விக்டோரியா மகாராணி |
Astrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சும்மாவா?
அதனால் அவரை மேதகு விக்டோரியா மகாராணி என்று அழைத்ததில் தவறில்லை!
அதனால் அவரை மேதகு விக்டோரியா மகாராணி என்று அழைத்ததில் தவறில்லை!
பயிற்சிப் பாடம் 27
Practical Lesson No.27
----------------------------
மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.
யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த பெண்மணியை மேதகு என்று சொல்வதில் தவறில்லை!
ஜாதகப்படி அவருடைய மேன்மைக்கு என்ன காரணம்?
அதை இன்று அலசுவோம்!
அவரைப் பற்றித் தெரியாதவர்கள், இந்தத் தளத்திற்குச் சென்று அவரைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
http://en.wikipedia.org/wiki/Queen_Victoria
++++++++++++++++++++++++++++++++++++++
விக்டோரியா மகாராணியின் ஜாதகம் |
பெயர்: Alexandrina Victoria
வாழ்ந்த காலம்: 24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
பதவிக்கு வந்த காலம்: 28.06.1838 (தனது 20வது வயதில்)
பிறப்பு விவரம்:
23/24.5.1819
அதிகாலை 4:40 மணி
L attitude: 51.30 North
Longitude: 0.5 West
Birth Star: Rohini
ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறப்புக்கள்:
1. லக்கினம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரு ராசியில் அமையப்பெற்றுள்ளது. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் அமர்ந்தது. மிகவும் சிறப்பு.
2. சந்திரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் சந்திரன் உள்ளது.
3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனி, அத்துடன் ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியுமான சனி 11ஆம் வீட்டில் அமர்ந்தது சிறப்பு
4. முக்கிய ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார்
5. குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, உயர்ந்த பரிவர்த்தனை யோகத்தைக் கொடுத்துள்ளார்கள்.
6. புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை. அவர்கள் முறையே பூர்வ புண்ணிய அதிபதியும் லக்கினாதிபதியும் ஆவார்கள்.
7. குருவின் விஷேச பார்வை (5ஆம் பார்வை) லக்கினத்தின்மேல்.
8. நவாம்சத்தில் சூரியன் உச்சம். புதன் உச்சம்.
9. ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திரன் உச்சம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு!
.................................................................................
பலன்கள்:
1. ரிஷப லக்கினக்கிரக்காரகள் நடைமுறைக்கு ஒத்துப்போகும் லக்கினக்காரர்கள். உறுதியான மனதைக்கொண்டவர்கள். ஜாதகத்தில் அதன் அதிபதி 12ல் மறைந்திருந்தாலும், அந்த அடிப்படைக் குணங்கள் இருக்கும்.
2. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும் சந்திரனும், ஒன்றாக இருந்து குருபகவானின் பார்வையைப் பெற்றதால். ஜாதகிக்கு நல்ல ஆளுமை கிடைத்தது. ஜாதகிக்கு அவர் பிறந்த நோக்கத்தைச் செயல் படுத்தும் தன்மையை, சூழ்நிலைகளைக் கொடுத்தது.
அம்மையாருடைய காலத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியம் (British Empire) பரந்து விரிவடைந்தது.
3. 5ஆம் வீடு, ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது. குடும்ப அதிபதி புதன் தன்னுடைய வீட்டில் இருந்து லாபஸ்தானத்தில் உள்ளார். இந்த அமைப்புக்களால் மகராணிக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்தது. நிறையக் குழந்தைகளும் பிறந்தன.(மொத்தம் 9 குழந்தைகள்)
யோகங்கள்:
1. அரச கிரகமான சந்திரன் உச்சமடைந்ததுடன், வர்கோத்தமமும் பெற்றுள்லது. அத்துடன் லக்கினத்திலும் அமர்ந்து பலத்த யோகத்தைக் கொடுத்தது.
2. செவ்வாயும், ராகுவும் 11ஆம் வீட்டில் அமர்ந்ததுடன், வர்கோத்தமும் பெற்றுள்ளன.
3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகன் சனி, 11ல் அமர்ந்தது மட்டுமின்றி பரிவர்த்தனை பலத்துடன் இருக்கிறார்.
4. குரு நீசமடைந்தாலும் பரிவர்த்தனையால் மிகவும் பலமாக இருக்கிறார். அத்துடன் அது பாக்கியஸ்தானம். ஜாதகிக்கு அரசாளும் யோகத்தைக் கொடுத்தார்.
5. தனது 18 வது வயதில் அவர் அரியனையில் அமர்ந்தார். அப்போது அவர்க்கு ராகுதிசை, குரு புத்தி. வர்கோத்தம ராகுவும், பரிவர்த்தனை மற்றும் திரிகோண பலத்துடன் இருக்கும் குருவும் அதைச் செய்தார்கள்.
6. சனி 9 & 10ஆம் இடங்களுக்கு உரிய தர்மகர்மா அதிபதி. அவர் பரிவர்த்தனை யோகத்துடன் 11ல் அமர்ந்ததால் அவருடைய தசை முழுவதும் ராணிக்கு பலத்த யோகங்களைக் கொடுத்தான். அந்த காலகட்டத்தில்தான் (Between 1867 to 1886) சாம்ராஜ்யம் விரிவடைந்தது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கபெற்றது. ராணி இந்தியாவிற்கும் ராணியானார்.
ஏழு கிரகங்கள் 100 பாகைக்குள் அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!
ஏழாம் அதிபதி செவ்வாயும், தர்மகர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்து மகாராணிக்கு, கணவர், பிள்ளைகள், குடும்பம், அரசாட்சி, நாட்டு மக்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்ததுடன், செல்வாக்கையும் கொடுத்தார்கள்.
