மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.1.12

என் சமையலறையில் நீ சபீனா!

 என் சமையலறையில் நீ சபீனா!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி மூன்று
------------------------------------------------------------
பாடல்: உன் சமையலறையில்,

பெண் குரலுக்கு உரிய வரிகள் நீல நிறத்தில் கொடுக்கப்பெற்றுள்ளன.
இருவரும் சேர்ந்து பாடும் வரிகள் ரோஸ் கலரில் கொடுக்கப் பெற்றுள்ளன
எல்லாம் உங்கள் செளகரியத்திற்காகத்தான்!

உன் சமையலறையில், நான் உப்பா? சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில், நான் கண்களா? புத்தகமா?

(உன் சமையலறையில்..)

நீ விரல்கள் என்றால், நான் நகமா? மோதிரமா? ஆ..அஅஅ,
நீ இதழ்களென்றால், நான் முத்தமா? புன்னகையா? ஆ,ஆ..
நீ அழகு என்றால், நான் கவியா? ஓவியனா?

(உன் சமையலறையில்..)

நான் வெட்கமென்றால், நீ சிவப்பா? கன்னங்களா? ஆ..அஅஅ,
நான் தீண்டல் என்றால், நீ விரலா? ஸ்பரிஸங்களா? ஆ,ஆஅ..
நீ குழந்தை என்றால், நான் தொட்டிலா? தாலாட்டா? ஆ,ஆ..
நீ தூக்கமென்றால், நான் மடியா? தலையணையா? ஆ,அஅஆ,
நான் இதயமென்றால், நீ உயிரா? துடிதுடிப்பா? ஆ,ஆ..
(உன் சமையலறையில்..)

நீ விதைகள் என்றால், நான் வேரா? விளைநிலமா? ஆ,அஅஆ,
நீ விருந்து என்றால், நான் பசியா? ருசியா? ஆ,ஆ..
நீ கைதி என்றால், நான் சிறையா? தண்டனையா? ஆ,ஆ..
நீ மொழிகளென்றால், நான் தமிழா? ஓசைகளா? ஆ,அஅஆ,
நீ புதுமையென்றால், நான் பாரதியா? பாரதிதாசனா?

நீ தனிமை என்றால், நான் துணையா? தூரத்திலா?

நீ துணைதானென்றால், நான் பேசவா? யோசிக்கவா?
நீ திரும்பிநின்றால், நான் நிற்கவா? போய்விடவா? ஆ,ஆ..
நீ போகிறாயென்றால், நான் அழைக்கவா? அழுதிடவா? ஆ,ஆ..
நீ காதலென்றால், நான் சரியா? தவறா?

உன் வலதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.
என் இடதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.

தூரத்துமேகம், தூரல்கள் சிந்த,
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..

படம் தூள் (2001)
இசை: வித்யாசாகர்
பாடலாக்கம்: கவிஞர் கபிலன்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
நடிப்பு: விக்ரம் & லைலா
இயக்கம்: தரணி

-----------------------------------------------------------
இந்தப்பாடல் வரியில் சிலாகித்த ஒரு கணவன் தன் மனைவிய்டம் கேட்டானாம்:

  “உன் சமையலறையில், நான் உப்பா? சர்க்கரையா?”

மனைவி சட்’டென்று பதில் சொன்னாளாம்:

  “என் சமையலறையில் நீ சபீனா”

சபீனா என்பது Dish washing powder -  இது அது பற்றிக் கேள்விப்படாத வெளிநாட்டுக் கண்மணிகளுக்காக!
-------------------------------------------------------------

காணொளி: http://youtu.be/o1lGCpImD2w
நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! Our sincere thanks to  http://www.youtube.com/user/Nithaarsan web site people
---------------------------------------------------
வாழ்க வளமுடன்!

19 comments:

  1. "பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
    தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
    வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
    தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

    வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
    பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;
    காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
    மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!

    வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
    பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
    ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
    ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

    வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;
    பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
    எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:
    கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

    வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
    பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
    நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
    ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!

    காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
    வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
    போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
    நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

    நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
    செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
    எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
    முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

    தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
    வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
    தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
    ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார்==(கண்ணன் பாட்டு)"
    ==========================================================

    இந்த மகாகவியின் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

    "உன் செல் போனில் நான் சிம்மா, பாட்டரியா?
    உன் டூவீலரில் நான் பெட்ரோலா, பின் சீட்டா?
    உன் காதலிகளில் நான் மூத்தவளா இளையவளா?
    உன் வார்ட்ரோபில் நான் மிடியா, ஜீன்ஸ்பாண்டா?"

    இந்த வரிகளையும் சேர்த்துக்கொண்டால் பாடல் சுவைகூடும். ஹி ஹி ஹி !

    எனக்குப்பிடித்த தற்கால‌ நாயகிகளில் லைலா முதல் இடம். மேல்நாட்டு நடிகையா, இந்திய நடிகையா என்று தீர்மானிக்க முடியாத ஓர் அழகு.

    நன்றி ஐயா!

    ReplyDelete
  2. ஐயா,
    இது மிகவும் நல்ல பாடல், தேடிக் கொடுத்ததற்கு நன்றி. கற்பனையும் அருமை.
    உவமைகள் அனைத்தும் நல்ல ஒப்பீடு.
    ஆனால் ...
    "நீ கைதி என்றால், நான் சிறையா? தண்டனையா?"
    என்பதுதான் கொஞ்சம்.... வேறு ஏதாவது போட்டிருக்கலாமோ?... சரி அதை விடுங்கள்.

    இந்தப் பாடலை முதல் முதலில் கேட்டதும் பழைய பாடல் ஒன்று நினைவு வந்தது.
    நீலமலர்கள் என்ற படத்தில் கவியரசர் எழுதிய பாடல். அருமையான கவி நயம் உள்ள பாடல்.
    பார்வையற்ற காதலி கேட்கும் கேள்விகளுக்கு காதலன் சொல்லும் பதில்கள்.
    ஐஸ்....ஐஸ்.. என்று கத்த நினைக்கும் அளவிற்கு பெண்ணைப் புகழ்வார் காதலன்.
    ஒப்பிட்டு ரசிப்பதற்காக கீழே கொடுத்துள்ளேன்.

    நமக்கு தேர்வில் கேள்விகள் கேட்டால்தானே பிடிப்பதில்லை.
    நம் திரைப்படங்களில் அந்த காலம் முதல் (நதி எங்கே போகிறது? ...பனியில்லாத மார்கழியா?) இந்தக் காலம் வரை கேள்விகள் கேட்டு, அதற்கு தவறாமல் பதில்கள் சொல்லி காதலர்கள் நேரத்தை விரயமாக்கத் தவறுவதில்லை.

    "என் சமயலறையில் நீ சபீனா?" :))))) இது ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க செய்யிறது. இதுவும் பிடித்திருக்கிறது.
    _______________________________
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    பாடல் தலைப்பு: இது இரவா பகலா
    திரைப்படம்: நீல மலர்கள்
    நடிகர்கள்: ஸ்ரீதேவி, கமலஹாசன்
    பாடகர்கள்: வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்
    இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
    வெளியான ஆண்டு: 1979
    _______________________________

    பெண்: இது இரவா பகலா?
    ஆண்: நீ நிலவா கதிரா?
    பெண்: இது வனமா மாளிகையா?
    ஆண்: நீ மலரா ஓவியமா? ..ஒ ஓ...........[இது இரவா பகலா?]

    பெண்: மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
    ஆண்: உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவாய் இல்லையா?
    பெண்: இது கனியா காயா?
    ஆண்: அதை கடித்தால் தெரியும்
    பெண்: இது பனியா மழையா?
    ஆண்: என்னை அணைத்தால் தெரியும்...........[இது இரவா பகலா?]

