கீழே பத்துக் கேள்விகள் உள்ளன.
எலலாம் சும்மா முடிச்சுக் கேள்விகள். That is all the questions are with a
knot
பத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை! ஐந்தைச்
சாய்சில் விட்டு விடலாம்.
ஒவ்வொரு சரியான பதிலிற்கும் 20 மதிப்பெண்கள்.
100/100 எடுத்துவிட்டால் நீங்கள் புத்திசாலிதான் சந்தேகமில்லை. பத்துக்
கேள்விகளுக்குமே சரியான பதிலைச் சொல்லி விட்டால் நீங்கள் அதி புத்திசாலி!.
அதிலும் சந்தேகம் இல்லை!
எங்கே பதில்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்!
1. உலகில் தனித்தே நிற்கக்கூடியது எது?
2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?
3. நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம் என்று பதில் சொல்ல
முடியாது?
4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்- ஏவாளிற்கும்
இல்லை! அது என்ன?
5, நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது எது?
6. இதை அளக்க முடியும்.ஆனால் இதற்கு நீளம்,அகலம், உயரம் கிடையாது
அது என்ன?
7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?
8. இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது
இயற்கையின் நியதி! அது ஏன்?
9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?
10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?
வாத்தியார் இரண்டு நாட்கள் விடுமுறையில் ஊருக்குப் போகின்றார்.
அதனால் பின்னூட்டப் பெட்டி பூட்டப்பட்டுள்ளது.
வழக்கம்போல விடைகளை எழுதி பின்னூட்டப் பெட்டியில் போட்டுவிடுங்கள்.
அது வெளிவர வில்லையே என்று விசனப் படாதீர்கள்
பின்னூட்டப் பெட்டி 1.7.2008 செவ்வாய்க் கிழமை மாலை திறக்கப்படும்.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் அப்போது தெரிய வரும்!
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
29.6.08
நீங்கள் புத்திசாலியா? பதில் சொல்லுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
2. மூச்சு
ReplyDelete4.பெற்றோர்
5. போர்வை
9. கடிகாரம்
10. தண்ணி இருந்தால் நனைவான்
//
ReplyDelete2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?
காற்று அதாவது மூச்சு
4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்- ஏவாளிற்கும்
இல்லை! அது என்ன?
பெற்றோர்
7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?
சட்டை
9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?
கடிகாரம்
10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?
ஈரம்
//
2.மூச்சு
ReplyDelete3.உறக்கம்
4.தொப்புள்
6.காலம்
7.பாட்டில்
8.நடுவில் ஒரு பகல் வந்துவிடும்
9.கடிகாரம்
10.ஈரமாகிறான்
1. கை ரேகை / விதி
ReplyDelete2. மூச்சு / சுவாசம்
3. மௌன விரதம்.
4. தொப்புள் (இறைவன் படைத்த மனிதர்கள்)
5. கால்கள்.
6. காற்று.
7. சட்டை.
8. நடுவில் ஒரு பகல் வருமே.
9. நேரம் / கடிகாரம்
10. நனைந்து போகின்றான்.
அன்புடன்
இராசகோபால்
//1. உலகில் தனித்தே நிற்கக்கூடியது எது?//
ReplyDeleteதாமரை இலை தண்ணீர் :)
//2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?//
'அந்த' மேட்டரா ...ச்சீ போங்கள்...30 நிமிட ஆட்கள் கூட உண்டு !
//3. நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம் என்று பதில் சொல்ல
முடியாது?//
தூக்கத்தில் பேசுறவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்
//4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்- ஏவாளிற்கும்
இல்லை! அது என்ன?//
அப்பா - அம்மா - தாத்தா - பாட்டிகள் !
//5, நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது எது?//
கிழே வச்ச இரண்டு காலையும் எடுத்து மேலே வச்சு தான் படுக்க முடியும்
//6. இதை அளக்க முடியும்.ஆனால் இதற்கு நீளம்,அகலம், உயரம் கிடையாது
அது என்ன?//
ஐய்யா.......கதை !
//7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?//
சிலருக்கு தலைதான் இருக்கும் கழுத்து இருக்காது... முண்டா பணியனுக்கு கழுத்து உண்டா ?
