மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.10.13

Astrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்!!

 
Astrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்!!

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

கேள்விகள்

ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.


கேள்விகள்:

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. ஆகிவிட்டதென்றால், அது இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
3. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?
---------------------------------------
சரியான விடை கீழே உள்ளது!

9.3.1973ல் பிறந்தவர் இந்த ஜாதகி. திருமணமானவர். காதல் திருமணம். பிறகு அது பிணக்கத்தில் முடிந்து இறுதியில் விவாகம் ரத்தாகிவிட்டது. (Love marriage which ended in separation and then in divorce)

1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் எட்டாம் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
2. ஆறாம் அதிபதி (number one villain in a horoscope) ஏழில் உட்கார்ந்திருக்கிறார். உடன் ராகுவின் கூட்டணி வேறு!
3. அயன, சயன, போகபாக்கியஸ்தானத்தில் சனி. அத்துடன் அவர் எட்டாம் அதிபதி. சயனம் என்றால் நித்திரை. போக பாக்கியம் என்றால் படுக்கை சுகம். பெண் ஆணுக்குப் படுக்கையில் தரும் சுகம். ஆனால் பெண்ணிற்குப் படுக்கையில் கிடைக்கும் சுகம்
4. திருமணம்  ஆறாம் அதிபதியின் திசையில் நடந்தது. திருமணம் ஊற்றிக்கொண்டதுடன், விவாகம் ரத்தானது வரை அனைத்தும் அதே செவ்வாய் திசையில்தான்.

அம்மணி பரணி நட்சத்திரம். பரணி தரணி ஆளும் என்பார்கள். தரணி ஆண்டார். ஆனால் திருமண வாழ்க்கை அவுட்டாகிவிட்டது. இரண்டாம் அதிபதி  அதாவது குடும்ப வாழ்க்கை அதிபதி  அந்த வீட்டிற்குப் பத்தில் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக விநோதங்களில் இதுவும் ஒன்று!

ஒரு கிரகம் நீசமானால் பிரச்சினைதான். அதுபோல ஆறாம் வீட்டுக்காரன் எங்கே வந்து உட்கார்ந்தாலும், அந்த வீட்டில் (House) பிரச்சினைதான்.

இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம். அத்துடன் ஏழாம் அதிபதி குருவும் நீசம். காலசர்ப்ப தோஷத்தில் கேது கொடிபிடிக்கும் ஜாதகம். அதனால் கால சர்ப்ப தோஷம் முடிந்தாலும், பிரச்சினைகள் துரத்தும்படியான அமைப்பு. என்ன செய்வது? எல்லாம் கிரகக்கோளாறு.

ஐந்தாம் வீட்டுக்காரன் சுக்கிரன் 9ல். அத்துடன் அந்த வீட்டுக்காரன் சனியின் பார்வையுடன். அதனால் அம்மணி காதல் வயப்பட்டு, தன்னிச்சையாகக் காதல் திருமணம் செய்துகொண்டார். பாரசாரர் சொல்லியுள்ள விவாகரத்திற்கான அமைப்புக்கள் எல்லாம் இந்த அம்மணியின் ஜாதகத்தில் உள்ளது. ஆகவே விவாகம் ரத்தில் முடிந்தது. அதாவது டைவோர்ஸில் முடிந்தது.

காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண் பொருத்தம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும் ஜோதிடர், திருமணம் நடக்கும் காலத்தைத்தான் சொல்லியிருப்பார். பிரச்சினை என்று சொன்ன பிறகுதான் மற்றவற்றை அலசி, அது நீடிக்கும் வாய்ப்பில்லை, ஊற்றிக் கொண்டுவிடும் என்று சொல்லியிருப்பார். இரண்டையும் முதலியே சொல்லியிருந்தால், அந்தப் பெண் அவனை மணந்து கொண்டு அவதிப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா?

அவதிப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கும்போது யாரைப்போய் சாலஞ்ச் செய்ய முடியும்? விதியையா? விதியைச் சாலஞ் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது.  விதி அடித்துப் படுக்க வைத்துவிடும். எழுந்திருக்கவே முடியாது.

