மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.5.13

Astrology.Popcorn Post கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

 
Astrology.Popcorn Post கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

Popcorn Post No.44

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எது முக்கியம்?

நல்ல வேலை. நல்ல சம்பளம் என்பது முக்கியம். நல்ல வேலைக்கு உரிய வயதில் படித்து (முக்கியமாக தொழில் நுட்பக் கல்வி) பட்டம் பெற்றிருப்பதும்
முக்கியம்.

எல்லோருக்கும் அது அமைந்து விடுகிறதா என்ன?

ஜாதகத்தில் 4ஆம் வீடு நன்றாக இருந்தால்தான் படிப்பு அமையும். 4ஆம் அதிபதி கெட்டிருந்தால், லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்திருந்தால், அத்துடன் 4ஆம் வீட்டில் கேது போன்ற தீய கிரகங்கள் குடியிருந்தால், படிப்பு பாழாகிவிடும்.

படிப்பு பாழானால் என்ன? வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து நல்லபடியாகப் பிழைக்க முடியாதா?

முடியும் அதற்குப் பணம் வேண்டுமே? காசு வேண்டுமே? 4ஆம் அதிபதி கெட்டுப் போனதைப்போல, ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்காரனும் கெட்டிருந்தால், என்ன செய்வது? காசு எங்கே இருக்கும்? காசு எப்ப்டி வரும்? இரண்டாம் அதிபதியும் 12ல் இருந்தால் அந்த நிலைமை உண்டாகும்.

யாரும் கை கொடுக்க மாட்டார்களா? லக்கினாதிபதி நன்றாக இருந்தால், அது நடக்கும். ஆனால் லக்கினாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருந்தால்,
உதவிக்கு ஒருத்தனும் வர மாட்டான். ஜாதகன் தன்னிச்சையாகத்தான் போராட வேண்டும்.

என்ன செய்வது? கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா?

ஆமாம். எத்தனையோ மக்கள் கூலி வேலைகள் செய்து பிழைத்துக் கொண்டிருக்கவில்லையா? அதில்தான் எத்தனை விதமான வேலைகள் உள்ளன.

எங்கள் பகுதிக்கு வாருங்கள். திருப்பூர், சோமனூர், கோவை போன்ற ஊர்களில் ஆயிரக் கணக்கான பேர்கள் தினக்கூலி, வாரக்கூலி வேலை செய்து
கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவ்ரும்.

கூலி வேலை பார்த்துக் காலம் தள்ளுவது என்பது மிகவும் சிரமமானதுதான். ஆனால் வேறு நல்ல கிரகத்தின் திசை வரும்போது, நிலைமை மாறி விடும்.
கூலி வேலை செய்தவன், அதே வேலையைப் பத்து ஆட்களை வைத்துச் செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுவான்.

 நேர்மையாகச் செய்யும் எந்த வேலையும் கேவலமானதல்ல! படித்துவிட்டு BPO அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களைவிட Mason, carpenter, Electrician போன்ற வேலைகளைக் கூலி அடிப்படையில் செய்பவரகள் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஜாதகத்தில் 2ஆம் அதிபதி, 4ஆம் அதிபதி, லக்கினாதிபதி ஆகிய மூவரும் இளம் வயதில் ஒரு starting கொடுப்பதற்கு முக்கியம். அதை மனதில் கொள்க!

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இது பாப்கார்ன் பொட்டலம் அதையும் மனதில் கொள்க!!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

27 comments:

  1. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

    சூரைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
    வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

    ReplyDelete
  2. ஐயா காலை வணக்கம் ! நலமாக இருகிறீர்களா,

    எனக்கு 4இம் அதிபதி புதன் அவர் இலக்கணம் (மிதுனம்) ஆட்சி, 2ம் அதிபதி சந்திரன் 12 (ரிசபம்) இல் உச்சம் மற்றும் மறைவு

    4 இல் செவ்வாய்(பகை) சனி (நட்பு ) சேர்கை

    இலக்கணம் (மிதுனம்) ஆட்சியில் இருந்தாலும் நான் சராசரியாக படிக்கும் மாணவனாக இருந்ததற்கு, சந்திரன், செவ்வாய், சனி முவரில் யார் முக்கிய காரணம்.

