Amala Paul from the film Vettai. Thanks to the person who uploaded the image in the net |
கீழே இடைச்சேர்க்கையில் ஐந்து படங்கள் உள்ளன அவற்றையும் பாருங்கள்
----------------------------------------------------------------- Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?
தினமும் தயிர் சாதம் என்றால் எப்படிச் சாப்பிடுவீர்கள்? சைடு டிஷ்சாக எண்ணெய் வாழைக்காய் பொரியல் அல்லது உருளைக்கிழங்கு காரகறி அல்லது மாங்காய் தொக்கு இருந்தால் சாப்பிடலாம். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்றால் சாப்பிடலாம். தினமும் என்றால் எப்படியும் முடியும் சாமி?
தொண்டைக்குப் பிறகு எல்லா உணவும் ஒன்றுதான் என்றாலும், நாக்கு விடாதே ராசா!
நாக்கைக் கட்டுப்படுத்தலாம் என்றால் குரங்கு விடாதே சாமி!
நாக்கோடு சம்பந்தப் பட்ட குரங்கு எது என்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்!
அதனால் எளிய உணவாக இருந்தாலும் விதம் விதமாக இருந்தால்தான் நல்லது.
அதுபோல தினமும் நட்சத்திரக் கோவில்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந் தால், படிக்கும் நீங்கள் கட்டையை எடுத்து என் தலையில் ஒரு போடு போட்டால் என்ன ஆவது?
ஆகவே வாரம் இரண்டு கோவில்கள் அறிமுகமாகும். மற்ற நாட்களில் வேறு தலைப்புக்களில் பாடங்கள். மீண்டும் அடுத்த வாரம் இரண்டு நட்சத்திரக் கோவில்களுக்கான பாடங்கள் வெளியாகும். தங்கள் நட்சத்திரக் கோவிலுக்காகக் காத்திருக்கும் கண்மணிகள் பொறுத்திருக்கவும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Astrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?
அஷ்டகவர்க்கப் பாடம் எண்.15
உட்தலைப்பு: Key Points in ashtakavarga
ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன? உங்கள் மொழியில் சொன்னால் up & down periods என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாகனம் செல்லும் வழியில் - அதுவும் திம்பம் போன்ற வனப்பகுதிகளில் நின்று போய் இடக்கு செய்தால் என்ன செய்ய முடியும்?
இரவு நேரம் கும்மிருட்டு. யானைக்காடு. கடந்து செல்லும் சகவண்டிக்காரன் நிறுத்தாமல் போய்க்கொண்டிருப்பான். விடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.
சிலருக்குப் பார்த்தீர்கள் என்றால், தடம் புரண்ட வண்டியைப்போல வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கும். செல்வச் செழிப்போடு இருந்தவன், பணச்சிக்கலுக்கு ஆளாகியிருப்பான். கடன் தொல்லை வாட்டி எடுக்கும். கஷ்டங்கள் கசக்கிப் பிழியும். ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை உண்டாகிவிடும். இன்னோவா காரில் வலம் வந்தவன், ச்ட்டை கசங்க நகரப் பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருப்பான். ஆட்டோவிற்குக் காசில்லாமல் நடராஜா சர்வீசில் சென்று கொண்டிருப்பான். அடையார் பார்க் கேட் ஹோட்டலின் ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், நடைபாதைக் கடைகளில் சாப்பிடத் துவங்குவான்.
புத்திசாலித்தனமாக நடந்திருந்தால், நிலைமை இப்படி ஆகியிருக்காதா?
என்ன சாலித் தனம் இருந்தாலும் விதிவிடாது. கிரகங்கள் விடாது. எல்லாம் கர்மவினைப் பலன்!
விதியைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அய்யன் வள்ளுவர் எழுதிய குறளின் 38ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள் தெரியவரும். அந்த அதிகாரம்தான் பொருட்பாலின் கடைசி அதிகாரம். விளக்க உரையோடு படியுங்கள். அதன் தலைப்பு ஊழ்வினை (Destiny) அற்புதமான அதிகாரம்.
-------------------------------------------------------------------------
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.
சனீஷ்வரன்தான் கர்மகாரகன் (Authority for work) அவனால்தான் உங்களுடைய ஜீவனம் நடந்துகொண்டிருக்கும். பூர்வீகச் சொத்தில் அல்லது மனையாட்டி கொண்டுவந்த செல்வத்தில் ஜீவனம் நடத்திக்கொண்டிருப்பவன் கதை எல்லாம் தனிக்கதை. அவனைப்பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். உழைக்கும் வர்க்கத்தின் கதையை, உணர்வுள்ளவனின் கதையை இன்று பார்ப்போம்
திடீரென்று இறக்கங்கள் உண்டானால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். 30 - 40 வயது உள்ளவன் பார்க்க மாட்டான். மனத் தெம்பு விடாது. 40ஐக் கடந்தவன், கண்டிப்பாக கையில் ஜாதகத்தை எடுத்துவிடுவான். அவர்களுக்காகத்தான் இன்றையப் பதிவு.
---------------------------------------------------------------------------
கஷ்டங்கள் எப்போது உங்களை அணைக்கத்துவங்கும்?
சனி மகாதிசை/புத்திகளில் அல்லது கோள்சாரச் சனியின் காலத்தில் (Changed period of transit Saturn) காலத்தில் சனி நம்மை அணைக்கத்துவங்கும். சனீஷ்வரனின் அணைப்பில் சுமார் 19 ஆண்டுகாலம் நான் இருந்திருக்கிறேன். சுகமான அணைப்பு அல்ல அது. அவஸ்தையான அணைப்பு. தேவதையின் அணைப்பு அல்ல அது. பிசாசின் அணைப்பு அது!
கோசாரச் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாறும். ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்குச் செல்லும். சென்ற 21.12.2011 அன்று கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார் சனீஷ்வரன். கன்னி ராசியில் எத்தனை பரல்கள் என்று பாருங்கள். அதைவிட அவர் செல்லும் துலாம் ராசியில் கூடுதலான பரல்கள் இருந்தால் ஏற்றமான பலன்கள்அடுத்துவரும் இரண்டரை ஆண்டு காலத்திற்கு இருக்கும். இருந்த இடத்தைவிட, செல்லும் இடத்தில் குறைவான பரல்கள் இருந்தால், இறக்கமான காலம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இறக்கம் மூன்று அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தால், அதிகமான இறக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
ஒரு உதாரண ஜாதகத்துடன் இதை விளக்கியுள்ளேன். கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்
விருச்சிகராசி ஜாதகம். ஏழரைச் சனி காலம் துவங்கி .நடைபெற்றுக் கொண்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க, அஷ்டகவர்க்கத்தை வைத்து இப்போது பலனைப் பார்ப்போம்.
ஜாதகருக்கு சிம்மத்தில் 37 பரல்கள், கன்னியில் 27 பரல்கள், துலாத்தில் 24 பரல்கள், விருச்சிகத்தில் (ராசியில்) 22 பரல்கள்,
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது சிம்ம ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு சிரமங்கள் உண்டாகத்துவங்கின.
பணப் பற்றாக்குறை. அதைவைத்து சொல்ல முடியாத கஷ்டங்கள். அந்தக் கஷ்டங்கள் ஏழரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். அடுத்தடுத்துப் பரல்கள் குறைந்து கொண்டே போவதைப் பாருங்கள். சனீஷ்வரன் விருச்சிகத்தைக் கடந்து தனுசு ராசிக்குள் நுழைந்த பிறகுதான் அவருடைய பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு பரல்கள் உயர்வான வரிசையில் இருப்பதைப் பாருங்கள் 27 மற்றும் 31 என்று உயர்வாக இருப்பதைப் பாருங்கள்.
இரண்டரை வருடங்களாகக் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகரின் சிரமங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்குப் பிறகு நல்ல காலம்.
