+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மஞ்சளின் மகிமை!
மூன்றாம் எண் குருவிற்கு உரியது.3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.
இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்
ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது. நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன. Jupiter is a planet of courage, boldness, power, hard work, energy, knowledge, and speech.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.
பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.
ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!
நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.
அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.
ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.
ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். தலைமை எண் என்றும் சொல்லலாம்.
It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.
கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.
----------------------------------------------------------
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய்
& புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!
இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்
நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!
உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சக்காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும்.
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்றமுடையதாக இருக்கும்
ஐந்தான் ஜார்ஜ் மன்னர், அப்ரஹாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலங்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.
அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++===============================
வாழ்க வளமுடன்!
எனது குணநலன்களை இன்னும் தெளிவாக குரு உபதேசம் செய்தது (போலே) மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteபிறந்த தேதி 21 . கூட்டு எண் 30 . தனுசு லக்னம் குரு பதினொன்றில் குருவுக்கு கேந்திரங்களில் (நான்கில்) உச்ச செவ்வாய், ஏழில் சந்திரன்.
///It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.///
அப்படியே பொருந்துகிறது...
நன்றிகள் ஐயா!
நம் ஊரில் மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteமூன்றாம் எண்ணுக்கு உரிய பலன்களை விபரங்களுடன்
அளித்துள்ளமைக்கு நன்றி!!
எனக்கு ஆன்மீகத்தின் மீது சொல்லிகொள்ளும் அளவிற்கு நாட்டம் இருந்தது இல்லை. விவரம் தெரிந்த நாட்களில் இருந்து மஞ்சள் நிறத்தின் மீது ஒரு அலாதியான ஈர்ப்பு இருந்தது.
ReplyDeleteநான் B.Sc படிக்கும் போது எந்த பருவ தேர்வுகளிலும் முழு தேர்ச்சி பெறவில்லை. இதை பற்றி மனதில் கவலைப்பட்ட நேரம்.... ஆனந்த விகடனில் குரு தட்சனாமூர்த்தியை முதன் முதலில் மஞ்சள் நிற உடையுடன் பார்த்த அந்த கணமே இனம் புரியாத ஒரு உணர்வு. மேலும் மேலும் அந்த படத்தை பார்க்கவைத்த ஈர்ப்பு.. அதன் கீழ ஒரு வரியை படித்தேன்... "தேர்வில் வெற்றி பெற குருவை பிராத்தனை செய்யுங்கள்" என்று கூறி ஒரு சமஸ்கிரதம் மந்திரம் இருந்தது ... " குரவே சர்வ லோகநாம்...".
எப்படியாவுது இறுதி ஆண்டு அரியர்ஸ் இல்லாம முடிச்சே ஆகணும்னு இந்த மந்திரத்த கஷ்ட்டப்பட்டு மனபாடம் பன்னி அன்றில் இருந்து என் ஆன்மீக வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டேன்.. அதன் சக்தி மிகவும் அலாதியானது.
வாத்தியார் அய்யாவின் பதிவில் கூறி உள்ளது போல் மஞ்சள் நிறம் மிகவும் சக்தி வாய்ந்தது. அருமையான பதிவு அய்யா. மிக்க நன்றி.
அன்பான வேண்டுகோள்....
ReplyDeleteகீழே குறிப்பிட்டு உள்ள பிறந்த தேதியை Jagannatha ஹோரோ மற்றும் Astro - Vision இரண்டிலும் கணித்து பார்த்த போது அம்ச சக்கரம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றது. குழப்பத்தில் சரியான முறையில் பலனை அறிய முடியவில்லை.
பிறந்த தேதி: 04 - JAN - 1996 (07 - 01 pm )
Country : India
Latitude : 11 25 N , Longitude : 79 7 E
பாலினம் : ஆண்.
ஜாதகர் சென்ற ஆண்டு 10th examல் 487 / 500 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் சாதித்தவர். அதே உற்சாகத்தோடு அடுத்த வருடம் 12th exam ku தயார் ஆகிகொண்டு வருகின்றார்.
இவருக்கு எந்த துறையை பரிந்த்துரைக்கலாம் என்பதை தெளிவு படுத்தினால் மிகவும் பேருதவியாக இருக்கும்.
வாத்தியார் அய்யாவை தொந்தரவு பண்ண முடியாது.
வகுப்பறை நண்பர்கள் முடிந்தால் தங்களிடம் உள்ள சாப்ட்வேர் இல் ஜாதகத்தை கணித்து மின்-அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்.
எனது மின்-அஞ்சல் முகவரி - jbm2k07@gmail.com
அன்பான வேண்டுகோள்....
ReplyDeleteகீழே குறிப்பிட்டு உள்ள பிறந்த தேதியை Jagannatha ஹோரோ மற்றும் Astro - Vision இரண்டிலும் கணித்து பார்த்த போது அம்ச சக்கரம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றது. குழப்பத்தில் சரியான முறையில் பலனை அறிய முடியவில்லை.
பிறந்த தேதி: 04 - JAN - 1996 (07 - 01 pm )
Country : India
Latitude : 11 25 N , Longitude : 79 7 E
பாலினம் : ஆண்.
ஜாதகர் சென்ற ஆண்டு 10th examல் 487 / 500 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் சாதித்தவர். அதே உற்சாகத்தோடு அடுத்த வருடம் 12th exam ku தயார் ஆகிகொண்டு வருகின்றார்.
இவருக்கு எந்த துறையை பரிந்த்துரைக்கலாம் என்பதை தெளிவு படுத்தினால் மிகவும் பேருதவியாக இருக்கும்.
வாத்தியார் அய்யாவை தொந்தரவு பண்ண முடியாது.
வகுப்பறை நண்பர்கள் முடிந்தால் தங்களிடம் உள்ள சாப்ட்வேர் இல் ஜாதகத்தை கணித்து மின்-அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்.
எனது மின்-அஞ்சல் முகவரி - jbm2k07@gmail.com
guruve saranam!!!my birth date 30.
ReplyDeletemy doughter date of birth also 3.3.03 tarika.A pls.explain.thanks...........
///ஜி ஆலாசியம் said...
ReplyDelete...பிறந்த தேதி 21 . கூட்டு எண் 30 . தனுசு லக்னம் குரு பதினொன்றில் குருவுக்கு கேந்திரங்களில் (நான்கில்) உச்ச செவ்வாய், ஏழில் சந்திரன். ....///
'பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை' என்பதைப் பொய்யாக்கப் பிறந்த வள்ளல்களின் வரிசையில் உங்களைப் பார்க்கிறேன், வாழ்க ...வளர்க...
///thanusu said...
நம் ஊரில் மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்///
சரிங்க அப்பாவி....எல்லாம் வெளிநாட்டில் இருக்கிற தைரியம்தான் இல்லையா? :)))))
///Ananthamurugan said...
guruve saranam!!!my birth date 30.my doughter date of birth also 3.3.03 tarika.A pls.explain.thanks...........///
மிகச் சுலபம், உங்கள் வீட்டில் யாவரும் மூன்றைத் தவிர வேறு எண்கள் இருப்பதையே அறியாதவர்கள்
ஐயா, பதிவிற்கு நன்றி. எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே. அடுத்த எண்னிற்காக காத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் மூன்று பேருக்கு "4 " பிறந்த எண். அதனால் நாங்க எவ்வளவு கெட்டவங்கன்னும் தெரிந்துகொள்ள ஆசை.