    பெண்: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது?
    ஆண்: தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
    பெண்: இது குயிலா குழலா?
    ஆண்: உன் குரலின் சுகமே
    பெண்: இது மயிலா மானா?
    ஆண்: அவை உந்தன் இனமே........... [இது இரவா பகலா?]

    பெண்: பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா?
    ஆண்: பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா?
    பெண்: இங்கு கிளிதான் அழகா?
    ஆண்: உன் அழகே அழகு
    பெண்: இந்த உலகம் பெரிதா?
    ஆண்: நம் உறவே பெரிது...........[இது இரவா பகலா?]
    காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=DBKbbYJJGGc

    ReplyDelete
  3. //நதி எங்கே போகிறது? ...பனியில்லாத மார்கழியா? ///

    இத்துடன் இன்னமும் பதில் தெரி(யா)ந்த
    இந்த பாடலை விடவில்லை தானே.

    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

    மாசில்லா உண்மை காதலி
    மாறுமோ செல்வம் வந்த போதிலே?

    இன்னமும் இன்னமும் பட்டியலிட்டால்
    இந்த ஒரு வகுப்பு நேரம் போதுமோ-?

    நன்றி சகோதரி உமது தொகுப்பிலிருந்து
    நல்ல பாடலினை சுழலவிட்டமைக்கு
    .

    ReplyDelete
  4. ///"என் சமயலறையில் நீ சபீனா?" :))))) இது ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க செய்யிறது. இதுவும் பிடித்திருக்கிறது. ///

    இதுவேறுபொருள்படும் படியாக உள்ளது
    இந்த அய்யர் இப்படித்தான் என்பவர்கள்

    அப்படி சிந்தித்து பாருங்கள்..
    "அவர்" அதுக்கு மட்டும் தானாம்

    மற்றதெல்லாம் இந்த
    மங்கையரின் கையே ஓங்கியிருக்குமாம்

    சபீனா இருக்கும் இடமும்
    சரியான நேரத்திற்கு மட்டும் பயன்படும்

    என்ற கோணத்தில் பார்த்தால்
    எதற்கு இது என சிந்திக்க தோன்றுகிறதா

    இருக்கட்டும்..
    இப்போ.. அவ்வை ஷண்முகி படத்தின்

    இந்த பாடலின் வரிகளை மட்டும்
    இவர்களுக்காக சுழலவிடுகிறோம்

    "விரல் தாண்டி நகங்களும்
    வளர்வது சரியா ? அதை

    நாமும் நருக்கிட
    நினைப்பது பிழையா ?

    நகத்தினை மனம் போல்
    நீ தான் நருக்கணும்

    ஆயினும் விரலை
    பிரிந்தா இருக்கணும் ?

    அம்மாடி ஏன் இந்த போட்டி ?
    இப்போ என்னாசு சொல்லுங்கோ மாமி ?

    எப்போதும் LIFE பர்ட்னெர் வேண்டும்
    ஏது ஆனாலும் துணை தேட தோன்றும்

    அன்பு 50-60 ஆனபோதும் மலரும்..."

    ReplyDelete
  5. புலி எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி என்பார்கள்...
    கபிலன் வைரமுத்துவை எட்டடியில் முந்தி நிற்கிறார்...
    (வைரமுத்துவின் மகன் என்று தான் ஞாபகம்!!!?)

    நல்லதொரு பாடல் பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. அன்பைக்காட்ட உவமைக்கு எடுத்தக் கொண்டவை அனைத்தும் வித்தியாசம் தான் .
    நானும் வீட்டில் கேட்டேன்.

    உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா

    "அஜினோமோட்டோ" என்று பதில் வந்தது.