37 பரல்களில் இருந்து ஏழரை ஆண்டுகளுக்குள் 22 பரல்கள் உள்ள நிலைக்கு வந்ததால், சுமார் 15 பரல்கள் குறைவாகிப் போய்விட்டதால், இன்னோவா கார் பயணம் பேருந்துப் பயணமாகிவிடும். அதற்குப் பிறகு நிலைமை சீராகி. ஒரு மாருதி ஆல்டோ காராவது வாங்கிப் பயணித்து, ஜாதகர் ஒரு பெருமூச்சு விடுவார். சற்று நிம்மதி கொள்வார்.
அதுவரை நமது விசு அய்யர் அவர்கள் சொல்வதைப் போல ஒரு பாடலைச் சுழல விட வேண்டியதுதான்
“ எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”
---------------------------------------------------
வாத்தியார், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் அமலாபாலின் படம் எதற்காக?
சென்ற மாணவர்மலர் பதிவின் பின்னூட்டத்தில், தொடர்ந்து மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் இரண்டு மூத்த மாணவர்களுக்காக அந்தப்படம். கொஞ்சம் கூலாகட்டுமே என்றுதான்:-)))
---------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
///திடீரென்று இறக்கங்கள் உண்டானால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். 30 - 40 வயது உள்ளவன் பார்க்க மாட்டான். மனத் தெம்பு விடாது. 40ஐக் கடந்தவன், கண்டிப்பாக கையில் ஜாதகத்தை எடுத்துவிடுவான். ///
ReplyDeleteஇது என் அனுபவமும் கூட. எனக்கு சனி திசை முடிய 2015 ஆகிவிடும். சனிதிசை ராகுபுத்திஇந்த ஆண்டு இறுதி வரை.
ஐயா, பதிவில் உள்ள உதாரண ஜாதகருக்கு "விருச்சிக ராசி" என்பதைக் குறிப்பிட்டுருக்கலாமே. சந்திரன் இருக்கும் ராசிதான் ஒருவருடைய ராசி என்று எனக்குத் தெரிய கொஞ்ச காலம் ஆனது. அதனால் ஜாதகருக்கு இப்பொழுது ஏழரை சனி ஆரம்பம், 12 ஆம் இடத்திற்கு சனி பெயர்ந்துள்ளது.
///இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது மகர ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார்?///
சிம்ம ராசி எனக் குறிப்பிட நினைத்தீர்களா?
திருக்குறள் - அறத்துப்பால் - ஊழியல்
ReplyDelete38ஆம் அதிகாரம் - ஊழ்
குறள் 371 - 380
சாலமன் பாப்பையா உரை:
371: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
372: தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
373: பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். (அறிவு விரிவு பெறாது).
374: உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
375: நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
376: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
377: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
378: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
379: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.
380: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
ஐயா, மைனருக்கு சவால் விடும் குழந்தை படமும், உமாவின் கருத்துக்கு காத்திருக்கும் அனிமேட்டட் சித்திரமும் நல்ல நகைச்சுவை. நன்றி
ReplyDelete>> இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது மகர ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார்.
ReplyDeleteஇவ்வாறு துரிதம் செய்ய வேண்டும் என நினைக்கிறன்.
இவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என நினைக்கிறன்.
Blogger தேமொழி said...
ReplyDelete///திடீரென்று இறக்கங்கள் உண்டானால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். 30 - 40 வயது உள்ளவன் பார்க்க மாட்டான். மனத் தெம்பு விடாது. 40ஐக் கடந்தவன், கண்டிப்பாக கையில் ஜாதகத்தை எடுத்துவிடுவான். ///
இது என் அனுபவமும் கூட. எனக்கு சனி திசை முடிய 2015 ஆகிவிடும். சனிதிசை ராகுபுத்திஇந்த ஆண்டு இறுதி வரை.
ஐயா, பதிவில் உள்ள உதாரண ஜாதகருக்கு "விருச்சிக ராசி" என்பதைக் குறிப்பிட்டுருக்கலாமே. சந்திரன் இருக்கும் ராசிதான் ஒருவருடைய ராசி என்று எனக்குத் தெரிய கொஞ்ச காலம் ஆனது. அதனால் ஜாதகருக்கு இப்பொழுது ஏழரை சனி ஆரம்பம், 12 ஆம் இடத்திற்கு சனி பெயர்ந்துள்ளது.
///இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது மகர ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார்?///
சிம்ம ராசி எனக் குறிப்பிட நினைத்தீர்களா?///////
இரண்டையும் குறிப்பிட்டுள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
Blogger தேமொழி said...
ReplyDeleteதிருக்குறள் - அறத்துப்பால் - ஊழியல்
38ஆம் அதிகாரம் - ஊழ்
குறள் 371 - 380
சாலமன் பாப்பையா உரை:
371: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
372: தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
373: பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். (அறிவு விரிவு பெறாது).
374: உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
375: நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
376: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
377: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
378: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
379: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.
380: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?//////
ஊழியல் அதிகாரத்தின் விளக்கப் பகுதியை தட்ட்ச்சு செய்து அனுப்பிய மேன்மைக்கு நன்றி. என்னிடம். மு.வ.வின் உரையும், டாக்டர் ஜி.யு.போப் அவர்களின் உரையும் உள்ளது. டாக்டர் ஜி.யு.போப் அவர்களின் உரை சூப்பராக இருக்கும்.
//////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா, மைனருக்கு சவால் விடும் குழந்தை படமும், உமாவின் கருத்துக்கு காத்திருக்கும் அனிமேட்டட் சித்திரமும் நல்ல நகைச்சுவை. நன்றி////
உங்கள் ரசனை உணர்வுக்கு நன்றி சகோதரி!
////Blogger Balaji said...
ReplyDelete>> இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை, அதாவது மகர ராசியில் சனீஷ்வரன் இருந்தவரை ஜாதகர் ஓஹோ என்று இருந்தார்.
இவ்வாறு துரிதம் செய்ய வேண்டும் என நினைக்கிறன்.
இவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என நினைக்கிறன்.////
அது அவசர தட்டச்சில் ஏற்பட்ட பிழை. சிம்ம ராசியில் என்று மாற்றி வாசியுங்கள்
அஷ்ட வர்கத்தில் கோசார சனி செய்யும் பலா பலன்கள் புரிவது கொள்வதற்கான வழி,அடிப்படையில் உள்ள என் போன்றோருக்கு மிகவும் உபயோகம்.நன்றி அய்யா.
ReplyDeleteஇருந்தும் தயக்கத்துடன் ஒரு சந்தேகம் , இரண்டாம் சுற்றாக இருந்து இறந்குமாக பரல்களில் சென்றாலும் பலன்கள் குறையுமா? அல்லது பொங்கு சனி என்பதால் கொஞ்சம் சுமாராக இருக்குமா?
தவறுகள் சுட்டப்பெற்றன மீண்டும்
ReplyDeleteதட்டவில்லை அதனால்...
என்ன காத்து
இந்தப் பக்கமா அடிக்குது..
மைனருக்கே சவாலா...
நாய் படுத்தும் பாடு இது தானோ..
பேய் பிடித்த நாயா இது
சேய் போல இழுக்குதே தாயை..
அடுத்தது என்ன..
ஆவலுடன் காத்திருக்கிறோம்
எளிதான பாடம், நன்றி அய்யா..
ReplyDeleteஇந்த விதி அனைத்து கிரகங்களுக்கும் பொருந்துமா?? உதரணத்திற்கு குரு, பரல்கள் அதிகம் உள்ள ராசியில் இருந்து பரல்கள் குறைவான ராசிக்கு போகும் போது குருவினால் உண்டாகும் நன்மைகள் குறையுமா??
Sir, i sent a important information(no questions about astrology) can you pls check your email!