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎன் தோழியின் பிறந்த தேதி 3 தான்...குணாதிசயங்கள் அனைத்தும் அவளுக்கு மிக சரியாக பொருந்துகிறது...ஜாதகத்தை போன்றே இதிலும் நல்ல பலன்களை அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது...நன்றி ஐயா...
என் அண்ணனுக்கு தனுசு லக்னம்,அவருக்கு பிடித்த நிறம் மஞ்சள் தான்,அதனாலேயே எந்த ஆடையை எடுத்தாலும் அதில் மஞ்சள் நிறமாக தான் இருக்கும்...
///ஜி ஆலாசியம்said...
பிறந்த தேதி 21 . கூட்டு எண் 30 . தனுசு லக்னம் குரு பதினொன்றில் குருவுக்கு கேந்திரங்களில் (நான்கில்) உச்ச செவ்வாய், ஏழில் சந்திரன்///
ஆஹா...அருமையான ஜாதகம் உங்களுடையது என்று நினைக்கின்றேன்...உங்களது கேந்திர குருவின் பலத்தை 3ம் எண் இன்னும் பலம் சேர்க்கிறது...இப்பொழுது தெளிவாக புரிந்துவிட்டது மாணவர் மலரில் தங்களது ஆன்மிக மலர்கள் அதிகம் மலர்வதற்கான காரணம்(ரொம்ப சீக்கிரமா புரிந்திருக்கிறேன்?!!!...)ஹிஹிஹி...
//////Ananthamurugan said...
ReplyDeleteguruve saranam!!!my birth date 30.my doughter date of birth also 3.3.03 tarika.A pls.explain.thanks...........///
மிகச் சுலபம், உங்கள் வீட்டில் யாவரும் மூன்றைத் தவிர வேறு எண்கள் இருப்பதையே அறியாதவர்கள்///
ஆஹா...இவ்வளவு நல்ல விளக்கத்தை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்,சகோதரி...ஹிஹிஹி...
நாள்,மாதம்,வருடம் அனைத்தும் மூன்றில் வருவதால் நிச்சயம் தங்கள் மகளின் எதிர்காலம் சிறப்பாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்...தங்களுக்கு ஆலோசனை வழங்க மைனர்வாள் மற்றும் தனுசு இருவரும் வாரி வழங்குவார்கள்....ஹிஹிஹி...
எட்டில் பாதி மூன்று..
ReplyDelete8 சனிக்கு என்றால் 3 வுக்கு..
இரண்டு பெயர்ச்சிகலுமே
இருப்பவரை tip of the chairல் உட்கார வைத்துவிடும்..
3யை உயர்த்தி நிற்க வைப்பது 8
இப்போ தமிழ் நாட்டில் நிற்பது 6
கலரை பார்த்ததும்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு
பாடலாம்னு சுழல விட எடுத்தோம்
பச்சை நிறம் வரட்டும் என உங்களைப் போல காத்திருக்கிறோம்..
வாழ்க.. வணக்கங்களுடன்
எட்டில் பாதி மூன்று..
ReplyDelete8 சனிக்கு என்றால் 3 வுக்கு..
இரண்டு பெயர்ச்சிகலுமே
இருப்பவரை tip of the chairல் உட்கார வைத்துவிடும்..
3யை உயர்த்தி நிற்க வைப்பது 8
இப்போ தமிழ் நாட்டில் நிற்பது 6
கலரை பார்த்ததும்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு
பாடலாம்னு சுழல விட எடுத்தோம்
பச்சை நிறம் வரட்டும் என உங்களைப் போல காத்திருக்கிறோம்..
வாழ்க.. வணக்கங்களுடன்
/////தேமொழி said...
ReplyDelete///ஜி ஆலாசியம் said...
...பிறந்த தேதி 21 . கூட்டு எண் 30 . தனுசு லக்னம் குரு பதினொன்றில் குருவுக்கு கேந்திரங்களில் (நான்கில்) உச்ச செவ்வாய், ஏழில் சந்திரன். ....///
'பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை' என்பதைப் பொய்யாக்கப் பிறந்த வள்ளல்களின் வரிசையில் உங்களைப் பார்க்கிறேன், வாழ்க ...வளர்க... ////
ஆஹா.. நன்றி நன்றி சகோதரியாரே!
இருந்தும் வள்ளல் என்பது தான் கொஞ்சம் ஓவர் ம்ம்ம் .. சகோதரனை சந்தோசப் படுத்தன்னு நினைச்சுக்கிறேன்..
அசத்தல் வரிகளை ஆங்கே அழகாய் நிறுத்தி;
அடியேனையும் அசத்தி!
வாழ்க! வளர்க!! என வாழ்த்திய...
தங்களின் பொன்மனத்திற்கு
வணக்கங்கள் கோடி கூறி
நன்றியும் நவல்கிறேன்
எனது சகோதரியாரே!
தேமொழி said...சரிங்க அப்பாவி....எல்லாம் வெளிநாட்டில் இருக்கிற தைரியம்தான் இல்லையா? :)))))
ReplyDeleteவெளிநாட்டில் இருந்தால் மட்டுமே தைரியம் என்பது இல்லை எனக்கு எங்குமே தைரியம் தான் , எங்கள் குடும்பத்திற்கு "புலிகட்' என்றொரு பட்டப் பெயர் உண்டு .என் தாத்தா (தந்தையை பெற்றவர்) பாய்ந்து வந்த புலியோடு சண்டை இட்டு அதன் பின்னங் கால்களை பிடித்து தலையை தரையில் அடித்தே கொன்று அதனை தன் தோளில் போட்டுக் கொண்டு ஊருக்குள் வந்தவர்,பிறகு ஒருமுறை விரிவாக சொல்கிறேன்
அந்த தைரியமும் துணிச்சலும் எனக்கும் இருக்குங்கோ.ஒரு சாம்பிளுக்கு என் தைரியம் ஞாயிறு, அன்று காட்டுகிறேன் .
(கேட்குது, கேட்குது "பெரிய பில்ட் அப்பா இருக்கே" என்று நீங்க சொல்றது கேட்குது )
தேமொழி said... எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே.
ReplyDeleteஅடுத்தவருக்கு அடங்க மாட்டார்கள் .பெருமை பேசி புகழ் தேடுவர், செய்வதை சொல்ல மாட்டார்கள் ,
என் 3 இல் பிறந்து அடுத்தவருக்கு அடங்காத நம் நாட்டு சிங்கங்கள்; கட்ட பொம்மன், திப்பு சுல்தான், முத்துராமலிங்க தேவர்.
எண் 3 கு 9 மிகப் பெரிய ராசி மற்றும் பலம் நன்மைகள் தரும்.
ReplyDeleteஎண் 3 கு பெயர் ராசிகள் , மூன்றில் முடிவதாகவும், ஒன்பதில், முடிவதாகவும் வைக்கலாம் . கூட்டு என்னை வைத்தே அதனை உறுதி செய்ய வேண்டும் .
27 ஒரு ஒளிமிக்க வலுவான எண் .
சில புத்தகங்களில் 3 க்கு எண் 6 அத்தனை பொருத்தம் இல்லை என்று உள்ளது.வாத்தியார் மைனர் மற்றும் தெரிந்தவர் உறுதி செய்யவும்.
////thanusu said...
ReplyDeleteதேமொழி said... எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே.
அடுத்தவருக்கு அடங்க மாட்டார்கள் .பெருமை பேசி புகழ் தேடுவர், செய்வதை சொல்ல மாட்டார்கள் ,
என் 3 இல் பிறந்து அடுத்தவருக்கு அடங்காத நம் நாட்டு சிங்கங்கள்; கட்ட பொம்மன், திப்பு சுல்தான், முத்துராமலிங்க தேவர்.///
ஹா..ஹா..ஹா..உண்மையை உண்மையாகவே கூறி யுள்ளீர்கள் நண்பரே!
