மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.9.08

காதல் திருமணமா? கட்டுப்பட்ட திருமணமா?

காதல் திருமணம் தெரியும்! அதென்ன கட்டுப்பட்ட திருமணம்?

Arranged Marriageஐ எப்படி மொழி பெயர்ப்பீர்கள்? ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்
என்றோ அல்லது பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம் என்றோ
சொல்லலாம்.

பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு இளைஞனோ அல்லது ஒரு யுவதியோ செய்து
கொள்ளும் திருமணத்தை பெற்றொர்களுக்குக் கட்டுப்பட்ட திருமணம் என்று
சொல்லலாம் இல்லையா?

அதுதான் கட்டுப்பட்ட திருமணம்!

எது நல்லது?

இரண்டுமே நல்லதுதான். தம்பதிகள் நல்லவிதமாக இணைந்து மன ஒற்றுமை,
மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் சரி!

இப்படிப் பொதுவாகச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - குறிப்பிட்டுச் சொல்லுங்கள்
எது நல்லது? உங்கள் கருத்துப்படி எது நல்லது?

என் அனுபவப்படி எது நல்லது என்பதில் ஒரு கருத்து உள்ளது. என் ஆசானும்
அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதைப் பதிவின் நடுவில் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு முன் கொஞ்சம் வறுத்தல் அல்லது பொரித்தல், காரம், உப்பு, மசாலா
பொடிகள் சேர்க்கும் வேலைகள் உள்ளது. அது முதலில். அப்போதுதானே சுவாமி
பதிவு சுவையாக இருக்கும்?

இந்த ஜோதிடத் தொடரை ஆரம்பித்து 20 மாதங்கள் ஆகின்றன. இந்தக் காலக்
கட்டத்தில் எனக்கு வந்த, வந்துகொண்டிருக்கின்ற மின்னஞ்சல்களில் 25 சதவிகிதம்
தங்களுடைய திருமணத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு வந்தவைதான் அல்லது வருபவை.
ஆண் வாசகர்களிடம் இருந்தும் வந்துள்ளன! கணிசமான அளவு பெண் வாசகிகளிடம்
இருந்தும் வந்துள்ளன.

உதாரணத்திற்கு சென்றவாரம் ஒரு அன்பரிடம் இருந்து வந்ததைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள்:

"சார், நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் காதல் நிறைவேறுமா? என்னுடைய
ஜாதகப்படி அதற்கு வாய்ப்புண்டா? உங்களுக்கு நேரமில்லை என்று சொல்லாமல்,
எனக்காக - உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஜீவனுக்காக, தயவு
செய்து என் ஜாதகத்தைப் பரிசீலனை செய்து பதில் எழுத வேண்டுகிறேன்."

நான் உடனே பதில் எழுதிக் கேட்டேன்: "அந்தப் பெண்ணும் உங்களைக் காதலிக்கிறாரா?"

இதற்கு மின்னல் வேகத்தில் பதில் வந்தது." ஆமாம் ஐயா! அவளும் என்னைக் காதலிக்கிறாள்!"

இதற்கு என்ன எழுதுவது?

நான் எழுதிய பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்:

"அவளும் உங்களைக் காதலிக்கும்போது எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்?
ஒரு பெண் தன்னுடைய இதயத்தை உங்களிடம் தந்து விட்டாள் அல்லது தன்னுடைய
இதயத்தில் உங்களுக்கு இடம் தந்து விட்டாள் என்னும் நிலை எவ்வளவு
உன்னதமானது? எவ்வளவு உயர்ந்தது? அதைவிட ஜாதகம் ஒன்றும் பெரிதல்ல.
அவளைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.அதற்கான முயற்சியைச் செய்யுங்கள்"

விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே பெரிய காரியம்.
அதற்கு அடுத்து அவனுடன் பழகுவது. அதற்கு அடுத்து நெருங்கிப் பழகுவது.
மனம் விட்டுப்பேசுவது. விரும்புவது. இப்படிப் பலநிலைகளைத்தாண்டித்தான்
காதல் உண்டாகும். முதல் நிலையிலேயே பல இளைஞர்களின் தாவு தீர்ந்து விடும்.
இதில் அந்தப் பெண்ணிடம், ஜாதகம் மற்றும் இதர புண்ணாக்குகளைக் கேட்டு வாங்கிப்
பார்த்துக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா?

சரி வாங்கிப் பார்த்து, ஒத்து வராத ஜாதகம் என்றால் அல்லது உங்கள் ஜாதகப்படி
கட்டுப்பட்ட திருமணம்தான் என்றால் என்ன செய்வீர்கள்? காதலைப் பாதியில்
முறித்துக் கொண்டு விடுவீர்களா? நடக்குமா அது?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என்றார் வள்ளுவர்.

ஆகவே காதலிக்கத் துவங்கிவிட்டால் மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள்!

"காதலி கடைக்கண் கட்டிவிட்டால், கள்வனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்'
என்பதுதான் காதலின் இலக்கணம்!

மாமலையே கடுகாகி விடும் போது ஜாதகம் எதற்கு?

இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான். அல்லது அவளுக்காக ஒரு தாஜ்
மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.

காதலில் கட்டுண்ட பிறகு எதற்கு அவநம்பிக்கை? ஏன் ஜாதகம் பார்க்க நினைக்கிறீர்கள்?

காதலில் அகப்பட்டுக் கொண்டால், ஜாதகத்தை மறந்து விடுங்கள்l!
ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றால், காதலில் ஈடு படாதீர்கள்!

தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும்
அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண வாழ்வு!

காதல் திருமணம் என்றால் காதல் திருமணம்தான். கட்டுப்பட்ட திருமணம் என்றால்
அதுதான் நடக்கும். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

யாரும் எதையும் மாற்ற முடியாது. அதை உணர வேண்டும்.

எதையும் மாற்ற முடியாது என்றால் எதற்காக ஜாதகம்? எதற்காக ஜோதிடம்?

தனிப்பட்ட ஒருவனுக்காக ஏற்பட்டதல்ல ஜோதிடக்கலை! உன்னைக் காதல் தேடி
வந்து விட்டதா? காதல் செய்! அவ்வளவுதான்!

மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!

