வாரியார் சுவாமியும் எம்.ஆர்.ராதாவும்!!!!
ஆறு தலைகள் கொண்ட முருகன் எப்படி ஒரு பக்கமாக படுத்து தூங்குவார்.?
(படித்ததில் பிடித்த பதிவு)
தி. க. M. R. ராதாவை தலை குனிய வைத்து யோசிக்க வைத்த திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் !
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார்.
அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான பாணியான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளிந்தார்கள்.
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மண மக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கே தூக்கம் வரவில்லை.உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார் வாரியார் சுவாமிகள்.
இதைக் கேட்ட நடிகர் ராதா தலை குனிந்தார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது இறுதி வாழ் நாளில் கடுமையான இரத்த புற்று நோயால் பாதிக்கப் பட்டு… இறுதியில் காஞ்சி மகா பெரியவாளிடம் தனது தவறுக்கு மன்றாடி மன்னிப்பு கேட்டு.. தனது நோயின் வலி.. வலி.. வலி .. தாங்க முடியவில்லை எனக் கூறி அவரிடம் சரணடைந்து வலி இல்லாமல் மரணமடைந்தார் என்பது உலகறிந்த உண்மை!
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir interesting to hear our beloved god lord subramanian thanks sir vazhga valamudan
ReplyDeleteDear Sir!
ReplyDeleteThis is amazing.
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
ReplyDeleteசேர்த்தா விறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
ஞான தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா...
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சாறு
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சாறு
இவறு போனவருஷம் மழைய நம்பி வெத வெதச்சாறு..
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வெச்சாறு
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வெச்சாறு...
ஈசன் போட்ட கணக்கு மாற வில்லை போய்விழுந்தாறு
///Blogger Shanmugasundaram said...
ReplyDeleteGood morning sir interesting to hear our beloved god lord subramanian thanks sir vazhga valamudan///
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
////Blogger Unknown said...
ReplyDeleteDear Sir!
This is amazing.//////
நல்லது. நன்றி நண்பரே!!!!
/////Blogger Sabarinaathan said...
ReplyDeleteபார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
ஞான தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா...
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சாறு
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சாறு
இவறு போனவருஷம் மழைய நம்பி வெத வெதச்சாறு..
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வெச்சாறு
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வெச்சாறு...
ஈசன் போட்ட கணக்கு மாற வில்லை போய்விழுந்தாறு//////
நல்லது. நன்றி சபரிநாதன்!!!!!

அருமை அருமை ஐயா.
ReplyDeleteவழக்கம் போல் இன்றும்.............
தங்கள் பதிவுகளெல்லாம் சொக்கத்தங்கம்..........
அன்புடன்
விக்னசாயி.
=============================
//////Blogger vicknasai said...
ReplyDeleteஅருமை அருமை ஐயா.
வழக்கம் போல் இன்றும்.............
தங்கள் பதிவுகளெல்லாம் சொக்கத்தங்கம்..........
அன்புடன்
விக்னசாயி./////
நல்லது. நன்றி நண்பரே!!!!!
மற்றவர்களை போலவே தான் முருகனும் உறங்குவார்...
ReplyDeleteஇன்றைய பொழுது அனைத்து உயிர்களையும் காத்தோம் என்ற மனநிறைவோடு *ஆறுதலை*க் கொண்டு தூங்குவார் :)