Joy of giving கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி, ஆனந்தம்!
உழைப்பதிலா அல்லது உழைப்பைப் பெறுவதிலா - எதில் அதிக இன்பம் என்று கேட்டால், உழைப்பதில்தான் அதிக இன்பம்.
அதுபோல கொடுப்பதிலா அல்லது பெறுவதிலா எதில் அதிகமான இன்பம் என்று கேட்டால் கொடுப்பதில்தான் அதிக இன்பம்!
----------------------------------------
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!
--திருமந்திரம் (252வது பாடல்)
ஒரு சொந்தக்காரரையோ அல்லது ஒரு நண்பரையோ சென்று பார்ப்பதற்கு அவர் வீட்டிற்குப் போகும்போது, வெறும் கையை வீசிக்கொண்டு போகாமல், அடையார் ஆனந்தபவன் அல்வா, அல்லது ஒரு கிலோ ஆப்பிள் பழங்கள் அல்லது பிரிட்டானியா மேரி பிஸ்கட்டுகள், குட்டே பிஸ்கட்டுகள் என்று ஏதாவது வாங்கிக் கொண்டுதான் போகிறோம். அதுதான் பண்பாடு. அதுதான் நம் வழக்கம்!
அதுபோல நம்மைப் படைத்த இறைவனைப் பூஜிக்கும்போது பூக்கொண்டு பூஜிக்க வேண்டும். பூ கிடைக்கவில்லையா? பரவாயில்லை. வீட்டில் அல்லது பக்கத்து வீட்டு மரத்தில் இருந்து ஒரு கைப்பிடி பச்சிலைகளைப் பறித்து வைத்து பூஜிக்கலாம். அதுபோல பசுவிற்கு அகத்திரைக்கீரை அல்லது வேறு கீரைகளில் ஒரு கட்டை வாங்கிக் கொடுத்துப் பசுவின் பசிக்கு உதவலாம். அல்லது அருகம்புல் போன்ற பச்சைப்புற்களைக் கொடுத்து உதவலாம். அதுபோல எளியவர்க்கு, இல்லாதவர்களுக்கு, வறுமை உடையவர்களுக்கு ஒரு பட்டை சாதம் கடைகளில் வாங்கிக் கொடுத்து உண்ணும்படி செய்யலாம். மேலும் துன்பத்தில் உழல்பவர்களுக்கு இன்னுரை, இனிய சொற்களைக்கூறி, அவர்களின் துன்பத்தைச் சற்றுப் போக்கலாம். இது ஒவ்வொருவராலும் செய்ய முடிகின்ற அறச் செயல் ஆகும்.
இதைத்தான் மேலே உள்ள திருமந்திரப்பாடல் சுருக்கமாகச் சொல்கிறது!
வறுமை உடையவர்க்கு ஒரு கைப்பிடி சோறிடுதலும் எல்லோரிடமும் இனிய சொற்களைக் கூறுதலும் அவற்றைச் செய்யுங்கள் எனத் திருமந்திரப்பாடல் இயம்புகின்றது. இந்த அறச்செயலைப் பற்றிப் பொய்யாமொழிப் புலவர் தனது குறட்பாவில், ‘இனியவை கூறல்’ அதிகாரத்தில் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு வேண்டிய பொருளினைக் கொடுத்தலினும் அவனைக் கண்டபொழுது முகம் இனியனாய் இனிய சொல்லையும், கூறுவானாயின் நன்று எனக் கூறியுள்ளார்
“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொலி லினிதே அறம்” (குறள் 93)
இதை உங்கள் மொழியில் சொன்னால்: It is the joy of giving கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி!
-----------------------------------------------------------------------
Quotes about giving:
1
“It's not how much we give but how much love we put into giving.”
― Mother Teresa
2
“Happiness doesn't result from what we get, but from what we give.”
― Ben Carson
3
“No one is useless in this world who lightens the burdens of another.”
― Charles Dickens
4
“The earth does not belong to us. We belong to the earth.”
― Chief Seattle, The Chief Seattle's Speech
5
“We make a living by what we get. We make a life by what we give.”
― Winston Churchill
6
“A kind gesture can reach a wound that only compassion can heal.”
― Steve Maraboli, Life, the Truth, and Being Free
7
“You can give without loving, but you cannot love without giving.”
― Amy Carmichael
8
“I slept and I dreamed that life is all joy. I woke and I saw that life is all service. I served and I saw that service is joy.”