-------------------------------------------------------------------------
பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க வேண்டுமே!
ராணியார் 1903ஆம் ஆண்டு இறந்தார்.
புதன் திசை, சனியின் புக்தி!
புதன் மாரகன் (2nd Lord), சனி ஆயுள்காரகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
ராணி விக்டோரியாவின் ஜாதக அலசல் நன்றாக உள்ளது.பரிவர்தனை பெற்றுவிட்டதால் நீச குருவுக்கும் வலிமை வந்துவிடுகிறது என்பது நல்ல தகவல்தான்.அதுபோல நீசமாக இருந்தாலும் வர்கோத்தமம் பெற்ற குருவுக்கும் அப்படி வலிமை கூடும்தானே?ஹி.. ஹி.. எனக்கு அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது. பாடத்திற்கு நன்றி ஐயா!
ReplyDeleteஅலசலுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!
ReplyDeleteலக்னாதிபதி பன்னிரெண்டில்
இருக்கிறது என்ற விதி...
இங்கே தவுடுபொடி....
அது நவாம்சத்திலே உச்சமும்,
அதே நேரம் அது ஆறில் மறைந்தாலும் கூட!
இந்தக் கிரகங்கள் ஒவ்வொன்றும் எந்தச் சாரத்தில் அமர்ந்துள்ளன
என்பதையும் சேர்த்து அலசினால் இன்னும் விளங்கும் என்று நினைக்கிறேன்..
உங்களின் இந்த சேவையே பெரியதே அதனால் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.
பதிவில் போட்டுள்ள ராசி, நவாம்சக் கட்டங்கள் தங்களின் அலசலில் சிறு வேறுபடுகிறது...
ReplyDeleteசுக்கிரன் ஆட்சி பெறவில்லை...
புதனின் பார்வை (ஏழாம் பார்வை) ஐந்தில் விழவில்லை...
தர்ம கர்மாதிபதி சனி யோடு புதனின் கூட்டு நவாம் சத்தில் உள்ளது... தாங்களும் அதைப் பற்றியே கூறியிருக்கிறீர்கள் என்றால் சரி.. இருந்தும் புதனின் பார்வை ஐந்தில் விழவில்லை... அல்லது புதன் மீனத்தில் இருக்க வேண்டும், இருந்தும் சுக்கிரனும் புதனும் சேர்க்கை என்று குறித்தும் இருப்பதால் எதோ தட்டச்சு தவறு இருக்கிறது... கவனிக்க வேண்டுகிறேன்.
அய்யா , எனக்கொரு சந்தேகம் , இவருக்கு பதினாறு செல்வங்களும் கிடைத்துள்ளது என்றால் இவர் வாழ்நாளில் எந்த கஷ்ட்டமும் பட்டதில்லையா ?
ReplyDeleteஜாதக ரீதியில் இவருக்கு நெகடிவா எதுவுமே இல்லையா ? கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.
அய்யா பதவிக்கு வந்த காலம் 1838அல்லவா?
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
ReplyDeleteசில சந்தேகங்கள் இருந்தன. இந்தப் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்.
நன்றி ஐயா.
-Sathish K
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteராணி விக்டோரியாவின் ஜாதக அலசல் நன்றாக உள்ளது.பரிவர்தனை பெற்றுவிட்டதால் நீச குருவுக்கும் வலிமை வந்துவிடுகிறது என்பது நல்ல தகவல்தான்.அதுபோல நீசமாக இருந்தாலும் வர்கோத்தமம் பெற்ற குருவுக்கும் அப்படி வலிமை கூடும்தானே?ஹி..ஹி.. எனக்கு அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது. பாடத்திற்கு நன்றி ஐயா!/////
வர்கோத்தமம் பெற்ற குருவால்தான் வயதான காலத்தில் கலக்கலாக இருக்கிறீர்கள்! :-)))
////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஅலசலுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!
லக்னாதிபதி பன்னிரெண்டில்
இருக்கிறது என்ற விதி...
இங்கே தவுடுபொடி....
அது நவாம்சத்திலே உச்சமும்,
அதே நேரம் அது ஆறில் மறைந்தாலும் கூட!
இந்தக் கிரகங்கள் ஒவ்வொன்றும் எந்தச் சாரத்தில் அமர்ந்துள்ளன
என்பதையும் சேர்த்து அலசினால் இன்னும் விளங்கும் என்று நினைக்கிறேன்..
உங்களின் இந்த சேவையே பெரியதே அதனால் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteபதிவில் போட்டுள்ள ராசி, நவாம்சக் கட்டங்கள் தங்களின் அலசலில் சிறு வேறுபடுகிறது...
சுக்கிரன் ஆட்சி பெறவில்லை...
புதனின் பார்வை (ஏழாம் பார்வை) ஐந்தில் விழவில்லை...
தர்ம கர்மாதிபதி சனி யோடு புதனின் கூட்டு நவாம்சத்தில் உள்ளது... தாங்களும் அதைப் பற்றியே கூறியிருக்கிறீர்கள் என்றால் சரி.. இருந்தும் புதனின் பார்வை ஐந்தில் விழவில்லை... அல்லது புதன் மீனத்தில் இருக்க வேண்டும், இருந்தும் சுக்கிரனும் புதனும் சேர்க்கை என்று குறித்தும் இருப்பதால் எதோ தட்டச்சு தவறு இருக்கிறது... கவனிக்க வேண்டுகிறேன்./////
இடமாறு தோற்றப்பிழை & தட்டச்சுப்பிழை. சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி ஆலாசியம்!
/////Blogger Kalai said...
