மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.2.16

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் 
படம் பெரிதாகத் தெரியும். 
பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்
-----------------------------------------------------------------------
நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?

1.சூரியன்; 
 சூரியனார்  கோவில்;
இங்கு வந்து  முதலில்  நவக்கிரகங்களுக்கு அருள்  புரிந்த  திருமங்கலங்குடி  ஸ்ரீ பிராண  நாதேஸ்வரரை  வழிபட்டு   பின்பு  சூரியனார்  கோவில்  சென்று   கருவறையில்  சூரிய  சக்கரம்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  சூரியனை  வழிபடுவதாலும்  இங்குள்ள  நவக்கிரகங்கள்  வழிபடுவதாலும்  அனைத்து  தோஷங்களும்  நீங்கப்  பெறுவர்.  ஞாயிறு  வழிபாடு  சிறப்பு.
வழித் தடம்; கும்பகோணம்-  மயிலாடுதுறை  சாலையில்  ஆடுதுறையிலிருந்து  2 கி.மீ.   தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர்  அருகிலுள்ள  திருவலஞ்சுழியில்   உள்ள  சுபர்தீஸ்வரர்  கோவிலில்   சூரியன்,  சனி  ஆகிய  இரண்டு  கிரகங்களும்  நேருக்கு நேர்  உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.   இங்கு  இருவரும்  நட்பு  நிலையில்  இருப்பதாக  சொல்கிறார்கள்   சூரியன்  மற்றும்  சனி   பகவானால்  ஜாதகத்தில்   தோஷம்  உள்ளவர்கள்  இத்திருக்கோவில்  சென்று  அர்ச்சனை  செய்தால்  தோஷம்   நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு  சாபம்  நீக்கி  அருள்  தந்த  சுந்தரேசர்  சன்னதி.  சூரிய,  சனி  தோஷங்களை  நீக்கும்  ஸ்தலம்.
வழித் தடம்; குன்றக்குடி  கிழக்கே 12 கி.மீ.  தொலைவில்  உள்ளது.

2. சந்திரன்; 
திங்களுர்;
தாய்க்குப்பீடை  நோய்,  மன நிலை  பாதிப்பு,  சந்திரன் ஜாதகத்தில்  நீசம்,  மறைவு,  பாப  கிரக  சேர்க்கை  உள்ளவர்  இங்குள்ள   கைலாச  நாதர்  கோவிலில்  உள்ள   சந்திரனை  வழிபடுவதால்  தோச  நிவர்த்தியாகும்.
வழித் தடம் ;  கும்பகோணம்-  திருவையாறு  சாலையில்  உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன்  கோவில்;
ஜாதகத்தில்  செவ்வாய்  பாதிப்பு,   திருமணத்தடை,  தொழில்  சிக்கல்,   வீடு,  மனை  வாங்க,  அடிக்கடி  விபத்து  போன்றவை  ஏற்பட்டாலும்,  செவ்வாய்  தெசை  நடைபெறும்   காலங்களிலும்   இங்கு  தனி  சன்னதியில்   உள்ள   செவ்வாய்க்கு  தீபம்  ஏற்றி  தரிசனம்  செய்ய   எத்தகைய  கடுமையான  செவ்வாய்   தோசமும்  நீங்கும்
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து  14 கி.மீ.  தூரத்தில்  உள்ளது
பழநி-  திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை  மதியம்  உச்சிகால  பூஜையில் முருகனுக்குப்  பால்   அபிசேகம்  செய்து  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்; திண்டுக்கல்லிருந்து   சுமார்  60 கி.மீ.  தூரத்திலுள்ள  பழனியில்  அடிவாரத்திலுள்ள  கோவில்.

4.  புதன்; 
திருவெண்காடு;
குழந்தைகளுக்கு  கல்வியில்  ஆர்வமின்மை,  தடங்கல்கள் ஏற்படும் போது  இங்குள்ள   புதன்  வழிபட்ட  ஸ்ரீ  ஸ்வேதா  ரண்யேஸ்வரரையும்   தரிசித்து  பின்பு  அங்கு  எழுந்தருளியுள்ள  புதனையும்  வழிபட்டால்  தோசங்கள்  நீங்கும்.
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து    பூம்புகார்  சாலையிலுள்ளது.

