மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.6.08

அள்ள அள்ள பணமா? தள்ள தள்ள விதியா?

அள்ள அள்ள பணமா? தள்ள தள்ள விதியா?

"காசேதான் கடவுளடா - அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா!"

என்று ஒரு கவிஞன் பாட்டெழுதினான். இப்பொழுதல்ல - 35 வருடங்களுக்கு
முன்பே எழுதினான். அது எவ்வளவு உண்மை என்பதை இன்று நாம் கண்
கூடாகப் பார்க்கிறோம்.

ஒரு படத்தில் திரு.M.R.ராதா அவர்கள் பணக்காரராகவும் அதே நேரத்தில்
வடிகட்டின கஞ்சனாகவும் நடித்திருப்பார். படம்: பட்டினத்தார்

அந்தப் படத்தில் தன்னுடைய நெறிமுறைகளை அட்டைகளில் எழுதி வீட்டில்
தொங்க விட்டிருப்பார். அதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கீழே
கொடுத்துள்ளேன்.

1. கட்டிய மனைவியானாலும் வட்டியை வாங்கு!
2. ஊரான் பொருளானாலும் உனதென்று நினை!
3. மனதைச் செலவிட்டாலும் பணத்தைச் செலவிடாதே!
4. கணக்கன் சம்பளத்திற்குக் கடனைச் சொல்லு!
5. உற்ற தாயானாலும் உள்ளதைச் சொல்லாதே!

இன்று பல பேர் கஞ்சனாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் சுயநலம்.

என் தந்தையார் பர்மாக் கதையொன்று சொல்லுவார் (அவர் சின்ன வயதில்
பர்மாவில் உள்ள சூம்பியோ நகரில் சில காலம் வியாபார நிமித்தமாக இருந்தவர்)
பர்மா மிகவும் செழிப்பான நாடு. நமது கேரளாவைப்போல எங்கும் பச்சைப் பசேல்
என்று இருக்குமாம்.

அது 1940 களில் பிரபலம்

அங்கே வியாபாரம் செய்து கொண்டிருந்தவனிடம் அவனுடைய நண்பன் சொன்னானாம்

"நாளை வீயட்நாமிலிருந்து 1,000 இளம் பெண்கள் இங்கே வருகிறார்கள்

உடனே நம்ம ஆள் கேட்டான், "என்ன செய்யப்போகிறீர்கள்?"

"கேட்கிறவர்களுக்குக் கேக்கிறபடி பெண்களைக் கொடுக்கப்போகிறோம்"

"அப்படியென்றால் எங்கள் வீட்டிற்கு 3 பெண்களைப் பதிவு செய்துகொள்"

அவன் கேட்டான்,"என்ன கணக்கு?"

"எனக்கொன்று, என் அப்பாவிற்கொன்று, என் தம்பிக்கொன்று!"

வந்தவன் எழுதிக்கொண்டு போய்விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவன் வந்து கேட்டான், " முன்னூறு ரூபாய் கொடு!"

நம்ம ஆள் திரும்பக் கேட்டான், " எதற்கு?"

அவன் சொன்னான், " பெண்களெல்லாம் ஃப்ரீ; ஆனால் கூட்டிக் கொண்டு வந்த
கப்பல் செலவு தலைக்கு நூறு ரூபாய்!. உங்கள் வீட்டிற்கு 3 பெண்கள் ஆகவே
முன்னூறு ரூபாய்"

இவன் உடனே பதட்டத்துடன் சொன்னான்,"நான் டோட்டலாகப் ஃப்ரீ என்று
நினைத்திருந்தேன் காசென்றால் வேண்டாம்" என்று சொல்ல வந்தவன், அப்படிச்
சொல்லாமல்," ராத்திரி யோசித்துப் பார்த்தேன், எங்களுக்கு வேண்டாம்!" என்றான்

அவன் விடவில்லை, "இதற்கென்ன கணக்கு?" என்றான்.

நம்ம ஆள் நெத்தியடியாகப் பதிலைச் சொன்னான்.

"எனக்குக் கல்யாணமாகிவிட்டது. எங்கப்பாவிற்கு வயதாகிவிட்டது. எனதம்பி
சின்னப்பயல்!"

இப்படித்தான் பலபேர் ஓசி'யென்றால் பத்து என்பார்கள். காசென்றால் ஒன்றும்
வேண்டாமென்று சொல்லிவிடுவார்கள்.
------------------------------------------------------------------
கஞ்சனைக்கூடச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் அவனைவிட மோசமானவன் கருமி.

கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்?

தன் வீட்டுத் தோட்டத்தில் விளையும் மாம்பழங்களில், தன் மனைவிக்கும், பிள்ளை
களுக்கும் மட்டும் பத்து அல்லது இருபது பழங்களைக்கொடுத்துவிட்டு மற்றதை
யெல்லாம் சந்தையில் விற்றுக் காசாக்குபவன் கஞ்சன்.
(அவன் தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அந்தப் பழங்களைக் கண்ணிலேயே
காட்ட மாட்டான்)

கருமி தன் மனைவி மக்களுக்குக் கூட ஒன்றையும் கொடுக்காமல் அத்தனை
பழங்களையும் சந்தையில் விற்றுக் காசாக்கிவிடுவான் ( மனைவி மக்களிடம்
சொல்லுவான். இது உயர்ந்த வகைப் பழம் - நல்ல விலை இடைத்தது. ஆகவே
விற்றுவிட்டேன். நமக்கு வேண்டுமென்றால் அவ்வப்போது வாங்கித் திண்போம்!)
-----------------------------------------------------------------
சரி, மனிதன் பணத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறியாக இருக்கிறான்?

