சரஸ்வதியை வணங்குங்கள்; சகல அறிவையும் பெறுங்கள்!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)
இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)
இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
சரஸ்வதிபூஜை ஆயுத பூஜை விஜயதசமி வணக்கங்கள்.
ReplyDeleteபாரதியின் பாஅடல் மிகப்பெரியது. கீழ்க்காணும் வரிகள் முக்கியமானவை.
மகாகவி படித்த பள்ளிக்கு நிதிதிரட்ட பாடிக்கொடுத்த பாடல்.
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 5
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.
Respected Sir,
ReplyDeleteWish you Happy pooja days (Saraswathi and Vijaya dasami) to you and all of our classroom students.
Have a holy day.
Thanks & Regards,
Ravi-avn
Vanakkam Guruve,
ReplyDeleteWhile acknowledging with humility, your Sarasawathi pooja day Greetings I reciprocate the same and wish you healthy, happy days. Your honest spells of words on this day is a shower of grace to all of us. Thanks, Vadhyarayya.
இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசரஸ்வதிபூஜை ஆயுத பூஜை விஜயதசமி வணக்கங்கள்.
பாரதியின் பாடல் மிகப்பெரியது. கீழ்க்காணும் வரிகள் முக்கியமானவை.
மகாகவி படித்த பள்ளிக்கு நிதிதிரட்ட பாடிக்கொடுத்த பாடல்.
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 5
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.//////
பாடலைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Wish you Happy pooja days (Saraswathi and Vijaya dasami) to you and all of our classroom students.
Have a holy day.
Thanks & Regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteVanakkam Guruve,
While acknowledging with humility, your Sarasawathi pooja day Greetings I reciprocate the same and wish you healthy, happy days. Your honest spells of words on this day is a shower of grace to all of us. Thanks, Vadhyarayya./////
நல்லது. நன்றி வரதராஜன்!
///Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteஇனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்./////
நல்லது. நன்றி நண்பரே!