Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கார்த்திகை நட்சத்திரக்காரர். அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? க்ளூ வேண்டுமா? அவருக்கு அப்போது குரு மகா திசையில் சுக்கிரபுத்தி நடந்து கொண்டிருந்தது
ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்
சரியான விடை 22-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஒருவர் சொந்த வீடு பாக்கியம் அனுபவிக்க வேண்டு மென்றால் சுக ஸ்தானாதிபதி பலமுடன் இருக்க வேண்டும். சுகங்களை கொடுக்ககூடிய அசுர குரு பலமுடன் இருக்க வேண்டும். சுக ஸ்தானாதிபதியும், களத்திரகாரகனும், பூமி காரகனும் மறைந்து போக கூடாது, நீசம் அடைய கூடாது, கூடா நட்பு கொண்டிருக்க கூடாது. அது போன்ற அமைப்பு இருந்தால் ஒருவருக்கு வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
ReplyDeleteஒருவருடைய ஜனன ஜாதகத்தில் நாலாம் அதிபன், களத்திரகாரகன், பூமி காரகன் இவர்கள் வலுவுடன் இருந்து, பகை, நீசம், மறைவிடங்களில் இல்லாமல் இருந்தால் அவர்களில் யார் வலுவுடன் இருந்து திசை அல்லது புத்தியை நடத்துகிறார்களோ அவர்களுடைய காலத்தில் ஒருவருக்கு வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகம் அமையும்.
யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது சொந்தமாக வீடு கட்டும் யோகம் கிட்டும். ஜோதிடத்தில் சுக்கிரனை கட்டிடக்காரகன் என்றும், 4வது வீட்டை கட்டிட ஸ்தானம் என்றும் கூறுவர். பொதுவாக 4ஆம் அதிபதியின் தசை, புக்தி அல்லது சுக்கிரன் வலுவாக இருந்து அதன் தசை, புக்தி நடக்கும் காலகட்டங்கள் மற்றும் யோகாதிபதி, ஜீவாதிபதி, லக்னாதிபதியின் தசா புக்திகள் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதி, வருமானம் கிட்டும்.
இதுமட்டுமின்றி பூமிக்காரகன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது. பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
ஜாதகரின் நான்காம் வீட்டில் நீச சுக்கிரன் // நான்காம் வீட்டில் நீச சுக்கிரன் எட்டாம் இடத்து அதிபதியுடன் // செவ்வாய் 6ம் இடத்து அதிபதி // நான்காம் இடத்து அதிபதி 4க்கு விரைய ஸ்தானமான 3ல் // லக்கினாதிபதி பாபகர்தரியோகத்தில் சூரியனோடு கூட்டு //
ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு இதுவே காரணம்
SANTHANAM SALEM
வணக்கம்
ReplyDeleteஜாதகரின் வீடு வாங்க போகாமல் போனதற்கான காரணங்கள்:
1 . ஜாதகர் மிதுன லக்கினம் , ரிஷப ராசி . புதன் லக்கின அதிபதி.
வீடு மற்றும் வாகனம் போன்ற சுகம் சம்பந்தப்பட்ட திற்கு லக்கினத்தில் இருந்து நான்காம் வீட்டை பார்க்க வேண்டும்.
2 . ஜாதகரின் நான்காம் வீட்டின் அதிபதி புதன் , நான்காம் வீட்டிலிருந்து பனிரெண்டில் மறைந்து மூன்றாம் வீட்டில் உள்ளார். மேலும் நான்காம் வீட்டில் அமர்ந்த ராசி அதிபதி சுக்கிரனும் நீசம் பெற்று உள்ளார். அவர் சனியுடன் கூட்டணி பெற்று நீசமாக உள்ளார். பொதுவாக நீசம் பெற்ற தசை மற்றும் புக்தி பலன்களை தராது.
3 மேலும் நான்காம் வீட்டின் மீது எந்த வித சுப கிரகங்களின் பார்வையும் இல்லை. பாக்கிய ஸ்தான அதிபதி அதாவது ஒன்பதாம் வீட்டு அதிபதி சனியுடன் சுக்கிரன் கூட்டணி போட்டாலும் , குரு பதினொன்றில் அமர்ந்து , நான்காம் வீட்டிற்க்கு , ஆறு மற்றும் எட்டில் உள்ளார். பொதுவாக ஆறு மற்றும் எட்டில் ( நான்காம் வீட்டில் இருந்து ) அமர்ந்த அமைப்பு பலன்களை தராது.
4 . ஜாதகருக்கு அதனால் தான் குரு தசை சுக்கிர புக்தி யில் வீடு வாங்கும் அமைப்பு உண்டாகவில்லை. ஜாதகருக்கு குரு தசை நடந்தாலும் குரு லக்கின அதிபதி புதனுக்கு, சுப கிரகமல்ல. மேலும் நான்காம் வீடு குரு மற்றும் சுக்கிரனுக்கு ஆறு மற்றும் எட்டு அமைப்பில் அமர்ந்ததால் வீடு வாங்கும் பாக்கியம் , அமையவில்லை
நன்றி
இப்படிக்கு
சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Dear Sir,
ReplyDeleteThe given horoscope person could not buy house because of the following points.
