Devotional என்னோடு பேசப்பா சாமிநாதா!
முருக பக்தர்கள் பாடிய பாடல்கள் எண்ணற்றவை. அவற்றில் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். பாடலில் உள்ள சந்தம், சீர், எதுகை, மோனை,
சொல்விளயாட்டு என்று அனைத்தையும் படித்து ரசிக்க வேண்டுகிறேன். மனதில் ஏற்ற வேண்டுகிறேன்.முருகன் அருளைப் பெற வேண்டுகிறேன்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
ஈசனோடு பேசியது போதுமே
என்னோடு பேசு சாமிநாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயா உன் திருவடியே நாடினேன்
கண்சீறும் பொறியூறிப் பிறந்தவர்
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவர்
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா
கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல்நீரால் உடல்ரிக்கும் அல்லவா
நடனமாடும் மயிலேறி இங்குவா
நல்லமனக் கோவிலுண்டு தங்கவா!
குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீ மறத்தல் நியாயமா
குன்றத்தை விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சுதமிழ் இசைகேட்டு ஆடிவா
பன்னிரெண்டு கண்களாடுந் தெய்வமே
என்னைமட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்?
ஓன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான்வாழ வரங்கொடு!
(செண்பக மலர் பாமாலை என்ற என்ற செட்டிநாட்டு பாடல் நூலில் இருந்து எடுத்து எழுதியது. ஆக்கிய செட்டிநாட்டுக் கவிஞரின் பெயர் அதில் கொடுக்கப் படவில்லை.)
வாழ்க வளமுடன்!
இறை வழிபாட்டில் நமது முறைப்படி "பாவங்க"ளை(Bhavaas)க் கைக்கொள்ளுதல் ஒரு வகையாகும்.
ReplyDeleteபக்திமார்க்கத்தில் கண்ணனைக் குழந்தையாகவும் ,கணவனாகவும், குருவாகவும்
இன்னும் பல பாவங்களில் கொண்டாடுவர்.பாரதியார் கண்ணனைத் தன் சீடனாகவும், தன் காதலியாகவும், தன் வேலையாளகவும் கொண்டு பாடல்கள்
பாடினார்.
அதுபோல இங்கே முருகனை பல பாவங்களில் கவிஞர் வழிபடுகிறார்.
'திருமணம் செய்து கொண்டதால் பாராமுகமாக இருக்கலாமா? தண்ணிரிலேயே நின்றால் சளிபிடிக்குமே! கடலின் உப்பு உடலில் அரிப்பைக் கொடுக்குமே!'இப்படியெல்லாம் ஒரு அன்யோன்ய பாவத்துடன் கவிஞர் பாடியுள்ளது படிக்க இன்பமாக உள்ளது.
'அனானிமஸ்' கவிதை என்பது மேலும் கவிதைக்கு அழகூட்டுகிறது. புகழுக்கு ஆசைப்படாத அந்தக் கவிஞரை வணங்குகிறேன்.
அந்த புகைப் படத்தில் இருப்பவர் மம்தா மோகனதாஸ். நடிகை, பின்னனிப் பாடகி.
ReplyDelete//பாடலில் உள்ள சந்தம், சீர், எதுகை, மோனை,
சொல்விளயாட்டு என்று அனைத்தையும் படித்து ரசிக்க வேண்டுகிறேன்.//
அனைத்தையும் படித்தோம், ரசித்தோம்.
நிங்களோடே பேரு எந்தானு பறையு அம்முகுட்டி? ஹி. ஹி. ஹீ....
ReplyDeleteമംമ്ത മോഹന്ദാസ്
அருமையான எளிமையானப் பாடல்...
ReplyDelete/////பன்னிரெண்டு கண்களாடுந் தெய்வமே
என்னைமட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்?////
உயிர் கசிய எழுதிய இவ்வரிகள் அருமையிலும் அருமை.
நன்றிகள் ஐயா!
படப் புதிர்;
நடிகை / பாடகி மம்தா மோகன்தாஸ்!?
அநேகமாக நாளைய பதிவின் நாயகியோ?
