Astrology: Quiz: புதிர்: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன?
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் மக நட்சத்திரக்காரர். அவருக்கு 27 வயது நடக்கும்போது தொடர்ந்து 6 ஆண்டு காலம் மன அமைதியின்றி தவித்தார். அதற்குப் பிறகு சிகிச்சைக்குப்பின் எல்லாம் சரியானது.
அதாவது அவருக்கு சூரிய மகா திசை நடந்த காலத்தில் மன அமைதியில்லாமல் போனது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்
சரியான விடை 15-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம்
ReplyDeleteதங்கள் புதிருக்கான பதில்
மன நிம்மதியின்மை ஏற்பட்டதிற்கான காரணங்கள்
1 . குரு உச்சமான கடக லக்கின ஜாதகம். மனம் பற்றிய இயல்பை பார்ப்பதற்கு ஐந்தாம் இடத்தை பார்க்க வேண்டும். இந்த ஜாதகருக்கு ஐந்தாம் இடத்து அதிபதி செவ்வாய் ஆகும். இந்த செவ்வாய் ராசி கட்டத்தில் சனியின் ஏழாம் பார்வை பெற்று மோசமான நிலை அடைந்து உள்ளது. கடக லக்கினத்திற்கு சனி தீய கிரகமாகும்.
2 மேலும் நவாம்ச கட்டத்திலும் செவ்வாய் ராகுவின் பிடியில் நீசமாக உள்ளது.
3 மன காரகன் சந்திரனும் நவாம்ச கட்டத்தில் ஆறில் மறைந்து உள்ளது. ஆறாம் இடம் நோய் பற்றிய ஸ்தானமாகும். அதனால் சந்திரன் நின்ற சிம்ம லக்கின அதிபதி சூரிய தசையில் மனம் பாதிக்க பட்டது. மேலும் சுக ஸ்தானமும் ( நான்காம் இடம் )கேது அமர்ந்து ராகு பார்வை பெற்று உள்ளது. அதன் அதிபதி சுக்கிரனும் லக்கினத்திற்கு பனிரெண்டில் அமர்ந்து சுகத்தை பாதித்தது.
4 இந்த நிலை ஆறாம் இடத்து அதிபதி லக்கினத்தில் உச்ச மானதால் நிலை பின்னர் சரியானது. குரு கடக லக்கினத்திற்கு சுப கிரகமாகும். இவரே ஒன்பதாம் இடத்து அதிபதியும் ஆவார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி சந்திரன் இரண்டாம் வீட்டில் (சூரியனின் வீட்டில்)
2 .சந்திரன் மனகாரகன்
3 .சந்திரன் ஆறாம் அதிபதி குருவிற்கும் செவ்வாய்க்கும் இடையில் மாட்டிக்கொண்டுள்ளார்
ஆகவே சந்திரன் தான் அமர்ந்த சூரியனின் திசையில் மன அமைதியின்மையை கொடுத்துள்ளார்
4 .செவ்வாய் கடகத்திற்கு யோகக்காரன் ஆயினும் தீய கிரகம் என்பது குறிப்பிட தக்கது
௫.லக்கினத்தில் மாந்தி
5 எட்டாம் அதிபதி சனிஈஸ்வரனின் மூன்றாம் பார்வை சூரியனின் மீது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
ஜாதகர் 17 மே மாதம் 1967 அன்று காலை 10 மணி 42 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ReplyDeleteகடகலக்கினத்திற்கு ஐந்தாம் இடம் விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.செவ்வாய் தன எதிரியான சனியின் நேரடிப்பார்வையில் உள்ளார். மேலும் ஐந்தாம் அதிபன் செவ்வாய் வக்கிரம் அடைந்துள்ளார்.
புதன் புத்திக்குக் காரகன். இந்த புதன் சூரியனால் எரிக்கப்பட்டார்.மேலும் புதனுக்கும் சனியின் பார்வை.சூரியனுக்கும் சனியின் பார்வை.
மனோகாரகனான சந்திரனை மாந்தியும் செவ்வாயும் சூழ்ந்துள்ளது.
