மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.5.13

வாழ்க்கையைப் பற்றி நச்’ சென்று இரண்டு கவிஞர்கள் சொன்னது!

 

வாழ்க்கையைப் பற்றி  நச்’சென்று இரண்டு கவிஞர்கள் சொன்னது!

வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம். ஆனால் கவிஞர்களின் கண்ணோட்டம் நச்’சென்று வேறுவிதமாக இருக்கிறது. இரு
கவிஞர்கள் சொன்னதை இன்றைய கவிதை நயம் பகுதி அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்/ உணருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------

தலைப்பு: வாழ்க்கை என்பது....
..
பெட்டி படுக்கைகளைச்
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது
சுற்றியிருப்பவர்கள்
நம்மைச்
சுமக்கத்
தொடங்கிவிடுகிறார்கள்!

    - கவிஞர் மு.மேத்தா
-----------------------------------

தலைப்பு: வாழ்க்கை...

எண்ணிப் பார்த்து
எண்ணிப் பார்த்து
எத்தனை தடவைகள்
எப்படி
எப்படியெல்லாம்
கூட்டினாலும்
கழித்தாலும்
பெருக்கி னாலும்
வகுத் தாலும்
கிடைக்கின்ற
விடையாக.....
பூஜியமே
வருகின்ற
புரியாத
புதிரான கணக்கு!

 - கவிஞர் வாலி



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. காலை வணக்கம் , நன்றி !

    ReplyDelete
  2. இரண்டும் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
  3. மெல்லென பிரிட்ஜைத்.திறந்து.- இரண்டு
    சில்லென .சாக்லெட்உவந்தீர்
    நன்றி

    ReplyDelete
  4. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  5. விதை போடும் நிலத்தில் கவிதை
    விடைபோட்டு சொன்ன கணக்கு

    விளங்கினாலும் விளக்கினாலும்
    விவரம் இல்லாமல் வரும் பிணக்கு

    கூட்டினாலும் கழித்தாலும் வாழ்க்கை
    கூட்டுக்குள் இருக்கும் கணக்கு

    முதலில் நமக்கெல்லாம் தொட்டில்
    கண்மூடினால் காலில்லா கட்டில்

    என்பார் கவியரசு
    எல்லாம் இன்பமயம்



    ReplyDelete
  6. முதல் கவிதை சொல்லாமல் சொல்லுகின்ற ஒரு விஷயம்
    Be calm, relaxed,
    ஆனால் இரண்டாவது புரியவில்லை அய்யா .

    ReplyDelete
  7. ////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம் , நன்றி !/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சாத்தூராரே!

    ReplyDelete
  8. ////Blogger Kannan said...
    Good Morning Sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி கண்ணன்! வகுப்பறையில் ஏகப்பட்ட கண்ணன்கள். நீங்கள் பஹ்ரெய்ன் கண்ணன்தானே? ஊரைக்குறிப்பிடுங்கள்

    ReplyDelete
  9. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    இரண்டும் அருமை... நன்றி ஐயா.../////

    நல்லது. நன்றி தனபாலரே!

    ReplyDelete
  10. /////Blogger சர்மா said...
    மெல்லென பிரிட்ஜைத்.திறந்து.- இரண்டு
    சில்லென .சாக்லெட்உவந்தீர்
    நன்றி/////

    உங்களுக்கு உவந்தால் அடியவனுக்கும் மகிழ்ச்சிதான் சர்மா!

    ReplyDelete
  11. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சேகர்!!

    ReplyDelete
  12. Blogger வேப்பிலை said...
    விதை போடும் நிலத்தில் கவிதை
    விடைபோட்டு சொன்ன கணக்கு
    விளங்கினாலும் விளக்கினாலும்
    விவரம் இல்லாமல் வரும் பிணக்கு
    கூட்டினாலும் கழித்தாலும் வாழ்க்கை
    கூட்டுக்குள் இருக்கும் கணக்கு
    முதலில் நமக்கெல்லாம் தொட்டில்
    கண்மூடினால் காலில்லா கட்டில்
    என்பார் கவியரசு
    எல்லாம் இன்பமயம்///////

    வேப்பிலை, கருவேப்பிலை, மாவிலை என்று எந்தப் பெயரில் வேண்டுமென்றாலும் வாருங்கள். உங்கள் பின்னூட்ட நடை உங்களை அடையாளம் காட்டும் விசுவநாதன். அதை நினைவில் வையுங்கள்! வழக்கம்போல உங்கள் வருகைக்கு நன்றி உரித்தாகுக விசுவநாதன்!