    மாறிவரும் உணவுமுறையில் உப்பு,சர்க்கரை, சமமாக அஜினோமோட்டோவும் வந்துக் கொண்டு இருக்கிறது. kmr.krishnan said...இந்த மகாகவியின் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

    "உன் செல் போனில் நான் சிம்மா, பாட்டரியா?
    உன் டூவீலரில் நான் பெட்ரோலா, பின் சீட்டா?
    உன் காதலிகளில் நான் மூத்தவளா இளையவளா?
    உன் வார்ட்ரோபில் நான் மிடியா, ஜீன்ஸ்பாண்டா?"

    kmr.krishnan said...எனக்குப்பிடித்த தற்கால‌ நாயகிகளில் லைலா முதல் இடம். மேல்நாட்டு நடிகையா, இந்திய நடிகையா என்று தீர்மானிக்க முடியாத ஓர் அழகு.

    ஆஹா..... இது லைலாவுக்காக மகாகவி பாடியதா? அல்லது
    அதே லைலாவுக்காக இந்த மஜ்னு பாடியதா?

    ReplyDelete
  7. நான் முருகன் என்றால் நீ வள்ளியா??தேவயானையா??
    அவ்வை கேட்டதில் நீ சுட்டதா?சுடாதா?
    நல்ல காலம் நமக்கு வரும்(ஆனா)!!வராதா???

    ஆனந்தமுருகன்

    ReplyDelete
  8. "எனக்குப்பிடித்த தற்கால‌ நாயகிகளில் லைலா முதல் இடம். மேல்நாட்டு நடிகையா, இந்திய நடிகையா என்று தீர்மானிக்க முடியாத ஓர் அழகு"

    தற்கால‌ நாயகி!!??!!????

    ReplyDelete
  9. Blogger kmr.krishnan said...
    "பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
    தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
    வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
    தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
    வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
    பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;
    காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
    மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!
    வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
    பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
    ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
    ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!
    வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;
    பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
    எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:
    கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!
    வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
    பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
    நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
    ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!
    காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
    வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
    போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
    நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
    நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
    செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
    எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
    முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!
    தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
    வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
    தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
    ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!
    மகாகவி சுப்பிரமணிய பாரதியார்==(கண்ணன் பாட்டு)" //////

    சிச்சுவேசன் கொடுத்தால்தான் இப்போதுள்ள கவிஞர்கள் பாடலைப் புனைவார்கள். பாரதி தானே எல்லாமுமாகி எழுதிய பேராசான். அவருக்கு ஈடான கவிஞர் இப்போது யாரும் இல்லை.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////இந்த மகாகவியின் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.//
    "உன் செல் போனில் நான் சிம்மா, பாட்டரியா?
    உன் டூவீலரில் நான் பெட்ரோலா, பின் சீட்டா?
    உன் காதலிகளில் நான் மூத்தவளா இளையவளா?
    உன் வார்ட்ரோபில் நான் மிடியா, ஜீன்ஸ்பாண்டா?"
    இந்த வரிகளையும் சேர்த்துக்கொண்டால் பாடல் சுவைகூடும். ஹி ஹி ஹி !
    எனக்குப்பிடித்த தற்கால‌ நாயகிகளில் லைலா முதல் இடம். மேல்நாட்டு நடிகையா, இந்திய நடிகையா என்று தீர்மானிக்க முடியாத ஓர் அழகு.
    நன்றி ஐயா!//////

