Cinema காதல் வலியும் சூராவளியும்!
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் எண்.9
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
பாடல்: காடு திறந்தே கிடக்கின்றது
-------------------------------
கானொளி;
http://youtu.be/ymeTiEXpYM0
பாடல் வரிகள்:
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களைப் புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ
ஒ ஓ
நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ
பூமிக்கு வந்த பனித் துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு
யுகம் யுகாமாய் நான் எரிந்து விட்டேன்
பனித் துளியே என்னை அனைத்து விடு
உறவே உயிரே
உணர்ந்தேன்
நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ
சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்
கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்
சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்
அடியே சகியே சுகியே
நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராளியோ
ஒ ஓ
---------------------------
பாடல் காடு திறந்தே கிடக்கின்றது
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
ஆண்டு 2004
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
உங்கள் மனைக்கு நாங்களே காம்பவுண்ட் எடுத்துவிட்டோம். அதற்கு பக்கத்திலேயே கோயில் ,அதைத் தொட்டு கான்கிரிட் ரோடு ,குறைந்த அளவிலேயே மனைகள் உள்ளன . முன்பதிவு செய்பவர்களுக்கு பத்திரப் பதிவு இலவசம் .
ReplyDeleteசித்திரை மாதத்தை நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
ReplyDeleteமார்கழி மாதத்தை எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்
இவைகள் நான் ரசித்த வரிகள்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteகட்டிடக் காட்சி அழகு!
இயற்கைக் காட்சி அழகே அழகு!!
நன்றி!
///// thanusu said...
ReplyDeleteஉங்கள் மனைக்கு நாங்களே காம்பவுண்ட் எடுத்துவிட்டோம். அதற்கு பக்கத்திலேயே கோயில் ,அதைத் தொட்டு கான்கிரிட் ரோடு ,குறைந்த அளவிலேயே மனைகள் உள்ளன . முன்பதிவு செய்பவர்களுக்கு பத்திரப் பதிவு இலவசம் .////
அந்த அத்துவானக் காட்டில் குடியிருக்க யார் வருவார்கள்? நெட், மொபைல் கனெக்ட்டிவிட்டிக்கு எல்லாம் என்ன செய்வது?
//// thanusu said...
ReplyDeleteசித்திரை மாதத்தை நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்
இவைகள் நான் ரசித்த வரிகள்/////
அதீத்மானதையும் நடக்காததையும் கற்பனை செய்வத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும். நன்றி தனுசு!
//// V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
கட்டிடக் காட்சி அழகு!
இயற்கைக் காட்சி அழகே அழகு!!
நன்றி!////
நல்லது.உங்கள் ரசனை உணர்விற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
ஏதோ ஒரு ஜைனர்களின் கோவில் மலைமேல்,கோட்டை கொத்தளங்களுடன்!
ReplyDeleteஅழகிய காட்சி. நன்றி!
பாடலைப் பற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.கமல், வைரமுத்து ரசிகர்கள் சிலாகித்து ஏதாவது சொன்னால் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
///// kmr.krishnan said...
ReplyDeleteஏதோ ஒரு ஜைனர்களின் கோவில் மலைமேல்,கோட்டை கொத்தளங்களுடன்!
அழகிய காட்சி. நன்றி! பாடலைப் பற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.கமல், வைரமுத்து ரசிகர்கள் சிலாகித்து ஏதாவது சொன்னால் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!/////
கோட்டையைப் பற்றிய செய்தி:
Kumbhalgarh (also called Kumbhalmer or Kumbalgarh) is a Mewar fortress in the Rajsamand District of Rajasthan state in western India. Built during the course of the 15th century by Rana Kumbha, and enlarged through the 19th century, Kumbhalgarh is also a birthplace of Maharana Pratap, the great king and warrior of Mewar. Occupied until the late 19th century, the fort is now open to the general public as a museum and is spectacularly lit for a few minutes each evening. Kumbalgarh is situated 82 km from Udaipur towards its northwest and is easily accessible by road. It is the most important fort in Mewar after Chittaurgarh.
>>>>>>>>>>>>>
பாடலைப்பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வழக்கமான காதல் பிதற்றலில் உதிர்க்கப்பட்ட வரிகள்தான்!
