மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.10.13

Astrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.17:  உங்கள் பதிலை எழுதுங்கள்!

தொடர் - பகுதி பதினேழு!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும்
எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

43 comments:

  1. respected Sir,
    2nd Place:
    Mandi is there, Sani looks at it, the 2nd house owner is in enemy place with kethu and 12th lord. no good aspect also. So problems in family or speech or assets.
    5th Place:
    Exalted Rahu, The owner Mars is 5 th place from its house with laknathipathi and 9th lord owner. Very favorable. Intelligent and will have good kids.
    7th Place:
    7th house owner is in 12th place. But Due to Sukran's look is there. So marriage will be there. may be delayed one.

    Even though issues here and there, due to good placement of Laknathipathi, 5th lord and 9th lord life may not be that bad.

    ReplyDelete
  2. I was wondering what happened to my comment to the previous quiz. நன்றி ஐயா, என் சந்தேகத்திற்கு பதிலளிக்க இது தான் சரியான வழி. Angelina Jolie ஜாதகத்தை அலச நானும் முயற்சி செய்கிறேன். அதிலும் மற்றவர்களின் அலசல் மற்றும் இறுதியில் தாங்களது அலசல் என் சந்தேகங்களை நிச்சயம் போக்கும்.

    ReplyDelete
  3. சுக்கிரன் லக்கினத்திலிருந்து 7ம் இடத்தைப் பார்க்கிறார். ஆனால் 7ம் அதிபதி சனி 12ல். எப்படியும் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். சற்று தாமதமாகவேனும். அனேகமாக சுக்கிர, சந்திர அல்லது குரு புத்தியில்.

    2ல் மாந்தி இருப்பதும், 2ம் அதிபதி தனக்குப் பகை கிரகமான கேதுவுடன் இருப்பதும் குடும்பம் அமைந்தாலும் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

    5ல் ராகு. இதை ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு புத்திர பிராப்தி தடை என்று சொல்ல முடியாது. புத்திரகாரகன் ஆட்சி. 5ம் அதிபதியும் உடன் இருக்கிறார். தாமதமாகவேனும் புத்திர பாக்கியம் அமையும். பிரச்சினை ஆண் வாரிசு அமையவில்லை என்பதால் இருக்கலாம்.

    ReplyDelete
  4. 1. ஜாதகர் பல (பண) பாக்கியங்கள் உடையவர். { (அ) லக்கினாதிபதி நட்புக் கிரகங்களுடன் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்ததாலும் (ஆ) யோககாரகன் நண்பர்களுடன் முக்கியமான கேந்திரத்தில் அமர்ந்ததாலும் (இ) லாப மற்றும் சுகஸ்தானாதிபதி லக்கினத்தில் அமர்ந்ததாலும் (ஈ) குருவின் பார்வை பெற்றதாலும் }

    2. திருமணம் ஆகியிருக்கும். { (அ) ஏழாம் அதிபதி விரையஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும், யோக காரகன் செவ்வாயின் பார்வையினாலும் (ஆ) கேந்திரத்தில் அமர்ந்து பலமான குருவின் பார்வை பெற்ற களத்திர காரகன் சுக்கிரனின் தசையானது உரிய வயதில் வந்ததாலும்; (இ) காரகன் 5 பரல்களுடனும், ஸ்தானம் 36 பரல்களுடனும் இருப்பதாலும் }

    3. குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும். { (அ) குடும்பஸ்தானத்தில் மாந்தி இருப்பதாலும் (ஆ) ஸ்தானாதிபதி பகை வீட்டில் கேதுவுடன் அமர்ந்ததாலும் (இ) எட்டாம் அதிபன் சனியின் பார்வை இரண்டாம் வீட்டில் விழுவதாலும் (ஈ) சுபர்களின் பார்வை இரண்டாம் வீட்டிற்கும், அதிபதிக்கும் கிடைக்காததாலும் (உ) மற்றும் ஸ்தானத்திற்கும் அதிபதிக்கும் குறைந்த பரல்களே கிடைத்ததாலும் }

    4. குழந்தை பாக்கியம் உண்டு { (அ) ஐந்தாம் இடத்தில் நீச்ச ராஹு அமர்ந்திருந்தாலும், ஸ்தானத்திற்குக் குறைந்த பரல்களே இருந்தாலும் சுபர்களுடன் பாக்கியஸ்தானத்தில் சேர்ந்த புத்ராதிபதியினாலும் (ஆ) காரகன் குருவின் பார்வை புத்திரஸ்தானத்திற்குக் கிடைத்ததாலும் (இ) குரு ஐந்து பரல்களுடன் ஸ்வஸ்தானத்தில் புத்திரஸ்தானாதிபதியுடன் அமர்ந்ததாலும்).

    களத்திர இடமும், காரகனும் வேறு சுபர்களின் பார்வை அற்று இருப்பதுவும், குடும்பப் பிரச்சினைகளும் இவரின் திருமண வாழ்வை முறிக்கக் காரணமாக இருக்கக் கூடும்.

    -நன்றி ஐயா

    ReplyDelete
  5. லக்னத்தில் சுக்கிரன் (11 மற்றும் 4ஆம் அதிபதி) ANGELINA JOLIE அழகான தோற்றம். லக்னாதிபதி சந்திரன் தனது நண்பர்களான செவ்வாய்(5-10), குருவுடன்(6-9) 9ஆம் வீட்டில்.கஜகேசரி, தர்மகர்மாதிபதி சந்திரமங்கள மற்றும் குருமங்கள யோகங்கள். லக்னம் மீது குரு பார்வை வேறு. லக்னம் பலம் பெற்றுள்ளது. அதனால் தான் பெரும் புகழும் பேரும் பெற்றார். 2ஆம் அதிபதி 11ல் 11ஆம் அதிபதி லக்னத்தில், லக்னாதிபதி 9ல் - தனயோகம் வேறு.
    பலம் பெற்ற குருவின் 9ஆம் பார்வை 5ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு மீது விழுகிறது(5ஆம் அதிபதி பலத்துடன் 9ஆம் வீட்டில்). அதனால் பெற்ற மற்றும் தத்தெடுத்த (ராகு) குழந்தைகள் அனேகம். 2ல் மாந்தி மற்றும் 2ஆம் வீட்டு அதிபதி சூரியன்(தந்தை) கேதுவுடன் அதனால் தந்தையுடன் உறவு சுமூகமில்லை. 7ஆம் அதிபதி சனி 12ல். அவரது இரு திருமணங்களும் நிலைக்கவில்லை. திருமணம் ஆகாமல் BRAD PITT உடன் பல ஆண்டுகள் இருந்தார். இந்த தாமதம் சனியால் (சனி பார்வை 2ஆம் வீட்டின் மேல்). தாமதத்திருமணம் தான் நிலைக்கும். மிகப்பலம் வாய்ந்த 9ஆம் வீடு மற்றும் குருவால் வரும் நன்மைகளுக்கு இந்த ஜாதகம் ஒரு எடுத்துகாட்டு.

    ReplyDelete
  6. Kalai Vanakkam Ayya,

    1. Lagnam patriya answer:
    Lagnathipathi chandran bagiyathil irukirar. Bagiyathipathi guruvum udan. Anal avar 6 ikkum uriyavar aagirar.5 ikkum 10 ikkum uriya var sevai udan. 4 ikkum 11ikkum uriya sukran lagnathil. intha amaippu nalla amaipputhan.

