மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல, கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


1. ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாத்கம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்த அவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டு பக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதி என்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28 comments:

  1. வணக்கம் குருவே!
    அப்பப்பா, எப்படிப்பட்ட கொடுமையான விதி!?
    அலசல் சரியான பார்வை தான்,!

    ReplyDelete
  2. கேமதுருமா யோகம்...

    படிக்கும் போதே கண்ண கட்டுதே ....


    நல்ல பதிவு..

    ReplyDelete
  3. Respected sir,

    Good Morning Sir. Kemaduruma yogam is the new name for me. Because, I am not fully aware of all lessons. Anyhow, by studying your analysis I came to know the importance of Kemaduruma Yogam. Thank you for your analysis and detailed noting on this yogam.

    Kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அப்பப்பா, எப்படிப்பட்ட கொடுமையான விதி!?
    அலசல் சரியான பார்வை தான்,!/////

    உண்மைதான். உங்களின் புரிதலுக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  5. /////Blogger Prasanna Venkatesh said...
    கேமதுருமா யோகம்...
    படிக்கும் போதே கண்ண கட்டுதே ....
    நல்ல பதிவு../////

    கண்ணைக் கட்ட விடாதீர்கள். பாடங்களைப் பாடங்களாகப் பாருங்கள். மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good Morning Sir. Kemaduruma yogam is the new name for me. Because, I am not fully aware of all lessons. Anyhow, by studying your analysis I came to know the importance of Kemaduruma Yogam. Thank you for your analysis and detailed noting on this yogam.
    Kind regards,
    Visvanathan N/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்
    அவயோகம் பாடம் அருமை
    கண்ணன்

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,மேலோட்டமாக பார்த்தால்,லக்னாதிபதி லக்னத்தில்,11ம் அதிபதியும் லக்னத்தில்,பாக்யாதிபதி மற்றும் யோக்காரனும் லக்னத்தில்.7,8ம்அதிபதி பரிவர்த்தனை.ஆனால் உங்கள் அலசலை பார்க்கும் போதுதான் ஜாதகம் எவ்வளவு பலகீனம் என புரிந்தது.பூர்வ புண்ணியத்தில் 12ம் அதிபதி அமர்ந்த்தும் ஒரு மைனஸா?.ஜாதகர் வசதியான குடும்பத்தில் பிறந்தவரா? என்று தெரிந்தால் ஆய்வுக்கு பயன்படுமே.நன்றி.

    ReplyDelete
  9. கேமதுருமா யோகம் - சந்திரனின் இருபக்கமும் எந்த கிரகமும் இல்லாத நிலை என்று கூறியுள்ளீர்கள். இந்த ஆட்டத்தில் ராகு கேது உண்டா? சந்திரன் வர்கோத்தமம் பெற்று சொந்த பரல் 5 இருந்தாலும் இந்த அவயோகம் இருக்குமா? குரு 5க்கும் உரியவர். அந்த வகையில் ஒரு நன்மையும் செய்யமாட்டாரா? லக்நதபதி லக்கினத்தில் குருவின் பார்வையுடன் இதற்கும் சலுகை கிடையாதா?

    ReplyDelete
  10. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    அவயோகம் பாடம் அருமை
    கண்ணன்////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger Pal said...
    Nandri Sir/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மேலோட்டமாக பார்த்தால்,லக்னாதிபதி லக்னத்தில்,11ம் அதிபதியும் லக்னத்தில்,பாக்யாதிபதி மற்றும் யோக்காரனும் லக்னத்தில்.7,8ம்அதிபதி பரிவர்த்தனை.ஆனால் உங்கள் அலசலை பார்க்கும் போதுதான் ஜாதகம் எவ்வளவு பலகீனம் என புரிந்தது.பூர்வ புண்ணியத்தில் 12ம் அதிபதி அமர்ந்த்தும் ஒரு மைனஸா?.ஜாதகர் வசதியான குடும்பத்தில் பிறந்தவரா? என்று தெரிந்தால் ஆய்வுக்கு பயன்படுமே.நன்றி./////

    ஜாதகர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றால் இத்தனை கஷ்டங்கள் ஏது சாமி?