    ஒப்பிட எழுதிய வரிகள் சூப்பராக உள்ளன! வாழ்த்துக்கள்! எனக்குப் பிடித்த நடிகைகளில் லைலாவும் ஒருவர். நல்ல அழகு மற்றும் உணர்வுகளைக் கொட்டிதீர்க்கும் முகபாவனை கொண்ட நடிகை!
    நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. Blogger தேமொழி said...
    ஐயா,
    இது மிகவும் நல்ல பாடல், தேடிக் கொடுத்ததற்கு நன்றி. கற்பனையும் அருமை.
    உவமைகள் அனைத்தும் நல்ல ஒப்பீடு.
    ஆனால் ...
    "நீ கைதி என்றால், நான் சிறையா? தண்டனையா?"
    என்பதுதான் கொஞ்சம்.... வேறு ஏதாவது போட்டிருக்கலாமோ?... சரி அதை விடுங்கள்.
    இந்தப் பாடலை முதல் முதலில் கேட்டதும் பழைய பாடல் ஒன்று நினைவு வந்தது.
    நீலமலர்கள் என்ற படத்தில் கவியரசர் எழுதிய பாடல். அருமையான கவி நயம் உள்ள பாடல்.
    பார்வையற்ற காதலி கேட்கும் கேள்விகளுக்கு காதலன் சொல்லும் பதில்கள்.
    ஐஸ்....ஐஸ்.. என்று கத்த நினைக்கும் அளவிற்கு பெண்ணைப் புகழ்வார் காதலன்.
    ஒப்பிட்டு ரசிப்பதற்காக கீழே கொடுத்துள்ளேன்.
    நமக்கு தேர்வில் கேள்விகள் கேட்டால்தானே பிடிப்பதில்லை.
    நம் திரைப்படங்களில் அந்த காலம் முதல் (நதி எங்கே போகிறது? ...பனியில்லாத மார்கழியா?) இந்தக் காலம் வரை கேள்விகள் கேட்டு, அதற்கு தவறாமல் பதில்கள் சொல்லி காதலர்கள் நேரத்தை விரயமாக்கத் தவறுவதில்லை.
    "என் சமயலறையில் நீ சபீனா?" :))))) இது ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க செய்யிறது. இதுவும் பிடித்திருக்கிறது.
    _______________________________
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    பாடல் தலைப்பு: இது இரவா பகலா
    திரைப்படம்: நீல மலர்கள்
    நடிகர்கள்: ஸ்ரீதேவி, கமலஹாசன்
    பாடகர்கள்: வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்
    இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
    வெளியான ஆண்டு: 1979
    _______________________________
    பெண்: இது இரவா பகலா?
    ஆண்: நீ நிலவா கதிரா?
    பெண்: இது வனமா மாளிகையா?
    ஆண்: நீ மலரா ஓவியமா? ..ஒ ஓ...........[இது இரவா பகலா?]
    பெண்: மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
    ஆண்: உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவாய் இல்லையா?
    பெண்: இது கனியா காயா?
    ஆண்: அதை கடித்தால் தெரியும்
    பெண்: இது பனியா மழையா?
    ஆண்: என்னை அணைத்தால் தெரியும்...........[இது இரவா பகலா?]
    பெண்: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது?
    ஆண்: தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
    பெண்: இது குயிலா குழலா?
    ஆண்: உன் குரலின் சுகமே
    பெண்: இது மயிலா மானா?
    ஆண்: அவை உந்தன் இனமே........... [இது இரவா பகலா?]
    பெண்: பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா?
    ஆண்: பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா?
    பெண்: இங்கு கிளிதான் அழகா?
    ஆண்: உன் அழகே அழகு
    பெண்: இந்த உலகம் பெரிதா?
    ஆண்: நம் உறவே பெரிது...........[இது இரவா பகலா?]
    காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=DBKbbYJJGGc/////

