Astrology: இப்படி அலசுங்கள் கண்மணிகளா!
நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:
கேள்விகள்
(ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்)
1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?
ஜாதகர் பள்ளி இறுதியாண்டுவரை மட்டுமே படித்தவர். பார்டரில் பாஸானவர். நான்காம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்துகொண்டு விட்டான். அத்துடன் அவனே கல்விக்கும் காரகன். வித்யாகாரகன். எனக்கென்ன வந்தது என்று அவன் உட்கார்ந்து கொண்டுவிட்டபடியால், பள்ளிப் படிப்பும் சராசரிதான். அத்துடன் எட்டாம் வீட்டுக்காரனான சுக்கிரனும் 4ல் வந்து உட்கார்ந்து கொண்டு இடையூறு செய்தான். ஆனாலும் ஜாதகனுக்கு
3 வயது முதல் 18 வயது வரை லக்கினாதிபதி குரு பகவானின் மகா திசை
நடைபெற்றதால் அவர் இரக்கப்பட்டு ஜாதகனைப் பள்ளி இறுதியாண்டுவரை தள்ளிக்கொண்டு போனார்,
2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?
திருமணமானவர். ஏழாம் வீடு சுபகர்த்தாரி யோகத்துடன் இருப்பதைப் பாருங்கள். அந்த வீட்டிற்கு இரண்டு பக்கமும் சுபக்கிரகங்கள்.அத்துடன் அந்த வீட்டுக்கு அதிபதி, அந்த வீட்டிற்கு 9ல் அமர்ந்துள்ளார். இவைகள் நல்ல அமைப்புக்கள். ஜாதகனுக்கு அவனுடைய 24வது வயதில் திருமணம் ஆனது. நல்ல மனைவி கிடைத்தாள்.
3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?
ஒன்பதாம் வீட்டில் இரண்டு தீயவர்களுடன், மாந்தியும் சேர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கிறான். அந்த வீட்டுக்காரன் செவ்வாய் லக்கினத்திற்குப் 12ல். ஆகவே ஜாதகருக்கு வெளி நாட்டு வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை. இங்கேயே தன் சொந்த மண்ணில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்.
--------------------------------------------------------------------------
1. சாத்தூர் கார்த்தி
2. ரெட்ஃபோர்ட்
ஆகிய இருவரும் கேட்கப் பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்
பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்
கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------- -----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் அய்யா !
ReplyDeleteபுதிர் பாடங்களை அலசிய அனுபவம் என்ன சொகிறது என்றால், மிகவும் ஆழமாக
ReplyDeleteஅலச வேண்டியதில்லை. ஓரிரு அமைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. பல செய்திகளைத் தெரிந்து கொள்வதால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவது இயலாமல் போகிறதோ?
ரெட் ஃபொர்ட் ஜாதகரை மழைக்குக்கூட பள்ளி செல்லாதவர் என்று கூறியுள்ளார். நீங்களோ அவர் பள்ளிப்படிப்பை முடித்தவர் என்று கூறியுள்ளீர்கள்.எனவே ரெட்ஃபோர்ட் 2 பதில் சரியாகக் கூறியவரில்தான் சேர்க்க வேண்டும்.
சாத்தூர் கார்த்தியும் வெளிநாடு பற்றி உறுதியாகச் சொல்லவில்லை.மருத்துவத்திற்குச் சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த முறை 100க்கு 100 வாங்கியயவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
அதிக திறமை உடைய
ReplyDeleteஅவர்கள் எப்போதும்பாராட்டபடுவதில்லை
இசைஞானி இளையராஜா முதல்
இப்போ பத்ம விருதை நிராகரித்த
அம்மா ஜானகி அவர்கள் வரை
அடுக்கி கொண்டே போகலாம்
எம்ஜிஆருக்கு காலத்திற்கு பிறகே
பாரத ரத்னா வழங்கப்ப்ட்டது
சிவாஜிக்கு எத்தனை பேர்
தேடி வந்து விருது கொடுத்தனர்
திறமை உள்ளவர்கள் எல்லாம்
திரை மறைவில் தான்
இது தான் உண்மை
இது கசந்தாலும் ஏற்றுக் கொள்ளனும்
வாழ்க்கை என்பதே
வந்த படி ஏற்றுக் கொள்வதே..
Respected Sir,
ReplyDeleteHappy morning....
I am learning day by bay....
With kind regards,
Ravichandran m
புதிர் பாடங்களை அலசிய அனுபவம் என்ன சொகிறது என்றால், மிகவும் ஆழமாக
ReplyDeleteஅலச வேண்டியதில்லை. ஓரிரு அமைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. பல செய்திகளைத் தெரிந்து கொள்வதால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவது இயலாமல் போகிறதோ?
ரெட் ஃபொர்ட் ஜாதகரை மழைக்குக்கூட பள்ளி செல்லாதவர் என்று கூறியுள்ளார். நீங்களோ அவர் பள்ளிப்படிப்பை முடித்தவர் என்று கூறியுள்ளீர்கள்.எனவே ரெட்ஃபோர்ட் 2 பதில் சரியாகக் கூறியவரில்தான் சேர்க்க வேண்டும்.
