மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.08

ஞானக் கதைகள் - 1

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள் - 1

ஞானம் என்றால் முழுமையான அறிவு (wisdom) என்று பொருள். முழுமையான
அறிவைக்கொடுக்கின்ற குட்டிக்கதைகளை வகுப்பறைக் கண்மணிகளுக்குச்
சொல்லலாம் என்று துவங்கியுள்ள புதிய பகுதி இது!

இன்று முதல் கதை!
----------------------------------
கடவுள் எப்படியிருப்பார் என்று நச்சரித்த தன்னுடைய எட்டு வயதுக் குழந்தைக்
குத் தாய் ஒருத்தி, ஒரு நாள் பெருங்கூட்டம ஒன்றிற்கு உரை நிகழ்த்த வந்திருந்த
ஸ்வாமி விவேகானந்தரைக் காட்டி - இவர்தான் கடவுள் என்று சொல்லி வைத்தாள்.
அதுவும் நம்பிவிட்டது!

அதோடு நில்லாமல் தன் குழந்தைக்குப் பயபக்தி உணர்வு மேலிட வேண்டுமென்
பதற்காகத் தினமும் இருவேளைகள் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் இருந்த
விவேகானந்தரின் படத்திற்குப் பூக்களை அர்ச்சித்துக் கும்பிடவும் வைப்பாள்

தன் குழந்தை சாப்பிட, படுக்க என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் இதோபார்
கடவுள் பார்த்துத்துக் கொண்டிருக்கிறார், அவர் கோபப் படுவாரா இல்லையா?
உன்னால் அவர் நம் வீட்டைவிட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்று சொல்லி
அதை வழிக்குக் கொண்டு வருவாள்.

குழந்தையும் நெறியோடு வளர்ந்தது. விவேகானந்தரின் தயவால் அன்னை சொல்லி
யவற்றையெல்லாம் கேட்டது - ஒன்றே ஒன்றைத் தவிர. அதாவது தினமும் ஏகப்பட்ட
மிட்டாய்கள், இனிப்புகள் தின்பதைத் தவிர!

ஒருநாள் விவேகானந்தரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்த அந்தத்தாய், குழந்தையைத்
தன் கணவரிடம் விட்டுவிட்டு, அவள் மட்டும் ஸ்வாமிஜீயைப் பார்த்து தன் குழந்தையைப்
பற்றிச்சொல்லி அவனுக்கு நீங்கள்தான் கடவுள். ஆகவே நீங்கள் சொன்னால் நிச்சயம்
கேட்பான். அவனுடைய பற்கள் கெடுவதற்கு முன்பு இந்த மிட்டாய்களை அதிகமாகத்
தின்னும் பழக்கத்தை நிறுத்திவிட விரும்புகிறேன்.நீங்கள் உதவி செய்ய வேண்டும்
என்று கேட்டுக் கொண்டாள்

அவரும் சற்று யோசித்தவர், சரி அம்மா, உன் குழந்தையை அடுத்தவாரம் மீண்டும்
அழைத்து வா, நான் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அந்த இளம் தாய் விடவில்லை. அடுத்த வாரமே ஸ்வாமிஜீ குறிப்பிட்டிருந்த தினத்தில்
மீண்டும் ஒரு முறை தன்னுடைய குழந்தையுடன் அவரைச் சென்று பார்த்தாள்

தன்னை விழுந்து வணங்கிய சிறுவனை, வாஞ்சையோடு தன் கைகளில் துக்கிய அவர்
புன்னகையோடு அவனை உற்று நோக்கியபிறகு, "கண்ணா, நீ அதிகமாக மிட்டாய்கள்
தின்பாய் போலிருக்கிறதே - உன் பற்கள் சொல்கின்றனவே! இனிமேல் மிட்டாய்
திங்கக்கூடாது சரியா?" என்று சொன்னார்.

குழந்தையும் பய பக்தியுடன் "சரி" என்றது!

சற்று நேரம் அவருடன் பேசிய அந்தத்தாய், தன்னுடைய மகனை வெளியே நின்று
கொண்டிருந்த தன் தாயாரிடம் விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் ஸ்வாமிஜி
அவர்களிடம் வந்து, " ஸ்வாமிஜி, தாங்கள் சென்றமுறை நான் என் குழந்தையுடன்
வந்திருந்தபோதே இதைச சொல்லியிருக்கலாமே! ஒருவாரம் கழித்து வரச் சொன்னதில்
உள்ள தங்களுடைய அன்பான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.

