மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.2.16

தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

தமிழா்கள் அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டியது"

1.தமிழ் வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3).

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

"தமிழ் வருடங்கள்"

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

"அயணங்கள்"

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

"ருதுக்கள்"

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)

3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது
(மார்கழி,தை)

6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

"மாதங்கள்"

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

"பக்ஷங்கள்"

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

"திதிக்கள்"

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

"வாரங்கள்"

வாரங்கள்(நாழ்) ஏழு ஆகும்

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

"நட்சத்திரங்கள்"

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

"கிரகங்கள்"

கிரகங்கள் ஒன்பது ஆகும்.

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

"நவரத்தினங்கள்"

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

"பூதங்கள்"

பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

"மஹா பாதகங்கள்"

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

"பேறுகள்"

பெறுகள் பதினாறு வகைப்படும்

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.

"புராணங்கள்"

புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

"இதிகாசங்கள்"

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Respected sir,

    Happy holy day... I pray for your good health and wealth.

    I know only two ithikasa... I don't know about sivarakasiya...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. ஐயா, வணக்கம். இதிகாசங்களில் சிவரகசியம் கேள்விபட்டதில்லை ஐயா.பின் வரும் பதிவுகளில் நேரமிருந்தால் பதிவிடவும்.நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பல தகவல்களுக்கு நன்றி குருவே. செல்வம்

    ReplyDelete
  4. வணக்கம் குருஜி அவர்களே!. வாத்தியார் நலமுடன் வாழ வாழ்த்துகள். அருமையான தொகுப்பு. பாராட்டுகள்... பல. மேல்நிலை படிப்புக்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டும். குரு காணிக்கை எதெனும் இருக்குமானால் செலுத்த தாயாராக உள்ளேன். தமிழில் உள்ள ஜோதிட மென்பொருளை பெற சுட்டியை கொடுக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. குரு வந்தனம்.
    உண்மை. ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்வது நல்லது.அதேபோல்
    ஜோதிடம் பயிலும் ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை அறிவுமாகும்.
    இதில், நான் படிக்கவேண்டியவை 18 புராணங்களும் மற்றும் சிவ ரகசியம் எனும் இதிகாசமுமாகும். முயற்சி எடுக்கிறேன்.
    பயனுள்ள பதிவுக்கு வாத்தியாருக்கு நன்றி.
    தங்கள் உடல்நலம் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள், ஐயா!

    ReplyDelete
  6. thank you so much for the information. very nicely put together!

    ReplyDelete
  7. மிக சிறப்பான தொகுப்பு . நன்றி
    somasundaram palaniappan muscat

    ReplyDelete
  8. Now only i know siva ragasiya.hw is ur health sir

    ReplyDelete
  9. Hello Sir,

    Good Day,

    Could you please explain about Sivaragasiyam.. first time hearing about it and I was not aware of we have 3 Ithigasam.. please share where we can buy the book or read it online..

    Thank you...
    Regards
    Prakash.K

    ReplyDelete
  10. /////Blogger Sakthi- 2014 said...
    நன்றி அய்யா////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    Very useful. Thank you Sir.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. ////Blogger ravichandran said...
    Respected sir,
    Happy holy day... I pray for your good health and wealth.
    I know only two ithikasa... I don't know about sivarakasiya...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn//////

    சிவரகசியம் பற்றி அடுத்த பின்னூட்டத்திற்கான பதிலிலும் உள்ளது. நன்றி!
    ABOUT SIVA RAGASIYAM
    Sivaragasiyam is a Socio Mytho serial penned by the famous writer Indira Soundar Rajan. The story of Sivaragasiyam revolves around the conflict between the prime devotes of lord Shiva known as 'Siddhas' who live a peaceful and lonely life in the Jungles of 'Bhoomikathanpatti’ and the greedy people who want to exploit the nature for their personal gains. Bhoomikathanpatti village is believed to be safeguarding the whole world, reason being the presence of a rare idol in this village taken care by the “Siddhas”. This idol is made of solid mercury and has several amazing powers. The story turns into a racy mystery with this idol being stolen and posing a threat to the world in various ways. This is a story of faith, belief, science and spirituality. All the religious beliefs are backed by science. It is a gripping tale which instills belief in our ancient traditions, culture and Gods.
    -------------------------------
    யூ டியூப்பில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான சுட்டி: http://www.zeetamizh.com/shows/siva-ragasiyam

    ReplyDelete
  13. ////Blogger adithan said...
    ஐயா, வணக்கம். இதிகாசங்களில் சிவரகசியம் கேள்விபட்டதில்லை ஐயா.பின் வரும் பதிவுகளில் நேரமிருந்தால் பதிவிடவும்.நன்றி./////

    Siva Ragasiyam is a story of faith, belief, science and spirituality.It revolves around an imaginary village called Boomikaathanpatti. Boomikaathanpatti is a wonder village. The village is full of greenery with plenty of rain. The Rasamaneeswarar temple in this village is a wonder. This temple was built up by the Siddhars and the worship is as per their guidance. Most importantly, for hundreds of years, the Siddha Yaaga Pooja is performed at this temple, on full moon days. Nobody can buy land or do any construction in this village, except those who were born here. This tradition is followed for ages. For anything and everything, the villagers seek the blessings and permission of Rasamaneeswarar and then only proceed. Those who overlook this, will be punished.

