Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2
தொடர் - பகுதி 2
ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத் துள்ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி
அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.
அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------
அரச குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை Born with Silver Spoon என்று சொல்வார்கள் ( Meaning: Born into a wealthy family) பிறப்பே அதிர்ஷ்ட கரமானதாக அமைந்துவிடும்! பாலூட்டுவதற்கும் சீராட்டுவதற்கும் வீட்டில் நிறைய வேலைக்காரர்கள்/காரிகள் இருப்பார்கள். பொடி நடையாக நடந்து செல்லாமல் எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லலாம். கோட்டா பிரச்சினையின்றி எந்தப் பல்கலைக் கழகத்தில் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.
கஷ்டமே இருக்காதா? அதெப்படி இல்லாமல் இருக்கும்? அப்படிப் பட்ட பிறவிக்கும் பரல்கள் 337 தானே?
”பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” என்று கவியரசர் பாடி வைத்ததுபோல வேறு சிரமங்களும் இருக்கும்.
அதுபோல அதற்கு எதிரான முறையில் சிலருடைய பிறப்பு அமைந்துவிடுவதும் உண்டு.
ஜாதகப்படி லக்கினத்தில் சனி இருக்கும் நிலைமையில் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக அமைந்து விடும். லக்கினத்தை எந்த சுபக்கிரகமும் பார்க்காமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் இருக்கும் சனியுடன் எந்த சுபக் கிரகமும் சேர்ந்திருக்காமல் இருந்தாலோ அந்த நிலைமை நிச்சயமாக அமைந்து விடும்.
அது சம்பந்தமாக இன்று ஒரு பாடலைப் பார்ப்போம்:
“பாரப்பா இன்னுமொரு புதுமைகேளு
பலமுள்ள கதிர்மைந்தன் பதியில் நிற்கில்
சீரப்பா இளமையில் மனோவியாதி
செழுமையுள்ள பருவத்தில் செல்வமுண்டு
வீரப்ப வேந்தனுடைய பொருளுஞ் சேரும்
விளங்குகின்ற கொடியோர்கள் சேரலாகா
கூறப்பா போகருடகடா ஷத்தாலே
கொற்றவனே பதியறிந்து பலனைக்கூறே!
.....................புலிப்பாணி முனிவர்
ஆமாம். லக்கினத்தில் சனி இருந்தாலும் பரவாயில்லை. சனியுடன், ராகு அல்லது கேது அல்லது சூரியன் அல்லது செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரக்கூடாதாம்.
சேர்ந்திருந்தால் என்ன செய்வது? வேறு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும், அதைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
what about saturn and moon in lagna , sir for ladies ? i heard that it is called punarpoo dosham. but how will the life be in general ?
ReplyDelete///திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.///
ReplyDeleteசோம்பேறிகளையா மக்கள் விரும்புகிறார்கள்?
Sir , what if Saturn is in between lagna and 2nd house ? for me , I was born on the day of sani peyarchi .. then what is the result ?
ReplyDeleteகுரு வணக்கம் ,
ReplyDeleteஆசரியர்தின நல வாழ்த்துக்கள்.
மேஷ லக்னத்தில் குரு + சனி கூட்டணி கெடுதலா அல்லது நல்லது ஒன்னும் பெரிசா நடக்காதா ?
RAMADU.
வேப்பிலை said...
ReplyDelete///திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.///
சோம்பேறிகளையா மக்கள் விரும்புகிறார்கள்?//
சகோதரா, அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகமில்லை
பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகமில்லை.
பொருளிருந்தால்தான் நீங்க எவ்வள்வுதான் புத்திசாலியா படித்திருந்தாலும் அழகாயிருந்தாலும் ரொம்ப வ்றுமையிலிருந்தால் விரும்பமாட்டார்கள் அந்த சோம்பேறிங்களை கல்யாணம் செய்து கொள்வார்கள் எடுத்துகாட்டு உங்களுக்கு தெரியும் போய் எல்லா பழைய பாடத்தையும் படிங்கள்
Good Morning Sir
ReplyDeleteவணக்கம் ஐயா, இப்போதெல்லாம் லக்னத்தில் சனி,2ல் சனி,7ல் சனி இருக்கும் பையனின் ஜாதகத்தை பெண்வீட்டார் ஏற்றுக்கொள்ள தயக்கப்படுகிறார்கள். நன்றி ஐயா.
ReplyDeletevanakam.sir.simmalaknam.laknathil.suryan..sani.puthan...eppadi.erunthulam..kastmaga..erukkma.
ReplyDeleteபுலிப்பாணி பாடல்கள் இக்காலத் தமிழ் அளவு எளிமையாக உள்ளதே! இந்த வ்யாக்ரபாதர் 50வது தலைமுறையாக இருக்கலாம்.