துன்பம், பிரச்சினை என்பது, காதல் திருமணத்திலும் உண்டு! கட்டுப்பட்ட
திருமணத்திலும் உண்டு. ஏமாற்றம் இரண்டிலும் உண்டு.எது நல்லது? எது
கெட்டது? என்று விவாதம் செய்து, பிரித்து அலசவெல்லாம் முடியாது.

வம்பு, வாதம், பிரதிவாதம், சண்டை இவைகள் தான் மிஞ்சும். அவரவர்க்கு அவரவர்
செய்வதுதான் நியாயம். அந்த நியாயத்தில் உண்மையெல்லாம் ஓரங்கட்டப் பட்டுவிடும்.

அதனால் என் கருத்திற்கு இங்கே இடமில்லை. என் ஆசான் கவியரசர் கண்ணதாசன்
அவர்களின் கருத்துத்தான் என் கருத்து. அதை அடுத்து வரும் வரிகளில் கொடுத்திருக்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் "காதலைக் காவியத்திற்கு விட்டு விடுங்கள்.
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

அவர் எழுதிய 4 வரிக் கவிதை:

"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்"
பெற்றவர்கள் பார்ப்பதானால் பெருமையென்னவோ - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதனால் நன்மையல்லவோ"

நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய அவருக்குத் தெரியாத
காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"

ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது ஒரு முகம்தான்
பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான்
தெரியும். அதுபோல அவனுடைய குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண்
நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக
இருக்கும். இதே விதிமுறைகள் பெண்ணிற்கும் சேர்த்துத்தான்.

பெற்றோர்கள் அக்கு வேறாக ஆணி வேறாக எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டுத்
தங்கள் பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ மணம் முடிப்பதால். காதல் திருமணங்
களைவிட கட்டுப்பட்ட திருமணங்கள் பாதுகாப்பானது. அதனால்தான் கவியரசர்
சொன்னார். பெற்றோர்கள் பார்ப்பதால் என்ன பெருமையோ; அவர்கள் மற்றதையும்
பார்ப்பதால் வரும் நன்மையே என்றார்

வீடாகட்டும், வேலையாகட்டும், திருமண வாழ்க்கையாகட்டும், பாதுகாப்பும், சுதந்திரத்
தன்மையும் முக்கியமில்லையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதை முன் பதிவில் எழுதியிருக்கிறேன்.
அதை மீண்டும் இங்கே எடுத்து எழுதினால், பதிவு, அனுமார் வால் போல நீண்டு விடும்.
ஆகவே எழுத வில்லை. விருப்பமுள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம் சுட்டியை
கொடுத்துள்ளேன். சுட்டி இங்கே உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இன்றையப் பாடத்திற்கு வருகிறேன்.

1.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு என்னும்
வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2.
சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை
பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்
கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.
மகிழ்வுடையதாக இருக்கும்!
5.
ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.
குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.
அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.
அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.
இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10
செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11.
ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12.
1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13.
7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14.
கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15.
மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16.
கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17.
எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18.
திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19.
பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20.
இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1.
லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2.
ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3.
சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4.
சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5.
குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6.
சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7.
ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9.
எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10.
ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11.
ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12
எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்
+++++++++++++++++++++++

நமது வகுப்புக் கண்மணி கனடா சங்கர் போன்றவர்களுக்காக கீழே உள்ளதைக்
கொடுத்துள்ளேன். மற்றவர்களும் படிக்கலாம். மொழி மாற்றம் செய்ய நேரமில்லை.
அதனால் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். தனித் தமிழ் ஆர்வலர்கள்
பொறுத்தருளவும்!

Marriage the most important event in any body's life. It combines the heart
and soul of two people in to one. The two families come together to join hand
with each other. The processing in Indian tradition is performed with great
pomp and show. The event is blessed by nears, dears and relatives from both
the families. The couple is blessed with long and happy married life.

Though in Indian tradition it is widely believed that "marriages are made in
heaven". But it is only through human intervention that the two families are
introduced to each other. The boy and girl, and their families meet each other
to know about tradition, culture and principles so as to develop more under
standing. This understanding helps to create firm foundation in their relations,
so that they don't have any misunderstanding in the future. This helps them
to lead a successful, happy married life.

In spite of all this, the married life's are sometimes broken, due to various
reasons. Or the happy married life ends due to sudden demise of husband
or wife. Or there may not be any issue to the couple thus disturbing their
peace of life. And there are many other complexities that may arise in one's
married life.

Why ?

The answer to this question lies in our old age Astrological concepts based
on the planetary positions of various planets at the time of birth. There are
various factors that affect the compatibility between the two.
--------------
Holy relation of marriage, there is some important yoga in astrology, which
describes about spouse, age of marriage, relation with spouse. I have found
some major yoga, which strongly indicates more than two marriages in chart.
Since the Moon sign starts with Aries (Mesha). the natural seventh is Libra
(Tula). The main indicators of marriage are Venus, as far as men are concerned.

The seventh from Libra being Aries, the chief indicators of marriage for a
woman are Aries and Mars.

In a woman's chart, the Moon too must be taken into consideration since the
menstrual period is regulated by Moon and Mars; and in a man's nativity
Sun too must be examined carefully.

In a male’s chart, we have to consider Libra and the 7th from the ascendant,
Sun and Venus; and in a female’s we must note Aries and the seventh from
the ascendant, Moon and Mars. The eighth houses from these govern the
sex life; and therefore Scorpio for the men and Taurus for women have to be
added to the list. Then the extra marital life is determined by the twelfth
house from the ascendant; and in a man's chart, Pisces too need scrutiny
while in a woman's Virgo too deserves a study. This might terrify one since
all the houses and planets appear to get into the picture. But what is needed
is to find out the strongest among the ascendant, Sun and Venus in a man's
chart, and among the ascendant Moon and Mars in a woman's. The major
scrutiny should be from this point only. The others are needed as
corroborating or strengthening aids only.

An affliction to a planet or house arises from a conjunction with or an aspect
by a planet who is a malefic by nature or by ownership or by both. If a
conjunction with or an aspect by a benefic also operates, then we get mixed
character of the house or planet.

