பழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதியவருக்கு இன்று பிறந்தநாள்!
தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு, பெருமை சேர்த்த கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இன்று (ஜுன் 24) பிறந்த தினம்!
எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அவர்!
அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்! அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!
தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்! தன் அனுபவத்தை யெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!
“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர். என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!
“உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்று சொல்லி அனைவரையும் உற்சாகப் படுத்திவிட்டுப்போனவர் அவர்!
“சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு” என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!
“ஆலயமணியின் ஓசையைக்” கேட்க வைத்தவர் அவர்!
“வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக்” காட்டியவர் அவர்!
“ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ” என்று பழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.
“ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா” என்று நல்ல உள்ளங்களைப் பற்றி நறுக்கென்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.
“நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம்வரை, தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே” என்று பிள்ளைகளுக்கெல்லாம் அறிவுரை சொன்னவர் அவர்
“அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி” என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!
“பூஜைக்கு வந்த மலரே வா; பூமிக்கு வந்த நிலவே வா” என்று பெண்ணை உயர்வாகச் சொன்னவர் அவர்
“ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்” என்று காதலுக்குப் பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
“மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை கன்னியரும் பூங்கோடியும் கன்னைய்யா, அவர் கண்ணிலே களங்கமுண்டோ சொல்லைய்யா?” என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.
“சொல்லலெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?” என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!
“பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை” என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்
“மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்” என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
“சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப்” போனவர் அவர்!
”ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று” உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!
“மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.
”வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?” என்று நிலையாமைத் தத்துவத்தை எளிமையாக மனதில் பதியும்படி சொன்னவர் அவர்.
“போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா” என்று மரணத்தையும் நேசிக்கச் சொன்னவர் அவர்!
"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!
பாமரனுக்கும் புரியும் வண்ணம், எளிமையான சொற்களால், தெளிவான கருத்துக்களால் சுருங்கச் சொல்லி படித்தவுடன் அல்லது கேட்டவுடன் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் அவருடைய எழுத்துக்கள். அதனால்தான் அவர் வெற்றி கண்டார்!
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து எழுதினார் அவர். உள்ளதை உள்ளபடியே எழுதினார். அதனால்தான் அவர் இன்றளவும் எராளமான தமிழ் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.
இன்று அவருடைய பிறந்த நாள்.
அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க!
என்னைக் கவலையில்லாத மனிதனாக்கியது அவருடைய எழுத்துக்கள்தான்! என்னுடைய மானசீகமான ஆசானும் அவர்தான்! அவரை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இறைவன் எனக்களித்த பெரும் பேறும் அதுதான்!
*****************************
பிறந்த நாளிற்கு வந்தவர்களைச் சும்மா அனுப்பலாமா?
இனிப்பைப் பாட்டாகக் கொடுத்திருக்கிறேன். ஆமாம், அவர் எழுதிய பாடல்தான். கீழே உள்ளது!
பாடல் வரிகள்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
(ஒளிமயமான)
--------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
He is a great man.... He has writen lot of books apart from songs and "Arthamulla Indu Madham" has cleared lot of doubts for lot of people. My daughter's birth day is also June 24 th (25 in india)
ReplyDeleteஅவரது பிறந்த நாளை நினைவு கூறும் முகமாக அவரது பாடல்களில் ரசனைக்கேற்ப சிலவற்றை தொகுத்து வழங்கியது அருமை. அவர் வாழ்ந்த நாட்களில் நாமும் வாழ்ந்தோம் என்பதே மிகப் பெரிய பெருமை....
ReplyDeleteவணக்கம் ஐயா! மற்ற நேரங்களை விட ,எப்படி ஆனாலும் இரவு துங்கும் முன் கேட்பது அவர் பாடல்களில் ஒரு டோஸ் அதிகமாகிறது !!!
ReplyDeleteகவியரசர் கண்ணதாசன் தன்னை - ’காவியத் தாயின் இளைய மகன்’ என்றே சொல்லிக் கொண்டவர் - ’படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று - அகம் மகிழ்ந்திருந்தார்.நல்ல நினைவு கூர்தல். அவரே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போல்- அவர் ’என்றும் நிரந்தரமானவர்’.