― Kahlil Gibran
9
“One must be poor to know the luxury of giving.”
― George Eliot
10
“The bank of love is never bankrupt.”
― Steve Maraboli, Life, the Truth, and Being Free
11
“As we work to create light for others, we naturally light our own way.”
― Mary Anne Radmacher
12
"No one has ever become poor by giving."
--Anne Frank
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
உழைப்பதிலா அல்லது உழைப்பைப் பெறுவதிலா - எதில் அதிக இன்பம் என்று கேட்டால், உழைப்பதில்தான் அதிக இன்பம்.
அதுபோல கொடுப்பதிலா அல்லது பெறுவதிலா எதில் அதிகமான இன்பம் என்று கேட்டால் கொடுப்பதில்தான் அதிக இன்பம்!
----------------------------------------
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!
--திருமந்திரம் (252வது பாடல்)
ஒரு சொந்தக்காரரையோ அல்லது ஒரு நண்பரையோ சென்று பார்ப்பதற்கு அவர் வீட்டிற்குப் போகும்போது, வெறும் கையை வீசிக்கொண்டு போகாமல், அடையார் ஆனந்தபவன் அல்வா, அல்லது ஒரு கிலோ ஆப்பிள் பழங்கள் அல்லது பிரிட்டானியா மேரி பிஸ்கட்டுகள், குட்டே பிஸ்கட்டுகள் என்று ஏதாவது வாங்கிக் கொண்டுதான் போகிறோம். அதுதான் பண்பாடு. அதுதான் நம் வழக்கம்!
அதுபோல நம்மைப் படைத்த இறைவனைப் பூஜிக்கும்போது பூக்கொண்டு பூஜிக்க வேண்டும். பூ கிடைக்கவில்லையா? பரவாயில்லை. வீட்டில் அல்லது பக்கத்து வீட்டு மரத்தில் இருந்து ஒரு கைப்பிடி பச்சிலைகளைப் பறித்து வைத்து பூஜிக்கலாம். அதுபோல பசுவிற்கு அகத்திரைக்கீரை அல்லது வேறு கீரைகளில் ஒரு கட்டை வாங்கிக் கொடுத்துப் பசுவின் பசிக்கு உதவலாம். அல்லது அருகம்புல் போன்ற பச்சைப்புற்களைக் கொடுத்து உதவலாம். அதுபோல எளியவர்க்கு, இல்லாதவர்களுக்கு, வறுமை உடையவர்களுக்கு ஒரு பட்டை சாதம் கடைகளில் வாங்கிக் கொடுத்து உண்ணும்படி செய்யலாம். மேலும் துன்பத்தில் உழல்பவர்களுக்கு இன்னுரை, இனிய சொற்களைக்கூறி, அவர்களின் துன்பத்தைச் சற்றுப் போக்கலாம். இது ஒவ்வொருவராலும் செய்ய முடிகின்ற அறச் செயல் ஆகும்.
இதைத்தான் மேலே உள்ள திருமந்திரப்பாடல் சுருக்கமாகச் சொல்கிறது!
வறுமை உடையவர்க்கு ஒரு கைப்பிடி சோறிடுதலும் எல்லோரிடமும் இனிய சொற்களைக் கூறுதலும் அவற்றைச் செய்யுங்கள் எனத் திருமந்திரப்பாடல் இயம்புகின்றது. இந்த அறச்செயலைப் பற்றிப் பொய்யாமொழிப் புலவர் தனது குறட்பாவில், ‘இனியவை கூறல்’ அதிகாரத்தில் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு வேண்டிய பொருளினைக் கொடுத்தலினும் அவனைக் கண்டபொழுது முகம் இனியனாய் இனிய சொல்லையும், கூறுவானாயின் நன்று எனக் கூறியுள்ளார்
“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொலி லினிதே அறம்” (குறள் 93)
இதை உங்கள் மொழியில் சொன்னால்: It is the joy of giving கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி!
-----------------------------------------------------------------------
Quotes about giving:
1
“It's not how much we give but how much love we put into giving.”
― Mother Teresa
2
“Happiness doesn't result from what we get, but from what we give.”
― Ben Carson
3
“No one is useless in this world who lightens the burdens of another.”
― Charles Dickens
4
“The earth does not belong to us. We belong to the earth.”
― Chief Seattle, The Chief Seattle's Speech
5
“We make a living by what we get. We make a life by what we give.”