    ReplyDelete
  3. அய்யா தங்களின் பதிவிற்கு நன்றி,
    காலை வணக்கம்,
    எனது மறுமகளுக்கு நாலாமிடத்தில் கேது,
    புதனும் ஒன்பதாம் இடத்தில் நீச்சம்,
    ஆனால் முனைவர் பட்டத்திற்க்கு படித்துக்கொண்டு
    இருக்கிறார்.கடக லக்னம் ‍, நான்காமிடத்துக்கு
    உரிய சுக்கிரன் ஒன்பதாமிட்த்தில் புதனுடன் சேர்ந்து
    உச்ச வீட்டில் இருக்கிறது.
    இது நீசபங்க ராஜயோகத்தினால் என்றால்
    4மிடத்தில் கேது இருப்பதால், சுகஸ்தானம்
    பாதிக்கப்படுமா?

    ReplyDelete
  4. பாப்கார்ன் பொட்டலத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் அட்சரசுத்தமாக எனக்கு பொருந்துகிறது. துலாம் லக்னத்துக்கு நாலில் கேது, சந்திரன், 4, 5க்குரிய சனி 12ல் புதன், குரு, சூரியனுடன்.

    படிப்பில் சுமார் ரகம் என்று இருந்து 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சினிமா தியேட்டரில் படக்கருவி இயக்கும் வேலைக்குச் சென்றாலும் வேறு பல சூழ் நிலைகளால் தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு எழுத முயன்று ஹால் டிக்கட் வராமல் தேர்வெழுத முடியவில்லை. சுற்றி இருந்தவர்கள், நீ படிப்பது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் ஹால் டிக்கட் வரலை. பேசாம மறுபடி வேலைக்கே போ என்றார்கள். எனக்கு அவர்கள் மீது கோபம் வந்தது. இவங்க என்ன சொல்றது. நான் என்ன கேட்பது என்ற ஆத்திரத்தில் அடுத்து 6 மாதம் கழித்து 1999 செப்டம்பரில் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுதி 2000ஆம் ஆண்டு திருவாரூர் அரசுக்கல்லூரியில் பி.காம் சேர்ந்து படித்து முடித்தேன்.

    4,5க்கு அதிபதி ராசியாதிபதியாகவும் இருந்ததால் பிழைத்துப்போ என்று விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.

    2, 7க்கு அதிபதி செவ்வாய் 10ஆமிடம் கடகத்தில் நீசமானதால் கையில் எனி டைம் பணத்தட்டுப்பாடுதான். என்னுடைய ஜாதகத்தினை பார்த்த சிலர், பணத்தை அடிப்படையாக கொண்ட தொழில் செய்யாமல் புரோக்கரேஜ், கமிஷன் ஏஜெண்ட் போன்ற தொழிலை தேர்ந்தெடுக்க சொன்னதற்கும் இதுதான் காரணமாக இருந்திருக்குமோ.

    (கல்லூரி முடித்து 8 ஆண்டுகளில் எந்த வேலையிலும் 1 ஆண்டு முழுவதுமாக நீடித்ததில்லை. ஆனால் தொழில் தொடங்கி 2 ஆண்டு முடியப்போகிறது. அதனால் போகும் பாதை ஓரளவு சரிதான் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறது.)

    ReplyDelete
  5. நல்ல பதிவிற்க்கு நன்றிகள் அய்யா!.

    ReplyDelete
  6. மிக நல்ல, பயனுள்ள பாப்கார்ன் பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. arumai, arumai, miga nalla padivu. nandri.