    Athanal Jathagi konjam vasathiyagava irunthirupar avargal appa vittil. 15 - 2- 19 vari buthan tisai yenbathalum avar viraiyathirukkum 3 ikkum uriyavar yenbathalum konjam sothukalai ilanthirukalm avargal thanthaiyar.

    kethu tisaiyil nichaiyamaga kedu palangalai petruiruppar. neecha maana kethu vaaga irunthallum suga kedu thaan. kodavae buthan iruppathu nallathalla. suriyanum ullar.

    melum lagnam bapakarthariyogathil ullathu. sanikkum manthikkum idaiyil. pothuvaga kastankalai perumbalum petriruppar.

    hope I answered correct sir. Waiting for your answers

    Mahes

    ReplyDelete
  7. 1) Based on Lagna

    Lagna lord in 9 and 11th lord in lagna. Good looking woman and always luck favored her with whatever she wanted to do or had the freedom to do whatever she wanted.

    2) Mandhi in Second house, 2nd lord in 11 and Guru in 9. Wealthy person but does not have a steady married life as Mandhi is in 2 and 2nd
    lord is combined with 12th lord and Kethu. Might have broken married relationships and on the other side, she is wealthy enough.

    3) Rahu exalted in 5, 5th lord in 9 and Guru in 9 with 5th lord.

    (Will have adopted kids or her first child will be a female) or both.
    After this, she will have at least one male child after this since 5th lord is with Guru and Guru aspecting 5th house.

    4) 7th Lord in 12, Sukra in 1st house. 5th lord aspecting 7th lord.

    Will have a troubled married life or would have broken marriages/relationships.

    ReplyDelete
  8. I answer your 4th question.
    7 im veedu patri:

    7 ikku uriya sani 12 il maraivu sthanthil. irunthalum kalathirkaragan sukranin paaravai 7il. guruvin paaravai sukran mel matrum lagnathin mel. nichiyamaga thirumanam nadanthirukkum. Sukramaha thisail sukran athai azhagaka mudithiruppar.
    thirumanam satru thamathamaga nadathirukkum cause 7ikku uriyavan 12 il.
    Mahes

    ReplyDelete
  9. I answer your 3rd question sir.
    5im pavam patri:
    5il uchaam petra rahu. ithu nall amaippu illai. nalavellai rahu tisai nadakavillai. iruthallum avar puthil keduthiruppar. karagan guru bagyathil matrum paarvai 5il.(9im parvai yaaga).
    5im vetrikku uriya sevaiyum karagan udan bagayathil. nichaiyamaga kulantai petruirppar. sukra maha tisail chandra puthil thirumanam kudiyruthaalum guru puthil avar kulanthi selvangalai petruiruppar.

    Mahes

    ReplyDelete
  10. I answer your 2 nd question.
    2im idam patri:

    2il manthi nalla amaippu illai. kudumbathai keduthiruppar allathu illamal seithuviduvar. 2ikku uriya sooriyan 11il udan kethu matrum viraiyathipathi buthan. sani 3im paarvaiyaga 2il.

    aaga sukran sukra thisai thirumanathai koduthu iruntallum kudumba valvil avalavuu santhosam illamalum sandai sacharavukaludan valkai nagarnthirukkum.

    soriiyatisail kudumbathil mulavathumaga keduthirukkakodum allathu virayathai koduthirukkum. karanam manthi nindra thasa nathanin tisai nalla palangali kodukathu. aaga kudumbathill illamal seithurukkum.

    Hope I answered all correct answers sir. waiting for your answers.

    Mahes

    ReplyDelete
  11. Lagna - Venus is placed in Lagna and Jupiter sees in the lagna by 5th position.Yogakaran Mars is placed in 9th place. So Native will be beautiful. Also Lagna has pabakarthari yoga by Saturn and mandhi. So character will not be good.

    2nd place - Owner is placed in 11th position. So, income will b be more. but since mandhi is there, all money will be spent.

    5th place - 3 malefic planet sees this position.Rahu is placed in exaltation. Guru also sees to nullify malefic planets . Also 5th place owner is situated in 5th place from that positon. So native will be blessed with children.

    7th place - Venus sees but 7th owner is placed in 12th to lagna. So marriage life will have troubles.

    ReplyDelete
  12. 7th house
    Person will get married in right age.
    1) Karaka for marriage sukra in Kendra and get Jupiter aspect -good
    2) During marriage age the person has sukura dasa -good
    3) Marriage happiness is below average as the 7th lord in 12th house and sani see 2nd house -bad
    4) Mars aspects the sani(7th lord)-bad.

    2nd house
    Person family life and relation with family member are not good
    1)Sani aspects 2nd house-bad
    2)Lord of second house conjunction with kethu-bad

    5th house
    There is a delay with respect to kids but person will be blessed with kids
    1)Karaka for kids-Jupiter in his own house with very good conjunction so the person definitely blessed with kids-good
    2)Jupiter aspects 5th house-good
    3)Rahu occupies 5 the hose.-bad



    ReplyDelete
  13. குறிப்பு :- என்னுடைய முந்தைய இரண்டு பதில்களின் தொகுப்பு இது. அதனால் அவற்றை நீக்குமாறு கேட்டு கொள்கிறேன் !. நன்றி !.

    அய்யா, இந்த பெண் ரேவதி நட்சத்திரம். புதன் தசா இருப்பை வைத்து கண்டு பிடிக்கலாம். ஆனால் , ஜகன்னத் ஹோரா வில் சரியான நேரத்தை கணிக்க முடியவில்லை. இந்த பெண் பிறந்த தேதி இடம் நேரம் இருந்தால் கொடுங்கள் அய்யா !.
    1) கடக லக்னம். லக்னாதிபதி சந்திரன் யோககாரகன்செவ்வாய் மற்றும் சுப கிரகமான குரு ஆட்சி வீட்டில் 9-ம் பாக்யஸ்தானத்தில். லக்னத்தில் சுக்ரன் வேறு. லக்னத்தை குரு பார்க்கிறார் ! . எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவர் எதற்கும் கவலை பட மாட்டார். சந்தோஷமாக இருப்பார்.
    2) இரண்டாம் இடத்து அதிபதி சூரியன் 11-ம் இடத்தில். கேதுவுடன் ராகு பார்வை வேறு. வக்ர புதன் இருக்கிறார். ஆதலால் கிரக தோஷம். இரண்டாம் வீட்டில் மாந்தி. விரய ஸ்தான சனி இரண்டாம் இடத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். அதனால் குடும்பம் கிடையாது. இருந்தாலும் பிரிவு , சுமுக உறவு கிடையாது.
    3) ஐந்தாம் இடத்தில் ராகு. புத்ர தோஷம். ஆனால் அதிபதி செவ்வாய் புத்ர காரகன் குருவுடன் (ஆட்சி) 9-ம் வீட்டில். குழப்பமாக இருக்கிறது. குரு வலிமையாக இருந்தாலும் அவரை விரய ஸ்தான சனி பார்ப்பதாலும் , 5-ம் இட ராகு உச்சமாக இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லை!.
    4) 7-ம் அதிபதி சனி 12-ம் வீட்டில். விரய ஸ்தானம். 7-ம் இடத்தில் கிரகங்கள் இல்லை. லக்ன சுக்ரன் பார்வை. ராகு பார்வையுள்ள செவ்வாய். அதனால் காதல் திருமணம் ஆனால் விவாகரத்தில் முடிந்திருக்கும்!
    ஆவலுடன் உண்மையான நிலவரத்தை எதிர்பார்க்கிறேன் !.