― Winston Churchill
6
“A kind gesture can reach a wound that only compassion can heal.”
― Steve Maraboli, Life, the Truth, and Being Free
7
“You can give without loving, but you cannot love without giving.”
― Amy Carmichael
8
“I slept and I dreamed that life is all joy. I woke and I saw that life is all service. I served and I saw that service is joy.”
― Kahlil Gibran
9
“One must be poor to know the luxury of giving.”
― George Eliot
10
“The bank of love is never bankrupt.”
― Steve Maraboli, Life, the Truth, and Being Free
11
“As we work to create light for others, we naturally light our own way.”
― Mary Anne Radmacher
12
"No one has ever become poor by giving."
--Anne Frank
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் .
ReplyDeleteமிக உன்னதமான கருத்து . எனக்கு பிடித்த பாடல். தினமும் கொடுக்கும் எண்ணம் வேண்டும் இண்றைய இளைய தலை முறைகளுக்கு.
வாத்தியார் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன்.
சந்திரசேகரன் சூர்ய நாராயணன்
'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து'
ReplyDeleteஎன்பார் வாசுகியின் கணவர்.
'கொள்வார் இல்லாமையால் கொடுப்பரும் இல்லை மாதோ' என்று கம்பர் சொன்ன சொல் நிறைவேறும் நாள் வரை கொடுப்போம்.
'அரசாங்கம் இலவசங்களைக் கொடுக்கிறதே, நாம் வேறு கொடுக்க வேண்டுமா?'
சரியான கேள்விதான்.ஆனால் அரசாங்கத்தை நடத்தும் கட்சிக்கு 'ஓட்டு' என்ற குறியெதிர்ப்பு, எதிர்பார்ப்பு உள்ளது.நாம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் கொடுப்போம்.
நானும் மனைவியும் நாள்தோறும் காலையில் சப்த்ரிஷீஸ்வரரை, ஸ்ரீமதி அம்பாளைப் பிரதட்சிணம்(+வாக்கிங்) செய்யப் போகிறோம். போகும் போதே கோயிலில் உள்ள பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் வாங்கிச் செல்கிறோம்.வாழைப் பழத்தில் நன்றாக இருப்பதாகத் தேர்வு செய்து கோயில் வாசலில் அமர்ந்துள்ள வயதானவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு ஆளுக்கொன்று கொடுத்து விட்டுச் செல்வோம்.பின்னர் பசுக்களுக்குக் கொடுப்போம்.
காலை உஷத் கால பூஜையில் சுவாமி அம்பாளுக்கு நெய்வேதியம் செய்யப்பட்ட வெண் பொங்கலை அங்குள்ள சிப்பந்திகள் தங்களுக்குண்டான பாகத்தை சிறு தொகை கொடுத்தால் நமக்குத் தருவார்கள்.ஒரு கட்டி இருவருக்கு பசியாற்றும் அளவு பெரியதாக இருக்கும். அதனை வாங்கி கை நீட்டும் அனைவருக்கும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு காட்டாம்ல
வினியோகம் செய்வோம். அந்தப் பகுதியில் உள்ள வறிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் ஆர்வமுடன் வாங்கிச்செல்வார்கள். கோயிலை விட்டு திரும்பும் போது கை நீட்டும் அனைவருக்கும் இல்லை என்னாது கையில் கிடைத்த நாணயங்களை அளிப்போம்.
மதியத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் நோயாளிகள் 10 பேருக்கும், இரண்டு தொழு நோயாளிகளுக்கும் உணவு அளிக்கிறோம்.இது தஞ்சையில் இருந்த போது பெரிய அளவில் செய்து வந்தோம்.இப்போது லால்குடியில் சிறிய அளவில் தொடர்கிறோம்.
திருப்பதியில் நிரந்தர அன்னதானத் திட்டத்திற்கு வைப்பு நிதி கொடுத்துள்ளோம்.
பல தரமான என் ஜி ஓ நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். பல இடங்களில் நிரந்தர வைப்பு நிதி கொடுத்துள்ளோம்.
நம் வகுப்பறை மாணவர்களில் சிலர் நம் பணிகளுக்கு பொருள் உதவி செய்துளார்கள்.துறையூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு ரூ85000/ வரை அளித்து கணினி மையம் திறக்க உதவியதை மறக்கவே முடியாது.
