மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.12.16

ஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்?

ஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்?

ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்கவேண்டிய அவசியமாகிறது

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், தான் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ராஜசுய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். யாகத்துக்கு உண்டான திரவியங்களை மற்ற அரசர்கள் தர வேண்டும். அத்துடன் தருமருக்கு அடிமை எனும் வகையில் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தருமருடன் போர் புரிய வேண்டும். தோற்றால், தோற்றவன் தருமருக்கு அடிமை. எனவே அவனது திரவியங்கள் தருமரை சேரும். வென்றால் வென்றவன் சுதந்திரமாக தருமருக்கு நட்பு அரசனாக இருக்கலாம். அவன் தருமருக்கு திரவியங்களை தர வேண்டியதில்லை. அந்த வகையில் தருமருக்கு ஏகப்பட்ட திரவியங்கள் சேர்ந்து விட்டன. இனி யாகம் செய்யவேண்டியதுதான் பாக்கி.

தனது தம்பியும் ஜோதிடக்கலை வல்லுனருமாகிய சகாதேவரை அழைத்து யாகத்துக்கான நல்ல நாள் குறிக்க சொன்னார். நல்ல நாளும் குறிக்கப்பட்டது. யாகத்துக்கு தலைமை தாங்க ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வந்தார். யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால் அதனால் கிடைத்த பலன் என்ன? தருமர் சக்ரவர்த்தி ஆனாரா? இல்லையே. தருமர், தன் தாயார் மற்றும் குடும்பத்தாரோடு, உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி காட்டில் அலைய நேர்ந்தது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உத்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

உத்தவரின் கேள்வி::::::::::::::::::::::::::" ஐயனே, உலகித்தில் மிகச்சிறந்த ஜோதிடக்கலை வல்லுனராகிய சகாதேவர், நாள் குறித்தாரே! அந்த நாள் குறையுடையதா? சகாதேவர் ஜோதிடக்கலைக்கு துரோகம் செய்துவிட்டாரா? நீங்கள் தலைமை தாங்கினீரே! அவர்களுக்கு நீங்கள் அருள் புரியாமல் விட்டு விட்டீர்களா? எதனால் இப்படி நடந்தது?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பதில்::::::::::::::::::::::::::::::: நாளும் சுபகரமானதே. என் அருளும் குறைவிலாததே. ஆனால் ராஜசுய யாகம் என்ற நல்ல காரியத்துக்கு, தருமர் திரட்டிய திரவியங்கள் பாப சம்பந்தப்பட்டவை.. போரில் அனேகம் பேர் இறந்தனர். பல அரசர்கள் வேதனையுடன் திரவியங்களை தந்தனர். இப்படி பாவப்பட்ட வழியில் கிடைத்த திரவியங்களை கொண்டு என்னதான் நல்ல நாள் பார்த்து { இது ஜோதிடர் தவறல்ல }, நல்ல காரியம் செய்தாலும், அது உடனே பலனளிக்காது. அதற்கென்று பலன் உண்டு அது தாமதமாக கிடைக்கும். என் அருளும் அப்படித்தான்

இப்படிப்பட்ட காரணங்களால், யாகத்தின் பலனும் என் அருளும் 14 ஆண்டுகள் தாமதமாக கிடைத்தன.

உத்தவரின் கேள்வி ஐயனே, மிகச்சிறந்த ஜோதிடரான சகாதேவருக்கு, தருமர் காடு போவார் என்று முன்னமே தெரியாதா?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இது சகாதேவன் { ஜோதிடர் } செய்த தவறு. அண்ணன் நாள் பார்க்க சொன்னான். யாகத்துக்குண்டான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சகாதேவன், எப்படியும் யாகம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தில், நாள் குறித்தான். அவன் , அண்ணனுக்கு தம்பியாக இருந்து நாள் குறித்தானே தவிர, ஜாதகருக்கு ஒரு ஜோதிடராக இருந்து செயல்படவில்லை. செயல்பட்டிருந்தால், தருமனுக்கு தற்போது சக்ரவர்த்தி ஆகும் யோகம் உள்ளதா? என ஆராய்ந்திருப்பான்.