“ஊழிற் பெருவலி யாவுள” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதையும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் சொன்ன, Nothing is stronger than Destiny என்பதையும், மறக்காமல் எப்போதும் நினைவில் வையுங்கள்.
-------------------------------------------------------------------------
காதல் திருமணம். ஆனால் பிரச்சினைகள் நிறைந்தது என்று பலரும் எழுதியுள்ளார்கள் மூன்று கேள்விகளுக்கும் சரியான விடையை நெருங்கி வந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் ரத்தில் முடிந்திருக்கும் என்பதை ஐவர்  மட்டுமே எழுதியுள்ளார்கள். பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

பெரும்பாலானவர்கள் ஒரு கேள்விக்கும் சிலர் 2 கேள்விகளுக்கும் பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!
-------------------------------------------------------------- 
 இடைச்சேர்க்கை:

//////Tuesday, October 01, 2013 2:36:00 pm
Blogger kmr.krishnan said...
    கேள்வி அமையும் முறையே ஓரளவு யூகத்தைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.இரண்டாவது கேள்வி முதல் கேள்விக்கான பதிலாக இருக்குமோ என்று     யூகிக்க வேண்டியுள்ளது.அதுபோலவே மூன்றாவதுவது கேள்விக்கான பதில்     இரண்டாவதில் பொதிந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
    ஜாதகத்தைக் கொடுத்து விட்டு திருமணம் பற்றி எழுதுக என்று கேட்டாலே போதும் என்று நினைக்கிறேன்.கிட்டத்தட்ட சரியான பதில் கொடுப்பவர் களைத் தேர்ந்து எடுக்கலாம்./////

தங்களின் யோசனைக்கு நன்றி. அடுத்து வரும் புதிர்களில் அப்படியே செய்கிறேன். நன்றி!


அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++ 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

34 comments:

  1. ஹையா நானும் பாஸாயிட்டேன்.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்.
    காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்
    ஐயா உங்கள் எழுத்துப்பணி அளப்பரியது
    அது வாழ்க்கையில் உண்மையாகவே கஸ்டப்படுபவர்களுக்கு உதவும் விதமாக ஜாதக கேள்வி பதில் பகுதி அமையும் விதமாக அமைந்தால் வாழ்க்கையில் ஒரு பிடிமாணமும் இல்லாமல்ிருப்பவர்களுக்கு வழிகாட்டிய புண்ணியமும் கிடைக்கும். தெரியாத ஒருவரின் ஜாதகத்தை அலசுவதை விட 32வயதுக்கும் மேலாகியும் திருமணம் அமையாமலிருக்கிற மற்றும் குழந்தைப்பேறு இல்லாமலிருக்கிறவர்களுடைய ஜாதகத்தை அலசலுக்கு எடுத்து கொள்ள வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயாவுக்கும், சக மாணவர்களுக்கும்:

    சிலர், அச்தங்கம் பற்றி எழுதி உள்ளார்கள். கொடுக்கப்பட்ட data வேறு ராசி சக்கரம். அதை வைத்து மட்டும் தானே பதில் எழுத வேண்டும்? அப்போது எப்படி அச்தங்கம் ஆனதா இல்லையா என்று தெரியும்? ரூரியனுக்கு பின்னால் பத்து பாகைக்குள், பிற கிரகங்களுக்குப் பின்னால் ஐந்து பாகைக்குள் ஒரு கிரகம் வரும் போழ்து அது அஸ்தங்கம் ஆகும். ஆனால் இங்கே பாகைகள் தெரியாமல் எப்படி அஸ்தங்கம் என்று சொல்கிறீர்கள்?

    சூரியனோடு ஒரு கிரகம் இருந்தாலே அஸ்தமனம் என்று நினைத்து விடுகிறீர்களோ என்று பயந்து விட்டேன். பாகை தெரியாத நிலையில் அப்பதத்தினை கையாண்டதால் இந்த பின்னூட்டம். ஒருவேளை நீங்கள் தேதி, நேரத்தை கண்டு பிடித்து அங்ஙனம் கண்டிருந்தால் சரிதான். அப்போது இந்தப் பின்னூட்டம் தேவை அற்றது.

    அதே சமயம், கேள்வியில் உள்ள data வைத்து மட்டுமே பதில் காண முயல்வதே சரி, அதற்கு மேல் நொண்டிப் பார்க்கப்படாது என்றும் சிலர் வாதிடலாம். நான் அப்படி சொல்ல மாட்டேன்!