ReplyDeleteஅய்யா , எனக்கொரு சந்தேகம் , இவருக்கு பதினாறு செல்வங்களும் கிடைத்துள்ளது என்றால் இவர் வாழ்நாளில் எந்த கஷ்ட்டமும் பட்டதில்லையா ?
ஜாதக ரீதியில் இவருக்கு நெகட்டிவா எதுவுமே இல்லையா ? கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.//////
உங்களைப் போன்ற பெண்களுக்கே உரிய சின்னச் சின்ன சந்தோஷம் எல்லாம் அவருக்கு இருந்திருக்காது அல்லவா (குறிப்பாக மாமியார், நாத்தினார் உரசல்கள்) Protocol என்ற பெயரில் பலவித அரண்மனைக் கட்டுப்பாடுகள். தங்கக்கிளிக்கூண்டு வாழ்க்கை. அது கஷ்டமாக இருந்திருக்காதா? அப்படி எத்தனையோ அவருக்கு இருந்திருக்காது. அவருடைய உள் மனசுக்குத்தான் அது தெரிந்திருக்கும்
////Blogger Kalai said...
ReplyDeleteஅய்யா பதவிக்கு வந்த காலம் 1838அல்லவா?/////
தட்டச்சுப்பிழை. சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி சகோதரி!
சூரியன் secondary malefic - பாதகாதிபதி - சந்திரனோடு கூடி லக்கினத்தில் இருப்பது..(அமாவாசை யோகமோ..?); மற்றும் ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று தீய கிரகங்களின் சேர்க்கை 11ம் இடத்தில்..மேலும் லக்கினாதிபதி 12ல் ..
ReplyDeleteமேற்சொன்னவைகள் தீய விளைவுகளைத் தாராதா அய்யா..?
இது சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது. விளக்கினால் தேவலாம்.
பாடத்திற்கு நன்றிகள்.
ஐயா அவர்கட்கு வணக்கம்,
ReplyDeleteQueen victoria அவர்களின் ஜாதக அலசலில் பல விடயங்கள் புதிதாக அறியக்கூடியதாக உள்ளது.இன்னும் சிலருடைய சாதகங்களைக் அலசமுடியுமானால் என்போன்றோருக்கு மிகப் பேருதவியாக இருக்கும்.எனது இணையமுகவரி உங்களுக்கு தனிமடலில் அனுப்பியுள்ளேன்.நன்றிகள்.
சுதன்.க
அலசலுக்கு நன்றிகள்.
ReplyDeleteகவிஞர் ஆலாச்சியம் சொன்னது போல் லக்னாதிபதி 12ல் அடிபட்டுப் போகின்றது.
எனக்கு தனுசு லக்னாதிபதி குரு விருச்சிகம் 12ல்.
திருப்தி குறைவு.
மூட்டை மூட்டையாக வெல்லம் இருந்தாலும் சக்கரை வியாதிக்காரனுக்கு என்ன பிரயோசனம்.
நன்மைகளை அனுபவிக்க முடிவதில்லை.
அதிகம் துன்பப்படுகிறவர்களைப் பார்க்கும்போது, நான் பரவாயில்லை என்ற நிலை.
ஆண்டவனுக்கு நன்றி.
jathka alsel super thankyou
ReplyDeleteஐயா வணக்கம்,
ReplyDeleteவிக்டோரியா மகாராணியின் ஜாதக அலசல் மிகவும் அருமை.5ல் கேது சன்னியாச(அ) சாம்ராஜ்ய யோகம் என்று பெயர்.ராணியின் விசயத்தில் அது மாபெரும் சாம்ராஜ்ய யோகமாகிவிட்டது. நம்ம ஊரில் பஞ்சாயத்துத் தலைவர் செய்யும் பந்தாவே தாங்க முடியலை 26 நாடுகளுக்கு என்றால் சும்மாவா?(நிறைகுடம் எப்போதும் தழும்பாது).காரணம் ரிஷப லக்கினத்தின் முதல்நிலை யோகாதிபதியான சனியின் நேரடிப்பார்வையில்,குருவின் 9ம் பார்வையில்,கேதுவுக்கு வர்கோத்தமம் வேறு,நவாம்சத்தில் உச்சம் பெற்ற புதனின் சேர்க்கை வேறு இந்த மேன்மையும் ஒரு காரணமாக இருக்கலாமா?
அய்யா புதிய மாணவி நான், உங்கள் ஜாதக அலசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteதுலா லக்னம் 9 இல் செவ்வாய் 7 இல் சந்திரன், பரிவர்த்தனை யோகம் உண்டா.
12 இல் ராகு அடுத்த வருடம் ராகு திசை ஆரம்பம் 12 ஆம் அதிபன் புதன் 2 ஆம் வீட்டில் சூர்யனுடன், பயமாக உள்ளது.
பாடத்திற்கு நன்றி ஐயா. இவர்தான் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்த அம்மையார் போலிருக்கிறது. ஆனாலும் இளம் பருவத்தை '"rather melancholy" அப்படி என்று சொல்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.
ReplyDeleteநான் இதே தகவல்களை ஜகநாத ஹோராவில் உபயோகித்த பொழுது வேறு நவாம்சம் கட்டம் வருகிறது, அதனால் சந்திரன் வர்கோத்தமம் இல்லாமல் வருகிறது.
