Astrology இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
முண்டேன் என்றால் என்னவென்று தெரியுமா?
முண்டேன் என்ற சொல் ஏதோ வட இந்தியக் கிராமத்தில் இருக்கும் தேவதையின் பெயர் என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
முண்டேன் என்ற சொல் நம்ம கிராமத்துத் தேவதையான முண்டக்கன்னி அம்மன் போன்று தெய்வத்தின் பெயர் அல்ல! அதைவிட மேலானது என்று சொல்ல முடியாது. அப்புறம் தெய்வக்குத்தம் வந்துவிடும். ஆனால் அதைவிட முக்கியமானது என்று சொல்லலாம்.
நமது செம்மழித் தமிழைப்போன்ற இன்னொரு செம்மொழியான லத்தீன் மொழியில் இருந்து வந்த சொல். முண்டூஸ் என்றால் உலகம் என்று பொருள்படும்
முண்டேனின் வேர்ச்சொல் மண்ட் என்ற சொல்லாகும். clean area or area in order which is an area enlightened by the Sun and visible to human eyes. என்ற அர்த்தத்தையும் கொடுக்கும் சொல்லாகும். உலகம் என்பது அழகானது. அரிய ஆபரணம் போன்றது அது சூரிய ஒளியால் தகதகக்கிறது. பலரையும் மகிழச் செய்கிறது என்று நம்பினார்கள் ஆதி மக்கள். அதனால்தான் உலகத்தைப் பற்றிய ஜோதிடத்திற்கு முண்டேன் ஜோதிடம் என்ற பெயர் வைத்தார்கள்.
முண்டேன் ஜோதிடம் என்பது உலக நிகழ்வுகளையும், உலக நடப்புக்களையும், இயக்கங்களையும் அறிந்து கொள்ள உதவும் ஜோதிடமாகும். Mundane astrology is the application of astrology to world affairs and world events அதைப்பற்றித் தொடர் பாடம் நடத்தலாம் என்று உள்ளேன். இப்போது அல்ல. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து - அதுவும் நீங்கள் விருப்பட்டால்! அதற்கு நடுவில் (இடையில்) இந்திய ஜோதிடத்தின் முக்கியமான பகுதிகள், பிரிவுகள் எல்லாம் பாடங்களாக நடத்தப்படவுள்ளன.
பிரம்மாண்டமான ஜோதிடத்தின் ஒரு பிரிவுதான் இந்த முண்டேன் ஜோதிடம். ஜோதிடத்தில் இன்னும் பல பிரிவுகள் உள்ளன. அதையெல்லாம் இப்போதே விவரித்து உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. பின்னால் பார்த்துக்கொள்வோம். பொறுமையாக இருங்கள்.
நம் வகுப்பறைக்கு வரும் நியூஜெர்சி நிம்மி முதல் உள்நாட்டில் காரியாபட்டி கண்ணுச்சாமி வரை இந்திய ஜோதிடத்தின் அடிப்படைப் பாடங்களைப் புரிந்து கொண்டு தேரிய பின்பு, அதையெல்லாம் கையில் எடுப்போம்.
உலகத்தில், குறிப்பாக ஒரு நாட்டில் ஏற்படும் அதிரடி மாற்றங்களைத் தெரிந்து கொள்ள அந்த ஜோதிடம் உதவும். நாட்டில் மாற்றங்கள் இரண்டு விதமாக ஏற்படும். அரசியலால், அரசியல்வாதிகளால் ஆட்சியாளர்களால் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரை. பூகம்பம், சுனாமி, கடும் புயல்கள் போன்ற இயற்கைச் சீரழிவுகளால் ஏற்படும் மாற்றங்கள் இரண்டாவது வகை! அவைகளைத் தெரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த முண்டக்கன்னி ஜோதிடம்... மன்னிக்கவும் இந்த முண்டேன் ஜோதிடம்.
அரசியல் ஜோதிடம் இந்த முண்டேன் ஜோதிடத்தின் ஒரு பிரிவு. அரசு, அரசியல், அரசியல்வாதிகள், குறிப்பாக ஆட்சியாளர்களைப் பற்றியது
முண்டேன் ஜோதிடத்தின் உட்பகுதியை, அதாவது அதன் காரகத்துவங்களை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள். மனிதர்களால் ஏற்படும் அழிவுகள்.
மனிதர்களால் எற்படும் அழிவிற்கு உதாரணமாக இரண்டாம் உலக யுத்தத்தைச் சொல்லாம். ஹிட்லர், முசோலினி போற சர்வாதிகாரிகளால் ஏற்பட்ட பெரும் அழிவுகளைச் சொல்லலாம். இயற்கையால் ஏற்படும் அழிவுகளுக்கு கடலுக்குள் மூழ்கிய பூம்புகார், தனுஷ்கோடி போன்ற நகரங்களைச் சொல்லலாம்.
முண்டக்கன்னி ஜோதிடத்திற்கு (சொல்வதற்கு எவ்வளவு வசதியாக இருக்கிறது பாருங்கள்) முதலில் தேசத்தின் ஜாதகம் வேண்டும். உதாரணத்திற்கு நம் நாட்டின் ஜாதகம் என்றால், 15.08.1947ஆம் தேதி நடுநிசியில் நாம் சுதந்திரம் பெற்ற நேரத்தை வைத்து நமது நாட்டின் ஜாதகத்தைக் கணித்துகொள்ளலாம்.
கணினி மென்பொருளில்,
பெயர்: இந்தியா
பிறந்த இடம்: தில்லி
பிறந்த நாள்: 15.08.1947
பிறந்த நேரம். 00.01
என்று நீங்கள் உள்ளிட்டால் தேசத்தின் ஜாதகம் உங்கள் கைக்கு வந்து விடும்
இதுபோன்று மற்ற நாடுகளுக்கும் ஜாதகம் உள்ளது. அதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். ஒரேநாளில் தமிழில் வெளியான அத்தனை படங்களையும் பார்க்க முடியுமா என்ன? அது போலத்தான் அனைத்தையும் ஒரே நாளில் தெரிந்துகொள்ள முடியாது.