அதை வெறி என்று சொல்ல முடியாது. பக்தி என்று கொள்ளலாம்
அவர்களுக்கெல்லாம் காசுதான் கடவுள்.

அது நல்லதா?

அல்ல! அது அறியாமை!

"பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம"
- குறள் 376

ஊழால் நமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும்
நம்மிடத்து நிற்கமாட்டா. ஊழால் நமக்கு உரிய பொருள்கள் வெளியே
கொண்டுபோய்க் கொட்டினாலும் நம்மை விட்டுப் போக மாட்டா!
------------------------------------------------------------
சரி, ஜாதகத்தைப் பார்த்து ஒருவன் கஞ்சனா என்று தெரிந்து கொள்ள
முடியுமா?

முடியும்!

குரு 12ல் அல்லது 6ல் இருந்தாலும் அல்லது நீசம் பெற்றிருந்தாலும்
அவன் கஞ்சன் (Miser)

அப்படியிருந்து ஒன்பதாம் அதிபதி உச்சமாக இருந்தால் அதற்கு
மட்டும் விதிவிலக்கு!
----------------------------------------------------
எத்தனை பேர்கள் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை!

ஜாதகம் கணிக்கும் மென்பொருள், அதற்கான இணைய தளம்,
அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளைக் கொடுக்கும் தளம் ஆகியவற்றிற்கான
சுட்டிகளை side bar ல் நிரந்தரமாகக் கொடுத்துள்ளேன்.

புது மாணவர்களின் வசதிக்காக அதைக் கொடுத்துள்ளேன்
அனைவரும் தேவையானபோது அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளலாம்
---------------------------------------------------
ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு எளிய உபாயம் இருக்கிறது.

முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் முழுமையாக மனப்பாடம்
செய்து வைத்துக் கொள்ளுங்கள். நட்சத்திரம், லக்கினம், சந்திர ராசி,
12 வீடுகளுக்கும் அதிபதிகள் அமர்ந்திருக்கும் இடம், அஷ்டக வர்க்கம்,
பிறந்த போது இருந்த தசா இருப்பு, இப்போது நடைபெறும் தாசா புக்தி
என்று எதைக்கேட்டலும், எப்போது கேட்டாலும், எப்படிக் கேட்டாலும்
சொல்லத் தெரிய வேண்டும்!

உங்கள் ஜாதகம் உங்களுக்கே தெரியவில்லை என்றால் என்ன பயன்?

ஒரு புது விதியைப் படிக்கும்பொது, முதலில் (பாழாய்ப்போன) நமது மனது
அந்த விதி நமக்குப் பொருந்துகிறதா என்றுதான் எண்ணிப் பார்க்கும்
அப்பொது அது கை கொடுக்கும். அந்த மனப் பாடம் கை கொடுக்கும்

என்ன நான் சொல்வது சரிதானே?

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கம்

(தொடரும்)

51 comments:

  1. ஆசிரியர் ஐயா,

    பனத்தின் கடவுள்தன்மையையும்,கருமிக்கும் கஞ்சனுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் போதே வகுப்பு மாணாவர்களுக்கு அவர்கள் ஜாதக் குறிப்பு பற்றிய அவசியத்தை சொலவ்து

    கதை கதையாக இருந்தாலும்
    கருத்து நமது பாடத்தின் மேல்

    நன்றிகள்

    ReplyDelete
  2. கதை மிகவும் ரசிக்கும் படியிருந்தது.

    ReplyDelete
  3. ////திருநெல்வேலி கார்த்திக் said...
    ஆசிரியர் ஐயா,
    பணத்தின் கடவுள்தன்மையையும்,கருமிக்கும் கஞ்சனுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் போதே வகுப்பு மாணாவர்களுக்கு அவர்கள் ஜாதக் குறிப்பு பற்றிய அவசியத்தை சொல்வது
    கதை கதையாக இருந்தாலும்
    கருத்து நமது பாடத்தின் மேல்
    நன்றிகள்///

    ஆமாம், கதை தேன்.பாடம் மருந்து. இரண்டையும் கலந்தால்தான் சாப்பிட முடியும்!

    ReplyDelete
  4. ////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
    கதை மிகவும் ரசிக்கும் படியிருந்தது.////

    ரசிக்க முடியாதவற்றை நான் எழுதமாட்டேன்.
    உங்களின் நாடி எனக்குத் தெரியாதா?:-)))))
    அடிப்படையில் நானும் ஒரு வாசகன்தானே!

    ReplyDelete
  5. Good explanation.


    -Shankar

    ReplyDelete
  6. ////Anonymous said..
    Good explanation.
    -Shankar///
    எதைச் சொல்கிறீர்கள் சங்கர்?
    பதிவையா அல்லது பின்னூட்டத்தையா?

