====================================================
வாக்களியுங்கள்: முற்பிறவி, மறுபிறவி என்பது எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா?
முதலில் பாட்டைப் படியுங்கள்; கேள்வி கடைசியில் உள்ளது! அடுத்து வாக்களிப்புப் படிவம்!
-------------------------------------------------------
இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம்
"பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே"
பொழிப்புரை :
பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு , குளிர்ந்த மதி , ஊமத்தை மலர் ஆகியனமேலே
பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும் , வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும்
ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும்
மன முடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது .
--------------------------------------------------------------
”இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மன முடையார்க்கு மறுபிறப்புக் கிடையாது”
என்று பாடல் முடிகிறது!
நம்மில் எத்தனை பேர்கள் இறைவனை நினைத்து மயங்குபவர்கள் உள்ளார்கள் என்று
தெரியவில்லை! எனக்குத் தெரிந்து ஒரு பதிவர் இருக்கிறார். அவர் இறைவனை நினைந்து
மனம் உருகிப் போகின்றவர். அவர் பெயர் உ'னாவில் ஆரம்பித்து ன்' ல் முடியும்
நயன் தாராவிற்கும், நமீதாவிற்கும் உருகி ஓய்ந்து போகிறவர்களின் எண்ணிக்கையில்
பாதிப்பேர்கள் கூட இறைவனுக்காக உருகுகிறவர்கள் இல்லை!
விபூதி, பஞ்சாமிர்தத்தைவிட, ஜிஞ்சாமிர்தம், ஊறுகாயை பிரசாதமாக நினைத்து அடித்து
அல்லது புசித்து மகிழ்பவர்கள் எண்ணற்றவர்கள் உள்ளார்கள்
அவ்வளவு ஏன்? இறைவனே இல்லை, இருந்தால் காட்டு, இல்லையென்றால் பேசாமல்
உட்கார் என்பவர்களும் இருக்கிறார்கள்.
என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சுத்தமாக இறை நம்பிக்கை இல்லாதவர்.
என்னைப் பார்த்தால் ஒவ்வொருமுறையும் கேட்பார்:
”உங்கள் கடவுளுக்கு அவருடைய உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா?
ஏன் கோவில்களுக்கு இத்தனை பூட்டுக்களை போட்டுப் பூட்டி வைக்கிறீர்கள்?”
நான் சொல்வேன்: “ கடவுள் எங்கே கோவில் கேட்டார்? மனிதனல்லவா ஊருக்குப் பத்துக்
கோவில்களைக் கட்டி வைத்துள்ளான். அதற்கு அவரைக் குறை சொல்லி என்ன பயன்?
அதோடு கோவிலில் உள்ள விக்கிரங்களுக்கு, அவனே ஆடை அணிகலன்களை
அணிவித்து விட்டு, அது திருட்டுப்போகாமல் இருக்கப் பூட்டையும் மாட்டியுள்ளான்.
அதற்கு அவர் எப்படிக் காரணமாக முடியும்? அவர் கருணை மிக்கவர். கும்பிடுகிறவனும்,
திருடுகிறவனும் அவருக்கு ஒன்றுதான்.”
"கும்பிடுகிறவனுடைய செயலுக்கும், திருடுகிறவனுடைய செயலுக்கும் என்ன வித்தியாசம்?”
“இருவினைப் புண்ணியமும், பாவமும் என்று பட்டினத்தார் சொன்னாரே அந்தக் கணக்கில்
அவ்விரண்டும் சேரும்”
----------------------------------
கேள்வி இதுதான்:
முற்பிறவி, மறுபிறவி என்பது எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா?
அதாவது அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?
வாக்களியுங்கள்
உங்கள் கருத்தைச் சொல்வதற்கான படிவம் கீழே உள்ளது!
============================================
============================================
வாழ்க வளமுடன்!

நான் தான் முதலாவது...
ReplyDeleteஉங்கள் நண்பர் பற்றி நீங்கள் கூறி இருப்பதை ஏற்கனவே உங்கள் முந்தய பதிவில் படித்ததாக ஞாபகம்...
ReplyDelete"முற் பிறவியில் செய்ததினால் தான் இந்தப் பிறவியில் இப்படி இருக்கிறாய்.இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அடுத்தப் பிறவியில் நன்றாக இருப்பாய்!"--
ReplyDelete"Post dated check from a fictious bank" Ambedkar.
"முற் பிறவியில் செய்ததினால் தான் இந்தப் பிறவியில் இப்படி இருக்கிறாய்.இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அடுத்தப் பிறவியில் நன்றாக இருப்பாய்!"
ReplyDeleteபயன்;-
இப்பிறவியில் அனைவரும் நல்லது செய்யவேண்டும் என போதிப்பது
பாவம்;-
இன்றைய ஏழைகளை அவர்களின் முற்பிறவி பாவம் என மனரீதியாக அடக்கியாள்வது.
////VIKNESHWARAN said...
ReplyDeleteநான் தான் முதலாவது...////
காலை 6.00 மணிக்குப் பதிவிட்டால் - நீங்கள்தான் முதலில் - அது தெரிந்ததுதான்!
////VIKNESHWARAN said...
ReplyDeleteஉங்கள் நண்பர் பற்றி நீங்கள் கூறி இருப்பதை ஏற்கனவே உங்கள் முந்தய பதிவில் படித்ததாக ஞாபகம்.../////
ஏன் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இரண்டாவது முறையாகச் சொன்னால் தவறா?