5.குரு;  
 ஆலங்குடி;     திருமணத்தடை,  புத்ர  தோஷம்,  குடும்ப ஒற்றுமை  நிம்மதி  குறைவு,  ஜாதகத்தில்  குரு  தோஷம்  உள்ளவர்  வியாழக்கிழமை  இங்குள்ள  குரு  பகவானை  நெய் தீபம்  ஏற்றி,  வழிபடுவது  சிறந்த  பரிகாரமாகும்.
வழித் தடம்; கும்பகோணம்-  மன்னார்குடி  சாலையில்  உள்ளது.
தென்குடி  திட்டை;   அருள் மிகு  வசிஷ்டேஸ்வரர்  திருக்கோயிலில்  சுவாமிக்கும்,  அம்பாளுக்கும்  இடையில்  ராஜ  குருவாக   நின்ற  கோலத்தில்  தனி  சந்நிதியில்   அருள்  பாலித்து   வருகிறார்.  எனவே,  இத்தலமே   குரு  பரிகாரம்  செய்வதற்கு   சிறந்த   தலம்  என்பது  பெரியோர்  கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்-  திருக்காவூர்  சாலையில்  பள்ளி   அக்ஹாரம்  வழியாக  மெலட்டூர்  செல்லும்   பாதையில்  உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள   சிவன்  கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தி  பாதத்தில்   சுற்றிலும்   ஒன்பது  நவகிரகங்கள்   உள்ளன.  இவரை  வழிபட்டால்  குரு   எந்த  ராசிக்கு  மாறினாலும்   நற்பலன்  கிடைக்கும்.
வழித் தடம்; ராஜபாளையம்  அருகிலுள்ள   வாசுதேவ-  நல்லூரிலிருந்து  பேருந்து வசதி  உண்டு.

6.  சுக்கிரன்; 
கஞ்சனூர்;
சுக்கிர  தோஷம்,  பலஹீன,  உள்ளவர்   இங்குள்ள   மூலவர்  சுக்ரீஸ்வரரை   சுக்கிர பகவானாக்  கருதி  வழிபட்டால்  தோஷம்  நீங்கும்.
வழித் தடம் சூரியனார் கோவிலுக்கு  அருகில்  உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள   பார்கவீஸ்வரரை  வழிபட  சுக்கிர   தோஷம்  நீங்கும். சுக்கிர  தெசை   பாதிப்புக்கும்  உரிய  ஸ்தலம்.
வழித் தடம்; விழுப்புரம்-  உளுந்தூர்  பேட்டை  சாலையில்  உள்ளது.

