மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.8.13

Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

 
Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

short cut என்றால் a route that is shorter than the usual one மற்றும் a means of saving time or effort என்று பொருள்படும்

மனிதர்களுக்குப் பொதுவாக, பொதுவாக என்ன 90/100 பேர்களுக்கு குறுக்கு வழி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் போது ஏராளமான விதிமுறைகள், பாடல்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும்போது, உள்ள முக்கியமான சிரமம் என்னவென்றால் அனைத்தையும் மண்டையில் ஏற்றி நினைவில் வைத்துக் கொள்வது ஆகும். பலருக்கும் அது சாத்தியப் படுவதில்லை. பத்துப் பாடங்களை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு விட்டு, அடுத்து உள்ள பத்துப் பாடங்களைப் படித்து முடிக்கும்போது, முதலில் ஏற்றிய பத்துப் பாடங்களில் பாதி மறந்து போயிருக்கும். நினைவில் தங்காது. நினைவில் தங்குவது என்பது நமது முளையில் உள்ள Hard Disc Capacityயைப் பொறுத்ததாகும். ஒரு Terra Bite அளவுள்ள மூளை என்றால் பல விஷயங்கள் நினைவில் நிற்கும். ஆனால் 1995ஆம் ஆண்டில் இருந்தது போல, 486Dx கணினிகளில் இருந்ததுபோல 1 GB க்கும் குறைவான அளவுள்ள மூளை என்னும் போது என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.

அதற்குக் கை கொடுப்பதுதான் அஷ்டகவர்க்கம். அது தெரிந்திருந்தால் போதும். அதை வைத்து உங்கள் ஜாதகத்தையும், மற்றவர்களுடைய ஜாதகத்தையும் நீங்கள் அலசலாம். அஷ்டவர்கத்தை வைத்து தனி வகுப்பாக சுமார் 50 பாடங்களை நடத்தினேன். அந்தப் பாடங்கள் எல்லாம் புத்தகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புத்தகம் சுமார் ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும். அதற்கு முன் தயாராகிக்கொண்டிருக்கும் அடிப்படைப் பாடங்களைப் பற்றிய இரண்டு புத்தகங்கள் வெளியான பிறகுதான் அது வெளிவரும். ஆகவே பொறுத்திருங்கள்.

அதுபோல யோகங்களும் முக்கியமானதாகும். ஒரு 100 யோகங்களையாவது, ஜாதகத்திற்கான யோக அமைப்புக்களையாவது நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அது சாத்தியமானதே.

வாரம் 2/3 யோகங்கள் வீதம், முக்கியமான 150 யோகங்களை எழுதலாம் என்று உள்ளேன். இங்கே அல்ல! இங்கே எழுதினால் எழுதியவைகள் களவுபோகும் அபாயம் உண்டு. இது திறந்த வெளி வகுப்பு. இங்கே எழுதுவது என்பது திறந்த வெளியில் ஒரு பெண் குளிப்பதற்குச் சமமானது. ஆகவே classroom337 என்ற என்னுடைய தளம் (வகுப்பு) காலியாகத்தான் உள்ளது. அங்கே எழுதலாம் என்றுள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்க வுள்ளேன். ஆகவே அதில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ளவர்கள் அதன் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள மெயில் அனுப்புங்கள். மறக்காமல் சப்ஜெக்ட் பாக்ஸில் யோகா கிளாஸ் (That is please mention as Yoga Class in the Subject Box) என்று குறிப்பிடுங்கள்.

யோகா பாடங்கள் பிறகு புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்

உதாரணத்திற்கு ஒரு யோகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------------------
வேட்டு வைக்கும் யோகங்கள்!

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும் அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.

1. பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
++++++++++
2
மாத்ருநாச யோகா: (தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள் பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.
+++++++++++
இன்று ஆடி அமாவாசை. உகந்த நாள். ஆகவே இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அத்துடன் அந்த வகுப்பை இன்று துவங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. ஆடி அமாவாசை. உகந்த நாள்.
    அருமையான வகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சியான அறிவிப்பு.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning.. Your announcement like southwest monsoon for everybody.

    Have a nice day.