//8. இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது
இயற்கையின் நியதி! அது ஏன்?//
சூரியகிரகணம் 1 மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது ! :) அதனால் உடனே பகலும் வந்துடும்
//9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?//
'சைக்கிள்' கேப்பில் பதில் மறந்துட்டு
//10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?//
தண்ணீர் இல்லாத கிணறு என்றால் 'அம்மா..' என்று அலறுவான்.
********
கலாய்க்கிறதுக்கு போட்டாலும் 10 கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் எழுதி இருக்கேன். ஒழுங்காக வெளியிடுங்கள். இல்லையென்றால் வாத்தியாரையே பெஞ்சு மேல் ஏற்றிய மாணவன் என்று எனக்கு அடாதபழி விழுந்துவிடும்.

இணைப்பு கொடுத்தற்கு நன்றி
ReplyDeleteஐயா...
பதிவிட்ட இரண்டு மணி நேரங்களில் நான்கு பேர்கள் பதில் சொல்லியுள்ளார்கள்
ReplyDeleteஅவர்கள்:
சின்ன அம்மிணி
வெண்பூ
தமாம் பாலா
இராசகோபால்
அவர்களுக்கு நன்றி.
விடைகள் ஒரே நேரத்தில்தான் வெளியிடப்படும்.
அவ்வப்போது வெளியிடுவது அடுத்தவர்களின் ஆர்வத்தைக் குறைத்துவிடும்
பதிவிற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்!
///Blogger கூடுதுறை said...
ReplyDeleteஇணைப்பு கொடுத்தற்கு நன்றி
ஐயா...////
கூடுதுறையாரே சுட்டி கொடுத்துவிட்டேன்.
நன்றி உரித்தாகுக!
I have to say thanks; Not you!:-))))
01.இயற்கை
ReplyDelete02.
03.வாயை மூடிக்கொண்டிருக்கும்போது
04.அம்மா, அப்பா
05.நான் ஏதாவது புத்தகத்தை
06.
07.
08.
09.
10.நனைகின்றான்
ரொம்ப குழம்பிட்டேன், பார்த்து மார்க் போடுங்க..
1.ஒருமை
ReplyDelete2.மூச்சு
3.தூங்கும் போது
4.தொப்பூழ்
5.கால்
6.அமுக்கம் or வெப்பநிலை
7.போத்தல்
8.இடையில் பகல் வரும்
9.மணிக்கூடு
10.முதலில் தண்ணீரில் நனைகிறான்
1.கோவிகண்ணன்
ReplyDelete2.கல்கிதாசன்
3.சாருல்
ஆகிய நண்பர்களும் விடைகளை எழுதியுள்ளார்கள்.அவர்களுடைய விடைகளும்
செவ்வாயன்று மாலை அறியத்தரப்படும்!
நன்றி
1.தன்னம்பிக்கை
ReplyDelete2.மூச்சுக்காற்று
3.மெளன விரதம்
அனுஷ்டிக்கும்போது
4.தொப்புள்
5.ஜட்டி,மூக்குக் கண்ணாடி
6.திரவம்(தண்ணீர்)
7.பிளவ்ஸ்(ரவிக்கை)
8.கேள்வி தவறு.கொடைக்கானலில்
நான் பணி புரிந்தபோது ஒரு தடவை பகல் இரவென்று இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்கள்(continiusly,not continually )மழை கொட்டோ கொட்டென்ன்று கொட்டியது.நிற்கவே இல்லை.
9.நதி
10.கிணற்றுக்குள்ளே மூழ்குகிறான்
ஐயா,
ReplyDeleteசாய்ஸ்னு விட்ட கேள்விக்கு கூட பதில்
இதோ:
1.தனியே நிற்பது - மரம்
5.கட்டிலில் படுக்கும் போது கடைசியாக எடுப்பது- காலை, தரையில் இருந்து.
தவறான விடைக்கு மைனஸ் மார்க் இல்லைதானே? எங்களை குழந்தை போல சுவாரசியமாக விடைக்கு காத்திருக்க வைத்தது..
உங்கள் வெற்றி! :-))))
Haloo sir,
ReplyDelete1. Mile kal. 2.moochu katru.