இந்த மு.க ஜோதிடத்தில் இரண்டு செயல்பாடுகள் உள்ளன. அதாவது இரண்டு மேட்டர்கள் உள்ளன. நம் ஜப்பான் மைனரின் அகராதியில் உள்ள மேட்டர் அல்ல அது. அவ(ள்) சரியான மேட்டர்டா என்று நீங்கள் விமர்ச்சிக்கும் மேட்டரல்ல அது. இது உருப்படியான, நேரடியான மேட்டர்.
இந்த மு.க ஜோதிடம் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றை அலசலாம். சரித்திர நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்க்கலாம். சாம்ராஜ்யங்களின் எழுச்சிகளையும், வீழ்ச்சியைகளையும் பார்க்கலாம். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யாவில் ஜார் மன்னர் காலத்தில் நடந்த ரஷ்யப் புரட்சி போன்ற தேசிய எழுச்சிகளைப் பார்க்கலாம்.
ராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் காலடி வைத்த நேரம் தெரிந்தால், ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் நாம் மாட்டிக்கொண்டு முழித்த வரலாற்றை அலசலாம்.
அதேபோல எதிர்காலத்தில் நாட்டில் என்ன நடக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டலாம்.
எதிர்காலத்தில் ஒரு நாட்டில் என்ன நடக்கும் என்பதை எந்தக் கொம்பனாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. விதி விடாது. ஒரு ஜோதிடன் கோடிட்டுக்காட்டலாம்.
An astrologer only can indicate what is going to take place. He should not certainly say what will happen. It is the first rule of astrology
என்ன நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்வதற்கு ஒருவர் இருக்கிறார். கடவுள் என்பது அந்த அன்பரின் பெயர்.
(தொடரும்)
என்னடா வாத்தி (யார்) தொடரும் என்று போட்டு விட்டாரே என்று நினைக்க வேண்டாம். இதன் அடுத்த இரண்டு பகுதிகள் நாளையும், நாளை மறுநாளும் வெளியாகும். பொறுத்திருங்கள்.
Paracetamol மாத்திரையை வேளைக்கு ஒன்றுதான் சாப்பிட வேண்டும். பத்து மாத்திரைகளை ஒன்றாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? ஜோதிடப் பாடங்களும் அப்படித்தான். ஒரேயடியாக எழுதித் தள்ளுவதற்கு எனக்கும் உரிய நேரம் கிடைக்க வேண்டாமா? புரிந்துகொள்ளுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
பாசமிகு வாத்தியார் அவர்களுக்கு
ReplyDeleteவணக்கம்....
வாத்தியாரின் இன்றைய வகுப்பு பதிவு நன்று
தாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியாவை பற்றிய ஜாதக அலசல்
அய்யருக்கு ஏற்புடையதல்ல..
அப்படி சொல்லும் உரிமை தந்தமைக்கு நன்றி..
இந்தியா பழமையாதல்ல..
இப்போதும் அது தொன்மையானது..
(பழமை வேறு தொன்மை வேறு)
நீங்கள் குறிப்பிட்டபடி 15,08,47
தில்லி என சொல்வது ...
பிறந்த ஒருவன் நெஞ்சக நோயினால் மரணவாயிலில் எட்டிப்பார்த்து வந்து
பின் வீட்டிற்கு வரும் தேதியை பிறந்த தேதி நேரமாக கொள்ளுதல் போல் அல்லவா இருக்கும்..
தில்லிக்கே அண்மையில் சில மாதத்திற்கு முன்னர் தான் 100 ஆண்டு விழா கொண்டாடப்பட்டது..
ஒரு சமனத்துறவி தனது இறந்த உடலை எத்தனை தொலைவு எடுத்துச் செல்கிறீர்களோ
அத்தனை தொலைவு தில்லி விரியும் என்றார்.அந்தப்படியே.. இன்று
மெஹ்ருலி வரை தில்லி உள்ளது.. என சொல்லும் வரலாறும் உண்டு..
தேசீயமும் ஆன்மீகமும் நமது
இரண்டு கண்கள் என்றே பழக்கப்பட்டவர்கள் நாம்..
கடவுளுக்கு ஜாதகம் போடுதலா..
வேண்டாம்மய்யா விளையாட்டு..
விளையாட்டினால் வரும்
விபரீதம் வேறுவிதமாக இருக்கும்..
"ஏதுக்கலாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதிக்க வேண்டா "
என்றே ஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்துவார்..
விருப்பமில்லை என்றால்
விடுப்பு எடுத்துக்கொள்ள சொல்லுவார்
நமது குடிகாரர்..
நம் கோட்டைகாரருக்காக
அன்புடன் எண்ணங்களை பகிர்ந்தபடி
அதே அன்பு வணக்கங்களுடன்..
மாற்றுக் கருத்து இருப்பவர்கள்..
மறுத்துச் சொல்ல விரும்புபவர்கள்
புறப்படலாம் சொல் அம்புகளுடன்..
புத்துணர்ச்சி பெற்று மகிழலாம்.
ஆகா, மாற்றுக்கருத்து இல்லாமலா? அனைவரும் அவரவர் கருத்தைச் சொல்லலாம்/ எழுதலாம்.
ReplyDeleteஅண்ணன் தம்பிகள் என்று நான்கு பேர்கள் உள்ள வீட்டிலேயே ஒருமித்த கருத்து கிடையாது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டில் எப்படி ஒருமித்த கருத்தை எதிர்பார்க்க முடியும்?
அதற்காகத்தான் கருத்துரிமை கொடுக்கப்பெற்றுள்ளது. பின்னூட்டத்தில் மட்டுமல்ல, மேடை போட்டும் நம் கருத்துக்களைச் சொல்லலாம். அனைவருக்கும் அதற்கு உரிமை உண்டு.
சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள், சாளுக்கிய மன்னர்கள், ரஜபுத்திர மன்னர்கள் என்று ஒரு காலத்தில் அறியப்பட்டது. பிறகு ஒரு காலகட்டத்தில் ராமநாதபுரம் ராஜா, மைசூர் மஹராஜா, பரோடா அரசர், ஹைதராபாத் நிஜாம் மன்னர்களை வைத்து பல்வேறு பகுதிகள் அறியப்பட்டன!
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால், அனைத்துப் பகுதிகளும் இணைக்கப்பெற்று ஒருங்கிணைந்த நாடு உருவானது. நீங்கள் சொல்லும் (ஒருங்கிணைந்த) இந்தியா எப்போது தோன்றியது என்று சொல்லுங்கள் விசுவநாதன்! இந்தியா பழமையானது, தொன்மையானது என்பதைப் பற்றியெல்லாம் அப்புறம் பார்க்கலாம்!
This comment has been removed by the author.
ReplyDelete// காரகத்துவங்களை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள். மனிதர்களால் ஏற்படும் அழிவுகள். //
ReplyDeleteவணக்கம் ,
மூன்று விதமாக பிரிக்கலாம் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.
மனிதனால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும் , இயற்கையினால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும்,
பூமியின் மேலே உள்ள விண்வெளியினால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும், நாம் இறைவனை மூன்று முறை அமைதியை கொடு என்று வணங்குகிறோம் .[பகவத் கீதையில் (ch-8 , solagm-1,2,3,4), அத்யாத்ம, ஆதிபூதம் , ஆதி தெய்வீகம் என்று கூறப்பட்டுள்ளது ].
மிகவும் நன்றாக உள்ளது. இந்தியாவின் ஜாதகத்தை தெரிந்து கொள்வதற்கு
ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறோம் .
எஸ். சந்திரசேகரன்
///சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள், சாளுக்கிய மன்னர்கள், ரஜபுத்திர மன்னர்கள் என்று ஒரு காலத்தில் அறியப்பட்டது. பிறகு ஒரு காலகட்டத்தில் ராமநாதபுரம் ராஜா, மைசூர் மஹராஜா, பரோடா அரசர், ஹைதராபாத் நிஜாம் மன்னர்களை வைத்து பல்வேறு பகுதிகள் அறியப்பட்டன!///
ReplyDeleteஇது வரலாறு..
இன்னமும் இது போல பலப்பல உண்டு...
///இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால், அனைத்துப் பகுதிகளும் இணைக்கப்பெற்று ஒருங்கிணைந்த நாடு உருவானது. நீங்கள் சொல்லும் (ஒருங்கிணைந்த) இந்தியா எப்போது தோன்றியது என்று சொல்லுங்கள் விசுவநாதன்!...////
சொல்ல முடியாது அதனால் தான்
சொல்ல வேண்டாம் என சொல்கிறோம்
இறைவன் தோன்றியதை சொல்ல
இல்லை இவ்வுலகில்.. யாரும்...
இருப்பதை தோன்றுவதாக சொல்வது
இல்லையா வியப்பாக நமக்கு...
கறுப்பு பூனையை
கண் பார்வை இல்லாத ஒருவர்
இருட்டு அறையிலே அது
இல்லாத போது தேடினால் எப்படி,,,?
///இந்தியா பழமையானது, தொன்மையானது என்பதைப் பற்றியெல்லாம் அப்புறம் பார்க்கலாம்!///
தொன்மை என்பதே தோற்றமில்லாதது
மென்மையாகவே மறுக்கிறோம்
இந்தியாவிற்கு பிறப்பு தந்து..
இ. வா. என முத்திரை தராதீர்கள்..
"ஊழி தோறும் ஊழி" என்றே சொல்லுது
சுந்தரர்த்தி சுவாமிகள் தேவாரம்
அதனால்இந்தியாவிற்கு பிறப்பு சொல்ல
அய்யர் தயார் இல்லை..
மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை..
மன்றத்தில் சொல்வது இது தான்.."
முக்கிய செய்தி ,வெறும் தலைப்பு செய்தியாகி போய்விட்டது.விரிவான செய்திகளுக்கு இன்னும் இடைவேளை என்பதால் ஆவல் இன்னும் கூடுகிறது.
ReplyDeleteபின்னூட்டங்களில் பெரும்பாலானோர் காணவில்லை.பொங்கல் ஏற்பாடுகளில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
SP.VR. SUBBAIYA said...
ReplyDelete///இந்திய ஜோதிடத்தின் முக்கியமான பகுதிகள், பிரிவுகள் எல்லாம் பாடங்களாக நடத்தப்படவுள்ளன.///
///இந்த மு.க ஜோதிடம் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றை அலசலாம். சரித்திர நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்க்கலாம். ///
"பின்னோக்கிப் பார்க்கலாம்" என்பது இதுவரை எனக்குத் தெரிந்திராத செய்திகள், அதனால் ஆவல் அதிகமாகிறது.
csekar2930 said...
///பூமியின் மேலே உள்ள விண்வெளியினால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும், நாம் இறைவனை மூன்று முறை அமைதியை கொடு என்று வணங்குகிறோம் ///
This one sounds like the Asteroid impact extinction theory
arumayana pathivu mundane astrology patri therinthu kolla aavalaga ullaen
ReplyDeleteமுண்டகக் கண்ணி அம்மன் என்பது சரி. முண்டகம் என்பது சமஸ்கிருதத்தில்
ReplyDeleteஒரு மலர். தாமரை அல்லது செங்கழனீர் மலர் என்று நினைக்கிறேன்.தாமரைக்கண்ணி அம்மன் என்பதாகப் பொருள் படும் . எப்படி மீனாட்சி, மீன் போன்ற கண்களுடையவளோ அதுபோல இதுவும்.
சென்னையில் மைலாப்பூரில் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிகவும் புகழ் வாய்ந்தது.என்ன, அப்பாவி மக்கள் அதனை முண்டக்கண்ணி, முண்டைக்கண்ணி என்றெல்லாம் சொல்வார்கள்.ஆனால் நம் தெய்வங்கள் எல்லாம் வைதாரையும் வாழவைப்பவை அல்லவா? எனவே அறியாமல் சொல்வதை தெய்வங்கள் கண்டுகொள்ளாது.