    ReplyDelete
  7. ///////Anonymous said..
    Good explanation.
    -Shankar///
    எதைச் சொல்கிறீர்கள் சங்கர்?
    பதிவையா அல்லது பின்னூட்டத்தையா?////

    Good joke though...I was saying about the blog(description about kanjan and karumi)

    -Shankar

    ReplyDelete
  8. ////Anonymous said...
    ///////Anonymous said..
    Good explanation.
    -Shankar///
    எதைச் சொல்கிறீர்கள் சங்கர்?
    பதிவையா அல்லது பின்னூட்டத்தையா?////
    Good joke though...I was saying about the blog(description about kanjan and karumi)
    -Shankar////

    ஆமாம், அப்படி உதாரணம் சொன்னால்தான் வித்தியாசம் தெளிவுபடும் நண்பரே!

    ReplyDelete
  9. குருவே,

    போகும் பொழுது ஒரு பைசாவைக் கூட எடுத்து செல்ல முடியாத பொழுதும், கஞ்சர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக பணத்தை சேர்கின்றார்களோ? அதற்கும் காரணம் ஜாதக அமைப்பு என்று தெரியும் பொழுது வியப்பாக உள்ளது.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  10. //எத்தனை பேர்கள் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை!//
    கவனித்தேன் வாத்தியரே, ரெகுலர் மாணவர்கள் எல்லாம் அத்தனை சுட்டி-இய்யும் எங்கள் புத்தக மார்கில் வைத்துலோம். ஆனால் இது புதிய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    இன்றைய பாடம் அருமை வாத்தியரே.

    ReplyDelete
  11. குருவே,

    ஒரு ஐயம். www.planetarypositions.com தளத்தில் கணிக்கும் ஜாதகத்திற்கும், jagannath horo-வை அஷ்டவர்க்கம் தெரிய பயன்படுத்தும் பொழுது வரும் ஜாதகத்திற்கும் லக்ன நிலைகளில் வேறுபாடு வருகின்றது. எந்த தளத்தைப் பயன்படுத்தலாம்?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  12. ஐயா,

    எனக்கு ஒரு சந்தேகம்

    //். நட்சத்திரம், லக்கினம், சந்திர ராசி,
    12 வீடுகளுக்கும் அதிபதிகள் அமர்ந்திருக்கும் இடம், அஷ்டக வர்க்கம்,
    பிறந்த போது இருந்த தசா இருப்பு, இப்போது நடைபெறும் தாசா புக்தி
    என்று எதைக்கேட்டலும்,//!

    இதில் 12 வீடுகளுக்கும் அதிபதிகள் அமர்திருக்கும் இடம் சரியாக புரியவில்லை.

    12 வீடுகளுக்கும் அதிபதிகள் யார் யார்? ஏற்கனெவே பதிவு இருந்தால் லிங்க் கொடுக்கவும் படித்துக்கொள்கிறேன்.

    மற்றபடி அனைத்தும் மனப்பாடம்

    பாடத்தை மிகச் சுருக்கமாக முடித்துவிட்டிர்களே?
    நன்றி

    ReplyDelete
  13. ////Anonymous said...
    குருவே,
    போகும் பொழுது ஒரு பைசாவைக் கூட எடுத்து செல்ல முடியாத பொழுதும், கஞ்சர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக பணத்தை சேர்கின்றார்களோ? அதற்கும் காரணம் ஜாதக அமைப்பு என்று தெரியும் பொழுது வியப்பாக உள்ளது.
    அன்புடன்
    இராசகோபால்////

    ஆமாம் எல்லாவற்றிற்குமே ஒரு அமைப்பு உள்ளது!

    ReplyDelete
  14. ////கோவை விமல்(vimal) said...
    //எத்தனை பேர்கள் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை!//
    கவனித்தேன் வாத்தியரே, ரெகுலர் மாணவர்கள் எல்லாம் அத்தனை சுட்டி-இய்யும் எங்கள் புத்தக மார்கில் வைத்துலோம். ஆனால் இது புதிய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
    இன்றைய பாடம் அருமை வாத்தியரே.///

    இதுபோல பாடங்களுக்கும் பெயர்களுடன் ஸைட்பாரில் தனித்தனியாக சுட்டி கொடுக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? அதற்கு தொழில் நுட்பமாக வசதி உள்ளதா?

    ReplyDelete
  15. ////Anonymous said...
    குருவே,
    ஒரு ஐயம். www.planetarypositions.com தளத்தில் கணிக்கும் ஜாதகத்திற்கும், jagannath horo-வை அஷ்டவர்க்கம் தெரிய பயன்படுத்தும் பொழுது வரும் ஜாதகத்திற்கும் லக்ன நிலைகளில் வேறுபாடு வருகின்றது. எந்த தளத்தைப் பயன்படுத்தலாம்?
    அன்புடன்
    இராசகோபால்///

    வேறு படாது. இரு தளங்களுமே இந்தியன் எஃப்மரீஸைத்தான் பயன் படுத்துகின்றன!
    ஒரு உதாரணத்துடன் மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்.பார்த்துச் சொல்கிறேன்