புன்னகைத்த விவேகானந்தர் சற்று மெல்லிய குரலில் சொன்னார்.

"தாயே சென்றவாரம் அந்தக் குழந்தைக்கு மிட்டாயைப் பற்றியும், இனிப்பைப்
பற்றியும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லாமல் இருந்தது.ஏனென்றால் நானும்
அவற்றை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால் சொல்லவில்லை. இந்த ஒரு
வாரத்தில் அதை நானும் நிறுத்தி விட்டேன். இனிமேல் நானும் அவற்றைச் சாப்பிடப்
போவதில்லை. இப்போதுதான் எனக்கு அதற்குரிய தகுதி வந்திருக்கிறது. புரிந்து
கொண்டாயா அம்மா?

அந்தத் தாய் அசந்து விட்டாள்.

இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், போதிப்பதற்கும் உள்ள வழி.

வாழ்க வளமுடன்!

24 comments:

  1. நாந்தான் பஷ்ட்டு... சாரி சாரி முதலாவது.

    ReplyDelete
  2. சூப்பர் கதை ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. இதைத்தான் எங்கள் தலைவர் அப்போதே சொன்னார்... " நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்வேன்னு"... சரிதானே ஐயா!!!

    ReplyDelete
  4. ஆ.... பதிவில் உள்ள படத்தைப் பற்றி கூற மறந்துவிட்டேனே... எனக்கே 'டென்சனா'யிருக்கு. அவருக்கு எப்படியிருக்குமோ!!!

    ReplyDelete
  5. சூப்பரான கதை ஐயா.. விவேகானந்தரை பற்றிய மேலும் பல சுவை தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
    நான் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தான் இந்த கதையை படிக்கிறேன்.

    'இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், பாடங்களை கற்பதற்கும் உள்ள வழி.' என்னை பார்த்து இப்படி ஒரு வரி சொல்ல மாட்டிங்களா??

    ReplyDelete
  6. ////VIKNESHWARAN said...
    நாந்தான் பஷ்ட்டு... சாரி சாரி முதலாவது.////

    எல்லாவற்றிலும் நீங்களே முதலாவதாகவர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ////ச்சின்னப் பையன் said...
    சூப்பர் கதை ஐயா... நன்றி.../////

    இன்னும் பல கதைகள் உள்ளன.தொடர்ந்து படித்து வாருங்கள்!

    ReplyDelete
  8. ////ச்சின்னப் பையன் said...
    இதைத்தான் எங்கள் தலைவர் அப்போதே சொன்னார்... " நான் சொல்றதைத்தான் செய்வேன். செய்றதைத்தான் சொல்வேன்னு"... சரிதானே ஐயா!!!////

    எனக்குத் தெரிந்த தலைவன் அவன் ஒருவன்தான்!
    நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் ச்சின்னைப்பையன்?

    ReplyDelete
  9. //////ச்சின்னப் பையன் said...
    ஆ.... பதிவில் உள்ள படத்தைப் பற்றி கூற மறந்துவிட்டேனே... எனக்கே 'டென்சனா'யிருக்கு. அவருக்கு எப்படியிருக்குமோ!!!/////

    நம்மைச்சுற்றிப் பல துன்ப அலைகள். அதைச் சுட்டிக்காட்டத்தான் இந்தப்படம்!

    ReplyDelete
  10. //////VIKNESHWARAN said...
    சூப்பரான கதை ஐயா.. விவேகானந்தரை பற்றிய மேலும் பல சுவை தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
    நான் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தான் இந்த கதையை படிக்கிறேன்.
    'இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், பாடங்களை கற்பதற்கும் உள்ள வழி.' என்னை பார்த்து இப்படி ஒரு வரி சொல்ல மாட்டிங்களா??////

    உங்களுக்காகச் சொன்னதாக வைத்துக்கொள்ளுங்களேன்!