/////Anonymous said...
ReplyDelete"முற் பிறவியில் செய்ததினால் தான் இந்தப் பிறவியில் இப்படி இருக்கிறாய்.இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அடுத்தப் பிறவியில் நன்றாக இருப்பாய்!"--
"Post dated check from a fictious bank" Ambedkar./////
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!
////குரு said...
ReplyDelete"முற் பிறவியில் செய்ததினால் தான் இந்தப் பிறவியில் இப்படி இருக்கிறாய்.இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அடுத்தப் பிறவியில் நன்றாக இருப்பாய்!"
பயன்;-
இப்பிறவியில் அனைவரும் நல்லது செய்யவேண்டும் என போதிப்பது
பாவம்;-
இன்றைய ஏழைகளை அவர்களின் முற்பிறவி பாவம் என மனரீதியாக அடக்கியாள்வது.////
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!
பாவம்:
ஏழைகளை அடக்குவதற்காகச் சொல்லப்பட்டதாக மட்டும் ஏன் நினைக்க வேண்டும்?
அயோக்கியர்களை எச்சரிப்பதற்காகவும் இருக்கலாம் இல்லையா?
வாத்தியரே பதிவு அருமை, மாணவர்களின் வேண்டுகோள் ஏற்று முன் ஜென்ம சிறப்பு சிறுபதிவை இட்டதமைக்கு நன்றி.(படித்துவிட்டேன்)
ReplyDeleteநாங்களும் இறை அருள் பைலத்தான் வந்தோம் வாத்தியரே..உங்கள் வகுப்பில். சட்டாம் பிள்ளை அளவிற்கு இல்லை எனில் கூட சிறிது சிறிதாய் எங்களை முழுதாய் ஈடுபடுத்திக்க முயல்கிறோம்.
////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteவாத்தியரே பதிவு அருமை, மாணவர்களின் வேண்டுகோள் ஏற்று முன் ஜென்ம சிறப்பு சிறுபதிவை இட்டதமைக்கு நன்றி.(படித்துவிட்டேன்)/////
முன்ஜென்மச் சிறப்புப் பதிவா? யார் சொன்னது?
இது வெறும் சர்வே பதிவு!
எத்தனை பேர்களுக்கு அதில் நம்பிக்கை உள்ளது?
எத்தனை பேர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை?
அதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டுப் பதிந்த வாக்கெடுப்புப் பதிவு இது!
ஐயா,
ReplyDeleteஅடுத்த பிறவியில் வந்து வாக்களிக்கிறேன். (இதுல ஒரு உண்மை இருக்கு)
:)
/////கோவி.கண்ணன் said...
ReplyDeleteஐயா,
அடுத்த பிறவியில் வந்து வாக்களிக்கிறேன். (இதுல ஒரு உண்மை இருக்கு) :)////
அதுவரை வாத்தியார் உயிரோடு இருக்க வேண்டுமே? (இதில் பொய் இல்லை!) :-)))))
உண்மைத்தமிழன் என்று உடைத்தே சொல்லிவிடலாமே...
ReplyDeleteமுற்பிறவி, அடுத்த பிறவி உள்ளது என்பதுதானே ஜோதிடத்தின் பாலபாடம்
வலையுலக வாத்தியார் ஐயா
ReplyDeleteவாக்களித்தோம் நாமும் ஐயா
உனாவில் தொடங்கிடும் பெயர்
'ன்'னாவில் முடியும் என்றால்
கிசுகிசு பாணியில் சொன்னால்
லேசா,லேசா'உண்மை தமிழன்'?!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;ஆக இப்போதைய பிறவியிலேயே நல்லன சேர்த்து
அல்லன விலக்கினால் மறுபிறவி போலாகும் அல்லவா,அடிகளே!
லக்னத்துக்கு 12 ல் செவ்வாய் இருந்தால் மறுபிறவி இல்லை என்கிறார்களே உண்மையா?
சிந்திக்க வைத்த சிறுவாணி தண்ணீராம் ஆசானுக்கு நன்றி!!
இது இணைப்பிற்கு,
ReplyDeleteஇது எதற்கு என்று கேட்பீர்கள். கூகிள் லாகின் செய்யாமல் பின்னுட்டமிட்டால் e-mail follow-up comments to my e-mail
டிக் அடிக்க இயலாது.
அடுத்து அந்த பிரச்னை இல்லை லாக் இன்னில் அதில் இருக்கும்போது டிக் அடித்துவிட்டால் நமக்கு e-mail லில் உங்களுக்கு வரும் அனைத்து பின்னுட்டங்களும் வந்து சேர்ந்துவிடும்.
தங்களுக்கு தெரியாதது அல்ல... தாங்கள் கேட்டமைக்காக கூறுகிறேன்...
ஐயா,
ReplyDeleteதாங்கள் பின்னுட்ட மட்டுறுத்தல் எடுத்துவிட்டீர்களா?
பின்னுட்டங்கள் நேரடியாக வருகின்றன...
கவனியுங்கள்
1. முற்பிறவிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறதா ?
ReplyDelete2. மனிதன் ஆடுமாடாகவும் பிறப்பான் என்ற நம்பிக்கை இருந்தால் இந்துக்களில் ஆடுமாடு திண்பவர்களே இருக்க மாட்டார்கள்
என்ன சொல்றிங்க ?