    ReplyDelete
  16. ////கூடுதுறை said...
    ஐயா,
    எனக்கு ஒரு சந்தேகம்
    //். நட்சத்திரம், லக்கினம், சந்திர ராசி,
    12 வீடுகளுக்கும் அதிபதிகள் அமர்ந்திருக்கும் இடம், அஷ்டக வர்க்கம்,
    பிறந்த போது இருந்த தசா இருப்பு, இப்போது நடைபெறும் தாசா புக்தி
    என்று எதைக்கேட்டலும்,//!
    இதில் 12 வீடுகளுக்கும் அதிபதிகள் அமர்திருக்கும் இடம் சரியாக புரியவில்லை.
    12 வீடுகளுக்கும் அதிபதிகள் யார் யார்? ஏற்கனெவே பதிவு இருந்தால் லிங்க் கொடுக்கவும் படித்துக்கொள்கிறேன்.
    மற்றபடி அனைத்தும் மனப்பாடம்
    பாடத்தை மிகச் சுருக்கமாக முடித்துவிட்டிர்களே?
    நன்றி///

    ஒவ்வொரு வீட்டிற்கும் (ராசிக்கும்) அதன் ஆட்சி கிரகம்தான் அதிபதி!
    பழைய பாடங்களைப் பாருங்கள்

    மேஷம், விருச்சிகம் = செவ்வாய் அதிபதி
    ரிஷபம், துலாம் - சுக்கிரன் அதிபதி
    மிதுனம், கன்னி = புதன் அதிபதி
    தனுசு, மீனம் = குரு அதிபதி
    மகரம், கும்பம் = சனி அதிபதி
    கடகம் = சந்திரன் அதிபதி
    சிம்மம் = சூரியன் அதிபதி
    (போதுமா?)

    ReplyDelete
  17. ////கூடுதுறை said...
    இது இணைப்பிற்கு///

    எதற்கு இது நண்பரே?

    ReplyDelete
  18. குருஜி,
    பணமெ பிரதானமாகி விட்ட இந்த காலத்துக்கு உங்கள் கஞ்சன்,கருமி விளக்கமும் நடிகவேள் உதாரணமும்
    மிகவும் அவசியம்,வாழ்க்கை நெறி
    போதிக்கும் உங்களுக்கு நன்றி மட்டும்
    கூறினால் அதுவும் கஞ்சத்தனம் தானே :-)

    சுருளிராஜன் ஒரு படத்தில் மகனிடம் கூறுவார்.. ஏண்டா பஸ் பின்னால ஓடி வந்த, டாக்ஸி பின்னால ஓடி வந்தா 10 ரூபா மிச்சமாயிருக்குமே என்று..

    வாழ்க்கையிலே நிறைய பேர் சம்பாதிக்கிறார்கள்..கொஞ்சம் பேர் தான் பயனுள்ள வகையில் செலவு செய்கிறார்..பாக்கி எல்லாம் நாய் பெற்ற தெங்கம் பழம் தான்..!!

    உங்களது நிரந்தர சுட்டியை மட்டுமா கவனித்தோம் நாம், இந்தியன் ப்ளாக் அசோசியேஷனில் நம் வகுப்புஅறை இணைந்ததையும் தான் :-) great !!

    வையகம், வாழ்க வளமுடன்,வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  19. //ஒரு ஐயம். www.planetarypositions.com தளத்தில் கணிக்கும் ஜாதகத்திற்கும், jagannath horo-வை அஷ்டவர்க்கம் தெரிய பயன்படுத்தும் பொழுது வரும் ஜாதகத்திற்கும் லக்ன நிலைகளில் வேறுபாடு வருகின்றது. எந்த தளத்தைப் பயன்படுத்தலாம்?
    //

    @rajagopal, கிடையாது. நீங்கள் Latitude & longitude சரியாக குடுத்து இருக்கீங்களா?னு சரி பாக்கவும். மாத்தி குடுத்தா இந்த குழப்பம் வரும் (ஹிஹி, வந்தது). :))


    குருவே, கஞ்சதனத்துக்கும் இப்படி ஒரு பிண்ணனி இருக்கா? உபயோகமான தகவல்.

    அப்ப சில பேர் ஊதாரிதனமாய் செலவாளியாய் இருகாங்களே, சேமிப்புனா கிலோ என்ன விலை?னு கேக்கறவங்க ஜாதக அமைப்பு பற்றியும் சொல்லுங்க குருவே.

    //இது இணைப்பிற்கு///

    எதற்கு இது நண்பரே?
    //

    குருவே, தாங்கள் பின்னூட்ட பதில் அளித்தால் மெயிலாகவே பதிலை பெறுவதற்க்கு. ஒரு செக்பாக்ஸ் (Email follow-up comments)இருக்கு பாருங்க, உங்க பின்னூட்ட பெட்டியில். அதுக்கு தான் கூடுதுறை சாம்பிள் பின்னூட்டம் அளித்து இருக்கிறார். :))

    ReplyDelete
  20. நன்றி அம்பி அவர்களே, எனக்காக பதில் சொன்னதுற்கு.