ReplyDeleteகதிர்மைந்தன்=சூரியனின் மகன்,அதாவது சனைச்சரன்.
கொடியோர்கள்=செவ்வாய், ராகு, கேது, மாந்தி
போகருட கடாஷத்தாலே= போகர் என்ற சித்தரின்(?)கண் அருளாலே
நல்ல பாடலுக்கு நன்றி ஐயா!
/////Blogger murali krishna g said...
ReplyDeletewhat about saturn and moon in lagna , sir for ladies ? i heard that it is called punarpoo dosham. but how will the life be in general ?/////
புனர்பூ தோஷம் திருமண வாழ்க்கையில் பிரிவை உண்டாக்கும். சுபக்கிரகங்களின் பார்வை உள்ளதா என்று பார்த்துவிட்டு அதை முடிவு செய்ய வேண்டும்!
logger வேப்பிலை said...
ReplyDelete///திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.///
சோம்பேறிகளையா மக்கள் விரும்புகிறார்கள்?//////
செல்வந்தன் என்று தானே சொல்லியுள்ளேன்! சோம்பேறித்தனம் இங்கே எங்கே வந்தது வேப்பிலையாரே?
////Blogger DevikaArul said...
ReplyDeleteSir , what if Saturn is in between lagna and 2nd house ? for me , I was born on the day of sani peyarchi .. then what is the result ?/////
அதாவது பார்டர் பர்த்! சரிதானே? பார்டர் பர்த்திற்கு வாக்கியப் பஞ்சாங்கத்தை உபயோகித்து ஜாதகத்தைக் கணியுங்கள்!
////Blogger RAMADU Family said...
ReplyDeleteகுரு வணக்கம் ,
ஆசரியர்தின நல வாழ்த்துக்கள்.
மேஷ லக்னத்தில் குரு + சனி கூட்டணி கெடுதலா அல்லது நல்லது ஒன்னும் பெரிசா நடக்காதா ?
RAMADU./////
மேஷ லக்கினத்தில் சனி நீசமாகி விடுவாரே! அவர் என்ன பெரிதாகச் செய்யப் போகிறார்?
////Blogger Sattur Karthi said...
ReplyDeleteGood Morning Sir/////
நல்லது. நன்றி!
////Blogger Geetha Lakshmi A said...
ReplyDeleteவணக்கம் ஐயா, இப்போதெல்லாம் லக்னத்தில் சனி,2ல் சனி,7ல் சனி இருக்கும் பையனின் ஜாதகத்தை பெண்வீட்டார் ஏற்றுக்கொள்ள தயக்கப்படுகிறார்கள். நன்றி ஐயா.////
திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது சகோதரி!
//////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam.sir.simmalaknam.laknathil.suryan..sani.puthan...eppadi.erunthulam..kastmaga..erukkma./////
ஈஸ்வரி என்ற பெயரை வைத்துக்கொண்டு எதற்காக வீண் கவலைகள்? அடுத்த தசா புத்தியில் எல்லாம் சரியாகும்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபுலிப்பாணி பாடல்கள் இக்காலத் தமிழ் அளவு எளிமையாக உள்ளதே! இந்த வ்யாக்ரபாதர் 50வது தலைமுறையாக இருக்கலாம்.
கதிர்மைந்தன்=சூரியனின் மகன்,அதாவது சனைச்சரன்.
கொடியோர்கள்=செவ்வாய், ராகு, கேது, மாந்தி
போகருட கடாஷத்தாலே= போகர் என்ற சித்தரின்(?)கண் அருளாலே
நல்ல பாடலுக்கு நன்றி ஐயா!////
பின்னால் வந்த புலவர்கள் யாராவது எளிமைப் படுத்தியிருக்கலாம். நன்றி!
///செல்வந்தன் என்று தானே சொல்லியுள்ளேன்! சோம்பேறித்தனம் இங்கே எங்கே வந்தது வேப்பிலையாரே?///
ReplyDeleteதன் வேலையை தாமே செய்யாமல்
தன் பணியாட்கள் செய்யவேனும் என
நினைப்பவர்களை எப்படி சொல்வது
நீங்களும் "சோம்பேறிகள்"என்று தானே
சொல்வீர்கள். அதைத்தானே
சொன்னார் இந்த வேப்பிலையார்
///sundari said...
ReplyDeleteசகோதரா, அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகமில்லை
பொருளில்லாதவர்களுக்கு///
பொருளையோ அல்லது
அருளையோ சொல்லவில்லை தோழி
தன் வேலையை தாமே செய்யாமல்
பிறர் செய்யனும் என நினைப்பவர்கள்
சோம்பேறிகள் தானே
அது தவறு என்கிறீர்களா?