சாத்தூர் கார்த்தியும் வெளிநாடு பற்றி உறுதியாகச் சொல்லவில்லை.மருத்துவத்திற்குச் சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த முறை 100க்கு 100 வாங்கியயவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
>>>>yes sir accepted your comments.
Vatthiyaar avarkal 4 m veettai pattriya ennudaiya alasal sariyaaka iruppathal athai sariyana vidaiyaaka edutthukkondar ena kolvom.
Thanks for your valuable comments for both Mr.KMRK and Our VAATTHIYAAR.
Sir,ennaiyum yoga class la serthukkonga pls.ennala unkalukku mail anuppa mudiyala.
ReplyDeleteSir,
ReplyDelete9th house shows abroad chances. If ragu relates with 9th house, he ll make native to go abroad. So in this horo, why he has not helped native. Because of Sani and mandhi with him?
Thanks,
Besides 9th lord is in 12 the house. So I think the person has good chance to go abroad. I am also not able to understand.
ReplyDelete//அதிக திறமை உடைய
ReplyDeleteஅவர்கள் எப்போதும்பாராட்டபடுவதில்லை//
வேப்பிலை சுவாமிகளும் கலந்துகொண்டால் கட்டாயம் பாராட்டுவோமில்ல!.
//எனவே இந்த முறை 100க்கு 100 வாங்கியயவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.//
ReplyDeleteஎன் மேற்சொன்ன கருத்தில் ஒரு மாற்றம்.
தோழர்பான்டியன் 3 கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார்.அவருக்குப் பாராட்டுக்கள்.
Krishnan Sir
ReplyDeletePaper revaluation ah ?
ok ok
whether he is india or outside india. Did he made money for his life that is the important. There are so many people who are living in abroad but they are just !!! noting to say more
ReplyDeleteநன்றி திரு.கே.எம்.ஆர்.கிருஷ்ணன் அவர்களே.
ReplyDeleteAyya mrk tholar pandiyan also a astrologer and as well as a good astrolgey teacher. So we dont need to giv an apriciate, we need to find only mistake and learn new things with his comments.
ReplyDeleteதிரு.செந்தில், என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் ஜோதிடர் அல்ல. அந்த தகுதியும் எனக்கில்லை. அந்த அமைப்பு எனது ஜாதகத்திலும் இல்லை. வாத்தியாரின் வகுப்பறையில் நான் ஒரு சாதாரன மாணவன், அவ்வளவே. எனினும், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி:)
ReplyDelete/////Blogger Sattur Karthi said...
ReplyDeleteவணக்கம் அய்யா !////
உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபுதிர் பாடங்களை அலசிய அனுபவம் என்ன சொகிறது என்றால், மிகவும் ஆழமாக
அலச வேண்டியதில்லை. ஓரிரு அமைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. பல செய்திகளைத் தெரிந்து கொள்வதால் ஒரு
திட்டவட்டமான முடிவுக்கு வருவது இயலாமல் போகிறதோ?
ரெட் ஃபொர்ட் ஜாதகரை மழைக்குக்கூட பள்ளி செல்லாதவர் என்று கூறியுள்ளார். நீங்களோ அவர் பள்ளிப்படிப்பை முடித்தவர் என்று
கூறியுள்ளீர்கள்.எனவே ரெட்ஃபோர்ட் 2 பதில் சரியாகக் கூறியவரில்தான் சேர்க்க வேண்டும்.
சாத்தூர் கார்த்தியும் வெளிநாடு பற்றி உறுதியாகச் சொல்லவில்லை.மருத்துவத்திற்குச் சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த முறை 100க்கு 100 வாங்கியயவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.//////
நீங்கள் சொன்னால் சரிதான்! நன்றி சார்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஅதிக திறமை உடைய
அவர்கள் எப்போதும்பாராட்டபடுவதில்லை
இசைஞானி இளையராஜா முதல்
இப்போ பத்ம விருதை நிராகரித்த
அம்மா ஜானகி அவர்கள் வரை
அடுக்கி கொண்டே போகலாம்
எம்ஜிஆருக்கு காலத்திற்கு பிறகே
பாரத ரத்னா வழங்கப்ப்ட்டது
சிவாஜிக்கு எத்தனை பேர்
தேடி வந்து விருது கொடுத்தனர்
திறமை உள்ளவர்கள் எல்லாம்
திரை மறைவில் தான்
இது தான் உண்மை
இது கசந்தாலும் ஏற்றுக் கொள்ளனும்
வாழ்க்கை என்பதே
வந்தபடி ஏற்றுக் கொள்வதே..//////
ஆமாம். அதுதான் யதார்த்தம். உண்மை! உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலை சுவாமி!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning....
I am learning day by bay....
With kind regards,
Ravichandran m/////
Not only you, I am also learning day by bay...!!!!!!!!!!!!!!!!
