Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?
எட்டாம் எண் பலரையும் பயம் கொள்ள வைக்கும் எண்ணாகும். ஆனால் எட்டில் ஏராளமான நன்மைகளும் உண்டு.
இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் Facebookகை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் முதன் எழுத்து எண் கணிதத்தின்படி எட்டிற்கு
உரிய எண்ணாகும். Facebook என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களும் எட்டு ஆகும். அதன், அதாவது அந்தச் சொல்லின் கூட்டு எண்ணும் எட்டு
ஆகும்
Facebook = F (8) + A (1) + C (3) + E (5) + B (2) + O (7) + O (7) + K (2) = 35
இந்த 35ன் தனி எண் = 35 = 3 +5 + 8
எட்டு எண்பது வலிமை மிக்க எண்ணாகும் (Powerful Number)
Bombay = B (2) + O (7) + M (4) + B (2) + A (1) + Y (1) = 17 = 8
1995ஆம் ஆண்டு அதன் பெயர் மாற்றப்பெற்ற பிறகு அதன் அதிஷ்டங்களும் எட்டிலிருந்து வேறு ஒரு எண்ணுக்குப் போனது!
Mumbai = M (4) + U (6^) + M (4) + B (2) +A (1) + I (1) = 18
எழுதும்போது எல்லா எண்களும் மேலே துவங்கி கீழே முடியும். எட்டு மட்டும் மேலே துவங்கி மீண்டும் மேலேயே முடியும். நாம் பயணத்தை எங்கே
துவங்கினோமோ அங்கேயே அந்தப் பயணம் முடியும் என்பதை அது குறிக்கும்!
முகம் பார்க்கும் கண்ணாடியில் மற்ற எண்களெல்லாம் மாற்றத்துடன் தெரியும். எட்டு மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரியும்!
எட்டைக் குறுக்கு வசத்தில் இரண்டாக உடைத்தால் இரண்டு ஜீரோக்கள் (சைபர்கள்) கிடைக்கும். வாழ்க்கை இறுதியில் ஜீரோ என்பதை அது
உணர்த்தும். எண் எட்டு சனியினுடைய எண். அவன் ஆயுள்காரகன் அதை மனதில் வையுங்கள்.
எட்டாம் எண் பல தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், மகான்களுடன் தொடர்புள்ள எண்ணாகும்
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாவர். 4 +4 = 8 அவருடைய பெயருக்கான எழுத்துக்களின் மதிப்பும்
எட்டுதான். Barack Obama = 212132 72141 = 26 = 8
நட்சத்திர வரிசையில் பார்த்தீர்கள் என்றால், சனி பகவானுடைய நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவைகளின் வரிசை எண் 8, 17, 26 ஆகும் அவைகளின் தனி எண்ணும் எட்டுதான்
மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206 = 8
மனித மூளையின் ஆற்றலுக்கு வேலை கொடுக்கும் செஸ் ஆட்டத்தில் உள்ள காய்களின் எண்ணிக்கை எட்டு. பெரிய காய்கள் + சிப்பாய்கள் எட்டு
ஆட்டத்தின் தளத்திலும் எட்டு கட்டங்கள், எட்டு வரிசைகள்
ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்
உலக அளவில் ஆங்கில மொழி ஏன் இத்தனை பிரபலம்?
அந்த மொழியில் உள்ள எழுத்துக்கள் 26 = 8
ஆங்கில மொழியில் உள்ள F & P ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய எண் 8. அந்த எழுத்துக்களுடன் துவங்கும் பல சொற்கள் நம் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டதாக இருக்கும். நம்மைக் கலக்குவதாக இருக்கும்!
Fail, Fate, False, Fire, Fatal, Fear, Fever, Fight, Foreign, Frustration, Fracture, Future (worry of future), Freedom, Fall,Fast,Famine,Fibroid, etc.
Pass, Pacemaker(for heart), Poverty,Pathetic, Pain,Panic, Proud, Perversion, Philosophy, Police, Poor, Prison,Poison,Phishing, Prohibition,Patient (in hospital) and Punishment etc.