    ReplyDelete
  13. /////Blogger உணர்ந்தவை! said...
    முதல் கவிதை சொல்லாமல் சொல்லுகின்ற ஒரு விஷயம்
    Be calm, relaxed,
    ஆனால் இரண்டாவது புரியவில்லை அய்யா .//////

    காதறுந்த ஊசியும் வராது காணும் கடைவழிக்கே! நீ உலகத்தைவிட்டுச் செல்லும்போது உன்னுடன் ஒன்றும் வராது என்று பட்டினத்தடிகள் சொன்னார். Life is an illusion வாழ்க்கை ஒரு மாயை என்பதைக் கவிஞர் பூஜ்யம் என்று சொல்லியுள்ளார். இப்போது படித்துப் பாருங்கள் புரியும்!

    ReplyDelete
  14. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி கண்ணன்! வகுப்பறையில் ஏகப்பட்ட கண்ணன்கள். நீங்கள் பஹ்ரெய்ன் கண்ணன்தானே? ஊரைக்குறிப்பிடுங்கள்


    I am Dindigul Kannan (in Dallas now). Like to type in Tamil. But I do not know Tamil typing and the English to Tamil convertors are also not helping me much.

    ReplyDelete
  15. //உங்கள் பின்னூட்ட நடை உங்களை அடையாளம் காட்டும் விசுவநாதன். அதை நினைவில் வையுங்கள்! ///

    அடையாளம் தெரியக் கூடாது என
    அப்படி பெயர் மாற்றம் செய்யவில்லை

    பெயர் மாற்றத்தினை குரு
    பெயர்ச்சிக்கு முன்னரே (நேற்று)

    அறிவித்து இருந்தேன்
    அதனை தாங்களும் ஏற்றதினாலிந்த

    இலை.. இல்லையேல்
    இது இல்லை...

    ReplyDelete
  16. //நல்லது. மருத்துவக் குணம் மிக்க வேப்பிலையை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட வேப்பமரக் காற்று தரும் சுகமும் அலாதியாக இருக்கும்!//

    இது தாங்கள் நேற்று தந்த அனுமதி
    இதனால் மாறியதே பெயர்

    விரும்பவில்லையெனில்
    விசு அய்யராகவே...

    மாற்றும் படி சொன்னால்
    மாறும் பின்ஊட்ட நடையும்..

    நாடகத்தில் இருப்பவர் நாம்
    நடித்துத் தான் பார்ப்போமே..

    ReplyDelete
  17. உண்மையிலேயே வாழ்க்கையைப் பற்றிய நச் கவிதைகள்தான். கவிஞருக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் கணக்கு நமக்கும் புரியாத புதிர்தான்.

    ReplyDelete
  18. /////Blogger Kannan said...
    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி கண்ணன்! வகுப்பறையில் ஏகப்பட்ட கண்ணன்கள். நீங்கள் பஹ்ரெய்ன் கண்ணன்தானே? ஊரைக்குறிப்பிடுங்கள்
    I am Dindigul Kannan (in Dallas now). Like to type in Tamil. But I do not know Tamil typing and the English to Tamil convertors are also not helping me much.//////

    NHM writer என்ற இலவச மென் பொருள் இணையத்தில் உள்ளது. அதை டவுன்லோடு செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். சுலபமாகத் தமிழில் தட்டச்சலாம். உங்கள் பெயரை டல்லாஸ் கண்ணன் என்று குறிப்பிடுங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger வேப்பிலை said...
    //உங்கள் பின்னூட்ட நடை உங்களை அடையாளம் காட்டும் விசுவநாதன். அதை நினைவில் வையுங்கள்! ///
    அடையாளம் தெரியக் கூடாது என
    அப்படி பெயர் மாற்றம் செய்யவில்லை
    பெயர் மாற்றத்தினை குரு
    பெயர்ச்சிக்கு முன்னரே (நேற்று)
    அறிவித்து இருந்தேன்
    அதனை தாங்களும் ஏற்றதினாலிந்த
    இலை.. இல்லையேல்
    இது இல்லை.../////

    வாத்தியாருக்குத் தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்!

    ReplyDelete
  20. /////Blogger வேப்பிலை said...
    //நல்லது. மருத்துவக் குணம் மிக்க வேப்பிலையை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட வேப்பமரக் காற்று தரும் சுகமும் அலாதியாக இருக்கும்!//
    இது தாங்கள் நேற்று தந்த அனுமதி
    இதனால் மாறியதே பெயர்
    விரும்பவில்லையெனில்
    விசு அய்யராகவே...
    மாற்றும் படி சொன்னால்
    மாறும் பின்ஊட்ட நடையும்..
    நாடகத்தில் இருப்பவர் நாம்
    நடித்துத் தான் பார்ப்போமே../////

    இல்லை. நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள்! நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  21. ////Blogger Ak Ananth said...
    உண்மையிலேயே வாழ்க்கையைப் பற்றிய நச் கவிதைகள்தான். கவிஞருக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் கணக்கு நமக்கும் புரியாத புதிர்தான்.//////

    புரிந்தவர்கள் ஞானிகளாகிவிடுகிறார்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  22. ayya
    palaya padankalai eppati download pannuvathu
    kalai rajan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com