    நீண்ட நல்லதொரு பின்னூட்டத்திர்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger iyer said...
    //நதி எங்கே போகிறது? ...பனியில்லாத மார்கழியா? ///
    இத்துடன் இன்னமும் பதில் தெரி(யா)ந்த
    இந்த பாடலை விடவில்லை தானே.
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
    மாசில்லா உண்மை காதலி
    மாறுமோ செல்வம் வந்த போதிலே?
    இன்னமும் இன்னமும் பட்டியலிட்டால்
    இந்த ஒரு வகுப்பு நேரம் போதுமோ-?
    நன்றி சகோதரி உமது தொகுப்பிலிருந்து
    நல்ல பாடலினை சுழலவிட்டமைக்கு//////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  12. Blogger iyer said...
    ///"என் சமயலறையில் நீ சபீனா?" :))))) இது ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க செய்யிறது. இதுவும் பிடித்திருக்கிறது. ///
    இதுவேறுபொருள்படும் படியாக உள்ளது
    இந்த அய்யர் இப்படித்தான் என்பவர்கள்
    அப்படி சிந்தித்து பாருங்கள்..
    "அவர்" அதுக்கு மட்டும் தானாம்
    மற்றதெல்லாம் இந்த
    மங்கையரின் கையே ஓங்கியிருக்குமாம்
    சபீனா இருக்கும் இடமும்
    சரியான நேரத்திற்கு மட்டும் பயன்படும்
    என்ற கோணத்தில் பார்த்தால்
    எதற்கு இது என சிந்திக்க தோன்றுகிறதா
    இருக்கட்டும்..
    இப்போ.. அவ்வை ஷண்முகி படத்தின்
    இந்த பாடலின் வரிகளை மட்டும்
    இவர்களுக்காக சுழலவிடுகிறோம்
    "விரல் தாண்டி நகங்களும்
    வளர்வது சரியா ? அதை
    நாமும் நருக்கிட
    நினைப்பது பிழையா ?
    நகத்தினை மனம் போல்
    நீ தான் நருக்கணும்
    ஆயினும் விரலை
    பிரிந்தா இருக்கணும் ?
    அம்மாடி ஏன் இந்த போட்டி ?
    இப்போ என்னாசு சொல்லுங்கோ மாமி ?
    எப்போதும் LIFE பர்ட்னெர் வேண்டும்
    ஏது ஆனாலும் துணை தேட தோன்றும்
    அன்பு 50-60 ஆனபோதும் மலரும்..."///////

    தேவாரத்திலும் கலக்குகிறீர்கள். திரைப் பாடல்களிலும் கலக்குறீர்கள் சுவாமி. நன்றி விசுவநாதன்.

    ReplyDelete
  13. /////Blogger தமிழ் விரும்பி said...
    புலி எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி என்பார்கள்...
    கபிலன் வைரமுத்துவை எட்டடியில் முந்தி நிற்கிறார்...
    (வைரமுத்துவின் மகன் என்று தான் ஞாபகம்!!!?)
    நல்லதொரு பாடல் பதிவிற்கு நன்றிகள் ஐயா!/////

    நீங்கள் நினைத்தது சரிதான். அவர் கபிலன் வைரமுத்துதான். கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன். தகவலைக் கொடுத்துவிட்டார் http://en.wikipedia.org/wiki/Vairamuthu

    ReplyDelete
  14. //////Blogger thanusu said...
    அன்பைக்காட்ட உவமைக்கு எடுத்தக் கொண்டவை அனைத்தும் வித்தியாசம் தான் .
    நானும் வீட்டில் கேட்டேன்.
    உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா
    "அஜினோமோட்டோ" என்று பதில் வந்தது.
    மாறிவரும் உணவுமுறையில் உப்பு,சர்க்கரை, சமமாக அஜினோமோட்டோவும் வந்துக் கொண்டு இருக்கிறது. kmr.krishnan said...இந்த மகாகவியின் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
    "உன் செல் போனில் நான் சிம்மா, பாட்டரியா?
    உன் டூவீலரில் நான் பெட்ரோலா, பின் சீட்டா?
    உன் காதலிகளில் நான் மூத்தவளா இளையவளா?
    உன் வார்ட்ரோபில் நான் மிடியா, ஜீன்ஸ்பாண்டா?"
    kmr.krishnan said...எனக்குப்பிடித்த தற்கால‌ நாயகிகளில் லைலா முதல் இடம். மேல்நாட்டு நடிகையா, இந்திய நடிகையா என்று தீர்மானிக்க முடியாத ஓர் அழகு.
    ஆஹா..... இது லைலாவுக்காக மகாகவி பாடியதா? அல்லது
    அதே லைலாவுக்காக இந்த மஜ்னு பாடியதா?///////

    இரனை உள்ள அனைவருமே மஜ்னுக்கள்தான் ராசா! அவர் பெயரைப் பாருங்கள் - ரசனை இருக்காதா, என்ன?

