மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.11.16

Astrology: ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள் - பகுதி 5

Astrology: ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள் - பகுதி 5

ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!

நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் வரலாம். வரட்டும்.

ஆனால் அதிகம் தொந்தரவு இன்றி அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது?

நம் கையில் ஒன்றும் இல்லை.

நோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.

என் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் சென்ற பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று (2011) அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52

ஒரு ஆண்டு கழித்து, என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல! வேறு ஒருவருடைய ஜாதகம்!
-----------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.

மிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.

12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப் படுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.

ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. வணக்கம் ஐயா,6,12ல் அமர்ந்த கிரகங்களின் தசா மோசமாக இருக்குமா அல்லது 6,12 அதிபர்களின் தசா மோசமாக இருக்குமா அல்லது இரண்டுமா.நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    மிக விரைவில்,புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் தெளிவான முறையில் இருந்தது இன்றைய அலசல்!நிதானம் தான் முக்கியத்தேவை இது போன்ற அலசல் நேரத்தில் என்பது தெளிவு!
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  3. ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான்.

    good morning sir,

    As u mentioned that those who r in 6 and 12 houses are responsible for giving health issues during their dasa bhuthi..and also u said that if they had joint with good planet they will sustain it... and my doubt is even if they had good planet combination in 6 th or 12 house how they yield good results bcs even if they r good planets but they are placed in inmical places( 6 or 8 th house)...this is my doubt...clarrify me sir..thanks

    anbudan manavan...............

    ReplyDelete
  4. What was the age when he died? Per my analysis, he should have lived atleast 70+ (poorna ayul). Is this correct?

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா ,

    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகப்படி நான்காம் வீட்டில் (சுக ஸ்தானம்) குரு உள்ளார் , அவர் ஒன்பதாம் பார்வையாக பன்னிரெண்டாம் வீட்டை பார்க்கிறார் . இந்த அமைப்பினால் நோயின் வீரியம் குறையாதா? அல்லது குணமடைய வாய்ப்புகள் இல்லையா ?

    ReplyDelete
  6. வணக்கம் . இறைவன் தங்களுக்கு நிறைய அருள் புரியும்படி தினமும் வணங்குகின்றேன் .
    வாழ்க்கையின் ஒரு முக்கியமான ஒன்று நோயில்லாமல் வாழ்வது .
    என்னுடைய மன்னி கேன்சர் வியாதியால் 2013 ஆம் ஆண்டு காலமானார் .
    2010 ஆம் ஆண்டு அவருக்கு அவருக்கு ஒரு அறிவுரை கூறினேன் .
    தினமும் கோவிலுக்கு சென்று அங்கு ஏதாவது தங்கள் கைகளினால் உதவி செய்யுங்கள் என்றேன் . அவர்களும் செய்தார்கள் .
    அவர் ஜாதகத்தில் 6ல் ராகு , ராகு தசை. ராகு தசை சனி புக்தியில் காலமானார்.
    தங்களுடைய பாடம் தான் எனக்கு கைகொடுத்தது .
    என்னுடைய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகள் நோய் சம்மந்தமாக தான் இருக்கும்.
    நானும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில்உள்ளேன் .
    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,6,12ல் அமர்ந்த கிரகங்களின் தசா மோசமாக இருக்குமா அல்லது 6,12 அதிபர்களின் தசா மோசமாக இருக்குமா அல்லது இரண்டுமா.நன்றி.////

    இரண்டுமே மோசமாகத்தான் இருக்கும்! நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக விரைவில்,புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் தெளிவான முறையில் இருந்தது இன்றைய அலசல்!நிதானம் தான் முக்கியத்தேவை இது போன்ற அலசல் நேரத்தில் என்பது தெளிவு!
    நன்றி வாத்தியாரையா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  9. /////Blogger V@S@NTH said...
    ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான்.
    good morning sir,
    As u mentioned that those who r in 6 and 12 houses are responsible for giving health issues during their dasa bhuthi..and also u said that if they had joint with good planet they will sustain it... and my doubt is even if they had good planet combination in 6 th or 12 house how they yield good results bcs even if they r good planets but they are placed in inmical places( 6 or 8 th house)...this is my doubt...clarrify me sir..thanks
    anbudan manavan.............../////

    குரு பகவானைப் போன்ற சுபக்கிரகங்களின் சேர்க்கை வலிமையானது. அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்!