இந்திய சுதந்திரம் அடைந்த தினம்
15-8-1947 = 35 = 8
அன்றைய நட்சத்திரம் பூசம் = வரிசையில் எட்டாவது நட்சத்திரம் = அத்துடன் அது சனி பகவானின் நட்சத்திரம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி திதியன்று. அது திதிகளின் வரிசையில் எட்டாவது திதியாகும். அத்துடன் அவர் தனது பேற்றோர்களுக்கு
எட்டாவது குழந்தையாவார்.
கவியரசர் கண்ணதாசனும் தன்னுடைய பேற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாவார்
இந்த ஆக்கம், இணையத்தில் முன்பு படித்த கட்டுரை ஒன்றுடன் என் சொந்த சரக்கையும் கலந்து கொடுத்துள்ளதாகும்
----------------------------------------
சரி, தலைப்பிற்கு வருகிறேன்
யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?
தெரியும். எண் கணிதத்தில் அது விவரமாகத் தெரியாது. ஆனால் ஜோதிடத்தில் அது பளிச்’சென்று தெரியும்
அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) பாடத்திற்கும் முகப்பில் உள்ள படத்திற்கு என்ன சம்பந்தம்?”
”கண்ணா, அவர் திருநீறு பூசியிருக்கும் அழகைப் பார்த்தாயா? அதை உனக்குச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் அந்தப் படம். திருநீற்றை அப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் பிறந்த தேதியும் 8ம் எண்ணின் கீழ்தான் வருகிறது.
ReplyDeleteஇன்று பாடம் சற்று தாமதமாக வெளி வந்திருக்கிறது. அகண்ட அலை சதி செய்து விட்டதா?
suppeerr
ReplyDeleteநான் அனுஷத்தில் பிறந்தவன்..நட்சத்திர கிரகம் சனிபகவான்! அவருக்கு உரிய எண் 8! எனது பெயர் கூட்டுத் தொகை..இயல்பாகவே 8! V.RAMESH
ReplyDeleteஊக்கம் கொடுத்த பதிவு தந்த வாத்தியார் அய்யா அவர்களுக்கு நன்றி!
Ayya
ReplyDeletecinemavil manitha vaazhkaiya 8/8 pirithu patiyavarum avarthane
ரொம்ப நன்றாக சொல்லியிருக்கிங்க !
ReplyDeleteஇதையும் பாருங்க
MICHELLE OBAMA =44=8
BARACK OBAMA = 26=8
JOHN MCCAIN = 35=8
HILLARY CLINTON=44=8
CHELSEA CLINTON =53=8
I don't say good or bad, but Like Attracts Like.
Good Morning Sir
ReplyDeleteMy birth date is 17th and it is on Saturday!!! Happy to read this article..
good lesson
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteஅபாரம்
இந்த நுட்பம் தங்களின் தனி முத்திரை
்
Fantaaaaaaastic...!!
ReplyDeleteIn the list..
"FALSE" comes two times...
(is it written intentionally for giving some in-built meaning or just like that)
to add ..
60% of the student of this class falls under EIGHT
Pournamidha-Pournamidham
(Our KMRK will thro light on this)
Bream 8 in vertical (resulting 3 and inverse 3; the number for Guru) The Guru and Sani peyarchi widely celebrated.
8 means give step ahead (the vliage slang says "oru ettu parthuttu varane")
In roman number addition of I ends with eight as VIII(nine becomes IX)
In cardinal numbers in Tamil 8 denotes ௮ in tamil is the first letter of Tamil language (also the first prenology in all language)
The cursor/Chip in the computer are 8. Thus Most of the secured pass word in the online portal advise for 8 characters
Even when we work in Share/Gold/Forex Market, we consider 8 to give the market prediction.
அருமை ஐயா.... எட்டாம் எண்ணிற்கு ஒரு புது விளக்கத்தை கொடுத்து உள்ளிர்கள்.....
ReplyDelete8-இன் மகிமையை உணர்த்தும் சூபர்ப் கட்டுரை....
ReplyDeleteநானும் 8 தான்... 14-06-1968...
நன்றி....
////Blogger Ak Ananth said...
ReplyDeleteநான் பிறந்த தேதியும் 8ம் எண்ணின் கீழ்தான் வருகிறது.