    தங்களின் பின்னுட்டங்கள் எனது மெயில்பாக்ஸுக்குவருவத்ற்க்குத்தான்

    விளக்கத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  21. //இதுபோல பாடங்களுக்கும் பெயர்களுடன் ஸைட்பாரில் தனித்தனியாக சுட்டி கொடுக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? அதற்கு தொழில் நுட்பமாக வசதி உள்ளதா?//

    வாத்தியரே, நான் Progammer இல்லை, System Admin-தான், நீங்கள் கேட்பது போல ஸைட்பாரில் தனித்தனியாக சுட்டி கொடுக்க அல்லது தெரிய வேண்டும் endral HTML allathu XML coding than mudiyum. எதற்கும் இந்த இனிய தளத்தை பாருங்கள் http://www.dynamicdrive.com/, இது உங்கள் வேண்டுகொலுக்கு உபயோகமாக இருக்கும். இதில் பல வேறு வகையான நமது வசத்திகேற்ப Scripts கிடைக்கின்றன, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம். உங்களுக்கு தேவை படும் Script-i copy செய்து. அதை Edit செய்து. ப்‌லாகர் HTML editor-l சேர்த்து விட்டு பாருங்கள்.

    ReplyDelete
  22. 1.வாத்தியரே ஜாதகம் கணிக்கும் பொழுது ராசி கட் ட மும், நாவம்ச கட் ட மும் வருகிறது. இதில் ராசி கட்டம் மட்டுமே நாம் பார்க்கிறோம். நாவம்ச கட்டம் எதற்கு?

    2.பகை, நட்பு, உட்சம் புரிகிறது, நீசம் என்றால் என்ன வாத்தியரே?

    ReplyDelete
  23. சார்,

    இந்த ஓசி சபலம் பெரிய இடங்களிலும் இருக்குது.

    ஒரு தடவை ஐந்து நட்சத்திர விடுதியில் வங்கி உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அங்கு Buffet முறை இல்லை. மேசையில் வந்து விசாரித்து வழங்கினார்கள். உணவின் இறுதியில் dessert வேண்டுமா என்று சிப்பந்தி கேட்டார். ஒரு உயர் அதிகாரி ஒருவேளை இதற்கு extra பணம் கேட்பார்களோ என்று நினைத்து எனக்கு வேண்டாம் என்றார். மேசையில் இருந்த அனைவரும் (என்னையும் சேர்த்து) வேண்டாம் என்றோம். சிப்பந்தி புன்னகையுடன் இது மெனுவில் அடங்கும் சார். சாப்பிடாவிட்டாலும் சார்ஜ் செய்யப்படும் என்றார். உடனே அனைவரும் (என்னை தவிர்த்து. எனக்கு நீரிழிவு வியாதி உள்ளதால்)அசடு வழிந்தவாறு அப்படின்னா கொண்டாங்க என்றார்கள்.

    ReplyDelete
  24. Good Morning Sir,
    Present Sir,

    GK, BLR

    ReplyDelete
  25. :)... இப்பொழுதெல்லாம் நாந்தான் பஷ்ட்டுனு சொல்ல முடிவதில்லை...
    :((

    எனக்கு 9-ல் குரு ஆட்சி... நான் ரொம்ப செலவு செய்வனோ...

    ReplyDelete
  26. :)... இப்பொழுதெல்லாம் நாந்தான் பஷ்ட்டுனு சொல்ல முடிவதில்லை...
    :((

    எனக்கு 9-ல் குரு ஆட்சி... நான் ரொம்ப செலவு செய்வனோ...

    ReplyDelete
  27. ஐயா,

    ரொம்ப சரி. நமது ஜாதகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் எளிதில்
    பாடங்களை புரிய வைக்கும். நான் முதலில் நீங்கள் நடத்தும் பாடங்களை என் ஜாதகத்தை ஒப்பிட்டு தான் பார்ப்பேன்.

    ReplyDelete
  28. Slide பாருக்காண சுட்டி இங்கே..

    http://dynamicdrive.com/dynamicindex1/index.html

    ReplyDelete
  29. வணக்கம்,
    கஞ்சனைப்பற்றிய கதையும் ஜாதக விளக்கமும் அருமை. இதைப்போல் "அம்பி" குறிப்பிட்டதுபோல் ஊதாரிக்கும் ஏதாவது ஜாதக அமைப்பிருக்கின்றதா? (திருமணப்பொருத்தம் பார்க்கும்போது உபயோகமாக இருக்கும்)

    ReplyDelete
  30. ////தமாம் பாலா said...
    குருஜி,
    பணமே பிரதானமாகி விட்ட இந்த காலத்துக்கு உங்கள் கஞ்சன்,கருமி விளக்கமும் நடிகவேள் உதாரணமும்
    மிகவும் அவசியம்,வாழ்க்கை நெறி
    போதிக்கும் உங்களுக்கு நன்றி மட்டும்
    கூறினால் அதுவும் கஞ்சத்தனம் தானே :-)
    சுருளிராஜன் ஒரு படத்தில் மகனிடம் கூறுவார்.. ஏண்டா பஸ் பின்னால ஓடி வந்த, டாக்ஸி பின்னால ஓடி வந்தா 10 ரூபா மிச்சமாயிருக்குமே என்று.
    வாழ்க்கையிலே நிறைய பேர் சம்பாதிக்கிறார்கள்..கொஞ்சம் பேர் தான் பயனுள்ள வகையில் செலவு செய்கிறார்..பாக்கி எல்லாம் நாய் பெற்ற தெங்கம் பழம் தான்..!!
    உங்களது நிரந்தர சுட்டியை மட்டுமா கவனித்தோம் நாம், இந்தியன் ப்ளாக் அசோசியேஷனில் நம் வகுப்புஅறை இணைந்ததையும் தான் :-) great !!///