    ReplyDelete
  10. /////Blogger GreatSiddha said...
    What was the age when he died? Per my analysis, he should have lived atleast 70+ (poorna ayul). Is this correct?/////

    பூரண ஆயுளுக்கு என்ன அமைப்பு வேண்டும்? அது இந்த ஜாதகத்தில் உள்ளதா என்பதைப் பார்த்துக்கூறுங்கள் நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger jaichandhran kapali said...
    வணக்கம் ஐயா ,
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகப்படி நான்காம் வீட்டில் (சுக ஸ்தானம்) குரு உள்ளார் , அவர் ஒன்பதாம் பார்வையாக பன்னிரெண்டாம் வீட்டை பார்க்கிறார் . இந்த அமைப்பினால் நோயின் வீரியம் குறையாதா? அல்லது குணமடைய வாய்ப்புகள் இல்லையா ?//////

    சனீஷ்வரனின் பார்வையும் 12ம் வீட்டின் மேல் விழுகிறதே - அதைக் கவனித்தீர்களா?

    ReplyDelete
  12. ///////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம் . இறைவன் தங்களுக்கு நிறைய அருள் புரியும்படி தினமும் வணங்குகின்றேன் .
    வாழ்க்கையின் ஒரு முக்கியமான ஒன்று நோயில்லாமல் வாழ்வது .
    என்னுடைய மன்னி கேன்சர் வியாதியால் 2013 ஆம் ஆண்டு காலமானார் .
    2010 ஆம் ஆண்டு அவருக்கு அவருக்கு ஒரு அறிவுரை கூறினேன் .
    தினமும் கோவிலுக்கு சென்று அங்கு ஏதாவது தங்கள் கைகளினால் உதவி செய்யுங்கள் என்றேன் . அவர்களும் செய்தார்கள் .
    அவர் ஜாதகத்தில் 6ல் ராகு , ராகு தசை. ராகு தசை சனி புக்தியில் காலமானார்.
    தங்களுடைய பாடம் தான் எனக்கு கைகொடுத்தது .
    என்னுடைய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகள் நோய் சம்மந்தமாக தான் இருக்கும்.
    நானும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில்உள்ளேன் .
    சந்திரசேகரன் சூரியநாராயணன் //////

    உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி. நீங்களும் நன்றாக நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். நானும் பழநி அப்பனைப் பிரார்த்தனை செய்கிறேன்.உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றி. ஆர்வமும், இறையுணர்வும்தான் நம்மை மேம்படுத்தும்

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா

    உங்கள் நற்பணிக்கு நன்றி

    நீங்கள் நீண்ட ஆயூள் பெற இறைவனை வேண்டுகிறேன்

    இதேப் போன்ற அமைப்பு என் ஜாதகத்தில் so sharing few details. My lagna is magara lagna. And my life is challenging.

    எனக்கும் 6 ஆம் அதிபதி 12ல் அமர்ந்துள்ளார்
    22.5 வயதில் ஆரம்பித்த 6ஆம் அதிபதியின் தசை 4.5 வருடமாக படுத்தி
    எடுக்கிறது.
    22.5 வயதில் 7 1/2 யும் ஆரம்பம்.

    சிறு விபத்தில் கழுத்து பகுதி பாதிப்பால்
    இன்று வரை நடப்பதிலுருந்து சுவாசிப்பது வரை பல நரம்பு சம்பந்தமான பிரச்சணை.

    6 ஆம் அதிபதி ஆகையால் கடன் தொல்லையும் இலவசம்.

    12ல் சனி,செவ்,புத
    6ல் குரு

    ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒடிக்கொண்டிருக்கிறேன்.

    நன்றி ஜயா

    ReplyDelete
  14. ////Blogger nareshvenus said...
    வணக்கம் ஐயா
    உங்கள் நற்பணிக்கு நன்றி
    நீங்கள் நீண்ட ஆயூள் பெற இறைவனை வேண்டுகிறேன்
    இதேப் போன்ற அமைப்பு என் ஜாதகத்தில் so sharing few details. My lagna is magara lagna. And my life is challenging.
    எனக்கும் 6 ஆம் அதிபதி 12ல் அமர்ந்துள்ளார்
    22.5 வயதில் ஆரம்பித்த 6ஆம் அதிபதியின் தசை 4.5 வருடமாக படுத்தி எடுக்கிறது.
    22.5 வயதில் 7 1/2 யும் ஆரம்பம்.
    சிறு விபத்தில் கழுத்து பகுதி பாதிப்பால்
    இன்று வரை நடப்பதிலுருந்து சுவாசிப்பது வரை பல நரம்பு சம்பந்தமான பிரச்சணை.
    6 ஆம் அதிபதி ஆகையால் கடன் தொல்லையும் இலவசம்.
    12ல் சனி,செவ்,புத 6ல் குரு
    ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒடிக்கொண்டிருக்கிறேன்.
    நன்றி ஜயா/////

    நம்பிக்கைதான் வாழ்க்கை. இரவு பகல் போல எல்லாத் துன்பங்களும் ஒரு நாள் மாறும். பொறுமையாக இருங்கள். இறைவனை வழிபடுங்கள்!

    ReplyDelete
  15. Sir, kindly explain how the effect of this combination will change outcome with some example..like guru aspect, well placed (Kendra, trikona) combination. This will help people understand the nullable on this combination.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com