    ReplyDelete
  4. பொட்டில் அடித்தாற் போல சொன்னவர் Kaven மட்டும்தான். அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    பலரும் நன்றாக அலசத் தெரிந்து கொண்டுள்ளார்கள். இது வாத்தியார் ஐயாவின் சொல்லிக் கொடுக்கும் திற‌மைக்குக் கிடைத்த வெற்றிதான்.கிட்டத்தட்ட‌ அனைவருமே பிரச்சனைகள் நிறைந்த‌ காதல் திருமணம் என்று சொல்லி விட்டார்கள்.ஐயாவிற்கு நன்றி.

    ReplyDelete
  5. என் ஆலோசனைக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் உங்கள் மனம் படியே செய்யவும். க்ளூ அதிகம் இல்லாமல் இருக்கும் படி
    கேள்விகள் அமையலாம்.

    அவசியம் தசா இருப்பைக்கொடுங்கள் ஐயா!அப்போது தான் நட்சத்திரம், நடப்பு தசா அகியவற்றைப் பார்க்கலாம்.

    ReplyDelete
  6. அய்யா தங்கள் அலசல் நன்றாக உள்ளது.ஒரு சிறு குழப்பம் உள்ளது.காலசர்ப்ப தோஷ ஜாதகத்தில் இந்த பெண்மணி ஜாதகம் 7ல் இருந்து லக்னம் வரை கால சர்ப்ப தோஷம் உள்ளது.அதனால் கூட இல்லற வாழ்வு கெட்டு இருக்கும் அல்லவா?.ஏனென்றால் 1 முதல் 7 வரை கல்யாணத்திற்கு முன்பு.7 இருந்து 1 திருமணத்திற்கு பின்னும் அல்லவா?.1 முதல் 7 தோஷம் கம் யோகம் 7 முதல் 1 வெறும் தோஷம் மட்டுமே என்று தாங்கள் சொன்னதாக நியாபகம்.தாங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அய்யா.

    ReplyDelete
  7. ///redfort said...
    ஐயா வணக்கம்.
    காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்///

    காந்தி ஜெயந்திக்கு லீவு தானே..

    ReplyDelete
  8. நிச்சயமாக க்ளு அடிகுறிப்புதர வேண்டும்
    நேர பற்றாக்குறையில் இருக்கும்

    எம்மவர்களுக்கு இந்த க்ளு தான்
    எப்படியாவது உதவி செய்யும்

    ReplyDelete
  9. Ayya,
    24-sep-2013-il you said, suriyan if its place on 12th house the owner of the horoscope wil b punish from the government. Even M.S.subulakshmi madams horoscope the sun is placed on 12th house as well as neesan. Please clarify me.

    ReplyDelete
  10. VaNakkam sir..
    by far , the best question and answer session.
    Sir , I was with the understanding that love marriage is caused by connection between 2nd and 5th lords or major role of Sukran on lagnam or 7th house.. Pls explain the aspects of horoscope leading to Love marriages .

    ReplyDelete
  11. ////Blogger விசயக்குமார் said...
    ஹையா நானும் பாஸாயிட்டேன்.////

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. aiyaa , also ,
    major planets like Bhudhan , sukran , Sevvai , Guru , sani , all have 2-house aadhikkam.
    Mostly , they always rule one good house and one bad house. How to judge whether they will do good or bad in a horoscope..?
    For example , in the example given , Sevvai is 6th as well as 11th lord. Why cant we consider as 11th lord occupying 7th house , which is auspicious, rather than 6th lord occupying 7th house ?
    What decides this , is it Ashtavargam ? Shadbalam ?Sometimes Ashtavargam and Shadbalam are contradictory.. Kindly explain.. I have been having this doubt for a long time.

    ReplyDelete
  13. ////Blogger redfort said...
    ஐயா வணக்கம்.
    காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்
    ஐயா உங்கள் எழுத்துப்பணி அளப்பரியது
    அது வாழ்க்கையில் உண்மையாகவே கஸ்டப்படுபவர்களுக்கு உதவும் விதமாக ஜாதக கேள்வி பதில் பகுதி அமையும் விதமாக அமைந்தால் வாழ்க்கையில் ஒரு பிடிமாணமும் இல்லாமல்ிருப்பவர்களுக்கு வழிகாட்டிய புண்ணியமும் கிடைக்கும். தெரியாத ஒருவரின் ஜாதகத்தை அலசுவதை விட 32வயதுக்கும் மேலாகியும் திருமணம் அமையாமலிருக்கிற மற்றும் குழந்தைப்பேறு இல்லாமலிருக்கிறவர்களுடைய ஜாதகத்தை அலசலுக்கு எடுத்து கொள்ள வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்////

    அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. விமர்சனங்களை, கணிப்புக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் இருக்காது. அத்துடன் குவியும் ஜாதகங்களை ஒவ்வொன்றாக ஏற்றுவதற்குள், என்னுடையது எங்கே என்று கேட்டு அதட்டல்கள் வேறு வரும்.
    நம் வழியிலேயே நாம் செல்வோம். விஷப் பரீட்சைகள் எல்லாம் வேண்டாம்!

