மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.08

எல்லாம் அவன் செயலென்று ஏன்டா உயிரை எடுக்கிறீர்கள்?

"எல்லாம் அவன் செயலென்று ஏன்டா உயிரை எடுக்கிறீர்கள்?"

"கோபத்தை விடு! என்ன வேண்டும் அதைச் சொல்?"

"எல்லாம் அவன் செயல் என்றால் மனித முயற்சியே கிடையாதா?
வீட்டில் கவுந்தடித்துப் படுத்துக் கொள்ளலாமா? படுத்துக்கிடந்தால்
என்ன கிடைக்கும்? யார் விரும்புவார்கள்? பெற்ற தாயும் விரும்ப
மாட்டாள். கழுத்தை நீட்டிய மனைவியும் விரும்ப மாட்டாள்!"

"உன்னை முயற்சி செய்ய வேண்டாம், எந்த வேலையையும் செய்ய
வேண்டாம் என்று யார் சொன்னது? பொறுமையாகப் பேசு. நீ
சொல்வதை விளங்கச் சொல்.இறைவனை - இறைவனைப் பற்றி
இறைநம்பிக்கையாளர்கள் சொல்வதையெல்லாம் சற்றுத் தள்ளி
வைத்துவிட்டு, உனக்கு என்ன தெரிய வேண்டும்? அதை மட்டும் கேள்!"

"வாழ்க்கையில் உய்வுபெற என்ன வேண்டும்?"

"உய்வு என்றால்....?"

"நல்ல வேலை, அல்லது நல்ல தொழில் என்று முன்னேறி, கை
நிறையச் சம்பளம் அல்லது கைநிறையப் பணம், சொந்த வீடு,
நான்கு சக்கர வாகனம், வங்கி இருப்பு, என்று செளகரியமாக வாழ
என்று வைத்துக் கொள்!"

"உனக்குத் தெரிந்ததை நீ சொல்! பிறகு எனக்குத் தெரிந்ததை
நான் சொல்கிறேன்"

"பணம் வேண்டும். காசு.... காசு.... வேண்டும்! மனித முயற்சி
இல்லாமல் பணம் எப்படி வரும்?"

"காசு இருந்தால் வாழ்க்கை கசப்பே இல்லாமல் இருக்கும் இல்லையா?"

"நிச்சயமாக! அப்படியே கசப்பு தலை காட்டினால், காசை வைத்து
அதை விரட்டி விடலாம்"

"பணத்திற்கு என்ன செய்ய வேண்டும்?"

"நல்ல வேலையைத் தேடிப்பிடிக்க வேண்டும். அல்லது நல்ல தொழிலைச்
செய்ய வேண்டும். அல்லது படிந்து வருகிற வியாபாரத்தைச் செய்ய
வேண்டும். மொத்ததில் முயற்சி செய்து பொருளை ஈட்ட வேண்டும்.
That is the main task of a man!"

"மற்றதை விடு. முதலில் வேலையைப் பற்றிப் பேசுவோம். நல்ல
வேலைக்கு என்ன செய்ய வேண்டும்?"

"தகுதி இருந்தால் வேலை தேடி வரும்?"

"தகுதிக்கு என்ன செய்ய வேண்டும்?"

"நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!"

"மேம் படுத்திக் கொள்வதென்றால் என்ன?"

"அது கூடத் தெரியாதா? நம்முடைய தகுதியை, திறமையை, அறிவை
அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும்.(one should upgrade his
qualification, talent and knowledge!). கல்வி,ஆர்வம், பயிற்சி,
துறைசார்ந்த அறிவு, தன்முனைப்பு, தியாக உணர்வுடன் வேலை
செய்தல் (education,ambition, knowledge, involvement, dedicated
working)இவற்றை வசப் படுத்த வேண்டும். தகுதி தானாக உயரும்!"

