மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.12.16

ஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்!

ஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்!

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை என்ற நூலில் இருந்து!

1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
           குரு சொல்லும் வசனம்

2.தள்ள வேண்டியது எது ?
             வீண் செயல்

3.குரு யார் ?
       உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .

4.மிகவும் இனியது எது ?
        தருமம்

5.எவன் சுத்தம் உள்ளவன் ?
       மனச்சுத்தம் உள்ளவன் .

6.எவன் பண்டிதன் ?
         விவேகி .

7.எது நஞ்சு ?
      குரு மொழியை அலட்சியம் செய்தல்

8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
     தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .

9.எதிரி யார் ?
    முயற்சி இல்லாச் சோம்பல் .

10.முழுக் குருடன் யார் ?
     ஆசை வலைப்பட்டவன் .

11.சூரன் யார் ?
     பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .

12.செவிக்கு அமுதம் எது ?
     சாதுவின் உபதேசம் .

13.பெருமை எதனால் ?
      எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .

14.தாழ்வு எது ?
      தாழ்ந்தவனிடம் யாசிப்பது .

15.எது வாழ்வு ?
    குற்றமின்மை .

16.எது மடமை ?
   கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .

17.நரகம் எது ?
    பிறர் வசம் இருப்பது .

18.செய்யத்தக்கது எது ?
   உயிருக்கு இனிமை .

19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
     அகம்பாவம் .

20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
        மறைவில் செய்த பாவம் .

21.முயற்சி எதன் பால் ?
       கல்வி ,ஈகை ,நல்ல மருந்து --இவற்றின் பால் .

22.எதிலிருந்து விலகுவது ?
   தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .

23.விருப்புடன் எதைச் செய்வது ?
    தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .

24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
    ,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .

25.சாது யார் ?
    ஒழுக்கமுள்ளவன் .
    தீய  நடத்தை இல்லாதவன்.

26.உலகை வெல்பவன் யார் ?
     உண்மையும் பொறுமையும் கொண்டவன் .

27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
     உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .

28.குருடன் யார் ?
     காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .

29.செவிடன் யார் ?
      நல்லுரை கேளாதவன் .

30.ஊமை யார் ?
  தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .

31.ஈகை எது ?
  கேளாது கொடுத்தல் .

32.நண்பன் யார் ?
   தீமை புகாது தடுப்பவன் .

33.கவனமாக வாழ்வது எப்படி ?
    இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடியவை உடையவன் செல்வன் ஆவான்.

34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
     இயல்பாகவே அடக்கமுடையவரை .

35-உலகம் யாருக்கு வசப்படும் ?
     தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .

36.விபத்து யாரைத் தீண்டாது ?
    அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .

37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
      சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி --இரண்டும் உடையவரை .

38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
     அந்தணர் ,குரு ,தேவர் ---இவர்களை தூற்றித் திரிபவரை .

39.கவலை இல்லாதவன் யார் ?
     பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .

40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை  எவை ?
     கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .

41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
     கருமித்தனம் .

42.பெரிய தீட்டு எது ?
      கடன் தொல்லை .

43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
     தானும் மனத்துயர் இன்றி, பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .

44.நம்பத்தகாதவன் யார் ?
     சதா பொய் சொல்லுபவன் .

45.பொய் எப்போது தீதில்லை ?
     தருமப் பாதுகாப்பின் போது .

46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
    ஆரோக்கியம் .

47.யார் தூய்மையானவன் ?
     எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .

48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
       இளமை ,செல்வம் ,ஆயுள் .

49.சாதிக்க வேண்டியது எது ?
   என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .

50.துக்கம் இல்லாதவன் யார் /
     கோபம் இல்லாதவன் .

51.அந்தணன் உபாசிப்பது எவரை /
     காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .

52.இவற்றில் உள்ளது என்ன ?
     சுத்த சிவ தத்துவம் .

53.யார் பிரத்தியட்ச தேவதை ?
     மாதா .

54.பூஜ்ய குரு யார் ?
     தந்தை .

55.சர்வதேவதாத்மா யார் ?
     வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்டவன்.

56.எதனால் குலம் அழியும் ?
      சாது ஜனங்களை புண்படுத்துவதால் .

57.யார் வாக்கு பலிக்கும் ?
     சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு.

-----------------------------------------
படித்தேன், பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் ஐயா,இந்த பொன்மொழிகளை எல்லாம் ஆரம்ப பள்ளியிலேயே பாடமாக வைத்து,ஒவ்வொரு மாணவனும் குறந்தபட்சம்,கடைபிடிக்ககூடிய அல்லது விலக்க வேண்டிய இரண்டு தத்துவங்களையாவது நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களா என கண்டறிந்து இன்டர்னல் மார்க் கொடுக்க வேண்டும்.ஆரம்பத்திலே மதிப்பெண்ணுக்காக கடைபிடித்தாலும் உயர்நி்லைப் பள்ளியை விட்டு வரும்போது அதனால் கிடைக்கும் பெருமையும்,மகிழ்வும் கடைசிவரை வழிதவற விடாது.நன்றி.

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Thank you, Sir./////

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இந்த பொன்மொழிகளை எல்லாம் ஆரம்ப பள்ளியிலேயே பாடமாக வைத்து,ஒவ்வொரு மாணவனும் குறந்தபட்சம்,கடைபிடிக்ககூடிய அல்லது விலக்க வேண்டிய இரண்டு தத்துவங்களையாவது நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களா என கண்டறிந்து இன்டர்னல் மார்க் கொடுக்க வேண்டும்.ஆரம்பத்திலே மதிப்பெண்ணுக்காக கடைபிடித்தாலும் உயர்நி்லைப் பள்ளியை விட்டு வரும்போது அதனால் கிடைக்கும் பெருமையும்,மகிழ்வும் கடைசிவரை வழிதவற விடாது.நன்றி./////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  4. Respected sir,


    Thank you very much for your bringing awareness about the principles of Adhi Snakarar. It is very useful for our day to day life. Yesterday I was out of station, I read your message but I could not write comments. That is why today I am giving writing sir.


    kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  5. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you very much for your bringing awareness about the principles of Adhi Snakarar. It is very useful for our day to day life. Yesterday I was out of station, I read your message but I could not write comments. That is why today I am giving writing sir.
    kind regards,
    Visvanathan N/////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com