புதுமை செய்வதில் ஐயாவின் ஆர்வத்தை இந்தத் தொடர் நன்கு விளக்கும்.
புதுத் தொடருக்கு நல்வரவு கூறுகிறேன்.
சபரிகிரி வாசன் எதிர்பாராமல் அழைத்துவிட்டார்.இப்போது கிளம்புகிறோம்.
ReplyDelete14 ஜனவரி போகியன்று மீண்டும் சந்திப்போம்.
சில உண்மைகள் சிலர் மூலம் வெளிவந்தாகவேண்டும் அதுவும் உலக நீதி.அது Iyerக்கு தெரியும் என்று நம்புகிறேன்.ஆகையால் வாத்தியார் தயவு செய்து இந்தியாவின் ஜாதக அலசலை தொடரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteபங்குச்சந்தை படுத்துக் கிடக்கிறது, பண வீக்கம் வட்டி விகிதத்தை மேலே மேலே பறக்க விட்டதோடு, ரூபாயின் மதிப்பை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது!(ஜப்பான் மைனர் சார் போல் NRIகள் ஜமாய்க்கலாம்!;-):-))
ReplyDeleteலோக்பால் ஜோக்பால் ஆகிவிட்டது. 'தானே' கடலூரில் தென்னை விவசாயி ஸ்ரீதர் போல் பல்லாயிரக்கணக்கானவர்களை படுத்தி எடுக்கிறது.
இந்த நேரத்தில் தான் மு.க ஜோதிடத்தின் சேவை மிகவும் தேவை வாத்தியார் ஐயா.
நன்றிகள் பல.
இந்திய நாட்டின் ஜாதகம் என்று பார்ப்பதை விட இந்திய அரசாங்கம் என்ற அமைப்பின் ஜாதகம்
ReplyDeleteஎன்ற முறையில் பார்ப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
///சில உண்மைகள் சிலர் மூலம் வெளிவந்தாகவேண்டும் அதுவும் உலக நீதி.அது Iyerக்கு தெரியும் என்று நம்புகிறேன்.ஆகையால் வாத்தியார் தயவு செய்து இந்தியாவின் ஜாதக அலசலை தொடரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.///
ReplyDeleteசரி தான்..
சில உண்மைகள் தெரியாமலே போகும்
மரணம் பற்றி சொல்வதில்லை
அதுவும் உண்மை தானே..
அப்படியானால்
(தமிழ்)மொழிக்கு ஜாதகம் தருவீர்களா..
சில உண்மைகளை தெரியமல் இருப்பது தான் நல்லது..
மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்...
இந்தியாவை பற்றிய ஜாதக அலசல் வேண்டாம்... அதனை தொடராமல் இருப்பது தான் நல்லது..
தோழர் மகேசுவரன் அய்யரின் கருத்தை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்
உங்களைப் போல
///மூன்று விதமாக பிரிக்கலாம் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.
ReplyDeleteமனிதனால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும் , இயற்கையினால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும்,
பூமியின் மேலே உள்ள விண்வெளியினால் ஏற்படுகின்ற அழிவுகளை காப்பாற்றவும், நாம் இறைவனை மூன்று முறை அமைதியை கொடு என்று வணங்குகிறோம் .[பகவத் கீதையில் (ch-8 , solagm-1,2,3,4), அத்யாத்ம, ஆதிபூதம் , ஆதி தெய்வீகம் என்று கூறப்பட்டுள்ளது ]///
இது கூடுதல் தகவல்
வினைகளின் பயன் , ` உயிர்கள் , தெய்வங்கள் சடமாகிய பௌதிகங்கள் என்னும் மூன்றன் வழியாகவே வரும் எனவும் , அவை முறையே , `
ஆதியான்மிகம் ,
ஆதிதைவிகம் ,
ஆதிபௌதிகம் ` எனப்படும் என மெய்கண்ட சாத்திரம் சொல்கிறது
இறைவனை மூன்று முறை அல்ல எத்தனை முறையேனும்.. அதைத்தான் மணிவாசகர்
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் "
என சொல்லி அழுகிறார்
இந்தியா பற்றிய கட்டுரை எதிர்பார்த்திருந்ததது போலவே டாப் கியரில் ஆரம்பித்திருக்கிறது. போக போக எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு நம் நாட்டைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
ReplyDelete@Iyer
ReplyDeletehave great respect for your in-depth knowledge (on spiritual texts) but fail to understand your objections...??
India chart analysis is regularly done by almost all astrologers.
'The Modern Astrology" (B V Raman) magazine every year publishes predictions based on national charts. When you accept astrology as part of veda, Mundane astrology is just one part of astrology. sometimes varshaphal analysis on national charts gives us clue to arrive at future scenario.
Dont mistake me Iyer, want to learn your insights based on which you are objecting...
@csekar2930,
for a beginner, can you suggest some good reference text for bhagavadgita study...there are so many....if it is in sanskrit and tamil ,will be more comfortable.
@teacher sir,
my sincere request to you - can we avoid referring to mundagakanni amman...while we study mundane astrology. why we should invite wrath of mariamman...
Mundagakanni amman is powerful form of mariamman and all Mariamman forms are powerful fire forces that dont give any leniency.
Please excuse me if my request is wrong.
////////நம் ஜப்பான் மைனரின் அகராதியில் உள்ள மேட்டர் அல்ல அது. அவ(ள்) சரியான மேட்டர்டா என்று நீங்கள் விமர்ச்சிக்கும் மேட்டரல்ல அது. இது உருப்படியான, நேரடியான மேட்டர்.//////
ReplyDeleteஅப்பிடியா சங்கதி?ஏதோ என் பேர்லே பழியைப் போட்டு நீங்க சொல்லவேண்டியது சொல்லிட்டுப் போங்க.
