சிவநேசன் செட்டியாரையும் சிகப்பி ஆச்சியையும் திகைக்க வைத்து //
    இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?எந்த அள‌விற்கு பணத்தின் மீதான அவர்களின் பேராசை செயல்பட செய்கின்றது...
    //இரண்டு ஏழைப்பெண் களுக்காவது நாம் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்தக் காலத்தில் என்னை நீங்கள் இலவசமாக மணந்து கொண்டு என் பெற்றோரை மகிச்சிக் கடலில் ஆழ்த்தியதைப்போல நாமும் வருடத்திற்கு இரண்டு செட்டிய வீடுகளையாவது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும்//
    பழனியப்பனைப் போன்று அவரது பக்தைக்கும் ஒரே மனம் தான்,"கருணை" உள்ள‌ம்...ந‌ம்ப‌வே முடிய‌வில்லை இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌வர்க‌ளுக்கு எவ்வ‌ள‌வு சோத‌னை...
    தை மாத பிறப்பையொட்டி சிகப்பி ஆச்சியின் "தைப்பூசம்" ஒட்டிய சிறுகதையின் மூலம் நல்லதொரு கருத்தையும் தந்த வாத்தியார் ஐயாவுக்கு மிக்க நன்றிகள்...திணை விதைத்த ஆச்சிக்கு திணையை பலமடங்காய் பெருக்கி கொடுத்திருக்கிறார் பழனியாண்டவர்!

    ReplyDelete
  14. சிகப்பி ஆச்சி கதை வழக்கம்போல அருமை..
    இந்தமுறை பழனியப்பனின் அருள்பாலிப்பைப் பறைசாற்றும் விதத்தில் இருந்தாலும் என்ன உள்நோக்கத்தில் இன்று இந்தப்பதிவு வெளியிடப்பட்டிருகிறது என்பது எனக்குப் புரிந்தது போலவே அய்யருக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்..
    காரணம் நேற்று நடந்த விவாதங்கள்..அதன் தொடர்ச்சியாக வாத்தியார் எடுத்திருக்கும் நிலைப்பாடு..இன்று கதைபதிவு..

    இந்தக்கதையில் வரும் சில வரிகள்தான் அதை எனக்குத் தெரியப் படுத்தியது..
    என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்..
    அய்யருக்குப் பதில் கேள்வியை இன்று எழுப்பவில்லை..எப்போதோ எழுதி வலைத்தளத்திலே வெளியிட்டும் இருந்திருக்கிறார் ஆசிரியர்..

    அந்த வரிகள்:
    1 . ////தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாகச் சொல்வார்கள். அதாவது ஜீவராசிகள் தோன்றியதைச் சொல்வார்கள். அத்துடன் முருகப் பெருமானுக் கும் பூசம் உகந்ததாம். அவர் பூச நட்சத்திரத்தில்தான் வள்ளியை மணந்து கொண்டார் என்பார்கள்.//////////

    நாடுகளுக்கு சோதிடம் கணிக்கக்கூடாது என்ற அய்யரின் கருத்துக்கு எதிர்வாதத்தை சென்ற மாதமே சொல்லியிருக்கிறார்..கூடவே (முருகக்)கடவுளுக்கும் சேர்த்தே உகந்த நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு..

    2 . /////// இதைக்கேட்ட எதிரணியின் மூவரில், இளையவன் குறுக்கிட்டுச் சொன்னான், “பழநி ஆண்டவர் என்ன உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? எங்களுக்கும் அவர் வேண்டியவர்தான்”

    பஞ்சாயத்தார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விட்டுப் போனார்கள்.

    கதையை இதோடு முடித்துவிடலாம். ஆனால் பழநிஅப்பன் அடுத்து நடத்திக் காட்டிய அதிசயத்தையும் சொன்னால்தான் கதை முழுமை பெறும்.//////

    பழநியாண்டவரிடம் முறையிட்டிருக்கிறேன் என்று சொன்ன அய்யருக்கு சொல்லியிருக்கும் பதில் கதை இதுதான்..