ஐயா இந்த ராகுவும் கேதுவும் மூலைக்கு மூலை இருந்தால் ஜாதகர்கள் உலகப் புகழ் பெறுவார்களோ? நான் பார்த்த பிரபலங்கள் பெரும்பாலோருக்கு அப்படிதான் இருக்கிறது. அரசியாருக்கும் அதுபோல் இருக்கிறது. உதாரணம் கீழே ....
meenam ragu kanni kaethu rajini
meenam ragu kanni kaethu victoria
meenam ragu kanni kaethu liz taylor
meenam kaethu kanni ragu kamaraj
thanusu ragu mithunam kaethu kamal
thanusu ragu mithunam kaethu m g r
thanusu ragu mithunam kaethu indira gandhi
thanusu ragu mithunam kaethu steve jobs
thanusu kaethu mithunam ragu prince wiiliam
thanusu kaethu mithunam ragu kannadasan
thanusu kaethu mithunam ragu saibaba
ஐயா,
ReplyDeleteசகோதரி தேமொழி சொல்வது போல் அதாவது உபய ராசிகளில் ராகு,கேது இருந்தால் மிகப்பெரிய பிரபலமாவார்கள் என்பது உண்மையா?.என்னிடம் ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.மேலும் அவர் நான்கு உபயராசிகளிலும் கிரகம் இருப்பது மிகவும் நல்லது எனவும் கூறினார்.எனக்கு அது போல் உள்ளது அதனால் தான் இவ்வளவு வேகமாகக் கேட்டேன் {மிதுன ராகு,கன்னியில் {வளர்பிறை சந்திரன்,செவ்வாய்(வ),சனி(வ)},தனுசு கேது மற்றும் மீனத்து உச்ச சுக்கிரன்}.கொஞ்சம் சொல்லுங்களேன் எனக்காக.......ஹி.ஹி......
//////// தேமொழி said...
ReplyDeleteஐயா இந்த ராகுவும் கேதுவும் மூலைக்கு மூலை இருந்தால் ஜாதகர்கள் உலகப் புகழ் பெறுவார்களோ? நான் பார்த்த பிரபலங்கள் பெரும்பாலோருக்கு அப்படிதான் இருக்கிறது. அரசியாருக்கும் அதுபோல் இருக்கிறது. உதாரணம் கீழே ....
thanusu ragu mithunam kaethu kamal
thanusu ragu mithunam kaethu m g r
thanusu ragu mithunam kaethu indira gandhi
thanusu ragu mithunam kaethu steve jobs ///
இந்த வரிசையிலே முக்கியமான ஒரு ஆளை விட்டுட்டீங்க பாருங்க..
நம்ம மைனருக்குக் கூட இதே இடத்துலேதான் ராகு கேது gang டேரா போட்டிருக்காக..
என்னமோ போங்க..
நீங்க இப்புடி ஆராய்ச்சி பண்ணி விஷயங்களைச் சொல்லச் சொல்ல அந்த ஆண்டவன் என்னென்ன அற்புதங்களை எல்லாம் மைனர் வாழ்க்கையிலே நிகழ்த்தப் போறானோன்னு நினைச்சு ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு..
ராசிஅதிபதி, லக்கினாதிபதி பன்னிரண்டுக்குப் போனாலுமே பவர் பவர்தான்னு புது கான்செப்ட் சொல்லி அசத்திகிறார் வாத்தியாரு..அந்த வகையிலேப் பார்த்தாலும் கணக்கு வொர்க் அவுட் ஆகிடுது..
ராஜ்ஜியம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே..
சனி, ராகு செவ்வாய், அனைத்தும் மீனத்தில் சேர்ந்து இருந்தாலும், ராகுவும் செவ்வாயும் வர்கோத்தமம் பெற்றதனாலும், சனி பரிவர்த்தனை ஆகியதாலும் தீய பலன்களை தரவில்லையா??
ReplyDeleteமூன்று துஷ்டர்கள் ஒரே வீட்டில் இருக்கிறார்களே.
///minorwall said...ராஜ்ஜியம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே///
ReplyDeleteஎன்ன குழப்பம் மைனர், உங்க பக்கத்திலேயே இருக்கிறப்போ எங்கெங்கேயோ தேடறீங்களே.
குறிப்பு கொடுக்கவா? இங்கே போய் பாருங்க. உங்க ராஜியத்தப் பத்தி தெரிஞ்சுக்குவீங்களாம்.
http://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms
///meenam ragu kanni kaethu rajini
ReplyDeletemeenam ragu kanni kaethu victoria
meenam ragu kanni kaethu liz taய்லொர்///
இதில் இன்னொரு அகில உலகப் புகழும், ஆழ்ந்த சிந்தனையாளரும், ஜப்பான் மைனர்வாளூக்கு வில்லங்கம் ஆனவரையும் சேர்க்க வேண்டும்.அவர்தான் சேலம் தந்த சேரன்,நெல்லை கொண்டான், கோவையின் கோமான், சென்னைச் செல்வர்,அஞ்சா நெஞ்சன்,துஞ்சாத் தலைவன்,பஞ்சாப் மீண்டவன், லால்குடியின் லாலா கே. எம் ஆர் கே!
நானே என்னைப் புகழ்ந்துகொள்கிறேன் என்று திகைக்கிறீர்களா?அப்படி சுய விளம்பரம் பண்ணிக்கிட்டாத்தாங்கோ பிரபலம் ஆக முடியுங்கோ!
/////Blogger Sathish K said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
சில சந்தேகங்கள் இருந்தன. இந்தப் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்.
நன்றி ஐயா.
-Sathish K //////
நல்லது. நன்றி சுதன்!
//////Blogger Govindasamy said...
ReplyDeleteசூரியன் secondary malefic - பாதகாதிபதி - சந்திரனோடு கூடி லக்கினத்தில் இருப்பது..(அமாவாசை யோகமோ..?); மற்றும் ராகு, செவ்வாய், சனி ஆகிய
மூன்று தீய கிரகங்களின் சேர்க்கை 11ம் இடத்தில்..மேலும் லக்கினாதிபதி 12ல் ..