ஏன் இதையெல்லாம் கூறுகிறேன்? சுய தம்பட்டமா? இல்லை நண்பர்களே!
ஐயா கூறும் கொடுப்பதில் இன்பம் என்பதை அனுபவத்தில் உணர்கிறேன் என்பதைக் கூறவே கூறுகின்றேன். இவ்வாறு செய்ய விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்காகவே கூறினேன்.தற்பெருமைக்காக அல்ல.
http://classroom2007.blogspot.in/2012_04_01_archive.html
29 ஏப்ரல் 2012ல் வகுப்பறயில் வெளியான எனது கட்டுரை "எல்லோருக்கு பொதுவானது எது?"என்பதை வாசிக்க வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்! வாழ்க வாத்தியார் ஐயா!
KMRK
kmrk1949@gmail.com
கொடுத்து வாழ்பவர்களுக்கு, இறைவன் மேலும் கொடுத்து மகிழ்கிறான்.
ReplyDeleteகீதையின் ஆசிரியன், 'பத்ரம், புஷ்பம், பலம், தோயம்' ( இலை, மலர், பழம் அல்லது ஒரு ஸ்பூன் நீர் ) இதில் ஏதாவது ஒன்றையேனும் அன்புடன் கொடுத்தாலும் தான் ஏற்றுக் கொள்வதாக உரைத்ததை, திருமூலரும் இந்தப் பாடலில் நன்றாக உணர்த்துகிறார்.
"ஆங்கொரு ஏழைக்குக் கொடுத்தல், இறைவனுக்கே கொடுப்பது போலாம்" என்று தங்களின் மேலான கட்டுரையும் எடுத்துரைக்கிறது.
கொடுக்க சொல்லி வந்த
ReplyDeleteசொடுக்கு நன்று.. ஒரு சேர்க்கை
அடையார் ஆனந்த பவன்
அல்வாவைவிட 500 கிராம் பாதம்தான்
சரி.. ஏனெனில் பலர் இப்போது
சர்க்கரையின் கோர பிடியில் நின்றபடி
சர்க்கரையின் மீது எப்போதுமில்லாத
அக்கறை கொண்டுள்ளனர்..
....
இன்னுரை என்றதினால்
இருப்பவர்கள் இயன்றதை தாராமல்
இன்னுரைகளிலேயே நின்றுவிடுகிறார்கள்
இப்படி தர வேண்டும் என்றதில்
அன்பு சேர வேண்டும் என
அறுதியிட்டு சொல்ல வேண்டும்
இந்த பாடலினை
இங்கு சுழலவிடவா
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
ஆமாம்
ReplyDeleteசிலர் தருவதற்கு காரணம்
சிறு எதிர்பார்ப்பே
எதிர்பார்ப்பில்லாமல்
எந்த காரியமும் இல்லை
ஏழைகள் இருக்க வேண்டும்
என்ற ஆணவத்தில் சிலர் தருவார்
அவர்கள் இருந்தால் தானே
அந்த கொடுக்கும் பெருமை தனக்கு
என சிலரும் இருக்கத்தான் செய்கிறார்
எப்படியோ கொடுக்கிறார்கள் என்பதில்
மகிழ்ச்சி அப்படியேயிருந்தாலும்
மனதார அவர்களையும் பாராட்டுகிறோம்
தயை வேறு/ஈகை வேறு
இதை விளக்க இந்த குட்டி செய்தி
மல்லி சென்டு (உதாரணத்திற்கு) உடலில் அடித்துக் கொள்வது எதற்காக..
நாம் செண்டு அடித்துக் கொண்டுள்ள வாசனை மற்றவருக்கு தெரியவேண்டும் அல்லது நம்மிடமுள்ள துர்நாற்றம் மற்றவருக்கு தெரியக் கூடாது என்பதற்காக தானே
கூட்டங்களுக்கு அல்லது மற்றவர்கள் இல்லாத போது இவர்கள் சென்டு அடித்துக் கொள்வதில்லை..
சரி
மல்லி தோட்டத்திற்கு போவோம்.
யார் வந்தாலும் வராவிட்டாலும் மல்லி
பூத்து மணம் பரப்பும்.. யாரையும் எதிர்பார்க்காது..
மணத்திலும் செயலிலும் இரண்டும் ஒன்று
ஆனால்
நோக்கத்தில் எண்ணத்தில் வேறு..