ReplyDeletethank you
ஐயா,அஷ்டவர்க்கம் பற்றிய பதிவு அருமை.விளக்கிய விதம் புதுமை.சிம்ம லக்கினக்காரர்களுக்கு சனியால் நன்மையான பலன்கள் ஏற்படாதா?.இல்லை அவரது வீடுகள் {6ம் வீடு~33 பரல்,7ம் வீடு~30 பரல்}பலமாக இருந்தாலும் போட்டுப் பார்த்து விடுவாரா?.விளக்கினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteமுதல் படம் வா...................வ்
ReplyDeleteஇரண்டாம் படம்
சனி பெயர்ச்சியில் தூக்கி உட்கார வைக்கும் சனி, பரல்கள் குறைந்தால் இப்படித்தான் ஆளை குப்புற தள்ளும் என்று பாடம் நடத்துவது போல் இருக்கிறது.
.
தேமொழியின் அறத்துப்பால் விளக்கத்திற்கு நன்றி.என்னிடம் குறளோவியம் உள்ளது.
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
ReplyDeleteஅஷ்டவர்க்கப் பதிவிற்கு நன்றி.
-Sathish K
Ayya,
ReplyDeleteSani Thesa is going to start for me after 3years..Can you tell me some remedy(Parigarams) as well for overcoming problems.
Student,
Ravu
ஆசிரியருக்கு வணக்கம், சென்ற மாணவர் மலரில் கூறி இருக்க வேண்டியதை தாமதமாக அங்கே கூறி இருந்தும்... இங்கும் ஒரு முறை கூற விளைகிறேன்.
ReplyDeleteஎனது கட்டுரையை பதிவிட்ட ஆசிரியருக்கும் அதனை பொறுமையாக படித்தும், அதற்கு பின்னூட்டம் இட்ட எனது சகோதர சகோதிரிகளுக்கும் நன்றிகள்....
நான் குடும்பத்தோடு மலேசிய நாட்டிற்கு மூன்று நாட்கள் (இங்கு சீனப் புத்தாண்டு விடுமுறை) சுற்றுலா சென்று முக்கியமாக எனது ஐந்தாம் அதிபதி செவ்வாய் அவனின் திசை அவனின் புத்தியில் ... பத்துமலையில் நிற்று அருளும் தங்க மகன் அப்பனுக்கு உபதேசித்த எம்பெருமான்... நமது அப்பன் முருகனை தரிசித்து விட்டு நேற்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தேன்... அதனால் ஐயரின் கேள்விகளுக்கு பதில் உடன் எழுத முடியவில்லை... அன்பிற்கினிய கோபாலன் ஐயாவும்... நண்பர் கணேசும் பதில் களைத்தந்து இருக்கிறார்கள்.... மொழி மாறும், நடைமாரும் பெருபாலும் பொருள் ஒன்றே ஆகும் என்பது தான் இன்றைய மதங்களில் கடைபிடிக்கும் வேதங்களின் சாரம் இதுவும் அவ்வாறே!.. உங்களுக்கும் எனது நன்றிகள்...
ஐயரின் கேள்விகளை நான் புரிந்து கொண்டிருக் கிறவைகளை கொண்டு பதில் தர முயன்று இருக்கிறேன் அங்கே!.... அவரும் அவர் தம் விளக்கத்தை கூற வேண்டு கிறேன்...
நன்றிகளும் வணக்கமும்.
//////Blogger thanusu said...
ReplyDeleteஅஷ்ட வர்கத்தில் கோசார சனி செய்யும் பலா பலன்கள் புரிவது கொள்வதற்கான வழி,அடிப்படையில் உள்ள என் போன்றோருக்கு மிகவும் உபயோகம்.நன்றி அய்யா.
இருந்தும் தயக்கத்துடன் ஒரு சந்தேகம் , இரண்டாம் சுற்றாக இருந்து இறந்குமாக பரல்களில் சென்றாலும் பலன்கள் குறையுமா? அல்லது பொங்கு சனி என்பதால் கொஞ்சம் சுமாராக இருக்குமா?//////
அஷ்டகவர்கப்பரல்களில் (சுற்றும்போது) பரல்கள் மட்டுமே கணக்கு. இரண்டு மூன்று என்ற சுற்றுக்கணக்கெல்லாம் இல்லை!
//////Blogger iyer said...
ReplyDeleteதவறுகள் சுட்டப்பெற்றன மீண்டும்
தட்டவில்லை அதனால்...
என்ன காத்து
இந்தப் பக்கமா அடிக்குது..
மைனருக்கே சவாலா...
நாய் படுத்தும் பாடு இது தானோ..
பேய் பிடித்த நாயா இது
சேய் போல இழுக்குதே தாயை..
அடுத்தது என்ன..
ஆவலுடன் காத்திருக்கிறோம்//////
நல்லது. நன்றி விசுவநாதன்!
/////Blogger ACE !! said...
ReplyDeleteஎளிதான பாடம், நன்றி அய்யா..
இந்த விதி அனைத்து கிரகங்களுக்கும் பொருந்துமா?? உதரணத்திற்கு குரு, பரல்கள் அதிகம் உள்ள ராசியில் இருந்து பரல்கள் குறைவான ராசிக்கு போகும் போது குருவினால் உண்டாகும் நன்மைகள் குறையுமா??//////
அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும்!
//////Blogger govind said...
ReplyDeleteSir, i sent a important information (no questions about astrology) can you pls check your email!
thank you//////
எனக்குள்ள முதன்மைப் பிரச்சினை நேரப் பற்றாக்குறை. உங்களுடைய மின்னஞ்சலைப் பார்க்கிறேன். பொறுத்திருங்கள்!
இன்னைக்கு பிரியாணியோ...
ReplyDeleteபிரியாணி (பாடம்) அருமை ஆனாலும் பசி தீரவில்லை..
பாடத்திற்கு நன்றி அய்யா.
//////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா,அஷ்டவர்க்கம் பற்றிய பதிவு அருமை.விளக்கிய விதம் புதுமை.சிம்ம லக்கினக்காரர்களுக்கு சனியால் நன்மையான பலன்கள் ஏற்படாதா?.இல்லை அவரது வீடுகள் {6ம் வீடு~33 பரல்,7ம் வீடு~30) பரல்}பலமாக இருந்தாலும் போட்டுப் பார்த்து விடுவாரா?.விளக்கினால் நன்றாக இருக்கும்.////
வீடுகள் என்றால் அந்த வீடுகளுக்கு உரிய பலன்கள் என்று எடுத்துக்கொள்ளவும். சனி தன் சுயவர்கப்பரலில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. அதைப்பற்றி எழுதினால் நான்கு பக்கங்கள் வரும். பொறுத்திருங்கள் அஷ்டகவர்க்கப்பாடம் நடத்தும் போது விவரமாக எழுதுகிறேன்!
///////Blogger thanusu said...
ReplyDeleteமுதல் படம் வா...................வ்
இரண்டாம் படம்
சனி பெயர்ச்சியில் தூக்கி உட்கார வைக்கும் சனி, பரல்கள் குறைந்தால் இப்படித்தான் ஆளை குப்புற தள்ளும் என்று பாடம் நடத்துவது போல் இருக்கிறது.//////
படங்களை ரசித்துப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி!
//////Blogger thanusu said...
ReplyDeleteதேமொழியின் அறத்துப்பால் விளக்கத்திற்கு நன்றி. என்னிடம் குறளோவியம் உள்ளது./////
நல்லது. உள்ளதை உபயோகப்படுத்துகிறீர்களா? அதல்லவா முக்கியம்:-))))
இந்த படம் பிடிக்கலையா யாருக்கும்???அஷ்டவர்கத்துடன் அமலா பால் அசத்தல்.
ReplyDeleteAnanthamurugan.G
This comment has been removed by the author.
ReplyDeleteArumaiyaana vilakkam. Nanri!
ReplyDeleteexcellent work, very useful sir.
ReplyDelete/////Blogger Sathish K said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
அஷ்டவர்க்கப் பதிவிற்கு நன்றி.
-Sathish K/////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger Ravichandran said...
ReplyDeleteAyya,
Sani Thesa is going to start for me after 3years..Can you tell me some remedy(Parigarams) as well for overcoming problems.
Student,
Ravu/////
காசைவைத்து செலவு செய்வது எதுவுமே பரிகாரம் ஆகாது! பிரார்த்தனை மட்டுமே உண்மையான பரிகாரம்!