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஅதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டுப் பதிந்த வாக்கெடுப்புப் பதிவு இது!//
முடிவு சாதகமாக வருகிறது என்று நினைக்குறேன்.
அடக் கொடுமையே 17 பேர், மறுபிறவி உண்மைன்னு சொல்றாங்களா? ஹ்ம்.
ReplyDelete////கூடுதுறை said...
ReplyDeleteஉண்மைத்தமிழன் என்று உடைத்தே சொல்லிவிடலாமே..
முற்பிறவி, அடுத்த பிறவி உள்ளது என்பதுதானே ஜோதிடத்தின் பாலபாடம்////
ஆமாம்! That is my next lesson (hi, hi, tamil software is disturbing - paduththukirathu)
////தமாம் பாலா said...
ReplyDeleteலக்னத்துக்கு 12 ல் செவ்வாய் இருந்தால் மறுபிறவி இல்லை என்கிறார்களே உண்மையா?////
12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பார்கள்
////கூடுதுறை said...
ReplyDeleteஇது இணைப்பிற்கு,
இது எதற்கு என்று கேட்பீர்கள். கூகிள் லாகின் செய்யாமல் பின்னுட்டமிட்டால் e-mail follow-up comments to my e-mail
டிக் அடிக்க இயலாது.
அடுத்து அந்த பிரச்னை இல்லை லாக் இன்னில் அதில் இருக்கும்போது டிக் அடித்துவிட்டால் நமக்கு e-mail லில் உங்களுக்கு வரும் அனைத்து பின்னுட்டங்களும் வந்து சேர்ந்துவிடும்.
தங்களுக்கு தெரியாதது அல்ல... தாங்கள் கேட்டமைக்காக கூறுகிறேன்...////
Thanks for the information, my dear friend!
////கூடுதுறை said...
ReplyDeleteஐயா,
தாங்கள் பின்னுட்ட மட்டுறுத்தல் எடுத்துவிட்டீர்களா?
பின்னுட்டங்கள் நேரடியாக வருகின்றன...
கவனியுங்கள்/////
Thanks. No problem, I will take care of it!
///கோவி.கண்ணன் said...
ReplyDelete1. முற்பிறவிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறதா ?
2. மனிதன் ஆடுமாடாகவும் பிறப்பான் என்ற நம்பிக்கை இருந்தால் இந்துக்களில் ஆடுமாடு திண்பவர்களே இருக்க மாட்டார்கள்
என்ன சொல்றிங்க ?////
மனிதன்தான் முதல். மதம் இரண்டாவது.
மதத்தை வைத்து ஏன் மனிதனைப் பிரிக்கிறீர்கள்? தனிமைப்படுத்துகிறீர்கள்?
கலியுகம் - மனிதன்தான் எதற்கும் கட்டுப்பட மாட்டேன் என்கிறானே!
கொன்றால் பாவம் ; தின்றால் போச்சு என்கிறானே?
”கடவுளை மற! மனிதனை நினை” என்றார் தந்தை பெரியார். அவர்தான் தூங்கிகொண்டிருந்த தமிழனைத் தட்டி எழுப்பி சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்தார்.
இன்று மக்களிடம் ஓட்டுவாங்கி மன்றங்களில் இருக்கும் மனிதர்களில் எத்தனை பேர்கள் சுய மரியாதையோடு இருக்கிறார்கள்? எத்தனை பேர்கள் மக்களுக்காகச் (தங்கள் குடும்ப மக்களுக்கு அல்ல) சேவை செய்கிறார்கள்? சொல்லுங்கள் கோவியாரே!
பரிணாம வளர்ச்சி என்றால் எனக்குத் தெரியும்!
அதென்ன பரிணாமக் கொள்கை? எனக்குத் தெரியாது!
////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
அதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டுப் பதிந்த வாக்கெடுப்புப் பதிவு இது!//
முடிவு சாதகமாக வருகிறது என்று நினைக்குறேன்.////
முடிவு எப்படி இருந்தாலும் ஏற்ருக் கொள்வோம்!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
/////Blogger SurveySan said...
ReplyDeleteஅடக் கொடுமையே 17 பேர், மறுபிறவி உண்மைன்னு சொல்றாங்களா? ஹ்ம்.////
கருத்தைச் சொல்வது எப்படிக் கொடுமையாகும்?
//அவர் பெயர் உ'னாவில் ஆரம்பித்து ன்' ல் முடியும்//
ReplyDeleteஎல்லாம் முருகன் செயல். :))
12ல் கேது, சரி, நீங்க பதில் சொல்லியாச்சா? திங்கள் பாடத்துக்காக வெய்டிங்க்.
////ambi said...
ReplyDelete//அவர் பெயர் உ'னாவில் ஆரம்பித்து ன்' ல் முடியும்//
எல்லாம் முருகன் செயல். :))
12ல் கேது, சரி, நீங்க பதில் சொல்லியாச்சா? திங்கள் பாடத்துக்காக வெய்டிங்க்./////
நானும் வெயிட்டிங் (பதிவிடுவதற்காக) !
என்னைப்பொறுத்தவரைக்கும் கடவுளும் இருக்கின்றார், மறுபிறவியும் இருக்கின்றது. கண்ணதாசன் ஒரு பாடலில் குறிப்பிடுவார் "வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய், விளக்கிட முடியாத தத்துவப்பொருளாய் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்" என்று. இதை நான் அனுபவத்திலும் உணர்ந்திருக்கின்றேன்.