Good morning sir
ReplyDeleteஅருமை லால் குடி தோழரே
ReplyDeleteஅந்த பட்டியல்கள் மனிதர்களுக்கு
இறைவனுக்கு என தந்தது என்ன
இனி தர இருப்பது என்ன?
அதையும் சொல்லித்தந்தால்
அளவற்ற மகிழ்ச்சி தானே
ஒரு குறிப்பு செய்தி
வாழைப்பழம் பசுமாடுகளுக்கு
ஆரோக்கிய ரீதியாக நல்லதல்ல
என கால்நடை மருத்துவ குறிப்பொன்று சொல்கிறது..
சரி பார்த்து சொ(செ)ல்லவும்
இனி யாராவது கொடுக்க வேண்டும் என
ReplyDeleteஇப்படி நினைத்தால் அவர்களுக்காக..
இந்த செய்தி/தகவல்..
பணம் வாங்குவதே தொழிலாக கொண்டு நாங்கள் இவர்களுக்கு உதவுகிறோம்.. இவர் மருத்துவ செலவுக்கு பணம் தேவை என அங்கெங்கிருந்து தொலைபேசி அழைப்புகள் மின்னஞ்சல்கள் வந்து உங்களை துரத்தும்..
இவற்றுள் "சில" நம்மிடமிருந்து பணம் வாங்குவதற்காகவே தொழிலாக கொண்டு செயல்படுகின்றன.
உள்ளபடி சொன்னால்..
வளமை இருப்பவர்களுக்கு
அடிப்படை தேவைகளுக்கு
வறுமை இருக்காது..
அடிதட்டு மக்கள் இயலாமையை
அடுத்தவர்களுக்கு சொல்லி கை நீட்டி விடுவார்கள்..
அதைவிட இன்றைய நாட்களில்
(அனாதை குழந்தைகளை தத்து எடுப்பது, குடிகார தந்தையின் பிள்ளைகளை எடுத்து வளர்ப்பது, கூலி வேலை செய்பவர்களின் பிள்ளைகளை படிக்க வைப்பது என)
அநேக இடங்களில் பல தொண்டு நிறுவனங்களும் அவைகளுக்கு உதவும் உள்ளங்களும் இருக்கின்றன..
இன்னமும் சில நிறுவனங்கள்
80G வரி விலக்கு வாங்கி வைத்திருப்பதால் தனவந்தர்கள் அல்லது தானம் செய்பவர்கள் இது போன்ற நிறுவனங்களுடன் பேரம் பேசி தான் கொடுகின்ற தொகைக்கு ரசீது பெற்று ஒரு குறிப்பிட்ட தொகையினையும் பணமாக பெற்றுக் கொள்கின்றனர்..
சில தொண்டு நிறுவனங்கள் FCNR கணக்கு வைத்துக் கொண்டு அயல் நாட்டில் உள்ளவர்களிடம் அல்லது அந்நிய அரசாங்கத்திடம் கைநீட்டுகின்றன..
உண்மையில் சிரமப்படுபவர்கள்
நடுவில் இருக்கும் middle class தான்
மற்றவர்களிடம் கேட்கவும் முடியாது
(வெட்கம் மற்றும் சுய கவுரத்தினால்)
புரிந்து கொண்டு உதவுபர்களும் இருக்க மாட்டார்கள்.. அரசாங்கமும் துணைசெய்யாது..
இவர்கள் நிலைதான் பரிதாபத்திற்குரியது
இவர்களுக்கு என்று
தொண்டு நிறுவனமோ
சேவை நிறுவனமோ
உதவும் உள்ளங்களோ இருப்பது இல்லை
அதனால்
மற்றவர்களுக்கு கொடுக்கின்றோம் என்று எல்லோருக்கும் கொடுத்துவிடாமல்
தேவை இருப்பவர்களுக்கு தருகிறோம் என அவர் தேவை அறியாமல் கொடுத்து விடாமல்
அன்புள்ளவர்களுக்கு..
அன்போடு தாருங்கள்..
உதவி வரைத்தன்று உதவி
என வள்ளுவம் சொன்னது போல்
பாத்திரமறிந்து பிட்ஷையிடு என
முன்னோர் சொன்னது போல்
உதவுகிறோம் என கர்வம் இல்லாமல்
நான் இவர்களுக்கு இத்தனை உதவி செய்து இருக்கிறேன் என சில பக்கங்களில் எழுதாமல் உதவுங்கள்
உங்களால் உதவி செய்யும் வாய்ப்பினை இறைவன் தந்ததை எண்ணி நன்றி சொல்லுங்கள்..