    நல்ல கதை..

    ReplyDelete
  15. இன்றைய கதை நீளம் என்பதால் பொறுமையாகப் படிப்போம் என்று நேற்றைய பதிவுக்குக் கமென்ட் அடித்துவிட்டு இன்றைய கதையைப் படித்து கமெண்ட்டுகளைப் பார்த்தால் ராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் என்று எனக்குத் தோன்றியதே ஸ்ரீ ஷோபனாவுக்கும் தோன்றியிருப்பது ஆச்சரியத்துக்குள்ளாக்கியது..
    அவருக்குத் தோன்றியதே எனக்குத் தோன்றியது என்று அவர் சொல்லக்கூடும்..சிந்தனையில் கடவுள் பற்றிய ஜாதகக் கேள்வியை விதைத்த அய்யர்தான் காரணம்..

    ReplyDelete
  16. //minorwall said...
    இன்றைய கதை நீளம் என்பதால் பொறுமையாகப் படிப்போம் என்று நேற்றைய பதிவுக்குக் கமென்ட் அடித்துவிட்டு இன்றைய கதையைப் படித்து கமெண்ட்டுகளைப் பார்த்தால் ராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் என்று எனக்குத் தோன்றியதே ஸ்ரீ ஷோபனாவுக்கும் தோன்றியிருப்பது ஆச்சரியத்துக்குள்ளாக்கியது..
    அவருக்குத் தோன்றியதே எனக்குத் தோன்றியது என்று அவர் சொல்லக்கூடும்..சிந்தனையில் கடவுள் பற்றிய ஜாதகக் கேள்வியை விதைத்த அய்யர்தான் காரணம்..//
    இதே எண்ணத்தையே தான் வகுப்பறை மாணவர்கள் பலரும் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்...அவர்கள் பின்னூட்டம் ஏதும் அனுப்பாமல் சொல்லிக் கொன்டிருப்பார்கள்...

    ReplyDelete
  17. அன்புள்ள அய்யா வணக்கம்,
    முருகனை நம்பியவர் என்னாலும் கைவிடப்படார்.தைப்பூச சிறப்பு கதைக்கு நன்றி
    கே.ராஜன்பவானி

    ReplyDelete
  18. எங்களை போன்ற இளைஞ்சர்களுக்கு இறைவன் நம்பிக்கையை வள்ர்க்கும் கதை.

    தீனா

    ReplyDelete
  19. தங்களின் முடிவிற்கு
    நன்றிகள் பல..

    நீர் நிறைந்த கண்களுடன்
    இறைவனுக்கு நன்றிகளை சமர்பிக்கிறோம்

    இந்த பாடலினை உங்கள் அனுமதியுடன்
    சுழலவிடுகிறோம்..


    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

    ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

    யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

    ஒருவர் மட்டும் குடியிருந்தால்
    துன்பம் ஏதுமில்லை

    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

    பாதையெல்லாம் மாறிவரும்
    பயணம் முடிந்துவிடும்

    மாறுவதை புரிந்துகொண்டால்
    மயக்கம் தெளிந்துவிடும்

    ReplyDelete
  20. ///இன்று இந்தப்பதிவு வெளியிடப்பட்டிருகிறது என்பது எனக்குப் புரிந்தது போலவே அய்யருக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்..காரணம் நேற்று நடந்த விவாதங்கள்..அதன் தொடர்ச்சியாக வாத்தியார் எடுத்திருக்கும் நிலைப்பாடு..இன்று கதைபதிவு..///

    எண்ணம் தெளிவானால்
    எதுவும் எளிதாகும்


    ///என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்..
    அய்யருக்குப் பதில் கேள்வியை இன்று எழுப்பவில்லை..///

    இப்போது தான் கணிப்பொறியை தொடங்கி உள்ளோம்.. காலதாமதத்திற்கு மன்னிக்கவும்

    ///பழநியாண்டவரிடம் முறையிட்டிருக்கிறேன் என்று சொன்ன அய்யருக்கு சொல்லியிருக்கும் பதில் கதை இதுதான்..///

    நீங்கள் (நீங்கள் என்று சொன்னது அன்றைய நாளில் நடந்த அனைத்தையும்) மட்டுமல்ல யார் எதை சொன்னாலும் அதனை இறைவனிடம் சேர்த்துவிடுவது அய்யரின் வழக்கம்..