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம். இந்த பிறவியில் பாவம் செய்யாதவர்களுக்குத்தான் மறுபிறவி இல்லை என்பார்கள். 12ம் வீட்டில் கேது இருந்தால் இந்த பிறவியில் பாவம் செய்யமாட்டார்கள் என்று அர்த்தமா? ( What software you are using to type in tamil. I am using Baamini E-Kalapai)
கல்கிதாசன்
சூரியன் மேற்கே உதிக்கிறது உண்மையா? பொய்யா? என்று கேட்பது போல் உள்ளது. பொய்யை உண்மையாக்க முடியாது.. மறுபிறவி என்பது 100/100 பொய்.
ReplyDelete/////தூக்கணாங்குருவி said...
ReplyDeleteஎன்னைப்பொறுத்தவரைக்கும் கடவுளும் இருக்கின்றார், மறுபிறவியும் இருக்கின்றது. கண்ணதாசன் ஒரு பாடலில் குறிப்பிடுவார் "வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய், விளக்கிட முடியாத தத்துவப்பொருளாய் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்" என்று. இதை நான் அனுபவத்திலும் உணர்ந்திருக்கின்றேன்.////
உங்கள் கருத்துப் பகிற்விற்கு நன்றி நண்பரே!
////ஒரு சின்ன சந்தேகம். இந்த பிறவியில் பாவம் செய்யாதவர்களுக்குத்தான் மறுபிறவி இல்லை என்பார்கள். 12ம் வீட்டில் கேது இருந்தால் இந்த பிறவியில் பாவம் செய்யமாட்டார்கள் என்று அர்த்தமா?/////
பாவம் செய்யாதாவன் யார் இருக்க முடியும்? அறிந்தோ அல்லது அறியாமலோ ஒரு எறும்பை மிடித்துவிட்டால்கூடப் பாவம்தானே!
12ல் இருக்கும் கேது துவைத்து எடுத்து விடுவான். அதனால் இருக்கலாம்!
////( What software you are using to type in tamil. I am using Baamini E-Kalapai)
கல்கிதாசன்/////
ஈ-கலப்பை! தங்லிஷ் டைப்பிங்!
/////நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteசூரியன் மேற்கே உதிக்கிறது உண்மையா? பொய்யா? என்று கேட்பது போல் உள்ளது. பொய்யை உண்மையாக்க முடியாது.. மறுபிறவி என்பது 100/100 பொய்.////
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
ReplyDeleteஇந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
Vijay
pugaippezhai.blogspot.com
மறுபிறவி என்பது மக்களை அடிமுட்டாளாக்கும் ஒரு கற்பனை வாதம்.இந்தக் கற்பனை எப்படிப் பரவி இருக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும் என்றால் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலைப் படித்துப் பாருங்கள்.
ReplyDelete(மரியாதைக்குரிய ஆசிரியர் படிக்காமலா இருந்திருப்பீர்கள்?)
This comment has been removed by the author.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI have voted..
தெரியவில்லை! நடு நிலைமை!
Thanks and Regards,
GK, BLR
சென்ற நூற்றாண்டில் ( 100 ஆண்டுகளுக்கு முன்பு) 30 கோடிக்குள் இருந்த மக்கள் தொகை இரண்டு பிள்ளை என்ற கணக்கில் பெத்துக் கொண்டாலும் 100 கோடி ஆகி இருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை 1 கோடிக்கு குறைவாகவே இருந்திருக்கும். ஆண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் மக்கள் தொகையில் புதிதாக சேர்ந்து கொண்டவர்கள் முன்பு பிறவியே எடுத்து இருக்க மாட்டார்களா ?
ReplyDeleteவாத்தியாரே..
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும்.
இணையம் கிடைத்தால் தமிழ் தட்டச்சு செய்ய முடியவில்லை. தட்டச்சு செய்ய முடிந்தால் இணையம் உள்ள கணிப்பொறி கிடைக்கவில்லை. கணிப்பொறி கிடைத்தால் இணையம் கிடைக்கவில்லை..
என்ன செய்வது? தாமதத்திற்கு இதுதான் காரணம்.
நானும் ஓட்டுப் போட்டுவிட்டேன்.
எனது கட்சிதான் முன்னணி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
/////விஜய் said...
ReplyDeleteதங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
Vijay
pugaippezhai.blogspot.com/////
பார்க்கிறேன் விஜய்!
////திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ReplyDeleteமறுபிறவி என்பது மக்களை அடிமுட்டாளாக்கும் ஒரு கற்பனை வாதம்.இந்தக் கற்பனை எப்படிப் பரவி இருக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும் என்றால் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலைப் படித்துப் பாருங்கள்.
(மரியாதைக்குரிய ஆசிரியர் படிக்காமலா இருந்திருப்பீர்கள்?)/////
அதை நான் படித்ததில்லை நண்பரே! தகவலுக்கு நன்றி!
/////Anonymous said...
ReplyDeleteDear Sir,
I have voted..
தெரியவில்லை! நடு நிலைமை!
Thanks and Regards,
GK, BLR/////
Thank you GK
/////கோவி.கண்ணன் said...