    ReplyDelete
  14. Dear Sir,

    The Girl's horoscope lagna lord moon is in 9th place. alongwith 9th lord guru also with 5th lord mars.

    Lagna lord is in power.
    5th lord is in friendly with 9th lord.
    9th lord in 9th place. lagna is aspected by powerful guru.

    Second lord in 11th place with kethu. 7th lord in 12th. mandhi in second place. Even though 2nd and 7th bhava is affected, lagna lord and 9th lord is helping through aspects. 5th place rahu is there, rahu is in uchham. also guru aspects the 5th place. Since 9th lord aspects 5th place most of the problems solved.

    So she might have been married late but she live wealthy and had a good life with all facilities.

    ReplyDelete
  15. வணக்கம்...

    ஐயா.
    ,
    1. லக்னாதிபதி பாக்கியதிபதி உடன் இணைந்து 9இல் நின்றது யோகம் ...கடக லகனதிற்கு யோகாதிபதி ஆன செவ்வாயும் குருவும் இணைவு விசேசம்...
    2. வாக்கு ஸ்தானம் மாந்தி யால் சூழ பட்டு இருப்பது குறையே....தன பேச்சு எதிரிகளை உருவாக்கும்..
    3. 5இல் ராகு புத்திர தோஷம் ...
    4.7ம் அதிபதி 12இல் மறைவு பெற்றாலும் சுக்ரனின் 7ம் இட பார்வை மற்றும் குருவின் லக்ன பார்வை வெற்றிகரமான காதல் திருமணம் அமைத்து இருக்கும் ...
    ஒரு சிறு சந்தேகம் ....

    கடகத்தில் எந்த கிரகம் அமர்ந்தாலும் அந்த கிரகம் வேலை செய்யாது என்பதி சரியா ?

    நன்றி

    சத்திய ந ாராயணன்



    ReplyDelete
  16. Respected Sir,

    1.The native of the horoscope will be good-looking as sukran in lagnam. Lagna lord chadran place in 9th house(bhagiya sathanam) which is favorable for the native which also results in guru chandra yogam,guru mangala yogam & chandra mangala yogam. Though lagnam in pabathkarthari yogam ie., lagna is hemmed between sani & mandhi
    2.Family life will not be happy as mandhi in 2nd place and also sani parvai to mandhi. 2nd lord sun is in combo with bhuthan(12th lord) & kethu which results in unhappy family.
    3.Married life will be miserable as 7th lord in 12th house.No guru paarvai for sani but sevai parvai for sani which is not favorable for marriage.
    4.She would have got baby but delayed.Delay is due to ragu in 5th house but because of bagiya sathanam ie., 5th lord in 9th house in the combo of 9th lord results in baby.
    In overall, the native will be married , will have baby, will have family but her life will not be happier which is extremely important.

    ReplyDelete
  17. லக்னம் சுக்ரனால் செழுமையூட்டப்பட்டுள்ளது. சுக்ரன் 4(சுகம்),11(லாபம்)க்கு உரியவர்.சுக்ரனுக்கு ஆட்சி பெற்ற பாக்கிய இடத்தின் அதிபதி குருஜியின் சிறப்புப் பார்வை கிடைக்கிறது.லக்னாதிபதி சந்திரன் பாக்கிய இடத்தில் ஏறி 9க்குடைய குருஜி, 5,10க்கு உடைய செவ்வாய் யோககாரகனின் நெருக்கத்தைப் பெறுகிறார்.
    எனவே இப்பெண்ணின் வாழ்க்கை சிறப்பாகவே இருக்க வேண்டும்.சசி மங்கள யோகம், குருச‌ந்திர யோகம் இவருக்கு உறுதுணை.

    லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் மாந்தி இருப்பதால் குடும்பம் நன்றாக இருக்குமா,பண வசதி எப்படி இருக்கும் என்ற சந்தேகம் முதலில் தோன்றுகிறது.இரண்டாம் அதிபதி சூரியன் 11 ஏறியதும், தனகாரகன் குருஜி 9 ஏறி ஆட்சி பெற்ற‌தும் மாந்தியின் கெடுதல்களை வெகுவாகக் குறைத்துவிடும்.
    குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    ஐந்தில் ராகு இருந்தாலும் 5ம் இடத்திற்கு ஆட்சிபலம் பெற்ற குருபார்வை இருப்பதாலும் 5ம் அதிபதி யோககார‌கன் செவ்வாய் 9ம் இடத்து அதிபனும் புத்திரகாரகனுமான குருஜியுடன் நின்றாதாலும் குழந்தைகள் உண்டு.

    ஏழாம் அதிபன் சனி 12ல் மறைந்தது. சனி நின்ற இடத்தின் அதிபதி புதன் தன் வீட்டுக்குப் பதினொன்றில் இருந்து சூரியனால் எரிக்கப்பட்டது. இவை திருமண வாழ்க்கைபற்றிய சந்தேகத்தைத் தோற்றுகிறது,ஆனால் 7ம் அதிபன் சனியின் இரு பக்கமும் புதனும் சுக்கிரனும் இருந்து பாதுகாக்கின்றனர்.நாடி சோதிடப்படி செவ்வாயையும் பெண்களுக்கு களத்திர ஸ்தானதிபதியாகக் கருதுவது உண்டு.
    அதன்படி செவ்வாய் நல்ல நிலையில் உள்ளதாலும் சந்திரன் குருவுடன் நன்றாக‌
    இருப்பதாலும் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

    முடிவு: இந்தப்பெண்மணி நல்ல முறையில் ஆனந்தமான குடும்ப வாழ்க்கை கண‌வருடனும் குழந்தைகளுடனும் நடத்தி வருவார்கள்.

    இம்முறை ராசிக் கட்டத்தை மட்டும் பார்த்துச் சொல்லியுள்ளேன். வேறு எதையும் கணக்கில் எடுக்க வில்லை.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  18. ஐயா வணக்கம்,

    கொடுக்கப்பட்ட ஜாதகம் கடக லக்னம், மீன ராசி

    1.லக்னாதிபதி சந்திரன் பாக்கியஸ்தானத்தில் அதிஸ்டமானவர், லக்னாதிபதியோடு பாக்கியாதிபதியான குருவும்,யோகக்காரனான செவ்வாயும் கூட்டணி மேலும் குரு சந்திர யோகமும், சசி மங்கள யோகமும் பெற்றவர்.
    லக்னத்தில் சுக்கிரன் மற்றும் குரு பார்வை, ஆசீர்வதிக்கப்பட்ட பெண்மணி, நல்ல குணவதி ,அழகானவர், திறமையானவர்.

    2.இரண்டாம் வீட்டில் மாந்தி,இரண்டாமதிபதி சூரியன் 11இல் விரையாதிபதி மற்றும் நீச கேதுவுடன் கூட்டணி மேலும் சனி பார்வை
    இரண்டாம் வீட்டிற்க்கு சுப பார்வை இல்லை.
    இருந்தாலும் தன காரகன் ஆட்சி பலத்துடன் இருப்பதால் கையில் காசு புரளும்.
    குடும்பஸ்தானதிபதி சூரியன் 11இல் அமையப்பெற்றதாலும் குடும்பம் அமைய பெற்றிருக்கும்.