    அதனை இங்கு பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  21. ///அய்யர் அவர்களின் கருத்து சரியாகத் தோன்றினாலும்,அவதார மூர்த்திகளான இராம பிரான்,கிருஷ்ணர்,அனுமந்தர் போன்ற தெய்வங்களுக்கும் ஜாதகங்கள் எழுதப்பட்டு,கணிப்புகளும் மிக சரியாகவும் இருக்கின்றனவே!!!

    அய்யர் அவர்களே வகுப்பறையின் மூத்த மாணவர் தாங்கள்,தங்கள் கருத்துக்களை மதிக்கின்றேன்,தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்......///

    தவறு இல்லை சகோதரியாரே...

    தெய்வம் வேறு..
    கடவுள் வேறு..
    இறைவன் வேறு..

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அவர்கள் தெய்வம் - பிறந்தவர்கள் மறைந்தாக வேண்டும்

    நாம் குறிப்பிடுவது அதற்கு அடுத்த நிலையில் உள்ளன..

    வேதங்களினாலும் பிரமாவினாலும் விஷ்ணுவினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் அனுமான பிரமாணத்தினாலும் அறிய முடியாத நிலையில் இறைவன் இருக்கிறான் என்றே
    சிவஞான சித்தியார் சொல்லும் அந்த பாடலினை தந்து அமைதி கொள்கிறோம்

    மறையினால் அயனால் மாலால்
    மனத்தினால் வாக்கால் மற்றும்
    குறைவிலா அளவினாலும் கூற ஒண்ணாது ஆகி நின்ற இறைவனார்...

    ReplyDelete
  22. Blogger csekar2930 said...
    ஆசிரியர்க்கு வணக்கம் .
    இறைவன் கருணை மிக்கவன்.
    அதனால் தான் ஆசிரியரை
    இறைவன் என்கிறோம் .
    வேண்டுதல் வேண்டாமை
    இறைவனுக்கு கிடையாது
    ஆசிரியரும் அதை கடை பிடித்து,
    மாணவனின் உள்ளத்தில் என்றும்
    குடி கொண்டுள்ளார் .
    இது தான் கல்வியின் சிறந்த தன்மை என்பது.
    மிக்க மகிழ்ச்சி .
    நன்றி///////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ////Blogger Rathnavel said...
    அருமையான கதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  24. /////Blogger Sathish K said...
    காலை வணக்கம் ஐயா.
    தைப்பூச வருகையை ஒட்டி சிறப்பான ஒரு, முருகப்பெருமான் பற்றிய பதிவு.
    நன்றிகள் பல./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ////Blogger Govindasamy said...
    முருகா... முருகா../////

    பாதியில் நிறுத்திவிட்டீர்களே!
    முருகா சரணம்...முருகா சரணம்....முருகா சரணம்!

    ReplyDelete
  26. /////Blogger redfort said...
    ஐயா வணக்கம்,
    தைப்பூசமும் சிகப்பி ஆட்சியும் கதை படித்தேன்.மிகவும் அருமையான கதை.
    இறுதியில் சிகப்பி ஆட்சியின் கண்களில் நீர் கசிந்தது போல் என் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது ஐயா. அந்த குமரக்கடவுள் அனைவருக்கும் அருள் புரிவாருகுக!!!!!
    நீங்கள் இந்தியாவின் ஜாதக அலசலை தொடறாததில் மிகவும் வருத்தமே.
    மேலும் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையானதே.
    அப்படியிருக்க திரு அய்யர் அவர்கள் வேண்டாம் என்பதற்கான காரணத்தை கூற வேண்டுகிறேன்.
    பெரும்பான்மையோரின் விருப்பம் இதுவாயிருக்க நீங்கள் திரு அய்யர் அவர்கள் ஒருவரின் கருத்திற்க்காக மட்டும் இந்தியாவின் ஜோதிட அலசலை நிறுத்தியிருப்பது சரியா ஐயா?/////

    உங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறேன். இன்றையப் பதிவைப் (11.1.2012) பாருங்கள்.