"அவற்றிற்கெல்லாம் சரியான வாய்ப்புக் கிடைக்க வேண்டாமா?
அதற்குரிய வீட்டுச் சூழ்நிலை இருக்க வேண்டாமா? நீ சொல்வது
இரண்டாவது நிலை! முதல் நிலைக்கு என்ன செய்வது? அதாவது
அடிப்படைக் கல்விக்கு (Basic education) என்ன செய்வது?
நல்ல பெற்றோர்கள் அமைந்து, அவர்கள் நம்மை அக்கறையுடன்
படிக்க வைத்து ஆளாக்க வேண்டாமா? இருபத்தியோரு வயதுவரை
நீ நல்லபடியாக வளர்ந்து ஆளாகும் சூழ்நிலை! குறைந்த அளவு
ஒரு இளங்கலைப்பட்டப் படிப்பாவது படித்துப் பாஸாகும் சூழ்நிலை!
மொத்தத்தில் நம்மைக் கைத்துக்கி விட ஆள் வேண்டாமா?
கை துக்கி விட்ட பிறகல்லவா நாம் கொடி பிடிக்க முடியும்?"

".........................."

"வறுமை காரணமாக பத்து வயதிலேயே தங்கள் பிள்ளைகளைத் தீப்பெட்டி
செய்யும் தொழிலுக்கு அனுப்பும் குடும்பங்களைத் தெரியமா உனக்கு?
எத்தனை பிள்ளைகள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கு
களிடம் வேலை பார்க்கின்றன தெரியுமா? கிராமங்களுக்குச் சென்று
பார்த்திருக்கிறாயா? எத்தனை சிறுமிகள் வயல்களில் வேலை பார்க்கிறார்கள்
என்று தெரியுமா? அப்படியொரு வறுமையான சூழ்நிலை அல்லது அப்படிப்பட்ட
பெற்றோர்கள் உனக்கும் அமைந்திருந்தால் உன் நிலைமை என்ன?
என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா?"

"சரி, நல்ல பெற்றோர்கள் அமைவதற்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம்?"

"பிறவி என்ன உன் கையிலா இருக்கிறது? நீ விரும்பியா இப்போது உள்ள
பெற்றோர்களுக்குப் பிறந்தாய்? அல்லது எவனாது அவன் சாய்ஸிற்குத் தேடிப்
பிறக்க முடியுமா?"

"முடியாது!"

"அங்கேதான் இறைவன் இருக்கிறார். எல்லாம் உனது முன்வினைப் பயன்!
நீ வாங்கி வந்த வரம். தர்ம - கர்மா தியரியைப் பற்றிச் சொன்னால் உன்
மண்டையில் ஏறாது! ஆகவே உனக்குப் புரியும்படி சொல்கிறேன். மிட்டா
மிராசுகளின் வீட்டில் பிறப்பதோ அல்லது ஒரு அன்றாடம் காய்ச்சியின்
வீட்டில் பிறப்பதோ உன் சாய்ஸிற்குக் கிடைக்காது. அதுபோல ஒரு
பல்கலைக் கழகத் துணை வேந்தரின் குடும்பத்தில் பிறப்பதோ அல்லது
ஒரு பெரிய அரசியல் தலைவரின் வீட்டில் பிறப்பதோ உன் கையில் இல்லை.
பிறந்த அன்றே நீ எதையும் தூக்கிப் பிடிக்க முடியாது. குறைந்தபட்சம்
பன்னிரெண்டு வயது வரையிலாவது கடுமையான வாழ்க்கைச் சுழலில் நீ
சிக்கிவிடாமல், சிக்கி மூழ்கி விடாமல் உன்னனக் காப்பதற்குத் தகுதியுள்ள
பெற்றோர்கள் உனக்கு அமைய வேண்டும். அதை அளிப்பது இறைவன்தான்.
அதேபோல வாழ்க்கையில் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றிகளுக்கும் ஏன்
தோல்விகளுக்கும், உன் தலை எழுத்துத்தான் காரணம். அதை உன் முன்
வினைப்படி எழுதியனுப்புவதும் இறைச் செயல்தான். அதைத்தான் ஒரு
கவிஞன் இப்படி எழுதினான்:
"முதல் எழுத்து தாய் மொழியில்
தலை எழுத்து யார் மொழியில்?"
முதலில் இதை நீ உணர வேண்டும். தலை எழுத்து ஒன்று உள்ளது என்பதை
உணர்ந்த எவனுமே 'எல்லாம் அவன் செயலென்று ஏன்டா உயிரை எடுக்கிறீர்கள்?'
என்று கேட்க மாட்டான். அதை உணராதவர்களும், அல்லது ஒப்புக் கொள்ளாதவர்களும்
அப்படித்தான் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் போல நீயும் பேசாதே!
யாரும் யாரையும் மாற்ற முடியாது. இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன்
போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான். உணரவைத்துத்தான் கொடுப்பான்.
அதுவரை அவன் ஏதாவது ஒரு விதத்தில் அல்லல் படுவான். பட்ட பிறகே
தன் கர்ம வினையை உணர்வான். உணர்ந்த பிறகுதான் இந்த உலக
அவலங்களில் அல்லது துன்பங்களில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும்
அதாவது மேலே போவதற்குப் போர்டிங் பாஸ் கிடைக்கும்!