    3.5மதிபதி செவ்வாய் பாக்கியத்தில் 5இல் ராகு உச்சம். புத்திர தோசம் இருந்தாலும் புத்திர காரகன் குரு பாக்கியத்தில் ஆட்சி பலத்துடனும் 5ம்திபதியுடன் கூட்டாக இருப்பதாலும் புத்திர பாக்கியம் உண்டு

    4.7 மதிபதி சனி 12இல் மறைவு. களத்திர காரகன் சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்து 7ம் வீட்டை தன் நேரடிப்பார்வையில் வைத்துள்ளார்.
    எனவே சுக்கிர திசையில் திருமணம் நடந்திருக்கும். 7மதிபதி 12இல் மறைந்ததால் தாமதத்திருமணம்.

    ReplyDelete
  19. 2 uriyavar 11 ii eruppadu sirappu. 7 uriyavar 12 ii eruppadu srriyellai. 5 uriyaver 9,il eruppadu miga nandru, entha jathagar 42 vayathikku mell than nanraga erukkum.

    ReplyDelete
  20. Vanakkam Aiya,

    Lagnathil sukiran- thotram azhagai irukum;lagnadhibadhi chandiran 9m veetil bakiyasthanathil,atchi petra guru matrum natpu graham sevvaiyodu...(chandira-mangala yogam + sasi mangala or guru chandira yogam)...bakiangalodu irupar.

    2m veedu : mandhi amarndulladal vidandavaadam seivar; kayil kaasu thangadu;poratamana kudumbam...(veetin adibadhi sooriyan 11il,pagai veetil,neesamana ketuvudanum,natpu graham budhanudanum....)

    5m veedu: utcham petra ragu amarndulladal puthira thosham.

    7m veedu:adhibadhi lagnathuku 12il virayamagitar;kalathiragaragan sukirano, irupuramum sani,mandhiku idayil sikki,pabakarthari yogathil mattikondar....manavazhkai allolalam dan....

    Budha-aditya yogam,chandira-mangala yogam,guru-chandira yogam ellam amaindalum.....viraya sani,neesa ketu,pagai veetu sukiran,2mida mandhi....ivatral jadhagiyin vazhkai migunda poratamdan Aiya....

    (Nalai ungalin badil parthu alasal sariya endru theriumvarai,engalukum poratamdan Aiya)

    Nandri Aiya.

    ReplyDelete
  21. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 17 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 05.06.1975 அன்று பிறந்த இந்த ஜாதகி அதிஷ்டம் உள்ளவர், அத்தோடு புத்தி சாதுர்யமும் உள்ளவர்.

    நன்மை பயக்கும் ராசியான கடக லக்கினத்தில் சுக்கிரன் இருப்பதாலும், மற்றொரு நன்மை பயக்கும் ராசியான மீனத்தில் சந்திரன் இருப்பதாலும் திருமணம் ஆகி இருக்கும்.
    மனத்திற்குப் பிடித்த கணவர் அமைந்திருப்பார்.

    இரண்டாம் வீட்டுக்கு அதிபதி சூரியன், லாப ஸ்தானமான பதினொன்றில் புதனுடன் சேர்ந்திருப்பதால் வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும். ஏஜென்சி போன்ற தொழில்களை செய்து அதை லாபகரமாக நடத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் இரண்டாம் வீட்டில் மாந்தி இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது.

    குழந்தை பாக்கியத்திற்கான ஐந்தாம் வீட்டில் ராகு இருப்பதால் புத்திர தோஷம். இது பொதுவான விதி. ஆனால் ஐந்தாம் வீடு நன்மை பயக்கும் ராசியான விருச்சிகமாக இருந்து அந்த வீட்டுக்கு அதிபதி செவ்வாய், மற்றொரு நன்மை பயக்கும் ராசியான மீனத்தில் குழந்தைக்குக் காரகன் குருவுடன் சேர்ந்திருப்பதால் இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

    களத்திர ஸ்தானாதிபதி சனி பன்னிரண்டில் மறைந்து விட்டதால் மண வாழ்க்கை கசந்து, தனிமையில் காலத்தைக் கழிக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  22. 1. சர , நீர் ராசியான கடக லக்கினம். லக்கினாதிபதி சந்திரன் ஒன்பதாம் இடத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி மற்றும் ஆறாம் அதிபதியான ஆட்சி பெற்ற குருவுடனும் யோககாரகன் செவ்வாயுடனும் சிறப்பாக அமர்வு. சிறப்பான தர்ம கர்மாதிபதி யோகம்.
    பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குவார். அந்நிய தேச வாசம்.
    சகோதரர் வகையிலும் புத்திரர் வகையிலும் தாய் வகையிலும் நல்ல
    பாக்கியங்கள். லக்கினத்தில் பாதகாதிபதி சுக்கிரன் பாபகர்த்தாரி யோகம் பெற்று அமர்வு.
    ஜாதகி களத்திரத்தின் சொல்லைக் கேட்டாலும் அதனை செயல்படுத்த முடியா நிலைமை.
    ஆனால் லக்கினத்தை 5-ம் பார்வையாகக் குரு பார்ப்பது என்பது தன் புத்தியாலும்
    புத்திரர் மூலமாகவும் தன்னை செம்மைப்படுத்திக் கொள்வார். தன்னம்பிக்கையும் , நல்ல மனோதிடமும் , ஆன்மீக ஈடுபாடும் உடையவர்.

    2. இரண்டாம் வீட்டில் மாந்தி அமர்வு.
    இரண்டாம் அதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்ந்தாலும்
    கேது மற்றும் 3, 12 -க்குரிய புதனுடன் பகை வீட்டில் அமர்வு.
    சூடான வாக்கு வாதங்களால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழலாம்.
    சனி பார்வை வேறு.

    3. ஐந்தாம் வீடு செவ்வாய் வீடு. அதில் ராஹு அமர்வு.
    செவ்வாய் யோககாரகன். எனவே ராஹு தசை யோகம் செய்யும்.
    குருவின் ஒன்பதாம் பார்வை. படுகிறது. தாமதித்த
    ஆண் குழந்தை பாக்கியம்.

    4. எல்லா கடக லக்கினங்களுக்கும் உள்ளது போல் இவருக்கும்
    களத்திரம் பிரச்சனையே . தாமதித்த திருமணம். 12-ல் அமர்ந்த
    சனிக்கு யோககாரகன் செவ்வாயின் பார்வை. கணவரின் மூலமாக
    அவரின் தொழில் மூலமாக ஜாதகிக்கு பிற்காலத்தில் தாமதமாக
    பாக்கியங்கள் , லாபங்கள் , சொத்துகள் கிடைக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தை 10- ம் பார்வையாகப் பார்க்கிறது.

    ReplyDelete
  23. GOOD EVENING SIR,

    QUIZ NOl: 17:
    THIS GIRLS LAGNAM IS KADAGAM IS LOCATATE AT NITH HOUSES IS GOOD FOR , AND ALSO COMBINE GURU GOOD FOR GIRLS,
    AND LAGANAM CONTAIN SUKRAN SHES IS VERY BEAUTIFUL GIRLS,
    2ND HOUSE CONTAIN MANDHI SOME TROUBLE COME AND GO IN MARRIAGE LIFE, AND SECOND LORD @ 11 TH HOUSE IS GOOD FOR LAPAM , FIFTH HOUSE CONTAIN RAHU IS NOT GOOD BUT FIFTHE LORD LOCATED AT NINETH HOUSE DELAY CHILD BORNE, 7 TH LORD LOCATED AT 12 TH HOUSE DELAY MARRIAGE BUT HAPPY MARRIEAGE LIFE BECAUSE 4TH LORD LOOKED PLACE LAGNA LOOK AT 7TH HOUSE.