    ReplyDelete
  27. ////Blogger arul said...
    good moral in this story////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger Ananthamurugan said...
    ஒம் நமோ ஸ்ரி பகவதே சுப்ரமணீயாயா,
    ஷ‌ன்முக‌யா,ம‌காத்ம‌ணே சர்வ‌ ச‌த்துரு,ச‌ம்ஹார‌கார‌னே,
    குகாய‌,ம‌ஹாய‌,ப‌லா ப‌ராக்ர‌ம‌னே,வீராய‌,சுராய‌,
    பக்தாய‌ பக்த‌பரிபால‌ன‌ய‌ த‌னாய‌ தனேச்வ‌ராய‌ மம ச‌ர்வ‌
    பீஹ்டம் ப்ரயட்ச ஸ்வாகா!!!
    ஓம் சுப்ரமணீய தேவதாயா நமஹா
    Thanks to vathiyar...Ananthamurugan/////

    நல்லது. நன்றி ஆனந்த முருகா! எந்த ஊர் ஆனந்தன் நீங்கள்?

    ReplyDelete
  29. ////Blogger vikneshkumar said...
    sir i want to become yourr student..i learnt the basic lessons...it is truly amazing...i want to join in higher studies and learn more lessons...i request u to join me to your classes...////

    இங்கே எழுதினால் எப்படி? உங்கள் மின்னஞ்சல் முகவரி எனக்கு எப்படித் தெரியும்?
    இதை அப்படியே என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். classroom2007@gmail.com

    ReplyDelete
  30. //////Blogger SP.VR. SUBBAIYA said...
    Uma S umas1234@gmail.com
    to me
    வாத்தியாரின் கதை திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சிகப்பி ஆச்சிக்கு மேன்மை கிடைத்தது சரி, ஆனால் பங்காளிகளை பழனி அப்பன் சும்மா விட்டுவிட்டாரே? இல்லை நீங்க எழுத வேண்டாம்னு விட்டுவிட்டீர்களா?
    S. உமா, தில்லி/////

    உங்களின் மேலான பாராட்டிற்கு நன்றி சகோதரி. இது சிறுகதை. இதையே நமது ஜப்பான் மைனர் பெரியது என்கிறார். நீங்கள் சொல்கின்றபடி பங்காளிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் எழுதினால் அது தொடர்கதையாகிவிடும். அதனால் எழுதவில்லை. கற்பனைக்கு எல்லை ஏது?

    ReplyDelete
  31. //////Blogger narayana said...
    ஐயா.கதை எதிர்பார்போடு இருந்தது..உங்கள்
    எழுத்தும் ஒரு அதிர்வோடு இருந்தது...
    முருகா...சரணம்......../////

    நெகிழவைக்கும் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    காய்ச்சலால் சரியாக வகுப்பறைக்கு வர இயலவில்லை...மாணவர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் ஜாதகத்தை பற்றிய அலசலை படிப்பதற்காகவே அம்மாவிடம் கெஞ்சி கேட்டு கொண்டு வகுப்பறைக்கு வந்தால்...ஏமாற்றமாக இருந்தது(அம்மாவுக்கும் தான்!)...
    அய்யர் அவர்களின் கருத்து சரியாகத் தோன்றினாலும்,அவதார மூர்த்திகளான இராம பிரான்,கிருஷ்ணர்,அனுமந்தர் போன்ற தெய்வங்களுக்கும் ஜாதகங்கள் எழுதப்பட்டு,கணிப்புகளும் மிக சரியாகவும் இருக்கின்றனவே!!!
    அய்யர் அவர்களே வகுப்பறையின் மூத்த மாணவர் தாங்கள்,தங்கள் கருத்துக்களை மதிக்கின்றேன்,தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்.../////

    உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிருக்கிறேன். இன்றையப் பதிவைப் (12.1.2012) பாருங்கள்.