3.3 thoongum podu. 4.parents, thopul. 5.legs. 6.weather.7.bootle
8.naduvula oru pagal varudey.
9. wal clock, river. 10.modalla naivaan aparam muzukuvan.
1.மைல் கல்
ReplyDelete2.மூச்சு
3.தூங்கும்போது மற்றும் மௌன விரதம் இருக்கும் போது
4.பெற்றோர்கள் மற்றும் தொப்புள்கொடி
5.கால்கள்
6.சீதோஷ்ணநிலை
7.பாட்டில்
8.பகல் என்ற ஒன்று இரண்டு இரவுகளுக்கு இடையில் இருக்கிறதே!
9.கடிகாரம், ஆறு
10.நனைந்து விடுகிறான்
1. திண்டுக்கல் சர்தார்,
ReplyDelete2. பெங்களூர் சுமதி
ஆகிய இருவரும் பதில் அனுப்பியுள்ளார்கள்.
முடிவுகள்: முன்பு சொன்னபடியே 1.7.2008 மாலை 6 மணிக்கு!
அனைவரும் பங்கு கொள்ளும் விதமாகப் பதில்களை ஒரு நாள் தள்ளிச் சொல்வதுதான்
மரபு.இந்திய நேரம் தவிர மற்ற நேரங்களில் உள் நுழையும் வாசகர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டாமா?
ஓட்டுப் போட்டீர்களா? இல்லையென்றால் இங்கே சென்று
ReplyDeleteஉங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்:
This comment has been removed by the author.
ReplyDeleteஎன் பதில்கள்.
ReplyDelete1.
2. மூச்சு
3.
4. ஆடை
5. கால்கள்
6. உஷ்ணம்
7. பவுண்டன் பேனா
8.
9. கடிகார முள்
10.ஈரமாவான்
1, 3, 8 க்கும் விடை நீங்கள்
வருமுன் எழுதி விடுகிறேன்
சகாதேவன்
1. உலகில் தனித்தே நிற்கக்கூடியது எது?
ReplyDeleteபிரம்மம்?
2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?
மூச்சு
3. நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம் என்று பதில் சொல்ல
முடியாது?
தூங்குகிறாயா?
4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்- ஏவாளிற்கும்
இல்லை! அது என்ன?
தொப்புள்
5, நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது எது?
கால்களை
6. இதை அளக்க முடியும்.ஆனால் இதற்கு நீளம்,அகலம், உயரம் கிடையாது
அது என்ன?
கதை! :-))
7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?
பாட்டில், சொம்பு,
8. இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது
இயற்கையின் நியதி! அது ஏன்?
இரண்டு இரவுகள் தொடர்ந்து வர முடியாது என்பதால். நடுவில் பகல் வர வேண்டுமே?
9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?
காலம், நேரம், கடிகாரம்...
10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?
நனைகிறான். (தண்ணீர் இருந்தால்!)
1.சாலையோரத்தில் மைல்கல்
ReplyDelete2.மூச்சு
3. தூங்கும்போது
4. தொப்புள்
5. கால்கள்
6. நேரம்
7. சட்டை பனியன் ஜாக்கெட்
8. நடுவில் ஒரு பகல் பொழுது வரும்
9. நேரம்
10. ஈரமாகிறான்
1.தனிமை
ReplyDelete2.காற்று(வாயுபகவான்)(மூச்சுக் காற்று)
3.தூக்கம்(நித்திரை)
4.தொப்புள்(naval)
5.தூக்கத்தை
6.மகிழ்ச்சி
7.பாட்டில்
8.இரண்டி இரவுகளுக்கு இடையே பகல் ஒன்று உண்டே!
9.கடிகாரம்
10.நனைந்தவனாகிறான்.
வாத்தியரே தாமத்திற்கு மணிக்கவும், ஆனால் சரியாக உங்கள் போட்டியின் நேரத்திற்கு வந்து விட்டேன். எனது விடைகள் கீழே. உங்கள் பதிலகலை மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும் மாணவன்
ReplyDelete1.நெடுன்சாலை மைல் கல்
2.உயிர் மூச்சு
3.கொட்டாவி விட்டு தூங்கும்போது
4.பெற்றோர்கள்
5.கால்கள்
6.க்லைமேட் (climate)
9.கடிகாரம்
10.நனைந்து விடுவான்
வாத்தியரே இம்முறை சிறிது தேறிவிட்டேனா என்று தெரிய படுத்தவும். ..