///அடுத்தவருக்கு அடங்க மாட்டார்கள் ////
இருக்கலாம்... (சுய ஜாதகத்தில் தேவகணம் என்றால் அது தர்மத்தோடான செயல் எனக் கூறலாமா?) இருந்தும்....
//It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident.///
இதனால் அப்படித்தானே இருக்கும் அது உளவியல் ரீதியானக் கருத்து.
*************************************************************************************************
////in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.///
இது அவர்களின் அனுபவம் வாழ்க்கையில் உணர்ந்தப் பாடமாக இருப்பதால் அது யாவருக்கும் பயன் படட்டுமே என்றும் கூட கூறும் வாத்தியார்தனம் குருவின் ஆதிக்கம் மிகுந்ததால்... இருக்கும் என நினைக்கிறேன். அது பெருமை பேசுவதாகவும் கூறப் படலாம்.
************************************************************************************************
////செய்வதை சொல்ல மாட்டார்கள் , ////
குருவின் நண்பர்கள் செவ்வாயும், சந்திரனும்.... புத்திக் காரனுக்கு (குரு) நண்பன் கிரியா சக்தி தரும் செவ்வாய்... செயல் (செவ்வாய் ஆரோக்கியமாக அவனின் ஜாதகத்தில் இருந்தால் மாத்திரமே) புலியாக இருந்து உதவுவான்...
அடுத்து மனகாரன் அவனும் வளர் பிறைச் சந்திரனாக இருந்தால் காரியம் ஆகும் வரை அமைதி காத்து வெற்றியை நிரூபிக்க பேருதவி செய்வான் இல்லையா?
என்னடா இவ்வளவு யோசிக்கிறேன் என்கிறீர்களா! உங்களுக்கும் தெரிந்தது தானே.. எல்லாம் என் எண்ணான மூன்றுக்காகத் தான்:):):)))
தகவலுக்கு நன்றி கவிஞரே!
ஆமாம், 3 - கும் தனுசுக்கும் இது தான் சம்பந்தமோ!:):)
ReplyDeleteபாட்டு கிட்டு ஆனாலும் படம் வந்த பின்புத் தெரியும் அல்லவா.. தனுசுவிற்கு கிடைத்த குரு அருள்.
இன்று வகுப்பறைக்கு வந்தால் நான் அணிந்திருக்கும் ஆடையின் நிறமும் மஞ்சள்!!!
ReplyDeleteஎன் ஜாதகத்தில் இரண்டில் குரு, நவாம்சத்தில் கேந்திர ஸ்தானமான நான்கில்.
நம் ஊரில் மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்//
ReplyDeleteஎனக்கும் இந்த பதிவைப்படிக்கும்போது 'மஞ்ச துண்டு' நினைவுதான் வந்தது. நம் ஊரிலும் சென்ற தலைமுறையினர் 'மஞ்சள் பையை'த் தானே வெளியில் செல்லும்போது எடுத்துக்கொண்டு போவார்கள்.
நான் அந்தந்த கிழமைகளுக்கு உகந்த நிறத்தில் ஆடை அணிவதை முடிந்தவரை பின்பற்றுகிறேன். மற்றபடி ராசிக்கல் என்று ஒரு பவழ மோதிரம் மட்டுமே போட்டிருந்தேன், அதையும் இப்போது கழட்டி வைத்து நான்கு மாதங்கள் ஆகிறது, சோதனை முயற்சியாக.
ReplyDeleteஎப்படியாவுது இறுதி ஆண்டு அரியர்ஸ் இல்லாம முடிச்சே ஆகணும்னு இந்த மந்திரத்த கஷ்ட்டப்பட்டு மனபாடம் பன்னி அன்றில் இருந்து என் ஆன்மீக வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டேன்.. அதன் சக்தி மிகவும் அலாதியானது. //
ReplyDeleteஅனுபவப்பகிர்வு அருமை பாலமுருகன், வாழ்த்துக்கள். இருந்தாலும் நீங்க குறுக்க இந்த பிக்கை உள்ள விட்டிருக்கக்கூடாது!!!! (சீரியசாகாதீங்க, சும்மா விளையாட்டுக்குத்தான்)
guruve saranam!!!my birth date 30.//
ReplyDeleteநீங்க மூன தொட்டது யாருன்னு பாட்டு பாடினதும் நான் உங்க நம்பர் இரண்டுன்னு நினைத்தேன். இப்பல்ல தெரியுது அது மூணுன்னு.
ஐயா, பதிவிற்கு நன்றி. எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே. //
ReplyDeleteஇதை நானும் வழிமொழிகிறேன் (ஏதோ நமக்குத்தான் இதெல்லாம் மூளையில உதிப்பதில்லை, வழியாவது மொழிவோம்)
This comment has been removed by the author.
ReplyDeleteஎன் தாத்தா (தந்தையை பெற்றவர்) பாய்ந்து வந்த புலியோடு சண்டை இட்டு அதன் பின்னங் கால்களை பிடித்து தலையை தரையில் அடித்தே கொன்று அதனை தன் தோளில் போட்டுக் கொண்டு ஊருக்குள் வந்தவர்,பிறகு ஒருமுறை விரிவாக சொல்கிறேன் //
ReplyDeleteவிரிவாக எழுதுங்கள் தனுசு!
கேட்குது, கேட்குது "பெரிய பில்ட் அப்பா இருக்கே" என்று நீங்க சொல்றது கேட்குது //
அவங்க மட்டுமா கேட்கறாங்க?????? தில்லியிலிருந்து உமா கேட்கிறாக, சிங்கையிலிருந்து அண்ணன் ஆலாசியம் கேட்கிறாக, ஜப்பானிலிருந்து மைனர் கேட்கிறாக, பெங்களூருவிலிருந்து நம்ம பார்வதி கேட்கிறாக, லால்குடியிலிருந்து கிருஷ்ணன் சார் கேட்கிறாக, அட வெளியூர்ப்பயணத்தில் இருக்கும் நம்ம வாத்தியாரே கேட்கிறாக!!
என் 3 இல் பிறந்து அடுத்தவருக்கு அடங்காத நம் நாட்டு சிங்கங்கள்; கட்ட பொம்மன், திப்பு சுல்தான், முத்துராமலிங்க தேவர்//
ReplyDeleteவாத்தியாரின் பதிவில் வெளிநாட்டில் பிறந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறாரே என்று நினைத்தேன், தகவலுக்கு நன்றி.
என்னடா இவ்வளவு யோசிக்கிறேன் என்கிறீர்களா! உங்களுக்கும் தெரிந்தது தானே.. எல்லாம் என் எண்ணான மூன்றுக்காகத் தான்:):):)))//
ReplyDeleteரொம்ப யோசிச்சு தலைக்கு உள்ளே, வெளியேன்னு எல்லாம் காலியாயிடப்போகுது, ஜாக்கிரதை!
ஆமாம், 3 - கும் தனுசுக்கும் இது தான் சம்பந்தமோ!:):)//
ReplyDeleteதனுர் ராசிக்காரர் = தனுசு
///Uma said...
ReplyDeleteஎன் தாத்தா (தந்தையை பெற்றவர்) பாய்ந்து வந்த புலியோடு சண்டை இட்டு அதன் பின்னங் கால்களை பிடித்து தலையை தரையில் அடித்தே கொன்று அதனை தன் தோளில் போட்டுக் கொண்டு ஊருக்குள் வந்தவர்,பிறகு ஒருமுறை விரிவாக சொல்கிறேன் //
விரிவாக எழுதுங்கள் தனுசு!