//////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம், சென்ற மாணவர் மலரில் கூறி இருக்க வேண்டியதை தாமதமாக அங்கே கூறி இருந்தும்... இங்கும் ஒரு முறை கூற விளைகிறேன்.
எனது கட்டுரையை பதிவிட்ட ஆசிரியருக்கும் அதனை பொறுமையாக படித்தும், அதற்கு பின்னூட்டம் இட்ட எனது சகோதர சகோதிரிகளுக்கும் நன்றிகள்....
நான் குடும்பத்தோடு மலேசிய நாட்டிற்கு மூன்று நாட்கள் (இங்கு சீனப் புத்தாண்டு விடுமுறை) சுற்றுலா சென்று முக்கியமாக எனது ஐந்தாம் அதிபதி செவ்வாய் அவனின் திசை அவனின் புத்தியில் ... பத்துமலையில் நிற்று அருளும் தங்க மகன் அப்பனுக்கு உபதேசித்த எம்பெருமான்... நமது அப்பன்
முருகனை தரிசித்து விட்டு நேற்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தேன்... அதனால் ஐயரின் கேள்விகளுக்கு பதில் உடன் எழுத முடியவில்லை... அன்பிற்கினிய கோபாலன் ஐயாவும்... நண்பர் கணேசும் பதில்களைத்தந்து இருக்கிறார்கள்.... மொழி மாறும், நடைமாறும் பெருபாம் பொருள் ஒன்றே ஆகும் என்பது தான் இன்றைய மதங்களில் கடைபிடிக்கும் வேதங்களின் சாரம் இதுவும் அவ்வாறே!.. உங்களுக்கும் எனது நன்றிகள்...
ஐயரின் கேள்விகளை நான் புரிந்து கொண்டிருக்கிறவைகளை கொண்டு பதில் தர முயன்று இருக்கிறேன் அங்கே!.... அவரும் அவர் தம் விளக்கத்தை கூற வேண்டுகிறேன்...
நன்றிகளும் வணக்கமும்./////
“பெருபாம்” - என்ன இது ஆலாசியம்?
//////Blogger Govindasamy said...
ReplyDeleteஇன்னைக்கு பிரியாணியோ...
பிரியாணி (பாடம்) அருமை ஆனாலும் பசி தீரவில்லை..
பாடத்திற்கு நன்றி அய்யா.//////
என்றைக்கு பசி தீர்ந்திருக்கிறது?
/////Blogger Ananthamurugan said...
ReplyDeleteஇந்த படம் பிடிக்கலையா யாருக்கும்???அஷ்டவர்கத்துடன் அமலா பால் அசத்தல்.
Ananthamurugan.G///////
எல்லோரும் சொல்வார்களா? வெட்கம் அல்லது சுயகெளரவம் தடுக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாமல் (ஜப்பானில் இருந்து) ஒருவர் பின்னூட்டம் இடுவார் பாருங்கள். பொறுத்திருங்கள்!
/////Blogger eswari sekar said...
ReplyDeleteayya vannkam enrya lesson nanrga erunthu my daughter 7/1/2 sani kanni rasi kanni rasiel 25 parlgal thluamil 32 kanni raseil sani erutha pothu paddpu break c.a inter 3 times rahu thasa suya puthi ethai eppadi ethukolvthu rahu 11 th house/////
உதிரியான கிரக நிலைகளை வைத்து எப்படி பதில் சொல்வது?
/////Blogger Bhama said...
ReplyDeleteArumaiyaana vilakkam. Nanri!/////
நல்லது. நன்றி சகோதரி!
//////Blogger vprasana kumar said...
ReplyDeleteexcellent work, very useful sir./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////விதியைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அய்யன் வள்ளுவர் எழுதிய குறளின் 38ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள் தெரியவரும். அந்த அதிகாரம்தான் பொருட்பாலின் கடைசி அதிகாரம். விளக்க உரையோடு படியுங்கள். அதன் தலைப்பு ஊழ்வினை (Destiny) அற்புதமான அதிகாரம்.////
ReplyDeleteஎன்ன அருமையானதொரு இடத்திலே வைத்திருக்கிறார் பாருங்கள்...
என்னதான் அறம், பொருளோடு, வாழ்ந்து உயர்ந்தாலும் கடைசியாக ஒன்றை இதை சொல்லி விடுகிறேன் மறந்துவிடாதே என்று!!!
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சனி என்னும் சக்கரம் மேலும் கீழும் ஏற்றி இறக்குவதைப் பற்றியப் பதிவு.. நன்றிகள் ஐயா!
sani astavakathil 2 point rahu sani sukeran kuttani 11 house 25 parlgal 25 paralgal
ReplyDelete///“பெருபாம்” - என்ன இது ஆலாசியம்?////
ReplyDelete"லு" நலுவிருச்சு சார்...
நாற்பது ஆனாலே இப்படித்தான்னு
நா"லு" பேரைப் பார்த்து
நல்லத் தெரிஞ்சுக் கிட்டேன்;
கண்ணுரெண்டும் நம்மொதேப்
பிறந்த இந்தக் கண்களும்
அசந்தா கவுத்துரும்னு..:):)
உடன்பிறந்தே கொல்வதுன்னா இதுவுமோ!:):)
Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete////விதியைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அய்யன் வள்ளுவர் எழுதிய குறளின் 38ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள் தெரியவரும். அந்த அதிகாரம்தான் பொருட்பாலின் கடைசி அதிகாரம். விளக்க உரையோடு படியுங்கள். அதன் தலைப்பு ஊழ்வினை (Destiny) அற்புதமான அதிகாரம்.////
என்ன அருமையானதொரு இடத்திலே வைத்திருக்கிறார் பாருங்கள்...
என்னதான் அறம், பொருளோடு, வாழ்ந்து உயர்ந்தாலும் கடைசியாக ஒன்றை இதை சொல்லி விடுகிறேன் மறந்துவிடாதே என்று!!!
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சனி என்னும் சக்கரம் மேலும் கீழும் ஏற்றி இறக்குவதைப் பற்றியப் பதிவு.. நன்றிகள் ஐயா!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
/////Blogger eswari sekar said...
ReplyDeletesani astavakathil 2 point rahu sani sukeran kuttani 11 house 25 parlgal 25 paralgal////
பெண்அள் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். சனி இரங்க மாட்டானா? 2 பரல்கள் என்பது குறைவுதான். ஆனாலும் 11ல் இடம் பிடித்திருக்கிறார். அதில் மேக்கப் ஆகிவிட்டது. கவலையை விடுங்கள்!
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete///“பெருபாம்” - என்ன இது ஆலாசியம்?////
"லு" நலுவிருச்சு சார்...
நாற்பது ஆனாலே இப்படித்தான்னு
நா"லு" பேரைப் பார்த்து
நல்லத் தெரிஞ்சுக் கிட்டேன்;
கண்ணுரெண்டும் நம்மொடே
பிறந்த இந்தக் கண்களும்
அசந்தா கவுத்துரும்னு..:):)
உடன்பிறந்தே கொல்வதுன்னா இதுவுமோ!:):)//////
சரி விடுங்கள் - தட்டச்சுப்பிழைதானே!
யாருமே அமலா பால்லுக்கு ஆதரவு இல்லையா.என்ன கொடுமை சார் இது.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteகோள்சாரத்தில் குரு மற்றும் சனி பெயர்ச்சியின் பலன்கள் தான் அதிகமாக ஆவலுடன் எதிர்ப்பார்க்கபடும் பலன்கள்...அவை தன் நபருக்கு எந்த அளவிற்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் என்பதை உதாரண ஜாதகத்துடன் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா...
"மைனர்"வாள் அவர்களை போட்டிக்கு அழைத்த இந்த "மேஜர்"க்கு வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...அந்த குழந்தைக்கு சனி பகவான் உச்சம் பெற்று 30 பரல்களுக்கு மேல் இருப்பார் போலும்,இந்த வயதிலேயே "போட்டிக்கு" சவால் விடுகிறாரே!!!