7.  சனி 
திருநள்ளாறு;
ஜாதகப்படி  7 1\2 சனி, அஷ்டம  சனி,  அர்த்தாஷடம் சனி  ஏற்படும்  காலங்களில்   இங்குள்ள  நள  தீர்த்தத்தில்   நீராடி  தர்ப்பாரண்யேஸ்வரரையும்  போக  மார்த்த  அம்மனையும்  வழிபட்ட   பிறகு   சனீஸ்வரர்  சன்னதி  சென்று  எள்  தீபம்  ஏற்றி  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  30 கி.மீ.  தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2  சனி,  அஷ்டம சனி,  அர்த்தாஷடம  சனி ,  கண்டச்சனி  ஆரம்பிக்கும் பொழுது  இங்கு  சுயம்புவாய்  எழுந்தருளியுள்ள  சனீஸ்வர  பகவானை  சனிக்கிழமை   எள் தீபம்  ஏற்றி  வழிபட  வேண்டும்.  சனி  பகவானின்  பிரம்ம  ஹத்தி தோசம்  நீங்கிய  ஸ்தலம்.
வழித் தடம்;
தேனி  மாவட்டம்  சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி  நடைபெறும்  காலங்களிலும்சனி  தெசை, சனி புத்தி  நடைபெறும்   காலங்களிலும்  இங்குள்ள  தத்தகிரி  முருகன்  கோவிலில்  உள்ள  சனீஸ்வரரை   சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.
வழித் தடம்; சேலம்,  நாமக்கல்  அருகில்  கொல்லிமலை  செல்லும்  வழியில்  12 கி.மீ.  தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்; சனி  பாதிப்புள்ள்வர்  இங்குள்ள  சனீஸ்வரனை  சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.  சனி, ஈஸ்வரனைப்  பிடிக்க முயன்று,  கால்  முடமாகி,  கால்  சரியாக   ஈஸ்வரனை  நோக்கி   தவமிருந்த  இடம்.
வழித் தடம்; மதுரை  மேலூர்  சாலையில் உள்ளது.
ஸ்ரீ  வை குண்டம்; மனிதனின்   மன  நிம்மதியை  நிர்ணயிப்பவர்  சனி  பகவான்.  அவரவர்  செய்யும்   வினையைப்  பொறுத்து  நல்லதையும்  கெட்டதையும்  தருவார்.  சனிபகவானின்   அம்சத்துடன்  சிவ பெருமான்  இத்தலத்தில்  காட்சி  தருகிறார்.
 இத்தலத்தில்  சனி  திசையால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்   பரிகாரம்  செய்தால்  தடைபட்ட  திருமணங்கள்  நடக்கும்,  இழந்த  சொத்துக்களை  மீண்டும்  பெறலாம்.
திருநள்ளாறு  சனீஸ்வரன்  திருக்கோவிலுக்கு  ஈடானது  இக்கோவில்
வழித் தடம்; திரு நெல்வேலியிலிருந்து  திருச்செந்தூர்  செல்லும்  சாலையில்  1 கி.மீ.  தூரத்தில்   அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர்  தனது  இரு  மனைவிகள்  மந்தா  தேவி.  ஜேஷ்டா  தேவி  ஆகியோருடன்  இவ்வாலயத்தில்  அருள்   பாலிக்கிறார்.  மூலவருக்கு   இல்லாத   கொடி மரம்  இங்கே  சனீஸ்வரருக்கு  உண்டு.  பலிபீடமும்,   காகவாகனமும்  கொண்ட்து  சனீஸ்வரரின்  தனிச்சிறப்பு.
தம்பதி  சமேதராய்  மட்டுமல்ல,  இவ்வாலயத்தில்  சனீஸ்வரர்  தனது   இரு  மகன்களுடன்  [குளிகன்,  மாந்தி]  குடும்ப   சமேதராய்  அருள்  புரிகிறார்.
வழித் தடம்; கும்பகோணத்துக்கு  அருகே  நாச்சியார்  கோவிலுக்கு   பக்கத்தில்  திருநாரையூர் உள்ளது.

8. ராகு 
திருநாகேஸ்வரம்;
ராகுவினால்  ஏற்படும்  அனைத்து   தோசங்களினால்   திருமணத்தடை,   புத்ர தோசம்,  மாங்கல்ய  தோசம்  ஏற்படும்..   இங்கு  வெள்ளிக்கிழமை   காலை  10.30 மணி  முதல்   12 மணி,  ஞாயிறு   மாலை  4.30  மணி முதல்  6 மணி  வரை   ராகுவிற்கு   பாலாபிசேகம்,  அர்ச்சனை  செய்து  வழிபட  நாக  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன்  அவதாரமான  ஸ்ரீ மத் ராமானுஜர்  எழுந்தருளியுள்ள  இத்தலம்  சென்று   நெய்  தீபம்  ஏற்றி,   ஸ்ரீ மத்  ராமானுஜரையும்,  ஸ்ரீ  ஆதி  கேசவப்  பெருமாள்  ஸ்ரீ  யதிராஜ  நாதவல்லித்  தாயாரையும்  திருவாதிரை  நட்சத்திரம்  வரும்  நாளில்  வழிபட   நாக  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப   தோஷம்  பரிகார  தோசம்.
வழித் தடம்; செங்கல்பட்டுக்கு  அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை  முன் பக்கம் பார்ப்பதற்கு  பெண்  உருவமாகவும் பின்பக்கம்  பார்ப்பதற்கு  நாகம்  படம்  எடுத்த்து  போன்றும்  தோன்றும்.  கம்பர்  வழிபட்ட  ஸ்தலம்.  ராகு,  கேது  தோசம்,  கால  சர்ப்ப  தோசம்  உள்ளவர்  துர்க்கைக்கு  அபிசேகம்  செய்து  வழிபட  கிரக  தோசம்  நீங்கும்.  இத்துர்க்கை  ல்லித   சகஸ்ர  நாமத்தில்  வரும்  வித்யா   வன  துர்க்கையாகும்.
வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை  சாலையில்  குத்தாலத்திலிருந்து  3 கி.மீ.  தூரம்

