கவிதைச் சோலை: இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடுகள்!
இன்றைய கவிதைச் சோலையை பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------
இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம் வீண் அனுதாபம் கொண்டுநீ
ஒருநாளும் நம்பிடாதே!
டேயன்னா...டேயன்னா ....டேயன்னா...ட்ரியோ டேயன்னா!
முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்பேறி
நரிபோலே திரிவார் புவிமேலே - நல்ல
வழியோடு போகிற வாய்பேசா உயிர்களை
வதச்சு வதச்சு தின்பார் வெறியாலே
(இரை)
காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர்விட்ட புத்தரும்
கடல்போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு
காதில்மட்டும் கேட்டுஅதை ரசித்தாங்க - ஆனா
கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க!
(இரை)
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: பதிபக்தி (1958ஆம் ஆண்டு)
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச்சேர்க்கை
Kedar Tragedy
காட்டாற்று வெள்ளத்தில் கண்முன் நடக்கும் சோகத்தைப் பாருங்கள்
நமக்கு இந்த வீடியோ க்ளிப்பிங்கை அனுப்பி, அறியத்தந்தவர் நமது வேப்பிலை சுவாமிகள்
அன்புடன்
வாத்தியார்
http://youtu.be/XmNi4OZn0xk
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய கவிதைச் சோலையை பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------
இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம் வீண் அனுதாபம் கொண்டுநீ
ஒருநாளும் நம்பிடாதே!
டேயன்னா...டேயன்னா ....டேயன்னா...ட்ரியோ டேயன்னா!
முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்பேறி
நரிபோலே திரிவார் புவிமேலே - நல்ல
வழியோடு போகிற வாய்பேசா உயிர்களை
வதச்சு வதச்சு தின்பார் வெறியாலே
(இரை)
காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர்விட்ட புத்தரும்
கடல்போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு
காதில்மட்டும் கேட்டுஅதை ரசித்தாங்க - ஆனா
கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க!
(இரை)
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: பதிபக்தி (1958ஆம் ஆண்டு)
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச்சேர்க்கை
Kedar Tragedy
காட்டாற்று வெள்ளத்தில் கண்முன் நடக்கும் சோகத்தைப் பாருங்கள்
நமக்கு இந்த வீடியோ க்ளிப்பிங்கை அனுப்பி, அறியத்தந்தவர் நமது வேப்பிலை சுவாமிகள்
அன்புடன்
வாத்தியார்
http://youtu.be/XmNi4OZn0xk
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
This is not kedar tragedy, its an old video that i've seen it b4.
ReplyDeleteகாலையில் எழுந்து வகுப்பறை பார்த்த பின் அனறைய நாளை ஆரம்பிப்பதுவழக்கம்
ReplyDeleteஇனறு பார்தததும் மனம் பதைபதைத்தேன்,
இலட்சத்துக்குமேற்பட்ட யாத்ரிகர்கள் என்ன ஆயிற்றோ ?
போனவர்கள் எப்போது வருவார்கள் என் வாயிலில் ஏக்கத்துடன்இருப்பவர்களுக்கு என்ன பதில்?
Yenna Kodumai Sir Ithu ?
ReplyDeleteகருத்துள்ள சிறப்பான பாடல் வரிகள்...
ReplyDeleteநன்றி ஐயா...
கவிதை ஒரு புறம் இருந்தாலும்...
ReplyDeleteகேதார்நாத் சோகம் மனதை பிழிகிறது.....
மக்கள் கவிஞர் மனித நேயம் கொண்டு மனமிரங்கி - எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என எழுதிய பாடல் அது!...நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!...
ReplyDeleteகாலையில் நெஞ்சை அதிர வைத்த வீடியோ கிளிப். இறைவன் தானே பெரியவன் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றான்!.. குற்றம் செய்தவர் எவரோ!... அவருக்காக குற்றுயிரும் குலைஉயிருமாகப் போனவர் இவரோ!...
ReplyDeleteஉண்மைச்சொன்னால் உதிரமும் வெள்ளமாய்
ReplyDeleteபெருக்கெடுத்தது இந்தக் காட்சியைக் காண்கையிலே!
முயலாமல் நின்ற ஒவ்வொரு நொடியும்
முடிவை நோக்கியே என்பதை பாவம்
முற்றிலும் அறியாது மூழ்கினார்களே!
முக்கண்ணன் அருளட்டும் அடுத்த பிறவியில்
முழுமையான வாழ்வை வாழ!