ReplyDeleteமுத்து நல்முத்து தனையது சிப்பிக்குள்
ReplyDeleteதன்னை வைத்துக் கொண்டாலும்
முத்து நல்ல முத்து - இம்
முத்து தமிழர் நம் சொத்து
கொட்டிய கவிதை ஆயிரமாயிரம் அவை
காட்டிய வழிகள் வாழ்விற்கு பாயிரம்
பட்டி தொட்டியெல்லாம் பாடிடும் அது
செட்டிநாட்டுப் பிள்ளையின் அமர காவியம்
தட்டுத் தடுமாறும் நெஞ்சங்களைத் தனதாக்கி
முட்டிமோதி வென்றிட மூச்சாய் நின்றிடும்
கட்டி வைரக் கவிதைகளை கணக்கிலாது
தீட்டி தீமூட்டி வேள்விகட்செய்த சிறுகூடல்
பட்டிக் கம்பனே! காலங்கள் கடந்துவாழும் கவிஞனே!
வாழி! வாழீ !! நின்புகழ்!!!
கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி என்றொரு இரத்தினங்களின் வரிசையிலே இந்த முத்துவும் ஒளிர்ந்திடும் என்னாளுமே!
வணக்கம்
ReplyDeleteபாவேந்தரின் பிறந்த நாள் .பதிவக்கு பாராட்டுகள்
எத்தனை பாடலை உதாரணமாக தருவீர்களையா
miga arumayana thalaippu padal good post
ReplyDeleteஅய்யா
ReplyDeleteகண்ணதாசனின் எல்லா பாடல்கலும் அருமை நான் தினமும் இரவில் கீழ் கண்டபாடல் வரிகளை கேட்காமல் தூன்குவதுஇல்லை
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
பகிர்வுக்கு,நன்றி வாத்தியார்!/// கவிஞரின் பாடல்கள் எல்லாமே ஏதோ ஒன்றை சுட்டி நிற்கும்.///இப்போதெல்லாம் பாட்டா எழுதுகிறார்கள்?கவிஞர் புகழ் வாழ்க!!!
ReplyDeleteமுத்தான பாடல்களை தந்தவர் இந்த
ReplyDeleteமுத்தையா (இவர் பெயர் இது தானே)
கண்ணதாசனின் பாடல்களில்
கருத்தை கவர்ந்தது என பட்டியலிட்டால்
கணக்கிலடங்கா நம் அனுபவமும் அதில்
கவ்விக் கொள்ளும் இது உண்மையே
முதல்வர் அம்மா ஆட்சியில் தான்
முத்தையாவிற்கு முதலில் வெண்கல சிலை
தி நகரில் அமைக்கப்பட்டது நம்மை
திரும்பி பார்க்க வைக்கிறது..
இனிப்பை தந்த எங்கள்
"இன் சொல் இளவல் "(நம்ம வாத்தி யார் தான்)
அவர்களுக்கு
அன்பார்ந்த நன்றியும் பாராட்டும்
காலங்கள் கடந்தும் நம் நினைவில் வாழும் கவியரசரின் புகழ் போற்றும் அருமையான பதிவு. கவி முத்துக்கள் சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்திருப்பதும் அருமை. எத்தனையோ எழுத்தாளர்களைத் தம் எழுத்துக்களால் உருவாக்கிய மாமேதை கவியரசர். அவர் புகழ் பாட ஒரு நாள், ஒரு நா போதுமா?. மிக அற்புதமான பதிவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதையும் அருமை.
ReplyDeleteஅய்யா ,
ReplyDeleteகண்ணதாசனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. அவருடைய பல அருமையான வரிகளை தொகுத்து கொடுத்து உள்ளீர்கள்.
என்னை கவர்ந்த சில வரிகள்
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும்
(கண்ணிலே எண்ணம் உண்டு கண்கள் தன் அறியும்)
கண்ணை மறைத்து கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
(நான் உன்னை அழைக்கவில்லை..)
யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ,
அம்மாமா பூமியிலே யாவும் வஞ்சம்
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ நினைத்தால் வாழலாம்)
நன்றி
நா வெங்கடேஷ்
கவியரசருக்கு நிகர் கவியரசர்தான். அற்புதமான பாடலை நினைவூட்டியதற்கு நன்றி ஐயா. கவியரசரின் அற்புதமான பல பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "ஆறு மனமே ஆறு" என்ற பாடலே. நடிகர் திலகத்தின் நடிப்பு, சௌந்திரராஜனின் குரல், மெல்லிசை மன்னர்களின் இசை இவை எல்லாவற்றையும் விட பாடல் படமாக்கப்பட்ட அறுபடை வீடுகள் என பாட்டில் எல்லாமே அருமை. இந்த சிறந்த மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நினைப்பதே பெருமையாக உள்ளது.
