மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.08

எது உங்களை விட்டுப் போகாது?

நச்'சென்று ஆறு நன்மொழிகள் உள்ளன.படித்து இன்புறுங்கள்

1. வெற்றியில் எல்லாம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்
தான் எல்லாம் உள்ளது!

2. உங்களால் நிறைய சாதிக்க முடியும். அந்த சாதனையின் பெயர் யாருக்குச் செல்கிறது என்ற கவலையில்லை என்றால்!

3. உங்களை விட்டு எல்லாமே போய்விட்டாலும் - ஒன்று மட்டும் நிச்சயமாக
உங்களைவிட்டுப் போகாது - அதுதான் உங்கள் எதிர்காலம்!

4. அளவிற்கு மீறிச் சண்டையிடாதே - எதிரிக்கு உன்னுடைய யுக்தி
முழுவதும் தெரிந்து விடும்!

5. கீழே இருந்துதான் எல்லா வேலைகலையும் துவங்க வேண்டும்.
மேலே இருந்து துவங்ககூடிய ஒரே வேலை சவக்குழி தோண்டுவது மட்டுமே~!

6. உங்கள் முயற்சி இல்லாமல் வருவது ஒன்றே ஒன்றுதான். அதுதான் முதுமை!

வாழ்க வளமுடன்!

62 comments:

  1. //4. அளவிற்கு மீறிச் சண்டையிடாதே - எதிரிக்கு உன்னுடைய யுக்தி
    முழுவதும் தெரிந்து விடும்!//

    இதனால்தான் நிறைய போட்டிகள் வேண்டாம்! நாங்கள் விளம்பரங்களில் நடிக்கிறோம் என்று நமது கிரிக்கெட் வீரர்கள் சொல்கிறார்கள்

    ReplyDelete
  2. // கீழே இருந்துதான் எல்லா வேலைகலையும் துவங்க வேண்டும்//

    மேலே இருந்து துவங்ககூடிய ஒரே வேலை - வாழைப்பழத் தோலை உரிப்பது!

    ReplyDelete
  3. //உங்கள் முயற்சி இல்லாமல் வருவது ஒன்றே ஒன்றுதான்//

    கொட்டாவி!

    ReplyDelete
  4. //2. உங்களால் நிறைய சாதிக்க முடியும். அந்த சாதனையின் பெயர் யாருக்குச் செல்கிறது என்ற கவலையில்லை என்றால்!//

    அடுத்தவரை வம்பில் மாட்டிவிடும் சூழ்ச்சி!

    ReplyDelete
  5. //////கடைசி பெஞ்ச் said...
    உள்ளேன் ஐயா////

    வாருங்கள் கடை பெஞ்ச் புள்ளி ராஜா! ஒரு மாதமாக ப்ராக்ஸியைக் காணவில்லையே என்று நினைத்தேன். வந்துவிட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. /////கடைசி பெஞ்ச் said...
    //4. அளவிற்கு மீறிச் சண்டையிடாதே - எதிரிக்கு உன்னுடைய யுக்தி
    முழுவதும் தெரிந்து விடும்!//
    இதனால்தான் நிறைய போட்டிகள் வேண்டாம்! நாங்கள் விளம்பரங்களில் நடிக்கிறோம் என்று நமது கிரிக்கெட் வீரர்கள் சொல்கிறார்கள்/////

    அதே போட்டியை நீங்கள் கொஞ்சமாவது படிப்பில் காட்டலாமே?

    ReplyDelete
  7. ////கடைசி பெஞ்ச் said...
    // கீழே இருந்துதான் எல்லா வேலைகலையும் துவங்க வேண்டும்//
    மேலே இருந்து துவங்ககூடிய ஒரே வேலை - வாழைப்பழத் தோலை உரிப்பது!//////

    இன்னொரு வேலையையும் மேலிருந்துதான் துவங்க வேண்டும். டாஸ்மார்க் பாரில் பாட்டிலின் மூடியைத் திறப்பது!

    ReplyDelete
  8. /////கடைசி பெஞ்ச் said...
    //உங்கள் முயற்சி இல்லாமல் வருவது ஒன்றே ஒன்றுதான்//
    கொட்டாவி!/////

    தேர்வில் ஜீரோ வாங்குவதும் முயற்சி இல்லாமல் வருவதுதான்!

