மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.11.16

கண்களைப் பனிக்க வைத்த கவியரசர் கண்ணதாசனின் உரை!

கண்களைப் பனிக்க வைத்த கவியரசர் கண்ணதாசனின் உரை!
----------------------------------------------------------
நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்;

அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.

நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .

நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து
சகித்துக் கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும்
பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!

பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும்
பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு,
ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?

வேண்டுமானால்  ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.

ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக்
கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.

அவர்கள் எப்படியோ போகட்டும்.

இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம்
என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?

அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.
===================================================================
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் ஐயா எல்லா காலத்திலும் உண்மை

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,உணர்ச்சிகரமான உரை.
    உண்மை சுடுமல்லவோ.
    கவிஞரின் வார்த்தைகளின் உண்மையும் சூடாகவே உள்ளது.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Excellant...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    சாட்டையடி கொடுத்துள்ளார்,நாத்திகருக்கு.குறிப்பாகவும் கூறியுள்ளார், ஈரோட்டாருக்கு!இந்து மதத்தின் சகிப்புத்தன்மையை எடுத்துக் காட்டியுள்ளார்.தன் கடந்த கால நினைவை வெளியிடவும் செய்து ள்ளார்.இன்றைய "நாத்திகர்கள்' என்போர் வாழும் விதத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்! அவர்களால் மற்ற மதத்தனரிடையே என்றும் செய்ய இயலாத தன்மையயும் இயம்பியுள்ளார்!
    கவியரசர் நம் மனதில் என்றும் வாழ்பவர்! சூரிய, சந்திரர்கள் எள்ளளவும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நாமம் நிலைத்து பிறக்கும்!
    வாழ்க கவியரசர் நாமம்!
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  5. ////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா எல்லா காலத்திலும் உண்மை/////

    ஆமாம். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,உணர்ச்சிகரமான உரை.
    உண்மை சுடுமல்லவோ.
    கவிஞரின் வார்த்தைகளின் உண்மையும் சூடாகவே உள்ளது.நன்றி./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Excellant...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn///////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  8. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சாட்டையடி கொடுத்துள்ளார்,நாத்திகருக்கு.குறிப்பாகவும் கூறியுள்ளார், ஈரோட்டாருக்கு!இந்து மதத்தின் சகிப்புத்தன்மையை எடுத்துக் காட்டியுள்ளார்.தன் கடந்த கால நினைவை வெளியிடவும் செய்து ள்ளார்.இன்றைய "நாத்திகர்கள்' என்போர் வாழும் விதத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்! அவர்களால் மற்ற மதத்தனரிடையே என்றும் செய்ய இயலாத தன்மையயும் இயம்பியுள்ளார்!
    கவியரசர் நம் மனதில் என்றும் வாழ்பவர்! சூரிய, சந்திரர்கள் உள்ளளவும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நாமம் நிலைத்து பிறக்கும்!
    வாழ்க கவியரசர் நாமம்!
    நன்றி வாத்தியாரையா!/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com