இன்று பாடம் சற்று தாமதமாக வெளி வந்திருக்கிறது. அகண்ட அலை சதி செய்து விட்டதா?/////
ஆமாம் சுவாமி!
////Blogger M.A.Nandha Kummar said...
ReplyDeletesuppeerr/////
நல்லது. நன்றி!
////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteநான் அனுஷத்தில் பிறந்தவன்..நட்சத்திர கிரகம் சனிபகவான்! அவருக்கு உரிய எண் 8! எனது பெயர் கூட்டுத் தொகை..இயல்பாகவே 8! V.RAMESH
ஊக்கம் கொடுத்த பதிவு தந்த வாத்தியார் அய்யா அவர்களுக்கு நன்றி!////
பலருக்கும் ஊக்கம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.நன்றி!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteAyya
cinemavil manitha vaazhkaiya 8/8 pirithu patiyavarum avarthane////
”ஒரே எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறாத கல்வியும்
மூவெட்டில் கிடைக்காத மணவாழ்வும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐயெட்டில் தேடாத பொருளும்
ஆறெட்டில் வராத புகழும்
ஏழெட்டில் சுற்றாத தலமும்
எட்டெட்டில் முடியாத வாழ்வும்”
வீணே!
என்று பிரபலமாக விளங்கும் கிராமியப்பாடல் அது. சினிமாக்காரர்கள் அதை பாட்டாகப் பதிவு செய்துவிட்டார்கள்!
////Blogger உணர்ந்தவை! said...
ReplyDeleteரொம்ப நன்றாக சொல்லியிருக்கிங்க !
இதையும் பாருங்க
MICHELLE OBAMA =44=8
BARACK OBAMA = 26=8
JOHN MCCAIN = 35=8
HILLARY CLINTON=44=8
CHELSEA CLINTON =53=8
I don't say good or bad, but Like Attracts Like./////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!
////Blogger Dallas Kannan said...
ReplyDeleteGood Morning Sir
My birth date is 17th and it is on Saturday!!! Happy to read this article..////
உங்களுக்கு மகிழ்வைக் கொடுத்துள்ளது என்னும் போது, எனக்கும் மனத் திருப்தியை அளிக்கிறது உங்களின் பின்னூட்டம்!
////Blogger arul said...
ReplyDeletegood lesson/////
நல்லது. நன்றி!
////Blogger சர்மா said...
ReplyDeleteவணக்கம் ஐயா
அபாரம்
இந்த நுட்பம் தங்களின் தனி முத்திரை ்////
உங்களின் பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் சர்மா!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteFantaaaaaaastic...!!
In the list..
"FALSE" comes two times...
(is it written intentionally for giving some in-built meaning or just like that)
to add ..
60% of the student of this class falls under EIGHT
Pournamidha-Pournamidham
(Our KMRK will thro light on this)
Bream 8 in vertical (resulting 3 and inverse 3; the number for Guru) The Guru and Sani peyarchi widely celebrated.
8 means give step ahead (the vliage slang says "oru ettu parthuttu varane")
In roman number addition of I ends with eight as VIII(nine becomes IX)
In cardinal numbers in Tamil 8 denotes ௮ in tamil is the first letter of Tamil language (also the first prenology in all language)
The cursor/Chip in the computer are 8. Thus Most of the secured pass word in the online portal advise for 8 characters
Even when we work in Share/Gold/Forex Market, we consider 8 to give the market prediction./////
அப்பாடா...உங்களிடமிருந்து இப்போதுதான் ஒரு முழுமையான பின்னூட்டம் வந்திருக்கிறது சாமியோவ்!
////Blogger Ananthakumar said...
ReplyDeleteஅருமை ஐயா.... எட்டாம் எண்ணிற்கு ஒரு புது விளக்கத்தை கொடுத்து உள்ளிர்கள்...../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆனந்தகுமார்!
////Blogger Advocate P.R.Jayarajan said...
ReplyDelete8-இன் மகிமையை உணர்த்தும் சூபர்ப் கட்டுரை....
நானும் 8 தான்... 14-06-1968...
நன்றி..../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி வக்கீல் சார்!!
"ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்"
ReplyDeleteஉண்மைதான்... ஹா ஹா ஹா அருமை சார்
அய்யா எனது ராசி கும்பம் ஆனால் துயரம் மட்டும் தான் உள்ளது குரு 5-இல் வருவது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் 4-இல் இருக்கும் போது எனக்கு வேலை கிடைத்தது 5-இற்கு மாறின போது வேலை பொய் விட்டது கஷ்டமோ கஷ்டம் அய்யா.
ReplyDeleteஅஷ்ட லக்ஷ்மிகள், அஷ்ட திக்குகள், அஷ்ட வசுக்கள்,அஷ்டாங்க யோகம், சாஷ்டாங்க நமஸ்காரம், அஷ்ட வர்க்கம்...
ReplyDeleteஅடியேன் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை எட்டுதான்.நட்சத்திரமோ பூசம்.மனைவியின் நட்சத்திரம் அனுஷம்.இருவருக்கும் லக்கினம் கடகம். எனவே 8ம் இடத்திற்கு(கும்பம்) உரியவர் சனைச்சரன்.
வேப்பிலை சுவாமிஜி எதையோ சொல்லிவிட்டு என்னை விளக்கம் சொல்லச் சொல்கிறார்.இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை சுவாமிகளே!
எட்டி நடை வைப்பது என்பது விரைந்து செல்வது என்று பொருள்படும்.'ஒரு எட்டு போய் பார்த்து வா'என்றால் 'விரைந்து சென்று பார்த்து வா'என்று பொருள் படும் . நடை எட்டும், எண் எட்டும் ஒன்றல்ல என்பது என் தாழ்மையான எண்ணம்.
யோகத்தில் எட்டு நடை என்று ஒன்று உள்ளது. முட்டிவலி, இடுப்பு வலி, சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
www.kumbal.com/2012/04/8-seceret.hட்ம்ல் இந்த இணைப்பைப் பாருங்கள்.
22 மார்ச் 2012 வகுப்பறையில் ஐயாவே இந்த எண் கணிதம் பற்றி எழுதியுள்ளார்கள்.
வேத உபநிடதங்களில்
ReplyDeleteபரிட்சயம் உள்ள அன்பர் லால்குடியார்
விளக்கிச் சொல்லலாமே என பிரியபட்டோம்
விளையாட்டுகாக இல்லை
பூஜ்ஜியமும்
பூர்ணமும் ஒன்று போல்தானிருக்கும்
அது
சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ள ஈசா வாஸ்ய உபநிடதம் சொல்வது
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி
செந்தில் அவர்களே, நான் கற்றுக் கொண்ட வரை இராசி பலன் பார்ப்பது மட்டும் பத்தாது. உங்கள் இலக்னமும் தசா புக்தியும் அஷ்டகவர்க்கமும் மிகவும் முக்கியம். இறைவன் மேல் பாரத்தை சுமத்தி நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். நிச்சயம் ஒரு நாள் நல்லது நடக்கும். எனக்கும் வியாழ பகவான் இரண்டில் படுத்தி எடுத்து விட்டார். ஆனால் ஒன்றில் இருக்கும் போது நன்மையே செய்தார். கேது திசை சந்திர புக்தி காரணமாக இருக்கலாம்.
ReplyDeleteவாத்தியார் ஐயா, நான் பிறந்தது சனிக்கிழமை அன்று. ஆனால் கூட்டு தொகை 9 வருகிறது:-( பரவாயில்லை. கர்மகாரகன் பற்றிய உங்கள் விரிவான பாடத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
///Blogger Remanthi said...
ReplyDelete"ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்"
உண்மைதான்... ஹா ஹா ஹா அருமை சார்////
முழுச் சந்தேகமும் தீர இன்னுமொருமுறை மடித்துப் பார்த்துவிடுங்கள் அன்பரே!:-)))))
////Blogger C.Senthil said...