    கருமிகள் சேர்த்துவைக்கும் பணம் என்ன ஆகும் என்பதற்கு ஒளவையாரின் பாடல் ஒன்று உள்ளது.
    நேரம் கிடைக்கும்போது அதை வைத்துத் தனியாக ஒரு பதிவு போடுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  31. ////ambi said...
    //ஒரு ஐயம். www.planetarypositions.com தளத்தில் கணிக்கும் ஜாதகத்திற்கும், jagannath horo-வை அஷ்டவர்க்கம் தெரிய பயன்படுத்தும் பொழுது வரும் ஜாதகத்திற்கும் லக்ன நிலைகளில் வேறுபாடு வருகின்றது. எந்த தளத்தைப் பயன்படுத்தலாம்?
    //

    @rajagopal, கிடையாது. நீங்கள் Latitude & longitude சரியாக குடுத்து இருக்கீங்களா?னு சரி பாக்கவும். மாத்தி குடுத்தா இந்த குழப்பம் வரும் (ஹிஹி, வந்தது). :))////

    என் வேலையை எளிதாக்கியதற்கு நன்றி அம்பி!


    ////குருவே, கஞ்சதனத்துக்கும் இப்படி ஒரு பிண்ணனி இருக்கா? உபயோகமான தகவல்.

    அப்ப சில பேர் ஊதாரிதனமாய் செலவாளியாய் இருகாங்களே, சேமிப்புனா கிலோ என்ன விலை?னு கேக்கறவங்க ஜாதக அமைப்பு பற்றியும் சொல்லுங்க குருவே.///

    வரும் பதிவுகளில் அதுவும் வரும்!

    //இது இணைப்பிற்கு///
    எதற்கு இது நண்பரே? //
    குருவே, தாங்கள் பின்னூட்ட பதில் அளித்தால் மெயிலாகவே பதிலை பெறுவதற்க்கு. ஒரு செக்பாக்ஸ் (Email follow-up comments)இருக்கு பாருங்க, உங்க பின்னூட்ட பெட்டியில். அதுக்கு தான் கூடுதுறை சாம்பிள் பின்னூட்டம் அளித்து இருக்கிறார். :))////

    என்னவென்று பார்க்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  32. ////கூடுதுறை said...
    நன்றி அம்பி அவர்களே, எனக்காக பதில் சொன்னதுற்கு.
    தங்களின் பின்னுட்டங்கள் எனது மெயில்பாக்ஸுக்குவருவத்ற்க்குத்தான்
    விளக்கத்திற்கு நன்றி ஐயா/////

    பின்னூட்டப்பெட்டியில் அந்த வசதி இல்லையே? கொஞ்சம் விளக்குங்கள்!

    ReplyDelete
  33. /////கோவை விமல்(vimal) said...
    //இதுபோல பாடங்களுக்கும் பெயர்களுடன் ஸைட்பாரில் தனித்தனியாக சுட்டி கொடுக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? அதற்கு தொழில் நுட்பமாக வசதி உள்ளதா?//
    வாத்தியரே, நான் Progammer இல்லை, System Admin-தான், நீங்கள் கேட்பது போல ஸைட்பாரில் தனித்தனியாக சுட்டி கொடுக்க அல்லது தெரிய வேண்டும் endral HTML allathu XML coding than mudiyum. எதற்கும் இந்த இனிய தளத்தை பாருங்கள் http://www.dynamicdrive.com/, இது உங்கள் வேண்டுகொலுக்கு உபயோகமாக இருக்கும். இதில் பல வேறு வகையான நமது வசத்திகேற்ப Scripts கிடைக்கின்றன, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம். உங்களுக்கு தேவை படும் Script-i copy செய்து. அதை Edit செய்து. ப்‌லாகர் HTML editor-l சேர்த்து விட்டு பாருங்கள்.////

    முயன்று பார்க்கிறேன் விமல்!

    ReplyDelete
  34. ////கோவை விமல்(vimal) said...
    1.வாத்தியரே ஜாதகம் கணிக்கும் பொழுது ராசி கட் ட மும், நாவம்ச கட் ட மும் வருகிறது. இதில் ராசி கட்டம் மட்டுமே நாம் பார்க்கிறோம். நாவம்ச கட்டம் எதற்கு?////

    நவாம்சம் என்பது ராசியை Fine tuning or Zoom செய்து பார்ப்பது. அதைப்பற்றித் தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்

    ///2.பகை, நட்பு, உட்சம் புரிகிறது, நீசம் என்றால் என்ன வாத்தியரே?///

    பரீட்சையில் ஜீரோ மார்க் வாங்கினால் எப்படி? ஒரு கிரகம் நீசம் என்றால் அதன் பலனும் ஜீரோதான்.