/////Blogger redfort said...
ReplyDeleteபுதிர் பாடங்களை அலசிய அனுபவம் என்ன சொல்கிறது என்றால், மிகவும் ஆழமாக அலச வேண்டியதில்லை. ஓரிரு அமைப்புக்களை வைத்தே
சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. பல செய்திகளைத் தெரிந்து கொள்வதால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவது இயலாமல் போகிறதோ?
ரெட் ஃபொர்ட் ஜாதகரை மழைக்குக்கூட பள்ளி செல்லாதவர் என்று கூறியுள்ளார். நீங்களோ அவர் பள்ளிப்படிப்பை முடித்தவர் என்று
கூறியுள்ளீர்கள்.எனவே ரெட்ஃபோர்ட் 2 பதில் சரியாகக் கூறியவரில்தான் சேர்க்க வேண்டும்.
சாத்தூர் கார்த்தியும் வெளிநாடு பற்றி உறுதியாகச் சொல்லவில்லை.மருத்துவத்திற்குச் சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த முறை 100க்கு 100 வாங்கியயவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
>>>>yes sir accepted your comments.
Vatthiyaar avarkal 4 m veettai pattriya ennudaiya alasal sariyaaka iruppathal athai sariyana vidaiyaaka edutthukkondar ena kolvom.
Thanks for your valuable comments for both Mr.KMRK and Our VAATTHIYAAR./////
நல்லது. விமர்சனங்களைப் புன்னகையோடு ஏற்றுக்கொள்வோம்! நன்றி!
/////Blogger madhu kutty said...
ReplyDeleteSir,ennaiyum yoga class la serthukkonga pls.ennala unkalukku mail anuppa mudiyala./////
ஏன் மெயில் அனுப்ப முடியவில்லை? என்னுடைய மெயில் முகவரி: classroom2007@gmail.com
மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்!
////Blogger KJ said...
ReplyDeleteSir,
9th house shows abroad chances. If ragu relates with 9th house, he ll make native to go abroad. So in this horo, why he has not helped
native. Because of Sani and mandhi with him?
Thanks,////
ஆமாம்! சனி மற்றும் மாந்தியின் கூட்டணிதான் காரணம்!!
/////Blogger PSS said...
ReplyDeleteBesides 9th lord is in 12 the house. So I think the person has good chance to go abroad. I am also not able to understand.////
சனி, ராகு மற்றும் மாந்தியின் கூட்டணியை விட்டு வீட்டீர்களே! அவர்களின் வலிமையை கணக்கில் எடுத்த்க்கொள்ளுங்கள். அப்போது பிடிபடும்!
////Blogger kmr.krishnan said...
ReplyDelete//அதிக திறமை உடைய
அவர்கள் எப்போதும்பாராட்டபடுவதில்லை//
வேப்பிலை சுவாமிகளும் கலந்துகொண்டால் கட்டாயம் பாராட்டுவோமில்ல!.//////
ஆமாம், நீங்கள் சொல்லும் திரை மறைவை விட்டு, நீங்களும் வெளிச்சத்திற்கு வாருங்கள் வேப்பிலையாரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete//எனவே இந்த முறை 100க்கு 100 வாங்கியயவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.//
என் மேற்சொன்ன கருத்தில் ஒரு மாற்றம்.
தோழர்பான்டியன் 3 கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார்.அவருக்குப் பாராட்டுக்கள்./////
நல்லது. வாத்தியாரின் சார்பில் பாராட்டிய மேன்மைக்கு நன்றி!
/////Blogger Ram said...
ReplyDeletewhether he is india or outside india. Did he made money for his life that is the important. There are so many people who are living in abroad but they are just !!! noting to say more/////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
/////Blogger C.Senthil said...
ReplyDeleteAyya mrk tholar pandiyan also a astrologer and as well as a good astrolgey teacher. So we dont need to giv an apriciate, we need to find only
mistake and learn new things with his comments./////
காசா, பணமா? பாராட்டுவதில் என்ன தவறு? பாராட்டு என்பது ஊக்க மருந்து! Tonic
//////Blogger thozhar pandian said...
ReplyDeleteதிரு.செந்தில், என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் ஜோதிடர் அல்ல. அந்த தகுதியும் எனக்கில்லை. அந்த அமைப்பு எனது ஜாதகத்திலும்
இல்லை. வாத்தியாரின் வகுப்பறையில் நான் ஒரு சாதாரன மாணவன், அவ்வளவே. எனினும், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி:)////
அமெரிக்க மண்ணில் இருந்தாலும், இதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் ஒதுக்கும் மனம் இருக்கிறதே, அதற்காவது பாராட்டலாமா?
நீங்கள் சொன்னால் சரிதான் வாத்தியார் அய்யா. மிக்க நன்றி:)
ReplyDeleteஉண்மை என்னவென்றால் உங்கள் சுவையான பதிவுகளை படிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. எப்போது எல்லாம் சற்று நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் உங்கள் பதிவுகளை படித்துக் கொண்டிருப்பேன்.