மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.5.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 26

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 26

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 26

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
பூராடம்

இது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. மிருகசீரிஷம்
3. திருவாதிரை
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. உத்திரம்
8. ஹஸ்தம்
9. சித்திரை
10. சுவாதி
11. விசாகம்
12. கேட்டை
13. மூலம்
14. உத்திராடம்
15. அவிட்டம்
16. ரேவதி

ஆகிய 16 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. புனர்பூசம் 4ஆம் பாதமும், ஆயில்ய நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

தனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ஆம் பாதத்தையும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூராடம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.

கார்த்திகை நட்சத்திரம் பொருந்தாது.

ரோகிணி, திருவோணம், ச்தயம், பூரட்டாதி ஆகிய 4 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++=====

14 comments:

  1. ஐயா காலை வணக்கம் !

    ReplyDelete
  2. சம்சாரம் என்பது வீணை
    சந்தோசம் என்பது ராகம்

    சலனங்கள் அதில் இல்லை
    மணம் குணம் ஒன்றான முல்லை

    என் வாழ்க்கை சிறந்த ஏடு
    அது ஆசை கிளியின் கூடு

    பல காதல் கவிதை பாடி
    பரிமாறும் உண்மைகள் கோடி

    இது போன்ற ஜோடி இல்லை
    மணம் குணம் ஒன்றான முல்லை

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா மற்றப்பொருத்தங்கள் பற்றிய
    தகவல் தங்களின் பழையபதிவுகளில் இருக்கிறதா ?
    தயவுசெய்து பாடஎண்ணை த்தெரிவிக்கவும்
    நன்றி

    ReplyDelete
  4. Out-of-Box thinking and commitment are the stepping stone to success.
    Initiative should be lifelong. Think of out of the box.

    Thank you very much Mr.Anand

    Outstanding job
    I am very proud of you."
    Very nice article

    ReplyDelete
  5. நல்ல பதிவு.நன்றிகள்.

    ReplyDelete
  6. மிகப் பயனுள்ள ஜோதிடத் தொடர். தாங்கள் இந்தத் தொடரை மட்டும் தனிப்புத்தகமாகத் தர வேண்டுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  7. /////Blogger Sattur Karthi said...
    ஐயா காலை வணக்கம் !////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  8. //////Blogger அய்யர் said...
    சம்சாரம் என்பது வீணை
    சந்தோசம் என்பது ராகம்
    சலனங்கள் அதில் இல்லை
    மணம் குணம் ஒன்றான முல்லை
    என் வாழ்க்கை சிறந்த ஏடு
    அது ஆசை கிளியின் கூடு
    பல காதல் கவிதை பாடி
    பரிமாறும் உண்மைகள் கோடி
    இது போன்ற ஜோடி இல்லை
    மணம் குணம் ஒன்றான முல்லை/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  9. ////Blogger சர்மா said...
    வணக்கம்
    ஐயா மற்றப்பொருத்தங்கள் பற்றிய
    தகவல் தங்களின் பழையபதிவுகளில் இருக்கிறதா ?
    தயவுசெய்து பாடஎண்ணை த்தெரிவிக்கவும்
    நன்றி/////

    இனிமேல்தான் எழுத வேண்டும். எழுதுகிறேன். பொறுத்திருங்க்ள்!

    ReplyDelete
  10. /////Blogger rajanblogs said...
    Out-of-Box thinking and commitment are the stepping stone to success.
    Initiative should be lifelong. Think of out of the box.
    Thank you very much Mr.Anand
    Outstanding job
    I am very proud of you."
    Very nice article/////

    பொறுமையாக அதைப் படித்த மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger GOWDA PONNUSAMY said...
    நல்ல பதிவு.நன்றிகள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  12. /////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    மிகப் பயனுள்ள ஜோதிடத் தொடர். தாங்கள் இந்தத் தொடரை மட்டும் தனிப்புத்தகமாகத் தர வேண்டுகிறேன். மிக்க நன்றி./////

    ஆகா, அப்படியே தந்தால் போயிற்று! உங்களின் யோசனைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com