(முற்றும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"யோவ் வாத்தியார், இன்றையப் பாடத்திற்கும், இந்தக் கட்டுரைக்கும்
ஏதாவது சம்பந்தம் உண்டா?"

"உண்டு!"

"என்ன அது?"

" அடுத்து வரும் பாடத்தைப்படிக்கவும். மூன்று பகுதிகளாக அது வர உள்ளது.
மூன்று பகுதிகளையும் மனதின் உள் வாங்கிப் படிக்கவும். அப்படிப் படிப்பவர்
களுக்கு அது தெரியவரும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

வாழ்க வளமுடன்!

36 comments:

  1. //இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன்
    போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான்//
    Well said and most of us are not realising the truth.

    ReplyDelete
  2. >>கல்வி,ஆர்வம், பயிற்சி,
    துறைசார்ந்த அறிவு, தன்முனைப்பு, தியாக உணர்வுடன் வேலை
    செய்தல்<<

    இது எல்லாம் இருந்தால் வெற்றி அனைவருக்கும் வசப்படும்...

    நன்றி ஐய்யா..மிக அர்த்தமுள்ள பதிவு...

    ReplyDelete
  3. "வந்தேன் வந்தேன் வகுப்பறைக்கு நானும் வந்தேன்"

    ஆஜர் ஆகிவிட்டேன், ஆனால் இது 8'ம் இடம் மற்றும் 9'ம் இடம் 10'ம் இடம், இதில் எந்த இட பாடம் என்று யூகிக்க முடியவில்லை.

    சனி,போர்டிங் பாஸ்'ம் 8'ம் இடம் பற்றியும், தொழில் 9'ம் இடம் பற்றியும் வருகிறது.. இதில் எது? (சரியாக சொன்னேன் என்று நினக்குரேன்)....

    இன்றைய பதிவு அருமை, இறைவனை நம்பாத வரை சரி சனி போர்டிங் பாஸ் குடுக்க மாட்டார் என்று சொன்னவுடன், எனக்கு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரும் தமிழக அரசில் தலைவர் தான் நியாபகத்தில் வந்தார்.

    ReplyDelete
  4. இன்றைய பதிவு ரொம்ப சூடா இருக்கே...........

    ReplyDelete
  5. வாத்தியாரே..

    சனீஷ்வரனின் கருணையைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே முருகனை நான் முழுமையாக உணர்ந்துவிட்டேன்.

    ஆனால் பாருங்க.. இந்த சனீஷ்வரன் கண்ணுலயே பட மாட்டேங்குறான்..

    பாடம் அருமை.. மிக எளிமை.. புரியாதவர்கள் புரிந்து கொண்டால் இந்த 'வாத்தியாரே' அகத்தியர்..

    ReplyDelete
  6. //"யோவ் வாத்தியார், இன்றையப் பாடத்திற்கும், இந்தக் கட்டுரைக்கும்
    ஏதாவது சம்பந்தம் உண்டா?"
    "உண்டு!"
    "என்ன அது?"
    " அடுத்து வரும் பாடத்தைப்படிக்கவும். மூன்று பகுதிகளாக அது வர உள்ளது.
    மூன்று பகுதிகளையும் மனதின் உள் வாங்கிப் படிக்கவும். அப்படிப் படிப்பவர்
    களுக்கு அது தெரியவரும்!//

    இப்படி யார் வாத்தியாரே உங்ககிட்ட கேக்கப் போறா.? ஆனாலும் எச்சரிக்கையைப் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன்.. காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  7. //இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன்
    போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான். உணரவைத்துத்தான் கொடுப்பான்.
    அதுவரை அவன் ஏதாவது ஒரு விதத்தில் அல்லல் படுவான்.//

    ஏனிந்த சாபம் ?

    :)))))

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் இந்த ஊருக்கே கொடுத்தான்.