தூக்கம் இடத்திற்கான(12) புதன் அஸ்தங்கத மடைந்து ஐந்தாம் இடத்தினைப்பார்த்தது. அதனால் ஜாதகர் தூக்கம் இன்றித் தவித்து மனோவியாகூலம் அடைந்திருப்பார்.
ஐந்தாம் அதிபன் செவ்வாய் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதால் நட்சந்திர அதிபன் சந்திரனைப்போல இயங்குவார். செவ்வாய் பலமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மனம் கலங்க வாய்ப்பு அதிகம்.
சூரிய தசா, செவ்வாய்புக்தி(ஐந்தாம் அதிபன் புகதி) அவருக்கு மனோ வியாதியைக்கொடுத்தது.
ஐயா வணக்கம்,
ReplyDeleteகொடுக்க பட்டுஉள்ள ஜாதகத்தில், 2ம் அதிபதி சூரியன் 3,12க்கு உரிய மிகவும் கெட்ட இரண்டு ஆதிபத்யம் வைத்துஉள்ள புதன் வுடன் கூட்டு, சனி பார்வை, நவாம்சத்தில் கேதுவுடன் சனி வீட்டில் எல்லாம் சேர்த்து சூரியனின் கரகத்துவமான ஆன்மாவையும், உயிர் சக்தி பாதிக்கப்பட்டது. நன்றி.
9840055374.
பிறப்பு : 17/05/1967, 10:50 AM, சென்னை.
ReplyDeleteகடக லக்கினமாகி லக்கினத்தில் மாந்தியுடன் 6, 9 ஆம் அதிபதி குரு சனி சாரத்தில் உச்சமாகி , லக்கினாதிபதியும் மனக்காரகனுமான சந்திரன் சர லக்கினத்திற்கு மாரகஸ்தானமான 2 இல் அமர்ந்து கேது சாரம்வாங்கி, கேதுவுக்கு வீடுகொடுத்த சுக்ரன் விரயஸ்தானத்தில் அமர்ந்த ஜாதகம். மாரகஸ்தான அதிபதி சூரியன் அம்சத்தில் சனி வீட்டிலமர்ந்து ராசியில் திக்பலத்திற்கு அருகில் சுய சாரத்தில் 8 ஆம் ஸ்தானாதிபதியும் தன் அதிஎதிரியுமான சனி பார்வை பெற்று தன் அதிநற்பு கிரகமான 3, 12 ஆம் ஸ்தானாதிபதி புதனுடன் பாதகஸ்தானமான 11ஆம் வீட்டில் அமர்ந்து தசை நடத்தியதால் மாரகத்திற்கு நிகரான மன அமைதியின்மையை தந்தார். ஆயுள் கண்டமில்லாமல் நோய் குணமடைய காரணம் குரு பாக்கியஸ்தனாதிபதியாகி உச்சதிக்பலம் பெற்று லக்கினதிலமர்ந்து வலுப்படுத்தி 8 ஆம் ஸ்தானாதிபதியும் ஆயுள் காரகனுமான சனியை 9 ஆம் பார்வையில் வைத்திருப்பது. பாவகர்தாரி யோகத்தில் சந்திரன் இருந்தாலும் அவர் வளர்பிறையாகி 8 ஆம் வீட்டை பார்க்கிறார்.
வணக்கம் ஐயா🙏
ReplyDelete1. கடக இலக்கினம், சிம்ம இராசி ஜாதகம்.
2. ஜாதகர் சூரிய திசையில் மன அமைதி இன்றி இருந்தமைக்கு காரணம் பாதக ஸ்தானத்தில் சூரியன், மூன்றாமிட அதிபதி புதன் அமர்ந்திருப்பது. மூன்றாமிட அதிபதி புதனுடன் கூடிய சூரியனை அஷ்டமாதியும் பகையுமான சனி பார்ப்பது ஆகியவை ஆகும்.
3. அடுத்த வந்த லக்னாதிபதி மற்றும் மனோகாரகன் சந்திரன் திசையில் நலம் பெற்றார்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.