    ReplyDelete
  24. மதிப்பிற்குரிய ஐயா,

    1. 4,11 க்குவுடையன் லக்னத்தில் இருப்பதால் ஜாதகி அழகாகவும் வசதி வாய்ப்புகளுடன் இருப்பார்.
    2. 2ஆம் வீட்டு அதிபதி சூரியன் 11ல்,இருப்பதால் நல்லகுடும்பம் தொழி லில் நல்ல லாபம் இருக்கும்.ஜாதகியின் தந்தைக்கு நல்ல லாபம் உள்ள தொழில் அமைந்து இருக்கும்.
    3.7ஆம் வீட்டு அதிபதி 12ல் அவர் குருவைப் பார்ப்பதால் திருமணம் ஆகியிருக்கும்
    4.5ல் ராகு,அந்த வீட்டு அதிபதி சந்திரன் குருவுடன் 9ல் இருப்பதால் குழந்தைகள்
    இருக்கும்.

    ReplyDelete
  25. Respected Sir,

    My answer for our today's Quiz No.17:-

    she was born on June 5, 1975 and thirty eight years old now.

    1. FIRST HOUSE: As per her Lagna, She is beautiful and pretty. This is because Venus is sitting in first house and she has one great merit that is less effort and more profit. Eleventh lord is sitting in first house and first house lord is sitting in ninth house. She was born in rich family and her father's family has fame and wealth. Lagna is also affected by baba karthari yoga... so the above bagya may be delayed due to this ava yoga. But she will get all. Jupiter also aspects first house as its fifth look.

    2. SECOND HOUSE: She has completed her schooling after struggling. Since second house lord is sitting in eleventh house along with vidyakaraga (twelfth house lord), kethu and first dasa is mercury dasa.. She has more movable and immovable property since forth house is good and this house lord is sitting in good position and yoga karaka is looking forth house as its eighth aspect. Small issues may occur in her married life sometimes due to mandhi is sitting and seventh lord is sitting in twelfth house and aspects its third aspect on second house.

    3. FIFTH HOUSE: She has blessed to give birth child.This is due to Jupiter is looking this house as its seventh aspects and sitting in good position along with fifth house lord in ninth house (house of benefit) Fifth house lord is yoga karaka for this lagna also.

    4. SEVENTH HOUSE: She has married and her husband family is richer than her or her husband has educated more than her. This is because venus (kalathra karaga) is looking seventh house as its seventh aspect and she has married in Venus dasa. Her husband may be gone to foreign.

    In this horoscope, she has Dharma karmapathi yoga. Hence, she can attain good wealth,fame and other good things in her life.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  26. vanakam aiya. en peyer muthu, malaysiavil vasikeren. vaguparaiku puthiya manavan. thangal pathivugalai arvamaga padithu varugiren. ithutan en mudhal pinnote anubavam. inte kelvikku bathil alike muyarchi seigiren. ivalavu nal paditetode seri ipothu pottiyil pangeduke arvamaga ulathu.

    1. laknathil sukiran, 4 matrum 11 athibathi subar, guruvin 5am parvayum laknathuku ulate. jatagi nalla gunam ulle penmani. sukran irupathal joly type age irukalam.

    2. 2 il manthi irupathu jatagi saralamage silasamayam pese mudiyamel tikki peselam. kadumayana varthaigalai ubayogikelam. panam selavali.

    3. 5il raghu irupathu puthira tosham. guru parvai irupatinal kulanthai irukum. satru tamatam agi irukelam.

    4. 7 am athibati 12il irukirar(sani) tirumanam tamatam agi irukum, sukran laknathil irunthu parpetal sukra tasaiyil tirumanam agi irukum.

    ReplyDelete
  27. ஐயா அவர்களுக்கு

    1ம் வீடு

    1. லக்கினத்தில் சுக்கிரன் அழகாக இருப்பார், லக்கினாதிபதி 9ம் வீட்டீல் (பாக்கியஸ்தானம்) கடக லக்கினத்திற்கு குரு,செவ்வாய் யோகக்காரர்கள்.
    இவர்கள் இருவரும் கூடியிருந்தால் பிரபல யோகம். எனவே மனத்தெளிவு,வாக்கு சாதுர்யமும் உண்டு. குரு இருப்பதால் உயர்பதவி, ஆன்மீக நாட்டம்,கருணைமனம். செவ்வாய் இருப்பதால் சுயநலம்,வீண்பிடிவாதம்,வரட்டு கெளரவம்,பிறருடன் நெருங்கி பழக மாட்டார்கள்.

    2ம் வீடு

    1. 2ம் அதிபதி 11ம் வீட்டீல் (லாப ஸ்தானம்) இருந்தால் நல்ல
    பண வரவு இருக்கும். ஆனால் அந்த வீட்டீல் மாந்தி உள்ளது மேலும் அந்த வீட்டீற்குரியவனும் பகை வீட்டீல் உள்ளான். நீசம் பெற்ற கேது,மேலும் அஸ்தங்கதம் ஆன புதனும் உள்ளார். எனவே அதிக அளவு சம்பாதிக்க முடியாது. ஆனால் பித்ருக்கள் சொத்து இவருக்கு இருக்கும்.


    5ம் வீடு

    1. 5ம் அதிபதி 9ல் நட்புடன் உள்ளார். கூடவே லக்கினாதிபதி மற்றும் 9ம் வீட்டீற்குரியவனும் அங்கேயே உள்ளனர். எனவே புத்திரர்களால் சந்தோஉஷமாக இருப்பார்கள். 5மிடத்தில் உச்சம் பெற்ற ராகு உள்ளார். எனவே குறைந்த புத்திரர்கள் இருப்பார்கள், பெண் குழந்தை முதலில் இருக்கும்.

    7ம் வீடு

    7ம்வீட்டுக்குடையவன் 12ம் வீட்டீல் (நட்பு) 12ம் வீட்டுக்குடையவனும் 11ம் வீட்டீல் (நட்பு) குருவுடன் சந்திரன் இணைந்துள்ளார் மற்றும் சுக்கிரன் குரு பார்வை பெறுகிறார்.(காதலுக்குரிய கிரகங்கள் சந்திரன்,சுக்கிரன்) இந்த நிலைப்பாடு ஜாதகியின் மணவாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.

    ஜாதகி அழகானவர்,மகிழ்சியான மணவாழ்க்கை,குறைந்த மக்கள் செல்வம் அதிலும் முதலில் பெண் குழந்தை. ஆன்மீக வழியில் செல்பவர்,திருப்பணியில் ஈடுபாடு உடையவர்.தந்தை வழி சொத்துக்கள் பெற்று இருப்பார். குழந்தைகளால் மகிழ்ச்சியை உடையவர். 7க்குடையவன் 12ல் இருப்பபதால் வீண் விரயங்களும் உண்டாகும். 5/6/1975 ல் பிறந்தவர். இப்போது சுக்கிர தசை நடக்கிறது.

    உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

    அன்புடன்
    தனலக்ஷ்மி.