மேற்சொன்னவைகள் தீய விளைவுகளைத் தாராதா அய்யா..?
இது சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது. விளக்கினால் தேவலாம்.
பாடத்திற்கு நன்றிகள்.//////
கறிவேப்பிலையை மட்டும் பார்க்காமல் கூட்டில் இருக்கும் பருப்பு மற்றும் காய்கறிகளைப் பாருங்கள்.
சூரியனும் சந்திரனும் அரச கிரகங்கள். (அமாவாசையாக இருந்தாலும்) அவர்கள் லக்கினத்தில் சேர்வது யோகம்
லக்கினாதிபதி 12ல் இருந்தாலும் பூர்வபுண்ணியாதிபதியுடன் (5th lord) சேர்ந்திருக்கிறாரே!
11ல் உள்ள மூன்று கிரகங்கள் தங்களுடைய ஆதிபத்யால் (given work for this horoscope) அவர்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள். நல்லதை மட்டுமே செய்வார்கள். Saturn is yogakaraga & Dharmakarma Lord for this horoscope. Mars is 7th lord. Rahu's placement is in the 11th house - இவற்றை மறந்துவிடாதீர்கள்
//////Blogger suthank said...
ReplyDeleteஐயா அவர்கட்கு வணக்கம்,
Queen victoria அவர்களின் ஜாதக அலசலில் பல விடயங்கள் புதிதாக அறியக்கூடியதாக உள்ளது.இன்னும் சிலருடைய சாதகங்களைக் அலசமுடியுமானால்
என்போன்றோருக்கு மிகப் பேருதவியாக இருக்கும். எனது இணையமுகவரி உங்களுக்கு தனிமடலில் அனுப்பியுள்ளேன்.நன்றிகள்.
சுதன்.க//////
செய்துகொண்டுதான் இருக்கிறேன் சாமி!
//////Blogger krishnar said...
ReplyDeleteஅலசலுக்கு நன்றிகள்.
கவிஞர் ஆலாச்சியம் சொன்னது போல் லக்னாதிபதி 12ல் அடிபட்டுப் போகின்றது.
எனக்கு தனுசு லக்னாதிபதி குரு விருச்சிகம் 12ல்.
திருப்தி குறைவு.
மூட்டை மூட்டையாக வெல்லம் இருந்தாலும் சக்கரை வியாதிக்காரனுக்கு என்ன பிரயோசனம்.
நன்மைகளை அனுபவிக்க முடிவதில்லை.
அதிகம் துன்பப்படுகிறவர்களைப் பார்க்கும்போது, நான் பரவாயில்லை என்ற நிலை.
ஆண்டவனுக்கு நன்றி./////
கரெக்ட். 337 டானிக் இருக்கிறதே. தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் போகிறது
////Blogger eswari sekar said...
ReplyDeletejathka alsel super thankyou/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா வணக்கம்,
விக்டோரியா மகாராணியின் ஜாதக அலசல் மிகவும் அருமை.5ல் கேது சன்னியாச(அ) சாம்ராஜ்ய யோகம் என்று பெயர்.ராணியின் விசயத்தில் அது
மாபெரும் சாம்ராஜ்ய யோகமாகிவிட்டது. நம்ம ஊரில் பஞ்சாயத்துத் தலைவர் செய்யும் பந்தாவே தாங்க முடியலை 26 நாடுகளுக்கு என்றால் சும்மாவா?
(நிறைகுடம் எப்போதும் தழும்பாது).காரணம் ரிஷப லக்கினத்தின் முதல்நிலை யோகாதிபதியான சனியின் நேரடிப்பார்வையில்,குருவின் 9ம்
பார்வையில்,கேதுவுக்கு வர்கோத்தமம் வேறு,நவாம்சத்தில் உச்சம் பெற்ற புதனின் சேர்க்கை வேறு இந்த மேன்மையும் ஒரு காரணமாக இருக்கலாமா?//////
ஆமாம். ஆமாம். ஆமாம்! நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger srividhya said...
ReplyDeleteஅய்யா புதிய மாணவி நான், உங்கள் ஜாதக அலசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்க
வேண்டுகிறேன்.
துலா லக்னம் 9 இல் செவ்வாய் 7 இல் சந்திரன், பரிவர்த்தனை யோகம் உண்டா.
12 இல் ராகு அடுத்த வருடம் ராகு திசை ஆரம்பம் 12 ஆம் அதிபன் புதன் 2 ஆம் வீட்டில் சூர்யனுடன், பயமாக உள்ளது.//////
துலா லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் மிதுனம் அல்லவா? அதன் அதிபதி புதன் அல்லவா? என்ன குழப்பம் சகோதரி?
//////Blogger தேமொழி said...
ReplyDeleteபாடத்திற்கு நன்றி ஐயா. இவர்தான் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்த அம்மையார் போலிருக்கிறது. ஆனாலும் இளம் பருவத்தை '"rather
melancholy" அப்படி என்று சொல்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.
நான் இதே தகவல்களை ஜகநாத ஹோராவில் உபயோகித்த பொழுது வேறு நவாம்சம் கட்டம் வருகிறது, அதனால் சந்திரன் வர்கோத்தமம் இல்லாமல்
வருகிறது.//////
ஜகந்நாதாவில் சில வித்தியாசங்கள் உள்ளன. அதை நான் ஊறுகாயைப் போல மட்டும் பயன் படுத்திக்கொள்வேன்.
