மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.1.12

Astrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்!


Astrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்!

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 6
திருவோணம்

27 நட்சத்திரங்களில், திரு என்னும் அடைச் சொல்லுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம்

திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம். ஆருத்திரனுக்கு (Arudra) உகந்த நட்சத்திரம். ருத்திரன் என்னும் சொல் ஆருத்திரன் ஆகியுள்ளது.
ருத்திரன் என்றால் தீய சக்திகளை அழிப்பவன் என்று பொருள்படும்.  
Rudra means the destroyer of evil forces

திரு என்றால் இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை. a prefix added to holy or auspicious objects etc உதாரணம்: திருக்கோவில், திருவடி, திருமாங்கல்யம். இன்னொன்றும் உண்டு: மதிப்புத் தரும் விதமாக ஒருவரின் பெயருக்கு முன் இடப்படும் அடை. ருத்திர தரிசனத்தைத்தான் நாம் ஆருத்ரா தரிசனம் என்று கொண்டாடுகிறோம்.

அதுபோல திருவோணம் எம்பெருமான் ஸ்ரீஹரியின் (விஷ்ணுவின்) நட்சத்திரம். பகவான் தன் வாமன அவதாரத்தை திருவோண நட்சத்திரத்தன்று காட்டி  மக்களுக்கு அருள் பாலித்தார். பகவான் ஸ்ரீனிவாச பெருமாள் தன் தேவியை நாடி ஏழுமலையில் தன் திருவடியை வைத்ததும் ஒரு திருவோண நந்நாளில்தான் திருமலையில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோத்சவ விழா திருவோண நாளில்தான் நிறைவு செய்யப்ப்டுகிறது.
----------------------------------------------------------------------
இதைக் கேட்டவுடன் திருவோண நட்சத்திரக்காரகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்.

எல்லா நட்சத்திரங்களும் சமமானவைதான். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், உங்களுடைய கர்ம வினைப்படி, ஜாதகப்படிதான் வாழ்க்கை

அமையும். நல்ல நட்சத்திரம் என்பதற்காகக் கிரகங்கள் விட்டு வைக்காது. உரிய பலன்களைக் கொடுத்தே தீரும். நல்லதும் கிடைக்கும். தீமைகளும் உண்டாகும்.
நன்மை தீமைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இரவு பகலைப் போல!

நான் திருவோண நட்சத்திரக்காரன்தான். அதற்காக சனி விட்டு வைக்க வில்லை. தன்னுடைய மகா திசையில் புரட்டி எடுத்துவிட்டுப் போனான். அதற்கு அடுத்து  வந்த புதன் மகா திசையில்தான் நிமிர்ந்து உட்கார முடிந்தது. அதை எல்லாம் பின்னொரு நாள் விவரிக்கிறேன்
---------------------------------------------------------------------
திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பார்கள். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். மற்றவர்களைப்  புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பார்கள். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பார்கள் (இது மட்டும் ஜாதகத்தை  வைத்து மாறுபடும்)

இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலைகளில் தேற்ச்சியுற்றவர்களாக இருப்பார்கள் அல்லது ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். உண்மை யானவர்களாக  இருப்பார்கள். ஸ்திரமான மனதுடையவர்களாக இருப்பார்கள். அதிக நண்பர்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிரிகளைப் பந்தாடிவிடுவார்கள். அறிவு  ஜீவிகளாக இருப்பார்கள். பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

தங்கள் உறவுகளால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே பேச்சுத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.

They will be financially successful and lead a materially comfortable life. Their organizational and leadership skills are well developed, and they may do  well in business. They will make a good manager or project leader. They also like to spend a lot of time working for charitable organizations. They need  to be careful with their finances or they may bankrupt themselves. Careers that will suits them: Engineering, management related jobs, charitable and  social institutions etc. They will be happiest if they could work for charitable or social work organizations.
---------------------------------------------------------------------
திருவோண நட்சத்திரத்திற்கான கோவில்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் கிராமம், காவேரிப்பாக்கம் வட்டம்

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்னும்
கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் குடிகொண்டுள்ளார்.

வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 4 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் எனக் கேட்டுச் செல்வது நல்லது!