ReplyDelete////Blogger Dallas Kannan said...
ReplyDeleteHe is a great man.... He has writen lot of books apart from songs and "Arthamulla Indu Madham" has cleared lot of doubts for lot of people. My daughter's birth day is also June 24 th (25 in india)/////
உங்கள் செல்வ மகளின் பிறந்த தினத்தை 24 என்றே வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவையும் இணைத்துத் தேதியைப் பார்க்க வேண்டாம். நன்றி
/////Blogger Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteஅவரது பிறந்த நாளை நினைவு கூறும் முகமாக அவரது பாடல்களில் ரசனைக்கேற்ப சிலவற்றை தொகுத்து வழங்கியது அருமை. அவர் வாழ்ந்த நாட்களில் நாமும் வாழ்ந்தோம் என்பதே மிகப் பெரிய பெருமை...////.
பெருமிதத்தை மட்டுமல்லாது, மகிழ்ச்சியையும் அது தருகிறது! நன்றி வக்கீல் சார்!
/////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteகவியரசர் கண்ணதாசன் தன்னை - ’காவியத் தாயின் இளைய மகன்’ என்றே சொல்லிக் கொண்டவர் - ’படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று - அகம் மகிழ்ந்திருந்தார்.நல்ல நினைவு கூர்தல். அவரே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போல்- அவர் ’என்றும் நிரந்தரமானவர்’./////
ஆமாம். அது நிதர்சனமான உண்மை. அவர் நம் மனங்களில் நிரந்தமாக வாந்துகொண்டிருக்கிறார். நன்றி நண்பரே!
//////Blogger G Alasiam said...
ReplyDeleteமுத்து நல்முத்து தனையது சிப்பிக்குள்
தன்னை வைத்துக் கொண்டாலும்
முத்து நல்ல முத்து - இம்
முத்து தமிழர் நம் சொத்து
கொட்டிய கவிதை ஆயிரமாயிரம் அவை
காட்டிய வழிகள் வாழ்விற்கு பாயிரம்
பட்டி தொட்டியெல்லாம் பாடிடும் அது
செட்டிநாட்டுப் பிள்ளையின் அமர காவியம்
தட்டுத் தடுமாறும் நெஞ்சங்களைத் தனதாக்கி
முட்டிமோதி வென்றிட மூச்சாய் நின்றிடும்
கட்டி வைரக் கவிதைகளை கணக்கிலாது
தீட்டி தீமூட்டி வேள்விகட்செய்த சிறுகூடல்
பட்டிக் கம்பனே! காலங்கள் கடந்துவாழும் கவிஞனே!
வாழி! வாழீ !! நின்புகழ்!!!
கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி என்றொரு இரத்தினங்களின் வரிசையிலே இந்த முத்துவும் ஒளிர்ந்திடும் என்னாளுமே!//////
கவிதை வரிகளுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger சர்மா said...
ReplyDeleteவணக்கம்
பாவேந்தரின் பிறந்த நாள் .பதிவக்கு பாராட்டுகள்
எத்தனை பாடலை உதாரணமாக தருவீர்களையா/////
பாவேந்தர் என்ற சொல் பாரதிதாசனைக் குறிக்கும். சரி, இவரும் பாக்களுக்கு வேந்தர்தான்! நன்றி சர்மா!
////Blogger arul said...
ReplyDeletemiga arumayana thalaippu padal good post/////
நல்லது. நன்றி அருள்!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteஅய்யா
கண்ணதாசனின் எல்லா பாடல்களும் அருமை நான் தினமும் இரவில் கீழ் கண்டபாடல் வரிகளை கேட்காமல் தூங்குவதுஇல்லை
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு/////
ஆமாம். சுமைதாங்கி என்னும் படத்தில் வரும் இந்தப் பாடல், பலரது துயரங்களுக்கு அரு மருந்தாக இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. நன்றி நண்பரே!
//////Blogger Subramaniam Yogarasa said...