    With kind regards,
    Ravichandran

    ReplyDelete
  4. ஆஹா எனக்கு இரண்டு யோகங்களும் உள்ளது .
    பிந்து யோகம்: நால்லாம் வீடு அதிபதி சுக்ரன் நீசம், அவன் எட்டில் குரு மற்றும் சனியுடன். மிக நெருங்கிய உறவுகள் அனைவர்க்கும் என்னை பிடிக்காது. தூரத்தில் உள்ள உறவுகளுக்கு நான் ஒரு முன்னுதாரணம். எப்படி இது என்று புரியவில்லை ?! ஒரு வேளை சந்திரனில் கேந்திரத்தில் இருப்பதாலோ ?
    மாத்ரு யோகம்: 5ம் வீட்டில் சந்திரன். (மிதுனத்தில்). கேதுவும்(12) , ராகுவும்(6-ல்) இரண்டு பக்கமும் வேல் கம்பு வீச்சரிவாள் வுடன் காவல். அம்மாவுடன் மிக நெருக்கம். 5ம் வீட்டின் அதிபதி ஒன்பதில் நீசம் பெற்ற சூரியனுடன். அதனால் இருக்குமோ ?ஆனால் அம்மாவுடன் கழிந்த நாட்களில் அப்பா வேலை பொருட்டு வேறு ஊரில் இருந்தார் . இருவரும் சேர்ந்து இருந்த வேலையில் நான் தனியாக இருந்தேன்( வேலை ,படிப்பு , திருமணம் ) அடுத்து வந்த நாட்களில் அம்மாவுடன் கழித்த நாட்கள் எல்லாம் எண்ணி கொண்டே(கிளம்பும் நாளை )இருப்பதாய் கழியும்.

    ReplyDelete
  5. ஆஹா இதுவா விஷயம்.
    எனக்கு நான்காம் அதிபதி செவ்வாய் மூன்றில் ராகு மற்றும் சனியுடன். நல்லதே எல்லோருக்கும் செய்தாலும் வருஷம் ஒருத்தர் என்று உறவுக்குள் பகை பகை பகை.

    கன்னி ராசி.மகர லக்னம்.லக்னத்தில் சுக்ரனுடன் புதன்.தர்மகர்மாதிபதி யோகம் இருக்கு.ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது என்பது தானே விதி.

    ReplyDelete
  6. Thank you sir for the new class announcement

    ReplyDelete
  7. Very much interested to learn about yogas. Thank you so much Ayya.

    ReplyDelete
  8. Very much interested in learning the yogas. Thank you Ayya.

    ReplyDelete
  9. 4க்கு உடைய சுக்ரன் 3ல் நீசம்;கேதுவுடன் கூட்டணி. உறவினர்களுடன் பலமுறை சண்டை வந்துள்ளது. ஆனால் உடனே விட்டுக் கொடுத்து சகஜமாகி விடுவேன்.

    சந்திரனுக்கு ஒரு புறம் செவ்வாய், மற்றொரு புறம் சூரியன், சனி, புதன் கூட்டணி.அம்மாவை மனதாற நேசித்தாலும், அதனை வெளிக்காட்ட‌ முடியாத குடும்ப சூழல்.

    யோகங்கள் இரண்டுமே சரியாக உள்ளன.

    பாடத்திற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  10. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    ஆடி அமாவாசை. உகந்த நாள்.
    அருமையான வகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஐயா..!/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger eswari sekar said...
    vanakamsir/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger Kalai Rajan said...
    மிக்க மகிழ்ச்சியான அறிவிப்பு./////

    உங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.. Your announcement like southwest monsoon for everybody.
    Have a nice day.
    With kind regards,
    Ravichandran////

    தென்மேற்குப் பருவமழையுடன் ஒப்பிட்டமைக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது. எல்லா அணைகளும் (மனங்களும்) நிறைந்து விடும்!