உழைத்து பெற்ற பணமானால்
உள்ளன்போடு தாருங்கள்..
உழைக்காமல் பெற்ற பணமானால்
உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் தாருங்கள்..
http://www.youtube.com/watch?v=0A8AAuD3ohc
ReplyDeletePlease see the above video to enjoy the joy of sharing
பிறருக்கு உதவி வேண்டும் என்ற நல்லதொரு குணம் நமக்கு இருக்க வேண்டும் வாத்தியார் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். இதை அப்படியே நான் ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteபிறரது தேவையறிந்து உதவ வேண்டும் என்று வாத்தியாரும் KMRK அவர்களும் சொல்லியிருக்கிறார்கள். பணம் வாங்குவதே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் இதில் எங்கே வருகிறார்கள் வேப்பிலை சுவாமிகளே.
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல். வாத்தியாருக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல். வாத்தியாருக்கு நன்றி.
ReplyDelete///kmr.krishnan said...
ReplyDeletePlease see the above video to enjoy the joy of sharing///
தாங்கள் அறிய தந்த காணொளியில் இருந்து நாங்கள் அறிந்து கொண்ட செய்தி இது
நாம் என்ன தருகிறோமோ அதுவே
நமக்கு தரப்படுகிறது (பிறர்கின்னா முற்பகல் செய்யின் என்பது போல)
அந்த மூதாட்டி பந்து விளையாடிய சிறுவனை திட்டி உதைக்காமல் அவனிடம் அன்பு செலுத்தியதால் அந்த மூதாட்டிக்கு இப்படி ஒரு சிறுவன்..
பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதை நாம் பிறருக்கு செய்ய வேண்டும் என புரிந்து கொண்டோம்
///Ak Ananth said...
ReplyDeleteபணம் வாங்குவதே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் இதில் எங்கே வருகிறார்கள் வேப்பிலை சுவாமிகளே.///
சின்ன வாத்தியாரே..
இவர்கள் இருக்கிறார்கள் எனவே
இனி நாமும் தரலாம் என நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி தானே
கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் திருடர்கள் படம் போட்டு ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை என போடுவது போல..
ஏமாறாமல் இருக்க இந்த தகவல்
யாரையும் குறைவாக சொல்லவில்லை
(அவர்களுக்கு பிழைக்க இப்படி ஒரு வழி)
படைப்பின் நோக்கமே பகிர்ந்து கொள்வதுதான்.
ReplyDeleteதாயிடமிருந்து அன்பை பெற்று மற்றவருக்கு கொடுக்கிறோம்.
ஆசிரியரிடம் கல்வியை பெற்று மற்றவருக்கு கொடுக்கிறோம்.
தந்தையிடம் அறிவை பெற்று மற்றவருக்கு கொடுக்கிறோம்.
குருவிடம் நல்ல சிந்தனை பெற்று
நண்பர்களுக்கு கொடுக்கிறோம்.
உழைத்து பணம் பெற்று மற்றவருக்கு கொடுக்கிறோம்.
இறைவனிடம் வேண்டுகிறோம் கொடுக்கும் சிந்தனையை என்றும் எனக்கு கொடு.
" கொடுக்கும் " என்ற வார்த்தையை என்னுடய சிந்தனைக்கு கொண்டு வந்த வாத்தியார் அவர்களுக்கு
மிக்க மிக்க நன்றி.
சந்தரசேகரன் சூர்யநாராயணன்
///Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteபடைப்பின் நோக்கமே பகிர்ந்து கொள்வதுதான். ///
ஆமாம் சூர்யா..
பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு உண்டு..
நீங்கள் பட்டியலிட்டவைகளுக்கு நாம் பணமோ அல்லது வேறு ஒன்றோ கட்டாயம் தருகிறோம். எதையும் இலவசமாக பெறுவதில்லை..