"உறவே...உயிரே...உணர்ந்தேன்...நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ...ஒ ...ஒ..." என்று ஹரிஹரன் வரிகளின் பொருளை உணர்ந்து உணர்ச்சியுடன் பாடிய விதமும், அது முடிந்தவுடன் பல வயலின்கள் குழுவாக சேர்ந்து எழுப்பும் இசையும், தொடர்ந்து வரும் ட்ரம்மின் ரிதமும்தான் இந்த பாடலின் சிகரம்.
ReplyDeleteஅதற்காகவே பலமுறை கேட்டேன்/கேட்பேன். அதைவிட குறிப்பாக காணொளியில் 2:00 - 2:15 இடத்தில் கமலும் துவண்டு விழுந்து அந்த வலியை உணர வைக்கிறார். காணொளியில் பாடல் முழுமையும் இல்லை, ஆனாலும் நான் தேடிப்பிடித்து முழுப்பாடலையும் ஒருமுறை கேட்டேன்.
" பூவில் ஒரு சூறாவளி" என்பது வைரமுத்துவின் வழக்காமான உவமை பாணி. இந்த பாடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, சிரத்தையுடன் வேலை செய்து அருமையான பாடல் காட்சியை உருவாக்க உதவியிருக்கிறார்கள். மிக நல்ல பாடலை பதிவேற்றியுள்ளீர்கள் நன்றி ஐயா
(பின் குறிப்பு: பதிவில் இன்று இவை இவை எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு தலைப்பில் துவங்கி பதிவு முழுவதும் பிழைகள் மலிந்துள்ளன)
அய்யர் சொல்லியபடி எல்லோருக்கும் இளநீர் கொடுங்கள். கூடவே சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினைக் கேட்டு விட்டுக் கொடுங்கள். 160 ஐ சர்க்கரை அளவு தாண்டினால் இளநீரை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள்.
ReplyDeleteபாகற்காய் ஜூஸ் கொடுங்கள்.
இள நீர்
ReplyDeleteபயன் சொன்ன
இளம் நீர், நீர்.
வகுப்புக்கு
பயன் பல சொல்லும்
இனம் நீர்
இதுபோல்
இன்னும்"மோர்"
பயன் சொல்லுக.
SP.VR. SUBBAIYA said...அந்த அத்துவானக் காட்டில் குடியிருக்க யார் வருவார்கள்? நெட், மொபைல் கனெக்ட்டிவிட்டிக்கு எல்லாம் என்ன செய்வது?
ReplyDeleteஅத்துவான காடுதான் அதிக விலைக்கு போகிறது .இடத்தை வாங்கி யார் வீடு கட்டுகிறார்கள், பணத்தை பெருக்கவே இடத்தை வாங்குவது அதிகரித்து விட்டது.பேங்க் பேலன்சைவிட பிளாட் பேலன்சுதான்
யாரும் விசாரிக் கிறார்கள்.
அய்யா அவர்கள் இந்த வாரம் அலசல் பாடம் வலை ஏற்ற வில்லை .
kmr.krishnan said...
ReplyDeleteஅய்யர் சொல்லியபடி எல்லோருக்கும் இளநீர் கொடுங்கள். கூடவே சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினைக் கேட்டு விட்டுக் கொடுங்கள். 160 ஐ சர்க்கரை அளவு தாண்டினால் இளநீரை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள்.
பாகற்காய் ஜூஸ் கொடுங்கள்.
அதுசரி ,எங்கே முக்கியமானவரை காணவில்லை ,தனி மெயில் அனுப்பி முடக்கிவிட்டீரா.
சூராவளியோ - சூறாவளியோ
ReplyDeleteசூழ் - சூல்
பனித் துளி - பனித்துளி
அனைத்து - அணைத்து
காதல் வழி - காதல் வலி
அவங்க பாடுனதை அப்படியே எழுதினால் இப்படித்தான் ஆகும்... திருக்கோயிலே ஓடிவா..தெருக்கோயிலே ஓடிவாங்கிறமாதிரிதான்..
ஐயா, மன்னிக்கவும் உங்களை பலர்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்..ஓரிடத்தில் செய்யும் பிழைகள்... பல இடங்களுக்கும் பரவும்.
இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கூகிளில் தேடியபோது இந்தப் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது.... இதிலும் ராகம் போடவில்லை!!!!!
ReplyDeleteTo follow
ReplyDelete