    ReplyDelete
  9. /////கடைசி பெஞ்ச் said...
    //2. உங்களால் நிறைய சாதிக்க முடியும். அந்த சாதனையின் பெயர் யாருக்குச் செல்கிறது என்ற கவலையில்லை என்றால்!//
    அடுத்தவரை வம்பில் மாட்டிவிடும் சூழ்ச்சி!//////

    இருப்பது கடைசி பெஞ்ச்! மாட்டி விடப்படுவதற்கு என்ன மிச்சம் இருக்கப்போகிறது?:-))))

    ReplyDelete
  10. அனைத்தும் நன்றாக இருக்கிறது !

    ReplyDelete
  11. ///கோவி.கண்ணன் said...
    அனைத்தும் நன்றாக இருக்கிறது !///

    சிங்கப்பூர் நேரம் இரவு மணி 1.30!
    இன்னும் தூங்கவில்லையா?

    ReplyDelete
  12. //அனைத்தும் நன்றாக இருக்கிறது !//

    நீங்கள் பின்னூட்டங்களைச் சொல்லவில்லைதானே!

    ReplyDelete
  13. அய்யா கடைசி பெஞ்ச் நம்ம பக்கம் வாங்க

    ReplyDelete
  14. //வாருங்கள் கடை பெஞ்ச் புள்ளி ராஜா!//

    ஐயா!(ஐயோ!?) நான் ஒரு மாணவி!

    ReplyDelete
  15. //அய்யா கடைசி பெஞ்ச் நம்ம பக்கம் வாங்க//

    அக்கா கடைசி பெஞ்ச் என்று அழைத்திருக்க வேண்டும்!
    :(

    ReplyDelete
  16. நம்முடைய உழைப்பில் இன்னொருவருக்கு ரிவார்ட் கிடைக்கிறதே என்கிற ஏக்கம்வராமல் இருப்பதற்கு என்னுடைய பழைய பாஸ் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் நினைவில் கொள்; ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது கால்கள் என்றாலும் கோப்பையைப் பெறுபவை கைகள் தான்."

    என்னுடைய கைகள் தானே என்று எண்ணிக் கொள்ளும் பக்குவம் இருந்தால் தான் அடுத்த பந்தயத்திலும் கால்கள் ஓடும். இல்லையா சார்?

    உங்கள் பொன்மொழிகள் அருமை. தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்:

    மேலிருந்து கீழாகத் தொடங்கக் கூடிய செயல்களில் அஸ்திவாரம் தோண்டுவதும், மரம் ஊன்றுவதும் கூட இடம் பெறுமே;கொஞ்சம் மாற்ற முடியுமா என்று பாருங்களேன்.

    ReplyDelete
  17. //டாஸ்மார்க் பாரில் பாட்டிலின் மூடியைத் திறப்பது!
    //

    ஐயா! டாஸ்மர்க் என்றால் என்ன?

    பாஸ்மார்க் போலவே இதுவும் இதுவரை நான் கேட்டிராத வார்த்தையாக இருக்கிறதே?

    ReplyDelete
  18. //செயல்களில் அஸ்திவாரம் தோண்டுவதும், மரம் ஊன்றுவதும் கூட இடம் பெறுமே;கொஞ்சம் மாற்ற முடியுமா என்று பாருங்களேன்//

    பொதுவாக குழி தோண்டுதல் என்று சொல்லி இருக்கலாம்! (இதைத்தான் 2 வது பாயிண்ட்லயே சொல்லிட்டாரே)

    சவக்குழி என்பது கொஞ்சம் அமங்கலமாக இருக்கிறது!