அருமை அருமை
ReplyDeleteஇன்னொரு காணொளி (its in thai Language, has subtitle in English)
www.youtube.com/watch?v=t_jbYao9stI
///kmr.krishnan said... நெய்வேதியம் செய்யப்பட்ட வெண் பொங்கலை அங்குள்ள சிப்பந்திகள் தங்களுக்குண்டான பாகத்தை சிறு தொகை கொடுத்தால் நமக்குத் தருவார்கள்///
ReplyDeleteகாசு கொடுத்தால் பக்தியையே வாங்கிவிடுவார்கள் போலிருக்கிறதே நம்மவர்கள்
கோயில் வாசலில் அமர்ந்துள்ள வயதானவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு ஆளுக்கொன்று கொடுத்து விட்டுச் செல்வதாக சொல்லும் வாழைப்பழங்கள் கூட காசுக்காக (பீடி சிகரெட்டுக்காக) வோம்.பின்னர் கொடுக்கப்படலாம் (கொடுக்கப்படுகின்றன)
கொலுவுக்கு ஏதாவது கொடுப்பாங்கன்னு இப்பதிவா??
ReplyDeleteகொடுக்க சொல்லி வந்ததா இல்லை
கொடுத்துமகிழும் உணர்வைசொல்லியா
தாம்பூலங்களில் குங்குமத்திற்கு பதில்
தர(மில்லா)முள்ள ஸ்டிக்கர்பொட்டுகள்
லிப்ஸ்டிக் ஹேர்டையென மங்கள
லிஸ்டில் இவைகளும் வந்து விட்டன
இது மட்டுமா சிலசமயங்களில்
இவை rotationலும் வருவது
விழிக்க வைக்கின்றது இந்த
விபரீத செயல்கள்..
சுருக்காத முகத்துடன் ரவிக்கை அன்று
சுடிதாருக்கு சல்யூட் போடும் காலமிது
ஆடம்பரத்திற்காக தரும் பழக்கமும்
அதை தந்ததை தம்பபட்டம் சொலுவது
என வாடிக்கையான சிலருக்கு
இப்படியாவது சிந்தனை வரட்டுமென
வந்த பதிவுக்கு
வாழ்த்துக்கள்
ஆன்லைனில் கடவுள் தரிசனத்திற்கு
அப்பாயின்ட்மென்டுவாங்கும் நம்மவருக்கு
இப்போ கொலுவைக்க
இடமிருக்கா..
இல்லை பெண்களுக்குத்தான்
இதுக்கெல்லாம் நேரமிருக்கா
வரச்சொல்லி அவர்களுக்கு
விருந்து அ தாம்பூலம் தரவாய்பிருக்கா
அடுத்த வீட்டுக்கு போவதற்கு கூட
அப்பாயிண்ட்மென்டு வாங்க வேண்டிய
நிலையில் நவராத்திரி பற்றிய
நினைப்பு எழுத்திலும் எண்ணத்திலுமே
இந்தியாவில்
இப்படி ஒரு பண்டிகை இருந்ததென
இனிவருங்காலம் சொல்லும்
இளைஞர்களை எது வெல்லும்??
Joy is in Giving!
ReplyDeleteThanks for the post Sir !
Regards
Ashok
//காசு கொடுத்தால் பக்தியையே வாங்கிவிடுவார்கள் போலிருக்கிறதே நம்மவர்கள்//
ReplyDeleteகோவிலில் கைங்கர்யம் செய்யும் சிப்பந்திகள் அனைவரும் அரசு ஊழியர்கள் அல்ல. அந்த அந்தக் கோவில் வருமானத்திலிருந்தே அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகின்றது. அரசு கஜானவில் இருந்து தொகை வருவது நிர்வாக அலுவலர் ஒருவருக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு அதிக பட்ச ஊதியம் ரூ2500/
மட்டுமே. இந்தத் தொகையும் கோவில் உண்டியல் எண்ணும் மாதங்களிலேயே வழங்கப்படும். சரியாக ஒன்றாம் தேதி சம்பளம் வரும் என்று எதிர்பார்ப்பு அவர்கள் வைத்துக்கொள்ள முடியாது.ஒரு கோவிலின் மொத்த வருமானத்தில் 25% மட்டுமே மொத்த செலவுக்காக எடுத்துக் கொள்ளலாம்.மீதமுள்ளது அரசு கஜானாவில் கட்ட வேண்டும். எனவே வருமானம் குறைந்தால் அவர்களுக்கான ஊதியமும் குறையும்.