    ReplyDelete
  14. Blogger பெரியவாதாசன் said...
    அன்புள்ள ஐயாவுக்கும், சக மாணவர்களுக்கும்:
    சிலர், அச்தங்கம் பற்றி எழுதி உள்ளார்கள். கொடுக்கப்பட்ட data வேறு ராசி சக்கரம். அதை வைத்து மட்டும் தானே பதில் எழுத வேண்டும்? அப்போது எப்படி அச்தங்கம் ஆனதா இல்லையா என்று தெரியும்? ரூரியனுக்கு பின்னால் பத்து பாகைக்குள், பிற கிரகங்களுக்குப் பின்னால் ஐந்து பாகைக்குள் ஒரு கிரகம் வரும் போழ்து அது அஸ்தங்கம் ஆகும். ஆனால் இங்கே பாகைகள் தெரியாமல் எப்படி அஸ்தங்கம் என்று சொல்கிறீர்கள்?
    சூரியனோடு ஒரு கிரகம் இருந்தாலே அஸ்தமனம் என்று நினைத்து விடுகிறீர்களோ என்று பயந்து விட்டேன். பாகை தெரியாத நிலையில் அப்பதத்தினை கையாண்டதால் இந்த பின்னூட்டம். ஒருவேளை நீங்கள் தேதி, நேரத்தை கண்டு பிடித்து அங்ஙனம் கண்டிருந்தால் சரிதான். அப்போது இந்தப் பின்னூட்டம் தேவை அற்றது.
    அதே சமயம், கேள்வியில் உள்ள data வைத்து மட்டுமே பதில் காண முயல்வதே சரி, அதற்கு மேல் நொண்டிப் பார்க்கப்படாது என்றும் சிலர் வாதிடலாம். நான் அப்படி சொல்ல மாட்டேன்!////

    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் போதும். சில காரணங்களுக்காக முழு பிறப்பு விவரத்தையும் கொடுக்க முடியாது! சம்பந்தப் பட்டவர்கள் விமர்சனங்களைப் பார்த்தால் வருத்தப்பட மாட்டார்களா?

    ReplyDelete
  15. ////Blogger sundari said...
    Good morning sir,/////

    உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    பொட்டில் அடித்தாற் போல சொன்னவர் Kaven மட்டும்தான். அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
    பலரும் நன்றாக அலசத் தெரிந்து கொண்டுள்ளார்கள். இது வாத்தியார் ஐயாவின் சொல்லிக் கொடுக்கும் திற‌மைக்குக் கிடைத்த வெற்றிதான்.கிட்டத்தட்ட‌ அனைவருமே பிரச்சனைகள் நிறைந்த‌ காதல் திருமணம் என்று சொல்லி விட்டார்கள்.ஐயாவிற்கு நன்றி./////

    நான் அப்படி நினைக்கவில்லை. 50 பேர்கள்தான் தேறி இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை 100ஐத் தாண்ட வேண்டும்!

    ReplyDelete
  17. ////Blogger kmr.krishnan said...
    என் ஆலோசனைக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் உங்கள் மனம் படியே செய்யவும். க்ளூ அதிகம் இல்லாமல் இருக்கும் படி
    கேள்விகள் அமையலாம்.
    அவசியம் தசா இருப்பைக்கொடுங்கள் ஐயா!அப்போது தான் நட்சத்திரம், நடப்பு தசா அகியவற்றைப் பார்க்கலாம்./////

    நல்லது. தங்களின் யோசனைகளுக்கு நன்றி. அப்படியே செய்கிறேன்!

