Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்
குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?
தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!
என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்
லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!
கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்
“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”
“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!
குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.
குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது
குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி அத்துடன் அவர் விரையாதிபதி. செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

வாத்தியாருக்கு வணக்கம்,
ReplyDeleteஅருமையான அலசல்....
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
வணக்கம் குருவே !
ReplyDeleteகுழந்தை பாக்கியம் இல்லாதவர்கட்குத் தாங்கள் எவ்வளவு அழகாக பதில் அளித்துள்ளீர்கள்! அவர்களை யாராவது அணுகி புத்ர பாக்கியம் பற்றிக் கேட்டால் எப்படி விடையளிக்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளீர்கள்! யார் மனுதும் புண்படாத வகையில் தெளிவானவைஅந்த விடைகள!!
அடுத்து, அலசல் ஜாதகத்தில் 9க்குரிய குரு தன இடத்திலிருந்து 12ல் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லியிருப்பது சற்று தெளிவாகாதது எனோ?
அன்பு கூர்ந்து விளக்க விண்ணப்பம்..ஏற்றுக்கொள்ளவும் .
நன்றியுடன் வரதராஜன்.
Very nice and lucid
ReplyDeleteவணக்கம் ஐயா,மிகத்தெளிவான அலசல்.நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
ReplyDeleteஐயா வணக்கம. நல்ல அலசல்.
ReplyDelete"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்பது பழமொழி. தெய்வ அனுக்கிரகமும் இல்லையென்றால் ஜாதகர் என்ன செய்வார்? நன்றி.
அன்புள்ள ஐயா
ReplyDeleteஅருமையாக விளக்கம் அளித்து உள்ளீர்கள் . எளிதாக புரிந்தது.
Sir
ReplyDeleteI have five planets in eighth house (Jupiter , Mercury, Venus ,Sun & Saturn) , pieces ascendant and cancer is my moon sign . Lot of struggles , debts etc not married yet. Running life happily with God's grace.
///Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteவாத்தியாருக்கு வணக்கம்,
அருமையான அலசல்....
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////
நல்லது. நன்றி லெட்சுமிநாராயணன்!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே !
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கட்குத் தாங்கள் எவ்வளவு அழகாக பதில் அளித்துள்ளீர்கள்! அவர்களை யாராவது அணுகி புத்ர பாக்கியம் பற்றிக் கேட்டால் எப்படி விடையளிக்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளீர்கள்! யார் மனுதும் புண்படாத வகையில் தெளிவானவைஅந்த விடைகள!!
அடுத்து, அலசல் ஜாதகத்தில் 9க்குரிய குரு தன் இடத்திலிருந்து 12ல் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லியிருப்பது சற்று தெளிவாகாதது எனோ?
அன்பு கூர்ந்து விளக்க விண்ணப்பம்..ஏற்றுக்கொள்ளவும் .
நன்றியுடன் வரதராஜன்.//////
கடக லக்கின ஜாதகர்.
கடக லக்கினத்திற்கு ஒன்பதாம் வீடு மீனம்.
அதன் அதிபதி குரு
அவர் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார்.
கும்பம் மீனத்திற்கு 12ம் வீடு (இடம்) அல்லவா?
இப்போது தெளிவாகிறதா?
வணக்கம் குருவே!
Deleteஉணர்ந்தேன் உட்பொருளை!
நன்றி வாத்தியாரையா
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery nice and lucid////
நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,மிகத்தெளிவான அலசல்.நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி./////
நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!
/////Blogger venkatesh r said...
ReplyDeleteஐயா வணக்கம. நல்ல அலசல்.
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்பது பழமொழி. தெய்வ அனுக்கிரகமும் இல்லையென்றால் ஜாதகர் என்ன செய்வார்? நன்றி./////
உண்மைதான். நன்றி நண்பரே!
////Blogger C Jeevanantham said...
ReplyDeleteஅன்புள்ள ஐயா
அருமையாக விளக்கம் அளித்து உள்ளீர்கள் . எளிதாக புரிந்தது./////
நன்கு புரிந்தவரைக்கும் நன்றி!
/////Blogger Ashok said...
ReplyDeleteSir
I have five planets in eighth house (Jupiter , Mercury, Venus ,Sun & Saturn) , pieces ascendant and cancer is my moon sign . Lot of struggles , debts etc not married yet. Running life happily with God's grace.////
இரவு பகல் போல, காலம் மாறும். அப்போது எல்லாம் சீரடையும்.பொறுத்திருங்கள் நண்பரே!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
உணர்ந்தேன் உட்பொருளை!
நன்றி வாத்தியாரையா////
நல்லது. நன்றி வரதராஜன்!
ஐந்தில் ராகு இருந்தால் குழந்தை பிறக்காது என்று இல்லை எத்தைனையோ பேருக்கு ராகு ஐந்தில் இருந்து பிள்ளை உள்ளது , விதி ஒரு விஷயத்தை மாறுகிறது என்றால் இல்லாமல் போகும் என்று அர்த்தம் இல்லை . இருந்தும் உபயோக படாது என்று ஆகிவிடும் . அது தான் விதியின் சூட்சமம் .
ReplyDeleteஐந்தாம் அதிபதி 11இல் உள்ளது ஐந்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டையே பார்பதால் குழந்தை இருக்க வேண்டும் ஆனால் அதன் மூலம் வரவு இருக்காது .