ஆமா..அது யாரது மேட்டர் பார்ட்டி?அவள் அப்படித்தான்..
அந்தரங்கம்..
அவள் ஒரு தொடர்கதை..
அப்பிடி இப்பிடி..ன்னு ஏதேதோ சொல்றேளே?
இந்தியா பத்தி எதாச்சும் உருப்படியா சொல்லுவேளா?
////Sathish K said...
ReplyDeleteபங்குச்சந்தை படுத்துக் கிடக்கிறது, பண வீக்கம் வட்டி விகிதத்தை மேலே மேலே பறக்க விட்டதோடு, ரூபாயின் மதிப்பை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது!(ஜப்பான் மைனர் சார் போல் NRIகள் ஜமாய்க்கலாம்!;-):-))/////
கொஞ்சம் பிஸி..வொர்க் லோட் அதிகமாகிறது..இந்த மாதம் இப்படித்தான் போகுமென்று நினைக்கிறேன்..
ஆனா நீங்க சொன்ன மாதிரி japanese yen விலை அதிகம்..டாலர் மலிவு..வரலாறு காணாத வீழ்ச்சி..76 யென்னுக்கு ஒரு டாலர்.. அந்த வகையில் ஓர் லாபம்..
டாலர் விலை இந்திய ரூபாய் மதிப்பில் உயர்ந்து அதிகபட்சமாக ஒரு டாலருக்கு 52ரூ.71 பைசா .வரை கிடைத்தது..இந்தவகையில் ஓர் லாபம்..
மொத்தத்தில் இரட்டிப்பு லாபம்..உங்கள் கணக்கு சரிதான் சதீஷ்..உழைப்பின் பலன் மகிழ்ச்சி....
//////Blogger iyer said...
ReplyDeleteபாசமிகு வாத்தியார் அவர்களுக்கு
வணக்கம்....
வாத்தியாரின் இன்றைய வகுப்பு பதிவு நன்று
தாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியாவை பற்றிய ஜாதக அலசல்
அய்யருக்கு ஏற்புடையதல்ல..
அப்படி சொல்லும் உரிமை தந்தமைக்கு நன்றி..
கடவுளுக்கு ஜாதகம் போடுதலா..
வேண்டாம்மய்யா விளையாட்டு..
விளையாட்டினால் வரும்
விபரீதம் வேறுவிதமாக இருக்கும்..
"ஏதுக்கலாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதிக்க வேண்டா "
என்றே ஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்துவார்..
விருப்பமில்லை என்றால்
விடுப்பு எடுத்துக்கொள்ள சொல்லுவார்
இறைவன் தோன்றியதை சொல்ல
இல்லை இவ்வுலகில்.. யாரும்...
இருப்பதை தோன்றுவதாக சொல்வது
இல்லையா வியப்பாக நமக்கு...///////
கால்பந்து ஆடுமிடத்தில் கிரிக்கெட் மட்டைக்கு இடம் ஏது? நான் ஜோதிடத்தை மட்டும்தான் இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். எழுதப்போகிறேன்.நீங்கள் இறைவனையும், மாணிக்கவாசகரையும் கூட்டிக்கொண்டுவந்தால் என்ன செய்வது?
சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தைப் பற்றி மட்டுமே சொல்ல உள்ளேன். நீங்கள், இந்து மதம், கடவுள், மகான்கள் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் விசுவநாதன்.
நான் கண்களை பற்றிப்பேசிக்கொண்டிக்கிறேன். அதை நீங்கள் இதயத்தோடு இணைத்துப்பேசினால், என்ன செய்வது? இன்றையப் பதிவில் கடவுளைப் பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன்? அதை மட்டும் சொல்லுங்கள். எல்லாம் கடந்தவறைப் பற்றி எனக்கும் தெரியாதா என்ன?
கைலாயத்தில் இருக்கும் கலாசநாதரையும், கன்னியாகுமரியில் உறையும் தேவியைப் பற்றியும் வேறு ஒரு நாள் எழுதுகிறேன். இந்தியாவின் தொன்மைக்கு அவர்கள் இரண்டு பேரும்தான் காட்சி மற்றும் சாட்சி. அவர்கள் காலத்து இந்திய தேசத்தைப் பற்றி வேறு ஒரு நாள் விரிவாகப்பேசுவோம். பொறுத்திருங்கள்
///@Iyer
ReplyDeletehave great respect for your in-depth knowledge (on spiritual texts) but fail to understand your objections...??
India chart analysis is regularly done by almost all astrologers.
'The Modern Astrology" (B V Raman) magazine every year publishes predictions based on national charts. When you accept astrology as part of veda, Mundane astrology is just one part of astrology. sometimes varshaphal analysis on national charts gives us clue to arrive at future scenario.
Dont mistake me Iyer, want to learn your insights based on which you are objecting...///
Respected, Sri Ganesh ji
Thank u for the comments.!!
I put my objection at the class on the following grounds..!!
a) We respect the Country/Nation/the Universe, as a worshipful God..!! There is no word in English to distinguish between இறைவன் கடவுள் and தெய்வம், commenting on the country in under astro background could't be digested.
b) The boundry of India is been marked by Man Made law; but the God made law different.. Interpreting the God made law with our acquired knowledge and skill, is disrespecting omnipresence.
c) I recollect the verses from the Great Saint Bharathi, நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ and leaving the thought to the Forum to against commenting/predicting/analysing the Horoscope of (any) Country
I do un'stand The Chart analysis is regularly done by almost all astrologers. Just because it is done by others do we too...
We should be trendsetter in making the right (as role model) to make it bright..
///Dont mistake me Iyer, want to learn your insights based on which you are objecting...///
Certainly not my dear..!!
If you ask a countrymen, definitely he will agree with my statement.
இஸ்லாத்தில் கூட தர்காவிற்கு போககூடாது என்ற எண்ணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்...(கடவுளை மட்டுமே நம்பக் கூடியவர்கள்)
Pl. join with me to protest predicting the Country's horoscope at our Class room (Let others do.. கேளான் புறம் என சித்தியார் சொல்வது போல்)
thank u for sharing the feelings.