ஆகவே ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்கவேண்டிய அவசியமாகிறது. இந்த பொறுப்பு, ஜாதகருக்கும், ஜோதிடருக்கும் உண்டு. அதே போல் மிக நுணுகி ஆராய்ந்து நல்ல நாள் பார்த்தாலும், அதிலும் ஒரு குறை ஏற்படுகிறது என்றால் அது ஜோதிடர் தவறு இல்லை என்பதை மேற்கண்ட பாரத நிகழ்வின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ஜோதிடராக இருந்தாலும்கூட நம்மை அறியாமல் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒரு ஜோதிடர் ஜாதகம் பார்க்கும் வேளையில், தனது மகிழ்ச்சி, துன்பம், போண்ட மன உணர்வுகளுக்கு இடம் தராமல் இருக்க வேண்டும். வந்திருக்கும் ஜாதகர் உறவினரா? நண்பரா? ஏழையா? பணக்காரரா? மேதையா? பேதையா? என்ற பேதங்களுக்கும் இடம் தராமல் நடுவு நிலையுடன் இருந்து ஜோதிட பலன் உரைக்க வேண்டும்.
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. It is very interesting and clears many doubts related to Astrology

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    ஜோதிட விதிப்படி ஜோதிடர் பலன் சொல்வதென்றால் அவர் எந்த நிலையில் இருந்து சொல்ல வேண்டும் என்பதை கிருஷ்ண பரமாத்மா சான்றுடன் உத்தவர்க்கு விளக்கம் கொடுப்பதைப் படிக்கும் போது ஜோதிடத்தின் உன்னதம் விளங்குகிறது!
    தன்னை ழுழுமையான பக்தியுடன் யார் தொழுகிறார்களோ அவர்களைக் கைவிடமாட்டேன் அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்பதையும் விளக்குகிறார்!
    ஜோதிடக்கலையின் சூட்சுமங்கள் தெரிந்திருப்பதோடு இறைவுணர்வுடன்
    செயல்படவேண்டும் பலன் சொல்லுங்கால் என்பது தெளிவாகிறது!
    நல்ல பகிர்வுக்கு நன்றி வாத்தியாரையா

    ReplyDelete
  3. விதி வலியது . எது நடக்க வேண்டுமோ அதை விதி நடத்தி கொண்டு போய் விடும்.

    ReplyDelete
  4. /////Blogger Prasanna Venkatesh said...
    அருமை .....////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. //////Blogger நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    It is very interesting and clears many doubts related to Astrology/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    very nice Sir.////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஜோதிட விதிப்படி ஜோதிடர் பலன் சொல்வதென்றால் அவர் எந்த நிலையில் இருந்து சொல்ல வேண்டும் என்பதை கிருஷ்ண பரமாத்மா சான்றுடன் உத்தவர்க்கு விளக்கம் கொடுப்பதைப் படிக்கும் போது ஜோதிடத்தின் உன்னதம் விளங்குகிறது!
    தன்னை ழுழுமையான பக்தியுடன் யார் தொழுகிறார்களோ அவர்களைக் கைவிடமாட்டேன் அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்பதையும் விளக்குகிறார்!
    ஜோதிடக்கலையின் சூட்சுமங்கள் தெரிந்திருப்பதோடு இறைவுணர்வுடன்
    செயல்படவேண்டும் பலன் சொல்லுங்கால் என்பது தெளிவாகிறது!
    நல்ல பகிர்வுக்கு நன்றி வாத்தியாரையா/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  8. /////Blogger C Jeevanantham said...
    விதி வலியது . எது நடக்க வேண்டுமோ அதை விதி நடத்தி கொண்டு போய் விடும்.//////

    ஆமாம். வள்ளுவரே சொல்லியிருக்கிறார். விதியைவிட வலியது எதுவுமில்லை!

    ReplyDelete
  9. சோதிடர்கள் அனைவரும் தாம் இயற்கையின் கருவி என்பதை உணர்ந்து பலன் கூறினால் அனைவருக்கும் சரியான வழி கிடைக்கும்.மிக நல்ல பதிவு.நன்றி.

    ReplyDelete
  10. ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடியாது(குறுகிய காலத்தில்) அல்லது குறிப்பிட்ட தகுதி இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை. சிறந்த ஞானிகளால் கூட அதிகபட்சமாக 1/8 (12.5%) மட்டுமே உலக நடப்புகளின் காரணத்தை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிற்க்கு. சித்தர்களின் பாடல்களை போல ஜோதிடத்தை அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியாது. நடக்கப்போவதை சொல்வதென்பது தேவ இரகசியத்தை சொல்வதை போன்றது. பல வருடங்கள் படித்தால் கூட தகுந்த குருயின்றி சூட்சமத்தை கற்றுக்கொள்ள முடியாது.
    அடிப்படை படங்களை அனைவரும் முயற்சி செய்தால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஜோதிட விதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. எந்த நேரத்தில் எந்த விதியே எந்த வரிசையில் எடுத்துக்கொள்வது என்பதில்தான் ரகசியமே இருக்கிறது. எந்த திசை/புத்தி நன்மை/தீமை செய்யும் என்பதை சரியாக அறித்துகொள்வதும் எளிதானதல்ல.
    இலக்கண சுபர்,பாபர், இயற்கையான சுபர்,பாபர், கிரகங்களின் இட அமர்வு,கூட்டணி, யோகம், அஸ்தமனம்,உச்சம்,நீச்சம்,பகை,சுபர் பார்வைக்கான பலன், இலக்கண சபர்/பார்வைக்கான பலன்,அஷ்ட்ட வர்க பலன், இவைகள் எல்லாம் சேர்த்து எந்த வரிசையில் பலன் சொல்வது ஏனெனில் ஒவ்வொன்றும் வேறுபட்ட பலன்களை உடையது.
    வாத்தியாரின் 700 க்கும் மேற்ப்பட்ட படங்களை படித்தாலும் எல்லாவற்றையும் ஒருங்கித்து நியாபகபடுத்துவதும் எளிதல்ல... அடிப்படை பாடங்களை புரிந்துகொள்ளலாம். மனதை ஒருநிலைபடுத்தி படித்தால் மட்டுமே சூட்சமத்தை புரிந்துகொள்ள முடியும். உ.தா 100 பாடங்களை படித்தால்தான் குழந்தை ஜாதகம் 12 வயது வரை வேலை செய்யாது, 12 வயதிற்குமேல் 7 லரை வந்தால் படிப்பு தடைபடும் etc...
    இலக்குணத்தை வைத்து குணத்தை சொல்லலாம் ஆனால் உயரம், நிறம், வாழ்வில் அடையப்போகும் உயர்வு இவற்றை தெளிவாக எவரும் விளக்கியதாக தெரியவில்லை.
    இவற்றை தவிற பஞ்சாங்க பலன், திதி, கரணம்,கிழமை,யோகம் , நட்சத்திர பலன்களும் உள்ளன.

    பஞ்ச பட்சிகளின் பலன்களும் முக்கியமாக தோன்றுகிறது.

    வாத்தியாரின் பாடங்கள், ஆனந் அவரகளின் பாடங்கள்(தற்போது வலைதலத்தில் காணவில்லை) sanjay rath ன் crux of vedic astrology, நரசிம்மராவ் ன் vedic astrology போன்றவற்றை படித்தால் ஓரளவிற்கு புரிந்துகொள்ளலாம்.

    ஆனால் நடைமுறை ஜோதிடர்கள் படிக்க தெரியாதவர்கள் கூட மன கணக்காக திசை, புத்திகளை எளிதில் கணக்கிடுவதும் பலன்களை அசத்தலாக சொல்லுவதும் பார்க்க முடிகிறது.
    சிலரிடம் விவாதம் செய்தால் அவர்கள் சொல்கிறார்கள் ஜோதிடத்தை முழுமையாக சொல்ல மாந்ரீகமும் தெரிய வேண்டும் என்கிறாற்கள்.
    அஷ்ட்டமா சித்திகளில் சிலவற்றை கற்றுக்கொண்டு மந்திரம்,மை போன்றவற்றை கொண்டு சித்து வேலைகளை செய்வோரும் அதிக அளவில் இருக்கிறார்கள்.

    நடக்கப்போவதை சொன்னால் அது சொல்பவர்களை பாதிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
    இலை மரக்காய்யாக மட்டுமே சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.
    மந்திரங்கள், அஷ்ட்டமா சித்திகள் இவற்றை பற்றி திருமந்திர விளக்கங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    மக்கள் தொண்டு செய்து, சாத்வீக குணத்தை வளர்த்துக்கொண்டு பக்தி யோகம், கிரியா யோகம்,கர்ம யோகம்,ஞான யோகம் இவற்றை செய்தால் குண்டலினி சக்தின் மூலம் சித்தர்களின் நிலையை அடையலாம் இறைவனது தரிசனத்தையும் பெறலாம்.

    ஆனால் இது மிக மிக கடினமானது.
    தவறானவர்கள் செய்தால் அவர்களையே அழித்துவிடும்.

    ReplyDelete
  11. /////Blogger kannan Malola said...
    சோதிடர்கள் அனைவரும் தாம் இயற்கையின் கருவி என்பதை உணர்ந்து பலன் கூறினால் அனைவருக்கும் சரியான வழி கிடைக்கும்.மிக நல்ல பதிவு.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger jayakumar M said...
    ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடியாது(குறுகிய காலத்தில்) அல்லது குறிப்பிட்ட தகுதி இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை. சிறந்த ஞானிகளால் கூட அதிகபட்சமாக 1/8 (12.5%) மட்டுமே உலக நடப்புகளின் காரணத்தை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிற்கு. சித்தர்களின் பாடல்களை போல ஜோதிடத்தை அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியாது. நடக்கப்போவதை சொல்வதென்பது தேவ இரகசியத்தை சொல்வதை போன்றது. பல வருடங்கள் படித்தால் கூட தகுந்த குருயின்றி சூட்சமத்தை கற்றுக்கொள்ள முடியாது.
    அடிப்படை படங்களை அனைவரும் முயற்சி செய்தால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஜோதிட விதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. எந்த நேரத்தில் எந்த விதியே எந்த வரிசையில் எடுத்துக்கொள்வது என்பதில்தான் ரகசியமே இருக்கிறது. எந்த திசை/புத்தி நன்மை/தீமை செய்யும் என்பதை சரியாக அறித்துகொள்வதும் எளிதானதல்ல.
    இலக்கண சுபர்,பாபர், இயற்கையான சுபர்,பாபர், கிரகங்களின் இட அமர்வு,கூட்டணி, யோகம், அஸ்தமனம்,உச்சம்,நீச்சம்,பகை,சுபர் பார்வைக்கான பலன், இலக்கண சபர்/பார்வைக்கான பலன்,அஷ்ட்ட வர்க பலன், இவைகள் எல்லாம் சேர்த்து எந்த வரிசையில் பலன் சொல்வது ஏனெனில் ஒவ்வொன்றும் வேறுபட்ட பலன்களை உடையது.
    வாத்தியாரின் 700 க்கும் மேற்ப்பட்ட படங்களை படித்தாலும் எல்லாவற்றையும் ஒருங்கித்து நியாபகபடுத்துவதும் எளிதல்ல... அடிப்படை பாடங்களை புரிந்துகொள்ளலாம். மனதை ஒருநிலைபடுத்தி படித்தால் மட்டுமே சூட்சமத்தை புரிந்துகொள்ள முடியும். உ.தா 100 பாடங்களை படித்தால்தான் குழந்தை ஜாதகம் 12 வயது வரை வேலை செய்யாது, 12 வயதிற்குமேல் 7 லரை வந்தால் படிப்பு தடைபடும் etc...
    இலக்குணத்தை வைத்து குணத்தை சொல்லலாம் ஆனால் உயரம், நிறம், வாழ்வில் அடையப்போகும் உயர்வு இவற்றை தெளிவாக எவரும் விளக்கியதாக தெரியவில்லை.
    இவற்றை தவிர பஞ்சாங்க பலன், திதி, கரணம்,கிழமை,யோகம் , நட்சத்திர பலன்களும் உள்ளன.
    பஞ்ச பட்சிகளின் பலன்களும் முக்கியமாக தோன்றுகிறது.
    வாத்தியாரின் பாடங்கள், ஆனந் அவரகளின் பாடங்கள்(தற்போது வலைதலத்தில் காணவில்லை) sanjay rath ன் crux of vedic astrology, நரசிம்மராவ் ன் vedic astrology போன்றவற்றை படித்தால் ஓரளவிற்கு புரிந்துகொள்ளலாம்.
    ஆனால் நடைமுறை ஜோதிடர்கள் படிக்க தெரியாதவர்கள் கூட மன கணக்காக திசை, புத்திகளை எளிதில் கணக்கிடுவதும் பலன்களை அசத்தலாக சொல்லுவதும் பார்க்க முடிகிறது.
    சிலரிடம் விவாதம் செய்தால் அவர்கள் சொல்கிறார்கள் ஜோதிடத்தை முழுமையாக சொல்ல மாந்ரீகமும் தெரிய வேண்டும் என்கிறார்கள்.
    அஷ்ட்டமா சித்திகளில் சிலவற்றை கற்றுக்கொண்டு மந்திரம்,மை போன்றவற்றை கொண்டு சித்து வேலைகளை செய்வோரும் அதிக அளவில் இருக்கிறார்கள்.
    நடக்கப்போவதை சொன்னால் அது சொல்பவர்களை பாதிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
    இலை மரக்காய்யாக மட்டுமே சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.
    மந்திரங்கள், அஷ்ட்டமா சித்திகள் இவற்றை பற்றி திருமந்திர விளக்கங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
    மக்கள் தொண்டு செய்து, சாத்வீக குணத்தை வளர்த்துக்கொண்டு பக்தி யோகம், கிரியா யோகம்,கர்ம யோகம்,ஞான யோகம் இவற்றை செய்தால் குண்டலினி சக்தின் மூலம் சித்தர்களின் நிலையை அடையலாம் இறைவனது தரிசனத்தையும் பெறலாம்.
    ஆனால் இது மிக மிக கடினமானது.
    தவறானவர்கள் செய்தால் அவர்களையே அழித்துவிடும்.///////

    உங்களின் விரிவான கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. Ayya vanakkam Very interesrting and enlightening sir

    ReplyDelete
  14. ////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam Very interesrting and enlightening sir//////

    நல்லது. நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com