கேட்குது, கேட்குது "பெரிய பில்ட் அப்பா இருக்கே" என்று நீங்க சொல்றது கேட்குது //
///அவங்க மட்டுமா கேட்கறாங்க?????? தில்லியிலிருந்து உமா கேட்கிறாக, சிங்கையிலிருந்து அண்ணன் ஆலாசியம் கேட்கிறாக, ஜப்பானிலிருந்து மைனர் கேட்கிறாக, பெங்களூருவிலிருந்து நம்ம பார்வதி கேட்கிறாக, லால்குடியிலிருந்து கிருஷ்ணன் சார் கேட்கிறாக, அட வெளியூர்ப்பயணத்தில் இருக்கும் நம்ம வாத்தியாரே கேட்கிறாக!!////
சென்னையிலிருந்து ஷோபனா கேட்குறாக! கத்தாரில் இருந்து மாயக் கண்ணன் கேட்குறாக, அருளு கேட்குறாக, ஆனந்த முருகன் கேட்குறாக, வி.தஷ்ணாமூர்த்தி கேக்குறாக... நம்ம ராமசுப்புடு ஐயாக் குடும்பமே கேக்குறாக... இப்படி இன்னும் எத்தனையோ போரையும் விட்டுடேங்களே அவுக எல்லாம் கோவுச்சுக்க மாட்டாகளா? அதனாலாத் தான் நான் சேர்த்துப்புட்டேன்...
////Uma said...
ReplyDeleteஎன்னடா இவ்வளவு யோசிக்கிறேன் என்கிறீர்களா! உங்களுக்கும் தெரிந்தது தானே.. எல்லாம் என் எண்ணான மூன்றுக்காகத் தான்:):):)))//
ரொம்ப யோசிச்சு தலைக்கு உள்ளே, வெளியேன்னு எல்லாம் காலியாயிடப்போகுது, ஜாக்கிரதை!////
ரொம்பச் சரி... ஏற்கனவே வானம் பாத்தா பூமி மாதிரி தான் கலக்க நிற்குது...
அதைவேற கூறி இன்னும் கவலைப் பட்டு இன்னும் ரொம்பக் கொட்டிடப் போவுது....
அதுக்குத் தான் கட்டையாக வைத்து வெட்டிக்க ஆரம்பிச்சு இருக்கேன்:):):)
///Uma said...
ReplyDeleteஆமாம், 3 - கும் தனுசுக்கும் இது தான் சம்பந்தமோ!:):)//
தனுர் ராசிக்காரர் = தனுசு///
நான் கொலைவெறிப் புகழாரை சொன்னேன்...
நீங்க வீரகவியாரைப் பற்றியல்லாவா சொல்லுறீங்க:):)
எத்தனையோ போரையும் விட்டுடேங்களே !!!??
ReplyDeleteசண்டைக்கு வந்திடாதீங்க... பேரையும் தான்::)))
ஆறிலிருந்து முப்பத்தொன்பதுவரை .பத்து
ReplyDeleteஎங்கே உமாவை இரண்டு தினங்களாக வரவில்லையே என்று நினைத்தேன் , மீண்டும் உடல் நிலை சரி இல்லையோ என்று கூட நினைத்தேன் இரண்டு தினங்கள் பின்னூட்டங்களையும் சேர்த்து வைத்து 11.06 லிருந்து 11.39 வரை இரண்டு தினத்திற்கும் சேர்த்து பத்து பின்னூட்டம் இட்டுலீர்கள். வளர்க உங்கள் வேகம்
இப்படி இன்னும் எத்தனையோ போரையும் விட்டுடேங்களே //
ReplyDeleteஅவ்ளோ பேரையும் டைப் செய்யணுமேன்னுதான், நீங்க சேர்த்ததற்கு நன்றி!!!!
நான் கொலைவெறிப் புகழாரை சொன்னேன்...//
ஓ, அத தெளிவா சொல்லணும்ல!
சண்டைக்கு வந்திடாதீங்க... பேரையும் தான்::)))//
சரி பிழைத்துச் செல்லுங்கள்!!
எங்கே உமாவை இரண்டு தினங்களாக வரவில்லையே என்று நினைத்தேன் //
ReplyDeleteஎல்லாம் இந்த 31 மார்ச் க்ளோசிங்னால்தான் (நான் அக்கௌன்த்ஸ் இல் இல்லை, இருந்தும் சில முடிக்க வேண்டிய வேலைகள்). இன்று இடையில் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் இவ்வளவு பின்னூட்டங்கள்.
ஐயா,
ReplyDelete3ம் எண் பற்றிய பதிவு அருமை.ஏனெனில் நான் 3ம் எண்ணில் பிறந்தவன். நீங்கள் மேற்கோள்காட்டிய குணங்கள்,பண்புகள் நிறைந்தவன்.
///எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.///.
நான் போதிக்கும் எந்தவொரு விஷயமும் இதுவொரு பழைய பஞ்சாங்கம்,அருதப்பழசு,அறுவை என்றெல்லாம் பலராலும் பழிக்கப்பட்டவன். நகலை விரும்பும் உலகில் அசலாக இருக்க நினைத்து பலவற்றையும் இழந்திருக்கிறேன். ஒருவர் கஷ்டமென்று வந்தாலும் ஒரு சின்னக்குட்டி நீதிக்கதைகளைச் சொல்லி அசத்திவிடுவேன்.பணம்,மரியாதைக்காக யாரிடமும் பணிந்துபோவதுமில்லை.அதுவாக தேடிவந்துவிடும் இதுவரை அப்படித்தான்.
3ம் எண்காரர்கள் சிறந்த மதியூகிகள். நாட்டையாளும் மன்னனுக்கு அருகிருந்து வழி நடத்த நல்லவிஷயங்களைச் சொல்லும் திறன்மிக்கவர்கள். கந்தலானாலும் கசக்கிக்கட்டு எனும் வாக்கிற்கேற்ப தூய்மை விரும்பிகள்.
///இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சக்காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும்.எச்சரிக்கையாக இருக்கவேண்டும்///
உடலில் குருகிரகம் குறிக்கும் உறுப்புகள் முறையே கல்லீரல்,கணையம்.இதில் கல்லீரலில் தான் உணவு செரிப்பதற்குத் தேவையான பிலிருபின் எனும் பித்தநிறமி உற்பத்தியாகிறது. கல்லீரல் பாதிக்கப்படும்போது பித்தநீரின் அடர்த்திகுறைந்து அது நேரடியாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலந்துவிடுவதால் வருவது மஞ்சள்காமாலை. மனிதமலம் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு காரணம் இந்த பித்தநீர் தான்,காமாலை பாதித்தவர்களின் மலம் சற்று வெளிறிக்காணப்படும்.
கணையம் இதில் உற்பத்தியாகும் கணையநீரும்,லாங்கர்கான் திட்டுகளில் உற்பத்தியாகும் இன்சுலினும் தான் உடலில் சர்க்கரையின் அளவை சம நிலைப்படுத்துபவை.உணவில் உள்ள சர்க்கரையை சுக்ரோஸாக மாற்றுவது கணைய நீர்,அதனை தேவையான அளவுக்கு எடுத்து செலவழிப்பது இன்சுலினின் வேலை.இந்த இரண்டும் தாறுமாறாக அதாவது ஒழுங்கற்ற முறையில் வேலை செய்வது தான் நீரிழிவு எனச்சொல்லப்படுகிறது.