A strong, well-placed and unafflicted Venus gives a harmonious and balanced
marital life of man. A similar Mars governs the balanced sex life of a woman.
These are the two basic planets. Venus is to be examined with the Sun, and
Mars with the Moon. The position of Venus in a male chart is to be compared
with that of Mars in the wife's chart; and a similar comparison between
the Sun in the Husband's chart and the Moon in the wife's is necessary.
Whether they aspect one another, they are in square or trine to one another,
or they are inimical to one another must be carefully noted. The next step is
to see whether the Navamsa chart of the wife agrees with the Rasi chart of
the husband, and whether the Rasi chart of the wife agrees with the Navamsa
chart of the husband. These preliminary observations will be taken up for
a scrutiny and a later stage. Now we have to consider the possible effects
resulting from certain positions of the planets. In the following , he means
and includes she also.

The Venus in the seventh indicates a successful marriage; and in the eighth
a successful interest in the affairs where the strongest feelings are involved
and in matters of sex. The moon in the seventh makes one change his
attitude frequently towards those intimately related to him; and he hopes
the marriage partner to be motherly. The eighth house position stimulates these
interests. Mercury in the seventh can either advance or related reciprocity of
feelings and emotions; and in the eighth he affects the emotions roused by
others. Venus in the seventh is a very good indication of happy marriage
and of the ability to live with others in peace and happiness. If this Venus
is afflicted, there may be disappointment in this direction. In the eighth Venus
secures a balanced sex life if it is not afflicted. Mars in the seventh makes one
forceful in intimate relationships. If afflicted, it might bring about irritation
and quarrels. In the eighth it makes sex life very important for the native.
The seventh house Jupiter is very good for marriage life. In the eight it brings
prosperity through marriage. Saturn in the seventh brings about frustration
and disappointment in marriage, if it is afflicted. In the eighth, it makes one
serious in matters concerning sex.

There are some other important yoga in astrology, which never brings smooth
marital life i.e. combination of Rahu/Mars or Rahu/Sun or Sun/Mars in the
7th house. Same if 7th house lord goes in 6th house, 8th house or in 12th house.
This also shows marriages. Also mangal in the lagna, 4th house, 7th house,
8th house and 12th house delays the marriage. Malefic planets in the 7th house
also shows two marriages.

வாழ்க வளமுடன்!

45 comments:

  1. திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள் தங்களின் (அல்லது தங்களின் கணவன் / மனைவியின்) ஜாதகத்தில் இருக்கிறது என்று ஏற்கனவே திருமணமாகி நன்றாக வாழ்ந்து வரும் யாரும் குழம்ப் வேண்டாம்.

    -
    ஒரு உதாரணம்
    12பேர்களில் ஒருவருக்கு லக்கினதிபதி 12ல் மறைவர்.
    12 பேர்களின் வேறொருவருக்கு 77 ஆம் வீட்டு அதிபதி நீசமடைந்திருப்பார்

    ஆக 100 பேர்கலை எடுத்துக்கொண்டால் அதில் 23.7 சதவித நபர்களுக்கு ஒன்று

    லக்கினாதிபதி 12ல்
    அல்லது
    7ஆம் வீட்டு அதிபதி 12ல்
    அல்லது
    7ஆம் வீட்டு அதிபதி

    கிட்டத்தட்ட 35 சத நபர்களுக்கு இங்குள்ள 12 விதிகளில் ஏதாவது ஒன்று இருக்கும்

    ஆனால் நம் நிஜவாக்கையில் மூன்றில் ஒருவர் divorce வாங்குவதில்லை என்பதால்
    -
    இவை அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
    ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும் என்பதை தயவு செய்து மனதில் வைக்கவும்.

    -
    இது அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும் என்றாலும், இந்த வகுப்பினால் “உள்நாட்டு குழப்பம்” ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் இந்த மறுமொழி
    -
    எனவே இந்த 12 விதிகளையும் பார்த்து அதில் ஏதாவது ஒன்று இருந்தாலே உடனடியாக பதற்றமடைய வேண்டாம்

    ReplyDelete
  2. புருனோ Bruno said...

    திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள் தங்களின் (அல்லது தங்களின் கணவன் / மனைவியின்) ஜாதகத்தில் இருக்கிறது என்று ஏற்கனவே திருமணமாகி நன்றாக வாழ்ந்து வரும் யாரும் குழம்ப வேண்டாம். -
    ஒரு உதாரணம்
    12பேர்களில் ஒருவருக்கு லக்கினதிபதி 12ல் மறைவர்.
    12 பேர்களின் வேறொருவருக்கு 77 ஆம் வீட்டு அதிபதி நீசமடைந்திருப்பார்
    ஆக 100 பேர்கலை எடுத்துக்கொண்டால் அதில் 23.7 சதவித நபர்களுக்கு ஒன்று
    லக்கினாதிபதி 12ல்
    அல்லது
    7ஆம் வீட்டு அதிபதி 12ல்
    அல்லது
    7ஆம் வீட்டு அதிபதி
    கிட்டத்தட்ட 35 சத நபர்களுக்கு இங்குள்ள 12 விதிகளில் ஏதாவது ஒன்று இருக்கும்
    ஆனால் நம் நிஜவாக்கையில் மூன்றில் ஒருவர் divorce வாங்குவதில்லை என்பதால் -
    இவை அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
    ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும் என்பதை தயவு செய்து மனதில் வைக்கவும். -
    இது அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும் என்றாலும், இந்த வகுப்பினால் “உள்நாட்டு குழப்பம்” ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் இந்த மறுமொழி -
    எனவே இந்த 12 விதிகளையும் பார்த்து அதில் ஏதாவது ஒன்று இருந்தாலே உடனடியாக பதற்றமடைய வேண்டாம்////

    தங்கள் விளக்கத்திற்கு நன்றி டாக்டர். இதுதான் கடவுளின் அருள். சமன் செய்யும் நிலைப்பாடு. கணவன் அல்லது மனைவி என்று
    ஒருவர் இந்த அமைப்பிலில் இருந்து மாறுபட்டு இருப்பார். அவரை வைத்துக் குடும்ப வாழ்க்கை குழப்பம் இல்லாமல் இருக்கும்.
    இதே அமைப்புத்தான் கணவன் அல்லது மனைவி ஆகிய இருவருரில் ஒருவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லையென்றாலும், இருவரில் ஒருவருக்கு இருக்கும் குழந்தைபாக்கியத்தினால், குழந்தை பிறக்கும். ஆகவே நீங்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திச் சொல்லியபடி எல்லாமே பொது விதிகள்தான். இது திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமல்ல ஆகப்போகிறவர்களுக்கும் பொருந்தும்.

    அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், திருமணத்திற்கு ஜாதகத்தைப் பார்க்காதே, இறைவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, திருமணத்தை நடத்து - அவன் பார்த்துக்கொள்வான் என்பார்கள்.

    ReplyDelete
  3. நல்ல பாடம்..பாடத்திற்க்கு முன் கருத்து மிக அருமை...

    >>ஆண்களுக்கு லக்கினமும்
    சிறப்பாக இருப்பது முக்கியம்<<

    எனக்கு இது புதிய தகவல்...

    ஜாதகம் மற்றும் காதல்...பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் ஒப்பிடு அருமை...

    இன்றய இளயோர்களுக்கு இருக்கும் (முக்கிய)குழப்பதை தீர்க்க வல்லது உங்கள் இன்றய பதுவு.


    நன்றி.

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா..

    அம்சதை பற்றி ஒன்றும் சொல்லவில்லயே...திருமணதுக்கு இது மிக்கியம், இல்லையா..

    அம்சதை வைத்து..ஒருவருடைய கணவன்/மனைவி பற்றி ஓரளவு அறியலாம் என்பது உண்மையா..?

    நன்றி.

    ReplyDelete
  5. >>இதுதான் கடவுளின் அருள். சமன் செய்யும் நிலைப்பாடு<<
    உண்மைதான் ஐயா..

    ராசிசக்கரம் கெட்டிருந்தாலும்... அம்சம் நன்றாக இருந்தால்...

    விதிவிக்கு உண்டு...

    சரியா வாத்தியார் ஐயா..?

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா...

    ஆணிகள் அதிகம் இருப்பதால் பின்னுட்டம் அதிகம் இட முடியவில்லை...

    நல்ல விளக்கமான பதிவு...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  7. /////மதி said...
    நல்ல பாடம்..பாடத்திற்கு முன் கருத்து மிக அருமை...
    >>ஆண்களுக்கு லக்கினமும்
    சிறப்பாக இருப்பது முக்கியம்<<
    எனக்கு இது புதிய தகவல்...
    ஜாதகம் மற்றும் காதல்...பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் ஒப்பீடு அருமை...
    இன்றைய இளயோர்களுக்கு இருக்கும் (முக்கிய)குழப்பத்தை தீர்க்க வல்லது உங்கள் இன்றய பதிவு./////

    பதிவு உங்கள் மனதில் நன்றாகப் பதிந்திருக்கிறது. நன்றி!

    ReplyDelete
  8. /////மதி said...
    வாத்தியார் ஐயா..
    அம்சதை பற்றி ஒன்றும் சொல்லவில்லயே...திருமணதுக்கு இது மிக்கியம், இல்லையா..
    அம்சதை வைத்து..ஒருவருடைய கணவன்/மனைவி பற்றி ஓரளவு அறியலாம் என்பது உண்மையா..?
    நன்றி./////

    ராசியின் Magnified version தான் அம்சம். ராசியில் உள்ள கிரகங்களின் உண்மை நிலையை அம்சத்தை வைத்து அறியலாம்.

    ReplyDelete
  9. ////மதி said...
    >>இதுதான் கடவுளின் அருள். சமன் செய்யும் நிலைப்பாடு<<
    உண்மைதான் ஐயா..
    ராசிசக்கரம் கெட்டிருந்தாலும்... அம்சம் நன்றாக இருந்தால்...
    விதிவிக்கு உண்டு...
    சரியா வாத்தியார் ஐயா..?///

    ஆமாம் நண்பரே! அதோடு ராசியிலேயே வேறு சில வீடுகள் நன்றாக இருக்கும் அதை வைத்துத் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்!

    ReplyDelete
  10. ///கூடுதுறை said...
    வணக்கம் ஐயா...
    ஆணிகள் அதிகம் இருப்பதால் பின்னுட்டம் அதிகம் இட முடியவில்லை...
    நல்ல விளக்கமான பதிவு...
    மிக்க நன்றி...////

    அதனாலென்ன? நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்!

    ReplyDelete
  11. //காதல் திருமணமா? கட்டுப்பட்ட திருமணமா? //

    எந்த திருமணமாக இருந்தாலும் காலுக்கு கட்டுபோட்ட திருமணம் தான் !

    :)

    ReplyDelete
  12. ///கோவி.கண்ணன் said...
    //காதல் திருமணமா? கட்டுப்பட்ட திருமணமா? //
    எந்த திருமணமாக இருந்தாலும் காலுக்கு கட்டுபோட்ட திருமணம் தான் ! :)/////

    இப்போது, போட்ட கட்டை அவிழ்த்துவிடக் கோரி நிறையப் பேர்கள் வழக்குமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்:-(((

    ReplyDelete
  13. வணக்கம் வாத்தியரே, வணக்கம் நண்பர்களே...

    கரெக்டான பதிவுள லேண்ட் ஆயிடென்னு நினைக்குறேன்...

    இந்த பதிவைததான் ஆவலுடன் இத்தனை நாட்களாக நம்ப கண்மனிகள் காத்திருந்தங்கணு நினைக்குறேன் (நானும் தம்பா).

    >>ஆண்களுக்கு லக்கினமும்
    சிறப்பாக இருப்பது முக்கியம்<<
    எனக்கு 30 பரல்கள்.

    //இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

    அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான். அல்லது அவளுக்காக ஒரு தாஜ்
    மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.//

    கரெக்டா சொன்னீங்க வாத்தியரே.. அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

    //தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும்
    அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண வாழ்வு!//

    இது ஏதோ சொந்த அனுபவம் (சரக்கு) போல தெரியுது :-))... நானும் இதை ஆமோதிக்கிறேன், என் தலை எழுத்து எப்படி இருக்கோ...! எந்த மூலையில் வழுதோ'னு தெரியல. Google Earth-ல பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியல, ஏதாவது ஜாதகத்தில் வழி இருந்த சொல்லுங்க..

    //நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய அவருக்குத் தெரியாத
    காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"//

    அவருக்கே அந்த காதல் கை கூடமா போன பின்பு நாமெல்லாம் எங்கே வாத்தியரே...

