மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.12.16

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..?

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..? 

இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.

உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.

மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.

இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.

அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.

வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.

இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.

பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.
-----------------------------------------
படித்தேன்;பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. உயர் திரு ஐயா,

    காலை வணக்கம், உலகத்தின் முதல் திருத்தலத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. சிவன் அருள் கிடைத்தால் இத்திருத்தலத்திற்கு சென்று வர விருப்பம். ஆறுமுகனையும் வணங்கிட வாய்ப்பு கிடைக்கும்.

    அன்புடன்,

    விசுவநாதன் N

    ReplyDelete
  2. உயர் திரு ஐயா,

    காலை வணக்கம், உலகத்தின் முதல் திருத்தலத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. சிவன் அருள் கிடைத்தால் இத்திருத்தலத்திற்கு சென்று வர விருப்பம். ஆறுமுகனையும் வணங்கிட வாய்ப்பு கிடைக்கும்.

    அன்புடன்,

    விசுவநாதன் N

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    ஒம் நமசிவாய நமா ஒம்
    இனிய தகவல் நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,கருவறை முதல் பிரகாரம் வரை ஈசனின் சிறப்பையும்,குமரக்கடவுளின் அழகையும் காணொளிபோல் கண்டு மகிழ்ந்தோம்.நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பதிவு. மரகத நடராஜர் இருக்கும் தலம். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் காட்சிதரும் நடராஜர். மற்றைய நாட்களில் சந்தன‌க்காப்புடன் இருப்பார்.அன்று ஒரு நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு நமக்கு பச்சைக் கல்லாகக் காட்சி அளிப்பார். பல ஊர்களில் இருந்த மரகத லிங்கங்கள் களவாடப்பட்டுவிட்டன.உத்தரச கோசமங்கை நடராஜர் தப்பிப் பிழைத்து இருப்பதே பெரிய அதிசயம்தான்.

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    ஆச்சர்யமான ஆனால் அதிசய தகவல்கள்! எங்களை எப்படிப்பட்ட விதத்திலும் இக்கோயில் அதிசயத்தைக் காண ஏதுவாக எல்லா தகவல்களும் உள்ளன.குறிப்பிட்டு ஒரே நாளில் 3 வேளையும் தரிசன சிறப்பு செல்லச் சொல்லி வற்புறுத்துகிறது.
    நன்றி!

    ReplyDelete
  7. ////Blogger Visvanathan N said...
    உயர் திரு ஐயா,
    காலை வணக்கம், உலகத்தின் முதல் திருத்தலத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. சிவன் அருள் கிடைத்தால் இத்திருத்தலத்திற்கு சென்று வர விருப்பம். ஆறுமுகனையும் வணங்கிட வாய்ப்பு கிடைக்கும்.
    அன்புடன்,
    விசுவநாதன் N/////

    அதெல்லாம் கிடைக்கும்.ஒருமுறை சென்று இறைவனை தரிசித்து வாருங்கள்!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    sooper////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. ////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    ஒம் நமசிவாய நமா ஒம்
    இனிய தகவல் நன்றி
    மூர்த்தி////

    நல்லது. நன்றி நண்பரே!~

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கருவறை முதல் பிரகாரம் வரை ஈசனின் சிறப்பையும்,குமரக்கடவுளின் அழகையும் காணொளிபோல் கண்டு மகிழ்ந்தோம்.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    அருமையான பதிவு. மரகத நடராஜர் இருக்கும் தலம். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் காட்சிதரும் நடராஜர். மற்றைய நாட்களில் சந்தன‌க்காப்புடன் இருப்பார்.அன்று ஒரு நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு நமக்கு பச்சைக் கல்லாகக் காட்சி அளிப்பார். பல ஊர்களில் இருந்த மரகத லிங்கங்கள் களவாடப்பட்டுவிட்டன.உத்தரச கோசமங்கை நடராஜர் தப்பிப் பிழைத்து இருப்பதே பெரிய அதிசயம்தான்.////

    உண்மைதான். உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆச்சர்யமான ஆனால் அதிசய தகவல்கள்! எங்களை எப்படிப்பட்ட விதத்திலும் இக்கோயில் அதிசயத்தைக் காண ஏதுவாக எல்லா தகவல்களும் உள்ளன.குறிப்பிட்டு ஒரே நாளில் 3 வேளையும் தரிசன சிறப்பு செல்லச் சொல்லி வற்புறுத்துகிறது.
    நன்றி!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com