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை, மாலை 4.30மணி முதல் - இரவு 7.30 மணி வரை

ஸ்தல வரலாறு:

ஒருமுறை புண்டரீக மகரிஷி, பெருமாள் கோவில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் ஸ்தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர்  வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை  மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு  கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து, ரிஷியே ! ”உங்களால் திருப்பாற்கடல்  சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும்  இங்கு காண்பித்த தால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்”, என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால்  (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். அவருடன், அலர்மேலுமங்கை தாயார் அருள் அங்கே அருள் பாலிக்கின்றார்.

சிறப்பம்சம்:

சந்திரபகவான், சாபமொன்றினால், இருளடைந்து இருந்தார். அதனால், அவரது மனைவியரில் ஒருத்தியான, திருவோண நட்சத்திரதேவி மிகவும் வருத்தமுற்றாள். இத்தலத்தின் பெருமையை அறிந்த அவள், இங்குள்ள பெருமாளை வேண்டித் தவமிருந்தாள். அவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவரது தோஷத்தைப் போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர ஸ்தலமானது.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அல்லது மூன்றாம் பிறைநாளிலோ இத்தலப் பெருமாளுக்கு அபிஷேக
ஆராதனை செய்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். வேண்டியது கிடைக்கும். வேண்டியது கிடைத்தால் தொல்லைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வி அறிவு
வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், அந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது நன்மை பயக்கும்!

ஒருமுறை சென்று வாருங்கள். உரிய பலனைப் பெற்று வாருங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------




வாழ்க வளமுடன்!

19 comments:

  1. ஐயா காலை வணக்கம்.

    பல நாட்கள் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நட்சத்திரக் கோயில்கள்!

    பதிவிற்கு நன்றி.

    -Sathish K

    ReplyDelete
  2. பதிவில் உங்ள நட்சத்திரத்தை பார்த்தும்
    பட்டென மனதில் வந்த பாடல் இது தான்

    சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் "திரு ஓணம்"
    சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் "திரு ஓணம்"
    (தேவை கருதி முழு பாடலை தரவில்லை)

    வள்ளுவன் போல் நம் காலத்தில்
    வாழ்ந்த பாரதி போல்

    இறைவனை இசையால் காண வைத்த
    இசைஞானி இளையராஜா

    இசையை சுவாசிக்கும் பலர் போல்
    இன்று உங்களுடன் அய்யரும்

    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல் வாரி தருகிறோம்

    ReplyDelete
  3. Ayya,

    I am very happy that you have started back Nachstra lessons.

    Student,
    Ravi

    ReplyDelete
  4. Respected Sir,

    stars are shining after short break ( due to Markazhi pani).... Hope it will shine continuously....

    great service......

    With luv,
    Ravi

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
    திருவோணம் நட்சத்திரத்தினர் சென்று
    வழிபாடு செய்து நன்மை
    அடைவதற்கு ஏற்ற வகையில்--
    திருப்பாற்கடல்,பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
    ஸ்தல வரலாறு, கோவிலின் சிறப்பம்சம் மற்றும் அங்கு
    சென்று வருவதற்கு ஏற்றவாறு வழி விபரங்களையும்
    சிறப்பாக கொடுத்துள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  6. ///27 நட்சத்திரங்களில், திரு என்னும் அடைச் சொல்லுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம்///
    எங்கள் வீட்டில் இரண்டு திருக்களும் உண்டு.

    ///பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள்///
    உண்மை ...மகன் பெருந்தன்மையானவன்தான். மற்ற பிற குண நலன்கள் அவன் நன்றாக வளர்ந்ததும் தெரியும் என நினைக்கிறேன்.

    ///முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார்.///
    நாட்டையும் மக்களையும் ஒருமைப் படுத்தவேண்டி மக்கள் மிக முயன்று, கடவுள்களையும் ஒருவருக்கொருவர் உறவினர்களாக்கி நிறையவே பாடுபடிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. என் தந்தையார் திருவோணம்தான்.தங்கள் பதிவில் கூறியிருந்ததைப் போலவே தன் வாழ்க்கை முழுவதையுமே பொதுத் தொண்டராகவே கழித்தார்.