    ReplyDelete
  15. வாத்தியார் ஐயா வணக்கம்.
    எல்லாக் கவிஞர்களின் பாடல்களும் அருமையாகவுள்ளது.அவற்றுள் முண்டாசுக்
    கவிஞனின் பாடலைத்தந்த கிருஸ்ணண் அவர்கட்கு முதல் நன்றிகள்.பாரதியார் என்ன கற்பனையில்,எந்த மெட்டுக்கு யாருடைய இசைக்கு பாடலை எழுதினான்?;;;;அந்த பாடலின் வரிகளை நாம் படிக்கும்போதே உள்ளத்தில் தோன்றுகின்ற இனம் புரியாத உணர்ச்சிக்களை வார்த்தைகளில் வடிக்கமுடியவில்லை என்பதே உண்மை.
    சுதன்.க‌

    ReplyDelete
  16. http://generationneeds.blogspot.com/2012/01/blog-post_20.html
    வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

    ReplyDelete
  17. //// Ananthamurugan said...
    "KMRK said,ப எனக்குப்பிடித்த தற்கால‌ நாயகிகளில் லைலா முதல் இடம். மேல்நாட்டு நடிகையா, இந்திய நடிகையா என்று தீர்மானிக்க முடியாத ஓர் அழகு"

    தற்கால‌ நாயகி!!??!!????/////

    ஐ செகண்ட் இட்..

    தவிர லைலாவை எனக்கு ரொமான்ஸ் கேரக்டரில் பார்க்கப் பிடிக்காது..சிறுபிள்ளைத்தனம் நிறைந்த பாத்திரங்கள் மட்டுமே அவருக்குப் பொருந்திவருவதாக எனது கணிப்பு..குழந்தைத்தனமான முகவெட்டு..
    காதல்+ க்குரிய முதிர்ச்சி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..

    ReplyDelete
  18. ///தேமொழி said..ஐயா,
    இது மிகவும் நல்ல பாடல், தேடிக் கொடுத்ததற்கு நன்றி. கற்பனையும் அருமை. .
    பெண்: இது இரவா பகலா?
    ஆண்: நீ நிலவா கதிரா?
    பெண்: இது வனமா மாளிகையா?
    ஆண்: நீ மலரா ஓவியமா? ..ஒ ஓ...........[இது இரவா பகலா?]///

    சின்ன வாத்தியாரின் பிளாக்கிலே ஒரு நேரம் ஆக்டிவாக இருந்தபோது இதே பாடலை நான் கேட்டு எழுதியது நினைவுக்கு வருகிறது..விவரம் இங்கே இருக்கிறது..இன்று மீண்டும் ஒருமுறை கேட்க அறிவுறுத்திய தேமொழிக்கு நன்றி.. minorwall சொன்னது…

    Lakshmanan சொன்னது… (பிறந்த நாள்: 21-3-1972, நேரம்: 6.05, இடம்: திருச்சி)
    இது இரவா?பகலா? நீ... நிலவா?.. கதிரா?.... (கமல் பாடல்)
    பிறந்த நேரம் AM / PM விவரம் கொடுக்கப்படவில்லை.இதற்காக சொடுக்கியவுடன் இந்தப்பாடலை youtube இல் கேட்டு மகிழ்ந்தேன்..இந்த வாய்ப்பை ஏற்படுத்திய லட்சுமணனுக்கு நன்றி..
    NSB ரோட்டை வெள்ளி செவ்வாய்களில் 3 தரம் வலம் வந்து விட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கும் ஒருமுறை ஏறி இறங்கினால் நிச்சயம் ஒரே மாதத்தில் தாங்கள் தேடும் அந்த ரதிதேவி இந்த மன்மத லெட்சுமணனின் கண்களில் சிக்குவார் என்பது அனுபவ சோதிட விளக்கம்..
    http://ananth-classroom.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  19. hello sir, the astrology book by actor rajesh has been released thru karpagam publications titled " jothidam oru puriyatha puthir" it is a must read in my opinion for lovers of astrology. some ppl from here were asking me for the release date.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com