ReplyDeleteசனி பகவான் தன் தசையில் யாரும் தப்பித்துக் கொள்ள நினைத்தாலும்,இப்படி தான் வராமலே,"அட்டாக் பாண்டி"யை அனுப்பி வைப்பாரோ?!!!...இதைத் தான் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பார்களோ?!
//தேமொழிsaid...
ReplyDeleteதிருக்குறள் - அறத்துப்பால் - 38ஆம் அதிகாரம் - ஊழ்
குறள் 371 - 380
சாலமன் பாப்பையா உரை:
371: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால்//
இன்றைய ஆக்கத்தை முழுவதும் படித்து விட்டு திருக்குறளை படிக்கலாம் என்று நினைத்தேன்...அதற்கு அவசியமில்லாது அதை பின்னூட்டத்தில் தந்த தேமொழி சகோதரிக்கு நன்றிகள் பல...எள் என்றவுடன் எண்ணெயாகி விடுகிறார்...நன்றி
முதலில் அந்த பளு தூக்கும் குழந்தை! ஜப்பானியக் குழந்தையோ?
ReplyDeleteஅந்தப் படத்திற்க்குக் கீழ் உள்ள வாசகங்களுக்குப்பொருத்தமாக ஏற்கனவே நான் சுட்டிய இந்தக் காணொளியை மீண்டும் சுட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
http://www.youtube.com/watch?v=A0M0EZ8T5J8
என்னைப் பொருத்தவரை எப்போதும் கூல்தான். அமலா பால் லுக்வுட்டுத்தான் கூல் ஆக்கவேண்டியது இல்லை. ஏனேனில் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும்,
புரியாததைப் புரிந்து கொள்ளும் மன நிலையும் எப்போதும் உண்டு.ஏதாவது ஒரு தத்துவத்தினை சார்ந்து நின்று அதுவே மெய் கண்டது என்றும் மற்றதெல்லாம் பொய் கண்டது என்றெலாம் சாதிக்க வேண்டிய நிர்பந்தம் எல்லாம் வைத்துக் கொள்ளாததால் கூல் ஒன்றும் போய் விடுவதில்லை.
அந்தப் பெண்ணுக்கு அந்த 'பெட்' செய்வதை கணவன் செய்தால் டைவர்ஸ் நிச்சயம்.'பெட்'ஐ என்ன செய்ய முடியும்? என்ன துணிச்சல் பாருங்கள் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி....
///"Minor I am ready ..Are you ready ?"//
ReplyDelete"இதென்ன சின்னப் புள்ளைத்தனமா இருக்கே?"
கோள் சாரத்தில் குரு மேஷத்தில் இருப்பதால், துலா ராசிக்கு ஏழாம் இடத்து பார்வை கிடைக்காதா? அதனால் அங்கிருக்கும் சனியின் பாதிப்பு குறையுமா??
ReplyDeleteகேள்வி தவறெனில் மன்னிக்க..
//////ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?////////
ReplyDeleteஅமலா பால் படத்தைப் போட்டுட்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே வேணாம்..
இருந்தாலும் கொஞ்சம் சிரமங்கள் இருந்துச்சு..
'என் ராத்தூக்கம் போச்சே'ன்னு அமலாவின் சிவந்த விழியோரம் சொல்ல;
என்ன ஜெல் யூஸ் பண்ணினாங்களோ தெரியலே ஹேர்ஸ்டைல் செட் பண்ண?;
இப்படி எங்கெங்கோ மனமும் கண்களும் தாவினாலும் கடைசியில்
முன்னாடி வந்து விழுந்த கவனமதில் அந்த முடிக்கற்றைகள்தான் அந்த சிரமத்தைக் கொடுத்தன..
பாடத்துத் தலைப்பைப் அறியமுடியாமல் கடும் சிரமத்தை..
///////Blogger Ananthamurugan said...
ReplyDeleteயாருமே அமலா பாலுக்கு ஆதரவு இல்லையா. என்ன கொடுமை சார் இது.//////
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? ஆனந்தமாக இருங்கள் முருகன்!
/////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
கோள்சாரத்தில் குரு மற்றும் சனி பெயர்ச்சியின் பலன்கள் தான் அதிகமாக ஆவலுடன் எதிர்ப்பார்க்கபடும் பலன்கள்...அவை தன் நபருக்கு எந்த அளவிற்கு
நன்மை தீமை பலன்களை வழங்கும் என்பதை உதாரண ஜாதகத்துடன் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
/////Blogger R.Srishobana said...
ReplyDelete"மைனர்"வாள் அவர்களை போட்டிக்கு அழைத்த இந்த "மேஜர்"க்கு வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...அந்த குழந்தைக்கு சனி பகவான் உச்சம் பெற்று 30
பரல்களுக்கு மேல் இருப்பார் போலும்,இந்த வயதிலேயே "போட்டிக்கு" சவால் விடுகிறாரே!!!
சனி பகவான் தன் தசையில் யாரும் தப்பித்துக் கொள்ள நினைத்தாலும்,இப்படி தான் வராமலே,"அட்டாக் பாண்டி"யை அனுப்பி வைப்பாரோ?!!!...இதைத்
தான் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பார்களோ?!/////
அவருக்கு எதற்கு அடியாட்கள் எல்லாம்? எத்தனை கோடி மக்கள் என்றாலும் அவர் ஒரு ஆளாகவே களத்தில் இறங்கிவிடுவார்!
//////Blogger R.Srishobana said...
ReplyDelete//தேமொழிsaid...
திருக்குறள் - அறத்துப்பால் - 38ஆம் அதிகாரம் - ஊழ்
குறள் 371 - 380
சாலமன் பாப்பையா உரை:
371: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால்//
இன்றைய ஆக்கத்தை முழுவதும் படித்து விட்டு திருக்குறளை படிக்கலாம் என்று நினைத்தேன்...அதற்கு அவசியமில்லாது அதை பின்னூட்டத்தில் தந்த
தேமொழி சகோதரிக்கு நன்றிகள் பல...எள் என்றவுடன் எண்ணெயாகி விடுகிறார்...நன்றி/////
நம் பதிவுக்கு வரும் வாசகர்களில்/வாசகிகளில் அவர் ஒரு மாணிக்கம்!
கல்லெல்லாம் மாணிகக் கல்லாகுமா?
வாசகிகளெல்லாம் தேமொழி போலாகுமா?
Blogger kmr.krishnan said...
ReplyDeleteமுதலில் அந்த பளு தூக்கும் குழந்தை! ஜப்பானியக் குழந்தையோ?
அந்தப் படத்திற்க்குக் கீழ் உள்ள வாசகங்களுக்குப்பொருத்தமாக ஏற்கனவே நான் சுட்டிய இந்தக் காணொளியை மீண்டும் சுட்டுவதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.
http://www.youtube.com/watch?v=A0M0EZ8T5J8
என்னைப் பொருத்தவரை எப்போதும் கூல்தான். அமலா பால் லுக்வுட்டுத்தான் கூல் ஆக்கவேண்டியது இல்லை. ஏனேனில் தெரியாததைத் தெரிந்து
கொள்ளவும்,
புரியாததைப் புரிந்து கொள்ளும் மன நிலையும் எப்போதும் உண்டு.ஏதாவது ஒரு தத்துவத்தினை சார்ந்து நின்று அதுவே மெய் கண்டது என்றும்
மற்றதெல்லாம் பொய் கண்டது என்றெலாம் சாதிக்க வேண்டிய நிர்பந்தம் எல்லாம் வைத்துக் கொள்ளாததால் கூல் ஒன்றும் போய் விடுவதில்லை.
அந்தப் பெண்ணுக்கு அந்த 'பெட்' செய்வதை கணவன் செய்தால் டைவர்ஸ் நிச்சயம்.'பெட்'ஐ என்ன செய்ய முடியும்? என்ன துணிச்சல் பாருங்கள்
முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி..../////
Tum Chalo to Hindustan Chale என்ற பாடலுடன் வரும் அந்தக் கானொளிக்கு நன்றி கிருஷ்ணன் சார். நான் முன்பே யாஹீ செய்தித்தளத்தில் பார்த்ததுதான். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
////Blogger minorwall said...