உங்கள் கவனத்திற்கு...
பரமேசுவர பணிக்கரை பார்க்க முற்பட்டேன். அவர் இயற்கை எயிதி பல வருடங்கள் ஆகிறது என்று அறிந்தேன்.
அவர் புதல்வன் அவர்கள் மட்டுமே அங்கே உள்ளார். அவரும் நன்றாக பார்க்கிறார். DIVAKARAN(Near Seetharam Hotel)
அவர்களையும் கண்டேன்.
நன்றி ஐயா...
ஐயா, உங்கள் கேள்விகள் மிகவும் கடினம். ஆனால் அறிவுப்பூர்வமாக இருந்தது. இதோ என் பதில்கள்.
ReplyDelete1.உலகில் தனித்தே நிற்கக்கூடியது: "மலை".
2.மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியாது. அது: "மூச்சுக் காற்று".
3.நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம்" என்று பதில் சொல்ல முடியாது? : "பல் துலக்கும்போது".
4.மற்ற ஆண்-பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்-ஏவாளிற்கும் இல்லை. அது: " பெற்றோர்(அம்மா & அப்பா) இருவரையும் கடவுள் நேரடியாகப் படைத்தார்".
5.நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது: " கொட்டாவி".
6.இதை அளக்க முடியும். ஆனால் இதற்கு நீளம், அகலம், உயரம் கிடையாது. அது: "நீர், பால் போன்ற திரவப் பொருட்கள்".
7.கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது. அது: " கைச்சட்டை".
8.இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது இயற்கை நியதி. ஏனெனில்: "மேகக்கூட்டங்கள் ஒன்று சேருவதற்கு நிறைய நேரம் ஆகும்".
9.ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது: "வற்றாத ஜீவநதி".
10.ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் "கிணற்று நீருக்குள் முழுவதும் மூழ்குகிறான்".
உண்மை,
ReplyDeleteகாற்று,
அச், தும்மல்.
தொப்புள்.
உறக்கம்.
சுரம்.
நெக்லெஸ்.
நடுவில் பகல்.
கடிகாரம்
நனைகிறான்.
Response from Sridhar
ReplyDelete1. உலகில் தனித்தே நிற்கக்கூடியது எது?
Human Thoughts
2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?
Breath
3. நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம் என்று பதில் சொல்ல
முடியாது?
When one sleeps
4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும்- ஏவாளிற்கும்
இல்லை! அது என்ன?
Adam's Apple
5, நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது எது?
Blanket
6. இதை அளக்க முடியும்.ஆனால் இதற்கு நீளம்,அகலம், உயரம் கிடையாது
அது என்ன?
Temperature
7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?
Pencil
8. இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது
இயற்கையின் நியதி! அது ஏன்?
Pass!
9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?
Rivers
10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?
First that person gets drenched!
2. Breathing
ReplyDelete3. Sneeze
4. Navel
6.Wind
7. Shirt
8. There is a day in between
9. Time (Guess)
10. Become wet(Guess)
5. Leg (Guess)
Dear Sir
ReplyDeleteYour questions were very interesting...but difficult to answers...
anyhow I have tried my level best to answer 5 questions.
4. Shame 5. yawn 6. Water 7. Bottle
8. River.
P.S. I was lil worried because lessons are getting deviated by this questions and answers session...
-Shankar
Dear sir,
ReplyDeleteAnswers: 4. Dress not shame...
-shankar
சரியான விடைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
ReplyDeleteநீங்கள் எழுதிய விடைகளுடன் சரி பார்த்துக் கொள்ளுங்கள்
1. உலகில் தனித்தே நிற்கக்கூடியது எது?
"தூரத்தைக்காட்டும் கிலோமீட்டர் கல்."
இரண்டு கற்கள் சேர்ந்து இருக்க முடியாது
2. மிகவும் லேசானது இது. ஆனால் எத்தனை பெரிய பலசாலியாக
இருந்தாலும் இதைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்த முடியது. அது எது?