    ReplyDelete
  35. ///டி.பி.ஆர் said...
    சார்,
    இந்த ஓசி சபலம் பெரிய இடங்களிலும் இருக்குது.
    ஒரு தடவை ஐந்து நட்சத்திர விடுதியில் வங்கி உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அங்கு Buffet முறை இல்லை. மேசையில் வந்து விசாரித்து வழங்கினார்கள். உணவின் இறுதியில் dessert வேண்டுமா என்று சிப்பந்தி கேட்டார். ஒரு உயர் அதிகாரி ஒருவேளை இதற்கு extra பணம் கேட்பார்களோ என்று நினைத்து எனக்கு வேண்டாம் என்றார். மேசையில் இருந்த அனைவரும் (என்னையும் சேர்த்து) வேண்டாம் என்றோம். சிப்பந்தி புன்னகையுடன் இது மெனுவில் அடங்கும் சார். சாப்பிடாவிட்டாலும் சார்ஜ் செய்யப்படும் என்றார். உடனே அனைவரும் (என்னை தவிர்த்து. எனக்கு நீரிழிவு வியாதி உள்ளதால்)அசடு வழிந்தவாறு அப்படின்னா கொண்டாங்க என்றார்கள்.////

    வாருங்கள் டி.பி.ஆர் சார். முதன் முதலாக இந்தப் பதிவிற்குள் வந்திருக்கிறீர்கள். அதற்கு முதல் நன்றி! ஆமாம் ஓ.சி என்பது உலகலாவியதுதான். அனுபவப் பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  36. ////Anonymous said...
    Good Morning Sir,
    Present Sir,
    GK, BLR///

    வேரும் குட் மார்னிங் மட்டும்தானா? பாடம் படிக்கவில்லையா?

    ReplyDelete
  37. ///VIKNESHWARAN said...
    :)... இப்பொழுதெல்லாம் நாந்தான் பஷ்ட்டுனு சொல்ல முடிவதில்லை...
    :((
    எனக்கு 9-ல் குரு ஆட்சி... நான் ரொம்ப செலவு செய்வனோ...////

    செலவிற்கு இதல்ல காம்பினேசன். 2ஆம் வீட்டைவிட விரையத்தில்
    அதிகப் பரல்கள் இருந்தாலும் expense oriented person! செலவாளி!
    சனி 2ல் இருந்தாலும் செலவாளி!

    ReplyDelete
  38. ////மணிவேல் said...
    ஐயா,
    ரொம்ப சரி. நமது ஜாதகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் எளிதில்
    பாடங்களை புரிய வைக்கும். நான் முதலில் நீங்கள் நடத்தும் பாடங்களை என் ஜாதகத்தை ஒப்பிட்டு தான் பார்ப்பேன்.////

    அறிந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  39. ////கோவை விமல்(vimal) said...
    Slide பாருக்காண சுட்டி இங்கே..
    http://dynamicdrive.com/dynamicindex1/index.html////

    தகவலுக்கு நன்றி விமல்!

    ReplyDelete
  40. ////கல்கிதாசன் said...
    வணக்கம்,
    கஞ்சனைப்பற்றிய கதையும் ஜாதக விளக்கமும் அருமை. இதைப்போல் "அம்பி" குறிப்பிட்டதுபோல் ஊதாரிக்கும் ஏதாவது ஜாதக அமைப்பிருக்கின்றதா? (திருமணப்பொருத்தம் பார்க்கும்போது உபயோகமாக இருக்கும்)////

    ஆகா, அதை எழுதாமல் இருப்பேனா? பொறுத்திருங்கள். எழுதுகிறேன்!

    ReplyDelete
  41. கோவை விமல் அவர்களே, உங்கள் வலைப்பூ பின்னூட்டங்களை சிறிது பார்க்கவும். (வாத்தியாரே, பாடத்தை மட்டும் கவனிக்காமல் சக மாணவர்களிடம் பேசுவதையிட்டு மன்னிக்வும். இந்த ஒரு தடவை மட்டும்தான்)

    ReplyDelete
  42. ///// SP.VR. SUBBIAH said...
    பதிவு நன்றாக உள்லது விஜய்!
    டெம்ப்ளேட்தான் கறுப்பு வண்ணத்தில் கண்ணை உறுத்துகிறது!

    June 18, 2008 6:14 PM

    ஆசிரியர் ஐயா,
    தங்களின் அறிவுரைப்படி வண்ணத்தை மாற்றிவிட்டேன்.நன்றி.

    பணிவன்புடன்
    விஜய்
    கோவை

    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  43. தமிழ் வலைப் பதிவுலக

    சான்றோர்களுக்கும்,
    பெரியோர்களுக்கும்,
    அறிஞர்களுக்கும்,
    சகோதரர்களுக்கும்,
    சகோதரிகளுக்கும்,
    நண்பர்களுக்கும்,
    தோழர்களுக்கு,
    தோழியர்களுக்கும்

    என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

    புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

    டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

    எனது அன்பு அழைப்பை ஏற்று
    வருகை புரிந்து
    வாழ்த்துரை வழங்கியும்,
    மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
    பேருதவி புரிந்திட்ட

    அன்புகளுமிய அன்பர்கள்

    திருநெல்வேலி கார்த்திக்
    அதிஷா
    VSK
    dondu(#11168674346665545885)
    லக்கிலுக்
    ajay
    துளசி கோபால்
    உண்மைத் தமிழன்(15270788164745573644
    VIKNESHWARAN
    சின்ன அம்மிணி
    VIKNESHWARAN
    ஜமாலன்
    உறையூர்காரன்
    மதுரையம்பதி
    கிரி
    ambi
    ஜீவி
    வடுவூர் குமார்
    செந்தில்
    SP.VR. SUBBIAH
    தமிழரசன்
    cheena (சீனா)
    சிறில் அலெக்ஸ்
    வால்பையன்
    வெட்டிப்பயல்
    பினாத்தல் சுரேஷ்
    இலவசக்கொத்தனார்
    அகரம்.அமுதா
    குசும்பன்
    கயல்விழி முத்துலெட்சுமி
    சென்ஷி
    தருமி
    தமிழன்
    செந்தில்
    மனதின் ஓசை
    கானா பிரபா
    Kailashi
    மாதங்கி
    முகவை மைந்தன்

    அனைவருக்கும்
    நெஞ்சுநிறை
    நன்றிகள்
    கோடான கோடி

    என்றும் உங்கள்
    விஜய்
    கோவை.