ReplyDelete///"Minor I am ready ..Are you ready ?"//
"இதென்ன சின்னப் புள்ளைத்தனமா இருக்கே?"/////
கொஞ்சிவரும் நெஞ்சில் இன்று
கோபம் ஏனைய்யா?
////Blogger ACE !! said...
ReplyDeleteகோள் சாரத்தில் குரு மேஷத்தில் இருப்பதால், துலா ராசிக்கு ஏழாம் இடத்து பார்வை கிடைக்காதா? அதனால் அங்கிருக்கும் சனியின் பாதிப்பு குறையுமா??
கேள்வி தவறெனில் மன்னிக்க../////
ஏன் இல்லை. அதெல்லாம் உண்டு. இது அஷ்டகவர்க்கத்திற்காக நடத்திய பாடம். துலா ராசியில் எத்தனை பரல்கள் - கன்னிராசியை விட பரல்கள் ஏறுமுகத்தில் உள்ளதா என்று மட்டும் பாருங்கள். ஏறுமுகத்தில் இருந்தால் பாதிப்பு இருக்காது!
//////Blogger minorwall said...
ReplyDelete//////ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது?////////
அமலா பால் படத்தைப் போட்டுட்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே வேணாம்..
இருந்தாலும் கொஞ்சம் சிரமங்கள் இருந்துச்சு..
'என் ராத்தூக்கம் போச்சே'ன்னு அமலாவின் சிவந்த விழியோரம் சொல்ல;
என்ன ஜெல் யூஸ் பண்ணினாங்களோ தெரியலே ஹேர்ஸ்டைல் செட் பண்ண?;
இப்படி எங்கெங்கோ மனமும் கண்களும் தாவினாலும் கடைசியில்
முன்னாடி வந்து விழுந்த கவனமதில் அந்த முடிக்கற்றைகள்தான் அந்த சிரமத்தைக் கொடுத்தன..
பாடத்துத் தலைப்பைப் அறியமுடியாமல் கடும் சிரமத்தை../////
சரி, இப்போதாவது பாடத்தின் தலைப்பு பிடிபட்டதா - பிடிபடவில்லையா மைனர்?
நீங்க எந்தத் தலைப்பைப் பத்திக் கேக்குறீங்க?புடவைத் தலைப்பைப் பத்திதானே?
ReplyDeleteவரவர கவனச்சிதறல் அதிகமா ஆயிடுச்சு..
(சனிப் பெயர்ச்சி ஆனாலும் 33 பரல்..ராசிக்கு ஆறாமிடம்..அதுனாலே சுகமான சனிப் பெயர்ச்சிதான்..அதான்..)
Dear Sir,
ReplyDeleteFor all planets, in Kocharam, do we have to use the same Astagavarga chart? Will the parals in individual varga chart for each planet help. Kindly clarify.
BALASUBRAMANIAN P.
RIYADH
குடியரசு தின வாழ்த்துக்கள், பொருத்தமான அழகிய படங்களை அனுப்பிய ஆனந்தமுருகனுக்கும், வெளியிட்ட வாத்தியாருக்கும் நன்றி.
ReplyDelete///Ananthamurugan said... யாருமே அமலா பாலுக்கு ஆதரவு இல்லையா.என்ன கொடுமை சார் இது.///
அடடா, என்ன இது ஆனந்தமுருகன்? சரி எனக்கு தெரிஞ்சத சொல்றேன்..."
"ஓ... விழிகளில் தாபம் படம் எடுத்தாடும்
ஓ... வேலையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன் "
என்ற பாட்டு நினைவுக்கு வருது இந்த பெண் கண்களைப் பார்த்தால். யாரவது "நீயா? படத்தை மீண்டும் எடுக்க விரும்பபினால் இந்த பெண் நல்ல தேர்வாக இருக்கக்கூடும்.
/// R.Srishobana said... தேமொழி சகோதரிக்கு நன்றிகள் பல...எள் என்றவுடன் எண்ணெயாகி விடுகிறார்...நன்றி///
எள் என்றவுடன் எண்ணெய்? நான் சிறந்த நிர்வாகியாகும் தகுதி இல்லாமல் இருக்கிறேனே :((
///SP.VR. SUBBAIYA said... கல்லெல்லாம் மாணிகக் கல்லாகுமா?
வாசகிகளெல்லாம் தேமொழி போலாகுமா?///
அச்சச்சோ...ஹி.ஹி.ஹீ . ஒரே சிரிப்பா வருது, நன்றி ஐயா.
///SP.VR. SUBBAIYA said... நான் சுட்டிய இந்தக் காணொளியை மீண்டும் சுட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
http://www.youtube.com/watch?v=A0M0EZ8T5J8 ////
KMRK ஐயா இந்த பாடலை யாராவது தமிழ் படுத்த முடியுமா? என்று கேட்டதாக நினைவு, யாரும் முயன்றார்களா தெரியவில்லை...
///minorwall said... நீங்க எந்தத் தலைப்பைப் பத்திக் கேக்குறீங்க?புடவைத் தலைப்பைப் பத்திதானே?
வரவர கவனச்சிதறல் அதிகமா ஆயிடுச்சு..////
மேற்கொண்டு பாடத்த படிங்க மைனர். இப்படி தலைப்பிலேயே ஸ்டக்கப் ஆனா எப்படி?
பாடமும் அதுக்கு ஏற்றாற்போல் படங்கள் அருமை . நல்ல புரியுது......ஆனால் என்ன அய்யா இப்படி சொல்லிடீங்க... இப்போதான் அஷ்ட்டாமது (நால்லாம் இடம்) முடிச்சினு நினைச்சேன். நான் கும்ப லக்னம் மிதுன ராசி , என்னோட துலாம் வீடு (ஒன்பதாம் இடம்) அஷ்டவர்க்கம் பலன் 19 . அப்போ நான் ரொம்ப கவனமா இருக்கணுமா? இப்போதான் சனி திசை முடிஞ்சி (புனர்பூசம்) புதன் திசை ஆரம்பம். நிறைய போராடி 30 வயசுக்குள்ள ஜாதகத்த கையல எடுத்தாச்சு. இது சனி பார்வை வைத்து மாறுபடுமா? எதாவது கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கை தரும் விஷயங்கள் எதாவது இருக்கா?
ReplyDeleteதனூர்ரசிக்காரரின் மின்னஞ்சல்:
ReplyDeleteஎனது உறுதிமொழிகள்
+++++++++++++++++++++++++++++++++++
என் முதல் வணக்கம்
எனக்கு முழு சுயராஜ்சம்
பெற்றுதந்த எம் முன்னோர்க்கு .
என் முதல் மரியாதை
என் மூச்சாம்
தாய் நாட்டின் கீதத்திற்கு.
என் முதல் அலங்காரம்
நான் வணங்கும்
என் தேசியகொடிக்கு
என் முதல் பனி
நான் வாழும்
என் கோயிலான தேசியத்திற்கு
என் முதல் பெருமை
என் பாரதம் ஒளிர
பல்லினமும் சேர்ந்ததற்கு
என் முதல் கடமை
என் உயிரின் உரிமையை
நாட்டின் ஒற்றுமைக்காக உயிலாக்குவது.
வாழ்க
தேசியதினம் .
-தனுசு-
@ஆசிரியருக்கும் மற்றும் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDelete@kalai,
லக்னாதிபதி துலா ராசியில் உச்ச இடத்தில் கோச்சாரத்தில் இருக்கும் போது ஏன் கவலைப்படவேண்டும். மேலும் கோச்சார சஞ்சார பலன்கள் வேதைக்கு உட்பட்டது. அப்படி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவும்.
குருவே வனக்கம்,
ReplyDeleteகும்ப லக்கினதுக்கு சனி, சுக்கிரன் இரன்டு கிரகமும் உச்சம். ஆனால் குரு 12ல் நீசம் அத்துடன் 12ல் சூரியன், புதன் இரன்டும் இருத்தால். இரு தார தோசம் அப்படித்தனே?