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்
    கொஞ்சம் பெரிய போட்டலமானால் நன்றாயிருக்கும்
    நன்றி

    ReplyDelete
  9. அய்யா,நல்ல பாப்கார்ன் பொட்டலம்.4 ம் அதிபதியும் 2 ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆகிருந்தால்.லக்னாதிபதி 10 ல் இருந்தால்?என்ன பலன் அய்யா?.

    ReplyDelete
  10. நீசமடைந்த 4ம் அதிபன் சுக்ரன் 3ல் தன் வீட்டுக்கு 12ல் கேதுவுடன் கூட்டணி.ஆனால் கடகத்திற்கு யோக காரகனாகிய செவ்வாயின் பார்வை 4ம் வீட்டுக்காரனுக்கு.மேலும் 9ம் வீட்டுக்குரிய குருஜியின் பார்வையும் 4ம் வீட்டுக்காரனுக்கு.எனவே படிப்பு வருடம் பாஸ் ஆகாமல் நடந்தது.ஆனால் பல தடங்கல்கள். மேல் படிப்புக்குப் போக முடியாமல் சான்றிதழ் தொலைந்ததைப் பற்றியெல்லாம் என் சுய புராணத்தில் மாணவர்கள் ஆக்கங்கள் பிரசுரமாகி வந்த அக்காலத்தில் எழுதியுள்ளேன்.பாப்கார்ன் நல்ல சுவையாக இருந்தது. நன்றி ஐயா!

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா, 2ம் அதிபதி,4ம் அதிபதி,லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து, 10ம்வீட்டில் சனிபகவான் இருந்தால் ஜாதகரின் நிலை என்னங்க ஐயா.(என் அப்பா ஊர் சோமனூருங்க ஐயா) நன்றி ஐயா.

    ReplyDelete
  12. /////Blogger அய்யர் said...
    ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
    சூரைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
    வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?/////

    காலம் வகுத்த கணக்கைப் பார்க்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? சில சமயம் நன்றாகவும் இருக்காது. ஆகவே அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது!

    ReplyDelete
  13. ////Blogger Sattur Karthi said...
    ஐயா காலை வணக்கம் ! நலமாக இருகிறீர்களா,
    எனக்கு 4இம் அதிபதி புதன் அவர் இலக்கணம் (மிதுனம்) ஆட்சி, 2ம் அதிபதி சந்திரன் 12 (ரிசபம்) இல் உச்சம் மற்றும் மறைவு
    4 இல் செவ்வாய்(பகை) சனி (நட்பு ) சேர்கை
    இலக்கணம் (மிதுனம்) ஆட்சியில் இருந்தாலும் நான் சராசரியாக படிக்கும் மாணவனாக இருந்ததற்கு, சந்திரன், செவ்வாய், சனி முவரில் யார் முக்கிய காரணம்./////

    உங்களுக்கே தெரியவில்லையா? 4ல் வந்து அமர்ந்தவர்கள்தான் காரணம்!

    ReplyDelete
  14. ///Blogger arul said...
    nice popcorn post////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. /////Blogger rajanblogs said...
    அய்யா தங்களின் பதிவிற்கு நன்றி, காலை வணக்கம்,
    எனது மருமகளுக்கு நாலாமிடத்தில் கேது,
    புதனும் ஒன்பதாம் இடத்தில் நீச்சம், ஆனால் முனைவர் பட்டத்திற்க்கு படித்துக்கொண்டு
    இருக்கிறார்.கடக லக்னம் ‍, நான்காமிடத்துக்கு
    உரிய சுக்கிரன் ஒன்பதாமிட்த்தில் புதனுடன் சேர்ந்து
    உச்ச வீட்டில் இருக்கிறது.
    இது நீசபங்க ராஜயோகத்தினால் என்றால்
    4மிடத்தில் கேது இருப்பதால், சுகஸ்தானம்
    பாதிக்கப்படுமா?//////

    வீட்டிற்கு உரியவன் உச்சம் பெற்று உள்ளான் அல்லவா? எப்ப்டி பாதிப்பு இருக்கும்?