    ReplyDelete
  33. ////Blogger Ramanathan said...
    Was eagerly expecting India's Prospects in Astrology.
    If Iyer is not interested that is fine. But for other's sake, pls publish./////

    உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிருக்கிறேன். இன்றையப் பதிவைப் (12.1.2012) பாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  34. /////Blogger Rajaram said...
    Dear Sir Good story./////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. //////Blogger Rajaram said...
    ஐயா வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் இருக்கும் போது ஒரு மாணவருக்காக மட்டும் இந்தியாவின் ஜாதகத்தை அலசாமல் விட்டது கொஞ்சம் வருத்தம்.அலசியிருந்தால் முண்டேன் ஜோதிடம் பற்றியும் அலசித் துவைத்துக் காண்பித்திருப்பீர்கள்.கற்றுக்கொண்ட மாதிரியும் இருந்திருக்கும்.பழனியாண்டி பேரைச் சொன்னவுடனே சும்மா அதிருதுல்ல..........///////

    உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிருக்கிறேன். இன்றையப் பதிவைப் (12.1.2012) பாருங்கள்.

    ReplyDelete
  36. //////Blogger R.Srishobana said...
    ஐயா,சிகப்பி ஆச்சிக்கு அப்பனாக இருந்து வழிகாட்டிய "பழனியப்பனின்" கருணையை கருணை தான்...
    //சிகப்பி ஆச்சியின் திருமணத்திற்கு, தங்கள் தகப்பனார் அக்காலத்தில் நகைகள், பணம் என்று செலவழித்த கணக்கைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கு
    வட்டியும் முதலுமாகக் கணக்குப் போட்டு, பெரிய வீட்டுப் பங்கிற்கு அதை ஈடாக்கிக் காட்டி சிவநேசன் செட்டியாரையும் சிகப்பி ஆச்சியையும் திகைக்க வைத்து
    //
    இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?எந்த அள‌விற்கு பணத்தின் மீதான அவர்களின் பேராசை செயல்பட செய்கின்றது...
    //இரண்டு ஏழைப்பெண் களுக்காவது நாம் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்தக் காலத்தில் என்னை நீங்கள் இலவசமாக மணந்து கொண்டு என் பெற்றோரை மகிச்சிக் கடலில் ஆழ்த்தியதைப்போல நாமும் வருடத்திற்கு இரண்டு செட்டிய வீடுகளையாவது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும்//
    பழனியப்பனைப் போன்று அவரது பக்தைக்கும் ஒரே மனம் தான்,"கருணை" உள்ள‌ம்...ந‌ம்ப‌வே முடிய‌வில்லை இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌வர்க‌ளுக்கு எவ்வ‌ள‌வு
    சோத‌னை...
    தை மாத பிறப்பையொட்டி சிகப்பி ஆச்சியின் "தைப்பூசம்" ஒட்டிய சிறுகதையின் மூலம் நல்லதொரு கருத்தையும் தந்த வாத்தியார் ஐயாவுக்கு மிக்க
    நன்றிகள்...திணை விதைத்த ஆச்சிக்கு திணையை பலமடங்காய் பெருக்கி கொடுத்திருக்கிறார் பழனியாண்டவர்!//////

    கதையை உள்வாங்கிப் படித்து அதை சிலாகித்து விமர்சித்த மேன்மைக்கு மிக்க நன்றிகள் சகோதரி. எழுதுபவனுக்கு இதுப்பொன்ற விமர்சனங்கள்தான் ஊக்க
    மருந்து. எனது கதைத் தொகுப்பு புத்தகங்கள் (மொத்தம் 3 உள்ளன) உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள். பதிப்பகத்தாரிடம் சொல்லி அனுப்பிவைக்கச்
    சொல்கிறேன். பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@yahoo.in