    அது என்னமோ தெரியல, நானும் 8, 16, 32 எல்லாம் போட்டு பாக்குறேன் ஒரு பட்டாம் பூச்சி கூட சிக்க மாட்டேங்குது...:-((

    ReplyDelete
  14. //////கோவை விமல்(vimal) said...
    அது என்னமோ தெரியல, நானும் 8, 16, 32 எல்லாம் போட்டு பாக்குறேன் ஒரு பட்டாம் பூச்சி கூட சிக்க மாட்டேங்குது...:-((////

    கொச்சியில் இல்லாத பட்டாம் பூச்சிகளா?
    போகட்டும், பெங்களுரூக்குப் போன பிறகு முயற்சி செய்யுங்கள்.
    அங்கே மயில்கள் அதிகம். கொத்திவிடப்போகின்றன. எச்சரிக்கையாக இருங்கள்:-)))

    ReplyDelete
  15. //SP.VR. SUBBIAH said...
    கொச்சியில் இல்லாத பட்டாம் பூச்சிகளா?
    போகட்டும், பெங்களுரூக்குப் போன பிறகு முயற்சி செய்யுங்கள்.
    அங்கே மயில்கள் அதிகம். கொத்திவிடப்போகின்றன. எச்சரிக்கையாக இருங்கள்:-)))//


    கொச்சியில் பட்டாம் பூச்சிகாள் எல்லாம் பிடிப்பதற்குள் (வேலை நேரம் விட்டு வருவதற்குள்) பறந்து விடுகின்றன. அதுதான் கஸ்டமா இருக்குது.

    பெங்களுரூக்கு போன பின்பு முயற்சிக்கிறேன், சில (பல) மயில்கள் பிடிப்பதற்கு. ஆலோசனைக்கு நன்றி வாத்தியரே (என்ன முன் அனுபவம் இருக்கும் போல தெரியுது)...:-))

    ReplyDelete
  16. ஆசானே! தங்களை பாராட்ட கீ‍ போர்டில் எழுத்துக்கள் போதவில்லை... மிக நல்ல பதிவு.. இந்த பதிவிற்காக தான் பல நாட்களாய் மானிட்டர் மேல் விழி வைத்து காத்திருந்தேன்...

    ஏதவது பட்டாம் பூச்சி சிக்காத என்று நானும் வலை விரித்து காத்து இருக்கிறேன் ஒன்றும் மாட்டிய பாடில்லை... சில வேளைகளில் கழுகளும், குருவிகளும், வெறும் பூச்சிகளும் தானகவே விழுகின்றன.. ஆனால் நான் விரும்பும் வண்ணத்துப் பூச்சிக்காக காத்துக்கொண்டே இருக்கிறேன்.

    என் காத்திருப்பு கிடக்கட்டும் !!! ச‌ந்தேகங்களுக்கு வருகிறேன்

    **ராசியின் Magnified version தான் அம்சம். ராசியில் உள்ள கிரகங்களின் உண்மை நிலையை அம்சத்தை வைத்து அறியலாம்.**
    1)அப்படியென்றால் நாம் நவாம்ச கட்டத்தை மட்டும் பார்த்தால் போதுமா? ராசிக் கட்டத்தினை ஒதிக்கிவிடலமா?
    2)என்னுடைய‌ ராசிக்க‌ட்ட‌த்தில் 7 ல் ச‌ந்த்ர‌ன், 9 ல் சூர்ய‌ன், த‌ச‌மி திதி ஆனால் நவாம்ச‌த்தில் லக்கின ச‌ந்திர‌னுக்கு 7 ல் சூரிய‌ன் இது பெள‌ர்ணமி யை அல்ல‌வா குறிக்கும்.... ஆனால் பிற‌ந்தது வேறு நாள் தானே?

    **சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
    வெற்றி உண்டாகும்! ****

    அதாவ‌து இருவ‌ரும் தங்க‌ள‌து சுய‌வ‌ர்க்க‌த்தில் ச‌ம‌ எண்ணிக்கையிலான‌ ப‌ர‌ல்க‌ளைப் பெற்றிருக்க‌ வேண்டும், அப்ப‌டிதானே?


    **ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
    கொள்கிறவன் பாக்கியசாலி! ****

    மீன‌ ல‌க்கின‌ ஜாத‌கருக்கு ல‌க்கினாதிபதி 10ல் ஆட்சி, 7ல் ச‌ந்திர‌ன்,10ல் சுக்கிர‌ன்.... அவ‌ரும் பாக்கியசாலியா?

    (இன்னைக்கு நிறைய‌ கேட்டுடேன்னு நினைக்கிறேன்.. கோப‌த்தில் ஆசான் ஏதாவ‌து assignment கொடுத்துடுவாரோ?)

    ReplyDelete
  17. **விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே பெரிய காரியம்.***

    ஒருவேளை "விழிகள் படபடக்க, ஒரு இளம் ஆண், ஒரு பெண்ணுடன் பேசுவதே பெரிய காரியம்." என்று எழுதுவதற்கு பதிலாக தவறாக எழுதிவிட்டீரோ?... :-)))

    **மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!***

    இன்றைய‌ இளைஞ‌டர்க‌ளுக்கு தேவையான அறிவுரை. ந‌ன்றி.

    **"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
    கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்" ‍- கவியரசர்**

    ஜோதிடத்துட‌ன் அறிவுரைகளையும் தாங்கள் கலந்து புகட்டும் பாங்கு மிகவும் பிடித்து இருக்கிறது...