9.கேது;
திருக்காளத்தி;
பஞ்ச  லிங்கங்களில்  வாயு  லிங்கம்  உள்ள  இடம்.  கண்ணப்பனுக்கு  காட்சி   தந்த   ஸ்தலம்.  இங்குள்ள   காளத்தீஸ்வரருக்கு  ருத்ரா பிசேகம்  செய்து  அர்ச்சனை  செய்ய  கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப தோச  பரிகார  ஸ்தலம்.
வழித் தடம்; திருப்பதிக்கும்  சென்னைக்கும்  நடுவில்  உள்ளது.
கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள  நாகநாத சாமி   கோவிலில்  தனி   சன்னதியில் உள்ள  கேதுவை  வழிபட   கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;மயிலாடுதுறை- பூம்புகார்  சாலையில்   பூம்புகாரிலிருந்து  3 கி.மீ.  தூரத்திலுள்ளது.

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. ஐயா, வணக்கம்.தகவல்களை புக்மார்க் செய்து வைத்துள்ளேன். பாக்கியம் கிடைக்கும்போது பார்த்து வரலாமென்று.நன்றி.

    ReplyDelete
  2. குரு வந்தனம்.
    பயனுள்ள பதிவு. ஆண்டவன் அநுக்ரஹத்தை அடி மனதில் ஆழ்ந்து வேண்டுகிறேன், இவ்விடங்களுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்ய! முயற்சியும் செய்வேன் என் பங்கிற்கு! வழி விடுவது அவன்பாடு!
    பகிர்வுக்கு நன்றி, வாத்தியாரே!

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    நலமறிய ஆவல்.
    குரு பகவன் பரிகார ஸ்தலத்தில் *தாருகாபுரம்* எங்கள் ஊராகிய சங்கரன்கோவிலுக்கு மிக அருகே [8km] உள்ளது அடிகடி பேருந்துகள் சிற்றுந்துகள் உள்ளன ..

    சிவராத்ரிக்கு பஞ்ச ஸ்தல யாத்ரையில்

    ப்ரித்வி ,சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி .

    அப்பு [நீர் ] தாருகாபுரம் ..

    தேயு [நெருப்பு ]கரிவலம் வந்த நல்லூர் .

    .வாயு .தென்மலை சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் கலிங்க பட்டி விலக்கு தாண்டி சுமார் 5 km மேற்கே உள்ளது ...

    ஆகயம் ,,தேவதானம் ...ராஜபாளையம் --தென்காசி செல்லும் சாலையில் ..மேற்கே சுமார் 5 km தூரத்தில் உள்ளது.

    இந்த 5 ஸ்தலங்களையும் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை மக்கள் அருகில் உள்ள அனைத்து மக்களும் சிவராத்திரி இரவு வழிபாடு செய்வார்கள்

    நவக்ரக பரிகாரஸ்தலங்களை பட்டியலிட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம். நன்றாக உள்ளது. படித்ததை நினைவு படுத்தினதற்க்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அய்யா இனிய காலை வணக்கம்!!!