    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  44. Dear Sir

    I have guru in 11th house (mithuna rasi) with mars (9th house lord)...I've ragu in 2nd house...Is that I will spend more?

    -Shankar

    ReplyDelete
  45. I just finished reading all comments and yours answers now..so I can wait for my answers in your forthcoming blogs(regarding how to predict that who will spend more)...pls dont mind about the previous question.

    -Shankar

    ReplyDelete
  46. வணக்கம்,
    //குரு 12ல் அல்லது 6ல் இருந்தாலும் அல்லது நீசம் பெற்றிருந்தாலும்
    அவன் கஞ்சன் (Miser)//
    இதை பலரின் சாதகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனா அவர்களுக்கு "நீங்க படு கஞ்சனா (ளா) இருப்பீங்க போலிருக்கே" என்று சொல்ல முடிவதில்லை.

    குரு 10 இலிருந்து 12ம் அதிபதியும் கூடவே இருந்தாலும் கஞ்சலனாகிறகின்.என்ன அவன் உழைத்ததை தன் குடுபத்துக்கே வைச்சிருப்பான் தான தர்ம செயலுக்கு ஈயவேமாட்டான்(ள்)
    பாடங்கள் ஒன்றுவிடாம படிக்கிறேன்.

    பின்னூட்டந்தான் போடுவதில்லையே தவிர.
    இருந்தாலும் பரல்கள் கணிப்பீடுதான் புரியவில்லை?
    ஈமெயிலில் கேள்விகள் கேட்டா பதில் தருவீங்களா, சார்?
    நன்றி

    ReplyDelete
  47. ////செல்லி said...
    வணக்கம்,
    //குரு 12ல் அல்லது 6ல் இருந்தாலும் அல்லது நீசம் பெற்றிருந்தாலும்
    அவன் கஞ்சன் (Miser)//
    இதை பலரின் சாதகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனா அவர்களுக்கு "நீங்க படு கஞ்சனா (ளா) இருப்பீங்க போலிருக்கே" என்று சொல்ல முடிவதில்லை./////
    குரு 10 இலிருந்து 12ம் அதிபதியும் கூடவே இருந்தாலும் கஞ்சலனாகிறகின்.என்ன அவன் உழைத்ததை தன் குடுபத்துக்கே வைச்சிருப்பான் தான தர்ம செயலுக்கு ஈயவேமாட்டான்(ள்)
    பாடங்கள் ஒன்றுவிடாம படிக்கிறேன்.
    பின்னூட்டந்தான் போடுவதில்லையே தவிர.///
    ///// இருந்தாலும் பரல்கள் கணிப்பீடுதான் புரியவில்லை?////

    1. கணக்கிடுவதற்கு மென்பொருள் sidebarல் உள்ளது
    2. பலன் அறிய முன் பதிவுகளைப் படியுங்கள்

    ////ஈமெயிலில் கேள்விகள் கேட்டா பதில் தருவீங்களா, சார்?
    நன்றி////

    நிறைய ஈமெயில்கள் பெட்டியில் உள்ளன. உடனுக்குடன் பதில் எழுத முடியாமல்
    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். நேரமின்மைதான் காரணம்.
    தாமதமான பதில் பரவாயில்லை என்றால் நீங்களும் எழுதுங்கள்.
    பதில் எழுதுகிறேன்

    ReplyDelete
  48. Request
    Many people are asking my contact details and want to speak with me either over phone or in person. I do not have free time to speak with anybody for consultation or discussion or clarification.
    I know one contact will multiply by several times and totally disturb my routine business work
    I am writing blogs out of interest
    I request all, particularly my blog readers to send their queries only through blog comment box and if it is personal through email!
    Please understand my problem and co-operate with me!
    Those who know my phone number, please do not give it to your friends!
    Thanks & regards
    SP.VR.Subbiah

    ReplyDelete
  49. ஹலோ வாத்தியாரய்யா,


    இன்னிக்கு பாடம் நல்லாயிருந்தது.

    கொஞ்சம் லேட்டானாலும் தொடர்ந்து படிக்கறேன்.

    ReplyDelete
  50. ////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    இன்னிக்கு பாடம் நல்லாயிருந்தது.
    கொஞ்சம் லேட்டானாலும் தொடர்ந்து படிக்கறேன்.////

    நீங்கள் வந்து படித்தால் போதும் சகோதரி! தாமதமானால் என்ன ஆகிவிடப்போகிறது?
    தேடிப் பழைய பாடங்களையும் படித்துவிடுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com