1. 4th house is for to buy house. 4th lord is in 3rd. i.e. 12th place to 4th. its loss.
2. 12th lord sukran is in 4th. i.e. loss to the 4th place.
3. 8th lord sani is in 4th. i.e. loss to the 4th.
4. Lagna is aspected by 8th lord sani.
5. Lagna lord as well as 4th lord is join with sani in navamsa also.
6. Present Guru dasa sukra buthi, sukran is neecham and also 12th lord.
7. 2nd place is ruling finances, material value and comfort. But kethu sitting in this place is disturbing.
Because of these above reasons, the native could not buy house. But there is a chance to get after completion of sukra buthi.
Thanking you,
Yours sincerely,
C. Jeevanantham.
வாத்தியார்க்கு வணக்கம் .
ReplyDeleteமிதுன லக்கினம் ,லக்கினத்துக்கு பாதகாதிபதி தசை ,சுக்கிர புத்தி காலம் ..லகினத்துக்கு 4-இல் வீடு மனை ,வாகனம் குறிக்கும் இடம் ,இதில் சுக்கிரன் காரகம் வீடு ,வாகனம் ,என்பதால் சுக்கிரன் நீச்சம் பெற்று சனி உடன் உள்ளார் ,பொதுவாக லகினத்துக்கு 4-இல் சனி இருப்பின் அகதி வாழ்கை என்று பொருள் .லகினதுக்கு 8-அம அதிபதி 4-இல் இருப்பதால் ஜாதகர் க்கு யோகம் இல்லை ,அதேபோல் சுபர் பார்வை ஏதும் 4-அம வீட்டின் மீதி இல்லை. 4-க்கு உடையவன் 3-இல் சூரியன் உடன் சேர்க்கை ,கேடு கொடுக்கும் கேது லஹீனத்துக்கு 2-இல் தன சாதனம் இல் உள்ளார் ,இதுவும் ஒரு காரணம் என்று எடுத்து கொள்ளலாம் .
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
வணக்கம், கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் குரு, சுக்கிரன் 6,8 அமைப்பில் இருப்பதே காரணம்.
ReplyDeleteஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete௧.லக்னதிபதி வெற்றி சுத்தமான மூன்றில் பூத ஆதித்ய யோகத்துடன் உள்ளார்
2 .ஆயினும் நாலாம் இடத்திற்கு 1 /12 நிலை
3 ..காரகன் செய்வாய் தசநாதன் குருவிற்கு எட்டாம் இடத்தில
4 . சுகக்காரகன் சுக்கிரனும் தசநாதன் குருவிற்கு
ஆறாம் இடத்தில ஆகவே வீடு வாங்க வாய்ப்பில்லை
5 அடுத்து வந்த ஒன்பதாம் அதிபதி சனிவீஸ்வரனின் திசையில் நாலில் அமர்த்தந்தால் ஜாதகரின் ஆசை நிறைவேறியிருக்க வாய்ப்புண்டு
நன்றி,
தங்களின் பதிலை ஆவலுடன்
ஜாதகர் 10 செப் 1952 அன்று அதிகாலை 1 மணிக்குப் பிறந்தவர் . பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ReplyDeleteஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகமாக நிற்கின்றனர்.மேலும் குருவும் சுக்கிரனும் இயற்கையி எதிராளிகள். எனவே அவர்களுடைய தசாபுக்தி ஜாதகருக்குப் பயனுள்ளதாக அமையாது.
நாலாம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு 12ல் மறந்தார்.சூரியனால் அஸ்தஙதம் ஆக்கப்பட்டார். சொத்துக்கான காரகன் செவ்வாய் லக்கினத்திற்கு 6ல் மறைவு.
மிதுன லக்கினத்திற்கு குரு பாதகாதிபதி அவர் தசா மிதுனத்திற்கு உதவாது
இக்காரணங்களால் ஜாதகரின் வீடு வாங்கும் முயற்சி பலிக்கவில்லை.
புதிர்: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?"
ReplyDeleteமிதுன லக்கினம், ரிசப ராசி ஜாதகர்.
அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
1) வீடு மற்றும் சுகஸ்தானமான 4ல் சனி மற்றும் விரையாதிபதி சுக்கிரன் அமர்ந்துள்ளனர்.
2) அதன் அதிபதி புதன் 4க்கு 12ல் அதாவது சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார்.
3) 44 வயதில் அவருக்கு நடந்த தசா, புக்தி நாதர்களான குருவும், சுக்கிரனும் 6,8 முறைப்படி அமர்ந்து அவரின் வீட்டு ஆசையில் மண் விழ வைத்தனர்.
4) 4மிடத்திற்கும், வீடு, நிலம் போன்றவைக்கு காரணமான செவ்வாய் கிரகத்திற்கும் சுப கிரகங்களின் பார்வையுமில்லை.
மேற்கண்ட காரணங்கள் மற்றும் ஜாதக நிலவரங்களை வைத்து பார்க்கும் போது இந்த ஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறாமல் போனதற்கு வீட்டிலுள்ள பெண்களே காரணமாக இருப்பார்கள்.