Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.
முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்
இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.
32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.
சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.
சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.
அதற்கு என்ன காரணம்?
ஜாதகக் கொளாறுதான் காரணம்.
அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
அது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.
ஜாதகப்படி என்ன காரணம்?
ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.
அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!
ஆகவே ஜாதகப்படியே ஜாதககிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து 10ல் உள்ளார். ஆகவே ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்
7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Very nice Sir.
ReplyDeleteவணக்கம் ஐயா,அலசல் அற்ப்புதம்.ஆனால் எனக்குதான் சமீபத்தில் ஏற்பட்ட சில சந்தேகங்களால் தெளிவில்லை.பழைய பாடங்களிலும் குறிப்பாக இல்லை.ராசிகட்டம் லக்னத்தில் ஆரம்பித்து 12ல் முடிந்துவிடுகிறது.மேலே சொன்ன ஜாதகத்தில் சனி லக்னத்தையும் தாண்டி 10ம்பார்வையாக 7ம் இடத்தை பார்க்கிறது.இது நீள்வட்ட பாதை என்பதால் சாத்தியமாகிறதா.கிரகங்கள் (ராகு,கேது)தவிர அப்பிரதச்சனமாக பார்க்குமா.ராகு கேதுவிற்க்கு பார்வை உண்டா.சந்தேகத்திற்கு முக்கிய காரணம் சமீபத்தில் திரு.ராமன் அவர்களின் புத்தகத்தை படித்தபோது அதில் உதாரண ஜாதகங்களில் லக்னத்தை தாண்டிய பார்வையும்,ஆன்டிக்ளாக்வைஸ் பார்வையும் எடுத்துக்கொள்ளபடவில்லை.ஒருவேளை விடுபட்டிருக்கலாமே எனவும் தோன்றியது.உங்களைவிட்டால் எங்களுக்கு சந்தேகம் தீர்க்க வேறு யார் இருக்கிறார்கள்.நன்றி.
ReplyDeleteThanks Alot sir , Very use full chart analyse for the online leaqrners like me, please continue your service, as my job nature can't study or go the regular classes, this is the right and possible way,
ReplyDeleteBy your Student VISHNUKANNAN, S.RI,
Good morning sir
ReplyDeleteUnderstood sir.... When I read the explanation I can understand sir... But when I read the horoscope I cannot find what's the problem... I think I Must need more practice and reading... Any how thank you sir... Please keep updating many horoscopes they are good examples for us
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteசரியான துவைப்பு!இது போன்ற எடுத்துக்காட்டு ஜாதகங்களால் எங்கள் அடிப்படை அறிவு விசாலமாகிறது. நன்றி!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery nice Sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
நன்றாக உள்ளது. நன்றி ஐயா.
ReplyDeleteஅசத்தலான அலசல் வாத்தியார் அவர்களே!!!
ReplyDeleteநன்றி....
ஐயா வணக்கம்
ReplyDelete7ஆம் வீட்டை அலசியது அருமை
கண்ணன்
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அலசல் அற்புதம்.ஆனால் எனக்குதான் சமீபத்தில் ஏற்பட்ட சில சந்தேகங்களால் தெளிவில்லை.பழைய பாடங்களிலும் குறிப்பாக இல்லை.ராசிகட்டம் லக்னத்தில் ஆரம்பித்து 12ல் முடிந்துவிடுகிறது.மேலே சொன்ன ஜாதகத்தில் சனி லக்னத்தையும் தாண்டி 10ம்பார்வையாக 7ம் இடத்தை பார்க்கிறது.இது நீள்வட்ட பாதை என்பதால் சாத்தியமாகிறதா.கிரகங்கள் (ராகு,கேது)தவிர அப்பிரதச்சனமாக பார்க்குமா.ராகு கேதுவிற்க்கு பார்வை உண்டா.சந்தேகத்திற்கு முக்கிய காரணம் சமீபத்தில் திரு.ராமன் அவர்களின் புத்தகத்தை படித்தபோது அதில் உதாரண ஜாதகங்களில் லக்னத்தை தாண்டிய பார்வையும்,ஆன்டிக்ளாக்வைஸ் பார்வையும் எடுத்துக்கொள்ளபடவில்லை.ஒருவேளை விடுபட்டிருக்கலாமே எனவும் தோன்றியது.உங்களைவிட்டால் எங்களுக்கு சந்தேகம் தீர்க்க வேறு யார் இருக்கிறார்கள்.நன்றி.//////
கடிகாரச் சுற்று, பார்வை, சேர்க்கை, அஸ்தமனம், காலசர்ப்ப தோஷம் போன்ற அடிப்படை விஷயங்கள் எல்லாம் நன்றாகப் படித்த பின்புதான் அலசலுக்கு வரவேண்டும். ஆகவே பதிவில் உள்ள பழைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படித்துத் தேருங்கள் ஆதித்தன்!