    ReplyDelete
  16. ////Blogger சரண் said...
    பாப்கார்ன் பொட்டலத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் அட்சரசுத்தமாக எனக்கு பொருந்துகிறது. துலாம் லக்னத்துக்கு நாலில் கேது, சந்திரன், 4, 5க்குரிய சனி 12ல் புதன், குரு, சூரியனுடன்.
    படிப்பில் சுமார் ரகம் என்று இருந்து 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சினிமா தியேட்டரில் படக்கருவி இயக்கும் வேலைக்குச் சென்றாலும் வேறு பல சூழ் நிலைகளால் தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு எழுத முயன்று ஹால் டிக்கட் வராமல் தேர்வெழுத முடியவில்லை. சுற்றி இருந்தவர்கள், நீ படிப்பது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் ஹால் டிக்கட் வரலை. பேசாம மறுபடி வேலைக்கே போ என்றார்கள். எனக்கு அவர்கள் மீது கோபம் வந்தது. இவங்க என்ன சொல்றது. நான் என்ன கேட்பது என்ற ஆத்திரத்தில் அடுத்து 6 மாதம் கழித்து 1999 செப்டம்பரில் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுதி 2000ஆம் ஆண்டு திருவாரூர் அரசுக்கல்லூரியில் பி.காம் சேர்ந்து படித்து முடித்தேன்.
    4,5க்கு அதிபதி ராசியாதிபதியாகவும் இருந்ததால் பிழைத்துப்போ என்று விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
    2, 7க்கு அதிபதி செவ்வாய் 10ஆமிடம் கடகத்தில் நீசமானதால் கையில் எனி டைம் பணத்தட்டுப்பாடுதான். என்னுடைய ஜாதகத்தினை பார்த்த சிலர், பணத்தை அடிப்படையாக கொண்ட தொழில் செய்யாமல் புரோக்கரேஜ், கமிஷன் ஏஜெண்ட் போன்ற தொழிலை தேர்ந்தெடுக்க சொன்னதற்கும் இதுதான் காரணமாக இருந்திருக்குமோ.
    (கல்லூரி முடித்து 8 ஆண்டுகளில் எந்த வேலையிலும் 1 ஆண்டு முழுவதுமாக நீடித்ததில்லை. ஆனால் தொழில் தொடங்கி 2 ஆண்டு முடியப்போகிறது. அதனால் போகும் பாதை ஓரளவு சரிதான் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறது.)/////

    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி!. சரவணன் என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒரு தயக்கமும் வேண்டாம். நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பயணத்தைத் தொடருங்கள்!

    ReplyDelete
  17. ////Blogger GOWDA PONNUSAMY said...
    நல்ல பதிவிற்க்கு நன்றிகள் அய்யா!.////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  18. /////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    மிக நல்ல, பயனுள்ள பாப்கார்ன் பதிவு. மிக்க நன்றி./////

    நல்லது நன்றி. உங்களை நீண்ட நாட்களாக வகுப்பறைப் பக்கம் காணவில்லையே! பாடலைச் சுழவிடுபவர் வேறு அதிகமாகக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தார்!
    அதைப் பற்றி பின்னூட்டம் கூட இட்டிருந்தார். வகுப்பறைக்கு வருகிறீர்கள். ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை. அவ்வளவுதானே? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger Ramkumar KG said...
    arumai, arumai, miga nalla padivu. nandri.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger சர்மா said...
    ஆசிரியருக்கு வணக்கம்
    கொஞ்சம் பெரிய போட்டலமானால் நன்றாயிருக்கும்
    நன்றி/////

    அதிகமாக சாப்பிட்டால் கெடுதல் சுவாமி! அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவோம்.

