பக்தி மலர்
திருப்புகழ் பாடும் வேளையிலே சிறப்புகள் கூடும் வாழ்வினிலே’ என்ற பல்லவியுடன் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் முருகப் பெருமானின் புகழைப் பாடும் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/aUxoM8L42wQ
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமையான பாடல்
ReplyDeleteஅப்பன் முருகனின் அருள்மழை பொழிந்தது...
அதிகாலையில் எழுந்து சரவணப் பொய்கையில் நீராடி தேகமெங்கும் திருநீறு தரித்து காவியுடை உடுத்தி கழுத்திலே ஒரு சிறிய உத்திராட்ச்ச மாலையும் அணிந்துக் கொண்டு இது போன்ற தேவ கானமத்தை செவிமடித்துக் கொண்டு பழனி மலை ஏறினாள் எத்தனை பேரானந்தமாக இருக்கும்.
என்ன செய்வது அதற்கு எல்லோருக்குமா கொடுப்பினை இருக்கிறது....
என்செய்வேன் முருகா ஏதிலியாய் எனைப்படைத்து
எனை எத்தனை தூரம் அனுப்பிவிட்டாய்
இன்னும் எத்தனை காலம் எனை
நீ இப்படிச் செய்வாய்
சிந்தனை தோறும் நேரமெல்லாம் என்
சிந்தையில் வந்து தேனூறும் -இருந்தும்
முந்தையில் யானுற்ற பாவமது -எந்தை
உன்னை என் விழிகளுக்கு தூரமாக்கியதே
என் எண்ணம் அதை நீ அறிவாய்
உந்தன் எண்ணம் அதை யார் அறிவார்
சிந்தை நிறைந்து வந்தென் மனப்
பொந்தையில் வந்தமர் வேந்தே!
வேல் முருகா! திருப் பழனி முருகா!
வேதனை தீர்க்க விரைந்தே நீ ஓடிவா!
ஒரு கணமேனும் அவனது சிந்தனையில் ஆழ புகச் செய்த அற்புதப் பாடல்..
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
முருகா..
ReplyDeleteமுருகா..
ஆக..
ReplyDeleteபேச சொல்கின்றீர்
பேசாமல் இருக்க சொல்கிறார் சித்தர்
எப்படி பேசுகிறோம்
என்பதை எப்படி அளப்பது
(பேச்சின் விளைவு தெரியும் முன்னர்)
வணக்கம் ஐயா, எப்படியெல்லாம் பேசக்கூடாது என்ற கருத்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஐயா, நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDelete