அடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4
சில துணிகளை அடிக்காமல் துவைக்க வேண்டும். ஆமாம் பட்டுத் துணிகளை அடிக்காமல் அல்லவா துவைக்க வேண்டும். இன்று
மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள்.
யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த பெண்மணியை மேதகு என்று சொல்வதில் தவறில்லை!
ஜாதகப்படி அவருடைய மேன்மைக்கு என்ன காரணம்?
அதை இன்று அலசுவோம்!
அவரைப் பற்றித் தெரியாதவர்கள், இந்தத் தளத்திற்குச் சென்று அவரைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
http://en.wikipedia.org/wiki/Queen_Victoria
++++++++++++++++++++++++++++++++++++++
விக்டோரியா மகாராணி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெயர்: Alexandrina Victoria
வாழ்ந்த காலம்: 24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
பதவிக்கு வந்த காலம்: 28.06.1938 (தனது 20வது வயதில்)
பிறப்பு விவரம்:
23/24.5.1819
அதிகாலை 4:40 மணி
L attitude: 51.30 North
Longitude: 0.5 West
Birth Star: Rohini
ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறப்புக்கள்:
1. லக்கினம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரு ராசியில் அமையப்பெற்றுள்ளது. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் அமர்ந்தது. மிகவும் சிறப்பு.
2. சந்திரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் சந்திரன் உள்ளது.
3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனி, அத்துடன் ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியுமான சனி 11ஆம் வீட்டில் அமர்ந்தது சிறப்பு
4. முக்கிய ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார்
5. குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, உயர்ந்த பரிவர்த்தனை யோகத்தைக் கொடுத்துள்ளார்கள்.
6. புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை. அவர்கள் முறையே பூர்வ புண்ணிய அதிபதியும் லக்கினாதிபதியும் ஆவார்கள்.
7. குருவின் விஷேச பார்வை (5ஆம் பார்வை) லக்கினத்தின்மேல்.
8. நவாம்சத்தில் சூரியன் உச்சம். சுக்கிரன் ஆட்சி பலத்துடன். புதன் உச்சம்.
9. ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திரன் உச்சம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு!
.................................................................................
பலன்கள்:
1. ரிஷப லக்கினக்கிரக்காரகள் நடைமுறைக்கு ஒத்துப்போகும் லக்கினக்காரர்கள். உறுதியான மனதைக்கொண்டவர்கள். ஜாதகத்தில் அதன் அதிபதி 12ல் மறைந்திருந்தாலும், அந்த அடிப்படைக் குணங்கள் இருக்கும்.
2. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும் சந்திரனும், ஒன்றாக இருந்து குருபகவானின் பார்வையைப் பெற்றதால். ஜாதகிக்கு நல்ல ஆளுமை கிடைத்தது. ஜாதகிக்கு அவர் பிறந்த நோக்கத்தைச் செயல் படுத்தும் தன்மையை, சூழ்நிலைகளைக் கொடுத்தது.
அம்மையாருடைய காலத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியம் (British Empire) பரந்து விரிவடைந்தது.
3. 5ஆம் வீடு அதன் அதிபதி புதனாலும், ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது. குடும்ப அதிபதி அந்த வீட்டில் இருந்து கேந்திரத்தில் உள்லார். இந்த அமைப்புக்களால் மகராணிக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்தது. நிறையக் குழந்தைகளும் பிறந்தன.(மொத்தம் 9 குழந்தைகள்)
யோகங்கள்:
1. அரச கிரகமான சந்திரன் உச்சமடைந்ததுடன், வர்கோத்தமமும் பெற்றுள்லது. அத்துடன் லக்கினத்திலும் அமர்ந்து பலத்த யோகத்தைக் கொடுத்தது.
2. செவ்வாயும், ராகுவும் 11ஆம் வீட்டில் அமர்ந்ததுடன், வர்கோத்தமும் பெற்றுள்ளன.
3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகன் சனி, 11ல் அமர்ந்தது மட்டுமின்றி பரிவர்த்தனை பலத்துடன் இருக்கிறார்.
4. குரு நீசமடைந்தாலும் பரிவர்த்தனையால் மிகவும் பலமாக இருக்கிறார். அத்துடன் அது பாக்கியஸ்தானம். ஜாதகிக்கு அரசாளும் யோகத்தைக் கொடுத்தார்.
5. தனது 18 வது வயதில் அவர் அரியனையில் அமர்ந்தார். அப்போது அவர்க்கு ராகுதிசை, குரு புத்தி. வர்கோத்தம ராகுவும், பரிவர்த்தனை மற்றும் திரிகோண பலத்துடன் இருக்கும் குருவும் அதைச் செய்தார்கள்.