    ReplyDelete
  18. ////// கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    கொச்சியில் இல்லாத பட்டாம் பூச்சிகளா?
    போகட்டும், பெங்களுரூக்குப் போன பிறகு முயற்சி செய்யுங்கள்.
    அங்கே மயில்கள் அதிகம். கொத்திவிடப்போகின்றன. எச்சரிக்கையாக இருங்கள்:-)))//
    கொச்சியில் பட்டாம் பூச்சிகாள் எல்லாம் பிடிப்பதற்குள் (வேலை நேரம் விட்டு வருவதற்குள்) பறந்து விடுகின்றன. அதுதான் கஷ்டமாக இருக்குது. //////

    ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு பிடிப்பதுதானே? இதெல்லாம் ஒரு காரணமா?:-))))
    +++++++++++++++++++
    பெங்களுரூக்கு போன பின்பு முயற்சிக்கிறேன், சில (பல) மயில்கள் பிடிப்பதற்கு. ஆலோசனைக்கு நன்றி வாத்தியரே (என்ன முன் அனுபவம் இருக்கும் போல தெரியுது)...:-))//////

    வாத்தியாரின் பெயரையே ரிப்பேராக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே!:-(((((

    ReplyDelete
  19. ////// அணுயோகி said...
    ஆசானே! தங்களை பாராட்ட கீ‍ போர்டில் எழுத்துக்கள் போதவில்லை... மிக நல்ல பதிவு.. இந்த பதிவிற்காக தான் பல நாட்களாய் மானிட்டர் மேல் விழி வைத்து காத்திருந்தேன்...
    ஏதவது பட்டாம் பூச்சி சிக்காத என்று நானும் வலை விரித்து காத்து இருக்கிறேன் ஒன்றும் மாட்டிய பாடில்லை... சில வேளைகளில் கழுகளும், குருவிகளும், வெறும் பூச்சிகளும் தானகவே விழுகின்றன.. ஆனால் நான் விரும்பும் வண்ணத்துப் பூச்சிக்காக காத்துக்கொண்டே இருக்கிறேன்.//////

    குருவிதான் என்று உங்கள் ஜாதகத்தில் எழுதியிருந்தால், மயிலுக்குக் காத்திருந்து என்ன பயன்?:-))))))
    ++++++++++++++
    ////**ராசியின் Magnified version தான் அம்சம். ராசியில் உள்ள கிரகங்களின் உண்மை நிலையை அம்சத்தை வைத்து அறியலாம்.**
    1)அப்படியென்றால் நாம் நவாம்ச கட்டத்தை மட்டும் பார்த்தால் போதுமா? ராசிக் கட்டத்தினை ஒதிக்கிவிடலமா?/////

    இரண்டையும் பாருங்கள் சாமி! அவை இரண்டும் அன்னபூர்னா இட்லி, சாம்பாரைப்போல ஜோடியானதுதான்!
    ++++++++++++++++
    2)என்னுடைய‌ ராசிக்க‌ட்ட‌த்தில் 7 ல் ச‌ந்த்ர‌ன், 9 ல் சூர்ய‌ன், த‌ச‌மி திதி ஆனால் நவாம்ச‌த்தில் லக்கின ச‌ந்திர‌னுக்கு 7 ல் சூரிய‌ன் இது பெள‌ர்ணமி யை அல்ல‌வா குறிக்கும்.... ஆனால் பிற‌ந்தது வேறு நாள் தானே?////

    திதி பார்ப்பதற்கு ராசி மட்டும்தான்!
    ++++++++++++++++

    //////**சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
    வெற்றி உண்டாகும்! ****
    அதாவ‌து இருவ‌ரும் தங்க‌ள‌து சுய‌வ‌ர்க்க‌த்தில் ச‌ம‌ எண்ணிக்கையிலான‌ ப‌ர‌ல்க‌ளைப் பெற்றிருக்க‌ வேண்டும், அப்ப‌டிதானே?/////

    இரண்டும் சுயவர்க்கத்தில் 5 அல்ல்து 5 பரல்களுக்குமேல் பெற்றிருக்க வேண்டும்
    ++++++++++++++++++++++
    **ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
    கொள்கிறவன் பாக்கியசாலி! ****

    மீன‌ ல‌க்கின‌ ஜாத‌கருக்கு ல‌க்கினாதிபதி 10ல் ஆட்சி, 7ல் ச‌ந்திர‌ன்,10ல் சுக்கிர‌ன்.... அவ‌ரும் பாக்கியசாலியா?/////
    மீன லக்கினத்திற்கு சுக்கிரன், 3 &8 ற்குரியவனல்லாவா? என்னையே குழுப்பும் விதமாகக் கேள்வி கேட்கிறீர்களே?

    ReplyDelete
  20. ///// அணுயோகி said...
    **விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே பெரிய காரியம்.***
    ஒருவேளை "விழிகள் படபடக்க, ஒரு இளம் ஆண், ஒரு பெண்ணுடன் பேசுவதே பெரிய காரியம்." என்று எழுதுவதற்கு பதிலாக தவறாக எழுதிவிட்டீரோ?... :-)))/////

    நான் சரியாகத்தான் எழுதியுள்ளேன்.
    ++++++++++++++++++++++++++=

    //////**மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!***
    இன்றைய‌ இளைஞ‌டர்க‌ளுக்கு தேவையான அறிவுரை. ந‌ன்றி.
    **"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
    கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்" ‍- கவியரசர்**
    ஜோதிடத்துட‌ன் அறிவுரைகளையும் தாங்கள் கலந்து புகட்டும் பாங்கு மிகவும் பிடித்து இருக்கிறது...////

    அறிவுரைகள் படிப்பதற்கு மட்டும் அல்ல, கடைப்பிடிக்க வேண்டும்!

    ReplyDelete
  21. **ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
    கொள்கிறவன் பாக்கியசாலி! ****

    //மீன லக்கினத்திற்கு சுக்கிரன், 3 &8 ற்குரியவனல்லாவா? என்னையே குழுப்பும் விதமாகக் கேள்வி கேட்கிறீர்களே?//


    ஆசானை குழப்ப முடியுமா? நான் கேட்க விழைந்தது என்னவெனில் ஒரு மீன லக்கின ஜாதகருக்கு 10 ல் குரு (ஆட்சி), 7 ல் சந்த்ரன் , 10 ல் சுக்கிரன் (அதாவது குரு வுடன்) அவரும் பாக்கியசாலியா என்று?



    ***அறிவுரைகள் படிப்பதற்கு மட்டும் அல்ல, கடைப்பிடிக்க வேண்டும்!***

    க‌ண்டிப்பாக‌......

    ReplyDelete
  22. good evening master,
    what about sun,rahu and venus in 7th house (taurus).is it good for marriage.