நல்ல ஜோதிட மென்பொருள் கீழே உள்ள தளத்தில் கிடைக்கும். முயன்று பாருங்கள்
PREDICTT.EXE, predictt.exe - 4shared.com - online file sharing and storage - download
www.4shared.com/file/uA3SP2ZD/predictt.html
17 Oct 2011 – predictt - download at 4shared. predictt is hosted at free file sharing
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஐயா இந்த ராகுவும் கேதுவும் மூலைக்கு மூலை இருந்தால் ஜாதகர்கள் உலகப் புகழ் பெறுவார்களோ? நான் பார்த்த பிரபலங்கள் பெரும்பாலோருக்கு
அப்படிதான் இருக்கிறது. அரசியாருக்கும் அதுபோல் இருக்கிறது. உதாரணம் கீழே ....
meenam ragu kanni kaethu rajini
meenam ragu kanni kaethu victoria
meenam ragu kanni kaethu liz taylor
meenam kaethu kanni ragu kamaraj
thanusu ragu mithunam kaethu kamal
thanusu ragu mithunam kaethu m g r
thanusu ragu mithunam kaethu indira gandhi
thanusu ragu mithunam kaethu steve jobs
thanusu kaethu mithunam ragu prince wiiliam
thanusu kaethu mithunam ragu kannadasan
thanusu kaethu mithunam ragu saibaba//////
அதுவும் ஒரு அமைப்பு அவ்வளவுதான். அவர்களின் ஜாதகத்தில் மற்ற கிரகங்களும் மேன்மை தரக்கூடிய அமைப்புக்களில் இருக்கும். நீங்கள் சொல்லும் இந்த மூலை அமைப்பு எத்தனையோ ஆயிரம் பேர்களுக்கு இருக்கும். அவர்களுக்கு இது தெரிந்தால், தாங்கள் ஏன் பிரபலமாகவில்லை என்று பாயைப் பிறாண்டத் துவங்கிவிடுவார்கள்
//////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா,
சகோதரி தேமொழி சொல்வது போல் அதாவது உபய ராசிகளில் ராகு,கேது இருந்தால் மிகப்பெரிய பிரபலமாவார்கள் என்பது உண்மையா?.என்னிடம் ஒரு
ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.மேலும் அவர் நான்கு உபயராசிகளிலும் கிரகம் இருப்பது மிகவும் நல்லது எனவும் கூறினார்.எனக்கு அது போல் உள்ளது
அதனால் தான் இவ்வளவு வேகமாகக் கேட்டேன் {மிதுன ராகு,கன்னியில் {வளர்பிறை சந்திரன்,செவ்வாய்(வ),சனி(வ)},தனுசு கேது மற்றும் மீனத்து உச்ச
சுக்கிரன்}.கொஞ்சம் சொல்லுங்களேன் எனக்காக.......ஹி.ஹி......//////
உபயராசிகளில் கிரகங்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அதைவிட ஒரு ஜாதகம் மேன்மையடைய Placement of Lagna lord, 5th lord, 9th lord, 10th lord &
11th lord are important
///////Blogger minorwall said...
ReplyDelete//////// தேமொழி said...
ஐயா இந்த ராகுவும் கேதுவும் மூலைக்கு மூலை இருந்தால் ஜாதகர்கள் உலகப் புகழ் பெறுவார்களோ? நான் பார்த்த பிரபலங்கள் பெரும்பாலோருக்கு
அப்படிதான் இருக்கிறது. அரசியாருக்கும் அதுபோல் இருக்கிறது. உதாரணம் கீழே ....
thanusu ragu mithunam kaethu kamal
thanusu ragu mithunam kaethu m g r
thanusu ragu mithunam kaethu indira gandhi
thanusu ragu mithunam kaethu steve jobs ///
இந்த வரிசையிலே முக்கியமான ஒரு ஆளை விட்டுட்டீங்க பாருங்க..
நம்ம மைனருக்குக் கூட இதே இடத்துலேதான் ராகு கேது gang டேரா போட்டிருக்காக..
என்னமோ போங்க..
நீங்க இப்புடி ஆராய்ச்சி பண்ணி விஷயங்களைச் சொல்லச் சொல்ல அந்த ஆண்டவன் என்னென்ன அற்புதங்களை எல்லாம் மைனர் வாழ்க்கையிலே
நிகழ்த்தப் போறானோன்னு நினைச்சு ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு..
ராசிஅதிபதி, லக்கினாதிபதி பன்னிரண்டுக்குப் போனாலுமே பவர் பவர்தான்னு புது கான்செப்ட் சொல்லி அசத்திகிறார் வாத்தியாரு..அந்த வகையிலேப் பார்த்தாலும் கணக்கு வொர்க் அவுட் ஆகிடுது..
ராஜ்ஜியம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே../////
ராகுவையும் கேதுவையும் மட்டும் எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்? மற்ற கிரகங்களின் அமைப்பும் ஒத்துழைப்பதாக இருக்க வேண்டும்!
//////Blogger ACE !! said...
ReplyDeleteசனி, ராகு செவ்வாய், அனைத்தும் மீனத்தில் சேர்ந்து இருந்தாலும், ராகுவும் செவ்வாயும் வர்கோத்தமம் பெற்றதனாலும், சனி பரிவர்த்தனை ஆகியதாலும்
தீய பலன்களை தரவில்லையா??
மூன்று துஷ்டர்கள் ஒரே வீட்டில் இருக்கிறார்களே.//////
காட்டில் இருக்கும் குரங்கிற்கும், கூண்டிற்குள் இருக்கும் குரங்கிற்கும் வித்தியாசம் உண்டல்லவா?