"மூச்சு"
3. நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போது "ஆம் என்று பதில் சொல்ல
முடியாது?
"தூங்கும்போது"
4. மற்ற ஆண்- பெண் அனைவருக்கும் உள்ளது இது. ஆனால் ஆதாமிற்கும் . - ஏவாளிற்கும் இல்லை! அது என்ன?
"பெற்றோர்கள், தொப்புள்"
5, நீங்கள் கட்டிலில் படுக்கப்போகும்போது கடைசியாக எடுப்பது எது?
"கால்களை"
6. இதை அளக்க முடியும்.ஆனால் இதற்கு நீளம்,அகலம், உயரம் கிடையாது
அது என்ன?
"சீதோஷ்ணம்"
7. கழுத்து உண்டு.ஆனால் தலை கிடையாது.. அது எது?
"சீசா" (Bottle)
8. இரண்டு இரவுகள் தொடர்ந்தாற்போல் மழை பெய்ய முடியாது என்பது
இயற்கையின் நியதி.! அது ஏன்?
"இரண்டு இரவுகளுக்கு இடையே ஒரு பகல் இருப்பதல்"
9 ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் நடக்க முடியாது. அது எது?
"ஆறு, கடிகாரம்"
10. ஒருவன் கிணற்றில் விழுந்தால் முதலில் என்ன ஆகிறான்?
"நனைகிறான்"
உடல் நலமில்லாததால் இந்த வகுபிற்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும்....
ReplyDelete(பரமார்த்த)குருஜி & சீடர்ஜி,
ReplyDeleteமாணவர்கள் அனைவருமே சும்மா கலக்கி இருக்காங்க..வாழ்த்துக்கள்!
குறிப்பாக விமல்..உங்களுக்கும் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா? :-)))))))
விக்கி, உடல் நலம் இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா?
//தமாம் பாலா said..
ReplyDeleteகுறிப்பாக விமல்..உங்களுக்கும் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா? :-)))))))//
அது எல்லாம் கேட்க பிடாது., கொஸ்டின் பேப்பர் அவுட் ஆனது முக்கியம் இல்ல, யாரு மார்க் வாங்கரங்கணுதான் முக்கியம்...
///VIKNESHWARAN said... உடல் நலமில்லாததால் இந்த வகுப்பிற்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும்....///
ReplyDeleteஅதனால் என்ன? இந்தப் பரீட்சை எதில் சேர்த்தி என்று இவ்வளவு கவலைப் படுகிறீர்கள்?
///தமாம் பாலா said... (பரமார்த்த)குருஜி & சீடர்ஜி, மாணவர்கள் அனைவருமே சும்மா கலக்கி இருக்காங்க..வாழ்த்துக்கள்! குறிப்பாக விமல்..உங்களுக்கும் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா? :-))))))) விக்கி, உடல் நலம் இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா?///
ReplyDeleteபரமார்த்தகுருவா? கதை தெரிந்துதான் சொல்கிறீர்களா?
////கோவை விமல்(vimal) said... //தமாம் பாலா said.. குறிப்பாக விமல்..உங்களுக்கும் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா? :-)))))))// அது எல்லாம் கேட்க பிடாது., கொஸ்டின் பேப்பர் அவுட் ஆனது முக்கியம் இல்ல, யாரு மார்க் வாங்கரங்கணுதான் முக்கியம்...///
ReplyDeleteஅது எப்படி அவுடட்டாகும்? வாத்தியாரையே சந்தேகிக்கிற மாதிரியல்லவா இருக்கு?
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஅது எப்படி அவுடட்டாகும்? வாத்தியாரையே சந்தேகிக்கிற மாதிரியல்லவா இருக்கு? //
for your kind info Master
வாத்தியரே பல்சுவை பகுதி 2005 பதிப்பு, அதே கேள்விகள். அதே விடைகள்.....
மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
ReplyDeleteஅந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
ஆகவே விளக்கம்/ கதை இல்லை!
-- இன்னும் சொல்ல துறு துறுக்கிறது please tell more about it wit out thinking about anybody?