தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2
புதிய தொடர் - பகுதி இரண்டு
ஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது! ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று ஏராளமான பாடல்கள் இருக்கின்றன!
இன்றைய வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்
-------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் இருந்த தர்மம், நியாயம் எல்லாம் காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதுபோல நன்றி, விசுவாசம் எல்லாம் இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது.
ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கலாமா? அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நன்றியோடு இருக்க வேண்டாமா? உதவி செய்தவர் உறவினர் ஆக இருக்கட்டும் அல்லது நண்பராக இருக்கட்டும் அல்லது மூன்றாவது மனிதராக இருக்கட்டும், செய்த நன்றியை நாம் மறக்கலாமா?
அது பொருள் உதவி அல்லது உடல் உழைப்பால் செய்த உதவி என்று எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும் உதவி உதவிதானே?
படிப்பதற்கு உதவி செய்தவர், அல்லது வேலை கிடைப்பதற்கு உதவி செய்தவர் அல்லது நமக்கு வேண்டிய ஊருக்கு இடமாற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர் அல்லது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தவர் என்று நூற்றுக் கணக்கான விதங்களில் உதவி கிடைத்திருக்கலாம். அது சின்ன உதவியோ அல்லது பெரிய உதவியோ - அளவு முக்கியமில்லை. உதவி உதவிதானே? மறப்பது எப்படி நியாயம்?
”என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொண்ட மகற்கு”
என்று வள்ளுவப் பருந்தகை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே - படித்திருக்கிறோம் அல்லவா? அதனால் நாம் நன்றி உணர்வோடு இருப்பது முக்கியமில்லையா?
ஏறிவந்த ஏணியை மறக்கலாமா? இன்று சிலர் ஏறிவந்த ஏணியை, ஏறியபிறகு. எட்டி உதைத்துவிட்டுச் செல்லும் வேலையையும் செய்கிறார்கள்.
அதைக் கவியரசரும் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்திருக்கிறார். பல நன்றி கெட்டவர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஒரு பாடலில் அதை அழகாகப் பதிவு செய்தும் இருக்கிறார். அந்தப் பாடலை இன்று பார்ப்போம். சில நன்றி கெட்டவர்களால் நாம் நொந்து போயிருக்கும் போது ஆறுதல் தருவதாக இருக்கும் அந்தப் பாடல்!
மனிதர்களின் உள் மனதை அப்படியே இரண்டே வரிகளில் இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறார்:
”பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......”
குழந்தைப் பருவத்தில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை, ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாயகன் பாடுவதைப் போன்ற சூழலில் இப்படி எழுதுகிறார்
”பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ”
அத்துடன் விட்டாரா? குழந்தையின் மனப்பாங்கை அப்படியே அசத்தலாகவும் சொல்கிறார்!
”ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ”
நன்றிகெட்ட மக்களைப் பற்றி அழுத்தமாக இரண்டு வரிகளில் இப்படி சொல்கிறார்:
”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா”
வழக்கம்போல. ஒரு தீர்வையும் சொல்கிறார் அவர். நன்றி கெட்டவர்களை மறந்து விட்டு நாம் நிம்மதியாக இருப்பதற்கு இதைத்தான் செய்ய வேண்டுமாம்!
”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா”
அதெப்படி பிள்ளையாய் இருக்க முடியும் என்று கேட்காதீர்கள் - எத்தனை வயதானால் என்ன? ஒரு குழந்தையின் மனதோடு, குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார். பாடல் குழந்தைக்குச் சொல்வது போல நமக்குச் சொல்லப்பட்ட பாடல் அதை மனதில் வையுங்கள்.
முழுப்பாடலையும் ஒலி, ஒளியுடன் கேட்க வேண்டுமா? இந்த சுட்டியில் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நன்றியை பட்டியலிட்ட
ReplyDeleteநல்ல பாடல்
"எந்நன்றி கொண்டார்க்கும்"
என எழுதியது
இறைவன் மனிதனுக்கு செய்தமைக்கு
இவன் நன்றி மறக்கலாமா? என்பதற்கு
"செய்நன்றி" என்பது தமிழ் இலக்கணத்தில்
செய்த, செய்யும், செய்கின்ற என
முக்காலமும் காட்டும் வினைத்தொகை
முக்காலத்திலும் உதவிசெய்யும்
இறைவனை மறக்கலாகாது என்பதற்காக
இதனை மறந்து நட்பிற்கும் உறவுக்கும்
என நாம் எடுத்துக் கொள்வது
எப்படி சரியாகும்?
இறைவழிபாடே நன்றியின் வெளிப்பாடே
இதை இனியேனும் அறிவோமா!?!
//ஏறிவந்த ஏணியை மறக்கலாமா? இன்று சிலர் ஏறிவந்த ஏணியை, ஏறியபிறகு. எட்டி உதைத்துவிட்டுச் செல்லும் வேலையையும் செய்கிறார்கள்.///
ReplyDeleteஇதனால் ஏணிக்கு என்ன நஷ்டம்
இவர் நன்றி சொல்லனும்னனு ஏன்
இவ்வளவு வருத்தப்படுகின்றீர்கள்
இத்தனையும் எதற்கு வாத்தி(யாரே)
.......
///குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார். ////
குழந்தை மறக்கும் என்பது சரியல்ல
குழந்தை உளவியல் அறிந்தவருக்கு
இந்த குழந்தைகளின் உள்ளுணர்வு
இப்படியல்ல என்பதை சொல்வார்கள்
சித்ரா பௌர்னமி, பூந்தளிர் போன்ற
சில படங்கள் இதனை விளக்கியுள்ளது
குழந்தை போலிருக்க சொல்வது
குழந்தையால் எதுவும் செய்ய இயலாது
அது போல நன்றி மறந்த
அவர்களை எதுவும் செய்ய முடியாது
பழிவாங்காமல் அவர்கள்
பண்பறிந்து நடவுங்கள் என்பதாக ....
கவிஞரை அவரவர் எண்ணப் பாங்கில்
கண்டு கொள்ளலாம். அதனால்
நாம் சொல்வதே சரி என
நம்மிடம் யாரேனும் வாதிற்கு வந்தால்
http://www.youtube.com/watch?v=6dt3lSdGFPc
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteநன்றியை பட்டியலிட்ட
நல்ல பாடல்
"எந்நன்றி கொண்டார்க்கும்"
என எழுதியது
இறைவன் மனிதனுக்கு செய்தமைக்கு
இவன் நன்றி மறக்கலாமா? என்பதற்கு
"செய்நன்றி" என்பது தமிழ் இலக்கணத்தில்
செய்த, செய்யும், செய்கின்ற என
முக்காலமும் காட்டும் வினைத்தொகை
முக்காலத்திலும் உதவிசெய்யும்
இறைவனை மறக்கலாகாது என்பதற்காக
இதனை மறந்து நட்பிற்கும் உறவுக்கும்
என நாம் எடுத்துக் கொள்வது
எப்படி சரியாகும்?
இறைவழிபாடே நன்றியின் வெளிப்பாடே
இதை இனியேனும் அறிவோமா!?!////
கவிஞர் எழுதியதும் மனிதனுக்காகத்தான், வாத்தியார் பதிவிட்டதும் மனிதனுக்காகத்தான். இதில் இறைவனை நுழைத்து எதற்காகக் கும்மி அடிக்கிறீர்கள். அதுவும் இந்த அதிகாலை வேளையில்!:-)))
/////Blogger வேப்பிலை said...
ReplyDelete//ஏறிவந்த ஏணியை மறக்கலாமா? இன்று சிலர் ஏறிவந்த ஏணியை, ஏறியபிறகு. எட்டி உதைத்துவிட்டுச் செல்லும் வேலையையும் செய்கிறார்கள்.///
இதனால் ஏணிக்கு என்ன நஷ்டம்
இவர் நன்றி சொல்லனும்னனு ஏன்
இவ்வளவு வருத்தப்படுகின்றீர்கள்
இத்தனையும் எதற்கு வாத்தி(யாரே) ....../////.
ஏணி ஜடப் பொருள். ஏணி போல் உதவி செய்த மனிதன் ஜடமல்ல. நன்றி கெட்டவனைப் பார்க்கும்போது மன வலி உண்டாகுமா? உண்டாகாதா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார். ////
குழந்தை மறக்கும் என்பது சரியல்ல
குழந்தை உளவியல் அறிந்தவருக்கு
இந்த குழந்தைகளின் உள்ளுணர்வு
இப்படியல்ல என்பதை சொல்வார்கள்
சித்ரா பௌர்னமி, பூந்தளிர் போன்ற
சில படங்கள் இதனை விளக்கியுள்ளது
குழந்தை போலிருக்க சொல்வது
குழந்தையால் எதுவும் செய்ய இயலாது
அது போல நன்றி மறந்த
அவர்களை எதுவும் செய்ய முடியாது
பழிவாங்காமல் அவர்கள்
பண்பறிந்து நடவுங்கள் என்பதாக ....
கவிஞரை அவரவர் எண்ணப் பாங்கில்
கண்டு கொள்ளலாம். /////
ஆமாம். அதுதான் உண்மை. உங்கள் எண்ணப்பாங்கிற்கு இப்பாடல் ஒத்து வரவில்லை என்றால், நீங்கள் விட்டு இருக்கலாம். அதை விடுத்து வேப்பிலை கஷாயத்துடன் பின்னூட்டம் இட்டால் என்ன செய்வது?
எத்தனை வயதானால் என்ன? ஒரு குழந்தையின் மனதோடு, குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார்.
ReplyDeleteகள்ளம் இல்லா பிள்ளை
உள்ளம் மனம் கவருகிறது ,,!
///”நன்றி கெட்ட மாந்தரடா
ReplyDeleteநானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா”///
எத்தனை நொந்திருந்தால் இப்படிப் பாடிடுவான் இக்கவி...
நன்றி என்பதே....