ReplyDeleteபகிர்வுக்கு,நன்றி வாத்தியார்!/// கவிஞரின் பாடல்கள் எல்லாமே ஏதோ ஒன்றை சுட்டி நிற்கும்.///இப்போதெல்லாம் பாட்டா எழுதுகிறார்கள்?கவிஞர் புகழ் வாழ்க!!!/////
ஆமாம். இப்போது உள்ள திரையிசைப்பாடல்கள் சொல்லும்படியாக இல்லை. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுத்தான பாடல்களை தந்தவர் இந்த
முத்தையா (இவர் பெயர் இது தானே)
கண்ணதாசனின் பாடல்களில்
கருத்தை கவர்ந்தது என பட்டியலிட்டால்
கணக்கிலடங்கா நம் அனுபவமும் அதில்
கவ்விக் கொள்ளும் இது உண்மையே
முதல்வர் அம்மா ஆட்சியில் தான்
முத்தையாவிற்கு முதலில் வெண்கல சிலை
தி நகரில் அமைக்கப்பட்டது நம்மை
திரும்பி பார்க்க வைக்கிறது..
இனிப்பை தந்த எங்கள்
"இன் சொல் இளவல் "(நம்ம வாத்தி யார் தான்)
அவர்களுக்கு
அன்பார்ந்த நன்றியும் பாராட்டும்////
ஆமாம். அவருடைய இயற்பெயர் முத்தையா! அது வைத்தீஸ்வரன் கோவிலில் உறையும், குமரன், முத்துக்குமாரசாமியின் பெயராகும். எனக்கு வாத்தியார் என்ற பட்டமே போதும். வேறு பட்டங்கள் வேண்டாம் வேப்பிலை சுவாமிஜி!
////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
ReplyDeleteகாலங்கள் கடந்தும் நம் நினைவில் வாழும் கவியரசரின் புகழ் போற்றும் அருமையான பதிவு. கவி முத்துக்கள் சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்திருப்பதும் அருமை. எத்தனையோ எழுத்தாளர்களைத் தம் எழுத்துக்களால் உருவாக்கிய மாமேதை கவியரசர். அவர் புகழ் பாட ஒரு நாள், ஒரு நா போதுமா?. மிக அற்புதமான பதிவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதையும் அருமை./////
ஆமாம். ஒரு நாளும் போதாது. ஒரு நாவும் போதாது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
/////Blogger Venkatesh Nagarajan said...
ReplyDeleteஅய்யா ,
கண்ணதாசனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. அவருடைய பல அருமையான வரிகளை தொகுத்து கொடுத்து உள்ளீர்கள்.
என்னை கவர்ந்த சில வரிகள்
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும்
(கண்ணிலே எண்ணம் உண்டு கண்கள் தன் அறியும்)
கண்ணை மறைத்து கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
(நான் உன்னை அழைக்கவில்லை..)
யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ,
அம்மாமா பூமியிலே யாவும் வஞ்சம்
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ நினைத்தால் வாழலாம்)
நன்றி
நா வெங்கடேஷ்//////
ஆமாம். வாழ நினைத்தால் வாழலாம் (படம்: பலே பாண்டியா) என்ற பாடல் நொந்து போன பல மனங்களுக்குக் கட்டியனைத்து ஆறுதல் சொல்லும் பாடலாக இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது!
/////Blogger thozhar pandian said...
ReplyDeleteகவியரசருக்கு நிகர் கவியரசர்தான். அற்புதமான பாடலை நினைவூட்டியதற்கு நன்றி ஐயா. கவியரசரின் அற்புதமான பல பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "ஆறு மனமே ஆறு" என்ற பாடலே. நடிகர் திலகத்தின் நடிப்பு, சௌந்திரராஜனின் குரல், மெல்லிசை மன்னர்களின் இசை இவை எல்லாவற்றையும் விட பாடல் படமாக்கப்பட்ட அறுபடை வீடுகள் என பாட்டில் எல்லாமே அருமை. இந்த சிறந்த மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நினைப்பதே பெருமையாக உள்ளது./////
என் மனதிலும் அந்த மகிழ்ச்சி உள்ளது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தோழரே!
வாழ்கையில் விரக்தியின் எல்லைக்கு சென்று வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வேளையில் கவியரசரின் "மயக்கமா கலக்கமா" பாடலை கேட்டு தெளிவுற்றதாக கவிஞர் வாலி கூறியதாக ஞாபகம்.