மிக எளிய, பொருள் எளிதில் புரியக் கூடிய நல்லதொரு பாடல். மெட்டும் நன்றாக இருக்கிறது. குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொண்டு பாடிவிடுவார்கள்.
ReplyDeleteபாடலைக் கேட்க விரும்பினால் இந்த சுட்டிக்கு செல்லவும்:
http://www.bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=6
சிட்டாள், பழ. சுப்பிரமணியன், லெ. சோமசுந்தரம், சொர்ணவள்ளி, அருளிசைமணி நாகப்பன் எனும் ஐவர் இந்தப் பாடலை பாடி வெளியிட்டுள்ளார்கள். அனைவருமே நன்றாகப் பாடியுள்ளார்கள். எனக்குப் பிடித்தது லெ. சோமசுந்தரம் அவர்கள் பாடியது. இவையெல்லாம் காணக் (கேட்கக் ?) கிடைக்காத முத்துக்கள். வெளியிட்டு அறிமுகப்படுத்துவதற்கு ஐயா அவர்களுக்கு நன்றி.
கேரளாவை சேர்ந்த நடிகையும் பின்னணி பாடகியுமான இவர் பெயர் மம்தா மோகன் தாஸ் . இவரை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது - இவர் கேன்சர் நோயினால் பாதிக்கபட்டு போராடி வருபவர் . நல்ல லைம் லைட் வெளிச்ச புகழில் இருக்கும் போதே இந்த நோய்க்கு ஆளாகி விட்டார் . மருந்துகளின் பக்க விளைவுகளால் தன் முடியெல்லாம் கொட்டி போய் ( ஒரு நடிகை கு இது எவ்வளவு அதிர்ச்சி என சொல்ல வேண்டியதில்லை ) மிகுந்த கஷ்டப்பட்டார் . . இப்போது தன்னம்பிக்கையுடன் போராடி படங்களில் நடிக்கிறார் ( விக் தான் பயன் படுத்துகிறார் ) . தான் பால்ய கால நண்பரை கடந்த ஆண்டு மணந்து கொண்டார் . " விதியின் வல்லமைக்கு யாரும் விதி விலக்கு இல்லை " என்று ஒரு பேட்டியில் இவர் வேதனையோடு குறிப்பட்டது என்னை கவர்ந்தது .
ReplyDeleteஉங்கள் முருக பக்தி சிலிர்க்க வைக்கிறது ...என்னை போன்ற வளரும் தலைமுறையினரை ஆசீர்வதியுங்கள் அய்யா !
ReplyDeleteஅனைவரும் முருகன் அருளைப் பெறவேண்டும்,படித்து ரசிக்க
ReplyDeleteவேண்டும் என்பதற்காக,
செண்பக மலர் பாமாலை என்ற பாடல் நூலில் இருந்து தேடி
எடுத்துக் கொடுத்துள்ள ஆசிரியர் அவர்களுக்கும்
பாடலை இயற்றிய ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி!!
அருமையான பாடலை பதிவிட்ட வாத்தியாருக்கு நன்றி.
ReplyDeleteஅதனை செவிக்கும் விருந்தளிக்க பாடல் சுட்டியைத் தந்த தேமொழிக்கும் நன்றி.
முருகா.. முருகா...
ReplyDeleteMuruga! Miga nalla pathivu.
ReplyDeleteஓம் சரவண பவ..!!
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநல்ல பாடல் ஐயா...எளிய நடையில் அமைந்த பாடலின் பொருளையும் புரியும்படி இருந்தது...மனம் உருகி பாடலை வடித்திருக்கிறார் பாடலை இயற்றிய கவிஞர்...நான் மிகவும் ரசித்த வரிகள்...
பன்னிரெண்டு கண்களாடுந் தெய்வமே
என்னைமட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்?
ஓன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான்வாழ வரங்கொடு!
பின்னுட்டங்களிலேயே விடையை பலரும் தந்துவிட்டார்கள்,மம்தா மோகன்தாஸ் தான் என்று...நடிகை மற்றும் பின்னணி பாடகி..."காளை" திரைப்படத்தில் அவர் பாடிய "காளை காளை" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்(கேட்பதற்கு மட்டுமே!!!)நல்ல பாடும் திறமை அவருக்கு....