    ReplyDelete
  21. ////Blogger paulsam said...
    அய்யா,நல்ல பாப்கார்ன் பொட்டலம்.4 ம் அதிபதியும் 2 ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆகிருந்தால்.லக்னாதிபதி 10 ல் இருந்தால்?என்ன பலன் அய்யா?./////

    பரிவர்த்தனை யோகத்துடன், லக்கினாதிபதி முக்கியமான கேந்திரத்தில் ஏறியதற்கும் சேர்த்துப் பலன்கள் கிடைக்கும். எப்போது கிடைக்குமா? சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசாபுத்தில்களில் கிடைக்கும்!

    ReplyDelete
  22. /////Blogger kmr.krishnan said...
    நீசமடைந்த 4ம் அதிபன் சுக்ரன் 3ல் தன் வீட்டுக்கு 12ல் கேதுவுடன் கூட்டணி.ஆனால் கடகத்திற்கு யோக காரகனாகிய செவ்வாயின் பார்வை 4ம் வீட்டுக்காரனுக்கு.மேலும் 9ம் வீட்டுக்குரிய குருஜியின் பார்வையும் 4ம் வீட்டுக்காரனுக்கு.எனவே படிப்பு வருடம் பாஸ் ஆகாமல் நடந்தது.ஆனால் பல தடங்கல்கள். மேல் படிப்புக்குப் போக முடியாமல் சான்றிதழ் தொலைந்ததைப் பற்றியெல்லாம் என் சுய புராணத்தில் மாணவர்கள் ஆக்கங்கள் பிரசுரமாகி வந்த அக்காலத்தில் எழுதியுள்ளேன்.பாப்கார்ன் நல்ல சுவையாக இருந்தது. நன்றி ஐயா!/////

    ஆமாம். அதெல்லாம் உங்கள் ஆக்கங்களில் நானும் படித்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா, 2ம் அதிபதி,4ம் அதிபதி, லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து, 10ம்வீட்டில் சனிபகவான் இருந்தால் ஜாதகரின் நிலை என்னங்க ஐயா.(என் அப்பா ஊர் சோமனூருங்க ஐயா) நன்றி ஐயா./////

    சனி என்றால் என்ன பயம்? சனி கர்மகாரகரகன். அவன் 10ல் இருந்தால் ஜாதகன் தான் செய்யும் வேலையில் போராடி ஒரு உயர்வை அடையாமல் விட மாட்டான்!

    ReplyDelete
  24. /////வகுப்பறைக்கு வருகிறீர்கள். ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை. அவ்வளவுதானே? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!/////

    மிக்க நன்றி ஐயா.வகுப்பறைக்கு தினந்தோறும் வருகை தருகிறேன் ஐயா. இது என் தினசரிக் கடமைகளுள் ஒன்று. இணையம் திறந்ததும் முதலில் இங்கு தான் வருவேன், வருகிறேன். தாங்கள் கூறியதைப் போல் நேரமின்மையால் கருத்துரையிடுவதில்லை. இனி, நிச்சயம், நேரம் எடுத்துக் கொண்டு கருத்துரையிடுவேன். என்னை மறவாமல் நினைவுகொண்டதற்கு என்றென்றும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். திரு.அய்யர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. /////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    /////வகுப்பறைக்கு வருகிறீர்கள். ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை. அவ்வளவுதானே? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!/////
    மிக்க நன்றி ஐயா.வகுப்பறைக்கு தினந்தோறும் வருகை தருகிறேன் ஐயா. இது என் தினசரிக் கடமைகளுள் ஒன்று. இணையம் திறந்ததும் முதலில் இங்கு தான் வருவேன், வருகிறேன். தாங்கள் கூறியதைப் போல் நேரமின்மையால் கருத்துரையிடுவதில்லை. இனி, நிச்சயம், நேரம் எடுத்துக் கொண்டு கருத்துரையிடுவேன். என்னை மறவாமல் நினைவுகொண்டதற்கு என்றென்றும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். திரு.அய்யர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். உங்களுடைய மறு பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. ungal sevai thodaratum, iyya. Sundar Raj.g

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com