/////Blogger Vinu Kumar said...
ReplyDeleteThanks Alot sir , Very use full chart analyse for the online leaqrners like me, please continue your service, as my job nature can't study or go the regular classes, this is the right and possible way,
By your Student VISHNUKANNAN, S.RI,//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
///Blogger Subathra Suba said...
ReplyDeleteGood morning sir/////
உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!
/////Blogger smruthi sarathi said...
ReplyDeleteUnderstood sir.... When I read the explanation I can understand sir... But when I read the horoscope I cannot find what's the problem... I think I Must need more practice and reading... Any how THANK you sir... Please keep updating many horoscopes they are good examples for us//////
கரெக்ட் சகோதரி. நன்றி!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
சரியான துவைப்பு!இது போன்ற எடுத்துக்காட்டு ஜாதகங்களால் எங்கள் அடிப்படை அறிவு விசாலமாகிறது. நன்றி!/////
உண்மைதான். நன்றி வரதராஜன்!
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteநன்றாக உள்ளது. நன்றி ஐயா.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!
/////Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
7ஆம் வீட்டை அலசியது அருமை
கண்ணன்//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!
Sir there are 3 good planets aspecting the 2nd place.(guru,sukran,mercury)sukran getting neecha panga rajayogam and mercury utcham in 8th place-mangalya sthanam. All these aspects will not help to have a family life directly or indirectly. Thanks. Kannan
ReplyDeleteவணக்கம். ராகு அடித்தால் என்ன செய்வது? அவரை கட்டுப்படூத்தும் பரிகாரம் என்ன?
ReplyDelete////Blogger kannan Malola said...
ReplyDeleteSir there are 3 good planets aspecting the 2nd place.(guru,sukran,mercury)sukran getting neecha panga rajayogam and mercury utcham in 8th place-mangalya sthanam. All these aspects will not help to have a family life directly or indirectly. Thanks. Kannan//////
இப்படி உதிரியான கிரகநிலைகளை வைத்துப் பலன்களைச் சொல்ல முடியாது. லக்கின அதிபதி, 2ம் வீட்டுக்காரர் நிலைமைகளை எல்லாம் பார்க்க வேண்டாமா? முழு ஜாதகத்தையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும்!
///////Blogger Jeevan Prasad said...
ReplyDeleteவணக்கம். ராகு அடித்தால் என்ன செய்வது? அவரை கட்டுப்படூத்தும் பரிகாரம் என்ன?///////
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று மனமுருகி அவரை வழிபட்டுவிட்டு வாருங்கள். வலிகள் குறையும்!
ayya , very simple alasal. thanks . 2 nd place in guruparvai so can we presume kudumbam amayum
ReplyDeleterajasekaran
Dear Sir,
ReplyDeleteVenus is debilitated in Virgo and Mercury exalted in Virgo also. Will it not be Neesapanga Raja Yogam for the native.
Thanks & Ragards
Rajam Anand
sir, need one clarification as you said earlier that one has to examine abt the d9 chart for marriage life. so my question is The example chart u explained above what abt the power of 7 lord house, 8 magalya isthanam, and sukra in navamsa chart..did they are all in inmical places in navamsa chart ah sir...
ReplyDeleteThanks in Advance Sir.
சார், ஏழாம் இடத்தைப் பற்றி சுருக்கமாக அழகாக விவரித்துள்ளீர்கள். நன்றி!!
ReplyDelete