    :)))))0

    ReplyDelete
  8. "முதல் எழுத்து தாய் மொழியில்
    தலை எழுத்து யார் மொழியில்?"

    பதிவு அருமை,நன்றி ஐயா!!

    GK ,BLR

    ReplyDelete
  9. /////அட்சயா said...
    //இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன்
    போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான்//
    Well said and most of us are not realising the truth.////

    யார் சொன்னாலும் உண்மை நன்றாகத்தான் இருக்கும். உண்மைக்கு ஒரே வடிவம்தான் வடிவேலன் கையில் இருக்கும் வேலைப்போல!

    ReplyDelete
  10. //////மதி said...
    >>கல்வி,ஆர்வம், பயிற்சி,
    துறைசார்ந்த அறிவு, தன்முனைப்பு, தியாக உணர்வுடன் வேலை
    செய்தல்<<
    இது எல்லாம் இருந்தால் வெற்றி அனைவருக்கும் வசப்படும்...
    நன்றி ஐய்யா..மிக அர்த்தமுள்ள பதிவு...///

    பாராட்டிற்கு நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  11. /////கோவை விமல்(vimal) said...
    "வந்தேன் வந்தேன் வகுப்பறைக்கு நானும் வந்தேன்"
    ஆஜர் ஆகிவிட்டேன், ஆனால் இது 8'ம் இடம் மற்றும் 9'ம் இடம் 10'ம் இடம், இதில் எந்த இட பாடம் என்று யூகிக்க முடியவில்லை.
    சனி,போர்டிங் பாஸ்'ம் 8'ம் இடம் பற்றியும், தொழில் 9'ம் இடம் பற்றியும் வருகிறது.. இதில் எது? (சரியாக சொன்னேன் என்று நினக்கிறேன்)....

    சனிக்கு எல்லா இடங்களிலும் பங்கு உண்டு!
    +++++++++++++++++++
    ////இன்றைய பதிவு அருமை, இறைவனை நம்பாத வரை சரி சனி போர்டிங் பாஸ் குடுக்க மாட்டார் என்று சொன்னவுடன், எனக்கு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரும் தமிழக அரசில் தலைவர் தான் ஞாபகத்தில் வந்தார்.////

    இப்படி ஒருவரையும் நான் குறிப்பிடவில்லை. நீங்களாக நினைத்தால் அதற்கு நான் என்ன சொல்ல முடியும் விமல்?

    ReplyDelete
  12. /////அணுயோகி said...
    இன்றைய பதிவு ரொம்ப சூடா இருக்கே...........////

    சூடாக இல்லை. இருந்தால் ஊதிப் படிக்கவும். சூடு குறைந்து விடும்:-))))

    ReplyDelete
  13. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    சனீஷ்வரனின் கருணையைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே முருகனை நான் முழுமையாக உணர்ந்துவிட்டேன்.
    ஆனால் பாருங்க.. இந்த சனீஷ்வரன் கண்ணுலயே பட மாட்டேங்குறான்..////

    உழைப்பவர்களுக்கு சனிதான் உற்ற தோழன். அருகிருந்து உதவிடுவான். நீங்கள் கடும் உழைப்பாளியாயிற்றே - நன்றாகப் பாருங்கள் கண்ணில் படுவான். உங்கள் உழைப்புவெற்றியடைடிந்தால்அவனும் சேர்ந்து கை கொடுத்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளுங்கள்

    ////பாடம் அருமை.. மிக எளிமை.. புரியாதவர்கள் புரிந்து கொண்டால் இந்த 'வாத்தியாரே' அகத்தியர்..///

    அகத்தியர் ஜோதிடத்தை முருகன் அருகிருந்து எழுதியவர். அவர் எங்கே நான் எங்கே? அவர் கடல்.நான் வாளித்தண்ணீர்

    ReplyDelete
  14. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //"யோவ் வாத்தியார், இன்றையப் பாடத்திற்கும், இந்தக் கட்டுரைக்கும்
    ஏதாவது சம்பந்தம் உண்டா?"
    "உண்டு!"
    "என்ன அது?"
    " அடுத்து வரும் பாடத்தைப்படிக்கவும். மூன்று பகுதிகளாக அது வர உள்ளது.
    மூன்று பகுதிகளையும் மனதின் உள் வாங்கிப் படிக்கவும். அப்படிப் படிப்பவர்
    களுக்கு அது தெரியவரும்!//
    இப்படி யார் வாத்தியாரே உங்ககிட்ட கேக்கப் போறா.? ஆனாலும் எச்சரிக்கையைப் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன்.. காத்திருக்கிறேன்..////