பொதுவாக குருகிரகம் பாதிக்கப்பட்டு மறைவிடங்களில் வாசம் செய்தாலும்,6ம் வீடு ஜலராசியாகி குரு 6ம் வீடு,அதன் அதிபதியுடன் தொடர்புகொண்டிருந்தாலும் நீரிழிவு நோயைத்தவிர்க்க முடியாது என நினைக்கிறேன்.
எனக்கு முன்பொருமுறை சந்திரராசிக்கு எட்டில் கோச்சாரகுரு வந்தபோது மஞ்சள்காமாலை நோய் பாதித்தது.
கேட்கிறாங்க கேட்கிறாங்க
ReplyDeleteகதை ஒன்னு கேட்கிறாங்க
காட்டுக்குள்ள போன ஒரு
மஞ்சக் கொல்லையான்
கதையைக் கேட்கிறாங்க -
உங்கள் அனைவரின் ஆர்வத்திற்கும் நன்றி.
உட்கார்ந்து தட்டச்சு செய்ய வேண்டும் நேரம் பிடிக்கும் ,நாளைய மறுநாள் வாத்தியார் மனது வைத்தால் மாணவர் மலரில் இடம் பிடிக்கும் படி அனுப்பி வைக்கிறேனே.
Uma said... /// அனுபவப்பகிர்வு அருமை பாலமுருகன், வாழ்த்துக்கள். இருந்தாலும் நீங்க குறுக்க இந்த பிக்கை உள்ள விட்டிருக்கக்கூடாது!!!! (சீரியசாகாதீங்க, சும்மா விளையாட்டுக்குத்தான்) ///
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி Uma.
நான் நம்பிக்கையோடு பிராத்தித்தேன்..... நான் Exam ல pass பண்ணிட்டேன்.கடவுள் நேரில் வந்து அல்லது சித்து கான்பிதால்தான் சம்பவம் உண்மைன்னு நம்புற காலகட்டத்துல இருக்குறோம். இதுல சீரியஸ் ஆகறதுக்கு என்ன இருக்கு.
//// Rajaram said...
ReplyDeleteஐயா,
3ம் எண் பற்றிய பதிவு அருமை.ஏனெனில் நான் 3ம் எண்ணில் பிறந்தவன். நீங்கள் மேற்கோள்காட்டிய குணங்கள்,பண்புகள் நிறைந்தவன்.///
நண்பர் ராஜாராம் அவர்களின் விளக்கம் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்...
நன்றி.. நன்றி...
/////சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள்.////
மீறுபவர்களை கண்டு நெற்றிக் கண்ணையும் திறப்பார்கள் எனவும் கொள்ளலாமா!?
////நான் போதிக்கும் எந்தவொரு விஷயமும் இதுவொரு பழைய பஞ்சாங்கம்,அருதப்பழசு,அறுவை என்றெல்லாம் பலராலும் பழிக்கப்பட்டவன்.///
:):):))))
////கந்தலானாலும் கசக்கிக்கட்டு எனும் வாக்கிற்கேற்ப தூய்மை விரும்பிகள்///
எழுந்தவுடன் குளிப்பதும் எத்தனைக் குளிரானாலும் நள்ளிரவே ஆனாலும் படுக்கும் முன் குளிப்பதும் எப்போதும் வழக்கம்.
தலையும், தாடியும் வெள்ளியாய் மாறும் வண்ணம் பற்றியக் கருத்தையும் சேர்க்கலாமா?
மிகவும் பிடித்த உணவு காய்கறி (கசப்பான உணவில் பிரியம் உண்டு)
வேஷ்டி அணிவதில் பிரியம் விபூதிப் பட்டைப் போடுவதில் பிரியம்..
தாடி வளர்ப்பதில் பிரியம் என்றும் சில குணங்களை சேர்க்கலாமா?!!
ஆசிரியரிடம் பக்தி... சிவ பெருமானிடம் / ஐயப்பன் / முருகன் இவர்களிடம் ஒரு நெருக்கம் !!!
****************************************************************
எனக்கு பதிமூன்று வயதிருக்கும் போது ஒரு முறை மஞ்சள் காமாலை வந்தது...
அதனால் இங்கே ரத்ததானம் செய்வது கூட ஏற்றுக் கொள்ள மாட்டீங்கிறார்கள்.
நீழிவு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பற்றிய கவனம் இன்னும் சற்று
அதிகரிக்க வேண்டும் என்ற தகவல் அறியப் பெற்றேன்.
மீண்டும் நன்றிகள் நண்பரே!
நீரழிவு... என்று சரியா தட்டச்சு செய்யக் கூட வரமாட்டீங்குது அது வரைக்கும் சந்தோசம் தான்:):))))
ReplyDelete/////////thanusu said...
ReplyDeleteசில புத்தகங்களில் 3 க்கு எண் 6 அத்தனை பொருத்தம் இல்லை என்று உள்ளது.வாத்தியார் மைனர் மற்றும் தெரிந்தவர் உறுதி செய்யவும்.
வாத்தியாரும் தொடர்ந்து மீள் பதிவாகவே பதிவிட தனுசுவுக்காக நானும் பழைய கமென்ட்டையே காப்பி பேஸ்ட் பண்ணி விடுகிறேன்..
minorwall said...
(பல சமயங்களில் இந்த அனுபவம் இருந்துள்ளது.6ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு 3ஆம் தேதியில் நடக்கும் சம்பவங்கள் மனதிற்கு இனிமையை அளிப்பதில்லை. கோட்டையூர் நகரத்தாரான என் நண்பர் ஒருவரின் தகப்பனார் ஜோதிட அனுபவத்தில் பலருக்கும் பலன்கள் சொல்லுவார்.என் கணிதத்திலும் அனுபவம் பெற்றவர்.அவர் என் நண்பருக்கு-தன் மகனுக்கு இதே அடிப்படையில் (3&6 &9 கணக்கிலே)
(3&9 பிறந்தநாள் combination .) சிறு வயது முதலே 15ஆம் எண்ணிலே பெயர் அமைத்து இருந்தார்.
கல்லூரி வாழ்விலே அவருக்கு காதலில் பெரும் சிக்கல் அமைந்தது.அதன் பின் திருமண வாழ்வும்
மணமுறிவு அடைந்துவிட்டது.
இந்த குரு சுக்ரன் விவகாரம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை..
வழித்தோன்றல்களில் அசுரன் யார் தேவர் யார் என்று தீவிர ஆராய்ச்சியில் இன்றும் குழம்பிக் கிடக்கிறது நமது சமூகம்.
தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு காரகனாக விளங்கும் குரு ஏன் மோசடி சாமியார்களை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று புரியவில்லை.ஒருவேளை சுக்கிரனுக்கே உச்சமடைய தன் வீட்டை கொடுத்தவர் என்பதாலா?சுக்கிரனின் சேட்டைகளை தடுக்க முடியாதவராகிவிடுகிறாரா? தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு எதிரான மனப்பாங்குடன் இருந்து ஆட்சி பரிபாலனங்களில் உள்ளவர்களுக்கும் நல்ல உன்னதமான பலன்களை குருவே அளிப்பதுவும்
விந்தைதான்.குழப்பம்தான்.பல சமயங்களில் ஜாதகமே ஒரு குழப்பமான புதிராகத்தான் உள்ளது.