ReplyDeleteசென்ற நூற்றாண்டில் ( 100 ஆண்டுகளுக்கு முன்பு) 30 கோடிக்குள் இருந்த மக்கள் தொகை இரண்டு பிள்ளை என்ற கணக்கில் பெத்துக் கொண்டாலும் 100 கோடி ஆகி இருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை 1 கோடிக்கு குறைவாகவே இருந்திருக்கும். ஆண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் மக்கள் தொகையில் புதிதாக சேர்ந்து கொண்டவர்கள் முன்பு பிறவியே எடுத்து இருக்க மாட்டார்களா ?////
அதைவிட சிம்பிளாகக் கேட்கலாமே கோவியாரே -ஆதிமுதலில் ஆதாம் ஏவாள் இருவர்தானே?
அந்த இரண்டு இன்று எப்படி 700 கோடியானது?
கிராமங்களில் சொல்வார்கள்:
"டேய் சோற்றைச் சிந்தாதே, சிந்தினால் அடுத்த பிறவியில் ஈயாகப் பிறப்பாய்."
"டேய் மாட்டை அடிக்காதே, அது வாயில்லாத ஜீவன். அடுத்த பிறவியில் நீ கைவண்டி இழுத்து அந்தப் பாவத்தைத் தீர்க்கணும்"
"சிவன் சொத்து குலம் நாசம்; டேய் கோவில் சொத்தை அபகரித்து குடும்பம் நடத்தாதே!
அப்படி நடத்தினால், நீயும் உன் வருமானத்தில் வசதியாக வாழும் உன் குடும்பத்தினரும் அடுத்த
பிறவியில் கோவில் வாசலில் தட்டோடு அமர்ந்து பிச்சை எடுக்க வேண்டியதாகிவிடும்"
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ஒரு Chipற்குள் எவ்வளவோ விஷயங்கள் மனிதன் அடக்கலாம் என்றால், இறைவனின் சக்தியை யார் அறிவார்?
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
இணையம் கிடைத்தால் தமிழ் தட்டச்சு செய்ய முடியவில்லை. தட்டச்சு செய்ய முடிந்தால் இணையம் உள்ள கணிப்பொறி கிடைக்கவில்லை. கணிப்பொறி கிடைத்தால் இணையம் கிடைக்கவில்லை..
என்ன செய்வது? தாமதத்திற்கு இதுதான் காரணம்.
நானும் ஓட்டுப் போட்டுவிட்டேன்./////
தாமதமானால் என்ன தமிழரே? உங்கள் வேலைப் பளுவை அறிவேன்!
////எனது கட்சிதான் முன்னணி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?////
எல்லாம் முருகன் செயல்!
(உம்மை அவர் தனியாகக் கவனிக்கின்றார்)
உயிர் இறந்தவுடன் எங்கே செல்கிறது என்பதற்கு விடையிருந்தால் பதில் திட்டவட்டமாகக் கூரலாம். இருக்கும்வரை நன்மை செய்கின்றோமோயில்லையோ, தீமைச்செய்யாமலிருப்போம்.
ReplyDeleteவணக்கம் வாத்தியார்ஐயா !
ReplyDeleteநானும் வாக்களித்து விட்டேன் ! எனது கட்சி ஜெயிக்கும் கட்சி !
நானும் தினம் இறைவனின் காலடியை நினைத்து உருகுபவன் தான் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
/////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteஉயிர் இறந்தவுடன் எங்கே செல்கிறது என்பதற்கு விடையிருந்தால் பதில் திட்டவட்டமாகக் கூரலாம். இருக்கும்வரை நன்மை செய்கின்றோமோயில்லையோ, தீமைச்செய்யாமலிருப்போம்.////
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!
////ARUVAI BASKAR said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார்ஐயா !
நானும் வாக்களித்து விட்டேன் ! எனது கட்சி ஜெயிக்கும் கட்சி !
நானும் தினம் இறைவனின் காலடியை நினைத்து உருகுபவன் தான் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்/////
அப்படியென்றால் எனது மாணவர்களில் உங்களையும் சேர்த்து இறைவனுக்காக உருகுபவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று குறித்து வைத்துக்கொள்கிறேன்!
நன்றி அருப்புக்கோட்டையாரே!
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஅப்படியென்றால் எனது மாணவர்களில் உங்களையும் சேர்த்து இறைவனுக்காக உருகுபவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று குறித்து வைத்துக்கொள்கிறேன்!//
அப்போ நாங்களெலாம் உங்கள் கணக்கில் வரவில்லையா வாத்தியரே? அப்படி என்றால் உங்களுக்கு இரண்டு மாணாக்கர் போதுமே?
எங்கள் மனத்தை நோகடிது விட்டீரே.:-((((((((((

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...//
ReplyDelete//எனது கட்சிதான் முன்னணி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?//
சட்டாம் பிள்ளை அவர்களே சிறு திருத்தம், வேண்டுகோள்,.... உங்கள் வழி காட்டுதல் ஆகிய மாணவர்கள் நாங்கள்,..
வாத்தியாரின் வகுப்பில். நமது கட்சி என்று குறிப்பிடலாமே...?
வாத்தியாரின் சொல்படி கேட்கும் அத்தனை மாணாகரும் சரி என்றே வாக்களித்திரிக்கிறோம்....
வேண்டுகோள் பரிசீலிபிறாக...??!!$$#!!