    ReplyDelete
  19. //. உங்களை விட்டு எல்லாமே போய்விட்டாலும் - ஒன்று மட்டும் நிச்சயமாக
    உங்களைவிட்டுப் போகாது //

    குசும்பு! (குறும்பு என்று வாத்தியார் சொல்லுவார், அவர் எங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்)

    ReplyDelete
  20. /////RATHNESH said...
    நம்முடைய உழைப்பில் இன்னொருவருக்கு ரிவார்ட் கிடைக்கிறதே என்கிற ஏக்கம்வராமல் இருப்பதற்கு என்னுடைய பழைய பாஸ் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் நினைவில் கொள்; ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது கால்கள் என்றாலும் கோப்பையைப் பெறுபவை கைகள் தான்."
    என்னுடைய கைகள் தானே என்று எண்ணிக் கொள்ளும் பக்குவம் இருந்தால் தான் அடுத்த பந்தயத்திலும் கால்கள் ஓடும். இல்லையா சார்?////

    அருமை நண்பரே!

    ////// உங்கள் பொன்மொழிகள் அருமை. தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்:
    மேலிருந்து கீழாகத் தொடங்கக் கூடிய செயல்களில் அஸ்திவாரம் தோண்டுவதும், மரம் ஊன்றுவதும் கூட இடம் பெறுமே;கொஞ்சம் மாற்ற முடியுமா என்று பாருங்களேன்./////

    பொன்மொழிகள் என்னுடையதல்ல! இறக்குமதிச் சரக்கு. மொழிமாற்றம் மட்டுமே என்னுடையது.
    மனிதனின் மேன்மைக்காகச் சொன்னதாக இருக்கும். மனிதன் மேன்மையுற அனைத்துச் செயல்களையும் கீழிருந்துதானே துவங்க வேண்டும். நீங்கள் சொல்லும் அஸ்திவாரம் எல்லாம் பொதுவாகச் செய்யப்படுபவை. பின்னூடத்தில் ஒரு அன்பர் சொல்லியிருக்கிறார் பாருங்கள் வாழைபழத்தைத் தின்பதற்கு மேலிருந்துதான் துவங்க வேண்டும் என்று. அது போல பல செயல்கள் மேலிருந்தும் துவங்கப்படும். ஆனால் மனிதன் மேன்மையுற...? ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக சவக்குழியை இணைத்து, பொன் மொழியைச் சொன்னவர் சொல்லியிருப்பாரென்று நினைக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  21. பழத்தை வைத்து நாடகத்தைத் துவங்கி விட்டீர். இன்று வேறு இடம் கிடைக்க வில்லையா புள்ளிராஜா?

    லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா என்ற பெயரிலும் ஒரு ப்ளாக்கர் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர் போலும். மொத்தம் எத்தனை ப்ளாக்கர் கணக்குகள் - எண்ணிக்கை ஒரு நூறு இருக்குமா?

    ReplyDelete
  22. //இன்று வேறு இடம் கிடைக்க வில்லையா புள்ளிராஜா?
    //

    நான் புள்ளி ராஜா அல்ல என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  23. //இன்று வேறு இடம் கிடைக்க வில்லையா//

    ஸாரி! நோ சான்ஸ்!

    ReplyDelete
  24. //மொத்தம் எத்தனை ப்ளாக்கர் கணக்குகள் - எண்ணிக்கை ஒரு நூறு இருக்குமா?//

    அஃப்கோர்ஸ்!

    ReplyDelete
  25. //லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா என்ற பெயரிலும் ஒரு ப்ளாக்கர் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர் போலும்//

    பின்னே Class Room 2007 க்காகவே உருவாக்கப் பட்ட கணக்கு!

    ReplyDelete
  26. சார், உங்களிடம் விஜய்காந்த ஜாதகம் இருக்கிறதா

    ReplyDelete
  27. /////மாண்புமிகு மாணவி said...
    //லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா என்ற பெயரிலும் ஒரு ப்ளாக்கர் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர் போலும்//
    பின்னே Class Room 2007 க்காகவே உருவாக்கப் பட்ட கணக்கு!/////

    வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் தெரியமா? தோடு போடக் காது இருக்காது!:-)))

    ReplyDelete
  28. //சார், உங்களிடம் விஜய்காந்த ஜாதகம் இருக்கிறதா//

    :) அது சரி!