///சில உண்மைகள் சிலர் மூலம் வெளிவந்தாகவேண்டும் அதுவும் உலக நீதி.அது Iyerக்கு தெரியும் என்று நம்புகிறேன்.///
ReplyDeleteசில உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது நண்பரே..
வேண்டாமே.. நாட்டிற்கு சோதிடம் சொல்லும் முயற்சி..
ஆகையால் வாத்தியார் தயவு செய்து இந்தியாவின் ஜாதக அலசலை தொடரவேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
///கால்பந்து ஆடுமிடத்தில் கிரிக்கெட் மட்டைக்கு இடம் ஏது? நான் ஜோதிடத்தை மட்டும்தான் இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். எழுதப்போகிறேன்.நீங்கள் இறைவனையும், மாணிக்கவாசகரையும் கூட்டிக்கொண்டுவந்தால் என்ன செய்வது? ///
ReplyDeleteநாட்டையும் கடவுளாக எண்ணுவது தானே நம் மரபு ..
தேசீயமும் ஆன்மிகமும் இரண்டு கண்கள் என மீண்டும் சொல்கிறோம்..
அன்புடன் மீண்டும் வேண்டுகோள் வைக்கின்றோம் நாட்டிற்கு ஜாதகம் வரைந்து அலசும் முயற்சியை கைவிடுமாறு பேரன்புடன் கேட்க் கொள்கிறோம்.
///சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தைப் பற்றி மட்டுமே சொல்ல உள்ளேன். நீங்கள், இந்து மதம், கடவுள், மகான்கள் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் விசுவநாதன்///
நாட்டையும் கடவுளையும் வேறுபடுத்தினால் என்ன செய்ய..
அன்பு கூர்ந்து தயவு செய்து சுதந்திர இந்தியாவிற்கு ஜாதகத்தை வரைந்து அலசி சொல்ல வேண்டாம் என அன்புடன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்..
அப்பன் பழனியப்பனிடம் இது குறித்து
முறையீடு வைத்து விட்டோம்.. இந்த முயற்சியை கைவிடும் வரை தொடரும் பிரார்த்தனை..
இந்த பாடலை சுழல விடுகிறோம்
புது வீட்டிற்கு குடி போகும் நமக்கு சரி..
நாளை வைத்து நாட்டிற்கு என்றால் ஏற்க முடியவில்லை தோழரே..
//நான் கண்களை பற்றிப்பேசிக்கொண்டிக்கிறேன். அதை நீங்கள் இதயத்தோடு இணைத்துப்பேசினால், என்ன செய்வது?//
ஆமாம்..
கண்கள் ஜடப் பொருள்
கண்கள் பார்ப்பதில்லை..
உயிர் தான் பார்க்கிறது (கண் எனும் புலன் வழியே) ஆனால் நாம் கண் பார்ப்பதாக அல்லவா சொல்கிறோம்
//இன்றையப் பதிவில் கடவுளைப் பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன்? அதை மட்டும் சொல்லுங்கள்.///
நாடே கடவுள் தானே வாத்தியாரே..
///எல்லாம் கடந்தவறைப் பற்றி எனக்கும் தெரியாதா என்ன? கைலாயத்தில் இருக்கும் கலாசநாதரையும், கன்னியாகுமரியில் உறையும் தேவியைப் பற்றியும் வேறு ஒரு நாள் எழுதுகிறேன்.///
உங்களுக்கு தெரியும் என அய்யருக்கு தெரியாத என்ன..?
உங்கள் கருத்திற்கு எதிர்வாதமாக இருந்தாலும் நல்ல எண்ணத்தில் நாட்டின் ஜாதக அலசலை கைவிட வேண்டும் என அன்பு கூர்ந்து வேண்டுகிறோம்..
தனிப்பட்ட முறையில் இறைவன் திருமுன் வேண்டுகோள் வைக்கின்றோம்..
//இந்தியாவின் தொன்மைக்கு அவர்கள் இரண்டு பேரும்தான் காட்சி மற்றும் சாட்சி. அவர்கள் காலத்து இந்திய தேசத்தைப் பற்றி வேறு ஒரு நாள் விரிவாகப்பேசுவோம். பொறுத்திருங்கள்//
ஆகா.. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பொறுத்திருக்கிறோம்.. ஆனால் இந்த
நாட்டிற்கு ஜாதகம் வரைந்து அலசும் முயற்சியை தயை கூர்ந்து கைவிடுங்கள்..
புதுமை செய்ய வேறு எதையாவது எடுத்துக் கொள்ளுங்களேன் please..!!
இந்த பாடலினை
இந்த நிலையில் சுழல விடுகிறோம்
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
ReplyDeleteஅதை நாடாவிட்டால் ஏது வீடு? ஓஹோஹோ
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
நாளை வரை காத்திருக்கத்தானே வேண்டும்
ReplyDeleteஎன் புண்ணிய பூமியின் புனிதத்தை அறிய
தங்கள் கருத்தை நானும் அமோதிக்கிறேன் நண்பரே.
ReplyDelete// இறைவனை மூன்று முறை அல்ல எத்தனை முறையேனும்.. அதைத்தான் மணிவாசகர்
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் "
என சொல்லி அழுகிறார் //
ஆயிரம் முறை அல்லது இமைப் பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கலாம் .
ஆனால், ஒவ்வொரு முறையும் சொல்லும் பொழுது
மூன்று தடவை ( சாந்தி : சாந்தி : சாந்தி: ) என்று சொல்லவேண்டும் என்று வேதம் கூறுகிறது.
ஒவ்வொரு இமைப் பொழுதும் மூன்று உலகமும் அமைதி கொள்ளவேண்டும் என்று இறைவனிடம் முறையிட வேண்டும் .
// This one sounds like the Asteroid impact extinction theory //
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் சகோதரி . நன்றி.
ஆபத்துகள் நிறைந்த வின் வெளியில் இந்த பூமி சுற்றிக்கொண்டு இருக்கிறது.