/////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
அப்படியென்றால் எனது மாணவர்களில் உங்களையும் சேர்த்து இறைவனுக்காக உருகுபவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று குறித்து வைத்துக்கொள்கிறேன்!//
அப்போ நாங்களெலாம் உங்கள் கணக்கில் வரவில்லையா வாத்தியரே? அப்படி என்றால் உங்களுக்கு இரண்டு மாணாக்கர் போதுமே?
எங்கள் மனத்தை நோகடிது விட்டீரே.:-(((((((((( /////
என்னய்யா ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் போல.....?
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அந்த லிஸ்ட்டில் என்று சொன்னால் போதாதா?
////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...//
//எனது கட்சிதான் முன்னணி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?//
சட்டாம் பிள்ளை அவர்களே சிறு திருத்தம், வேண்டுகோள்,.... உங்கள் வழி காட்டுதல் ஆகிய மாணவர்கள் நாங்கள்,..
வாத்தியாரின் வகுப்பில். நமது கட்சி என்று குறிப்பிடலாமே...?
வாத்தியாரின் சொல்படி கேட்கும் அத்தனை மாணாகரும் சரி என்றே வாக்களித்திரிக்கிறோம்..../////
இதில் வாத்தியார் விருப்பம் எங்கே வந்தது?
திறந்த வாக்கெடுப்புத்தான்! (It is an open poll)
அவரவர்கள் எண்ணப்படி / மனசாட்சிப்படி / நம்பிக்கையின்படி வாக்களித்தால் போதும்
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஎன்னய்யா ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் போல.....?
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அந்த லிஸ்ட்டில் என்று சொன்னால் போதாதா?//
என்னய்யா ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் போல
என்றால் கருமி அல்லது கன்ச்ன் ,
நான் கேட்பது எனக்காக அல்ல...
வாத்தியாரின் வகுப்பில் வரும் அத்தனை மாணவர்களின் சார்பாக வாத்தியரே.. ....
எனக்கு மட்டும் என்றால் என்னையும் சேர்த்து 3 என்று இருப்பேன். பின்னே எதருக்கு வாத்தியரே மாணவர்களின் வருகை பதிவு....?
அதுதான் நொந்து கொண்டேன்...
மன்னித்து அரூள்மையும்
அதிக பிராங்கி தனமாய் இருந்தால் ஜாதகபடி..... :-(((
//இதில் வாத்தியார் விருப்பம் எங்கே வந்தது?
ReplyDeleteதிறந்த வாக்கெடுப்புத்தான்! (It is an open poll)
அவரவர்கள் எண்ணப்படி / மனசாட்சிப்படி / நம்பிக்கையின்படி வாக்களித்தால் போதும்//
"வாத்தியாரின் விருப்பபடி இல்லை" என்று நான் குறிப்பிடவில்லை......
எங்கள் எண்ணப்படி / மனசாட்சிப்படி / நம்பிக்கையின்படி வாக்களித்திருக்கிறோம்...
என்ன நான் சொல்வது சரிதானா தோழர்களே....
நான் குறிப்பிட்டது, எங்களையும் சேர்த்து இறைவனுக்காக உருகுபவர்களின் எண்ணிக்கை-யில்
சேர்க்கவும் இறைவன் அருள் கிடைக்க.... அதுதான் இத்தனை போராட்டம்...
என் நிலை: முற்பிறவி மறுபிறவின்னு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்;)
ReplyDelete//நவநீத்(அ)கிருஷ்ணன் said...
உயிர் இறந்தவுடன் எங்கே செல்கிறது என்பதற்கு விடையிருந்தால் பதில் திட்டவட்டமாகக் கூரலாம்// ரிப்பீட்டு. யாரோ (அம்பேத்கார், காந்த) செய்த நன்மைகள் இன்னிக்கும் நிக்குறது... யாரோ செய்த கொடுமைகள் இன்னிக்கும் (இரட்டை டம்ளர், இன்னும் பல:( இருக்கே! அது தான் மறுபிறவின்னு நம்பறேன்.
கட்சி தோக்கற கட்சின்னாலும் பரவாயில்லை.
உள்ளம் உருகுதையா உன்னடி காண்கையிலே
ReplyDeleteஅள்ளி அணைக்கையிலே எனக்குள் ஆசை பெருகுதப்பா.. - டி.எம்.எஸ்.
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய்..உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்னாளும் குறையொன்றும் எனக்கில்லை..
- எம்.எஸ்
வி(ம்)மல் தம்பி, எங்க சார்பா வாத்தியார்
கிட்டே முறையிடும் உங்கள் அன்பு என்னை
மேற்படி பாடல்கள் போல கசிந்துருக வைத்தது..
அது அவருக்கும் நன்றாகவே தெரியும்
சும்மா உங்க கிட்ட தமாசு செய்கிறார்..
அப்படித்தானே ஆசானே..கோவை விமல்
வெள்ளந்திங்கோ..நொம்ப இன்னொசண்டுங்கோ :-))
20 வருசம் முன்னாடி நான் கூட அப்படித்தான் இருந்தேன்.. ஹூம்...
/////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
என்னய்யா ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் போல.....?
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அந்த லிஸ்ட்டில் என்று சொன்னால் போதாதா?//
என்னய்யா ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் போல
என்றால் கருமி அல்லது கன்ச்ன் ,
நான் கேட்பது எனக்காக அல்ல...