    ReplyDelete
  11. ஊருக்குதானடி உபதேசம் உன்க்கில்லையடி கண்ணே

    ப‌டிப்பது ராமாய‌ன‌ம் இடிப்ப‌து பெருமாள் கோவிலை


    ப‌சுத்தோல் போத்திய‌ புலிக‌ள் போல் ப‌க‌ல் வேட‌ம் போட்டு

    ஊரை உல‌கை ஏமாற்றும் போக்கே மலிந்த‌ உல‌கில் அவ‌தார‌ புருச‌ரின் ப‌ண்பு போற்றுத‌ற்குரிய‌து

    சுவாமிஜி விவேகானந்தர் போல் இக்கால சாமியார்களும்,மத குருமார்களும்,அரசியல் தலைவர்களும் மாறும் நன் நாளுக்கு எல்லாவல்ல இறைவனை போற்றி வண‌ங்குவோமாக.

    ReplyDelete
  12. பல்சுவை பதிவின் பின்னூட்ட பெட்டியை தொடர்ந்து

    பண்பினை பாங்குடன் கற்றுத்தரும், ஆசிரியரின் வகுப்பறை

    மாணாவருக்கும் க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் தந்து, அருள்தரும்

    மால‌வ‌னை வ‌ண‌ங்கும் சுப்பையாசாருக்கு ந‌ன்றிக‌ள் பல‌ப்ப‌ல‌

    ReplyDelete
  13. ஆசிரியரே,

    விவேகானந்தர் கதைக்கு நன்றி
    நாவால் இனிப்புக்கும்,இப்போது
    உங்கள் வகுப்புக்கும் என்றுமே
    அன்புக்கும் நாங்கள் அடிமை

    கலங்கரை விளக்கமதை கவிழ்க்க
    துடிக்கும் அலைகள், கலங்காத
    அதன் காலடியை முத்தமிடும்
    காட்சியோ உங்கள் படப்பதிவு?!

    ReplyDelete
  14. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    ஊருக்குதானடி உபதேசம் உன்க்கில்லையடி கண்ணே
    ப‌டிப்பது ராமாய‌ன‌ம் இடிப்ப‌து பெருமாள் கோவிலை
    ப‌சுத்தோல் போத்திய‌ புலிக‌ள் போல் ப‌க‌ல் வேட‌ம் போட்டு
    ஊரை உல‌கை ஏமாற்றும் போக்கே மலிந்த‌ உல‌கில் அவ‌தார‌ புருச‌ரின் ப‌ண்பு போற்றுத‌ற்குரிய‌து
    சுவாமிஜி விவேகானந்தர் போல் இக்கால சாமியார்களும்,மத குருமார்களும்,அரசியல் தலைவர்களும் மாறும் நன் நாளுக்கு எல்லாவல்ல இறைவனை போற்றி வண‌ங்குவோமாக./////

    வணங்கினால் சரிதான்!:-)))))

    ReplyDelete
  15. //////திருநெல்வேலி கார்த்திக் said...
    பல்சுவை பதிவின் பின்னூட்ட பெட்டியை தொடர்ந்து
    பண்பினை பாங்குடன் கற்றுத்தரும், ஆசிரியரின் வகுப்பறை
    மாணாவருக்கும் க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் தந்து, அருள்தரும்
    மால‌வ‌னை வ‌ண‌ங்கும் சுப்பையாசாருக்கு ந‌ன்றிக‌ள் பல‌ப்ப‌ல‌////

    என்ன ஆகிவிடப்போகிறது - நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே என்ற நம்பிக்கைதான்
    பின்னூட்டப்பெட்டியைத் திறந்து வைத்திருக்கிறேன்!பிரச்சினை வந்தால் பார்த்துக்கொள்வோம்!

    ReplyDelete
  16. /////தமாம் பாலா said..
    ஆசிரியரே,
    விவேகானந்தர் கதைக்கு நன்றி
    நாவால் இனிப்புக்கும்,இப்போது
    உங்கள் வகுப்புக்கும் என்றுமே
    அன்புக்கும் நாங்கள் அடிமை
    கலங்கரை விளக்கமதை கவிழ்க்க
    துடிக்கும் அலைகள், கலங்காத
    அதன் காலடியை முத்தமிடும்
    காட்சியோ உங்கள் படப்பதிவு?!////

    துன்பங்கள் என்னும் புயல் வீசும் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாய்
    நின்று காட்ட வேண்டும் என்பதைச் சிம்பாலிக்காக' படம் சொல்லுமே நண்பரே!