///(சனிப் பெயர்ச்சி ஆனாலும் 33 பரல்..ராசிக்கு ஆறாமிடம்..அதுனாலே சுகமான சனிப் பெயர்ச்சிதான்..அதான்..)////
ReplyDeleteராசிக்கு மூணாமிடம் வேற தலைவர் பார்வையில் பட்டுட்டு இருக்கே..எஃபெக்ட் இருக்காது?
//////SP.VR. SUBBAIYA said...
ReplyDelete/////Blogger Ananthamurugan said...
இந்த படம் பிடிக்கலையா யாருக்கும்???அஷ்டவர்கத்துடன் அமலா பால் அசத்தல்.
Ananthamurugan.G///////
எல்லோரும் சொல்வார்களா? வெட்கம் அல்லது சுயகெளரவம் தடுக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாமல் (ஜப்பானில் இருந்து) ஒருவர் பின்னூட்டம் இடுவார் பாருங்கள். பொறுத்திருங்கள்!///////
வெட்கம்..(இந்த காலத்துல மகளிருக்கே இதெல்லாம் தேவையில்லேன்னு ஆயிடுச்சு..)
சுயகெளரவம்??? இது எதுக்கு இங்கே சொல்லியிருகீங்கன்னு புரியலை..
இருந்தாலும் இந்த ரெண்டையும் பத்தியெல்லாம் கவலைப் படாமல் போலித்தனம் எதுவும் இல்லாமல்
'லா' காலேஜ் மேட்டர், அமலா பால் என்று தொடர்ந்து பதிவிட்டு எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும்
'என்றும் பதினாறு' கட்சியின் கொள்கை பரப்பிலே தீவிரமாக உலா வந்து கொண்டிருக்கும் வாத்தியாரைப் பாராட்டும் இதே வேளையில்
'எல்லாம் முடிஞ்சு போச்சு' எதிர்கட்சியின் அவதூறுப் பிரச்சாரங்களை எதிகொள்வோம் வாரீர் என்று இளைஞரணியினரை வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு இந்த குடியரசு தின நன்னாளில் இளைஞரணி சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
ஜோதிடத்தில் பலன் பார்ப்பதற்கு இருக்கும் பல விதிகளில் இதுவும் ஒன்று. அதை விளக்கிய விதம் நன்று.
ReplyDeleteதாங்கள் சனி தசையிலிருந்து தப்பி (அல்லது கடந்து) வந்து விட்டீர்கள். எனக்கு இப்போதுதான் ஆரம்ப கட்டம். 5+ வருடம் மட்டும் ஓடி இருக்கிறது. 11ல் இருக்கும் கேது பகவானின் புத்தி இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வந்தவுடனேயே தான் இருக்கும் ஸ்தானத்திற்குரிய பலனான நல்ல பண வரத்தை தர தவறவில்லை.
////தேமொழி said...
ReplyDeleteமேற்கொண்டு பாடத்த படிங்க மைனர். இப்படி தலைப்பிலேயே ஸ்டக்கப் ஆனா எப்படி?//////
பாடத்தைத்தானே?..ம்..படிச்சுடுவோம்..
தங்கள் சித்தம்..
என் பாக்கியம்..தலைவி..
@sriganesh ...!ஓ நன்றி சகோதரா..! அஷ்டவர்க்கம் பரல்கள் பார்த்து கொஞ்சம் பயந்து விட்டேன் . கடவுள் நம்ம ஜாதகத்துல , ஒன்னு பலமா இருக்குனு நினைச்சி சந்தோஷ பட முடியமா அங்காங்க ஆப்பு வச்சி இருkகாரு, அதே நேரம் ஒன்ன பார்த்து சோர்ந்து போகாம இருக்க , கொஞ்சம் கருணையும் காட்டி இருக்காரு .......வழி துணையா அவர் வரணும்......
ReplyDelete/////Blogger minorwall said...
ReplyDeleteநீங்க எந்தத் தலைப்பைப் பத்திக் கேக்குறீங்க? புடவைத் தலைப்பைப் பத்திதானே?
வரவர கவனச்சிதறல் அதிகமா ஆயிடுச்சு..
(சனிப் பெயர்ச்சி ஆனாலும் 33 பரல்..ராசிக்கு ஆறாமிடம்..அதுனாலே சுகமான சனிப் பெயர்ச்சிதான்..அதான்..)/////
ஜப்பானில் ஏது சாமி புடவைத் தலைப்பு?
//////Blogger Balasubramanian Pulicat said...
ReplyDeleteDear Sir,
For all planets, in Kocharam, do we have to use the same Astagavarga chart? Will the parals in individual varga chart for each planet help. Kindly clarify.
BALASUBRAMANIAN P.
RIYADH/////
கோள்சாரப் பலன்களுக்கு,ஏனைய மற்ற கிரகங்களுக்கு சுயவர்க்க அட்டவனைதான் முக்கியமானது பாலா!
/////Blogger தேமொழி said...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள், பொருத்தமான அழகிய படங்களை அனுப்பிய ஆனந்தமுருகனுக்கும், வெளியிட்ட வாத்தியாருக்கும் நன்றி.
///Ananthamurugan said... யாருமே அமலா பாலுக்கு ஆதரவு இல்லையா.என்ன கொடுமை சார் இது.///
அடடா, என்ன இது ஆனந்தமுருகன்? சரி எனக்கு தெரிஞ்சத சொல்றேன்..."
"ஓ... விழிகளில் தாபம் படம் எடுத்தாடும்
ஓ... வேலையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன் "
என்ற பாட்டு நினைவுக்கு வருது இந்த பெண் கண்களைப் பார்த்தால். யாரவது "நீயா? படத்தை மீண்டும் எடுக்க விரும்பபினால் இந்த பெண் நல்ல தேர்வாக இருக்கக்கூடும்.
/// R.Srishobana said... தேமொழி சகோதரிக்கு நன்றிகள் பல...எள் என்றவுடன் எண்ணெயாகி விடுகிறார்...நன்றி///
எள் என்றவுடன் எண்ணெய்? நான் சிறந்த நிர்வாகியாகும் தகுதி இல்லாமல் இருக்கிறேனே :((
///SP.VR. SUBBAIYA said... கல்லெல்லாம் மாணிகக் கல்லாகுமா?
வாசகிகளெல்லாம் தேமொழி போலாகுமா?///
அச்சச்சோ...ஹி.ஹி.ஹீ . ஒரே சிரிப்பா வருது, நன்றி ஐயா.
///SP.VR. SUBBAIYA said... நான் சுட்டிய இந்தக் காணொளியை மீண்டும் சுட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
http://www.youtube.com/watch?v=A0M0EZ8T5J8 ////
KMRK ஐயா இந்த பாடலை யாராவது தமிழ் படுத்த முடியுமா? என்று கேட்டதாக நினைவு, யாரும் முயன்றார்களா தெரியவில்லை...
///minorwall said... நீங்க எந்தத் தலைப்பைப் பத்திக் கேக்குறீங்க?புடவைத் தலைப்பைப் பத்திதானே?
வரவர கவனச்சிதறல் அதிகமா ஆயிடுச்சு..////
மேற்கொண்டு பாடத்தைப் படிங்க மைனர். இப்படி தலைப்பிலேயே ஸ்டக்கப் ஆனா எப்படி?/////
மைனர் ஸ்டக்கப்பானாலும், உடனே ரெகவராகிவிடுவார்! அதுதான் அவருடைய ஸ்பெஷலிட்டி!
////Blogger Kalai said...
