மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.16

உங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்


உங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்

முழு தெய்வ நம்பிக்கையும், பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேலே படிக்கவும். மற்றவர்கள் பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.
அது நம் இருவருக்குமே நல்லது!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
🍉27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும்

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மனச் சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம், அந்த வகையில் கஷ்டத்தை விரட்டும் பரிகார முறைகளை எளிமையாக தந்துள்ளதுள்ளார்கள் ஆன்மிக மலர் என்ற இணையதளதில் என்று சொல்லி நண்பர் ஒருவர் அனுப்பிய செய்திகளை உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். நீங்களும் பயனடைந்து, மற்றவருக்கும் கூறி அவர்களையும் பயனடைய உதவுங்கள்.

1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்

3.ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும்.21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

11.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்!
=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. அறிந்து கொண்டேன் ஐயா....

    ReplyDelete
  2. நல்ல பரிகாரங்கள் ஐயா!நன்றி!

    நமது கோவில்கள் அனைத்தும் விளக்கு ஏற்றுவதால் எண்ணெய் பிசுக்குகள் சுற்றிலும் உள்ள தரை சுவர்களில் ஏற்பட்டு வழுக்கி கல் தரையில் விழும் அபாயம் ஏற்படுகிறது. விளக்கு ஏற்றும் அனபர்கள் அதற்கென வைத்திருக்கும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஏற்றாமல் இருக்க அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    மிக நல்ல பயனுள்ள பகிர்வு! நன்றி சொல்லக் கடமைபரபட்டுள்ளோம்!

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning. very very useful.

    Thanks for sharing.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. இறைவனிடம் கை ஏந்துங்கள்.
    அவன் இல்லையென்று சொல்லவதில்லை.
    பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்...
    அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

    நம்பினார் கெடுவதில்லை
    நான்குமறைத் தீர்ப்பு...

    தட்டுங்கள் திறக்கப்படும்
    கேளுங்கள் கொடுகப்படும்...

    பசிக்கு விருந்தாவான்
    நோய்க்கு மருந்தாவான்.....

    நாள்என் செயும் வினைதான் என்செயும்
    ....

    அருமையான பக்தித் தொகுப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  6. nalla thagavaluku nandri sir....

    I think we all make use of this and tell to our friends or relatives in order to make their life happy..

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,நல்லபல தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  8. Respected sir, very well useful. Thanks for sharing.
    Thanks again,
    Rajkumar

    ReplyDelete
  9. ////Blogger பரிவை சே.குமார் said...
    அறிந்து கொண்டேன் ஐயா..../////

    நல்லது. நன்றி குமார்!!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    நல்ல பரிகாரங்கள் ஐயா!நன்றி!
    நமது கோவில்கள் அனைத்தும் விளக்கு ஏற்றுவதால் எண்ணெய் பிசுக்குகள் சுற்றிலும் உள்ள தரை சுவர்களில் ஏற்பட்டு வழுக்கி கல் தரையில் விழும் அபாயம் ஏற்படுகிறது. விளக்கு ஏற்றும் அனபர்கள் அதற்கென வைத்திருக்கும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஏற்றாமல் இருக்க அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். /////

    உண்மைதான். விளக்கு ஏற்றுபவர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக நல்ல பயனுள்ள பகிர்வு! நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்!////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. very very useful.
    Thanks for sharing.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  13. /////Blogger mohan said...
    இறைவனிடம் கை ஏந்துங்கள்.
    அவன் இல்லையென்று சொல்லவதில்லை.
    பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்...
    அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.
    நம்பினார் கெடுவதில்லை
    நான்குமறைத் தீர்ப்பு...
    தட்டுங்கள் திறக்கப்படும்
    கேளுங்கள் கொடுகப்படும்...
    பசிக்கு விருந்தாவான்
    நோய்க்கு மருந்தாவான்....
    நாள்என் செயும் வினைதான் என்செயும்....
    அருமையான பக்தித் தொகுப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மோகன்!

    ReplyDelete
  14. //////Blogger vasanth said...
    nalla thagavaluku nandri sir....
    I think we all make use of this and tell to our friends or relatives in order to make their life happy..//////

    நல்லது. நன்றி வசந்த்!

    ReplyDelete
  15. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நல்லபல தகவல்கள்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  16. //////Blogger Rajkumar Periyasamy said...
    Respected sir, very well useful. Thanks for sharing.
    Thanks again,
    Rajkumar/////

    நல்லது. நன்றி ராஜ்குமார்!

    ReplyDelete
  17. எதை செய்தாலும் அதை நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலன் சீக்கிரமாக கிடைக்கும். மற்றவர்களின் பாடம் தான் நமக்கு ஆதாரம்.
    நல்ல கட்டுரை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com