நன்மைத் தனக்கு ஏதுமின்றி (அதைக் குறிக்கோளாக கொள்ளாது) பிறருக்குச் செய்யும் உதவி... அந்தக் காரியத்திற்கு காரணமான உணர்வு!
பெரும்பாலும் அன்பினாலே அது விளையும்...
ஆக, கொள்ளப் படுவது அங்கே அன்பும் அல்லவா...
அன்பு என்பது தெய்வத் தன்மையல்லவா....
அது உறைவது நல்லவர் உள்ளத்தில் அல்லவா...
அப்படி நன்றிகெட்ட உணர்வு மிகும் பொது அது உள்ளத்தை வருத்தும் அல்லவா....
அப்படி நன்றிகெட்ட உலகை எண்ணி கவிஞன் கொட்டிய வரிகள் அல்லவா இவைகள்....
தாங்காத் துயருக்கு மருந்து தேடும் கவிஞன்
கண்ணா! நீ எத்தனை அருமையாக சிரிக்கிறாய்..
உனது மொழிதான் என்னவோ! என்று வியக்கிறார்..
கடைசியாக நானும் ஒருக் குழதந்தையாக
இருந்துவிடக் கூடாதா என்றே தவிக்கிறார்..
"ஒரு குழந்தையைப் போல் இருங்கள்" என்றார் ஏசு
நமது கவியரசர்! ஏசு காவியம் பாடியவர் ஆயிற்றே.
அருமையான பாடல்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா!
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."
'கைம்மாறு கருதா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு'
ReplyDelete'உதவி வரைத்தன்று உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'
'எல்லாப் புகழும் இறைவனுக்கே'
சிந்த்னையைத்தூண்டும் கட்டுரைக்கு நன்றி ஐயா!
அய்யா
ReplyDeleteவேப்பிலை சாமிகளின் கார்ட்டுன் அருமை
why elders told child is god is because of this i think
ReplyDeleteஉண்மைதான் கண்கள் கூட கலங்கிடுது இந்த பாடல் வரிகளால்.......
ReplyDelete////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஎத்தனை வயதானால் என்ன? ஒரு குழந்தையின் மனதோடு, குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார்.
கள்ளம் இல்லா பிள்ளை
உள்ளம் மனம் கவருகிறது ,,!/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
Blogger G Alasiam said...
ReplyDelete///”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா”///
எத்தனை நொந்திருந்தால் இப்படிப் பாடிடுவான் இக்கவி...
நன்றி என்பதே....
நன்மைத் தனக்கு ஏதுமின்றி (அதைக் குறிக்கோளாக கொள்ளாது) பிறருக்குச் செய்யும் உதவி... அந்தக் காரியத்திற்கு காரணமான உணர்வு!
பெரும்பாலும் அன்பினாலே அது விளையும்...
ஆக, கொள்ளப் படுவது அங்கே அன்பும் அல்லவா...
அன்பு என்பது தெய்வத் தன்மையல்லவா....
அது உறைவது நல்லவர் உள்ளத்தில் அல்லவா...
அப்படி நன்றிகெட்ட உணர்வு மிகும் பொது அது உள்ளத்தை வருத்தும் அல்லவா....
அப்படி நன்றிகெட்ட உலகை எண்ணி கவிஞன் கொட்டிய வரிகள் அல்லவா இவைகள்....
தாங்காத் துயருக்கு மருந்து தேடும் கவிஞன்
கண்ணா! நீ எத்தனை அருமையாக சிரிக்கிறாய்..
உனது மொழிதான் என்னவோ! என்று வியக்கிறார்..
கடைசியாக நானும் ஒருக் குழதந்தையாக
இருந்துவிடக் கூடாதா என்றே தவிக்கிறார்..
"ஒரு குழந்தையைப் போல் இருங்கள்" என்றார் ஏசு
நமது கவியரசர்! ஏசு காவியம் பாடியவர் ஆயிற்றே.
அருமையான பாடல்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா!
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."/////
உங்களின் நீண்ட மற்றும் நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger kmr.krishnan said...
ReplyDelete'கைம்மாறு கருதா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு'
'உதவி வரைத்தன்று உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'
'எல்லாப் புகழும் இறைவனுக்கே'
சிந்தனையைத்தூண்டும் கட்டுரைக்கு நன்றி ஐயா!/////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
///Blogger Kalai Rajan said...
ReplyDeleteஅய்யா
வேப்பிலை சாமிகளின் கார்ட்டுன் அருமை/////
பாராட்டுக்கள் அவரையே சேரும். நன்றி!
////Blogger Krishnakumar R said...
ReplyDeletewhy elders told child is god is because of this i think/////
”குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் இன்று”
- கவியரசர் கண்ணதாசன்
/////Blogger Remanthi said...
ReplyDeleteஉண்மைதான் கண்கள் கூட கலங்கிடுது இந்த பாடல் வரிகளால்......./////
நன்றி கெட்டவர்களாலும், துரோகிகளாலும் மனதளவில் பாதிக்கப்பெற்றவர்களின் கண்கள் இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது கலங்கத்தான் செய்யும். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!