    ReplyDelete
  29. /////புருனோ Bruno said...
    அருமை அருமை////

    வாருங்கள் டாக்டர். நன்மொழிகளை ரசித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  30. /////Blogger புருனோ Bruno said...
    சார், உங்களிடம் விஜய்காந்த ஜாதகம் இருக்கிறதா?///

    உங்களுடைய ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்!
    ஆனால் அவருடைய ஜாதகம் என்னிடம் இல்லை!:-((((

    ReplyDelete
  31. //தோடு போடக் காது இருக்காது//

    அவரைப் பற்றி நன்கு தெரியும்! அதனால்தான் முஞாக்கிரதையாக கம்மலைக் கழற்றி வீட்டிலேயே வைத்துவிட்டு வகுப்புக்கு வருவேன்!

    ReplyDelete
  32. /////Blogger நாமக்கல் சிபி said...
    //சார், உங்களிடம் விஜய்காந்த ஜாதகம் இருக்கிறதா//
    :) அது சரி!///

    எனக்கும் அவருடைய ஜாதகத்தைத் தேடிப்பிடித்து, நோண்டிப்பார்க்க ஆர்வமாக உள்ளது! தேர்தல் சமயத்தில் யாராவது பிடித்துப் பத்திரிக்கைகளில் எழுதி விடுவார்கள்!

    ReplyDelete
  33. //தோடு போடக் காது இருக்காது//

    நீங்கள் மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்கள்! பலரிடம் விசாரித்ததில் தோடு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள்!

    ReplyDelete
  34. //நீங்கள் மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்கள்! பலரிடம் விசாரித்ததில் தோடு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள்!//

    சார்! நீங்க நல்லவரா அல்லது கெட்டவரான்னு உண்மைத் தமிழன் கேட்டுவரச் சொன்னார்!

    ReplyDelete
  35. ///மாண்புமிகு மாணவி said...
    //தோடு போடக் காது இருக்காது//
    நீங்கள் மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்கள்! பலரிடம் விசாரித்ததில் தோடு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள்!///

    அந்தப் பலர் யார்? அவருடை 40 பக்கப் பதிவுகளைப் படித்து விட்டுப் பொறாமைப் படும் கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பழநியப்பன் பார்த்துக்கொள்வான்!:-)))
    உங்களை யார் வகுப்பை விட்டு வேளியே போய் இதையெல்லாம் விசாரிக்கச் சொன்னது?
    பேச்சு பேச்சாக இருக்கனும் : பெண் பெண்ணாக இருக்கனும்:-)))

    ReplyDelete
  36. நாமக்கல் சிபி said...
    //நீங்கள் மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்கள்! பலரிடம் விசாரித்ததில் தோடு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள்!//
    சார்! நீங்க நல்லவரா அல்லது கெட்டவரான்னு உண்மைத் தமிழன் கேட்டுவரச் சொன்னார்!///

    நான் நல்லவர்களுக்கு நல்லவன்; கெட்டவர்களுக்கு மிகவும் நல்லவன்!

    ReplyDelete
  37. மெய்சிலிர்க்க வைத்தீர்கள்
    அனைத்தும் அருமை... மொழிபெயர்ப்புக்கு நன்றி.

    >>வெற்றியில் எல்லாம் இல்லை<<
    ஆமாம், வெற்றி..ஆணவத்தை பரிசளிக்கும்

    ReplyDelete
  38. Song Title: oNNa irukka kaththukaNum

    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum
    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum
    kaaka koothatha paarunga
    kaaka koothatha paarunga
    athukku kathu koduthathu yaarunga
    kaaka koothatha paarunga
    athukku kathu koduthathu yaarunga
    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum

    veeta vittu veLiya vandha naalum nadakalaam
    andha naalum therinju nadandhu kittaa nalla irukkalaam
    veeta vittu veLiya vandha naalum nadakalaam
    andha naalum therinju nadandhu kittaa nalla irukkalaam
    unnai kaeteu ennai kaettu ethuvum nadakkumaa
    unnai kaeteu ennai kaettu ethuvum nadakkumaa
    andha oruvan nadakkum nadagathai nirutha mudiyumaa
    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum

    thannai pola pirarai eNNum thanmai vendumae
    andha thanmai vara uLLathilae karuNai vendumae
    thannai pola pirarai eNNum thanmai vendumae
    andha thanmai vara uLLathilae karuNai vendumae
    ponnai pola manam padaithaal selvam vaerillai
    ponnai pola manam padaithaal selvam vaerillai
    ithai purindhu konda oruvanai pol manidhan vaerillai
    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum

    konja naeram katru adithu oyindhu pogalaam
    vaanil koodi varum maegangaLum kalaindhu pogalaam
    konja naeram katru adithu oyindhu pogalaam
    vaanil koodi varum maegangaLum kalaindhu pogalaam
    naetru varai nadanthathellam indru maaralaam
    naetru varai nadanthathellam indru maaralaam
    naam naer vazhiyil nadanthu sendraal nanmai adaiyalaam

    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum
    kaaka koothatha paarunga
    athukku kathu koduthathu yaarunga
    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum

    ReplyDelete
  39. ////வெற்றியில் எல்லாம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்
    தான் எல்லாம் உள்ளது!///

    I like this one!!!


    I am shocked that sir is mentioning "pulli" Raja....I thought it in offensive way...is it?

    -Shankar

    ReplyDelete
  40. வாத்தியரே பழமொழிகள் அருமை, நமது பழைய நண்பர் கூட்டத்தை காணவில்லை,

    கடைசி 3 பதிவுகளும் பல்சுவைகாண பதிவுகள் என்று நினைக்குறேன், இடம் மாற்றி தொடர்ந்து வகுப்பறையில் பல்சுவை பதிவுகளை இடுகிறீர்களா இல்லை வரும் பதிவுக்கு அடிகோடுகளா, 8'ம் 9'ம் வீட்டுக்கான படத்திற்காக ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  41. பொன்மொழிகள் பரவாயில்லை... ஆனால் எதிர்மறை அதிகமாக உள்ளதே...

    ReplyDelete
  42. ஹலோ சார்,

    //1. வெற்றியில் எல்லாம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்தான் எல்லாம் உள்ளது!//

    இது 100% கரெக்ட்.

    //ஒன்று மட்டும் நிச்சயமாகஉங்களைவிட்டுப் போகாது - அதுதான் உங்கள் எதிர்காலம்!//

    அதோட நம்ம நிழலும் பாவ புண்ணியம் கூட சேராதோ?

    //ஒரே வேலை சவக்குழி தோண்டுவது மட்டுமே~!//
    சர்வ சத்தியமான வார்த்தை.

    //6. உங்கள் முயற்சி இல்லாமல் வருவது ஒன்றே ஒன்றுதான். அதுதான் முதுமை!//

    இது தான் நிஜம்.

    ReplyDelete
  43. வாத்தியாரே..

    படித்தேன்.. தெளிந்தேன்.. ஏற்றுக் கொள்கிறேன்..

    கூப்பிடாமலேயே வரும் முதுமை என்பதில் மரணம் என்றும் ஒரு கருத்து இவைத்துக் கொள்ளலாமா? அது சரியாக வருமா? உண்மைக்கு உகந்ததுதானா அது..?

    ReplyDelete
  44. அய்யா வாழைபழத்தையும் கீழிருந்து உரித்து தான் சாப்பிடவேண்டும்
    என்று வாழைபழம் கடை வைத்திருக்கும் ஒருவர் சொன்னார்
    அப்பொழுது தான் வாழைபழம்(கனிந்த பழமாக இருந்தால் ) இல்லாமல் கிடைக்கும்

    ReplyDelete
  45. //////மதி said...
    மெய்சிலிர்க்க வைத்தீர்கள்
    அனைத்தும் அருமை... மொழிபெயர்ப்புக்கு நன்றி.
    >>வெற்றியில் எல்லாம் இல்லை<<
    ஆமாம், வெற்றி..ஆணவத்தை பரிசளிக்கும்/////

    நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  46. /////thenkasi said...
    Song Title: oNNa irukka kaththukaNum
    onna irukka kathukaNum
    indha unmaiya sonna othukaNum/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. /////hotcat said...
    ////வெற்றியில் எல்லாம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்
    தான் எல்லாம் உள்ளது!///
    I like this one!!!///

    நன்றி சங்கர்!