அய்யா
ReplyDeleteநல்ல ஒரு பதிவு. முன்னர் புனித யாத்ரிகர்கள் விரதம், மன கட்டுபாடுடன் யாத்ரிகை போவார்கள்.ஆனால் இப்பொழுது பிக்னிக் மாதிரி செல்கிறார்கள்.இருந்தாலும் கண்முன்னெ மனித உயிர்கள் மாள்வது பாவம்
ஆடுகள் வளர்ப்பது கொல்லப்படவே என்பது போல மற்ற எந்தப் பிராணிகளுக்கும் இல்லை. அந்த வகையில் வளர்ப்பு நாய்கள் பலவும் பாக்கியம் செய்தவை.அவை அன்புக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
ReplyDeleteஒரு ஆடு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, அதனுடைய சகோதரனையோ, தாயையோ கொல்லும் கொடுமை ஒவ்வொரு நாளும் கசாப்புக்கடைகளில் நடை பெறுகிறது.அதில் வேறு'தர்ம சிந்தனை'உடைய கசாப்புக்கடைக்காரரர்
சிறு மாமிசத் துண்டுகளை தெருவில் வீசுகிறார். அதற்காகத் தெரு நாய்களும்,
காகங்களும் போட்டி போடுகின்றன.இவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் நடு சாலைக்கு வர வேண்டிய கட்டாயம். பின்னாலிருந்து இருசக்கர நான்கு சக்கர வாகனங்களின் ஓலம். ஆண்டவா! ஆடுகளை மட்டும் அல்ல, எங்களையும் காபாற்றும்.
அந்த 'யூ ட்யூப்' காணொலி 3 ஜூன் 2013 அன்றே வலையேற்றப்பட்டுள்ளது.
ஹீமா என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர்கண்ட் வெள்ளப்பெருக்கு 18 ஜூன் அன்றுதான் ஏற்பட்டுள்ளது. எனவே அது இந்த வெள்ளம் அல்ல. ஆனால் இதிலும் அதே போல சோகங்கள் தான்.
கீழே உள்ள தொடர்பில் உத்தர்கண்ட் வெள்ளக் காட்சிகளின் தொகுப்பைக் காணலாம்.
http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=mNhfcbS25Ek
பூமி-- ஈசன் வாழும் காடு நாமெல்லாம் 9 துளைகள் உள்ள வெறும் கூடு
ReplyDeleteதாரி தேவி கோவில் , காளி மடம் (ஆதிசங்கரர் ஸ்தாபித்த்த மடம்), கேதார்நாத் - இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. 1884 - 1885 ஆண்டுகளில் தாரி தேவி கோவிலை வேறு இடம் செல்ல அன்றய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அப்பொழுதும் இதே உக்கிரம் கேதார்நாத் மலை பகுதிகளில் நிகழ்ந்தது. தற்போதும் அதே போன்ற ஒரு முயற்ச்சியில் பேரழிவு நிகழ்ந்தது. http://post.jagran.com/goddess-dhari-devis-wrath-ravaged-ukhand-1372155557
ReplyDelete//////Blogger Sanjai said..
ReplyDeleteThis is not kedar tragedy, its an old video that i've seen it b4./////
இருக்கலாம்..ஆனால் நிகழ்வு பெரிய சோகத்தை உண்டு பண்ணுகிறது! அதை மறுப்பதற்கில்லை!
//////Blogger சர்மா said...
ReplyDeleteகாலையில் எழுந்து வகுப்பறை பார்த்த பின் அனறைய நாளை ஆரம்பிப்பதுவழக்கம்
இனறு பார்தததும் மனம் பதைபதைத்தேன்,
இலட்சத்துக்குமேற்பட்ட யாத்ரிகர்கள் என்ன ஆயிற்றோ ?
போனவர்கள் எப்போது வருவார்கள் என் வாயிலில் ஏக்கத்துடன்இருப்பவர்களுக்கு என்ன பதில்?/////
இயற்கையின் சீற்றத்திற்கு யார் என்ன செய்ய முடியும்? பதறும் மனது அமைதியடைய அவன்தான் அருள வேண்டும்
/////Blogger Sattur Karthi said...
ReplyDeleteYenna Kodumai Sir Ithu ?/////
ஆமாம். மனதைப் பதற வைக்கும் கொடுமை!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteகருத்துள்ள சிறப்பான பாடல் வரிகள்...
நன்றி ஐயா.../////
நல்லது. நன்றி!
/////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteமக்கள் கவிஞர் மனித நேயம் கொண்டு மனமிரங்கி - எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என எழுதிய பாடல் அது!...நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!...////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger G Alasiam said...