Tuesday, March 09, 2010 5:29:00 PM
///////தேமொழி said...ஐயா, பதிவிற்கு நன்றி. எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே. அடுத்த எண்னிற்காக காத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் மூன்று பேருக்கு "4 " பிறந்த எண். அதனால் நாங்க எவ்வளவு கெட்டவங்கன்னும் தெரிந்துகொள்ள ஆசை.//////////
ReplyDeleteவாத்தியார் மனசைப் படிச்சவன் என்ற காரணத்தாலே 'நாலு பேருக்கு நன்றி' என்று நாலாம் எண்காரர்கள் பற்றி அட்வான்சாக இன்றே உங்களுக்குப் பதிலை சொல்லிவிடுகிறேன்..
'இந்த எண்காரர்களுக்கு மன உறுதி, பிடிவாதம், எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை மேலோங்கி இருக்கும். அதனால் சமயங்களில் வளைந்து கொடுத்துப் போகமுடியாமல் அவதிப்படவும் நேரிடும்நம்பிக்கைக்கு உரியவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். இயல்பானவர்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு முரண்பட்டவர்களாகவும், குறுகிய சிந்தனைகளை உடையவர்களாகவும், பிடிவாதம் மிக்கவர்களாகவும் காட்சியளிப்பார்கள். அது எண்காரர்களுக்கு உரிய பொதுத் தோற்றம்.காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள். சீக்கிரமே வெறுப்பும் அடையக்கூடியவர்கள். காதலில் ஈடுபடும்போது, காதலன் அல்லது காதலி இசைந்து வருபவராக இருந்தால், நேர்த்தியான காதலராகப் பரிணமளிக்கக்கூடியவர்கள்.புரிந்து கொள்ளமுடியாதவர்கள். அதன்காரணமாகப் பலர் இவர்களை நெருங்கமாட்டார்கள்.சிலரால் காதலில் வெற்றிபெற முடியாது. எதையும் சீரியசாக எடுத்துக்கொள்பவர்கள்.வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். இருந்தாலும் திருப்தியடையாதவர்கள். அதீதமான விருப்பு & வெறுப்புக்களை உடையவர்கள். சிலர் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். அதன்காரணமாகத் தனித்து இருக்கவும் நேரிடும். பல அரிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர்கள். இருந்தாலும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமாட்டாரகள்.மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். அதன்காரணமாக பலருக்கும் எதிரியாகக் காட்சியளிப்பவர்கள். மற்ற எண்காரர்களைவிட இவர்களுக்குத்தான் அதிக அளவில் விரோதிகள் இருப்பார்கள்.'
3ம் எண் பற்றிய பதிவினை ஆவலுடன் படித்துரசித்தேன். சுவாரஸ்யமான பின்னூடங்களையும் விரும்பிப்படித்தேன் எண் கணிதத்தில் அதிக ஊக்கம் இல்லாததால் பின்னூட்டங்களில் பின் தங்கியுள்ளேன்.
ReplyDeleteமனைவியார் 12 ந்தேதி பிறந்தவர்கள். குண நலன்கள் 60% பொருந்தி வருகிறது.
வழக்கம் போல் கடந்த இரண்டு நாட்களாய் பதிவு அருமை. அதுவும் உங்கள் பயணத்தில் எங்கள் பாடம் பாதிக்ககூடாது என்று , technolgy சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள். நான்தான் எல்லா படங்களுக்கும் சேர்த்து ஒரே பின்னூட்டம் எழுதுகிறேன். ஹி ஹி நான் பாஸ் மார்க்குக்கு மட்டும் பரீட்சை எழுதுற ஆள்.
ReplyDeleteஎழுத சோம்பேறித்தனம். சீக்கிரம் எக்ஸாம் ஹாலை விட்டு வெளிவருவதில் அப்படியொரு பெருமை.
அடியேன் எண் இரண்டு. sort of extremity எப்பவுமே இருக்கும். say yes or no என்று.
நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் positivaka எழுதி இருக்கலாம இரண்டை பற்றி.
ஆனால் மூன்றுக்கு நிநிறைய எழுதி உள்ளீர்கள். அதை விட பின்னோட்டங்கள் சூப்பரூ. நிறைய கதைகள் மற்றும் அனுபவங்கள்.
awaiting for other numbers......5, 7 and 8 my husband and kids. The very intresting thing is my husband no is 5 and im 2, looks like will not go each other well. he always has an answer as "MAY BE".
quite intresting, thus we together make it complete. - Kalai Seattle
///thanusu said...
ReplyDeleteஎன் தாத்தா (தந்தையை பெற்றவர்) பாய்ந்து வந்த புலியோடு சண்டை இட்டு அதன் பின்னங் கால்களை பிடித்து தலையை தரையில் அடித்தே கொன்று அதனை தன் தோளில் போட்டுக் கொண்டு ஊருக்குள் வந்தவர்,பிறகு ஒருமுறை விரிவாக சொல்கிறேன் ///
///வாத்தியார் மனது வைத்தால் மாணவர் மலரில் இடம் பிடிக்கும் படி அனுப்பி வைக்கிறேனே. ///
புலிகட் பரம்பரையைப் பற்றிய வரலாற்று செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் தனுசு.
___
///thanusu said...
அடுத்தவருக்கு அடங்க மாட்டார்கள் .பெருமை பேசி புகழ் தேடுவர், செய்வதை சொல்ல மாட்டார்கள் ,
என் 3 இல் பிறந்து அடுத்தவருக்கு அடங்காத நம் நாட்டு சிங்கங்கள்; கட்ட பொம்மன், திப்பு சுல்தான், முத்துராமலிங்க தேவர். ///
மேலதிகத் தகவலுக்கு நன்றி
///Rajaram said...
ReplyDeleteகுருகிரகம் குறிக்கும் உறுப்புகள் கல்லீரல்,கணையம்... பிலிருபின் எனும் பித்தநிறமி... மஞ்சள் நிறமாக இருப்பதற்கு காரணம் இந்த பித்தநீர்///
குருவின் மஞ்சள் மகிமையைப் பற்றிய மற்றொரு (அறிவியல் சார்ந்த) தகவல், நன்றி ராஜாராம்
///minorwall said...
ReplyDeleteதெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு காரகனாக விளங்கும் குரு ஏன் மோசடி சாமியார்களை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று புரியவில்லை.///
குரு மேல் கொஞ்ச நாளா காட்டமா இருக்கிற மாதிரி தோன்றுகிறது, வியாழக் கிழமைகளில் மௌன விரதம் இருந்தால் சரியாகிவிடும்..:))))))
___
///minorwall said...
வாத்தியார் மனசைப் படிச்சவன் என்ற காரணத்தாலே 'நாலு பேருக்கு நன்றி' என்று நாலாம் எண்காரர்கள் பற்றி அட்வான்சாக இன்றே உங்களுக்குப் பதிலை சொல்லிவிடுகிறேன்..///
நன்றி மைனர்!!!
___
///minorwall said...
'இந்த எண்காரர்களுக்கு மன உறுதி, பிடிவாதம், எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை மேலோங்கி இருக்கும். ......மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். அதன்காரணமாக பலருக்கும் எதிரியாகக் காட்சியளிப்பவர்கள். மற்ற எண்காரர்களைவிட இவர்களுக்குத்தான் அதிக அளவில் விரோதிகள் இருப்பார்கள்.////
அடடா... அப்படியா செய்தி....அதான் "4" எண் உள்ள மூன்று பேர் வீட்டில் இருப்பதால் வீடே ஒரு குட்டி சட்ட சபை மாதிரி இருக்கு போல.
