மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 29

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
திருவோண நட்சத்திரம்.

நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு’ என்ற அடைமொழியுடன் கூடியதாமும். ஒன்று திருவாதிரை (இது சிவபெருமானின் நட்சத்திரம்) இரண்டு திருவோணம் (இது பெருமாளீன் நட்சத்திரம்)

இது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சந்திரனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. பரணி
3. மிருகசீர்ஷம்
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. பூரம்
8. உத்திரம்
9. சித்திரை
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. அவிட்டம்
17. பூரட்டாதி
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் உத்திரம் முதல் பாதமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் திருவோணம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருத்தம் உண்டு!.

பூசம்  பொருந்தாது.

கார்த்திகை நட்சத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. திருவோணம் மகரராசி. பூசம் கடகராசி. ராசிகள் ஒன்றுக்கொன்று 7க்கு 7. சமசப்தம கணக்கு இங்கே வேலை செய்யாதா? திருவோணத்திற்கு பூசம் பொருந்தாதா?

    ReplyDelete
  2. காலை வணக்கம் அய்யா ,

    ReplyDelete
  3. என் மாமாவின் மகள் திருவோணம். நான் பூசம். எங்கள் குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய என் சம்மதத்தை கேட்டார்கள். எனக்கு அப்போது பொருத்தம் பற்றி தெரியாது. ஆனால் எங்களுக்கு மனப்பொருத்தம் இல்லை என்று தெரியும். அதோடு நெருங்கிய உறவில் திருமணம் செய்ய வேண்டாம் என்று விஞ்ஞானம் அறிவுறுத்துவதையும் கூறி, அந்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் கூறி, மறுத்து விட்டேன். இன்று, அந்த பெண்ணிற்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. எனது குடும்பத்தில் ரஜ்ஜு பொருத்தம் கூட சேராத ஒரு திருமணத்தினால் இன்று ஏகப்பட்ட குழப்பம். நல்ல வேளையாக, நானும் அந்த பெண்ணுடனான என் திருமணத்தை மறுத்து விட்டேன். இல்லை என்றால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். எனது குழந்தைக்கு நிச்சயம் பொருத்தம் பார்க்க வேண்டும். ஆனால் காலம் போகும் போக்கில் காதல் திருமணங்கள் சர்வ சாதாரனமாகி விட்ட நிலையில், அது சாத்தியம்தானா? முருகன் விட்ட வழி.

    ReplyDelete
  4. ///காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?///

    காதலர்களுக்கான ஆலோசனை
    காதலில் உறுதியிருந்தால் மட்டும்

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,

    ஆணிற்கும் பெண்ணிற்கும், திருவோண நட்சத்திரம் எனில்,பொருத்தம் மத்திமமா, உத்தமமா??

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    இருவரும் ஏக நட்சததிரமானால் .இரச்சு
    ப்பொருத்தம் .எப்படி பார்ப்பது ?
    தயவுசெய்துதெரிவிக்கவும்

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    திருவோணம் மகரராசி. பூசம் கடகராசி. ராசிகள் ஒன்றுக்கொன்று 7க்கு 7. சமசப்தம கணக்கு இங்கே வேலை செய்யாதா? திருவோணத்திற்கு பூசம் பொருந்தாதா?//////

    திருவோணம் சந்திரனுடைய நட்சத்திரம். பூசம் சனியினுடைய நட்சத்திரம். அதனால் பொருத்தம் இல்லை என்று மகான்கள் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்

    ReplyDelete
  8. ////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம் அய்யா////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger thozhar pandian said...
    என் மாமாவின் மகள் திருவோணம். நான் பூசம். எங்கள் குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய என் சம்மதத்தை கேட்டார்கள். எனக்கு அப்போது பொருத்தம் பற்றி தெரியாது. ஆனால் எங்களுக்கு மனப்பொருத்தம் இல்லை என்று தெரியும். அதோடு நெருங்கிய உறவில் திருமணம் செய்ய வேண்டாம் என்று விஞ்ஞானம் அறிவுறுத்துவதையும் கூறி, அந்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் கூறி, மறுத்து விட்டேன். இன்று, அந்த பெண்ணிற்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. எனது குடும்பத்தில் ரஜ்ஜு பொருத்தம் கூட சேராத ஒரு திருமணத்தினால் இன்று ஏகப்பட்ட குழப்பம். நல்ல வேளையாக, நானும் அந்த பெண்ணுடனான என் திருமணத்தை மறுத்து விட்டேன். இல்லை என்றால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். எனது குழந்தைக்கு நிச்சயம் பொருத்தம் பார்க்க வேண்டும். ஆனால் காலம் போகும் போக்கில் காதல் திருமணங்கள் சர்வ சாதாரனமாகி விட்ட நிலையில், அது சாத்தியம்தானா? முருகன் விட்ட வழி.////

    இறைவன் விட்டவழி என்று இருப்போர்க்கு எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும் பாதிப்பு இருக்காது! மனப்பக்குவம் வந்துவிடும்!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    ///காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?///
    காதலர்களுக்கான ஆலோசனை
    காதலில் உறுதியிருந்தால் மட்டும்/////

    உண்மை. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  11. /////Blogger மகேஸ்வரன் said...
    வணக்கம் ஐயா,
    ஆணிற்கும் பெண்ணிற்கும், திருவோண நட்சத்திரம் எனில்,பொருத்தம் மத்திமமா, உத்தமமா?/////

    பொருத்தம் உத்தமம். அதைப் பதிவிலும் எழுதியுள்ளேனே சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com