    என் லண்டன் பேத்தி திருவோணம்தான். அவளுடைய தமிழ்ப்பாடலை இங்கே காணுங்கள்.

    http://www.youtube.com/watch?v=IGlX-BYz6Jo

    ReplyDelete
  8. ///kmr.krishnan said...
    என் லண்டன் பேத்தி திருவோணம்தான். அவளுடைய தமிழ்ப்பாடலை இங்கே காணுங்கள்.///

    பக்குவமாய் பல கதைகள் சொல்லிடுவார் தாத்தா!!
    ஆஹா.. பேத்திக்கு தாத்தாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கிறதே

    ReplyDelete
  9. ////Blogger Sathish K said...
    ஐயா காலை வணக்கம்.
    பல நாட்கள் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நட்சத்திரக் கோயில்கள்!
    பதிவிற்கு நன்றி.
    -Sathish K//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger eswari sekar said...
    vanakam/////

    சும்மா வணக்கம் மட்டும்தானா? பதிவைப் படிக்கவில்லையா சகோதரி?

    ReplyDelete
  11. /////Blogger iyer said...
    பதிவில் உங்ள நட்சத்திரத்தை பார்த்தும்
    பட்டென மனதில் வந்த பாடல் இது தான்
    சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் "திரு ஓணம்"
    சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் "திரு ஓணம்"
    (தேவை கருதி முழு பாடலை தரவில்லை)
    வள்ளுவன் போல் நம் காலத்தில்
    வாழ்ந்த பாரதி போல்
    இறைவனை இசையால் காண வைத்த
    இசைஞானி இளையராஜா
    இசையை சுவாசிக்கும் பலர் போல்
    இன்று உங்களுடன் அய்யரும்
    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல் வாரி தருகிறோம்/////

    உங்கள் மனதில் பட்டென்று பாடல் வராமல் இருக்குமா? நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  12. /////Blogger Ravichandran said...
    Ayya,
    I am very happy that you have started back Nachstra lessons.
    Student,
    Ravi/////

    நல்லது. உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    stars are shining after short break ( due to Markazhi pani).... Hope it will shine continuously....
    great service......
    With luv,
    Ravi/////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
    திருவோணம் நட்சத்திரத்தினர் சென்று
    வழிபாடு செய்து நன்மை
    அடைவதற்கு ஏற்ற வகையில்--
    திருப்பாற்கடல்,பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
    ஸ்தல வரலாறு, கோவிலின் சிறப்பம்சம் மற்றும் அங்கு
    சென்று வருவதற்கு ஏற்றவாறு வழி விபரங்களையும்
    சிறப்பாக கொடுத்துள்ளீர்கள். நன்றி!/////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. //////Blogger தேமொழி said...
    ///27 நட்சத்திரங்களில், திரு என்னும் அடைச் சொல்லுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம்///
    எங்கள் வீட்டில் இரண்டு திருக்களும் உண்டு.
    ///பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள்///
    உண்மை ...மகன் பெருந்தன்மையானவன்தான். மற்ற பிற குண நலன்கள் அவன் நன்றாக வளர்ந்ததும் தெரியும் என நினைக்கிறேன்.
    ///முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம்
    தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார்.///
    நாட்டையும் மக்களையும் ஒருமைப் படுத்தவேண்டி மக்கள் மிக முயன்று, கடவுள்களையும் ஒருவருக்கொருவர் உறவினர்களாக்கி நிறையவே பாடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
    பதிவிற்கு நன்றி ஐயா./////

    கடவுள் ஒருவரே. நாம்தான் அவரைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்!

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    என் தந்தையார் திருவோணம்தான்.தங்கள் பதிவில் கூறியிருந்ததைப் போலவே தன் வாழ்க்கை முழுவதையுமே பொதுத் தொண்டராகவே கழித்தார்.
    என் லண்டன் பேத்தி திருவோணம்தான். அவளுடைய தமிழ்ப்பாடலை இங்கே காணுங்கள்.
    http://www.youtube.com/watch?v=IGlX-BYz6Jo/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. /////Blogger தேமொழி said...
    ///kmr.krishnan said...
    என் லண்டன் பேத்தி திருவோணம்தான். அவளுடைய தமிழ்ப்பாடலை இங்கே காணுங்கள்.///
    பக்குவமாய் பல கதைகள் சொல்லிடுவார் தாத்தா!!
    ஆஹா.. பேத்திக்கு தாத்தாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கிறதே//////

    தெரியாமல் போகுமா? தாத்தா சொல்லைத் தட்டாதே!

    ReplyDelete
  18. திருவோணத்தின் நறுமணத்தை
    சீரும் சிறப்புமாக தெரிவித்த பதிவு...

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com