    ReplyDelete
  28. ல.ரகுபதி
    மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். 1. கடக லக்னம் மீன ராசி. லக்னத்தில் சுக்ரன் மற்றும் லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில், ஆட்சிபெற்ற‌ குருவுடன் இணைந்து நட்பு ஸ்தானத்தில் இருப்பதும், குருவின் ஐந்தாம்பார்வை லக்னத்தில் விழுவதும்,ஜாதகர் அழகும் குணமும் அதிர்ஷ்டமும் வளமும் நிறைந்த‌வர்.
    2. ஏழுக்குரிய சனி பன்னிரெண்டில் மறைந்தாலும் ஏழாம் இடத்தை களத்திர‌ காரகன் சுபரான சுக்ரன் பார்வை செய்வது அழ‌கான குண‌முள்ள கணவரை கொடுக்க முடியும்.களத்திர ஸ்தானாதிபதி சனியின் மறைவு ச‌ற்று தாமத
    திருமணம் என்று அறிய முடிகிறது.
    3. குடும்ப ஸ்தானத்தில் மாந்தி அமர்ந்து இருப்பதுடன் இரண்டுக்குரிய சூரியன் பதினொன்றாம் இடத்தில் பகை ஸ்தானத்தில் அமர்ந்து சுபர் பார்வை ஏதுமின்றி, ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் இருப்பது குறையே. இது குடும்பத்தில் குறையை ஏற்படுத்தி இருக்கும்.
    4. புத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பது அந்த பாக்கியத்தை கெடுத்தாலும் குருவின் பார்வையால் சற்று தாமதித்த குழந்தை பாக்கியத்தை கொடுத்திருக்கும்.
    5. புத்திர பாக்கியம் குடும்ப பிரச்சனையாக இருந்து பின்பு அக்குறை நிவர்த்தி ஆகி இருக்க‌ வாய்ப்பு உள்ளது ஐயா. நன்றி

    ReplyDelete
  29. Respected Sir,

    1.) Kadaga lagnam, adhibathy chandran trikonathil guru and chevvai udan ullar & Lagnathil sukran & Guruvin paarvai. Lagnam and lagnadibathy nandragadhan ulladhu.

    2.) 2-m veetil mandhi amarvu and adhibathy sooriyan kedhu udan 11-il. Kudumbam, dhanam & vakku ellavatrilum mandhi in kai oongi irukkum. Nalla kudumbam amaivadharku vaaipugal illai.

    3.) 5-m adhibathy chevvai valuvaana trikonathil, Udan aatchi petra guru and chandran. 5-il raaghu amarvu aanal adharkku aatchi petra guruvin paarvai adhanal kulandhai bagyam kattayam undu.

    4.) 7-m adhibathy sani avar 12-il amarvu. Ingu sani 7&8 ku adhibathy. 8-m adhibathy 12il amarvu adhanal migundh nanmai rajayogam. aanal avarai 7-m adhibathyai paarkumbodhu avar 12-il ulladhal thirumana valkai migundha siramamaga irukkum. Sani baghavan ellavatraium porumayaga koduppar adhanal thirumanam um migavum thamadhamaga nadandirukkum and avar 12-il amarndadhanal thirumanam virayamaga sendrirukkum. 12-m adhibathy 11-il amarndhu 7-m veetai than paarvayil vaithu irukiraar adhanal mothathil, Jadhagi kanavaridam irundhu thanimai pattu iruppar.

    Nalla illara vazhkai iruppadharkku vaaipugal illavey illai.

    11-il kedhuvudan sooriyan adhanal ivargalukku gnana margathil laabam irukkum.

    Sani and chevvai oruvai oruvar visesa paarvayil paarthukolginranar.

    Thavaruglai naalaya padhivin moolam thiruthikolgiraen.

    Thank You.

    ReplyDelete
  30. Sir, lagnathypathy chandran at 9 with 9th house owner. She ll get all bagyams. 5 th house owner at 9. But ragu at 5 and guru aspect. So child is possible. Sukran aspect at 7. Marriage ll happen on time. Mandhi at 2. And 2nd house owner with 12 owner and kethu... Some prob in family.

    ReplyDelete
  31. வணக்கம்.

    1ம் பாவம்
    லக்கினாதிபதி 9ம் அதிபதி, 5ம் அதிபதியுடன், வலுவாக 9ல் உள்ளார். 9ம் அதிபதி குரு லக்கினத்தை 5ம் பார்வை. லக்கினம் வலுவாக உள்ளது. லக்கினத்தில், 4,11ம் அதிபதி சுக்கிரன்(மாரகதிபதிய்ம்).அது சற்று பலம் குறைவு.

    2ம் பாவம்

    2ல் மாந்தி. 2ம் அதிபன் சூரியன் பகைவன் சுக்கிரன் வீட்டில். சனி குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பேச்சு திறன், குடும்பம் அமைவதில் பிரச்னை இருக்கும்.

    5ம் பாவம்
    5ல் ராகு. புத்திர ப்ராப்தம் தாமதம் இருக்கலாம். 12ம் அதிபன் புதன் பார்வை. ஆனால், 5ம் அதிபன், 9ல், 9ம் அதிபதியுடன். அதனால், ஞானம், நல்ல புத்திரர்கள் இருப்பார்கள்.

    7ம் அதிபதி 12ல். ஆனால், 7ஐ பார்க்கிறார். 7ம் வீட்டை, சுக்கிரன் பார்பதால் சீக்கிரம் திருமணம் செய்து வைப்பார். சில பிரச்னைகளும் இருக்கும்.

    அன்புடன்,

    ராதா

    ReplyDelete
  32. சார் வணக்கம்,
    கடகலக்னம் தனக்கு சாபபாடு இல்லாவிட்டால் கூட மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் ரொம்ப அழகாயிருப்பாங்கள் மலைபோன்று துனமிருந்தாலும் அதெல்லா ஒரம் போட்டுவிட்டு ரொம்ப சந்தோஷமாயிருப்பாங்கள். லக்னதிபதி சந்தரன் யோககிரகம் குரு செவ்வாய் கூட்
    கூட்டாணி நல்ல் அமைப்பு அதேசமயம் சனியின் பார்வை பெற்றுவிட்டார்.
    அடிக்டி உடல் மனம் சரியில்லாமல் போகும்.

    2ல் மாந்தி குடும்ப வாழ்க்கை நன்றாகயிருக்காது காரணம் சூரியன் லகனத்திற்கு 11ல் 2வீடிற்கு 10ல இருந்தாலும் விரையதிபதி புதன் ம்ற்றும் கேது கூட சேர்ந்து
    சுக்கிரன் வீடில் தங்கி விட்டார்.

    7ஆம் அதிபதி சனி லக்னத்திற்கு 12 7ஆம் வீட்டிற்கு 6ல் திருமண்மில்லை
    மேலும் 5ஆம் அதிபதி செவ்வாய் சனியின் பார்வையை பெற்று விட்டார்
    மேலும் 5ல் ராகு,குழந்தை பாக்கியமில்லை

    ReplyDelete
  33. 7‍ம் அதிபதி சனி 12 ல் மறைவு; லக்கினம் மற்றும் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் அடைபட்டுள்ளனர். எனவே தாமதமாக திருமணம் நடைபெற்று இருக்க வேண்டும். 2 ம் வீட்டில் மாந்தி; 7 ம் அதிபதி சனி 12 ல் மறைந்ததால் சுக ஸ்தானம் பாதிப்பு; எனவே திருமண வாழ்க்கை சுகமாக இருந்திருக்காது; திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது கணவன் இறந்திருக்கலாம். அதனாலும் லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் இருப்பதாலும் சிரமமான வாழ்க்கை நடத்தியிருக்கலாம்.