குருக்கள் தவிர்த்து மற்ற பரிசாரகர், அபிஷேக நீர் கொணர்பவர், தீபாரதனை உத்வியாளர், பூக்கட்டுபவர்,தீவட்டி,தீபம் ஏற்றுபவர் மேளம் ஆகியோருக்கு 5அல்லது 3 வேளை பூஜையில் செய்யப்படும் நெய்வேத்திய சாதக் கட்டிகள்
அவர்களுக்கு உரிமை. அதனை அவர்கள் சிறிய தொகை பெற்றுக் கொண்டு கொடுப்பார்கள். சம்பளமும் எப்போதுவரும் என்று தெரியாத நிலையில் இந்தக் காசு அவர்களுக்கு சில்லறை செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.அவர்கள்
பக்தியை விற்கவில்லை.
காசு கொடுத்து பகதியை மட்டுமல்ல,இன்னும் பல விஷயங்களையும் வாங்க முடியாது. இதை அவர்களும் நாமும் அறிவோம். வேப்பிலை சுவாமிகளுக்கும் இது தெரியும். சும்மா கோர்த்து வாங்குவது அவருக்குப் பொழுது போக்கு.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட புதிதாக வருகின்ற அலங்காரப்
ReplyDeleteபொருட்களில் ஆவ்ல் உள்ளவர்களே. பெண்கள் கொஞ்சம் அதிகமாக ஆசைப்படுவார்கள்.
பகட்டிற்காகவோ, நடிப்பாகவோ, அந்தஸ்திற்காகவோ செய்தாலும், ஒரு சமயத்தில் இந்த நடைமுறையில் உள்ள தத்துவ,சமூகக் கண்ணோட்ட்டத்தைப்
புரிந்துகொள்வார்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. வேப்பிலை சுவாமிகளுக்கு அது இருபதில் வந்தால் எனக்கும், பார்வதி ராமச்சந்திரனுக்கும் அறுபதில் வரலாம.
அதனால் எந்த பாதகமும் இல்லை.
///kmr.krishnan said...
ReplyDeleteகாசு கொடுத்து பகதியை மட்டுமல்ல,இன்னும் பல விஷயங்களையும் வாங்க முடியாது. இதை அவர்களும் நாமும் அறிவோம். வேப்பிலை சுவாமிகளுக்கும் இது தெரியும்.///
தங்களின் விளக்கம் சரி..
அதைவிட அந்த வாழைப்பழங்களும்
இப்படியோ என்பதை தானே கேட்டிருந்தோம்.. (அவர்களுக்கு மட்டும் கைக்கும் வாய்க்கும் (புகைக்கும்) செலவிருக்காதா என்ன)
///kmr.krishnan said...
ReplyDeleteபெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட புதிதாக வருகின்ற அலங்காரப்
பொருட்களில் ஆவ்ல் உள்ளவர்களே. பெண்கள் கொஞ்சம் அதிகமாக ஆசைப்படுவார்கள்.///
ஆசைப்படுவதை தவறு என்று எங்கும் எப்போதும் சொல்லவில்லை..
இதில் 20 என்ன 60 என்ன..
அன்பு fifty, sixty ஆன போதும் மலரும் என தெரிந்தது தானே
ஆனால் மங்கல பொருட்களின் வரிசையில் இவைகளும் இடம் பெறும் அவலங்களை ஏற்பதும் அதற்காக சாத்திரங்களையே மாற்றுவதும்..
நாம் அவர்களை காப்பாற்ற
இவர்கள் சட்டம் இயற்றி அது
முடியாது போனபோது அந்த சட்டத்தையே ரத்து செய்வது போல் அல்லவா (கேலி நாடகமாக) இருக்கிறது..
சரி தான் என்றால் 1825 நாட்களுக்கு
ஒரு முறை விரலை நீட்டுங்கள்
என்ன கொடுத்தான்
ReplyDeleteஎவை கொடுத்தான்
என்னும் முன்னே..
உயிருக்கு உடலை கொடுத்தான்
உடலுக்கு சிந்தனை கொடுத்தான்
சிந்தனைக்கு ஐம்புலன்கலை
கொடுத்தான்
ஐம்புலன்களுக்கு கடல் போண்ற
ஆசையை கொடுத்தான்
ஆசைகளுக்கு அழிவை கொடுத்தான்
எதை எதிர்பார்த்து இவைகளை
கொடுத்தான் என்று என்னும் போழ்து
தன்னை தான் உணரும் வரை பிறப்பு இறப்பு என்ற கடலில் இருந்து மீள " தர்மம் " என்ற செயலை கொடுத்தானோ ?
இதர்க்கு எந்த பணமும் பொருளும் ஈடு கட்ட தேவை இல்லை.