ReplyDeleteஉண்மைச்சொன்னால் உதிரமும் வெள்ளமாய்
பெருக்கெடுத்தது இந்தக் காட்சியைக் காண்கையிலே!
முயலாமல் நின்ற ஒவ்வொரு நொடியும்
முடிவை நோக்கியே என்பதை பாவம்
முற்றிலும் அறியாது மூழ்கினார்களே!
முக்கண்ணன் அருளட்டும் அடுத்த பிறவியில்
முழுமையான வாழ்வை வாழ!/////
ஆமாம். பிரார்த்திப்போம். நன்றி!
/////Blogger Kalai Rajan said...
ReplyDeleteஅய்யா
நல்ல ஒரு பதிவு. முன்னர் புனித யாத்ரிகர்கள் விரதம், மன கட்டுபாடுடன் யாத்திரை போவார்கள்.ஆனால் இப்பொழுது பிக்னிக் மாதிரி செல்கிறார்கள்.இருந்தாலும் கண்முன்னே மனித உயிர்கள் மாள்வது பாவம்/////
ஒரு சிலர் இருக்கலாம். எல்லோரும் அல்ல! அத்தனை தூரம், மலைகளில் (சிகரங்களில்) பயணிப்பதற்கு மன வலிமை வேண்டும்!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆடுகள் வளர்ப்பது கொல்லப்படவே என்பது போல மற்ற எந்தப் பிராணிகளுக்கும் இல்லை. அந்த வகையில் வளர்ப்பு நாய்கள் பலவும் பாக்கியம் செய்தவை.அவை அன்புக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
ஒரு ஆடு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, அதனுடைய சகோதரனையோ, தாயையோ கொல்லும் கொடுமை ஒவ்வொரு நாளும் கசாப்புக்கடைகளில் நடை பெறுகிறது.அதில் வேறு'தர்ம சிந்தனை'உடைய கசாப்புக்கடைக்காரரர்
சிறு மாமிசத் துண்டுகளை தெருவில் வீசுகிறார். அதற்காகத் தெரு நாய்களும்,
காகங்களும் போட்டி போடுகின்றன.இவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் நடு சாலைக்கு வர வேண்டிய கட்டாயம். பின்னாலிருந்து இருசக்கர நான்கு சக்கர வாகனங்களின் ஓலம். ஆண்டவா! ஆடுகளை மட்டும் அல்ல, எங்களையும் காப்பாற்றும்.
அந்த 'யூ ட்யூப்' காணொலி 3 ஜூன் 2013 அன்றே வலையேற்றப்பட்டுள்ளது.
ஹீமா என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர்கண்ட் வெள்ளப்பெருக்கு 18 ஜூன் அன்றுதான் ஏற்பட்டுள்ளது. எனவே அது இந்த வெள்ளம் அல்ல. ஆனால் இதிலும் அதே போல சோகங்கள் தான்.
கீழே உள்ள தொடர்பில் உத்தர்கண்ட் வெள்ளக் காட்சிகளின் தொகுப்பைக் காணலாம்.
http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=mNhfcbS25Ek/////
உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger C.Senthil said...
ReplyDeleteபூமி-- ஈசன் வாழும் காடு நாமெல்லாம் 9 துளைகள் உள்ள வெறும் கூடு/////
ஆமாம். உடலுக்கு ஒன்பது வாசல்!
///////Blogger Ravi said...
ReplyDeleteதாரி தேவி கோவில் , காளி மடம் (ஆதிசங்கரர் ஸ்தாபித்த்த மடம்), கேதார்நாத் - இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. 1884 - 1885 ஆண்டுகளில் தாரி தேவி கோவிலை வேறு இடம் செல்ல அன்றய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அப்பொழுதும் இதே உக்கிரம் கேதார்நாத் மலை பகுதிகளில் நிகழ்ந்தது. தற்போதும் அதே போன்ற ஒரு முயற்ச்சியில் பேரழிவு நிகழ்ந்தது. http://post.jagran.com/goddess-dhari-devis-wrath-ravaged-ukhand-1372155557/////
உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி மிஸ்டர் ரவி!
/////Blogger Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteகவிதை ஒரு புறம் இருந்தாலும்...
கேதார்நாத் சோகம் மனதை பிழிகிறது...../////
உண்மைதான். அதன் தாக்கம் நாள் முழுமைக்கும் இருந்தது!
Yes, this happend in 2011. Patal Pani accident @ Indore. A family went to this spot to celebrate daughters MBA graduation. Sudden raise in water level flew them away, 2 young guys were saved, 2 girls and the older man died on the spot. It is said that, the guard of the dam released water and causes this accident.
ReplyDelete