பூமியை சுற்றியுள்ள சூரியன், சந்திரன், செவ்வாய் , சனி, புதன் , சுக்கரன் , ரகு, கேது , இந்த பூமியை பாத்து காக்கின்றன .
அதே நேரத்தில் , இந்த கிரகங்கள் , ஒரு தனி பட்ட மனிதனை படுத்தியும் எடுக்கின்றன .
ஒரு தனி பட்ட மனிதன் எப்படி இந்த பூமியை காப்பாற்ற முடியும்.
இறை வணக்கத்தினால் மட்டுமே முடியும்.
அதிசியம் என்ன வென்றால், ஒரு இறை வணக்கத்தினால், தன்னையும் காப்பற்றிகொண்டு ,
இந்த பூமியையும், வின் வெளியில் உள்ள எல்லா கோள்களையும் காப்பாற்றலாம் .
// முண்டகம் என்பது சமஸ்கிருதத்தில்
ReplyDeleteஒரு மலர். தாமரை அல்லது செங்கழனீர் மலர் என்று நினைக்கிறேன் //
சரியாக சொன்னீர் நண்பரே .
வேதாந்தில் முண்டக உபநிஷத் என்று உள்ளது.
முண்டக என்றால் தாமரை என்று ஒரு அர்த்தம் உள்ளது.
பெரியவா எல்லாம் பேசிண்டு இருக்கேள் ....... சட்டுபுட்டுன்னு நல்லதா நாலு வார்த்தை சொல்லுவேளா , அத விட்டுண்டு நிறைய லாஜிக் சொல்லி தொடரும்னு போட்டுடேலே ..... என்னோவோ போங்க , ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சி இருக்கு ...... சீக்கிரம் astrolgy பக்கம் வாங்க வாத்தியரே .....Kalai seattle.
ReplyDelete'நாடு..நாடு'ன்னு பாட்டுப் பாடிக் கொடியை நாட்டியிருக்கிறார் அய்யர்..
ReplyDelete///////// iyer said...ஆமாம்..
கண்கள் ஜடப் பொருள்
கண்கள் பார்ப்பதில்லை..
உயிர் தான் பார்க்கிறது (கண் எனும் புலன் வழியே) ஆனால் நாம் கண் பார்ப்பதாக அல்லவா சொல்கிறோம்/////////
சரி..உங்கள் வாய்மொழி வாயிலாகவே எடுத்துக்கொண்டால் உயிர் அழிவதில்லை..ஒவ்வொரு பிறப்பிலும் ஒரு உடலை எடுக்கிறது..
அப்படிப் பிறக்கும் பொழுது எந்த இடம், காலத்தில் பிறக்கிறதோ அதனைக் கொண்டுதான் ஜாதகம் கணித்துப் பலன் பார்க்கப்படுகிறது..
அதனால்தான் ஜனன ஜாதகம் என்று குறிக்கப்படுகிறது..
இதே அடிப்படையில்தான் ராமர் ஜாதகமும் கிருஷ்ணர் ஜாதகமும் கணிக்கப்பட்டிருக்கவேண்டும்..
'பூமியில் அவதாரமாகப் பிறந்துவிட்ட காரணத்தால்..உடலெடுத்துவிட்ட காரணத்தால்' என்பதை நீங்கள் உங்கள் வாய்மொழி வாயிலாகவே ஒப்புக் கொள்கிறீர்கள்..
தொன்மை தொட்டு இந்த இரண்டு தெய்வீக ஆத்மாக்களும் அழியாமல் இருந்து புது உருவில் வந்தது போல இந்தியாவும் வாத்தியாரின் விளக்கத்தின்படி என்ற ஒருங்கிணைந்த அமைப்பு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நேரம். இடம் இவற்றை வைத்து தற்போதைய ஜென்மம், பிறவி எடுத்துள்ளது என்ற அமைப்பையும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்..
அப்படி ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்பதில் அப்படி என்ன பிரச்சினை..என்ன பயம்..அய்யருக்கு? என்று புரியவில்லை..
இன்னும் சொல்லப்போனால் இதே பதிவிலே கூட ஜோதிடர்களுக்கெல்லாம் சாதகமான ஒரு வரியை
An astrologer only can indicate what is going totake place. He should not certainly say what will happen. It is the first rule of astrology ஆசிரியர் சொல்லியிருந்தும் ஏன் பயம் என்று புரியவில்லை..நம்பிக்கை வளரவேண்டும்..துக்கிரித்தனமாக சொல்லும் சோதிடர்களின் வாக்குப் பலித்துவிடுமோ என்ற பயம் உள்ளவர்கள் சோதிடம் பக்கமே தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது..
வாழ்க்கை நம்பிக்கையாலும் முயற்சியாலும் உழைப்பாலுமே கட்டப்படுகிறது..
கற்பனை..கனவு என்பதெல்லாம் இந்த நடைமுறையின் அடிநாதங்களே தவிர அவை வெறும் கற்பனைதான்..
இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்வில் எந்த நிலையிலும் யார் எதை கணிப்பாகக் கூறினாலும் நடுக்கமோ தளர்ச்சியோ வராது..அய்யரை அப்படி ஆளாக நான் கற்பனையில் நினைத்திருக்கவில்லை..இன்றைக்குத் தொடர்ந்து அவர் புலம்பி பழனியப்பனை இழுத்திருப்பதால் இதுகுறித்து எழுதத் தோன்றியது..அவ்வளவுதான்..
//இதே அடிப்படையில்தான் ராமர் ஜாதகமும் கிருஷ்ணர் ஜாதகமும் கணிக்கப்பட்டிருக்கவேண்டும்..
ReplyDelete'பூமியில் அவதாரமாகப் பிறந்துவிட்ட காரணத்தால்..உடலெடுத்துவிட்ட காரணத்தால்' என்பதை நீங்கள் உங்கள் வாய்மொழி வாயிலாகவே ஒப்புக் கொள்கிறீர்கள்..//
நான் கூற வந்ததை விரிவாக விளக்கிவிட்டீர்கள்...நன்றி
///இதே அடிப்படையில்தான் ராமர் ஜாதகமும் கிருஷ்ணர் ஜாதகமும் கணிக்கப்பட்டிருக்கவேண்டும்..