கையை கையை நீட்டி பேசக் கூடாது.....நான் பொதுவாக சொன்னால் எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல என்கிற மாதிரி ஏன் பதில் சொல்லனும்.... போன்ற உரையாடல்கள் தண்ணீர் பட்ட பாடக இருகிறப்பவே எனக்கு புரிஞ்சிருக்கனும்.
மூன்றாம் எண்ணைப் பற்றிய மேலதிகத்தகவலுக்கு நன்றி ஐயா...
ReplyDelete/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஎனது குணநலன்களை இன்னும் தெளிவாக குரு உபதேசம் செய்தது (போலே) மிகவும் அருமையாக உள்ளது.
பிறந்த தேதி 21 . கூட்டு எண் 30 . தனுசு லக்னம் குரு பதினொன்றில் குருவுக்கு கேந்திரங்களில் (நான்கில்) உச்ச செவ்வாய், ஏழில் சந்திரன்.
///It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning
of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth
and development and makes them shine.///
அப்படியே பொருந்துகிறது...
நன்றிகள் ஐயா!////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
மூன்றாம் எண்ணுக்கு உரிய பலன்களை விபரங்களுடன்
அளித்துள்ளமைக்கு நன்றி!!////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Balamurugan Jaganathan said...
ReplyDeleteஎனக்கு ஆன்மீகத்தின் மீது சொல்லிகொள்ளும் அளவிற்கு நாட்டம் இருந்தது இல்லை. விவரம் தெரிந்த நாட்களில் இருந்து மஞ்சள் நிறத்தின் மீது ஒரு அலாதியான ஈர்ப்பு இருந்தது. நான் B.Sc படிக்கும் போது எந்த பருவ தேர்வுகளிலும் முழு தேர்ச்சி பெறவில்லை. இதை பற்றி மனதில் கவலைப்பட்ட நேரம்.... ஆனந்த விகடனில் குரு தட்சனாமூர்த்தியை முதன் முதலில் மஞ்சள் நிற உடையுடன் பார்த்த அந்த கணமே இனம் புரியாத ஒரு உணர்வு. மேலும் மேலும் அந்த படத்தை பார்க்கவைத்த
ஈர்ப்பு.. அதன் கீழ ஒரு வரியை படித்தேன்... "தேர்வில் வெற்றி பெற குருவை பிராத்தனை செய்யுங்கள்" என்று கூறி ஒரு சமஸ்கிரதம் மந்திரம் இருந்தது ...
" குரவே சர்வ லோகநாம்...".
எப்படியாவுது இறுதி ஆண்டு அரியர்ஸ் இல்லாம முடிச்சே ஆகணும்னு இந்த மந்திரத்த கஷ்ட்டப்பட்டு மனபாடம் பன்னி அன்றில் இருந்து என் ஆன்மீக
வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டேன்.. அதன் சக்தி மிகவும் அலாதியானது.
வாத்தியார் அய்யாவின் பதிவில் கூறி உள்ளது போல் மஞ்சள் நிறம் மிகவும் சக்தி வாய்ந்தது. அருமையான பதிவு அய்யா. மிக்க நன்றி./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Balamurugan Jaganathan said...
ReplyDeleteஅன்பான வேண்டுகோள்....
கீழே குறிப்பிட்டு உள்ள பிறந்த தேதியை Jagannatha ஹோரோ மற்றும் Astro - Vision இரண்டிலும் கணித்து பார்த்த போது அம்ச சக்கரம்
ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றது. குழப்பத்தில் சரியான முறையில் பலனை அறிய முடியவில்லை.
பிறந்த தேதி: 04 - JAN - 1996 (07 - 01 pm )
Country : India
Latitude : 11 25 N , Longitude : 79 7 E
பாலினம் : ஆண்.
ஜாதகர் சென்ற ஆண்டு 10th examல் 487 / 500 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் சாதித்தவர். அதே உற்சாகத்தோடு அடுத்த வருடம் 12th exam ku தயார் ஆகிகொண்டு வருகின்றார்.
இவருக்கு எந்த துறையை பரிந்த்துரைக்கலாம் என்பதை தெளிவு படுத்தினால் மிகவும் பேருதவியாக இருக்கும்.
வாத்தியார் அய்யாவை தொந்தரவு பண்ண முடியாது.
வகுப்பறை நண்பர்கள் முடிந்தால் தங்களிடம் உள்ள சாப்ட்வேர் இல் ஜாதகத்தை கணித்து மின்-அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்.
எனது மின்-அஞ்சல் முகவரி - jbm2k07@gmail.com////
Astro - Vision சரியாக இருக்கும். அதையே வைத்துக்கொள்ளுங்கள்.
/////Blogger Ananthamurugan said...
ReplyDeleteguruve saranam!!!my birth date 30. my doughter date of birth also 3.3.03 tarika.A pls.explain.thanks.//////
ஆனந்தமாக இருப்பீர்கள்!
////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா, பதிவிற்கு நன்றி. எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே. அடுத்த எண்னிற்காக காத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் மூன்று பேருக்கு "4 " பிறந்த எண். அதனால் நாங்க எவ்வளவு கெட்டவங்கன்னும் தெரிந்துகொள்ள ஆசை./////
நல்லதையே பார்ப்போம்! கெட்டவை நமக்கெதற்கு?
/////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
என் தோழியின் பிறந்த தேதி 3 தான்...குணாதிசயங்கள் அனைத்தும் அவளுக்கு மிக சரியாக பொருந்துகிறது...ஜாதகத்தை போன்றே இதிலும் நல்ல
பலன்களை அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது...நன்றி ஐயா...
என் அண்ணனுக்கு தனுசு லக்னம்,அவருக்கு பிடித்த நிறம் மஞ்சள் தான்,அதனாலேயே எந்த ஆடையை எடுத்தாலும் அதில் மஞ்சள் நிறமாக தான்
இருக்கும்...////
நல்லது. நன்றி சகோதரி!
////Blogger அய்யர் said...
ReplyDeleteஎட்டில் பாதி மூன்று..
8 சனிக்கு என்றால் 3 வுக்கு..
இரண்டு பெயர்ச்சிகலுமே
இருப்பவரை tip of the chairல் உட்கார வைத்துவிடும்..
3யை உயர்த்தி நிற்க வைப்பது 8
இப்போ தமிழ் நாட்டில் நிற்பது 6
கலரை பார்த்ததும்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு
பாடலாம்னு சுழல விட எடுத்தோம்
பச்சை நிறம் வரட்டும் என உங்களைப் போல காத்திருக்கிறோம்..
வாழ்க.. வணக்கங்களுடன்////
நல்லது. நன்றி விசுவநாதன்!!
/////Blogger Uma said...
ReplyDeleteஇன்று வகுப்பறைக்கு வந்தால் நான் அணிந்திருக்கும் ஆடையின் நிறமும் மஞ்சள்!!!
என் ஜாதகத்தில் இரண்டில் குரு, நவாம்சத்தில் கேந்திர ஸ்தானமான நான்கில்.////
நல்லது. நன்றி சகோதரி!
////Blogger Uma said...
ReplyDeleteநம் ஊரில் மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்//
எனக்கும் இந்த பதிவைப்படிக்கும்போது 'மஞ்ச துண்டு' நினைவுதான் வந்தது. நம் ஊரிலும் சென்ற தலைமுறையினர் 'மஞ்சள் பையை'த் தானே
வெளியில் செல்லும்போது எடுத்துக்கொண்டு போவார்கள்.////
ஆமாம்! சுபத்தின் அடையாளம்!
/////Blogger Uma said...