வகுப்பறையின் சார்பாகா
ReplyDeleteவாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறோம்
சச்சின் என்ற கிரிக்கெட்டின் பெருமானுக்கு .
போட்டாரையா போட்டாரு
சதத்தில் சதமே போட்டாரு
சச்சின் என்றொரு வரலாறு
அடித்தது நூற்றுக்கு நூறு.
காத்திருந்தது கனிந்தது
உள்ளமெல்லாம் இனித்தது.
//// kmr.krishnan said...
ReplyDeleteஇறை வழிபாட்டில் நமது முறைப்படி "பாவங்க"ளை(Bhavaas)க் கைக்கொள்ளுதல் ஒரு வகையாகும்.
பக்திமார்க்கத்தில் கண்ணனைக் குழந்தையாகவும் ,கணவனாகவும், குருவாகவும்
இன்னும் பல பாவங்களில் கொண்டாடுவர்.பாரதியார் கண்ணனைத் தன் சீடனாகவும், தன் காதலியாகவும், தன் வேலையாளகவும் கொண்டு பாடல்கள்
பாடினார்.
அதுபோல இங்கே முருகனை பல பாவங்களில் கவிஞர் வழிபடுகிறார்.
'திருமணம் செய்து கொண்டதால் பாராமுகமாக இருக்கலாமா? தண்ணிரிலேயே நின்றால் சளிபிடிக்குமே! கடலின் உப்பு உடலில் அரிப்பைக் கொடுக்குமே!'இப்படியெல்லாம் ஒரு அன்யோன்ய பாவத்துடன் கவிஞர் பாடியுள்ளது படிக்க இன்பமாக உள்ளது.
'அனானிமஸ்' கவிதை என்பது மேலும் கவிதைக்கு அழகூட்டுகிறது. புகழுக்கு ஆசைப்படாத அந்தக் கவிஞரை வணங்குகிறேன்.////
புத்த்கததைப் பதிப்பித்தவர்கள் பெயரை (தவற்) விட்டிருக்கலாம்
//// ananth said...
ReplyDeleteஅந்த புகைப் படத்தில் இருப்பவர் மம்தா மோகனதாஸ். நடிகை, பின்னனிப் பாடகி.////
கரெக்ட்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//பாடலில் உள்ள சந்தம், சீர், எதுகை, மோனை,
சொல்விளயாட்டு என்று அனைத்தையும் படித்து ரசிக்க வேண்டுகிறேன்.//
அனைத்தையும் படித்தோம், ரசித்தோம்./////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!
/// தேமொழி said...
ReplyDeleteநிங்களோடே பேரு எந்தானு பறையு அம்முகுட்டி? ஹி. ஹி. ஹீ....
മംമ്ത മോഹന്ദാസ്////
கீழே உள்ளது அக்கா! பார்த்துக்கொள்ளுங்கள்!
This comment has been removed by the author.
ReplyDelete//// தேமொழி said...
ReplyDeleteமிக எளிய, பொருள் எளிதில் புரியக் கூடிய நல்லதொரு பாடல். மெட்டும் நன்றாக இருக்கிறது. குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொண்டு பாடிவிடுவார்கள்.
பாடலைக் கேட்க விரும்பினால் இந்த சுட்டிக்கு செல்லவும்:
http://www.bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=6
சிட்டாள், பழ. சுப்பிரமணியன், லெ. சோமசுந்தரம், சொர்ணவள்ளி, அருளிசைமணி நாகப்பன் எனும் ஐவர் இந்தப் பாடலை பாடி வெளியிட்டுள்ளார்கள். அனைவருமே நன்றாகப் பாடியுள்ளார்கள். எனக்குப் பிடித்தது லெ. சோமசுந்தரம் அவர்கள் பாடியது. இவையெல்லாம் காணக் (கேட்கக் ?) கிடைக்காத முத்துக்கள். வெளியிட்டு அறிமுகப்படுத்துவதற்கு ஐயா அவர்களுக்கு நன்றி.//////
இதுக்குத்தான் தேமொழி அக்கா வேண்டும் என்பது! எள் என்பதற்குள், எண்ணையோடு வருவார்!