    ReplyDelete
  17. இது ராமகிருஷ்னபரமஹம்ஷரின் வாழ்க்கையில் நடந்த்தாக படித்த நினைவு, தவறாய் இருந்தால் மன்னிக்கவும். சரியாய் இருந்தால் ஆசானாக இருந்தாலும் மாணாக்கருக்கு தவறை சுட்டிகாட்டும் உரிமை உள்ளதாகக் கொள்ளவு்ம். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமேன்னு சொன்ன ஊருப்பக்கம் பொறந்த வினை.

    ReplyDelete
  18. ////whoami said...
    இது ராமகிருஷ்னபரமஹம்ஷரின் வாழ்க்கையில் நடந்த்தாக படித்த நினைவு, தவறாய் இருந்தால் மன்னிக்கவும். சரியாய் இருந்தால் ஆசானாக இருந்தாலும் மாணாக்கருக்கு தவறை சுட்டிகாட்டும் உரிமை உள்ளதாகக் கொள்ளவும். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமேன்னு சொன்ன ஊருப்பக்கம் பொறந்த வினை.////

    நான் படித்தது - நினைவில் உள்ளது விவேகானந்தர் வாழ்வில் நடந்தது நண்பரே!
    சரி எதற்குத் தர்க்கம்? நீதியை எடுத்துக் கொள்ளுங்கள்!
    கதைகளைவிட - அவைகள் சொல்லும் நீதிதான் முக்கியமானது!

    ReplyDelete
  19. வாத்தியாரே..

    நீங்க சொல்றது மெய்யாலுமே சரிதான்..

    ஆள் யாருன்றதை ரெண்டாவது வைச்சுக்குவோம்.. முதல்ல நீதிதான் முக்கியம்..

    அனைவருக்கும் தெரிய வேண்டிய, புரிய வேண்டிய கதை இது..

    வாத்தியார்ன்னா வாத்தியார்தான்..

    ReplyDelete
  20. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    நீங்க சொல்றது மெய்யாலுமே சரிதான்..
    ஆள் யாருன்றதை ரெண்டாவது வைச்சுக்குவோம்.. முதல்ல நீதிதான் முக்கியம்..
    அனைவருக்கும் தெரிய வேண்டிய, புரிய வேண்டிய கதை இது..
    வாத்தியார்ன்னா வாத்தியார்தான்../////

    நியதிகளையும், நீதிகளையும் சும்மா சொல்லக்கூடாது என்று கதைகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மருந்தைத் தேனோடு கொடுக்கின்றேன் அவ்வளவுதான்
    சட்டாம்பிள்ளைக்குப் புரிந்ததில் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  21. Story session, wow..Good Start! I liked it.

    -Shankar

    ReplyDelete
  22. ///Anonymous said...
    Story session, wow..Good Start! I liked it.
    -Shankar///

    Thanks Mr.Shankar

    ReplyDelete
  23. ஐயா வணக்கம்.
    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப் பட்ட சமயங்களில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய தருணத்தில்,"பதில் சொல்வதற்கும் அறிவுரை சொல்வதற்கும் எனக்கு தகுதியுள்ளது.ஏனென்றால் அத்தனை கேள்விகளுக்கான விடை குறித்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட பழக்கங்களை கொண்டிருந்தும்,அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த அனுபவமும் இருக்கின்றகாரணத்தால் சொல்கிறேன்" என்று கவியரசர் கூறியதாக படித்திருக்கிறேன்.கவியரசரும் விவேகானந்தரும் தாம் முதலில் அனுபவித்து பின்னரே பிறருக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  24. /////தியாகராஜன் said...
    ஐயா வணக்கம்.
    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப் பட்ட சமயங்களில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய தருணத்தில்,"பதில் சொல்வதற்கும் அறிவுரை சொல்வதற்கும் எனக்கு தகுதியுள்ளது.ஏனென்றால் அத்தனை கேள்விகளுக்கான விடை குறித்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட பழக்கங்களை கொண்டிருந்தும்,அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த அனுபவமும் இருக்கின்றகாரணத்தால் சொல்கிறேன்" என்று கவியரசர் கூறியதாக படித்திருக்கிறேன்.கவியரசரும் விவேகானந்தரும் தாம் முதலில் அனுபவித்து பின்னரே பிறருக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள்.////

    ஆமாம், உண்மை! அனுபவம் மட்டுமே ஆக்கமுள்ள, தாக்கமுள்ள எழுத்தைக் கொடுக்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com