    ReplyDelete
  37. /////Blogger minorwall said...
    சிகப்பி ஆச்சி கதை வழக்கம்போல அருமை..
    இந்தமுறை பழனியப்பனின் அருள்பாலிப்பைப் பறைசாற்றும் விதத்தில் இருந்தாலும் என்ன உள்நோக்கத்தில் இன்று இந்தப்பதிவு வெளியிடப்பட்டிருகிறது

    என்பது எனக்குப் புரிந்தது போலவே அய்யருக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்..
    காரணம் நேற்று நடந்த விவாதங்கள்..அதன் தொடர்ச்சியாக வாத்தியார் எடுத்திருக்கும் நிலைப்பாடு..இன்று கதைபதிவு..
    இந்தக்கதையில் வரும் சில வரிகள்தான் அதை எனக்குத் தெரியப் படுத்தியது..
    என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்..
    அய்யருக்குப் பதில் கேள்வியை இன்று எழுப்பவில்லை..எப்போதோ எழுதி வலைத்தளத்திலே வெளியிட்டும் இருந்திருக்கிறார் ஆசிரியர்..
    அந்த வரிகள்:
    1 . ////தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாகச் சொல்வார்கள். அதாவது ஜீவராசிகள் தோன்றியதைச் சொல்வார்கள். அத்துடன் முருகப் பெருமானுக்

    கும் பூசம் உகந்ததாம். அவர் பூச நட்சத்திரத்தில்தான் வள்ளியை மணந்து கொண்டார் என்பார்கள்.//////////
    நாடுகளுக்கு சோதிடம் கணிக்கக்கூடாது என்ற அய்யரின் கருத்துக்கு எதிர்வாதத்தை சென்ற மாதமே சொல்லியிருக்கிறார்..கூடவே (முருகக்)கடவுளுக்கும்

    சேர்த்தே உகந்த நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு..
    2 . /////// இதைக்கேட்ட எதிரணியின் மூவரில், இளையவன் குறுக்கிட்டுச் சொன்னான், “பழநி ஆண்டவர் என்ன உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா?

    எங்களுக்கும் அவர் வேண்டியவர்தான்”
    பஞ்சாயத்தார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விட்டுப் போனார்கள்.
    கதையை இதோடு முடித்துவிடலாம். ஆனால் பழநிஅப்பன் அடுத்து நடத்திக் காட்டிய அதிசயத்தையும் சொன்னால்தான் கதை முழுமை பெறும்.//////
    பழநியாண்டவரிடம் முறையிட்டிருக்கிறேன் என்று சொன்ன அய்யருக்கு சொல்லியிருக்கும் பதில் கதை இதுதான்..
    நல்ல கதை..//////

    ஆமாம் மைனர் அக்கதையை இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதினேன். பத்திரிக்கைக்காரர்கள் சென்ற மாதம்தான் அதை தங்களுடைய மாதப் பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். பரவலான வாசகர்களின் பாராட்டையும் பெற்றுத்தந்தது அந்தக் கதை. இத்தனை தூரம் கதையை விரிவாகப் படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி மைனர்

    ReplyDelete
  38. ////Blogger minorwall said...
    இன்றைய கதை நீளம் என்பதால் பொறுமையாகப் படிப்போம் என்று நேற்றைய பதிவுக்குக் கமென்ட் அடித்துவிட்டு இன்றைய கதையைப் படித்து கமெண்ட்டுகளைப் பார்த்தால் ராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் என்று எனக்குத் தோன்றியதே ஸ்ரீ ஷோபனாவுக்கும் தோன்றியிருப்பது
    ஆச்சரியத்துக்குள்ளாக்கியது..
    அவருக்குத் தோன்றியதே எனக்குத் தோன்றியது என்று அவர் சொல்லக்கூடும்..சிந்தனையில் கடவுள் பற்றிய ஜாதகக் கேள்வியை விதைத்த அய்யர்தான்
    காரணம்../////

    உங்கள் இருவருக்கும் தோன்றியது எனக்கும் தோன்றியது மைனர்! அதைல் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. நம் அனுபவங்கள் அப்படி ஒற்றுமையானவை!