//// naren said...
ReplyDeleteகேரளாவை சேர்ந்த நடிகையும் பின்னணி பாடகியுமான இவர் பெயர் மம்தா மோகன் தாஸ் . இவரை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது - இவர் கேன்சர் நோயினால் பாதிக்கபட்டு போராடி வருபவர் . நல்ல லைம் லைட் வெளிச்ச புகழில் இருக்கும் போதே இந்த நோய்க்கு ஆளாகி விட்டார் . மருந்துகளின் பக்க விளைவுகளால் தன் முடியெல்லாம் கொட்டி போய் ( ஒரு நடிகை கு இது எவ்வளவு அதிர்ச்சி என சொல்ல வேண்டியதில்லை ) மிகுந்த கஷ்டப்பட்டார் . . இப்போது தன்னம்பிக்கையுடன் போராடி படங்களில் நடிக்கிறார் ( விக் தான் பயன் படுத்துகிறார் ) . தான் பால்ய கால நண்பரை கடந்த ஆண்டு மணந்து கொண்டார் . " விதியின் வல்லமைக்கு யாரும் விதி விலக்கு இல்லை " என்று ஒரு பேட்டியில் இவர் வேதனையோடு குறிப்பட்டது என்னை கவர்ந்தது ./////
கேட்க வருத்தமாக உள்ளது. இறையருள் அவரைக் காக்கட்டும்!
//// naren said...
ReplyDeleteஉங்கள் முருக பக்தி சிலிர்க்க வைக்கிறது ...என்னை போன்ற வளரும் தலைமுறையினரை ஆசீர்வதியுங்கள் அய்யா !////
நீங்களும் முருகப்பெருமானை வண்ங்குங்கள். எல்லா நலன்களும் கிடைக்கப்பெறுவீர்கள்!
//// V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅனைவரும் முருகன் அருளைப் பெறவேண்டும்,படித்து ரசிக்க வேண்டும் என்பதற்காக,
செண்பக மலர் பாமாலை என்ற பாடல் நூலில் இருந்து தேடி
எடுத்துக் கொடுத்துள்ள ஆசிரியர் அவர்களுக்கும்
பாடலை இயற்றிய ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி!!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
//// krishnar said...
ReplyDeleteஅருமையான பாடலை பதிவிட்ட வாத்தியாருக்கு நன்றி.
அதனை செவிக்கும் விருந்தளிக்க பாடல் சுட்டியைத் தந்த தேமொழிக்கும் நன்றி.////
நல்லது. நன்றி நண்பரே!
//// அய்யர் said...
ReplyDeleteமுருகா.. முருகா...////
வேல் வேல் வெற்றிவேல்!
//// Ananthamurugan said...
ReplyDeleteMuruga! Miga nalla pathivu.////
நல்லது. நன்றி ஜி.ஆனந்தமுருகன்!
/// Balamurugan Jaganathan said...
ReplyDeleteஓம் சரவண பவ..!!///
கந்தா போற்றி! கடம்பா போற்றி!. கதிர்வேலா போற்றி!
//// R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
நல்ல பாடல் ஐயா...எளிய நடையில் அமைந்த பாடலின் பொருளையும் புரியும்படி இருந்தது...மனம் உருகி பாடலை வடித்திருக்கிறார் பாடலை இயற்றிய கவிஞர்...நான் மிகவும் ரசித்த வரிகள்...
பன்னிரெண்டு கண்களாடுந் தெய்வமே
என்னைமட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்?
ஓன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான்வாழ வரங்கொடு!
பின்னுட்டங்களிலேயே விடையை பலரும் தந்துவிட்டார்கள்,மம்தா மோகன்தாஸ் தான் என்று...நடிகை மற்றும் பின்னணி பாடகி..."காளை" திரைப்படத்தில் அவர் பாடிய "காளை காளை" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்(கேட்பதற்கு மட்டுமே!!!)நல்ல பாடும் திறமை அவருக்கு..../////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!