    ReplyDelete
  18. /////Blogger paulsam said...
    அய்யா தங்கள் அலசல் நன்றாக உள்ளது.ஒரு சிறு குழப்பம் உள்ளது.காலசர்ப்ப தோஷ ஜாதகத்தில் இந்த பெண்மணி ஜாதகம் 7ல் இருந்து லக்னம் வரை கால சர்ப்ப தோஷம் உள்ளது.அதனால் கூட இல்லற வாழ்வு கெட்டு இருக்கும் அல்லவா?.ஏனென்றால் 1 முதல் 7 வரை கல்யாணத்திற்கு முன்பு.7 இருந்து 1 திருமணத்திற்கு பின்னும் அல்லவா?.1 முதல் 7 தோஷம் கம் யோகம் 7 முதல் 1 வெறும் தோஷம் மட்டுமே என்று தாங்கள் சொன்னதாக நியாபகம்.தாங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அய்யா.////

    கேது கொடி பிடிக்கும் ஜாதகங்களுக்கு துன்பம் தொடரும் என்று பதிவில் எழுதியுள்ளேனே. அதைப் பார்க்கவில்லையா நீங்கள்?

    ReplyDelete
  19. /////Blogger வேப்பிலை said...
    ///redfort said...
    ஐயா வணக்கம்.
    காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்///
    காந்தி ஜெயந்திக்கு லீவு தானே../////

    குடி’ மக்களுக்கு லீவு. நமக்கு எதற்கு லீவு?

    ReplyDelete
  20. ////Blogger வேப்பிலை said...
    நிச்சயமாக க்ளு அடிகுறிப்புதர வேண்டும்
    நேர பற்றாக்குறையில் இருக்கும்
    எம்மவர்களுக்கு இந்த க்ளு தான்
    எப்படியாவது உதவி செய்யும்/////

    கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன் வேப்பிலையாரே!

    ReplyDelete
  21. Blogger C.Senthil said...
    Ayya,
    24-sep-2013-il you said, suriyan if its place on 12th house the owner of the horoscope wil b punish from the government. Even M.S.subulakshmi madams horoscope the sun is placed on 12th house as well as neesan. Please clarify me.

    எம்.எஸ்.எஸ்சின் ஜாதகத்தில் சூரியன் 12ல் இருக்கிறது. அது கன்னி ராசி. அங்கே சூரியன் எப்படி நீசமாகும்? அத்துடன் அவர் துலா லக்கின ஜாதகியின் யோககாரகனான சனியின் பார்வையில் இருக்கிறார். அதனால் அவர் அரச கெளரவத்தைப் பெற்றுத் தந்தார். பாரத ரத்தினா பட்டம் கிடைத்தது. சூரியன் 12ல் இருப்பதாலேயே ஒரு முடிவிற்கு வருவதைத் தவிர்த்துவிட்டு ஜாதகத்தின் மற்ற சிறப்புக்களையும் பாருங்கள்!

    ReplyDelete
  22. அன்புள்ள ஐயா,
    நான் விவரங்களைத் தாருங்கள் என்றா கேட்டேன்?
    அல்லவே.
    நான் சொன்னது - கொடுத்திருக்கும் data வில் இருந்து அஸ்தங்கம்இருக்கிறதா இல்லையா எனபது தெரியாது. ஆதலால் அச்தங்கம் பற்றி கூறியது (சிலர்) எப்படி என்று கேட்டேன்.

    நீங்கள் எல்லா விவரங்களையும் தாருங்கள் என்று நான் கேட்கவில்லையே. இருக்கிற data கொண்டு பதில் தருவதே மாணவனுக்கு அழகு.

    நமக்கு அஸ்தமனம் ஆகியிருப்பது இந்த ஜாதகத்தில் தெரியாத பொது அதைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று நான் சக மாணவர்களிடம் கேட்டேன். அவ்வளவே. உங்களை மேலும் விவரம் கேட்கவில்லை.

    ReplyDelete
  23. ஐயா ஒருவர் ஜாதகத்தில் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை எந்த அமைப்பை வைத்து தெரிந்து கொள்வது

    ReplyDelete
  24. ////Blogger DevikaArul said...
    VaNakkam sir..
    by far , the best question and answer session.
    Sir , I was with the understanding that love marriage is caused by connection between 2nd and 5th lords or major role of Sukran on lagnam or 7th house.. Pls explain the aspects of horoscope leading to Love marriages ./////