    ReplyDelete
  14. ////Blogger கலையரசி said...
    ஆஹா எனக்கு இரண்டு யோகங்களும் உள்ளது .
    பிந்து யோகம்: நால்லாம் வீடு அதிபதி சுக்ரன் நீசம், அவன் எட்டில் குரு மற்றும் சனியுடன். மிக நெருங்கிய உறவுகள் அனைவர்க்கும் என்னை பிடிக்காது. தூரத்தில் உள்ள உறவுகளுக்கு நான் ஒரு முன்னுதாரணம். எப்படி இது என்று புரியவில்லை ?! ஒரு வேளை சந்திரனில் கேந்திரத்தில் இருப்பதாலோ ?
    மாத்ரு யோகம்: 5ம் வீட்டில் சந்திரன். (மிதுனத்தில்). கேதுவும்(12) , ராகுவும்(6-ல்) இரண்டு பக்கமும் வேல் கம்பு வீச்சரிவாள் வுடன் காவல். அம்மாவுடன் மிக நெருக்கம். 5ம் வீட்டின் அதிபதி ஒன்பதில் நீசம் பெற்ற சூரியனுடன். அதனால் இருக்குமோ ?ஆனால் அம்மாவுடன் கழிந்த நாட்களில் அப்பா வேலை பொருட்டு வேறு ஊரில் இருந்தார் . இருவரும் சேர்ந்து இருந்த வேலையில் நான் தனியாக இருந்தேன்( வேலை ,படிப்பு , திருமணம் ) அடுத்து வந்த நாட்களில் அம்மாவுடன் கழித்த நாட்கள் எல்லாம் எண்ணி கொண்டே(கிளம்பும் நாளை )இருப்பதாய் கழியும்.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. ////Blogger அமுதா கிருஷ்ணா said...
    ஆஹா இதுவா விஷயம்.
    எனக்கு நான்காம் அதிபதி செவ்வாய் மூன்றில் ராகு மற்றும் சனியுடன். நல்லதே எல்லோருக்கும் செய்தாலும் வருஷம் ஒருத்தர் என்று உறவுக்குள் பகை பகை பகை.
    கன்னி ராசி.மகர லக்னம்.லக்னத்தில் சுக்ரனுடன் புதன்.தர்மகர்மாதிபதி யோகம் இருக்கு.ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது என்பது தானே விதி.////

    அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இருந்தால் போதும். அது உங்களுக்கு இருக்கிறது! வேறு என்ன வேண்டும் சகோதரி?

    ReplyDelete
  16. ////Blogger arul said...
    good announcement/////

    நல்லது. நன்றி அருள்!

    ReplyDelete
  17. ////Blogger SG Krish said...
    Thank you sir for the new class announcement////

    நல்லது. நன்றி சகோதரரே!!

    ReplyDelete
  18. ////Blogger Mathy said...
    Very much interested to learn about yogas. Thank you so much Ayya./////

    உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சகோதரி! ஆர்வமும் முயற்சியும் இருந்தால் போதும் ஜோதிடம் தன்னால் வசப்படும்!

    ReplyDelete
  19. /////Blogger kmr.krishnan said...
    4க்கு உடைய சுக்ரன் 3ல் நீசம்;கேதுவுடன் கூட்டணி. உறவினர்களுடன் பலமுறை சண்டை வந்துள்ளது. ஆனால் உடனே விட்டுக் கொடுத்து சகஜமாகி விடுவேன்.
    சந்திரனுக்கு ஒரு புறம் செவ்வாய், மற்றொரு புறம் சூரியன், சனி, புதன் கூட்டணி.அம்மாவை மனதாற நேசித்தாலும், அதனை வெளிக்காட்ட‌ முடியாத குடும்ப சூழல்.
    யோகங்கள் இரண்டுமே சரியாக உள்ளன.
    பாடத்திற்கு நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. சுருக்கமான பதிவு தகவல்களை இன்னும்
    சுருக்கி தந்து இருக்கலாம்

    குறுக தரித்த
    குறள் போல

    இது போன்ற பொக்கிஷங்களை
    இப்படி சொல்லலாமா?

    ReplyDelete
  21. ////Blogger வேப்பிலை said...
    சுருக்கமான பதிவு தகவல்களை இன்னும்
    சுருக்கி தந்து இருக்கலாம்
    குறுக தரித்த
    குறள் போல
    இது போன்ற பொக்கிஷங்களை
    இப்படி சொல்லலாமா?////

    முடிந்த அளவு சுருக்கமாகத்தான் கொடுத்துள்ளேன் வேப்பிலையாரே!

    ReplyDelete
  22. /////Blogger C Jeevanantham said...
    Thank you for today's class sir./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com