    ஆயினும் லக்கினாதிபதி 9 ல் குருவுடன் சேர்ந்திருப்பதால் சிரமத்தை சமாளிக்கும் சக்தியை ஜாதகருக்கு கொடுத்திருக்க வேண்டும்.

    5 ல் ராகு இருப்பினும், 5 ம் அதிபதி 9 ‍ல் குருவுடன் இருப்பதாலும் குரு 9 ம் பார்வையாக 5 ம் வீட்டை பார்ப்பதாலும் குழந்தை பாக்கியம் உண்டு.

    AMG

    ReplyDelete
  34. D.O.B 5th june 1975 Lagna lord is in 9th house and 2nd lord in 11th house.Venus is present in lagna so seems like she is from a rich family and look's good.Even if manthi s present in 2nd house lord of 2nd house is in 11th house so she will have prosperous life.7th lord is in 12Th house so it means late marriage.its a common belief that raagu in 5th house means person will not be blessed with children but since raagu is exalted and 5th lord mars is placed in 9th house along with guru so definitely she will have children.may be a boy.

    ReplyDelete
  35. வணக்கம்.
    4.06.1975ல் 10.50:30 காலையில் பிறந்தவர் இந்த ஜாதகி.
    1. ஜாதகி திருமணமானவர் (காதல் திருமணம்)
    2. குடும்ப வாழ்க்கை உண்டு.(சூர்ய தசையில் பிறிந்து சிறிது காலம் இருக்கும் நிலையும் எற்படும்).

    3. ஜாதகிக்கு நல்ல குழந்தைகள் உள்ள பாக்கியம் உண்டு.

    1. லக்கினம்:

    கடக லக்கினம். லக்கினாதிபதி சந்திரன் 9ம் வீட்டில் கேந்திரத்தில், (கஜகேசரி யோகம்) குருவுடனும், (சசிமங்கல யோகம்) செவ்வாய் வுடனும் (அஷ்டவர்கத்தில் 32 பரல்களுடன்) இருப்பதாலும், லக்கினம் பலமாக உள்ளது. லக்னாதிபதி பாக்கியஸ்தானம் 9ம் வீட்டில் இருப்பது அதிர்ஷ்டகரமானதாகும். நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

    2. ஏழாம் வீடு:

    லக்கினத்தில் உள்ள சுக்கிரன் தன்னுடய 7ம் சுப பார்வையால் 7ம் வீட்டை பார்ப்பதாலும், சுய அஷ்டவர்கத்தில் சந்திரன் (5) சுக்கிரன் (5) சமமாக இருப்பதாலும், எழாம் வீட்டில் (அஷ்டவர்கதில் 36 பரல்கல்) இருப்பதாலும், 28 வயதில் சுக்ர தசை, சந்திர புக்தியில் காதல் திருமணம் நடைபெற்றது. ஏழாம் வீட்டுக்காரன் சனி 12ல் அமர்ந்ததால் சற்றுத் தாமதமான திருமணம்.

    3. இரண்டாம் வீடு:

    2ம் வீட்டு அதிபதி சூரியன் 11ம் வீட்டில் பகை வீட்டில் இருந்தாலும், நீசமான கேதுவுடன் சேர்ந்து இருந்தாலும், எந்த ஒரு சுப கிரகமும் 2ம் வீட்டின் மீது பார்வையில்லாமல் இருந்தாலும், லக்னாதிபதி பலத்தினாலும், பாக்கியஸ்தாதனத்தில் குருவும் சேர்ந்து குடும்ப வாழ்க்கை கொடுத்தனர். மேலும் சூரியன் சுய அஷ்டவர்கத்தில் 3 பரல்கலுடன் பலவீனமாக உள்ளார். நவாம்சதில் குருவின் 5ம் பார்வை சூரியனை பார்ப்பதால் உண்டாகும் பலன் குடும்ப வாழ்க்கை கொடுத்தனர். சூர்ய தசையில் சில காரணங்களினால் கணவனிடம் இருந்து பிறிந்து சிறிது காலம் இருக்கும் நிலை எற்படும்.

    4.ஐந்தாம் வீடு :

    5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 9ம் வீட்டில் அமர்ந்து இருப்பதாலும், அதே 9ம் வீட்டில் குழந்தைகாரகன் குருவுடன் சேர்ந்து இருப்பாதலும், குருவின் 9ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், (புத ஆதித்ய யோகம்) சூரியன், புதன் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், குழந்தை பாக்கியம் உண்டு. 5ம் வீட்டில் ராகு இருப்பதாலும், கேதுவின் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது விழுவதாலும்,தாமதமாக குழந்தை பிறக்கும் . புத்திசாலியான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  36. D.O.B 5th june 1975 Lagna lord is in 9th house and 2nd lord in 11th house.Venus is present in lagna so seems like she is from a rich family and look's good.Even if manthi s present in 2nd house lord of 2nd house is in 11th house so she will have prosperous life.7th lord is in 12Th house so it means late marriage.its a common belief that raagu in 5th house means person will not be blessed with children but since raagu is exalted and 5th lord mars is placed in 9th house along with guru so definitely she will have children.may be a boy.

    ReplyDelete
  37. குருவிற்கு வணக்கம்,
    லக்கனம் பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலும் பலமாக உள்ளது. ஏனெனில் லக்கனத்திற்கு சுப கிரகமான குருவின் பார்வை உள்ளது மற்றும் அவர் திரிகோணமான 9மிடதிற்கும் அதிபதி. லக்னாதிபதி சந்திரன் திரிகோணத்தில் 5, 10குடைய செவ்வாய் (யோகதிபதி) மற்றும் 9குடைய குருவுடன் சேர்கை. அத்துடன் சுப கிரஹமான சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்துள்ளார். அவர் 4 மற்றும் 11க்குடையவர்.
    இரண்டாமிடத்தில் மாந்தி அமர்வு மற்றும் சனியின் பார்வையில் இருந்தாலும் நன்றாகவே உள்ளது. ஏனெனில் 2க்குடைய சூரியன் லக்னதிக்கு 11ல், தானாதிபதி குரு திரிகோணம் மற்றும் ஆட்சி, வாக்குகுடைய புதன் இலாப ஸ்தானத்தில், சுகாதிபதி சுக்கிரன் லக்னத்தில்.
    ஐந்தில் உச்சமான ராகு எனவே இவரின் பரம்பரையின் பாவம் நீங்கியது. பூர்வ புன்னியாதிபதி செவ்வாய் 5க்கு 5மிடமாகிய 9இல் மற்றும் அது திரிகோணம் அத்துடன் திரிகோணாதிபதிகலான குரு மற்றும் சந்திரனுடன் சேர்க்கை. புதனும், சூரியனும் 5மிடத்தை பார்க்கின்றனர் அதில் புதனின் பார்வை நல்லதல்ல ஏனெனில் அவர் 3 மற்றும் 12மிடதிற்க்கு அதிபதி. புத்திரத்தை பொறுத்தவரை தாமதமாக இறுக்கும் ஏனெனில் 5மிடதவனையும் புதிரகாரனையும் சனி பார்க்கிறான். மனதளவில் சோம்பலாக உள்ளவர் ஏனெனில் 5மிடதவனையும் சந்திரனையும் சனி பார்க்கிறான்.
    புணர்பூ தோஷம் மற்றும் 7க்குடைய சனி 12ல் ஆகவே தாமதமாக திருமணம் நடந்திருக்கும் அதுவும் காதல் திருமணம் செய்திருப்பார் ஏனெனில் திரிகோணாதிபதிகலான குரு, செவ்வாய் மற்றும் சந்திரன் ஒன்றாக உள்ளார்கள் அவர்களை 7க்குடைய சனி பார்க்கிறான்.