தங்களுடைய ஆதிபத்யால் (given work for this horoscope) அவர்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள். நல்லதை மட்டுமே செய்வார்கள்
Saturn is yogakaraga & Dharmakarma Lord for this horoscope. Mars is 7th lord. Rahu's placement is in the 11th house - இவற்றை மறந்துவிடாதீர்கள்
//////Blogger தேமொழி said...
ReplyDelete///minorwall said...ராஜ்ஜியம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே///
என்ன குழப்பம் மைனர், உங்க பக்கத்திலேயே இருக்கிறப்போ எங்கெங்கேயோ தேடறீங்களே.
குறிப்பு கொடுக்கவா? இங்கே போய் பாருங்க. உங்க ராஜியத்தப் பத்தி தெரிஞ்சுக்குவீங்களாம்.
http://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms//////
காதல் ராஜ்ஜியம் எனது - அதில்
காவல் ராஜ்ஜியம் உனது - இது
மன்னன் மாடத்து நிலவு - இதில்
மாலை நாடகம் எழுது
என்ற பாடலை எடுத்துக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்கிறீர்களே சகோதரி! அப்படியும் மைனர் விடமாட்டார். மூன்றாவது வரியில்
வரும் நிலவு எங்கே என்று கேட்பார். அதையும் நீங்கள் தேடிக்கொடுக்க வேடியதிருக்கும் :-))))
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete///meenam ragu kanni kaethu rajini
meenam ragu kanni kaethu victoria
meenam ragu kanni kaethu liz taய்லொர்///
இதில் இன்னொரு அகில உலகப் புகழும், ஆழ்ந்த சிந்தனையாளரும், ஜப்பான் மைனர்வாளூக்கு வில்லங்கம் ஆனவரையும் சேர்க்க வேண்டும்.அவர்தான் சேலம் தந்த சேரன்,நெல்லை கொண்டான், கோவையின் கோமான், சென்னைச் செல்வர்,அஞ்சா நெஞ்சன்,துஞ்சாத் தலைவன்,பஞ்சாப் மீண்டவன், லால்குடியின்
லாலா கே. எம் ஆர் கே!
நானே என்னைப் புகழ்ந்துகொள்கிறேன் என்று திகைக்கிறீர்களா?அப்படி சுய விளம்பரம் பண்ணிக்கிட்டாத்தாங்கோ பிரபலம் ஆக முடியுங்கோ!/////
லண்டன் சென்று வந்த லாலா - இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
லாலா என்றால் நந்தலாலாவின் சுருக்கம் - அது தெரியுமா சார் உங்களுக்கு?
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதிக் பிறகு 9ம் அதிபதிதான் முக்கியத்துவம் பெறுகிறார். லக்கினாதிபதி மறைவுஸ்தானத்தில் இருந்தாலும் அந்த குறையை 9ம் அதிபதி நிறைவு செய்து விடுவார். இருவரும் மறைந்தால் அந்த ஜாதகரை ஆண்டவர்தான் காப்பாற்ற வேண்டும். ஜோதிடத்தில் நிறைய விதிகளும் விதிவிலக்குகளும் இருக்கின்றன.
ReplyDelete//
ReplyDelete/////Blogger srividhya said...
அய்யா புதிய மாணவி நான், உங்கள் ஜாதக அலசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்க
வேண்டுகிறேன்.
துலா லக்னம் 9 இல் செவ்வாய் 7 இல் சந்திரன், பரிவர்த்தனை யோகம் உண்டா.
12 இல் ராகு அடுத்த வருடம் ராகு திசை ஆரம்பம் 12 ஆம் அதிபன் புதன் 2 ஆம் வீட்டில் சூர்யனுடன், பயமாக உள்ளது.//////
துலா லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் மிதுனம் அல்லவா? அதன் அதிபதி புதன் அல்லவா? என்ன குழப்பம் சகோதரி?
//
ஐயா
செவ்வாய் மிதுனத்திலும் புதன் விருசிகத்திலும் உள்ளத்தால் பரிவர்த்தனை யோகம் அல்லவா?
/// SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteநல்ல ஜோதிட மென்பொருள் கீழே உள்ள தளத்தில் கிடைக்கும். முயன்று பாருங்கள்
PREDICTT.EXE, predictt.exe - 4shared.com - online file sharing and storage - download
www.4shared.com/file/uA3SP2ZD/predictt.html
17 Oct 2011 – predictt - download at 4shared. predictt is hosted at free file sharing ///
தகவலுக்கு நன்றி ஐயா
வாத்தியார் ஐயா!
ReplyDeleteவணக்கம்கோ !
கும்பிடுதங்கோ !
யார்கனவே வாய்கால் சண்டை , வரப்பு சண்டை என ஏகபட்ட பிரச்சனையோடு உள்ளவனிடம், வாய் விட்டு சொல்ல வாக்கு இல்லாத யோக ஜாதகத்தை கண்ணில் காட்டி கூடம்பிட்டு உசுப்பு ஏற்றுகின்றது நியாயமா ஐயா!
நீங்களே சொல்லுங்க நியாயத்தை! நீங்கள் பெரியவர் , நல்லவரு , வல்லவரு, நாளும் தெரிந்தவர் என்பதனால் கேக்கின்றேன் .
ஐயா
//////Blogger தேமொழி said...
ReplyDelete///minorwall said...ராஜ்ஜியம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே///
என்ன குழப்பம் மைனர், உங்க பக்கத்திலேயே இருக்கிறப்போ எங்கெங்கேயோ தேடறீங்களே.
குறிப்பு கொடுக்கவா? இங்கே போய் பாருங்க. உங்க ராஜியத்தப் பத்தி தெரிஞ்சுக்குவீங்களாம்.
http://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms//////
எனது ராஜ்ஜியத்தை எனக்குச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி..