ReplyDelete'பூமியில் அவதாரமாகப் பிறந்துவிட்ட காரணத்தால்..உடலெடுத்துவிட்ட காரணத்தால்' என்பதை நீங்கள் உங்கள் வாய்மொழி வாயிலாகவே ஒப்புக் கொள்கிறீர்கள்..///
ஆமாம் நண்பரே...
மறுபடியும் சொல்கிறோம் கடவுள் வேறு இறைவன் வேறு தெய்வம் வேறு..
நீங்கள் குறிப்பிட்ட இவர்கள் கர்ப்பவாசம் தரித்தவர்கள்.. கடவுளர் இல்லை.. தெய்வங்கள்...
பிறந்தவர்கள் இறக்க வேண்டும். பிறப்பு இறப்புக்கு உட்படாதவராக வேண்டும் என்றே மறுபிறப்பு வேண்டாமெனன வேண்டுகிறோம்..
வள்ளுவரும்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்கிறார்..
காரைக்கால் அம்மையாரும்
பிறவாமை வேண்டும் அப்படி பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்
என வேண்டுகிறார்.
///தொன்மை தொட்டு இந்த இரண்டு தெய்வீக ஆத்மாக்களும் அழியாமல் இருந்து ///
சரியாக சொன்னீர்கள்..
நமது வீடுகளில் கூட நினைவில் வாழும் சில பெரியவர்களை "தெய்வமாகி"விட்டதாக சொல்லும் பழக்கம் உண்டு,, தானே...
///புது உருவில் வந்தது போல இந்தியாவும் வாத்தியாரின் விளக்கத்தின்படி என்ற ஒருங்கிணைந்த அமைப்பு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நேரம். இடம் இவற்றை வைத்து தற்போதைய ஜென்மம், பிறவி எடுத்துள்ளது என்ற அமைப்பையும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்..///
நீங்கள் குறிப்பிட்டது போல் நாடு தெய்வம் இல்லை.. கடவுள்..
கடவுள் வேறு... இறைவன் வேறு..
///அப்படி ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்பதில் அப்படி என்ன பிரச்சினை..என்ன பயம்..அய்யருக்கு? என்று புரியவில்லை..///
அய்யருக்கு பயமில்லை.. நிச்சயமாக இல்லை.. "நாமார்க்கும் குடியல்லலோம்" என்று சொன்ன அப்பர் வாக்கின் படி வாழ்வை நடத்தும் நமக்கு பயமேன்..
///இன்னும் சொல்லப்போனால் இதே பதிவிலே கூட ஜோதிடர்களுக்கெல்லாம் சாதகமான ஒரு வரியை
An astrologer only can indicate what is going totake place. He should not certainly say what will happen. It is the first rule of astrology ஆசிரியர் சொல்லியிருந்தும் ஏன் பயம் என்று புரியவில்லை....////
மீண்டும் சொல்கிறோம் நண்பரே பயம் இல்லை..
"அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே "
என ஞான சம்பந்த பெருமான் உறுதியிட்டு சொன்ன பின் வேறு என்ன வேண்டும் தோழரே..
..///நம்பிக்கை வளரவேண்டும்..துக்கிரித்தனமாக சொல்லும் சோதிடர்களின் வாக்குப் பலித்துவிடுமோ என்ற பயம் உள்ளவர்கள் சோதிடம் பக்கமே தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது.....///
உண்மை தான்.. அப்படி சோதிடர்கள் சொல்வதில்லை என்பதே எதார்த்தம். அதிலும் நமது வகுப்பறை ஆசிரியர் இதில் கை தேர்ந்தவர் அதை மேற்கொள் இட்டு சொல்ல தேவையில்லை என்பதனை மைனரும் அறிவார் தானே..
///வாழ்க்கை நம்பிக்கையாலும் முயற்சியாலும் உழைப்பாலுமே கட்டப்படுகிறது..
கற்பனை..கனவு என்பதெல்லாம் இந்த நடைமுறையின் அடிநாதங்களே தவிர அவை வெறும் கற்பனைதான்..///
உங்களின் இந்த வரிகள் வேறு பக்கம் திரும்பி வாதம் செய்ய வைக்கிறது..
நம்பிக்கை உழைப்பு முயற்சி என்பதற்கு அய்யரிடம் வேறு விளக்கம் உண்டு.. அதனை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்
///இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்வில் எந்த நிலையிலும் யார் எதை கணிப்பாகக் கூறினாலும் நடுக்கமோ தளர்ச்சியோ வராது..அய்யரை அப்படி ஆளாக நான் கற்பனையில் நினைத்திருக்கவில்லை.....////
இறை சிந்தனையில் வாழ்வை கழிப்பவர்களுக்கு இந்த பயம் நிச்சயமில்லை. அது அய்யருக்கும் இல்லை என்பதனை சொல்லாமலே நீவிரும் அறிவீர் தானே தோழரே
///இன்றைக்குத் தொடர்ந்து அவர் புலம்பி பழனியப்பனை இழுத்திருப்பதால் இதுகுறித்து எழுதத் தோன்றியது..அவ்வளவுதான்..///
சிலருக்காக..
சிலவற்றிற்காக..
அய்யர் புலம்புவதாக இருந்தாலும்
அப்படியே இருக்கட்டுமே..
புலம்பித்தான் ஆகவேண்டும்
பழனியாண்டவரின் துணையால்
பாரத நாட்டிற்கு ஜாதகம் வரைந்து
பதிவிட்டு அலசாமலிருந்தமைக்கு நன்றி
வணக்கமும் வாழ்த்துக்களும்
dear sir,
ReplyDeletei would like to see the predictions about india my great people, could you please sene me the paper cuttings. to my id.
Great thanks in advance Guruji.
regards,
Sriram