ReplyDeleteபாடமும் அதுக்கு ஏற்றாற்போல் படங்கள் அருமை . நல்ல புரியுது......ஆனால் என்ன அய்யா இப்படி சொல்லிடீங்க... இப்போதான் அஷ்ட்டாமது (நால்லாம் இடம்) முடிச்சினு நினைச்சேன். நான் கும்ப லக்னம் மிதுன ராசி , என்னோட துலாம் வீடு (ஒன்பதாம் இடம்) அஷ்டவர்க்கம் பலன் 19 . அப்போ நான் ரொம்ப கவனமா இருக்கணுமா? இப்போதான் சனி திசை முடிஞ்சி (புனர்பூசம்) புதன் திசை ஆரம்பம். நிறைய போராடி 30 வயசுக்குள்ள ஜாதகத்த கையல எடுத்தாச்சு. இது சனி பார்வை வைத்து மாறுபடுமா? எதாவது கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கை தரும் விஷயங்கள் எதாவது இருக்கா?/////
எல்லோருக்கும் மொத்தப் பரல் 337 மட்டுமே. ஒபாமாவுக்கும் அதுதான். உங்களுக்கும் அதுதான். தையமாக இருங்கள்!
///////Blogger SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteதனூர்ரசிக்காரரின் மின்னஞ்சல்:
எனது உறுதிமொழிகள் +++++++++++++++++++++++++++++++++++
என் முதல் வணக்கம்
எனக்கு முழு சுயராஜ்சம்
பெற்றுதந்த எம் முன்னோர்க்கு .
என் முதல் மரியாதை
என் மூச்சாம்
தாய் நாட்டின் கீதத்திற்கு.
என் முதல் அலங்காரம்
நான் வணங்கும்
என் தேசியகொடிக்கு
என் முதல் பனி
நான் வாழும்
என் கோயிலான தேசியத்திற்கு
என் முதல் பெருமை
என் பாரதம் ஒளிர
பல்லினமும் சேர்ந்ததற்கு
என் முதல் கடமை
என் உயிரின் உரிமையை
நாட்டின் ஒற்றுமைக்காக உயிலாக்குவது.
வாழ்க
தேசியதினம் .
-தனுசு-////////
நல்லது. உங்களின் நாட்டுப்பற்றிற்குப் பாராட்டுக்கள்!
/////Blogger sriganeshh said...
ReplyDelete@ஆசிரியருக்கும் மற்றும் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
@kalai,
லக்னாதிபதி துலா ராசியில் உச்ச இடத்தில் கோச்சாரத்தில் இருக்கும் போது ஏன் கவலைப்படவேண்டும். மேலும் கோச்சார சஞ்சார பலன்கள் வேதைக்கு உட்பட்டது. அப்படி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவும்./////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!
/////Blogger Jeyram said...
ReplyDeleteகுருவே வனக்கம்,
கும்ப லக்கினதுக்கு சனி, சுக்கிரன் இரன்டு கிரகமும் உச்சம். ஆனால் குரு 12ல் நீசம் அத்துடன் 12ல் சூரியன், புதன் இரன்டும் இருத்தால். இரு தார தோசம் அப்படித்தானே?/////
யாருக்காக இப்படிக்கேட்கிறீர்கள்? உங்களுக்கு என்றால், மகளிர் காவல் நிலையத்தை மனதில் வைத்துக்கொண்டு கேளுங்கள்
/////Blogger minorwall said...
ReplyDelete///(சனிப் பெயர்ச்சி ஆனாலும் 33 பரல்..ராசிக்கு ஆறாமிடம்..அதுனாலே சுகமான சனிப் பெயர்ச்சிதான்..அதான்..)////
ராசிக்கு மூணாமிடம் வேற தலைவர் பார்வையில் பட்டுட்டு இருக்கே..எஃபெக்ட் இருக்காது?/////
ச்சியர்ஸ்:-)))))
////Blogger minorwall said...
ReplyDelete//////SP.VR. SUBBAIYA said...
/////Blogger Ananthamurugan said...
இந்த படம் பிடிக்கலையா யாருக்கும்???அஷ்டவர்கத்துடன் அமலா பால் அசத்தல்.
Ananthamurugan.G///////
எல்லோரும் சொல்வார்களா? வெட்கம் அல்லது சுயகெளரவம் தடுக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாமல் (ஜப்பானில் இருந்து) ஒருவர் பின்னூட்டம்
இடுவார் பாருங்கள். பொறுத்திருங்கள்!///////
வெட்கம்..(இந்த காலத்துல மகளிருக்கே இதெல்லாம் தேவையில்லேன்னு ஆயிடுச்சு..)
சுயகெளரவம்??? இது எதுக்கு இங்கே சொல்லியிருகீங்கன்னு புரியலை..
இருந்தாலும் இந்த ரெண்டையும் பத்தியெல்லாம் கவலைப் படாமல் போலித்தனம் எதுவும் இல்லாமல்
'லா' காலேஜ் மேட்டர், அமலா பால் என்று தொடர்ந்து பதிவிட்டு எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும்
'என்றும் பதினாறு' கட்சியின் கொள்கை பரப்பிலே தீவிரமாக உலா வந்து கொண்டிருக்கும் வாத்தியாரைப் பாராட்டும் இதே வேளையில்
'எல்லாம் முடிஞ்சு போச்சு' எதிர்கட்சியின் அவதூறுப் பிரச்சாரங்களை எதிகொள்வோம் வாரீர் என்று இளைஞரணியினரை வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு இந்த குடியரசு தின நன்னாளில் இளைஞரணி சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..//////
எதிர்கட்சித் தலைவிக்கு இப்போது கம்பெனி சர்வரின் குடைச்சல் பெரிய குடைச்சலாக இருக்கிறது. அவரால் நமது வலைப்பூவைப் பார்க்க முடியாத நிலைமை.
அடுத்த குருப் பெயர்ச்சிக்குள் சரியாகிவிடும். அதுவரை உங்கள் காட்டில் மழைதான்.
அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா
அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு எதாச்சு ஏதேதோ ஆயாச்சு
//////Blogger ananth said...
ReplyDeleteஜோதிடத்தில் பலன் பார்ப்பதற்கு இருக்கும் பல விதிகளில் இதுவும் ஒன்று. அதை விளக்கிய விதம் நன்று.
தாங்கள் சனி தசையிலிருந்து தப்பி (அல்லது கடந்து) வந்து விட்டீர்கள். எனக்கு இப்போதுதான் ஆரம்ப கட்டம். 5+ வருடம் மட்டும் ஓடி இருக்கிறது. 11ல்
இருக்கும் கேது பகவானின் புத்தி இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வந்தவுடனேயே தான் இருக்கும் ஸ்தானத்திற்குரிய பலனான நல்ல பண வரத்தை தர தவறவில்லை.////
சனிதிசை என்றாலும் sub period களில் பலன்கள் மாறிவிடும். நல்லது நடக்க வாழ்த்துக்கள்!
/////Blogger minorwall said...
ReplyDelete////தேமொழி said...
மேற்கொண்டு பாடத்த படிங்க மைனர். இப்படி தலைப்பிலேயே ஸ்டக்கப் ஆனா எப்படி?////// பாடத்தைத்தானே?..ம்..படிச்சுடுவோம்.. தங்கள் சித்தம்..
என் பாக்கியம்..தலைவி../////
தலைவி என்றால் எதற்குத்தோது? மம்தாவா, மாயாவதியா, ஜெயாஅம்மாவா, சோனியாஅம்மாவா?
/////Blogger Kalai said...
ReplyDelete@sriganesh ...!ஓ நன்றி சகோதரா..! அஷ்டவர்க்கம் பரல்கள் பார்த்து கொஞ்சம் பயந்து விட்டேன் . கடவுள் நம்ம ஜாதகத்துல , ஒன்னு பலமா இருக்குனு நினைச்சி சந்தோஷ பட முடியமா அங்காங்க ஆப்பு வச்சி இருkகாரு, அதே நேரம் ஒன்ன பார்த்து சோர்ந்து போகாம இருக்க , கொஞ்சம் கருணையும் காட்டி இருக்காரு .......வழித் துணையா அவர் வரணும்......//////
தன் பக்தர்களுக்கு அவர் எப்போதுமே துணையாக வருவார். He will give standing power
This comment has been removed by the author.
ReplyDelete