    அதிகமாகக் காத்திருக்க வேண்டாம். நாளை மாலை முதல் பகுதி. தட்டச்சும் வேலை கடினமாக உள்ளது. அதிக நேரம் பிடிக்கிறது!:-((((

    ReplyDelete
  15. Thursday, September 25, 2008 11:04:00 AM
    கோவி.கண்ணன் said...
    //இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன்
    போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான். உணரவைத்துத்தான் கொடுப்பான்.
    அதுவரை அவன் ஏதாவது ஒரு விதத்தில் அல்லல் படுவான்.//
    ஏனிந்த சாபம் ? :-)))))/////

    சாபம் கொடுப்பதற்கு எனக்கு உரிமம் (Licence) இல்லை!
    +++++++++++++++++++
    ////கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் இந்த ஊருக்கே கொடுத்தான்.
    :)))))////

    "கிடைத்தவர்கள் எடுத்துக் கொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்!"

    ReplyDelete
  16. /////Geekay said...
    "முதல் எழுத்து தாய் மொழியில்
    தலை எழுத்து யார் மொழியில்?"
    பதிவு அருமை,நன்றி ஐயா!!
    GK ,BLR///

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  17. ////ARUVAI BASKAR said...
    உள்ளேன் ஐயா !///

    வெறும் வருகைப் பதிவு மட்டும்தானா? பதிவைப் படிக்கவில்லையா பாஸ்கர்?

    ReplyDelete
  18. // SP.VR. SUBBIAH said...
    /////கோவை விமல்(vimal) said...
    "வந்தேன் வந்தேன் வகுப்பறைக்கு நானும் வந்தேன்"
    ஆஜர் ஆகிவிட்டேன், ஆனால் இது 8'ம் இடம் மற்றும் 9'ம் இடம் 10'ம் இடம், இதில் எந்த இட பாடம் என்று யூகிக்க முடியவில்லை.
    சனி,போர்டிங் பாஸ்'ம் 8'ம் இடம் பற்றியும், தொழில் 9'ம் இடம் பற்றியும் வருகிறது.. இதில் எது? (சரியாக சொன்னேன் என்று நினக்கிறேன்)....

    சனிக்கு எல்லா இடங்களிலும் பங்கு உண்டு!
    +++++++++++++++++++
    ////இன்றைய பதிவு அருமை, இறைவனை நம்பாத வரை சரி சனி போர்டிங் பாஸ் குடுக்க மாட்டார் என்று சொன்னவுடன், எனக்கு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரும் தமிழக அரசில் தலைவர் தான் ஞாபகத்தில் வந்தார்.////

    இப்படி ஒருவரையும் நான் குறிப்பிடவில்லை. நீங்களாக நினைத்தால் அதற்கு நான் என்ன சொல்ல முடியும் விமல்?//

    "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

    எல்லோரும் பாட்டு பாடுனாங்க அதுதான் நானும் முயற்சி பண்ணி பார்த்தேன்.

    இப்படி ஒருவரையும் நீங்கள் குறிப்பிடவில்லை, ஆனால் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்ல வந்தேன்...:-))

    சனிக்கு எல்லா இடத்திலும் பங்கு உண்டு என்று தெரியும், ஆனால் அதில் 8'ம் வீடு சிறிது SPECIAL அல்லவா, அதுதான் கேட்டேன் வாத்தியரே.

    ReplyDelete
  19. ஹலோ சார்,

    //இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான். உணரவைத்துத்தான் கொடுப்பான்.//

    அது சரி, அதயே மொதல்ல உணரனும் இல்லையா, நான் இப்போலாம் கடவுளை விட விதியையே அதிகமா நம்ப ஆரம்பிச்சுட்டேன். கடவுள் என்னை ரொம்பவேவேவேவேவேவேவே சோதிச்சுட்டாரு.நல்லவர்களுக்கு இது காலம் இல்லைனு புரிஞ்சுண்டேன்.