பாடலில் வரும்
உள்ளம்கொள்ளாத ஆனந்தத் தவிப்புகொண்ட
எதிராளியின் கணைகளுக்கோர் காவல் ராஜ்ஜியமாகவே என்றும் அது இருக்கட்டும்..
கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும்; சந்தம் அதில் தோன்றும் ; தானாகப் பாடல் வரும் என்று
கம்பன் சொல்லாத காவியச் சிறப்பாம் அழகு தேவதை அலங்காரம்
சிங்காரப் பொன்மகள் சிரிப்பில் வெண்புரவியில் நானும் என்னருகே அந்த அன்னமுமாய்
நெடிதுயர் யூகலிப்டஸ் காடுகளூடே அந்தரங்கமாய் ஓர் பயணத்தில் மாலை நாடகம் எழுத
எனையின்று கற்பனாராஜ்ஜியத்தில் தள்ளிய என்னருமை செம்மொழித் தலைவிக்கு மீண்டும் ஒரு நன்றி..
SP.VR. SUBBAIYA said...
ReplyDelete/////Blogger srividhya said...
அய்யா புதிய மாணவி நான், உங்கள் ஜாதக அலசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்க
வேண்டுகிறேன்.
துலா லக்னம் 9 இல் செவ்வாய் 7 இல் சந்திரன், பரிவர்த்தனை யோகம் உண்டா.
12 இல் ராகு அடுத்த வருடம் ராகு திசை ஆரம்பம் 12 ஆம் அதிபன் புதன் 2 ஆம் வீட்டில் சூர்யனுடன், பயமாக உள்ளது.//////
துலா லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் மிதுனம் அல்லவா? அதன் அதிபதி புதன் அல்லவா? என்ன குழப்பம் சகோதரி?/////
அய்யா மன்னிக்கவும்,
தட்டச்சு பிழை
துலா லக்னம் 1 இல் சுக்ரன், 9 இல் குரு. 11 இல் சனி .
10 இல் செவ்வாய் நீசம்( நீச்ச பங்க ராஜயோகம் ??) , 7 இல் சந்திரன் - பரிவர்த்தனை யோகம் உள்ளதா.
அத்துடன் முக்கியமாக 12 இல் (கன்னி) ராகு, 12ஆம் அதிபதி புதன் 2ஆம் வீட்டில் சூரியனுடன்.
ராகு திசை அடுத்த வருடம் ஆரம்பம், திசா காலத்தில் (18 வருடம் ???) நல்ல பலன்களை எதிர்பார்க்கலாமா.
நன்றி,
அன்புடன்
ஸ்ரீவித்யா
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete///meenam ragu kanni kaethu rajini
meenam ragu kanni kaethu victoria
meenam ragu kanni kaethu liz taய்லொர்///
இதில் இன்னொரு அகில உலகப் புகழும், ஆழ்ந்த சிந்தனையாளரும், ஜப்பான் மைனர்வாளூக்கு வில்லங்கம் ஆனவரையும் சேர்க்க வேண்டும்.அவர்தான் சேலம் தந்த சேரன்,நெல்லை கொண்டான், கோவையின் கோமான், சென்னைச் செல்வர்,அஞ்சா நெஞ்சன்,துஞ்சாத் தலைவன்,பஞ்சாப் மீண்டவன், லால்குடியின்
லாலா கே. எம் ஆர் கே!
நானே என்னைப் புகழ்ந்துகொள்கிறேன் என்று திகைக்கிறீர்களா?அப்படி சுய விளம்பரம் பண்ணிக்கிட்டாத்தாங்கோ பிரபலம் ஆக முடியுங்கோ!/////
'நாடறிஞ்ச KMRK க்கு பட்டம் அவசியமா?' என்று ஒரு பழைய பழமொழி இருக்கே?
வணக்கம் ஐயா,
ReplyDeleteமிகவும் அருமையான ஜாதக அலசல் ஐயா...அருமையான ஜாதக அமைப்பும் கொண்டிருந்திருக்கிறார் ராணி விக்டோரியா...
கிட்டத்திட்ட இதே போன்ற அமைப்பை இளவரசர் வில்லியமின் ஜாதகத்திலும் அமையப்பெற்றிருப்பதால் அவர் நிச்சயம் முடிசூடப் பெறுவார்...அந்த அமைப்பு எனக்கு பிடிக்காத(பலருக்கும் பிடித்திராத!!!)சார்லஸின் ஜாதகத்தில் கிடையாது என்று நினைக்கின்றேன்...வில்லியம் தான் என்று கிட்டதிட்ட உறுதியாகி விட்ட விஷயம் என்றாலும் ஜோதிட ரீதியாக மிக துள்ளியமாக தெரிந்து கொள்ளலாம் என்பது இந்தியாவின் "பொக்கிஷம்"ஆன ஜோதிட கலையின் பெருமைக்கு சான்று...நன்றி ஐயா...
ஐயா வணக்கம்,
ReplyDeleteஜாதக அலசல் அருமையாக உள்ளது. ஒவ்வொரு பதிவுலும் புது புது விதிகள், உதாரணங்களுடன் தருகிறீர். மிக மிக அருமை, வாழ்த்துகளுடன் நன்றி!!!!!
ராஜா பழனிவேல்
ஐயா வணக்கம்,
ReplyDeleteஜாதக அலசல் அருமையாக உள்ளது. ஒவ்வொரு பதிவுலும் புது புது விதிகள், உதாரணங்களுடன் தருகிறீர். மிக மிக அருமை, வாழ்த்துகளுடன் நன்றி!!!!!
ராஜா பழனிவேல்