    //// I am shocked that sir is mentioning "pulli" Raja....I thought it in offensive way...is it?
    -Shankar///

    இல்லை. நம் சக பதிவர்களில் ஒருவர் புள்ளிராஜா என்ற பெயரில் பின்னூட்டம் இடுவார். அவ்வளவுதான்

    ReplyDelete
  48. //////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே பழமொழிகள் அருமை, நமது பழைய நண்பர் கூட்டத்தை காணவில்லை,///

    கல்கிதாசன், தமாம் பலா, அறிவன் ஆகியோர் டூரில் இருக்கிறார்கள். அடுத்தவாரம் வரலாம்!

    ///// கடைசி 3 பதிவுகளும் பல்சுவைகாண பதிவுகள் என்று நினைக்குறேன், இடம் மாற்றி தொடர்ந்து வகுப்பறையில் பல்சுவை பதிவுகளை இடுகிறீர்களா இல்லை வரும் பதிவுக்கு அடிகோடுகளா, 8'ம் 9'ம் வீட்டுக்கான படத்திற்காக ஆவலாக உள்ளேன்.////

    வகுப்பறையில் ஜோதிடப்பாடங்களை மட்டுமே நடத்தினால் போரடிக்காதா? ஒரு மாறுதலுக்காகத்தான் இடையில் 3 பதிவுகள்

    ReplyDelete
  49. /////கூடுதுறை said...
    பொன்மொழிகள் பரவாயில்லை... ஆனால் எதிர்மறை அதிகமாக உள்ளதே.../////

    சாதாரணமாகத்தான் உள்ளது கூடுதுறையாரே!

    ReplyDelete
  50. /////Sumathi. said...
    ஹலோ சார்,
    //1. வெற்றியில் எல்லாம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்தான் எல்லாம் உள்ளது!//
    இது 100% கரெக்ட்.
    //ஒன்று மட்டும் நிச்சயமாகஉங்களைவிட்டுப் போகாது - அதுதான் உங்கள் எதிர்காலம்!//
    அதோட நம்ம நிழலும் பாவ புண்ணியம் கூட சேராதோ?
    //ஒரே வேலை சவக்குழி தோண்டுவது மட்டுமே~!//
    சர்வ சத்தியமான வார்த்தை.
    //6. உங்கள் முயற்சி இல்லாமல் வருவது ஒன்றே ஒன்றுதான். அதுதான் முதுமை!//
    இது தான் நிஜம்.///

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  51. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    படித்தேன்.. தெளிந்தேன்.. ஏற்றுக் கொள்கிறேன்..
    கூப்பிடாமலேயே வரும் முதுமை என்பதில் மரணம் என்றும் ஒரு கருத்து இவைத்துக் கொள்ளலாமா? அது சரியாக வருமா? உண்மைக்கு உகந்ததுதானா அது..?/////

    பொதுவாக மரணத்தைப் பற்றிய செய்திகளைக்கூட மனித மனம் யாதாரத்தமாக எடுத்துக்கொள்ளாது

    ReplyDelete
  52. /////smile said...
    அய்யா வாழைபழத்தையும் கீழிருந்து உரித்து தான் சாப்பிடவேண்டும்
    என்று வாழைபழம் கடை வைத்திருக்கும் ஒருவர் சொன்னார்
    அப்பொழுது தான் வாழைபழம்(கனிந்த பழமாக இருந்தால் ) இல்லாமல் கிடைக்கும்/////

    அவர் சொன்னது சரிதான்! நன்றி!

    ReplyDelete
  53. எல்லாமே அருமை !

    ReplyDelete
  54. //////Manivannan said...
    All are correct. 1 & 4 are gr8.///

    Thanks for your comment my dear friend!

    ReplyDelete
  55. /////அம்பி செல்லம் said...
    எல்லாமே அருமை !////

    நன்றி அம்பி!

    ReplyDelete
  56. எல்லாமே அருமை !

    ReplyDelete
  57. ////கடையம் ஆனந்த் said...
    எல்லாமே அருமை !////

    நன்றி கடையத்துக்காரரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com