    ReplyDelete
  20. கோவை விமல்(vimal) said...
    // SP.VR. SUBBIAH said...
    /////கோவை விமல்(vimal) said...
    "வந்தேன் வந்தேன் வகுப்பறைக்கு நானும் வந்தேன்"
    ஆஜர் ஆகிவிட்டேன், ஆனால் இது 8'ம் இடம் மற்றும் 9'ம் இடம் 10'ம் இடம், இதில் எந்த இட பாடம் என்று யூகிக்க முடியவில்லை.
    சனி,போர்டிங் பாஸ்'ம் 8'ம் இடம் பற்றியும், தொழில் 9'ம் இடம் பற்றியும் வருகிறது.. இதில் எது? (சரியாக சொன்னேன் என்று நினக்கிறேன்)....
    சனிக்கு எல்லா இடங்களிலும் பங்கு உண்டு!
    +++++++++++++++++++
    ////இன்றைய பதிவு அருமை, இறைவனை நம்பாத வரை சரி சனி போர்டிங் பாஸ் குடுக்க மாட்டார் என்று சொன்னவுடன், எனக்கு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரும் தமிழக அரசில் தலைவர் தான் ஞாபகத்தில் வந்தார்.////
    இப்படி ஒருவரையும் நான் குறிப்பிடவில்லை. நீங்களாக நினைத்தால் அதற்கு நான் என்ன சொல்ல முடியும் விமல்?//
    "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"
    எல்லோரும் பாட்டு பாடுனாங்க அதுதான் நானும் முயற்சி பண்ணி பார்த்தேன்.
    இப்படி ஒருவரையும் நீங்கள் குறிப்பிடவில்லை, ஆனால் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்ல வந்தேன்...:-))
    சனிக்கு எல்லா இடத்திலும் பங்கு உண்டு என்று தெரியும், ஆனால் அதில் 8'ம் வீடு சிறிது SPECIAL அல்லவா, அதுதான் கேட்டேன் வாத்தியரே.////

    நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி விமல்!

    ReplyDelete
  21. /////Sumathi. said...
    ஹலோ சார்,
    //இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான். உணரவைத்துத்தான் கொடுப்பான்.//
    அது சரி, அதயே மொதல்ல உணரனும் இல்லையா, நான் இப்போலாம் கடவுளை விட விதியையே அதிகமா நம்ப ஆரம்பிச்சுட்டேன். கடவுள் என்னை ரொம்பவேவேவேவேவேவேவே சோதிச்சுட்டாரு.நல்லவர்களுக்கு இது காலம் இல்லைனு புரிஞ்சுண்டேன்.////

    கடவுள் கருணை மிக்கவர்.அவர் யாரையும் சோதிப்பதில்லை. அதனால் அவருக்கு என்ன பயன்?
    அவர் விருப்பு, வெறுப்பு (Likes and dislikes) இல்லாதவர்.

    அதனால்தான் வள்ளுவர் சொன்னார்:

    "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்மை இல!"
    (விருப்பு, பெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்குத் துன்பம் இல்லை)

    நமது கர்ம வினைகள்தான் நம்மைப் படுத்தி எடுக்கும். அந்த நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருப்பவர் இறைவன்தான்.

    எத்தனை தடவை விழுகிறோம் என்பது முக்கியமல்ல
    விழுந்தவுடன் எத்தனை தடவைகள் எழுந்து நின்றோம் என்பதுதான் முக்கியம்.

    விழுகும் ஒவ்வொரு முறையும் கை தூக்கி நம்மை எழ வைப்பவர் கடவுள்தான். நிறையப் பேர்களுக்குத் அது தெரிவதில்லை சகோதரி!

    ReplyDelete
  22. Dear Sir

    Wow, this is what I am expecting...your writing style is great!!!I really enjoyed reading the way you present...somehow it was missing in previous stories may be because of translation probs.

    10th house lesson...eager to read.

    Thanks
    Shankar

    ReplyDelete
  23. ///hotcat said...
    Dear Sir
    Wow, this is what I am expecting...your writing style is great!!!I really enjoyed reading the way you present...somehow it was missing in previous stories may be because of translation probs.
    10th house lesson...eager to read.
    Thanks
    Shankar////

    Lesson on 10th house will be interesting Shankar!Pl wait for a day!

    ReplyDelete
  24. //இந்த சனீஷ்வரன் கண்ணுலயே பட மாட்டேங்குறான்//

    Unmaithamizhan! Why Fear? When i'm Here?