    ReplyDelete
  23. /////அணுயோகி said...
    **ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
    கொள்கிறவன் பாக்கியசாலி! ****
    //மீன லக்கினத்திற்கு சுக்கிரன், 3 &8 ற்குரியவனல்லாவா? என்னையே குழுப்பும் விதமாகக் கேள்வி கேட்கிறீர்களே?//
    ஆசானை குழப்ப முடியுமா? நான் கேட்க விழைந்தது என்னவெனில் ஒரு மீன லக்கின ஜாதகருக்கு 10 ல் குரு (ஆட்சி), 7 ல் சந்த்ரன் , 10 ல் சுக்கிரன் (அதாவது குரு வுடன்) அவரும் பாக்கியசாலியா என்று? /////

    பூமியில் பிறந்தவர்கள் அனைவருமே பாக்கியசாலிகள்தான் ஒவ்வொருவிதத்தில் - எல்லோருக்குமே பரல்கள் 337 தானே?:-))))

    முகத்தை முழுதாகக் காட்டாமல், தொப்பி போட்டிருப்பார், கோட் போட்டிருப்பார். காலில் செருப்புப்போட்டிருப்பார். அவர் அழகானவரா? என்று கேட்பதுபோல இருக்கிறது உங்கள் கேள்வி.

    இன்று நடத்தப்படும் பாடம் 7ற்கு உரியது. 7ல் சந்திரன் இருக்கிறார் நல்லது. ஏழாம் வீட்டு அதிபதி புதன் எங்கே உள்ளார்?
    கர்மகாரகன் & விரையாதிபதி for your horoscope சனி, சூரியன்(6ற்கு உரியவன்) ராகு ஆகியோர்கள் எங்கே உள்ளார்கள்? அவர்களின் பார்வை 7ல் அல்லது லக்கினத்தில் விழுகிறதா? என்று ஒன்றும் தெரியாமல் எப்படி பதில் சொல்வது?

    உடனே அதைக் கொடுத்து பாக்கியசாலிதானா? என்று கேட்க வேண்டாம்! ஒரு முறை நேரில் சந்திக்கும்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம்!

    கல்யாணம் ஆகாதவரை அனைவருமே பாக்கியசாலிகள்தான். கல்யாணம் ஆன பிறகு அன்பான நல்ல மனைவி கிடைத்தவர்கள் மட்டுமே பாக்கியசாலிகள். மற்றவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் இல்லை! போதுமா?:-)))))

    ReplyDelete
  24. ////gonzalez said...
    good evening master,
    what about sun,rahu and venus in 7th house (taurus).is it good for marriage.////

    more than one melefic planet in any house is not desirabale. In your horoscope, 2 melefics are in the 7th house.If Jupiter or Moon is aspecting that house, then this eveil effects will vanish. There are many other things like astakavarga parals and aspects of primary planets are there to consider the results of 7th bhava!

    ReplyDelete
  25. Dear Sir,

    Thanks for special post. I did mention because you have included couple of things for me in the blog. I really appreciate it. (btw, I'm not in Canada, I'm in Texas, USA).

    I finished reading, but I dont want to tag with my horoscope again.

    But one general question, Is jupiter aspects also considered good in navamsa.

    What the effects if jupiter aspects debiliated planet?

    -Shankar

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. ஒருபக்கக் கதை ஒன்றைப் பல்சுவைப் பதிவில் இன்று பதிவிட்டுள்ளேன் அனைவரையும் படிக்க வேண்டுகிறேன்

    http://devakottai.blogspot.com/2008/09/blog-post_16.html

    ReplyDelete
  28. hotcat said...Dear Sir,
    Thanks for special post. I did mention because you have included couple of things for me in the blog. I really appreciate it. (btw, I'm not in Canada, I'm in Texas, USA).
    I finished reading, but I dont want to tag with my horoscope again.
    But one general question, Is jupiter aspects also considered good in navamsa.////

    Navamsa is only the magnified version of Rasi Chart. If jupiter aspects a place or a planet in Navamsa it is to be taken to account in Rasi results.
    =========================================
    What the effects if jupiter aspects debiliated planet?/////

    குரு பார்வை கோடி புண்ணியம். நீசமான கிரகம் ஏற்கனவே செயல் இழந்துவிட்டது. அது சுபக்கிரகமாக இருந்தால் குருவின் பார்வையால் ஒரளவு நன்மைகளைச் செய்யும். தீய கிரகமாக இருந்தால் குருவின் பார்வையால் தீமைகளைச் சுத்தமாகச் செய்யாமல் இருக்கும்!

    ReplyDelete
  29. In a lady's horoscope that i know , kanni lagnam , meena rasi , uthrattadhi - 4 padham
    planetary position :
    1 : budhan(vakram) ,suryan , sukran , sani
    2: guru
    3: sevvai
    4: kethu
    7: chandran
    10: raahu

    since sukran aspects moon directly , the lady's was a love marriage. My question is ,since sukran is neecha in kanni rasi , does neecha bangam add any power to sukran to have caused this love marriage ?

    ReplyDelete
  30. ///////Devika has left a new comment on your post "காதல் திருமணமா? கட்டுப்பட்ட திருமணமா?":

    In a lady's horoscope that i know , kanni lagnam , meena rasi , uthrattadhi - 4 padham
    planetary position :
    1 : budhan(vakram) ,suryan , sukran , sani
    2: guru
    3: sevvai
    4: kethu
    7: chandran
    10: raahu

    since sukran aspects moon directly , the lady's was a love marriage. My question is ,since sukran is neecha in kanni rasi , does neecha bangam add any power to sukran to have caused this love marriage ? /////

    Sukkiran with exalted (ucha) Budhan is under neecha banga raja yogam conferred love marriage with the blessing of the seventh lord in the 2nd hosue (which is Sukkiran's own house) It is the house of family affairs. Moon, the eleventh lord who is a natural benefic enhanced the yoga!

    ReplyDelete
  31. Dear Sir, one general doubt ( out of many doubts)
    In marriage porutham , for eg. if the boy's nakshathram is anusham , then as per panchaangam, anusham could be matched with any other nakshatram. But some nakshatrams like uthrattadhi cause rajju mismatch with anusham.
    In some other site , i had once read that even uthrattadhi can be considered as a star which can be matched with any other star. Im confused. Pls clarify my doubt.

    ReplyDelete
  32. ///// devika said...
    Dear Sir, one general doubt ( out of many doubts)
    In marriage porutham , for eg. if the boy's nakshathram is anusham , then as per panchaangam, anusham could be matched with any other nakshatram. But some nakshatrams like uthrattadhi cause rajju mismatch with anusham.
    In some other site , i had once read that even uthrattadhi can be considered as a star which can be matched with any other star. Im confused. Pls clarify my doubt.//////

    Anusham is not matchable to the following stars in rajju compatibility!