ReplyDeleteநான் அந்தந்த கிழமைகளுக்கு உகந்த நிறத்தில் ஆடை அணிவதை முடிந்தவரை பின்பற்றுகிறேன். மற்றபடி ராசிக்கல் என்று ஒரு பவழ மோதிரம் மட்டுமே
போட்டிருந்தேன், அதையும் இப்போது கழட்டி வைத்து நான்கு மாதங்கள் ஆகிறது, சோதனை முயற்சியாக./////
பெண்களுக்கு பவழம் அவசியமானது சில காரணங்களுக்காக!
////Blogger Uma said...
ReplyDeleteஐயா, பதிவிற்கு நன்றி. எண்ணிற்குரிய நல்ல பண்புகளையே குறிபிட்டுள்ளீர்கள், மனிதர்களின் மறுபக்கத்தையும் குறிப்பிடலாமே. //
இதை நானும் வழிமொழிகிறேன் (ஏதோ நமக்குத்தான் இதெல்லாம் மூளையில உதிப்பதில்லை, வழியாவது மொழிவோம்)////
நல்லதையே பார்ப்போம்! கெட்டவை நமக்கெதற்கு?
////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா,
3ம் எண் பற்றிய பதிவு அருமை.ஏனெனில் நான் 3ம் எண்ணில் பிறந்தவன். நீங்கள் மேற்கோள்காட்டிய குணங்கள்,பண்புகள் நிறைந்தவன்.
///எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக்
கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று
சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.///.
நான் போதிக்கும் எந்தவொரு விஷயமும் இதுவொரு பழைய பஞ்சாங்கம்,அருதப்பழசு,அறுவை என்றெல்லாம் பலராலும் பழிக்கப்பட்டவன். நகலை
விரும்பும் உலகில் அசலாக இருக்க நினைத்து பலவற்றையும் இழந்திருக்கிறேன். ஒருவர் கஷ்டமென்று வந்தாலும் ஒரு சின்னக்குட்டி நீதிக்கதைகளைச் சொல்லி அசத்தி விடுவேன். பணம்,மரியாதைக்காக யாரிடமும் பணிந்துபோவதுமில்லை.அதுவாக தேடிவந்துவிடும் இதுவரை அப்படித்தான்.
3ம் எண்காரர்கள் சிறந்த மதியூகிகள். நாட்டையாளும் மன்னனுக்கு அருகிருந்து வழி நடத்த நல்லவிஷயங்களைச் சொல்லும் திறன்மிக்கவர்கள்.
கந்தலானாலும் கசக்கிக்கட்டு எனும் வாக்கிற்கேற்ப தூய்மை விரும்பிகள்.
///இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சக்காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும்.எச்சரிக்கையாக இருக்கவேண்டும்///
உடலில் குருகிரகம் குறிக்கும் உறுப்புகள் முறையே கல்லீரல்,கணையம்.இதில் கல்லீரலில் தான் உணவு செரிப்பதற்குத் தேவையான பிலிருபின் எனும்
பித்தநிறமி உற்பத்தியாகிறது. கல்லீரல் பாதிக்கப்படும்போது பித்தநீரின் அடர்த்திகுறைந்து அது நேரடியாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலந்துவிடுவதால் வருவது
மஞ்சள்காமாலை. மனிதமலம் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு காரணம் இந்த பித்தநீர் தான்,காமாலை பாதித்தவர்களின் மலம் சற்று வெளிறிக்காணப்படும்.
கணையம் இதில் உற்பத்தியாகும் கணையநீரும்,லாங்கர்கான் திட்டுகளில் உற்பத்தியாகும் இன்சுலினும் தான் உடலில் சர்க்கரையின் அளவை சம
நிலைப்படுத்துபவை.உணவில் உள்ள சர்க்கரையை சுக்ரோஸாக மாற்றுவது கணைய நீர்,அதனை தேவையான அளவுக்கு எடுத்து செலவழிப்பது இன்சுலினின் வேலை.இந்த இரண்டும் தாறுமாறாக அதாவது ஒழுங்கற்ற முறையில் வேலை செய்வது தான் நீரிழிவு எனச்சொல்லப்படுகிறது.
பொதுவாக குருகிரகம் பாதிக்கப்பட்டு மறைவிடங்களில் வாசம் செய்தாலும்,6ம் வீடு ஜலராசியாகி குரு 6ம் வீடு,அதன் அதிபதியுடன் தொடர்புகொண்டி
ருந்தாலும் நீரிழிவு நோயைத்தவிர்க்க முடியாது என நினைக்கிறேன்.
எனக்கு முன்பொருமுறை சந்திரராசிக்கு எட்டில் கோச்சாரகுரு வந்தபோது மஞ்சள்காமாலை நோய் பாதித்தது./////
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete3ம் எண் பற்றிய பதிவினை ஆவலுடன் படித்துரசித்தேன். சுவாரஸ்யமான பின்னூடங்களையும் விரும்பிப்படித்தேன் எண் கணிதத்தில் அதிக ஊக்கம் இல்லாததால் பின்னூட்டங்களில் பின் தங்கியுள்ளேன்.
மனைவியார் 12 ந்தேதி பிறந்தவர்கள். குண நலன்கள் 60% பொருந்தி வருகிறது.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Kalai said...
ReplyDeleteவழக்கம் போல் கடந்த இரண்டு நாட்களாய் பதிவு அருமை. அதுவும் உங்கள் பயணத்தில் எங்கள் பாடம் பாதிக்ககூடாது என்று , technolgy சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள். நான்தான் எல்லா படங்களுக்கும் சேர்த்து ஒரே பின்னூட்டம் எழுதுகிறேன். ஹி ஹி நான் பாஸ் மார்க்குக்கு மட்டும் பரீட்சை எழுதுற ஆள்.
எழுத சோம்பேறித்தனம். சீக்கிரம் எக்ஸாம் ஹாலை விட்டு வெளிவருவதில் அப்படியொரு பெருமை.
அடியேன் எண் இரண்டு. sort of extremity எப்பவுமே இருக்கும். say yes or no என்று.
நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் positivaka எழுதி இருக்கலாம இரண்டை பற்றி.
ஆனால் மூன்றுக்கு நிநிறைய எழுதி உள்ளீர்கள். அதை விட பின்னோட்டங்கள் சூப்பரூ. நிறைய கதைகள் மற்றும் அனுபவங்கள்.
awaiting for other numbers......5, 7 and 8 my husband and kids. The very intresting thing is my husband no is 5 and im 2, looks like will not go each other well. he always has an answer as "MAY BE". quite intresting, thus we together make it complete. - Kalai Seattle/////
நீங்கள் எதிர்பார்க்கும் எண்களுக்கான பாடங்கள் தொடர்ந்து வரும். பொறுத்திருங்கள் சகோதரி!
/////Blogger Arul said...
ReplyDeleteமூன்றாம் எண்ணைப் பற்றிய மேலதிகத்தகவலுக்கு நன்றி ஐயா...////
நல்லது. நன்றி நண்பரே!
பெண்களுக்கு பவழம் அவசியமானது சில காரணங்களுக்காக!//
ReplyDeleteஅப்படியென்றால் திரும்ப போட்டுக்கொள்கிறேன், நன்றி!
SP.VR. SUBBAIYA said...
ReplyDelete/////Blogger Ananthamurugan said...
guruve saranam!!!my birth date 30. my doughter date of birth also 3.3.03 tarika.A pls.explain.thanks.//////
ஆனந்தமாக இருப்பீர்கள்!
நன்றி...! வணக்கங்கள் அய்யா!!!நல்லா இருக்கிறேனோ!!இல்லையோ இந்த வாழ்த்து போதும்....!