வாத்தியாரின் வகுப்பில் வரும் அத்தனை மாணவர்களின் சார்பாக வாத்தியரே.. ....
எனக்கு மட்டும் என்றால் என்னையும் சேர்த்து 3 என்று இருப்பேன். பின்னே எதருக்கு வாத்தியரே மாணவர்களின் வருகை பதிவு....?
அதுதான் நொந்து கொண்டேன்...
மன்னித்து அரூள்மையும்
அதிக பிராங்கி தனமாய் இருந்தால் ஜாதகபடி..... :-(((/////
மாணவர்களின் வருகைப் பதிவா? அதில் பெயர் இல்லாத எத்தனையோ பேர்கள்
பதிவிற்கு வந்து போகிறார்கள் நண்பரே!
வாக்கெடுப்பு எல்லோருக்கும் பொதுவானதுதான். இந்தப் பதிவின் பின்னூட்டங்கள்
அனைத்தையும் படியுங்கள். எத்தனை பேர் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள் என்று தெரியும்!
////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteஎன் நிலை: முற்பிறவி மறுபிறவின்னு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்;)
//நவநீத்(அ)கிருஷ்ணன் said...
உயிர் இறந்தவுடன் எங்கே செல்கிறது என்பதற்கு விடையிருந்தால் பதில் திட்டவட்டமாகக் கூரலாம்// ரிப்பீட்டு. யாரோ (அம்பேத்கார், காந்த) செய்த நன்மைகள் இன்னிக்கும் நிக்குறது... யாரோ செய்த கொடுமைகள் இன்னிக்கும் (இரட்டை டம்ளர், இன்னும் பல:( இருக்கே! அது தான் மறுபிறவின்னு நம்பறேன்.
கட்சி தோக்கற கட்சின்னாலும் பரவாயில்லை.////
இதில் வெற்றி தோல்வி எங்கே வருகிறது சகோதரி?
ஒரு கருத்துப் பரிவர்த்தனைதான் நடக்கிறது!
நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் இருவருமே மதிப்பிற்குரியவர்கள்தான்
அவரவர்கள் கருத்து சுதந்திரம் அவரவருக்கு முக்கியமே!
////தமாம் பாலா said...
ReplyDeleteஉள்ளம் உருகுதையா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைக்கையிலே எனக்குள் ஆசை பெருகுதப்பா.. - டி.எம்.எஸ்.
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய்..உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்னாளும் குறையொன்றும் எனக்கில்லை..
- எம்.எஸ்
வி(ம்)மல் தம்பி, எங்க சார்பா வாத்தியார்
கிட்டே முறையிடும் உங்கள் அன்பு என்னை
மேற்படி பாடல்கள் போல கசிந்துருக வைத்தது..
அது அவருக்கும் நன்றாகவே தெரியும்
சும்மா உங்க கிட்ட தமாசு செய்கிறார்..
அப்படித்தானே ஆசானே..கோவை விமல்
வெள்ளந்திங்கோ..நொம்ப இன்னொசண்டுங்கோ :-))
20 வருசம் முன்னாடி நான் கூட அப்படித்தான் இருந்தேன்.. ஹூம்...////
நீங்கள் சொல்வது 100/100 சரிதான் பாலா!
வகுப்பறையிலேயே அவர்தான் வயதில் சிறியவர். அவரிடம் தமாஷ் செய்யாமல்
யாரிடம் செய்வது?
//SP.VR. SUBBIAH said..
ReplyDeleteநீங்கள் சொல்வது 100/100 சரிதான் பாலா!
வகுப்பறையிலேயே அவர்தான் வயதில் சிறியவர். அவரிடம் தமாஷ் செய்யாமல்
யாரிடம் செய்வது? //
என்ன வச்சி காமடி கீமாடீ ஏதும் பண்ணலையே?
என்ன செய்வது எங்கு சென்றாலும் நான்தான் சிறியணாவாக இருக்கிறேன் வயதில்(பள்ளியில், கல்லுரியில், வேலை செய்யும் இடத்தில் கூட).
இதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன், வருத்தம் கிடையாது.
ஏன் என்றால், எனக்கு உற்ற ஆலோசனைகளும், அறிவுரைகளும், GUIDENCE, பாதுகாப்பும். வாழ்க்கை பாடங்களும் கிடைக்கும் அல்லவா...
(பெரியோர் கூட இருக்கும் பொழுது)
இறைவனுக்கு நன்றி
///////“ கடவுள் எங்கே கோவில் கேட்டார்? மனிதனல்லவா ஊருக்குப் பத்துக்
ReplyDeleteகோவில்களைக் கட்டி வைத்துள்ளான். அதற்கு அவரைக் குறை சொல்லி என்ன பயன்?
அதோடு கோவிலில் உள்ள விக்கிரங்களுக்கு, அவனே ஆடை அணிகலன்களை
அணிவித்து விட்டு, அது திருட்டுப்போகாமல் இருக்கப் பூட்டையும் மாட்டியுள்ளான்.
அதற்கு அவர் எப்படிக் காரணமாக முடியும்? அவர் கருணை மிக்கவர். கும்பிடுகிறவனும்,
திருடுகிறவனும் அவருக்கு ஒன்றுதான்.”////
"சுயம்புவய் கடவுள் அவதரித்ததாய் சொல்லுவது எல்லாம் அப்போ பொய்தானா?" வாத்தியாரே?