    ReplyDelete
  25. //தட்டச்சும் வேலை கடினமாக உள்ளது. அதிக நேரம் பிடிக்கிறது//

    What do you think about outsourcing Sir?

    ReplyDelete
  26. //தட்டச்சும் வேலை கடினமாக உள்ளது. அதிக நேரம் பிடிக்கிறது//

    What do you think about outsourcing Sir?

    ReplyDelete
  27. //தட்டச்சும் வேலை கடினமாக உள்ளது. அதிக நேரம் பிடிக்கிறது//

    What do you think about outsourcing Sir?

    ReplyDelete
  28. பதிவின் த்லைப்பே பல விஷயங்களைச் சொல்கிறது.

    ReplyDelete
  29. /////நாமக்கல் சிபி said...
    //இந்த சனீஷ்வரன் கண்ணுலயே பட மாட்டேங்குறான்//
    Unmaithamizhan! Why Fear? When i'm Here?/////

    பயமா? உண்மைத்தமிழருக்கா? சான்சே இல்லை! இன்னிக்கு ஒத்தை ஆளா நின்று, ஆசிப் அண்ணாச்சியின் பதிவில் பின்னூட்டமிட்டவர்களை விளாசு விளாசு என்று விளாசியிருக்கிறார். பார்க்கவில்லையா நீங்கள்?

    ReplyDelete
  30. //////நாமக்கல் சிபி said...
    //தட்டச்சும் வேலை கடினமாக உள்ளது. அதிக நேரம் பிடிக்கிறது//
    What do you think about outsourcing Sir?/////

    இலவச அவுட் சோர்சிங் ஏது?

    ReplyDelete
  31. ////RATHNESH said...
    பதிவின் தலைப்பே பல விஷயங்களைச் சொல்கிறது.////

    "தலைப்பை நன்றாகப் போடு
    தானாக வருவார்கள்"
    என்று இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவு எழுதினேன்.
    நான் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமா நண்பரே?

    ReplyDelete
  32. ஆஹா வரப்போகிறது 8மிட ஜோதிடம்...

    எதிர்பார்த்து காத்துள்ளேன்...

    என்ன ஐயா ? திடீர் என பாடம் வேகம் எடுத்துவிட்டதே...

    ReplyDelete
  33. ////கூடுதுறை said...
    ஆஹா வரப்போகிறது 8மிட ஜோதிடம்...
    எதிர்பார்த்து காத்துள்ளேன்...
    என்ன ஐயா ? திடீர் என பாடம் வேகம் எடுத்துவிட்டதே...////

    உங்களுக்குப் பிடித்த பகுதி இப்போது இல்லை!
    அதை நினைத்ததால் என்னமோ வேகமாகத்தெரியலாம்!:-)))
    எப்போதும் உள்ள வேகம்தான் இப்போதும்

    ReplyDelete
  34. //இன்றைய பதிவு ரொம்ப சூடா இருக்கே...........////

    சூடாக இல்லை. இருந்தால் ஊதிப் படிக்கவும். சூடு குறைந்து விடும்:-))))
    ///

    இது எல்லாவற்றையும் விட சூப்பர்.

    அப்புறம் ஒரு விதயம்...கோவை நண்பர்களின் தளராத முயற்சியால் பிவி.இராமன் அவர்களின் மொத்த தொகுப்பும் கிடைத்து இங்கும் அனுப்பி வைத்து விட்டார்கள்..கோவையில் விசாரித்தால் கிடைக்கும் என்று சொன்ன தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  35. ///அறிவன்#11802717200764379909 said...
    //இன்றைய பதிவு ரொம்ப சூடா இருக்கே...........////
    சூடாக இல்லை. இருந்தால் ஊதிப் படிக்கவும். சூடு குறைந்து விடும்:-))))
    ///
    இது எல்லாவற்றையும் விட சூப்பர்.
    அப்புறம் ஒரு விதயம்...கோவை நண்பர்களின் தளராத முயற்சியால் பிவி.இராமன் அவர்களின் மொத்த தொகுப்பும் கிடைத்து இங்கும் அனுப்பி வைத்து விட்டார்கள்..கோவையில் விசாரித்தால் கிடைக்கும் என்று சொன்ன தகவலுக்கு நன்றி.////

    உங்களுக்குக் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com