    ReplyDelete
  39. /////Blogger R.Srishobana said...
    //minorwall said...
    இன்றைய கதை நீளம் என்பதால் பொறுமையாகப் படிப்போம் என்று நேற்றைய பதிவுக்குக் கமென்ட் அடித்துவிட்டு இன்றைய கதையைப் படித்து

    கமெண்ட்டுகளைப் பார்த்தால் ராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் என்று எனக்குத் தோன்றியதே ஸ்ரீ ஷோபனாவுக்கும் தோன்றியிருப்பது

    ஆச்சரியத்துக்குள்ளாக்கியது..
    அவருக்குத் தோன்றியதே எனக்குத் தோன்றியது என்று அவர் சொல்லக்கூடும்..சிந்தனையில் கடவுள் பற்றிய ஜாதகக் கேள்வியை விதைத்த அய்யர்தான்

    காரணம்..//
    இதே எண்ணத்தையே தான் வகுப்பறை மாணவர்கள் பலரும் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்...அவர்கள் பின்னூட்டம் ஏதும் அனுப்பாமல்

    சொல்லிக் கொன்டிருப்பார்கள்.../////

    பின்னூட்டம் அனுப்பாமல் இருப்பவர்களில் இன்று மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டவர்கள் சிலர் உள்ளார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமனின் ஜாதகத்தை பேப்பர் கட்டிங்குகளுடன் சேர்த்து இன்று அனுப்பிவைத்துள்ளேன். உங்களுக்கும் கிடைத்திருக்கும். பார்த்தீர்களா?

    ReplyDelete
  40. /////Blogger krajan said...
    அன்புள்ள அய்யா வணக்கம்,
    முருகனை நம்பியவர் என்னாலும் கைவிடப்படார்.தைப்பூச சிறப்பு கதைக்கு நன்றி
    கே.ராஜன்பவானி/////

    நல்லது உங்களின் மேலான கருத்திற்கு நன்றி ராஜன்!

    ReplyDelete
  41. ////Blogger 149 said...
    எங்களை போன்ற இளைஞ்சர்களுக்கு இறைவன் நம்பிக்கையை வளர்க்கும் கதை.
    தீனா/////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. //////Blogger iyer said...
    தங்களின் முடிவிற்கு
    நன்றிகள் பல..
    நீர் நிறைந்த கண்களுடன்
    இறைவனுக்கு நன்றிகளை சமர்பிக்கிறோம்//////

    நீர் பனித்த கண்களுடன் என்று சொல்லுங்கள் விசுவநாதன்! நன்றி உரித்த்தாகுக!

    ReplyDelete
  43. //////Blogger iyer said...
    ///இன்று இந்தப்பதிவு வெளியிடப்பட்டிருகிறது என்பது எனக்குப் புரிந்தது போலவே அய்யருக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்..காரணம் நேற்று
    நடந்த விவாதங்கள்..அதன் தொடர்ச்சியாக வாத்தியார் எடுத்திருக்கும் நிலைப்பாடு..இன்று கதைபதிவு..///
    எண்ணம் தெளிவானால்
    எதுவும் எளிதாகும்
    ///என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்..
    அய்யருக்குப் பதில் கேள்வியை இன்று எழுப்பவில்லை..///
    இப்போது தான் கணிப்பொறியை தொடங்கி உள்ளோம்.. காலதாமதத்திற்கு மன்னிக்கவும்
    ///பழநியாண்டவரிடம் முறையிட்டிருக்கிறேன் என்று சொன்ன அய்யருக்கு சொல்லியிருக்கும் பதில் கதை இதுதான்..///
    நீங்கள் (நீங்கள் என்று சொன்னது அன்றைய நாளில் நடந்த அனைத்தையும்) மட்டுமல்ல யார் எதை சொன்னாலும் அதனை இறைவனிடம் சேர்த்துவிடுவது அய்யரின் வழக்கம்..
    அதனை இங்கு பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றிகள்../////