    நம்மை ஆட்டி படைக்கும் நவக்கிரக ஸ்தல கோவில்களின் வழிகாட்டி வரைபடத்துடன் எந்தெந்த பிரச்னைக்கு எந்த ஆலயத்தை நாடி செல்ல வேண்டும் என்று விளக்கமாக கூறியுளீர்கள் . வாழ்த்துக்கள்

    நம் மாணவ மணிகள் அவர்களுடைய குறிப்பு புத்தகத்தில் வைத்து கொண்டால் மட்டுமே மட்டுமே நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் .அந்த பழக்கத்தை வளர்த்து கொள்வது மிகவும் நல்லது.
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள் ஐயா!

    சூரியனுக்கான தலம் பரிதியப்பர்கோவில் ஆகும். இங்குள்ள சுயம்பு லிங்கத்தினை பங்குனி மாதம் 18,19 20 தேதிகளில் சூரியன் தன் கதிர்களால் வழிபடுவதைக் காணலாம். சூரிய பரிகாரத்தலம் மற்றும் பித்ரு தோஷப் பரிகாரத்தலம்.இக்கோவில் பாடல் பெற்ற பழமையான கோவில். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாட்டுக்கு முன்பாக தஞ்சையில் இருந்து 17வது கிலோமீட்டரில் மேல உளூரில் இறங்கி 2 கி மீ பய‌ணித்தால் இந்த பாஸ்கரேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லலாம்.

    திரு நாரையூர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் ஒன்று உள்ளது. அது வேறு;கும்பகோண‌ம் அருகில் உள்ளது வேறு.சிதம்பரம் அருகில் உள்ளது நமக்கு தேவாரத் திரும‌றைகள் தந்த பொள்ளாப்பிள்ளையார் கோவில் கொண்ட இடமாகும். விநாயகருக்கான அறுபடை வீட்டில் ஆறாவது படைவீடு இது. நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த ஊர்.இந்த ஊரில் வெள்ள நிவாரணம் செய்யும் பாக்கியத்தை சுந்தரேஸ்வரரும் பொள்ளாப்பிள்ளையாரும் அருளினார்கள்.


    ReplyDelete
  7. அருமையான தகவல்கள். 'facts of life' அருமை. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. Vanakkam ayya payanulla thagaval vazhga valamudan

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    ஐயா, வணக்கம்.தகவல்களை புக்மார்க் செய்து வைத்துள்ளேன். பாக்கியம் கிடைக்கும்போது பார்த்து வரலாமென்று.நன்றி.//////

    நல்லது. அப்படியே செய்யுங்கள் நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    பயனுள்ள பதிவு. ஆண்டவன் அநுக்ரஹத்தை அடி மனதில் ஆழ்ந்து வேண்டுகிறேன், இவ்விடங்களுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்ய! முயற்சியும் செய்வேன் என் பங்கிற்கு! வழி விடுவது அவன்பாடு!
    பகிர்வுக்கு நன்றி, வாத்தியாரே!//////

    தேடும் பணம் ஓடிவிடும்
    தெய்வம் விட்டுப் போவதில்லை!
    - கவியரசர் கண்ணதாசன்!

    ReplyDelete
  11. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    நலமறிய ஆவல்.
    குரு பகவன் பரிகார ஸ்தலத்தில் *தாருகாபுரம்* எங்கள் ஊராகிய சங்கரன்கோவிலுக்கு மிக அருகே [8km] உள்ளது அடிக்கடி பேருந்துகள் சிற்றுந்துகள் உள்ளன ..
    சிவராத்ரிக்கு பஞ்ச ஸ்தல யாத்ரையில்
    ப்ரித்வி ,சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி .
    அப்பு [நீர் ] தாருகாபுரம் ..
    தேயு [நெருப்பு ]கரிவலம் வந்த நல்லூர் .
    .வாயு .தென்மலை சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் கலிங்க பட்டி விலக்கு தாண்டி சுமார் 5 km மேற்கே உள்ளது ...
    ஆகயம் ,,தேவதானம் ...ராஜபாளையம் --தென்காசி செல்லும் சாலையில் ..மேற்கே சுமார் 5 km தூரத்தில் உள்ளது.
    இந்த 5 ஸ்தலங்களையும் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை மக்கள் அருகில் உள்ள அனைத்து மக்களும் சிவராத்திரி இரவு வழிபாடு செய்வார்கள்
    நவக்ரக பரிகாரஸ்தலங்களை பட்டியலிட்டமைக்கு மிக்க நன்றி.//////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  12. ////Blogger Subathra Suba said...
    Good collection sir//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  13. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம். நன்றாக உள்ளது. படித்ததை நினைவு படுத்தினதற்கு மிக்க நன்றி./////