பகவத் கீதையில் நீ எதை செய்தாலும் அது இந்த கிருஷ்னனே செய்ததுதான் என்று அர்ச்சுணனுக்கு கிருஷ்ணன் உபதேசிக்கிறானே.அப்போ கிருஷ்ணன் தானே ஊருக்கு பத்து கோவில் கட்டியதா அர்த்தம்.
ஒன்னு இருக்கு
இல்ல இல்லை'ன்னு சொல்லனும்
அது என்னா? நடு நிலை
இருக்கு ஆனா இல்லை.
////நயன் தாராவிற்கும், நமீதாவிற்கும் உருகி ஓய்ந்து போகிறவர்களின் எண்ணிக்கையில்
பாதிப்பேர்கள் கூட இறைவனுக்காக உருகுகிறவர்கள் இல்லை!///
அந்த பரமாத்மா கிருஷ்ணனே கோபிகைகளுக்கும்,
சிவபெருமானே மோகினுக்கும் மயங்கிய போது.
கிருஷ்ன பரமாத்மாவின் படைப்பான (in your idealogy)லக்கி லுக் ஏதோ அவரின் தகுதிக்கு ஏற்றவாறு நயன் தாராவிற்கும், நமீதாவிற்கும் உருகி ஓய்ந்து போவதில் என்ன தவறு இருக்க முடியும். இறை பக்தி வேண்டுமென்று பார்வதியின் மீதோ அல்லது .... மோகம் கொண்டால்தான் தவறு.
////மார்க்சியன் said...
ReplyDelete///////“ கடவுள் எங்கே கோவில் கேட்டார்? மனிதனல்லவா ஊருக்குப் பத்துக்
கோவில்களைக் கட்டி வைத்துள்ளான். அதற்கு அவரைக் குறை சொல்லி என்ன பயன்?
அதோடு கோவிலில் உள்ள விக்கிரங்களுக்கு, அவனே ஆடை அணிகலன்களை
அணிவித்து விட்டு, அது திருட்டுப்போகாமல் இருக்கப் பூட்டையும் மாட்டியுள்ளான்.
அதற்கு அவர் எப்படிக் காரணமாக முடியும்? அவர் கருணை மிக்கவர். கும்பிடுகிறவனும்,
திருடுகிறவனும் அவருக்கு ஒன்றுதான்.”////
"சுயம்புவய் கடவுள் அவதரித்ததாய் சொல்லுவது எல்லாம் அப்போ பொய்தானா?" வாத்தியாரே?
பகவத் கீதையில் நீ எதை செய்தாலும் அது இந்த கிருஷ்னனே செய்ததுதான் என்று அர்ச்சுணனுக்கு கிருஷ்ணன் உபதேசிக்கிறானே.அப்போ கிருஷ்ணன் தானே ஊருக்கு பத்து கோவில் கட்டியதா அர்த்தம்.
ஒன்னு இருக்கு
இல்ல இல்லை'ன்னு சொல்லனும்
அது என்னா? நடு நிலை
இருக்கு ஆனா இல்லை.
////நயன் தாராவிற்கும், நமீதாவிற்கும் உருகி ஓய்ந்து போகிறவர்களின் எண்ணிக்கையில்
பாதிப்பேர்கள் கூட இறைவனுக்காக உருகுகிறவர்கள் இல்லை!///
அந்த பரமாத்மா கிருஷ்ணனே கோபிகைகளுக்கும்,
சிவபெருமானே மோகினுக்கும் மயங்கிய போது.
கிருஷ்ன பரமாத்மாவின் படைப்பான (in your idealogy)லக்கி லுக் ஏதோ அவரின் தகுதிக்கு ஏற்றவாறு நயன் தாராவிற்கும், நமீதாவிற்கும் உருகி ஓய்ந்து போவதில் என்ன தவறு இருக்க முடியும். இறை பக்தி வேண்டுமென்று பார்வதியின் மீதோ அல்லது .... மோகம் கொண்டால்தான் தவறு.////
தம்பி.. இது வகுப்பறை!; கழிப்பறை அல்ல!
முதலில் உன்னுடைய உண்மைப்பெயரில் எழுது!
லக்கியார் எனது நண்பர்.
அவர் பெயரை எதற்கு இதில் கொண்டு வந்து முடிகிறாய்?
உனக்குப் பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை!
என் பதிவுகளைப் படிக்கும் அறுகதை உனக்கு இல்லை!
உனக்கு விருப்பம் இருந்தால் படி!
இல்லையென்றால் ஓடிப்போய் விடு!
உள்ளே வந்து தொல்லை செய்யாதே!
இதுவே உன்னுடைய இரண்டாவதும், கடைசிப் பின்னூட்டமாகவும் இருக்கட்டும்!
உனக்குப் புத்தி தெளிந்த பிறகு இங்கே வா!
I am your fan, reading your article I learned a lot from your article,I wish you to write more in future.
ReplyDeleteThanks and regards
A.Ahil
I am very happy to read your lesson of astrology I have faith in rebirth.
ReplyDeleteunmaai
ReplyDeletesir enakku marupiravila nambikkai unndu.. sir enaku 12th house la kethu irukku . 12th placela surian puthan maanthi kethu irukkanga so enakku marupuravi illaya
ReplyDeleterebirth do exists.. I have faith in that
ReplyDelete