    ReplyDelete
  13. /////Blogger VM. Soosai Antony said...
    கேமதுருமா யோகம் - சந்திரனின் இருபக்கமும் எந்த கிரகமும் இல்லாத நிலை என்று கூறியுள்ளீர்கள். இந்த ஆட்டத்தில் ராகு கேது உண்டா? சந்திரன் வர்கோத்தமம் பெற்று சொந்த பரல் 5 இருந்தாலும் இந்த அவயோகம் இருக்குமா? குரு 5க்கும் உரியவர். அந்த வகையில் ஒரு நன்மையும் செய்யமாட்டாரா? லக்நதபதி லக்கினத்தில் குருவின் பார்வையுடன் இதற்கும் சலுகை கிடையாதா?/////

    ராகு & கேதுவிற்கு ஆட்டத்தில் இடம் உண்டு. உங்கள் சொந்த ஜாதத்தை வைத்து இதுபோன்ற உதிரியான கேள்விகள் கேட்டால் பலன் சொல்வது தவறு. முழு ஜாதகத்தையும் அலசித்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  14. வணக்கம் குருவே,
    குரு 5க்கும் உரியவர். அந்த வகையில் ஒரு நன்மையும் செய்யமாட்டாரா? லக்நதபதி லக்கினத்தில் குருவின் பார்வையுடன் இதற்கும் சலுகை கிடையாதா? குருவே இது சொந்த ஜாதக கேள்வி அல்லவே? மேலோட்டமாக பார்த்தால் அருமையான ஜாதகம் போன்று தெரிகிறது.
    நன்றி.

    ReplyDelete
  15. Dear Sir,
    Some time back, you had announced for Horoscope analysis for a good cause. I have sent mails. No response from you. Still I am interested. Any luck for me.
    Thanks in Advance,
    Bala

    ReplyDelete
  16. Ayya vanakam....thangaladhu alasal arumai...

    Guru 5kum uriyavar adharkana palan edhum kidayadha...

    ReplyDelete
  17. Sir
    Why ascendant lord in his own house and first and ninth lord conjunction in lagna did not help?? Only sun would have helped to run the life..please clarify..

    ReplyDelete
  18. என்னையும் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன்...
    எனக்கும் இது போல்தான் இருக்குமோ..:)

    ReplyDelete
  19. Sir for Simma lagnam guru is 5&8th lord will give both good and bad.also sun is ruling. Can u clarify this doubt. Thanks

    ReplyDelete
  20. /////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் குருவே,
    குரு 5க்கும் உரியவர். அந்த வகையில் ஒரு நன்மையும் செய்யமாட்டாரா? லக்னாதிபதி லக்கினத்தில் குருவின் பார்வையுடன் இதற்கும் சலுகை கிடையாதா? குருவே இது சொந்த ஜாதக கேள்வி அல்லவே? மேலோட்டமாக பார்த்தால் அருமையான ஜாதகம் போன்று தெரிகிறது.
    நன்றி./////

    எட்டுக்குரிய குரு சனியுடன் பரிவர்த்தனையாகி வலிமையுடன் இருக்கிறார். ஆகவே அவர் நன்மை செய்யவில்லை! மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா ஜாதகமுமே நல்லதாகத்தான் தெரியும். எல்லா ஜாதகத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்! அதனால்தான் அனைவருக்கும் 337 பரல்கள்! அதை மனதில் வையுங்கள்!

    ReplyDelete
  21. //////Blogger Bala's Blog said...
    Dear Sir,
    Some time back, you had announced for Horoscope analysis for a good cause. I have sent mails. No response from you. Still I am interested. Any luck for me.
    Thanks in Advance,
    Bala/////

    என் உடல் நிலை காரணமாகவும், வேலைப் பளு காரணமாகவும், தற்சமயம், தனிப்பட்டவர்களின் ஜாதகங்களை எல்லாம் அலசி, ஆராய்ந்து பதில் சொல்ல நேரமில்லை. பொறுத்திருங்கள். ஜனவரியில் பார்க்கலாம்!

    ReplyDelete
  22. /////Blogger mohan raj said...
    Ayya vanakam....thangaladhu alasal arumai...
    Guru 5kum uriyavar adharkana palan edhum kidayadha...//////

    ஏன் இல்லை? அவர்தான் ஐந்தாம் இடத்திற்கும் உரியவர் என்பதால் தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுத்தார்!

    ReplyDelete
  23. /////Blogger kmr.krishnan said...
    Good analysis Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  24. /////Blogger Ashok said...
    Sir
    Why ascendant lord in his own house and first and ninth lord conjunction in lagna did not help?? Only sun would have helped to run the life..please clarify../////

    கிரக யுத்தக் கணக்கில் அது வரும். நன்றி!

    ReplyDelete
  25. //////Blogger பரிவை சே.குமார் said...
    என்னையும் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன்...
    எனக்கும் இது போல்தான் இருக்குமோ..:)////////

    இருக்கலாம்! இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உதவுவார்! நன்றி!

    ReplyDelete
  26. /////Blogger kannan Malola said...
    Sir for Simma lagnam guru is 5&8th lord will give both good and bad.also sun is ruling. Can u clarify this doubt. Thanks//////

    அவர்களுடைய தசா புத்திகளில் உதவுவார்கள். உதவியிருப்பார்கள். அச்சமயத்தில் ஜாதகர் மீண்டு வந்திருப்பார். அதையெல்லாம் (மொத்த பலா பல்ன்களையும்) நாம் அலசவில்லையே! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com