ReplyDeleteஅய்யா எனது ராசி கும்பம் ஆனால் துயரம் மட்டும் தான் உள்ளது குரு 5-இல் வருவது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் 4-இல் இருக்கும் போது எனக்கு வேலை கிடைத்தது 5-இற்கு மாறின போது வேலை பொய் விட்டது கஷ்டமோ கஷ்டம் அய்யா./////
இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பாவிக்கும் பக்குவம் இருந்தால், எதுவும் நம்மைப் பாதிக்காது. முருகப்பெருமானைப் பிராத்தனை செய்யுங்கள். மனம் பக்குவப் பட்டுவிடும்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅஷ்ட லக்ஷ்மிகள், அஷ்ட திக்குகள், அஷ்ட வசுக்கள்,அஷ்டாங்க யோகம், சாஷ்டாங்க நமஸ்காரம், அஷ்ட வர்க்கம்...
அடியேன் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை எட்டுதான்.நட்சத்திரமோ பூசம்.மனைவியின் நட்சத்திரம் அனுஷம்.இருவருக்கும் லக்கினம் கடகம். எனவே 8ம் இடத்திற்கு(கும்பம்) உரியவர் சனைச்சரன்.
வேப்பிலை சுவாமிஜி எதையோ சொல்லிவிட்டு என்னை விளக்கம் சொல்லச் சொல்கிறார்.இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை சுவாமிகளே!
எட்டி நடை வைப்பது என்பது விரைந்து செல்வது என்று பொருள்படும்.'ஒரு எட்டு போய் பார்த்து வா'என்றால் 'விரைந்து சென்று பார்த்து வா'என்று பொருள் படும் . நடை எட்டும், எண் எட்டும் ஒன்றல்ல என்பது என் தாழ்மையான எண்ணம்.
யோகத்தில் எட்டு நடை என்று ஒன்று உள்ளது. முட்டிவலி, இடுப்பு வலி, சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
www.kumbal.com/2012/04/8-seceret.hட்ம்ல் இந்த இணைப்பைப் பாருங்கள்.
22 மார்ச் 2012 வகுப்பறையில் ஐயாவே இந்த எண் கணிதம் பற்றி எழுதியுள்ளார்கள்./////
இதில் பல புதிய செய்திகள் உள்ளன சுவாமி! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteவேத உபநிடதங்களில்
பரிட்சயம் உள்ள அன்பர் லால்குடியார்
விளக்கிச் சொல்லலாமே என பிரியபட்டோம்
விளையாட்டுகாக இல்லை
பூஜ்ஜியமும்
பூர்ணமும் ஒன்று போல்தானிருக்கும்
அது
சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ள ஈசா வாஸ்ய உபநிடதம் சொல்வது
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி/////
வடமொழி சுலோகத்தைக் கொடுத்த நீங்கள், அதற்கான பொருளையும் (அர்த்தத்தையும்) கொடுத்திருக்கலாமே வேப்பிலை சுவாமி!
///////Blogger thozhar pandian said...
ReplyDeleteசெந்தில் அவர்களே, நான் கற்றுக் கொண்ட வரை இராசி பலன் பார்ப்பது மட்டும் பத்தாது. உங்கள் இலக்னமும் தசா புக்தியும் அஷ்டகவர்க்கமும் மிகவும் முக்கியம். இறைவன் மேல் பாரத்தை சுமத்தி நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். நிச்சயம் ஒரு நாள் நல்லது நடக்கும். எனக்கும் வியாழ பகவான் இரண்டில் படுத்தி எடுத்து விட்டார். ஆனால் ஒன்றில் இருக்கும் போது நன்மையே செய்தார். கேது திசை சந்திர புக்தி காரணமாக இருக்கலாம்.
வாத்தியார் ஐயா, நான் பிறந்தது சனிக்கிழமை அன்று. ஆனால் கூட்டு தொகை 9 வருகிறது:-( பரவாயில்லை. கர்மகாரகன் பற்றிய உங்கள் விரிவான பாடத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்./////
உங்கள் ஆவல் வீண்போகாது. எழுதுகிறேன். நன்றி!
அந்த சமஸ்கிருத சுலோகத்திற்கு விளக்கம் விக்கி மகாராசாவிடம் கேட்டுப் பார்த்தேன் விடை கிடைத்தது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
ReplyDeleteவேப்பிலை சுவாமிகள் அவர் பாணியில் விளக்கினாலும் படிக்க தயாராவுள்ளோம்