    Vijayan tries to construct a sugar factory, in this village, using the available natural resources. But because he does not get the permission from Rasamaneeswarar, by violating the conditions and practices, he tries to know the Siddha secrets. What happened to him is on one side! On the other side, one of the villagers Ramanna, who tried to violate the practices, is in jail, following a capital punishment meted out to him in a murder case. His wife believes that Kaakkai Siddhar can save her husband. Kakkai Siddhar is endowed with Ashtama Siddhi. Especially, he is an expert in transporting himself from one body to another. Did he help Ramanna, is another side! On the whole, the secret and adventures of Siddhars in different moulds is what is Siva Ragasiyam.
    உபயம்: விக்கி மஹாராஜா!
    -------------------------------------

    ReplyDelete
  14. Blogger selvam velusamy said...
    நல்ல பல தகவல்களுக்கு நன்றி குருவே. செல்வம்

    நல்லது. நன்றி செல்வம் வேலுச்சாமி!

    ReplyDelete
  15. Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி அவர்களே!. வாத்தியார் நலமுடன் வாழ வாழ்த்துகள். அருமையான தொகுப்பு. பாராட்டுகள்... பல. மேல்நிலை படிப்புக்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டும். குரு காணிக்கை எதெனும் இருக்குமானால் செலுத்த தாயாராக உள்ளேன். தமிழில் உள்ள ஜோதிட மென்பொருளை பெற சுட்டியை கொடுக்க வேண்டுகிறேன்./////

    1.ஜகன்னாத ஹோரா’ என்னும் ஜோதிட மென் பொருள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும். தரவிறக்கம் (download) செய்து வைத்துக்கொள்ளுங்கள்
    2.For advanced lessons, send a mail to: spvrsubbiah@gmail.com

    ReplyDelete
  16. ////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    உண்மை. ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்வது நல்லது.அதேபோல்
    ஜோதிடம் பயிலும் ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை அறிவுமாகும்.
    இதில், நான் படிக்கவேண்டியவை 18 புராணங்களும் மற்றும் சிவ ரகசியம் எனும் இதிகாசமுமாகும். முயற்சி எடுக்கிறேன்.
    பயனுள்ள பதிவுக்கு வாத்தியாருக்கு நன்றி.
    தங்கள் உடல்நலம் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள், ஐயா!/////

    உடல் நலம் அவ்வப்போது பாதிப்பிற்கு உள்ளாகிறது. நீரழிவு நோய். அது மற்ற நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது.கடந்த 3 மாதங்களாக அந்தப் பிரச்சினை சற்று அதிகரித்துள்ளது. பழநியப்பன் அருளாலும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளாலும் அவ்வப்போது சரியாகிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத செலவாக 500 ரூபாய்களுக்கு மாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது முன்னேற்றம். இப்போது மாதம் 3,000 ரூபாய்களுக்கு மருந்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன். காலையில் பத்து மாத்திரைகள். இரவில் படுக்கப் போகும் முன்பு 10 மாத்திரைகள். நான் மகர ராசிக்காரன். குரு பகவான் 8ல் இருந்து கொண்டு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு விடுகிறார். வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு நிலைமை சீராகும்.

    ReplyDelete
  17. /////Blogger bandhu said...
    thank you so much for the information. very nicely put together!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger Spalaniappan Palaniappan said...
    மிக சிறப்பான தொகுப்பு . நன்றி
    somasundaram palaniappan muscat////

    நல்லது. நன்றி பழனியப்பன்.

    ReplyDelete
  19. /////Blogger Subathra Suba said...
    Now only i know siva ragasiya.hw is ur health sir/////

    அடடே உங்களுக்கு சிவரகசியம் பற்றித் தெரியுமா? நல்லது. சகோதரி!
    -----------------------------------
    உடல் நலம் அவ்வப்போது பாதிப்பிற்கு உள்ளாகிறது. நீரழிவு நோய். அது மற்ற நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது கடந்த 3 மாதங்களாக அந்தப் பிரச்சினை சற்று அதிகரித்துள்ளது.. பழநியப்பன் அருளாலும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளாலும் அவ்வப்போது சரியாகிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத செலவாக 500 ரூபாய்களுக்கு மாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது முன்னேற்றம். இப்போது மாதம் 3,000 ரூபாய்களுக்கு மருந்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன். காலையில் பத்து மாத்திரைகள். இரவில் படுக்கப் போகும் முன்பு 10 மாத்திரைகள். நான் மகர ராசிக்காரன். குரு பகவான் 8ல் இருந்து கொண்டு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு விடுகிறார். வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு நிலைமை சீராகும் சகோதரி.

    ReplyDelete
  20. ////Blogger Prakash Kumar said...
    Hello Sir,
    Good Day,
    Could you please explain about Sivaragasiyam.. first time hearing about it and I was not aware of we have 3 Ithigasam.. please share where we can buy the book or read it online..
    Thank you...
    Regards
    Prakash.K/////

    முதல் 2 பின்னூட்டட்ங்களுக்கான பதில்களில் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள் நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com