ReplyDelete"வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"
"ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைய பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"
அற்புதமான வரிகள். ஆனால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இன்னும் மனதில் பக்குவம் வரவில்லை:-(
நான் 11ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கியமன்ற ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார் கவியரசர். வரவேற்புரை நான் ஆற்றும் பெரும் வாய்ப்பு கிடைத்தது.நன்றியுரையை எங்கள் பள்ளி மூத்த தமிழாசிரியர் தெய்வத்திரு.கங்காதரன் ஆற்றினார். இவர் பேரறிஞர் தி வே கோபால ஐயரின் இளவல்.
ReplyDelete'போனால் போகட்டும் போடா' பாடல் கருத்து முதற் சங்க காலம் தொடங்கி எப்படி தமிழில் கையாளப்பட்டு வருகிறது என்று பட்டியலாகப் பாடல்களைப் பொழிந்தார் தமிழ்ழ்சிரியர் கங்காதரன்.யானைக்கும் அடி சரிக்கும் என்பது போல் ஒரு பாடலின் அடுத்த வரி மறந்து விட்டார்.அப்போது கவியரசர் அந்த வரியை சட்டென்று கூறி கங்காதரன் அவர்கள் தொடர்ந்து பாடல்களைக் கூற வழி வகுத்தார்.அப்போது கவியரசரும் பழந்தமிழ் இலக்கியத்தை கரதலப் பாடமாக மனப்பாடம் செயதவர்தான் என்பது தெற்றென வெளிப்பட்டது.
'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி; அவனைச் சேரும் நாள் பார்க்கச்சொல்லடி'பெருந் தலைவர் காமராசருக்கு அனுப்பப்பட்ட செய்தி என்று
கூறுவோரும் உண்டு.
நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா!
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். கவிஞர் கண்ணதாசன் கலைமகளின் செல்வப்புதல்வர். அவரதுபாடல்கள் எல்லாமே முத்துக்கள். நன்றி.
ReplyDelete/////Blogger thozhar pandian said...
ReplyDeleteவாழ்கையில் விரக்தியின் எல்லைக்கு சென்று வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வேளையில் கவியரசரின் "மயக்கமா கலக்கமா" பாடலை கேட்டு தெளிவுற்றதாக கவிஞர் வாலி கூறியதாக ஞாபகம்.
"வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"
"ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைய பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"
அற்புதமான வரிகள். ஆனால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இன்னும் மனதில் பக்குவம் வரவில்லை:-(/////
காலம் வரும்போது பக்குவப்பட்டு விடும்! நன்றி பாண்டியன்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநான் 11ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கியமன்ற ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார் கவியரசர். வரவேற்புரை நான் ஆற்றும் பெரும் வாய்ப்பு கிடைத்தது.நன்றியுரையை எங்கள் பள்ளி மூத்த தமிழாசிரியர் தெய்வத்திரு.கங்காதரன் ஆற்றினார். இவர் பேரறிஞர் தி வே கோபால ஐயரின் இளவல்.
'போனால் போகட்டும் போடா' பாடல் கருத்து முதற் சங்க காலம் தொடங்கி எப்படி தமிழில் கையாளப்பட்டு வருகிறது என்று பட்டியலாகப் பாடல்களைப் பொழிந்தார் தமிழ்ழ்சிரியர் கங்காதரன். யானைக்கும் அடி சரிக்கும் என்பது போல் ஒரு பாடலின் அடுத்த வரி மறந்து விட்டார்.அப்போது கவியரசர் அந்த வரியை சட்டென்று கூறி கங்காதரன் அவர்கள் தொடர்ந்து பாடல்களைக் கூற வழி வகுத்தார்.அப்போது கவியரசரும் பழந்தமிழ் இலக்கியத்தை கரதலப் பாடமாக மனப்பாடம் செயதவர்தான் என்பது தெற்றென வெளிப்பட்டது.
'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி; அவனைச் சேரும் நாள் பார்க்கச்சொல்லடி'பெருந் தலைவர் காமராசருக்கு அனுப்பப்பட்ட செய்தி என்று கூறுவோரும் உண்டு.
நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா!/////
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Kamala said...
ReplyDeleteஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். கவிஞர் கண்ணதாசன் கலைமகளின் செல்வப்புதல்வர். அவரது பாடல்கள் எல்லாமே முத்துக்கள். நன்றி./////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!