    பகிர்வுகளுக்காகத்தானே கூகுள் ஆண்டவர் இந்த பின்னூட்டப்பெட்டியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். நன்றியை அவருக்குத்தான் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  44. ////Blogger iyer said...
    ///அய்யர் அவர்களின் கருத்து சரியாகத் தோன்றினாலும்,அவதார மூர்த்திகளான இராம பிரான்,கிருஷ்ணர்,அனுமந்தர் போன்ற தெய்வங்களுக்கும் ஜாதகங்கள் எழுதப்பட்டு,கணிப்புகளும் மிக சரியாகவும் இருக்கின்றனவே!!!
    அய்யர் அவர்களே வகுப்பறையின் மூத்த மாணவர் தாங்கள்,தங்கள் கருத்துக்களை மதிக்கின்றேன்,தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்......///
    தவறு இல்லை சகோதரியாரே...
    தெய்வம் வேறு..
    கடவுள் வேறு..
    இறைவன் வேறு..
    நீங்கள் குறிப்பிட்டுள்ள அவர்கள் தெய்வம் - பிறந்தவர்கள் மறைந்தாக வேண்டும்
    நாம் குறிப்பிடுவது அதற்கு அடுத்த நிலையில் உள்ளன..
    வேதங்களினாலும் பிரமாவினாலும் விஷ்ணுவினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் அனுமான பிரமாணத்தினாலும் அறிய முடியாத நிலையில் இறைவன்
    இருக்கிறான் என்றே
    சிவஞான சித்தியார் சொல்லும் அந்த பாடலினை தந்து அமைதி கொள்கிறோம்
    மறையினால் அயனால் மாலால்
    மனத்தினால் வாக்கால் மற்றும்
    குறைவிலா அளவினாலும் கூற ஒண்ணாது ஆகி நின்ற இறைவனார்.../////

    நல்லது. உங்களின் விளக்கங்களுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  45. வணக்கம் ஐயா,
    //எனது கதைத் தொகுப்பு புத்தகங்கள் (மொத்தம் 3 உள்ளன) உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள். பதிப்பகத்தாரிடம் சொல்லி அனுப்பிவைக்கச்
    சொல்கிறேன். பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@yahoஒ.இன்//
    தங்களது மற்ற சிறுகதைகளையும் படிப்பதற்கு ஆவலாய் உள்ளேன்...தங்களது சிறுகதைகள் கிடைக்கப் பெற்றால் மிகவும் மகிழ்வேன்...படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் சிறுகதைகளை தான் மிகவும் விரும்பி படிப்பேன்...தங்களது இந்த மேலான மேன்மைக்கு மிக்க நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  46. ////தங்களின் முடிவிற்கு
    நன்றிகள் பல..
    நீர் நிறைந்த கண்களுடன்
    இறைவனுக்கு நன்றிகளை சமர்பிக்கிறோம்//////

    நீர் பனித்த கண்களுடன் என்று சொல்லுங்கள் விசுவநாதன்! நன்றி உரித்த்தாகுக!///

    நீர் என சொன்னது கண்ணீரை அல்ல
    நீர் (நீங்கள்) என குறிப்பிட்டது..

    பொங்கல் கொண்டாட்டத்தினால்
    காலதாமதம் மன்னிக்க...

    ReplyDelete
  47. தை பூசம் வடலூர்(2012)
    பிப் 6 கொடியேற்றம்
    பிப் 7 ஜோதி தரிசனம்
    பிப் 9 சித்திவளாகம் திறப்பு!!

    கூட்டம் அதிகமாக இருக்கும். சுத்தம் காக்க நம்மால் முடிந்த பணி செய்வோம்!!பிளாஸ்டிக் குப்பைகளை அதிகம் சேராமல் பார்த்து கொள்ளவேண்டும் !!

    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com