மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!
தாமதமாகத் திருமணம் நடைபெற்றதற்கு ஒரு உதாரண ஜாதகம்!

திருமணம் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். அந்தக் காலத்தில், அதாவது ஐம்பது, அறுபதுகளில், பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்துவிடுவார்கள்.

இப்போது அப்படியல்ல, படிப்பு, வேலை வாய்ப்பு காரணமாக, திருமணம் செய்து கொள்வதில் இளைஞர்களும், கன்னிகளும் முனைப்பாக இருப்பதில்லை. பெற்றோரும் அக்கறையில்லாமல், அல்லது வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள்.

இப்போதும், படிப்பு, வேலை வாய்ப்பு என்று எப்படிக் கண்க்கிட்டாலும் பெண்ணிற்கு 23 வயதிலும், பையனுக்கு 25 வயதிலும் திருமணத்தைச் செய்து விட வேண்டும்.

நடக்கிறதா? செய்கிறார்களா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் ஜாதக்த்தைக் குற்றம் சாட்டுவார்கள். உரிய நேரம் வரவில்லை, உரிய வரன் கிடைக்கவில்லை என்பார்கள்.

80 சதவிகிதம் அதெல்லாம் கிடையாது. கிடைக்கும் வரனைப் போதும் என்று முன்வந்து மணந்து கொள்ள வேண்டாமா? இதைவிட நல்லது கிடைக்குமா? என்று கிடைப்பதை எல்லாம் ஒதுக்கும் சம்பவங்கள் நிறைய உள்ளன. அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்

சரி, அதெல்லாம் போகட்டும். உண்மையிலே ஜாதகப்படி திருமணம் தாமதமாகுமா? ஆகும்

ஏழாம் வீட்டுக்காரனும், களத்திரகாரனும் ஜாதகத்தில் வலிமையாக இல்லாவிட்டால், திருமணம் தாமதமாவதற்கோ அல்லது திருமணம் மறுக்கப் படுவதற்கோ வாய்ப்பு உண்டு (That is delay or denial of marriage)

உங்களுடைய பயிற்சிக்காக ஒரு உதாரண ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------


மீன லக்கின ஜாதகம்.
லக்கினாதிப்தி குரு எட்டில் இருக்கிறார்.
ஆறாம் வீட்டுக்காரன் சூரியன் லக்கினத்தில் இருக்கிறான்
பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.
இரண்டாம் வீட்டில், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோருடன் மாந்தியும் இருக்கிறார்.
சந்திரனுடன், ராகுவும் கூட்டாக உள்ளார்
இதுதான் ஜாதக அமைப்பு
---------------------------------
1. சனியின் பிடியில் ஏழாம் அதிபதி புதன் இருக்கிறார்.
2. அதே சனியின் பிடியில் களத்திரகாரகன் சுக்கிரனும் இருக்கிறார்.

அதனால் ஜாதகனுக்கு 32 வயதுவரை எத்தனையோ முயற்சிகளை அவனுடைய பெற்றோர்கள் மேற்கொண்டும் திருமணம் நடக்கவில்லை!
குரு பகவான் தன்னுடைய நேரடிப்பார்வையால், இரண்டாம் வீட்டையும், அதில் அமர்ந்திருக்கும் நான்கு கிரகங்களையும் பார்ப்பதால், அத்துடன் அவர் லக்கினாதிபதியாகவும் இருப்பதால், ஜாதகனுக்கு, ஏழாம் இடத்ததிபதியின் புதன் திசை துவங்கியவுடன், தன்னுடைய கோச்சாரப்படி, இரண்டாம் வீட்டிற்கு வந்தவுடன், திருமண்த்தை நடத்தி வைத்தார்.

அன்புடன்
வாத்தியார்

================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Very nice analysis Sir. Thank you Sir. KMRK

    https://www.facebook.com/muthuramakrishnan.krishnan/posts/1302215646496688

    www.sevalaya.org

    kmrk

    ReplyDelete
  2. அருமையான அலசல்வாத்தியார் அவர்களே!!!


    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    மகோன்னதம், அலசல்!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,மிகத்துல்லியமான அலசல்.தலைப்பை பார்த்தவுடனே என்னுடைய சொற்ப்ப சோதிட ஞானத்தை வைத்து ஜாதகத்தை அலசிவிடுவேன்.அப்புறம்தான் உங்கள் விடையை பார்ப்பேன்.இந்த முறை என்கணிப்பு சரியான விடையுடன் ஒத்து வந்தது. சனி நீசமானதால் திருமணம் நடந்திருக்குமா என சந்தேகம் வந்தது. குருபார்வை இரண்டாம் இடத்திற்கு இருந்ததால், கோச்சாரத்தில் குரு இரண்டாம் இடத்திற்க்கு வந்தபோது திருமணம் நடந்தது என்ற புதிர்விடை மிகவும் அருமை.நன்றி.

    ReplyDelete
  5. Sir,
    From this horo, we can understand that Guru will do benefit, if still he sits in Eigth House by aspects Second house. One additional info.. For Thanusu Lagnam, Eighth house will come as Guru Ucham ..That Lagna is Exceptional for Guru to sit in Eighth house where he bless the native. One of my friend have this placement, and leading Happy Life.
    Thanks
    Sathishkumar GS

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    Very nice analysis Sir. Thank you Sir. KMRK
    https://www.facebook.com/muthuramakrishnan.krishnan/posts/1302215646496688
    www.sevalaya.org
    kmrk/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. /////Blogger C Jeevanantham said...
    Explained very good.
    Thank you./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  8. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான அலசல்வாத்தியார் அவர்களே!!!
    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நல்லது. நன்றி லெட்சுமி நாராயணன்!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மகோன்னதம், அலசல்!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  10. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிகத்துல்லியமான அலசல்.தலைப்பை பார்த்தவுடனே என்னுடைய சொற்ப்ப சோதிட ஞானத்தை வைத்து ஜாதகத்தை அலசிவிடுவேன்.அப்புறம்தான் உங்கள் விடையை பார்ப்பேன்.இந்த முறை என்கணிப்பு சரியான விடையுடன் ஒத்து வந்தது. சனி நீசமானதால் திருமணம் நடந்திருக்குமா என சந்தேகம் வந்தது. குருபார்வை இரண்டாம் இடத்திற்கு இருந்ததால், கோச்சாரத்தில் குரு இரண்டாம் இடத்திற்க்கு வந்தபோது திருமணம் நடந்தது என்ற புதிர்விடை மிகவும் அருமை.நன்றி./////

    உங்கள் முயற்சிகள் பலன் தரும். தொடர்ந்து அப்படியே செய்யுங்கள் ஆதித்தன். நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger R VIJAYAKUMAR GEDDY said...
    Super Guruve//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //////Blogger KJ said...
    Sir,
    From this horo, we can understand that Guru will do benefit, if still he sits in Eigth House by aspects Second house. One additional info.. For Thanusu Lagnam, Eighth house will come as Guru Ucham ..That Lagna is Exceptional for Guru to sit in Eighth house where he bless the native. One of my friend have this placement, and leading Happy Life.
    Thanks
    Sathishkumar GS////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. Sir
    Jupiter is hidden in 8 th house and he is in the house of be Venus who is prime enemy of Jupiter.Then how Jupiter's aspect helped for marriage...Please correct if I am wrong.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com