    ReplyDelete
  38. அன்புடன் வணக்கம்
    வாத்தியார் அய்யா

    1,கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் உத்தேசமாக 5.6.1975 காலை 10 மணிக்கு பிறந்திருக்கலாம்!!!
    2,லக்னாதிபதி 9ம் இடத்தில உடன் ஆட்சி பெற்ற குரு.,& ,செவ்வாய்
    கடக்க லக்னத்திற்கு பாக்யாதிபதி ,&யோகாதிபதி இருவரும் 9இல் நல்ல சுபமான வாழ்க்கை .கேந்த்ராதிபதி 4 இடத்துக்காரன் சுக்கிரன் லக்னத்தில் ..ஆகவே செல்வத்திற்கு குறைவில்லை !!

    3...2மிடம் குடும்பத்தில் மாந்தி சுபர் பார்வை இல்லை ஆகவே திருமணம் உண்டு ஆனால் சண்டை சச்சரவுகள் என வாழ்க்கை போகும் மேலும் 5 இல் ராகு உச்சம் பெற்றுள்ளார் குழந்தை பாக்கியம் இல்லை !!

    4...,7மிடம் மகரம் .சனி =12இல் விரயமாகி போனார் ஆனாலும் குரு 9ம் பார்வை பார்கிறார் ஆகவே சிறப்பான திருமண வாழ்க்கை


    5. படிப்பு இருக்க வாய்ப்பில்லை ! 11இல் சூரியனுடன் புதன் கேது தந்தை சொத்துடன் வாழ்க்கை செல்லும் .



    .பரல் கணக்குபடி1,5,9,4,7,10...மொத்தம் 175..ஆகவே வாழ்க்கை மிக பிரமாதமாக இருக்கும்.

    ReplyDelete
  39. கடக இலக்னம். இலக்கினத்தில் களத்திரகாரகன் சுக்கிரன். இலக்கினாதிபதி சந்திரன் 9ல். குருசந்திர யோகம், சசிமங்கள யோகம், குருமங்கள யோகம் பாக்கியஸ்தானத்தில். சுக்கிரன் 7ம் இடத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். 7ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்க்கு 6ல் இருந்தாலும், குரு பார்வை இலக்கினத்திற்க்கும் களத்திரகாரகன் சுக்கிரனுக்கும் உண்டு. அதனால் திருமணம் சுக்கிர தசையில் சரியான வயதில் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2ல் மாந்தி, 5ல் உச்சம் பெற்ற இராகு. இராகு கடக இலக்கினாதிபதி சந்திரனுக்கு பகைவர். அதனால் குடும்ப ஸ்தானமும் புத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்க கூடும். புத்திர பாக்கியம் தள்ளி போவதால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்க கூடும். அதோடு 2ம் வீட்டு அதிபதி சூரியன் 11ல் இருந்தாலும் பகை வீடான இடபத்தில் இருக்கிறார். ஆனால் 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 9ல் குரு மற்றும் சந்திரனோடு இருக்கிறார்.

    குடும்ப காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இலக்கினாதிபதி சந்திரனோடு இருப்பதால் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் ஜாதகிக்கு இருக்கும். ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் நடந்து சிறிது காலம் கழித்தே குழந்தை பிறந்திருக்கும்.

    ReplyDelete
  40. பதிலை யோசிக்க முடியவில்லை...

    ReplyDelete
  41. Dear Sir,
    2nd house is afflicted by Mandhi and aspected by Saturn (7th lord). Though Saturn is 7th lord, he's also the 8th lord. So the family life of this person will be having trouble.

    5th house is afflicted by Rahu/Ketu which is also aspected by 2nd and 12th house lords. So there will be troubles in getting children. However, there is a chance as Guru is aspecting that house.

    7th house is not afflicted and in fact aspected by Venus. Also venus is in lagna and is aspected by Jupiter (9th lord). So she got married and it might be a love marriage.

    ReplyDelete
  42. அய்யா அதிகாலை முழித்து விட்டீர்களா? இப்பொதுதான் பார்த்தேன் ஒ கமெண்ட்ஸ் என்று , அலசுவதற்குள் 48 என்று ஆகிவிட்டது. சுறுசுறுப்புக்கு ஜாதகத்தில் எந்த அமைப்பு வேண்டும். எனக்கு அவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து போகிறது .

    ReplyDelete
  43. இந்த ஜாதகியின் பிறப்பு விவரங்களைக் கொடுத்து வகுப்ப்றையில் பதிவிடச் சொன்னவர். திருவாளர் kaven alias GowriShankar,Mumbai. அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆணித்தரமாக சரியான சொற்பிரயோகத்துடன்

    பதிலை ஒரு சிலரே எழுதியுள்ளனர். இருந்தாலும் சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

    1.Dallas Kannan
    2.AK.Anandh
    3.M.Srinivasa Rajulu
    4.Kaven
    5.Dinesh
    6.Thiru Mahesh
    7.S.Bagavathi
    8.Murali
    9.Janani Murugesan
    10.Palani Shanmugam
    11. Chandrasekaran
    ----------------------
    4ற்கு மூன்றை மட்டும் சரியாக எழுதியவர்கள்:
    1.G.Murali Krishna
    2.Kmr.Krishnan
    3.Redfort
    4.Kohilam
    5.Swaravani
    6.Susila Kandaswamy
    7.Ravichandran
    8.Dhanalakshmi
    9.Pathi Raghu
    10.AMG
    11.Chandrasekaran Suryanarayanan
    ---------------------------
    பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

    ”2ல் மாந்தி, 5ல் உச்சம் பெற்ற இராகு. இராகு கடக இலக்கினாதிபதி சந்திரனுக்கு பகைவர். அதனால் குடும்ப ஸ்தானமும் புத்திர
    ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்” என்று எழுதிய ஒருவர், அடுத்த பத்தியில் "குடும்ப காரகன் மற்றும் புத்திர காரகனான குரு
    பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இலக்கினாதிபதி சந்திரனோடு இருப்பதால் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் ஜாதகிக்கு
    இருக்கும். ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் நடந்து சிறிது காலம் கழித்தே குழந்தை பிறந்திருக்கும்." என்று
    எழுதியுள்ளார். இப்படி இரண்டு நிலைப்பாடுகளை எழுதாமல், ஆணித்தரமாக ஒன்றை மட்டுமே எழுத வேண்டும். எழுதினால்தான்

    நல்லது. கணிப்பும் சரியாக இருக்கும்!

    ஜாதகியின் அழகைப் பற்றி சிலர் எழுதவில்லை. விவாகம் ரத்தானதைப் பற்றி சிலர் எழுதவில்லை. அதை எல்லாம் எழுதினால்தானே

    கணிப்பு முழுமை பெறும்!

    அன்புடன்,
    வாத்தியார்
    +++++++++++++++++++++++++++++=

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com