    1.Bharani, 2, Pooram, Pooraadam (all belongs to Venus)
    2.Poosam, 2.Anusham (itself for marriage with the same star varan) 3.Uththirattaathi (all belongs to Saturn)

    They comes under one qroup. And with in a group the stars are not matchable to each other!

    ReplyDelete
  33. Dear Sir , Are there any exceptions to this rule ? have there been any examples where horoscopes have been matched regardless of rajju failure ? What are the outcomes of a horoscope-match with rajju failure ?

    ReplyDelete
  34. ////Devika said...
    Dear Sir , Are there any exceptions to this rule ? have there been any examples where horoscopes have been matched regardless of rajju failure ? What are the outcomes of a horoscope-match with rajju failure ?////

    Rajju Poruththam is to assess the duration of the married life! It is important than any other poruththam!

    விதிவிலக்குத்தானே? ஏன் இல்லை!
    ஜோதிடத்தை மறந்து விடுங்கள். இறைவனை நம்புங்கள். அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் காரியத்தில் இறங்குங்கள்
    எல்லாம் விதித்தபடி நடக்கட்டும் என்று ஏகாந்தமாக இருங்கள். ஜாதகம் பார்ப்பதனால் வருவதைத் தடுக்க முடியுமா? விதியைப் புறக்கணிக்கமுடியுமா? இல்லையல்லவா? எல்லாம் அவன் செயல் என்று செயலில் இறங்குங்கள்.ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்ட எத்தனையோ பேர்கள் நன்றாக வாழவில்லையா?ஒரே ஒரு கண்டிஷன்தான் இதில் உண்டு. வருவதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்தான் அது!வருவதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களுக்குத்தான் ஜோதிடம்.மனப் பக்குவம் இருப்பவர்களுக்கு ஜோதிடம் தேவையில்லை. இறைநம்பிக்கை ஒன்று போதும்!

    Okay யா?

    ReplyDelete
  35. அருமையான பதிவு, புருனோ அவர்களின் பின்னூட்விளக்கமும் அருமை.
    கண்டிப்பாக எனக்கு மனைவியாக வருபர் (I belive in God)

    ராஜ யோகம் உள்ள பெண், "ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும்."

    :-)

    ReplyDelete
  36. //// நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    அருமையான பதிவு, புருனோ அவர்களின் பின்னூட்விளக்கமும் அருமை.
    கண்டிப்பாக எனக்கு மனைவியாக வருபர் (I belive in God)

    ராஜ யோகம் உள்ள பெண், "ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும்.":-)/////

    ஆகா, அப்படியே ஆகட்டும்! வரப்போகும் அந்த மங்கை நல்லாளால் கிடைக்கப்போகும் ராஜ யோகங்களை வைத்து நம் வகுப்பறைக் கண்மணிகளுக்கும் (சக மாணவர்களுக்கு) உதவிகள் செய்து மகிழுங்கள்!:-))))

    ReplyDelete
  37. //ராஜ யோகம் உள்ள பெண், "ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும்.":-)//

    நாம குடுத்து வைக்கேலனு நினைக்கிறேன். :(
    ஏன் சாமி 10ல சுக்கிரனோடு சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று சேர்ந்து இருந்தா, ராஜ யோகம் தான் கிடைகல, வெறும் யோகமாவது கிடைக்குமா?

    ReplyDelete
  38. என்னடா இது? ஆரம்பமே சரியில்லாம இருக்கு..

    அடல்ட்ஸ் ஒன்லி பதிவா? முன்னாடியே சொல்ல வேணாம்..

    என்னை மாதிரி சின்னப் புள்ளைங்கள்லாம் வராம இருந்திருப்போம்ல..

    ReplyDelete
  39. ///// aachi said...
    //ராஜ யோகம் உள்ள பெண், "ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும்,
    ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும்.":-)//
    நாம குடுத்து வைக்கேலனு நினைக்கிறேன். :(
    ஏன் சாமி 10ல சுக்கிரனோடு சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று சேர்ந்து இருந்தா, ராஜ யோகம் தான் கிடைகல, வெறும் யோகமாவது கிடைக்குமா?////


    மொத்த யோகங்கள் 300 உள்ளன. அவைகளெல்லாம் பின் பதிவுகளில் வரும். அதையெல்லாம் படித்த பின்பு ஒரு முடிவிற்கு வாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  40. //// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    என்னடா இது? ஆரம்பமே சரியில்லாம இருக்கு..
    அடல்ட்ஸ் ஒன்லி பதிவா? முன்னாடியே சொல்ல வேணாம்..
    என்னை மாதிரி சின்னப் புள்ளைங்கள்லாம் வராம இருந்திருப்போம்ல../////

    என்ன உனா தானா என்ன ஆச்சு உங்களுக்கு?
    பதிவை மீண்டும் படிங்க! அடல்ட்ஸ் ஒன்லி கன்டெண்ட் என்ன இருக்குன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  41. Dear sir
    ////அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
    நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை
    பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்
    கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.
    மகிழ்வுடையதாக இருக்கும்!////


    ////சேர்க்கை
    பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள்.////

    Why venus and moon conjuction is considered good?

    ///ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
    என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்////

    What is subha yogas?I know there are many rajayogas....is it something like that or it is different....


    Thanks
    Shankar

    ReplyDelete
  42. /////அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
    நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை
    பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்
    கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.
    மகிழ்வுடையதாக இருக்கும்!////

    What is special about venus and moon conjuction? If they both conjuct but in 6,8 and 12th house will it reverse?

    what is meant by subha yogam? is it similiar to raja yogam or something different...Please explain in detail.

    Thanks
    Shankar

    ReplyDelete
  43. ////hotcat said...
    Dear sir
    ////அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
    நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை
    பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்
    கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.
    மகிழ்வுடையதாக இருக்கும்!////
    ////சேர்க்கை
    பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள்.////
    Why venus and moon conjuction is considered good?

    Both are benefic planets. Their association is considered good

    ///ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
    என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்////
    What is subha yogas?I know there are many rajayogas....is it something like that or it is different....

    Subha yoga means association of good planets in the 7th and also the aspect of good planets towards 7th house or 7th lord

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com