6. சனி 9 & 10ஆம் இடங்களுக்கு உரிய தர்மகர்மா அதிபதி. அவர் பரிவர்த்தனை யோகத்துடன் 11ல் அமர்ந்ததால் அவருடைய தசை முழுவதும் ராணிக்கு பலத்த யோகங்களைக் கொடுத்தான். அந்த காலகட்டத்தில்தான் (Between 1867 to 1886) சாம்ராஜ்யம் விரிவடைந்தது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கபெற்றது. ராணி இந்தியாவிற்கும் ராணியானார்.
ஏழு கிரகங்கள் 100 பாகைக்குள் அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!
குடும்ப அதிபதி புதனும், தர்மகர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்து மகாராணிக்கு, கணவர், பிள்ளைகள், குடும்பம், அரசாட்சி, நாட்டு மக்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்ததுடன், செல்வாக்கையும் கொடுத்தார்கள்.
-------------------------------------------------------------------------
பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க வேண்டுமே!
ராணியார் 1903ஆம் ஆண்டு இறந்தார்.
புதன் திசை, சனியின் புக்தி!
புதன் மாரகன் (2nd Lord), சனி ஆயுள்காரகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Dear Vathiyar Ayya,
ReplyDeleteVanakkam,
Wish you happy Deepavali.
Very nice and soft wash about Silk dress Queeen horoscope.
Thanks.
Regards,
S.Kumanan.
Dear Sir,
ReplyDeleteNice to study again about the Queen horoscope.
The beauty of this horoscope is Guru neecham but it is in full power due to exchanging the place.
Thanking you.
அருமையான ஜாதகம். அருமையான அலசல்.
ReplyDeleteபுதன்/இரண்டாம் வீட்டுக்காரன் பற்றிச் சொல்லியுள்ளதில் சில கவனக்குறைவான தவறுகள் உள்ளனவா?
சூப்பர் ...
ReplyDeleteஅருமையான (அடித்தல் இல்லாத)அலசல்...
வணக்கம் ஐயா,அலசல் மற்றும் ஆய்வு சிறப்பாக இருந்தன.நன்றி.
ReplyDeleteRespectes Sir,
ReplyDeleteWish you happy diwali to you and our classroom students.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn
/////Blogger Kumanan Samidurai said...
ReplyDeleteDear Vathiyar Ayya,
Vanakkam,
Wish you happy Deepavali.
Very nice and soft wash about Silk DRESS Queeen horoscope.
Thanks.
Regards,
S.Kumanan.///////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger C Jeevanantham said...
ReplyDeleteDear Sir,
Nice to study again about the Queen horoscope.
The beauty of this horoscope is Guru neecham but it is in full power due to exchanging the place.
THANKINGyou.//////
கரெக்ட். அதுதான் பலன் நன்றி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமையான ஜாதகம். அருமையான அலசல்.
புதன்/இரண்டாம் வீட்டுக்காரன் பற்றிச் சொல்லியுள்ளதில் சில கவனக்குறைவான தவறுகள் உள்ளனவா?/////
இரண்டாம் வீட்டுக்காரன் புதன் தன் வீட்டிற்குப் பதினொன்றில் அமர்ந்துள்ளது உயர்வான பண பலத்தைக் கொடுத்தது. வேறு என்ன என்பதை நீங்கள் விளக்கமாகச் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன் நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteசூப்பர் ...
அருமையான (அடித்தல் இல்லாத)அலசல்...////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அலசல் மற்றும் ஆய்வு சிறப்பாக இருந்தன.நன்றி./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespectes Sir,
Wish you happy diwali to you and our classroom students.
Have a great day.
THANKS& Regards,
Ravi-avn//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!
"குடும்ப அதிபதி புதனும், தர்ம கர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால்"
ReplyDeleteஎன்று காண்கிறது. சனி 11லும் ,புதன் 12லும் இருக்கிறார்கள். கூட்டணி இல்லை.ஒரு வேளை நவாம்சத்தில் உள்ளதைக் குறிப்பிடுகிறீர்களோ?
இந்த முறை எல்லாவிதமான கோணங்களில் இருந்தும் ஜாதகத்தை அலசி உள்ளீர்கள்.
ReplyDeleteஅற்புதமான பாடம். நன்றி.
எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
5ஆம் வீடு அதன் அதிபதி புதனாலும், ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது.
ReplyDeleteRespected guru,
sir as u mentioned that 5th lord is aspects his own house but i think u mentioned it wrong mercury aspects the 5 th house by 6 vision only..as all we known mercury aspects only 7 house from where it is. so clear by doubt sir ...whether i am right or wrong by vasanth