    அதை விரிவாக எழுத வேண்டும். தற்சமயம் நேரமில்லை. பின்பு அதைப் பற்றிய தொடர் ஒன்றை எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  25. Blogger DevikaArul said...
    aiyaa , also ,
    major planets like Bhudhan , sukran , Sevvai , Guru , sani , all have 2-house aadhikkam.
    Mostly , they always rule one good house and one bad house. How to judge whether they will do good or bad in a horoscope..?
    For example , in the example given , Sevvai is 6th as well as 11th lord. Why cant we consider as 11th lord occupying 7th house , which is auspicious, rather than 6th lord occupying 7th house ?
    What decides this , is it Ashtavargam ? Shadbalam ?Sometimes Ashtavargam and Shadbalam are contradictory.. Kindly explain.. I have been having this doubt for a long time.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள 5 கிரகங்களின் இரட்டை வீடுகளுக்கான அதிபத்யம் பற்றிய விரிவான கட்டுரைகளை முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்! ஷட்பலம் பற்றிய ஞானம் இருந்தால் அதையே பின்பற்றுங்கள்!

    ReplyDelete
  26. Blogger பெரியவாதாசன் said...
    அன்புள்ள ஐயா,
    நான் விவரங்களைத் தாருங்கள் என்றா கேட்டேன்?
    அல்லவே.
    நான் சொன்னது - கொடுத்திருக்கும் data வில் இருந்து அஸ்தங்கம்இருக்கிறதா இல்லையா எனபது தெரியாது. ஆதலால் அச்தங்கம் பற்றி கூறியது (சிலர்) எப்படி என்று கேட்டேன்.
    நீங்கள் எல்லா விவரங்களையும் தாருங்கள் என்று நான் கேட்கவில்லையே. இருக்கிற data கொண்டு பதில் தருவதே மாணவனுக்கு அழகு.
    நமக்கு அஸ்தமனம் ஆகியிருப்பது இந்த ஜாதகத்தில் தெரியாத பொது அதைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று நான் சக மாணவர்களிடம் கேட்டேன். அவ்வளவே. உங்களை மேலும் விவரம் கேட்கவில்லை./////

    நல்லது. உங்களின் விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  27. /////Blogger karthik said...
    ஐயா ஒருவர் ஜாதகத்தில் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை எந்த அமைப்பை வைத்து தெரிந்து கொள்வது////

    ஜாதகத்தில் ரெடிமேடாக எதற்கும் எந்த அமைப்பும் கிடையாது! அலசுவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். லக்கினம், இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீடுகள் அதன் அதிபதிகள், காரகர்கள், பார்வையிடும் கிரகங்கள், சேர்க்கைகள், சம்பந்தப்பட்ட தசா புத்திகள் என்று உள்ள பல விஷயங்களை அலசினால் தெரியும்.

    இப்போது அமெரிக்க நாகரீக ஈர்ப்பால், இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் சிலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே, உடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிவிட்டதா என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கு அவர்கள் பதில் சொன்னால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்!!

    ReplyDelete
  28. முதல் கேள்விக்கான க்ளுவாக இரண்டாவது கேள்வி இருந்தது. இது போன்ற கேள்விகள் இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். மொட்டையாக திருமணம் ஆகியிருக்குமா என்று கேட்க படும் கேள்விக்கு சரியான பதில் சொல்ல இங்கு வருபவர்கள் எல்லோரும் ஜோதிட விற்பன்னர்கள் இல்லை. நடப்பு தசா புத்தியை வைத்து பலன் சொல்லலாம் என்றால் அந்த விபரமும் இருப்பதில்லை. சிறு சிறு க்ளுக்கள் தேவை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இதை நான் யாரையும் இடித்துக் கூறுவதற்காக சொல்லவில்லை.

    ReplyDelete
  29. Ayya,
    Thank you very much for your reply.

    ReplyDelete
  30. விதி என்று அந்த பெண்மணியின், கதையை அலசுவதை தவிர்த்து, நம்பிக்கை என்ற உலகினில் வாழும் கலையை அவர்களுக்கு தெரிவித்தால் நன்மை பயக்கும்
    கு . ரா. முருகன் பி‌எஸ்‌என்‌எல்

    ReplyDelete
  31. Saturn in venus house and venus is in saturn house(i.e., interchange of planets)So that whether she will get the Ayna, sayaana Bagiyam

    ReplyDelete
  32. sir,

    i have raghu in 6th place and ketu in 12 th place.all the planet are hemmed inside the raghu and ketu.i am in age of 32.i have suffered a lot till age of 29.as per your assumption will i suffer in second half of my life because ketu moves towards lagna.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com