    உங்களுக்குத் தெரியாத விஷயம் உண்டா என்ன? இறையருளால் எல்லாவற்றையும் மனதில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள்! உங்கள் பெயரில் இரண்டு அரச கிரகங்களும் குடியிருப்பதால் உங்களுக்கு எல்லாம் வசப்படுகின்றன!

    ReplyDelete
  14. ////Blogger Spalaniappan Palaniappan said...
    அய்யா இனிய காலை வணக்கம்!!!
    நம்மை ஆட்டி படைக்கும் நவக்கிரக ஸ்தல கோவில்களின் வழிகாட்டி வரைபடத்துடன் எந்தெந்த பிரச்னைக்கு எந்த ஆலயத்தை நாடி செல்ல வேண்டும் என்று விளக்கமாக கூறியுளீர்கள் . வாழ்த்துக்கள்
    நம் மாணவ மணிகள் அவர்களுடைய குறிப்பு புத்தகத்தில் வைத்து கொண்டால் மட்டுமே மட்டுமே நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் .அந்த பழக்கத்தை வளர்த்து கொள்வது மிகவும் நல்லது.
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்/////

    பலரும் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள் பழனியப்பன்!

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    அருமையான தகவல்கள் ஐயா!
    சூரியனுக்கான தலம் பரிதியப்பர்கோவில் ஆகும். இங்குள்ள சுயம்பு லிங்கத்தினை பங்குனி மாதம் 18,19 20 தேதிகளில் சூரியன் தன் கதிர்களால் வழிபடுவதைக் காணலாம். சூரிய பரிகாரத்தலம் மற்றும் பித்ரு தோஷப் பரிகாரத்தலம்.இக்கோவில் பாடல் பெற்ற பழமையான கோவில். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாட்டுக்கு முன்பாக தஞ்சையில் இருந்து 17வது கிலோமீட்டரில் மேல உளூரில் இறங்கி 2 கி மீ பய‌ணித்தால் இந்த பாஸ்கரேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லலாம்.
    திரு நாரையூர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் ஒன்று உள்ளது. அது வேறு;கும்பகோண‌ம் அருகில் உள்ளது வேறு.சிதம்பரம் அருகில் உள்ளது நமக்கு தேவாரத் திரும‌றைகள் தந்த பொள்ளாப்பிள்ளையார் கோவில் கொண்ட இடமாகும். விநாயகருக்கான அறுபடை வீட்டில் ஆறாவது படைவீடு இது. நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த ஊர்.இந்த ஊரில் வெள்ள நிவாரணம் செய்யும் பாக்கியத்தை சுந்தரேஸ்வரரும் பொள்ளாப்பிள்ளையாரும் அருளினார்கள்./////

    உங்களுக்கு எல்லா ஊர் தெய்வங்களும் அருளுமே சுவாமி! மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. //////Blogger Mrs Anpalagan N said...
    அருமையான தகவல்கள். 'facts of life' அருமை. நன்றி ஐயா.//////

    'facts of life' ஐ நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறீர்கள். அதற்கு நன்ரி சகோதரி!

    ReplyDelete
  17. //////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya payanulla thagaval vazhga valamudan///

    நல்லது. நன்றி கஜபதி அவர்களே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com