மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.16

நீங்களும் உங்கள் உணவும் !


நீங்களும் உங்கள் உணவும் !

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்.
----------------------------------------------------------
2
கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய  அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப்
பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த
வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க.
அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்  கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்!!!

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா
உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை
நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு  விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப்  போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க
ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....!!
உங்க  அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து
மகனே..!!
.
என் மாமியார் இப்படி எல்லாம் சொல்லி இருப்பாங்களா என்ன!!!
------------------------------------------------------
3
தனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩

💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி
காப்பாற்றிக்கொள்வது ❓

🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨  பிரச்சனைகள் காரணமாக உங்கள் 😡 மனம் மிகவும்
அழுத்தத்துடன் உள்ளது,

👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள்.

👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக "வலி"
ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

👆 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

👉 உங்கள் வீட்டில் இருந்து 🏥 மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

👎 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது

👌 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

👎 துரதிஷ்ட  வசமாக 💔 மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக  துடிக்கிறது..

👆 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

🙌 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக 😲 இரும்ப வேண்டும்,

👌 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் 👃 மூச்சை இழுத்து விட வேண்டும்,

👉 இருமல் மிக  ஆழமானதாக இருக்க வேண்டும்,

💚 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது 🏃 வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

👆 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு  ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

👆 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,👉👈
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

👆 இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

👇 பின்னர் இருதயம் சீரடைந்ததும்,  அருகில் உள்ள 🏥 மருத்துவமனைக்கு செல்லலாம்..

👆 இந்த தகவலை 📝 குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.
-----------------------
படித்ததில் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. அய்யா வணக்கம்,
    நல்ல செய்தி, நன்றி,

    அன்புடன், சா. குமணன்

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Hope all is good. All is well...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. Vanakkam ayya payanula thagavalgal vazhga valamudan

    ReplyDelete
  4. Thanks for sharing valuable information. All posts are excellent

    ReplyDelete
  5. குருவுக்கு வணக்கம்.
    பலே, பலே!பாங்கான பகிர்வுகள்! உள்ளம் பூரிக்கிறது! அத்தனை அழகான தேர்வுகள், பகிர்ந்த மூன்றுமே! சத்தான விஷயங்கள் முத்து முத்தாகத் தரப்பட்டுள்ளன.அத்தனையும் தரம் வாய்ந்தவை.
    நம் அன்றாட உணவில் புளியின் அளவு,சீரகத்தின் சிறப்பு போன்ற சிறப்பான செய்திகள் அடஙகிய முதல் பகிர்வு ஜோர்!
    இரண்டாவதில்,"உன்னை நான் வளர்த்த மாதிரி தான் அவங்க அம்மாவும் அவளை வளர்த்திருக்கா" வரிகள் நெஞ்சைத் தொட்டன. உண்மை அதுதானே? எவ்வளவு பேர் இதை உணர்கிறார்கள்? உணர்ந்து விட்டால் பின் குடும்பத்தில் சண்டையேயில்லையே?!
    மூன்றாம் பகிர்வு மிக முக்கியமானது!
    நமக்குத் தேவையானது!
    எல்லா பகிர்வுக்கும் சேர்த்து ஏராளமான நன்றிகள், ஐயா!

    ReplyDelete
  6. அருமையான பயனுள்ள பதிவு வாத்தியார் அவர்களே!!!

    ReplyDelete
  7. அருமையான பதிவு குருஜி அவர்களே!...1. ”உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.2.எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!3.மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!.4.எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
    காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா. மிகவும் அருமையான வரிகள். பாராட்டுக்கள்...குருஜி...தங்கள் உடல் நலம் பற்றி அறிய வேண்டுகிறேன்.

    அன்புடன்
    வெங்கடேஷ்.சி

    ReplyDelete
  8. ஐயா வணக்கம். மூன்றுமே முத்தான பதிவுகள்.நன்றி.

    ReplyDelete
  9. //////Blogger Kumanan Samidurai said...
    அய்யா வணக்கம்,
    நல்ல செய்தி, நன்றி,
    அன்புடன், சா. குமணன்/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி குமணன்

    ReplyDelete
  10. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hope all is good. All is well...
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  11. /////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya payanula thagavalgal vazhga valamudan////

    நல்லது. நன்றி கஜபதி!

    ReplyDelete
  12. /////Blogger selvaspk said...
    Thanks for sharing valuable information. All posts are excellent////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger வரதராஜன் said...
    குருவுக்கு வணக்கம்.
    பலே, பலே!பாங்கான பகிர்வுகள்! உள்ளம் பூரிக்கிறது! அத்தனை அழகான தேர்வுகள், பகிர்ந்த மூன்றுமே! சத்தான விஷயங்கள் முத்து முத்தாகத் தரப்பட்டுள்ளன.அத்தனையும் தரம் வாய்ந்தவை.
    நம் அன்றாட உணவில் புளியின் அளவு,சீரகத்தின் சிறப்பு போன்ற சிறப்பான செய்திகள் அடஙகிய முதல் பகிர்வு ஜோர்!
    இரண்டாவதில்,"உன்னை நான் வளர்த்த மாதிரி தான் அவங்க அம்மாவும் அவளை வளர்த்திருக்கா" வரிகள் நெஞ்சைத் தொட்டன. உண்மை அதுதானே? எவ்வளவு பேர் இதை உணர்கிறார்கள்? உணர்ந்து விட்டால் பின் குடும்பத்தில் சண்டையேயில்லையே?!
    மூன்றாம் பகிர்வு மிக முக்கியமானது!
    நமக்குத் தேவையானது!
    எல்லா பகிர்வுக்கும் சேர்த்து ஏராளமான நன்றிகள், ஐயா!/////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  14. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான பயனுள்ள பதிவு வாத்தியார் அவர்களே!!!/////

    நல்லது. நன்றி லக்‌ஷ்மிநாராயணன்!!!

    ReplyDelete
  15. //////Blogger C.P. Venkat said...
    அருமையான பதிவு குருஜி அவர்களே!...1. ”உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.2.எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!3.மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!.4.எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
    காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா. மிகவும் அருமையான வரிகள். பாராட்டுக்கள்...குருஜி...தங்கள் உடல் நலம் பற்றி அறிய வேண்டுகிறேன்.
    அன்புடன்
    வெங்கடேஷ்.சி//////

    நல்லது. நன்றி. உடல் நலம் இப்போது பரவாயில்லை!

    ReplyDelete
  16. /////Blogger adithan said...
    ஐயா வணக்கம். மூன்றுமே முத்தான பதிவுகள்.நன்றி.////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com